Thottal Thodarum

Nov 2, 2009

கொத்து பரோட்டா –02/11/09

நேற்று இரவு விஜய் டீவியில் “நீயா நானா?” பார்த்து கொண்டிருந்தேன். அதில் ஒரு பெண் தன் காதலர், தனக்கு மனம் கஷ்டமாய் இருக்கும் போது ஒரு பாடலை பாடுவார் என்றும், அதை கேட்டு நான் அழுது மனம் கரைவேன் என்று சொன்னார். உடனே அவர் எதிர் திசையிலிருந்து அவர் பாட, உடனடியாய் இன்ஸ்டெண்டாய் இவரும் பிழிய, பிழிய அழுதார். என்ன கொடுமைடா சாமி என்று சேனலை மாற்றினால் கலைஞர் டிவியில் ரோஸ் நேரம் ஓடிக் கொண்டிருந்தது.

ஏதோ ஒரு ஓப்பன் பூங்காவில் இரவு நேரத்தில் உட்கார்ந்திருந்த ஆட்களின் முகத்தில் லைட் அடித்து, காட்டிக் கொண்டிருந்தார்கள்.என்னடாவென பார்த்தால் பேய் இருக்கிறது என்று ஒரு கும்பலும், இல்லை என்று ஒரு கும்பலும் பேசிக் கொண்டிருக்க, அதில் இருக்கு கும்பலில் ஒருவர் தன்னால் பேயை இரண்டு நிமிடத்தில் ஒருவர் மீது பேயை ஏவி விட முடியும் என்று கூற, எதிர் கும்பலில் ஒரு புதுமண தம்பதிகளீல் ஒருவரின் கணவர் பேயே இல்லை என்று முடிந்தால் ஏவி விடுங்கள் என்று கூறி போட்டிக்கு வர, முடிவில் அவர் மீது நேற்று பேயை ஏவி விட்டார்கள். அது 30 நாட்களூக்கு பிறகுதான் தெரியுமாம். நிகழ்ச்சி மிக கேவலமாய் படமாக்க பட்டிருந்தது. சமயங்களில் ரோஸ் தான் பேய் போல இருந்தார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
செவிக்கினிமை
படம் பார்க்கும் போது பெரிதாய் ஈர்க்க வில்லை. திரும்ப ஒரு நாள் எத்தேசையாய் கேட்கும் போது பேராண்மை படத்தில் “துப்பாக்கி பெண்ணே” பாடல் பிடித்திருக்கிறது. அதை படமாக்கியிருக்கும் அருமை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
லகளவில் இஸ்லாமியர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைதான். கருத்தாய் சொன்னதை விட மேக்கிங் இதிலும் அருமை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சாப்பாடுக்கடை
டி.நகர் உஸ்மான் ரோட்டில் சரவணபவன் எதிரே விவேகானந்தா காபி இருக்கும் அதனுள் மதுரை அருளானந்தம் மெஸ் என்று ஒரு ஓட்ட்ல இருக்கிறது. இவர்களின் ஸ்பெஷாலிட்டி எல்லா அயிட்டங்களும் நன்றாக இருப்பது. முக்கியமாய் மட்டன் சாப்பாடு சாப்பிட்டீர்கள் என்றால் அதனுடன் கொடுக்கும் மட்டன் சுக்காவும், கிரேவியும் ம்ம்ம்ம். சும்மா பின்னி எடுத்திரும். முக்கியமாய் ரசம் சாப்பிடாமல் வராதீர்கள். தேவரசம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஏ.ஜோக்
அம்மா நீ வெள்ளையாக இருக்கிறாய், நான் மட்டும் கருப்பாக இருக்கிறேன் ஏன்..? என்று கேட்டான் மகன்

”அந்த கொடுமையை மட்டும் கேட்காதே அன்னைக்கு பார்ட்டியில நடந்ததுக்கு நீ குரைக்காம இருக்கியே அதுவே பெரிசு” என்றாள் தாய்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சமீபத்தில் ஒரு நண்பரின் வீட்டு விழாவில் இவரை சந்தித்தேன். மிக இனிமையானவர். பேசிக் கொண்டிருக்கும் போதே சடசடவென கவிதை படித்தவர். சொன்ன சில வரிகள் என்னை மிகவும் நெகிழ வைத்தது. திருக்குமரன் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறார். இவர் ஒரு இலங்கை தமிழர்.
மெளனம்
ஓசைப்படாமல் இருத்தலில்
உள்ளேயே ஓராயிரம் கோடி
உணர்வுகளைச்சுமந்த படி
ஆசைகளை எல்லாம்
அனுபவித்துப்பார்க்கையிலே

ஆண்டவனின் குணமே
மெளனமே
உனக்கிணையாய்
எந்த ஒருகுருவும்
எச்சகத்தும் இல்லையப்பா

இசையின் உறைநிலையே
இங்கிதத்தின் அடிப்படையே
எத்தனையோ உயிர்காத்த
ஆயுதமே..

