Thottal Thodarum

Apr 30, 2009

சந்தோஷம் பொங்குதே..

இன்றைய தினம் மிக சந்தோஷமாய் பிறந்திருக்கிறது.  நேற்று படுக்க போகும் போதிருந்த முதுகுவலி காலையில் லேசாக குறைந்ததினாலா?  காலையில் எல்லாம் நல்ல படியாய் நடந்ததினாலா?  ரொம்ப நாளாய் வர வேண்டிய பணம் திரும்ப வந்ததினாலா? இல்லை ஆஸ்கர் ரவிசந்திரன் நம்மளை புக் செய்யிற மாதிரி கனவு கண்டதாலா?  என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

காலையில் நம்ம பக்கத்தை திறந்து பார்த்ததும் நம்ம பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 150ஐ கடந்திருந்த்து. ஒரு வாரமாய் செஞ்சுரிக்கு முன் தடுமாறும் டெண்டுல்கர் போல 140க்கு அப்புறம் தடுமாறிக் கொண்டிருந்தது தடாலென்று 154 அகி விட்டது. அதுவும் என் சந்தோஷத்திற்கு காரணம். என்னை தொடர்பவர்களுக்கெல்லாம் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏதோ நானும் எழுதுகிறேன் பேர்விழி என்று கடந்த எட்டு மாத காலமாய் தொடந்து எழுதிவருகிறேன்..( அப்படி என்ன எழுதி கிழிச்சிட்டேன்னு… என்பது போன்ற குரல்கள் கேட்கிறது) என்னையும் ஒரு மனுஷனாய் மதித்து தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு என் நன்றி மீண்டும் உரித்தாகுக..

சந்தோஷம்னா நம்ம சந்தோஷம் மட்டும்தானா.? நம் நண்பர்களின் சந்தோஷம் கூட நம் சந்தோஷம்தானே..?  நம்ம லக்கிலுக் என்கிற யுவகிருஷ்ணாவின் சிறுகதை விக்டனில் வெளிவந்திருக்கிறது. நம் சக பதிவர் எம்.எம்.அப்துல்லா திரைப்படத்தில் பாடியிருப்பது குறித்து ஆதியின் பதிவில் சொல்லியிருந்த்து. மேலும் சில பதிவர்களின் எழுத்துக்கள் ப்ரிண்ட் மீடியாவில் வெளிவர இருப்பதாய் அவர் கிசுகிசுத்திருப்பதும் என் இன்றைய சந்தோஷத்திற்கான காரணங்கள் என்றால் அது மிகையாகாது.

(பதிவெழுத விஷயம் கிடைக்கலைன்றதுக்காக இப்படி மொக்கை போட்டு நம்ம சந்தோஷத்தை கெடுக்கிறானே? என்று புலம்பும் நண்பர்களுக்கு. ஹீ.ஹி. சாரி)

தொடர் ஆதரவுக்கு.. நன்றி. நன்றி.. நன்றி. உஙக்ள் பொன்னான வாக்குகளை தமிழ்மணத்திலும். தமிலிஷிலும் போட்டு என்னை வெற்றி பெற செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். ( ஒண்ணுமில்ல.. தேர்தல் எபெக்ட்)



Blogger Tips -பெ’ண்’களூரை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Apr 29, 2009

உலக சினிமா – Lust & Caution (2007)

434px-Lust_caution

crouching tigers, Brokeback Mountain போன்ற புகழ் பெற்ற படங்களின் இயக்குனர் Ang Lee இயக்கிய படம். ஒரு அருமையான திரில்லரும், காமமும், காதலும் கலந்த கதை.
photo_06_hires

1942ல் ஒரு காபி ஷாபிலிருந்து சங்கேதமாய் ஒரு போன் செய்துவிட்டு,  உட்காரும் ஒரு பெண்  தன் வாழ்கையை பின்னோக்கி பார்க்கிறாள். அமைதியான அப்பாவியான இளம் பெண் Wong chai chai ஆனவள். எப்படி மிஸஸ். மேக் ஆகி ஜப்பானிய அரசியம் முக்கியஸ்தரான Mr.Yee ஐ மயக்கி, பழகி, அவனை கொல்ல முயற்சிக்கிறாள் நம்ம சிவாஜி, சரோஜாதேவி நடித்த புதிய பறவை படத்தில் சிவாஜியை லவ் செய்வது போல் பழகி உண்மையை கண்டுபிடிக்க சரோஜாதேவி போவாங்க இல்ல அதுமாதிரி. என்ன அதுல கொலைகாரனை பிடிக்க போவாங்க. இதுல கொல்ல போறாங்க..