மனமொன்றி
முத்தாய்க்கணச்சூட்டில்
வேர்வைப்பூ பிறப்பெடுக்க
அகன்ற விழி கவ்வுதலால்
அரைவிழியாய் ஆகிவிட
எல்லா உணர்வுகளும்
ஓர்மையப்புள்ளிக்குள்
தியான நிலை அடையத்
திசைமறந்து ஒன்றாகும்
உச்சக்கலவியின் பின்
உள்ளாடும் ஓர் அமைதி
மூச்சை உரைபெயர்க்கும்
முழுமைநிறை வாழ்வியலை
எந்த மொழி உரைத்து விடக்கூடும்
என் நிம்மதியே..

நீ இல்லா இடமெல்லாம்
நிச்சயமாய்ச் சுடுகாடே
அட கொஞ்சம் பொறுப்பாயடா
நீ அங்கேதான் பிறப்பாயடா..

தி.திருக்குமரன்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

52 comments:

Muthusamy Palaniappan said...

reality shows?

Cable சங்கர் said...

/reality shows?//

ஆமாம் முத்துசாமி.. உங்க்ளின் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி

வேதாளன் said...

எப்பவும் போல் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை.

ஈரோடு கதிர் said...

"நீயா? நானா"வில் எடுத்துக்கொள்ளும் கரு பல சமயங்களில் முட்டாள்தனத்தின் உச்சம்...

குறும்படம் .... அருமை....

ஜோக்... "கொலைக்காம" கொஞ்சம் நேரம் புரியல.... புரிஞ்சபிறகு...குரைப்பு... இல்ல சிரிப்பு அடங்கல

மேவி... said...

ippoluthu ellam tv parkka neram kidaIPthillai....

kadasi matter nalla irukku sir

தராசு said...

கவுஜ கலக்கல் அண்ணே,

குறும்மபடம் பாத்துட்டு அப்புறம் சொல்றேன்.

மணிஜி said...

அன்னிக்கு சாப்பிடும்போதே அருளானாந்தா மெஸ்ஸை எதிர்பார்த்தேன்.கொஞ்சம் சூடான அரசியல் விமர்சனங்களையும் சேர்த்தால் கொத்துபுரோட்டா சுவைக்கும் என்பது என் கருத்து

பிரபாகர் said...

//சமயங்களில் ரோஸ் தான் பேய் போல இருந்தார்.//

ஏண்ணே பொய் சொல்றீங்க? சமயங்களில் தானா? எப்பவும்.

shortfilmindia.com said...

/ஏண்ணே பொய் சொல்றீங்க? சமயங்களில் தானா? எப்பவும்.
//
சரி.. அப்படித்தான் லேசா மனசு நோகக்கூடாதுன்னு சொல்வோம்.. அதுக்காக இப்படியா..:)

இளவட்டம் said...

//// உடனே அவர் எதிர் திசையிலிருந்து அவர் பாட, உடனடியாய் இன்ஸ்டெண்டாய் இவரும் பிழிய, பிழிய அழுதார்////

என்ன கொடுமை சார் இது.நல்ல கூத்து.
அப்பறம் எ ஜோக்கு ஓகே.
குறும்படம் பார்த்துட்டு சொல்றேன்.ஆபீஸ்ல பாக்க முடியாது.

Thamira said...

உடனே அவர் எதிர் திசையிலிருந்து அவர் பாட, உடனடியாய் இன்ஸ்டெண்டாய் இவரும் பிழிய, பிழிய அழுதார்//

என்ன கொடுமை கேபிள் இது.?

வர, முடிவில் அவர் மீது நேற்று பேயை ஏவி விட்டார்கள். அது 30 நாட்களூக்கு பிறகுதான் தெரியுமாம்//

அதானே பார்த்தேன்.!