03_800x600

Mr.Yee ஏன் கொல்ல முயற்சிக்கிறாங்கன்னா.. அவர் இரண்டாம் உலக போரில் ஜாப்பான் ஆக்கிரமிச்சிருக்கிற சைனாவில் ஒரு முக்கிய அரசியல் பிரமுகர். அவர் எடுத்த பல முடிவுகளால் பல பேர் பல உறவுகளை, இழந்து இருப்பதால் அவரை பழிவாங்க அவருக்கு எதிரா ஒரு தீவிரவாத குழு அமையுது. அவங்க இரண்டு மூன்று முறை அவரை மயக்க பெண்களை பயன் ப்டுத்தியும் அவங்க மாட்டிகிட்டாங்க. அதனால இந்த முறை நாடக நடிகையான ஹீரோயினையும், அவளுடய நண்பன் நடத்தும் நாடக ட்ரூப்பையும் பயன் படுத்தி ஹீரோயினை பெரிய இடத்து கல்யாணமான பெண்னை போல அறிமுகப்படுத்தி, Mr.yeeன் மனைவியின் குருப்பில் சேர்த்து விடுகிறார்கள்.

photo_20_hires

தினமும் அவரது வீட்டிற்கு சீட்டாட்டத்தை போல ஒரு  விளையாட்டை விளையாட போக, கொஞ்சம் கொஞ்சமாய் ஹீரோயினுக்கும், Mr.yeeக்கு நெருக்கம் வர ஆரம்பிக்க, ஹீரோயின் தன் அழகை மூலதனமாய் வைத்து இன்னும் கொஞ்சம் நெருக்கம் காட்டி அவளின் இருப்பிடத்திற்கு வரவழைத்து, கொலை செய்ய முயற்சிக்க, அதிலிருந்து வீட்டிற்குள் வராமலே தப்பிக்கிறான். பின்பு அவன் ஊரை விட்டு மாற்றாலாகி போக வேண்டிய நிலையில் ஹீரோயினை விட்டு வெளியேறுகிறான். நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் அவர்கள் சந்திக்க, இருவருக்கிடையே ஆழ்ந்த காதலும், காமமும், கூத்தாட அவனை ஒரு நகை க்டைக்கு அழைக்கிறாள் ஹீரோயின்.
photo_34_hires
அங்கே அவளை நம்பி வரும்  யீயை கொல்ல சுற்றி ஆட்கள் நிறுத்தப்பட்டிருக்க, அவன் மேல் இருக்கும் காதலில் அவனை தப்ப விடுகிறாள். அதன் பின்பு அவளையும் அவள் சகாக்களையும் கைது செய்து கொல்கிறார்கள்.   அவள் தங்கியிருந்த அறையில் கண்கலங்கியபடி உட்கார்ந்திருக்கும் யீ தன் மனைவியிடம் ஹீரோயின் ஊருக்கு போய்விட்டதாய் சொல் என்று  சொல்கிறான்.

Eileen chang  எழுதிய சிறுகதையை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குனர் Ang Lee. ஹீரோயினாக வரும் Tang Wei கொள்ளை அழகு. அவரின் மென்மையான அதிர வைக்கும் அழகும், பார்வையும் பார்க்கும் நம்மையும் காமூரச் செய்யும். மிக அழகாக நடித்திருக்கிறார்.  அருமையான வசனங்கள்.
04_800x600
”அவனுக்கான நாளை சீக்கிரம் முடிவு செய்யுங்கள்.. இல்லையென்றால் ஒவ்வொரு நாளும் அவன் என்னுள் உணர்வு பூர்வமாகவும், உடல் ரீதியாகவும் இறங்கி கொண்டேயிருப்பான்”

க்ளைமாக்ஸ் காட்சிகளில் ஹீரோயினின் பார்வையிலேயே அவனின் காதலை உணர்வதாகட்டும், ஒற்றை வார்த்தையில் அவனை போகச் சொல்லி காப்பாற்றும் இடமாகட்டும், சிம்பிளி சூப்பர்ப்..

1938ன் ஷாங்காயை கண்முன்னே கொண்டு வரும் ஆர்ட் டைரக்‌ஷன், என்று எல்லாவற்றிலும் தூள் கிளப்பியிருக்கிறார்கள்.

Mr.Yeeக்கும் ஹீரோயினுக்கும் நடக்கும் உடலுறவு காட்சிகள் சமீப காலத்தில் இவ்வளவு அப்பட்டமான உடலுறவு காட்சிகளை சினிமாக்களில் பார்க்கவில்லை. ஆல்மோஸ்ட் நிஜமாகவே உறவு கொள்கிறார்கள், அந்த காட்சிகளில் தெரியும் வெறி கொண்ட காமமும், அது மெல்ல காதலாய் மாறிய உடலுறவு காட்சிகள் நம்மை கட்டிப் போட்டு உட்கார வைக்கும் அழகியல் அனுபவம்

Lust & Caution – ஜாக்கிரதை, கண்டிப்பாய் உங்களை காமுற செய்யும்

டிஸ்கி
இப்படத்தின் அன்கட் வர்ஷனில் மூன்று காட்சிகளில் மிக வயலண்டான செக்ஸ் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறாது.  அந்த பத்து நிமிட காட்சிகளை எடுப்பதற்கு சுமார் 100 மணி நேரம் படபிடிப்பு செய்திருக்கிறார்கள்., அது மட்டுமில்லாமல் நிஜமாகவே இருவரும் உறவு கொள்ள வைத்து படமெடுத்திருக்கிறார்கள் என்கிற குற்ற சாட்டும் இருக்கிறது.

சைனாவிலும், சிங்கப்பூரிலும், அந்த காட்சிகளை கட் செய்துதான் திரையிட்டார்களாம். பின்பு மீண்டும் அன் கட் வர்ஷனை வெளியிட்டிருக்கிறார்கள். ஹாங்காங் தைவான் போன்ற் நாடுகளில் அன் கட் வர்ஷனில் தன் திரையிட்டிருக்கிறார்கள்.

சைனாவின் மிக பெரிய 2007 ஹிட் இந்த படம். சுமார் 15 மில்லியன் டாலரில் தயாரிக்க பட்ட இந்த ப்டம் சைனாவில் கட் செய்யப்பட்ட காட்சிகளுடன் சுமார் 18 மில்லியன் டாலர் சம்பாதித்து அந்த வருடத்திலே சிறந்த வசூல் செய்த படங்களில் ஆறாவது இடத்தை பிடித்தது.

இப்படி டிவிடி, விற்பனை மற்றும் வாடகையின் மூலம் மட்டும் அமெரிக்காவில் சுமார் 24 மில்லியன் சம்பாதித்து  இருக்கிறது. மிக சொற்பமான அமெரிக்க  தியேட்டர்களில் மட்டும் வெளியிடபட்டு சுமார் 4.6 மிலியன் சம்பாதித்தது இப் படம்.

 

 

 

Apr 24, 2009

குங்குமபூவும் கொஞ்சும் புறாவும் - திரைவிமர்சனம்

kk090209_2

காதல், சுப்ரமணியபுரம், வெண்ணிலா கபடி குழு, போன்ற படங்களின் லைவான திரைக்கதை அமைப்பு இயல்பாகவே அந்த படங்களுக்கு  அமைந்தது. அந்த இயல்பு இல்லாமல் வலுக்கட்டாயமாய் திணித்தால், நம்மால் உட்காரமுடியாது.  அதுமட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கை பல சமயங்களில் சினிமாவை போல டிவிஸ்ட் அண்ட் டர்ன்களூடன் இருப்பதில்லை. அதே போல்தான் குங்குமபூவும் கொஞ்சும்புறாவும்.
kk090209_1

தன் தாய் தந்தையரால் அநாதரவாய் விடப்பட்ட துளசி தன் பாட்டியுடன் முட்டத்திற்கு வந்து சேருகிறாள். பக்கத்து வீட்டு இருக்கும் ஹீரோ ராம்கியுடன் பத்தாவது ஒன்றாய் படிக்க, அப்படியே ஒன்னாய் பள்ளியூடத்துக்கு போய் வந்து லவ் அடிக்கிறார்கள். காமெடி என்ற பெயரில் துளசியிடம் வயசுக்கு வர்றதுன்னா என்ன என்பது போன்ற சீன்கள்  எல்லாம் இருக்கிறது. உசிருக்கு உசிராய் காதலிக்கும் இருவரை பற்றி ஒரு வழியாய் இண்டர்வெல் நேரத்தில் ஹீரோவின் அம்மாவுக்கு தெரியவர, துளசியின் தலைமுடியை நறுக்கி அவமான படுத்தி, ஊரை விட்டே வெளியேற்றுகிறாள்.
ஸ்கூல் டூர் போய் திரும்பி வரும் ஹீரோ, அவளை தேடி ஓடி வர, ஆக்ஸிடெண்ட் ஆகி ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆக, ஹீரோயினுக்கு வேறு இடத்தில்  தேவடியாள் என்று  ஊரறிந்தவளுடய தம்பிக்கு பாட்டி திருமணம் செய்து  வைத்துவிட, கடைசி நேரத்தில் சரியான நேரத்தில் வந்தும் ஏதும் செய்யாமல் போய்விடுகிறான் ஹீரோ. அதற்கு அப்புறம் என்னவானால் என்ன?. அதற்கப்புறம் நடப்பதெல்லாம் பழைய படங்கள் போல ஓரே சொதப்பல்.
kk221008_6