(படம் வீட்லதான் போய் பாக்கணும்)

நையாண்டி நைனா said...

/*தண்டோரா ...... said...
அன்னிக்கு....... கொஞ்சம் சூடான அரசியல் விமர்சனங்களையும் சேர்த்தால் கொத்துபுரோட்டா சுவைக்கும் என்பது என் கருத்து*/

மிக சரியான கருத்து.

(ஆமாண்ணே.... இப்படிதாம்ணே 'சூன்யம்' வைக்கணும்....)

butterfly Surya said...

இன்னும் டேஸ்ட்டா எதிர்பார்த்தேன்.

ஆனாலும் திங்கள் அன்று மறக்க முடியாமல் இருக்கிறது கொத்து பரோட்டா தான்.

Cable சங்கர் said...

/மிக சரியான கருத்து.

(ஆமாண்ணே.... இப்படிதாம்ணே 'சூன்யம்' வைக்கணும்....)
//

வந்துட்டான்யா.. வந்துட்டான்யா.. எங்கடா ஆளை காணமேன்னு போன் போடனுமினு நினைச்சிட்டே இருந்தேன்.. வந்திட்டான்யா..:)

பித்தன் said...

பல நேரம் "நீயா நானா" ஒரு காமெடி ஷோ போலவே தோன்றும், நேற்றும் அவ்வாறே.....

GHOST said...

கவுஜ கலக்கல், கொத்துபுரோட்டா கொஞ்சம் காரம் கம்மிதான்

Rajan said...

கவிதை சூப்பர்

Ashok D said...

கொத்து பரோட்டாவுல கொத்து மட்டும் இருந்தது ப்ரோட்டாவ காணல.

கவித.. கஷ்டம்.

கேபிளாருக்கு நாக்கு நல்லா வேலை செய்யுது //மட்டன் சுக்காவும், கிரேவியும் தேவரசம்//

//சமயங்களில் ரோஸ் தான் பேய் போல இருந்தார்//:)

ஹொட்ஸ்பாட் குறும்பு.

Ashok D said...

குறும்படம் அருமை. இசையிலும் மிரட்டல். முடிவு நல்ல சிறுகதை.

ரமேஷ் வைத்யா said...

தலைவா, வுடாத‌

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல சுவையான கொத்து!!!

Unknown said...

முப்பது சேனல் வெச்சுகிட்டு நிமிசத்துக்கு ஒன்னு மாத்தி மாத்தி பாத்துட்டு இருந்தா உங்களுக்கு புரியாதுங்க கேபிள் அண்ணா. ஒழுங்கா உக்காந்து ப்ரோக்ராம் புல்லா பாத்துட்டு கமெண்ட் பண்ணுங்க வெங்கிடு சார் . நான் சொன்னது விஜய் டிவி ப்ரோக்ராம் பத்தி.

நர்சிம் said...

நீயா நானாப் பற்றி தனிப்பதிவு எழுதனும்...அந்த அளவிற்கு கடுப்பாக இருந்தது.

கணவன் மனைவி உறவை..என்னவாவது ஒரு ஈயம் என்று சொல்லிக்கொண்டு பொதுவில் வைத்து..மிகக் கடுப்பாக இருக்கிறது.

ஹும்.

Unknown said...

//”அந்த கொடுமையை மட்டும் கேட்காதே அன்னைக்கு பார்ட்டியில நடந்ததுக்கு நீ குரைக்காம இருக்கியே அதுவே பெரிசு” என்றாள் தாய்.
//

:-)))))))))))))))))))))

pudugaithendral said...

நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு கணவன்-மனைவி, காதலன் - காதலி, உறவுகள் எல்லாம் முற்றுப்புள்ளி ஆகிவிடும் என்றே நம்புகிறேன்.

அவ்வளவு காரசாரமாக பொது நிகழ்ச்சியில் பேசிவிட்டு வேறு என்ன தான் நடக்கும்.

Ashok D said...

http://ashokpakkangal.blogspot.com/2009/11/2.html

தலைவரே.. நீங்க தானான்னு எல்லாரும் போன்லையும் சாட்லயும் கேக்கறாங்க. இல்லன்னு சொன்னாலும் நம்ப மாட்டன்றாங்க.

Punnakku Moottai said...