ஹீரோயின் தர்ஷனாவின் கண்கள் காந்தம்,  ஹீரோ ராம்கி, கதையில் அவர்கள் சொல்லும் பத்தாவது படிக்கும் மாணவனின் கேரக்டருக்கும் சரியாக செட்டாகவில்லை. அவ்வப்போது சுப்ரமணியபுரம் ஜெய் போல அசடு வழிந்தப்டி தலையாட்டுகிறார். தண்ணியடிக்கிறார். அழுகிறார். செத்து போகிறார். படம் எந்த கால கட்டத்தில் நடைபெறுகிறது என்கிற குழப்பம் நிறைய இடங்களில் வருகிறது. பிண்ணனியில் போடப்படும் பாடல்களும், திருவிழாக்களில் காட்டப்படும் கரகாட்டகாரன்  திரைப்படமும் படத்தின் காட்சிகளும், வழக்கமாய் இம்மாதிரியான லைவ் படங்களில் ஒரு திருவிழா சீன் கண்டிப்பாய் இருக்க வேண்டும் என்கிற கட்டாய காட்சிகளும், குத்து பாட்டும் … ஏன் இந்த கொலைவெறி..?
 

படம் நெடுக பல கேரக்டர்கள், ஏதுவும் மனதில் நிற்க மாட்டேன் என்கிறது. துளசியை திருமணம் செய்யும் தர்மன் கேரக்டருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? பார்க்க கஞ்சா கருப்பு போல காமெடி பார்டியார் உள்ள அவருக்கு ஒரு எஸ்.பி.பி பாட்டு வேற.  தாங்க முடியலடா சாமி. ஊரே தெரிந்து தேவடியா தொழில் செய்யும், ஒருத்தியின் வீட்டிற்கு போய் துளசியின் பாட்டி ஏன் அவளூடய தம்பிக்கு திருமணம் செய்ய ஒத்துக் கொள்ள வேண்டும்?. பிடிக்காத ஒருவனை திருமணம் செய்துவிட்டு, திடீரென நான் தர்மன் பொண்டாட்டி என்று தன் மச்சானில் கழுத்தில் அரிவாள்மனையை வைத்து மிரட்டும் அளவுக்கு தன் புருஷனை எவ்வாறு துளசி உணர்ந்தாள். க்ளைமாக்ஸில் பரோலில் வெளிவரும் போது,  கொலை செய்துவிட்டு வரும் துளசியின் புருஷனுக்கு பதிலாய் எதற்காக ஹீரோ கொலை பழியை ஏற்க வேண்டும், அப்படியே இருந்தாலும் அவன் ஒன்றும் கதையில் முக்கிய கதாபாத்திரம் கிடையாது. க்ளைமாக்ஸில் சாவதற்க்காவே உருவாக்கபட்டவன். அவனை ஹீரோ கொலை செய்துவிட்டான் என்று நினைத்து, தேவையேயில்லாமல் டயலாக்கில் ஜாதி  பிரச்சனையை சொல்லி ஹீரோவை எதற்காக  அடித்தே  கொல்ல வேண்டும்?  என்பது போன்ற கேள்விகள் பல படம் பூராவும்  வந்த வந்த வண்ணம் இருக்கிறது.
kk221008_28
இரகசியம் சொல்வதாய் கிட்டே வந்து முத்தம் கொடுக்க முயற்சிக்கும் காட்சியில் கிட்டே வந்து நாக்கு  உலர்ந்து போய் கணக்கு புத்தகம் கேட்பதும்,  அதே டெக்னிக்கை துளசி ஹீரோ கூச்சாவிடம் பயன் படுத்தி முத்தமிடும் காட்சிகள் மயிலிறகு.