Hello Cable,

I stopped watching Tamil Channels for almost 2 years now. Even if had to watch, I stick to Makkal TV, News chanels or the comedy channels because mine is a joint family.

All other entertainment programs have entered to a stage that none of them is watchable with family (espcially in a joint family- where you live with brothers, their wives, sisters, children and parents). Some serials are hopeless. Even if you watch it after 1 year, just at the moment you can understand the story.

Only incest programs are not shown in our tamil channels now. Soon they will show that as well. TV channels play an inportant role in spoiling tamil culture to a large extent. All tamil channels are run big tamil families.

Regards,

Bala.

Jana said...

பறவாய் இல்லை திருக்குமரனின் கவிதைகள் அற்புதமானவை. தோழரே.
சிறந்ததொரு கலைஞனை இன்னும் ஒருசிறந்தவன் இனங்கண்டுவிடுவானாம்???
உண்மையா???

Jawahar said...

சங்கர்ஜி, நீயா நானாவில் பாட்டும், அழுகையும் நானும் கேட்டேன். எனக்கும் கண்ணீர் வந்தது நெகிழ்வில். என்ன நெகிழ்வு தெரியுமா? இப்படிப்பட்ட சங்கீதத்தையே உசத்தியாக ஒரு பெண் நினைத்தால் அது எத்தனை உயர்ந்த காதல்!

http://kgjawarlal.wordpress.com

ஜெட்லி... said...

பரோட்டா சூப்பர் தல....

ஜெட்லி... said...

பரோட்டா சூப்பர் தல....

க.பாலாசி said...

பேராண்மை படத்தின் அந்த பாடல் எனக்கும் மிக பிடிக்கும்.

ஜோக் ரசித்தேன்.

கவிதையும் பிடித்தது.

மற்றபடி தண்டோரா அண்ணன் சொன்னதைதான் நானும் வழிமொழிகிறேன்.

அத்திரி said...

ரியாலிட்டினு சொல்லிக்கினு இவனுக அடிக்கிற கூத்து தாங்க முடியல அண்ணே

அத்திரி said...

கவிதை உணர்வுகளின் வலி

அகநாழிகை said...

பதிவு அருமை.


//ரமேஷ் வைத்யா said...
தலைவா, வுடாத‌//

எதை மாமா சொல்றே...
புரிஞ்சுடுது அதத்தானே..

ஷண்முகப்ரியன் said...

கவிதை அருமை ,ஷங்கர்.

Ravikumar Tirupur said...

கொத்துபுரோட்டா அருமை. குறும்படம் பார்க்கனும். [தமிழ் பாண்ட் சூப்பரா வொர்க்கவுட் ஆகுதுங்கோ]

Romeoboy said...

ஐயோ ராமா அந்த ஷோவில் அவர் பாடிய படலை கேட்டு என் மனைவி அந்த படலை கண்டிப்பாக மனப்பாடம் செய்து அவள் முன் படவேண்டும் என்கிற ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டு இருக்குற தல. அந்த பாட்டு எந்த படத்துல வருது. முதல் வரி சொல்லுங்களே .

Cable சங்கர் said...

@samrajyapriyan
அப்படியா.. அடுத்த முறை ஏத்திருவோம்

@கதிர்-ஈரோடு
நன்றி..கதிர்
ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை சரி செய்துவிட்டேன் நன்றி..

@டம்பிமேவி
நன்றி

Cable சங்கர் said...

@தராசு
நன்றிண்ணே..
நிச்சயம் சொல்லுங்க

@பிரபாகர்
சரி..சரி.. சரி..

@தண்டோரா
உங்களவுக்கு நமக்கு அரசியல் தெரியாதுண்ணே. நானே யூத்து..:)

Cable சங்கர் said...

@இளவட்டம்
நன்றி.. நிச்சய்ம்பார்த்துவிட்டு சொல்லுங்கள்

@ஆதிமூலகிருஷ்ணன்
அந்த கொடுமைய தாங்க முடியாமத்தான் காலையில கொட்டிட்டேன் இங்கே

Cable சங்கர் said...

@பித்தன்
நேற்று உச்சம்

@சஹானா
அப்படியா.. சரி பண்ணிருவோம்

@ராஜன்
நன்றி
எல்லா புகழும் திருக்குமரனுக்கே

@அசோக்
யார்யா தூக்கிட்டு போயிட்டது.. சே.. அதான் கொத்தியாச்சே

Cable சங்கர் said...

@ரமேஷ்வைத்யா
எதைண்ணே

@குறை ஒன்றும் இல்லை
நன்றி

@சபா
அண்ணே சுமார் அரை மணி நேரம் நிகழ்ச்சி முடியும் வரை பார்த்துவிட்டுதான் இவ்வளவு நொந்து போய் எழுதுகிறேன். முடியல்..

Cable சங்கர் said...

@நர்சிம்
ஒரு பதிவுதானா.. முக்கியமா ரியாலிட்டி டாக் ஷோவில் ஒரு சில ஆட்கள் திரும்ப திரும்ப வரும் தொழில் ரகசியத்தை பற்றி மூன்று பதிவு எழுத என்னிடம் விஷயம் இருக்கிறது..:)

@கேவிஆர்
நன்றி

@புதுகைத் தென்றல்
எல்லாமே செட்டப்புங்க..

@அசோக்
அது நான் தானா..?

@

Cable சங்கர் said...

@புண்ணாக்கு மூட்டை
என்னவோ தமிழ் சேனல் மட்டும்ம்னு சொல்லதீங்க.. எல்லா சேனல்லேயும்தான்.. இதே லட்சணம்.

@ஜனா
ஆனாலும் ரொம்பத்தான் புகழுறீங்க>.

@ஜவஹர்..
ஒரு நிமிஷம் நான் அதிர்ந்து போயிட்டேன் உங்க பின்னூட்டத்தின் முதல் வரியை பார்த்து..

Cable சங்கர் said...

@பாலாசி
நன்றி.. முயற்சி செய்கிறேன்

@அத்திரி
நன்றி

@அகநாழிகை
நன்றி.. புரிஞ்சதை எனக்கும்தான் கொஞ்சம் சொல்றது..

Cable சங்கர் said...

@ஷண்முகப்பிரியன்
நன்றி சார்..

@ரவிக்குமார் திருப்பூர்
நன்றி. பாருங்க

@ரோமிபாய்
இதுக்குத்தான் குடும்பத்தோட டீவி பாக்கதீங்கன்னு சொல்றது.. பாடலின் முதல் வரி “உறவுகள் தொடர்கதை” அநேகமாய் அவள் அப்படித்தான்னு நினைக்கிறேன். சரியான்னுதெரியலை..

Cable சங்கர் said...

@ராதாகிருஷணன்
நன்றி சார்.

தினேஷ் ராம் said...

ஆகா.. 'ஸ்ட்ரேஞ்சர்ஸ்' எடுத்த விதத்தில் மிரட்டி உள்ளார்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஏ ஜோக் ரொம்ப அருமை

Jayaprakash Sampath said...

மதுரை அருளானந்தம் = அளவு கொஞ்சம் கம்மி. வெல கொஞ்சம் ஜாஸ்தி. ஆனாலும் டேஸ்டி. சாப்பிடலாம்.. இங்கதான் முத முதலா கோலா உருண்டைன்னு ஒரு ஐட்டத்தைப் பார்த்தேன்....

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

மதுரை அருளானந்தம் - நானும் மிகவும் ரசித்து ருசித்து - பலரையும் அறிமுகப்படிதிய இடம். சுவை மட்டுமல்ல - விலையும் ரொம்ப கட்டுக்குள் இருக்கும்.

ரோஸ் பேய் மாதிரி இருந்ததை நானும் பார்த்துதான் சேனல் மாற்றினேன். !!

கவிதை - மிக அற்புதம்.

“மனமொன்றி
முத்தாய்க்கணச்சூட்டில்
வேர்வைப்பூ பிறப்பெடுக்க
அகன்ற விழி கவ்வுதலால்
அரைவிழியாய் ஆகிவிட
எல்லா உணர்வுகளும்
ஓர்மையப்புள்ளிக்குள்
தியான நிலை அடையத்
திசைமறந்து ஒன்றாகும்
உச்சக்கலவியின் பின்
உள்ளாடும் ஓர் அமைதி
மூச்சை உரைபெயர்க்கும்
முழுமைநிறை வாழ்வியலை
எந்த மொழி உரைத்து விடக்கூடும்
என் நிம்மதியே.. ” - என்ன ஒரு வேகமான எழுத்து பிரயோகம்..!!

ஏ-ஜோக் - ரொம்ப பழசு.