படத்தில் பாராட்ட பட வேண்டியவர் யுவன் சங்கர் ராஜா மூன்று பாடல்கள் அருமை. கேமராமேன் சித்தார்த் முட்டத்து அலைகளையும், அந்த கடலோரத்தையும் கண் முன்னே  நிறுத்தியிருக்கிறார் இருவரும் தங்கள் பங்கை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.
  kk221008_21

படத்தில் கூப்பிடும் போது பகலில் இருக்கும் கேரக்டர்கள், நடந்து அடுத்த தெருவில் வருவதற்குள் இரவாகி விடுகிறது. நடு இரவில் அடிவாங்க ஆரம்பிக்கும் ஹீரோ.. அடுத்த நாள் காலை வரை அடிவாங்கி கொண்டிருப்பதும், மத்யானம் ஹீரோயின் செத்ததும் சாவதும், இப்படி நிறைய இடங்களில் இம்மாதிரியான் குளறுபடிகள். முழுக்க, முழுக்க, வட்டார வழக்கும் இல்லை, இயல்பாய் வரவேண்டிய நகைச்சுவைக்கு பதிலாய் பத்திரிக்கைகளில் வந்த ஜோக்குகள் என்று ஆங்காங்கே பிண்ணனியில் வரும் காட்சிகள் எழுபதுகளில் வந்த படங்களின் காட்சியமைப்பை நினைவூட்டுகிறது. நிறைய இடங்களில் ஒட்டவில்லை.  கேரக்டர்களில் டெப்த் இல்லாததால் எதையும் உணர்வு பூர்வமாய் பார்க்க முடியவில்லை. நிஜ வாழ்க்கை சம்பவஙக்ள் பல சமயம் மிகவும் போர் அடிக்கும், அதை லைவாக காட்டுகிறேன் என்று நம்மை நுங்கு எடுத்துவிட்டார்கள். க்ளைமாக்ஸில் செத்து போனால் படம் ஹிட்டாகும்னு யாரோ சொல்லியிருப்பாங்க போலருக்கு. ம்ஹூம்ம்ம் … பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ராஜ்மோகன்.

குங்குமபூவும் கொஞ்சும்புறாவும் -  புறா செத்திருச்சு..

Apr 23, 2009

போர் நிறுத்தம் அறிவிப்பு

25/04/09 பதிவர் சந்திப்பு அனைவரும் கலந்து கொள்ளுங்கள்


ஈழத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கபட்டுவிட்டது. தமிழன தலைவர் கலைஞர், தமிழனத்தின் ஒரே காவலர், கடந்த 50 வருடமாய் ஈழத்தமிழர்களை கட்டி காப்பாற்றிவரும் ஒரே தமிழர் தலைவர் எடுத்த கடைசி ஆயுதமான வேலை நிறுத்ததை பார்த்து ஸ்தம்பித்து போனது இலங்கை அரசு.

ஆளாளுக்கு தன்னை தூக்கி போட்டு இலங்கை பிரச்சனையில் பந்தாடுவதை தவிர்க்கவும், தான் தான் இன்னமும் தமிழன் காவலர் தான் என்பதை நிருபிக்க,  அரசு வேலை நிறுத்தம் செய்யவில்லை..? திமுக கட்சி வேலைநிறுத்தத்தை அறிவித்து, மாபெரும் வெற்றி அடைந்த போராட்டம் என்று மார் தட்டி கொள்கிறது சன்னும், கலைஞரும். இம் மாதிரி எதையாவது அறிவித்து மாட்டி கொள்வார் என்றுதான்  மற்ற கட்சிகளும் எதிர்பார்த்தது.

இந்த வேலை நிறுத்தத்தை கொண்டாடும் வகையில் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்க, உணவகள் எல்லாம் மூடி கிடக்க, ஏதோ ஒரே ஒரு கடை திறந்திருக்க, அதையும் மூடும் படி போலீஸார் சொல்லி மூட வைத்து விட்டார்கள்.

நன்றாக சரக்கடித்துவிட்டு சன் டிவியில் திருடா திருடி, சரவணாவையும்,  கலைஞர டிவியில் முரட்டுகாளையும், வெள்ளித்திரையும்,  பார்த்து மக்கள் எல்லோரும் இலங்கை தமிழர்களின் அவல நிலையை எதிர்த்து இரண்டு சேனல்களீலும் படம் பார்த்தே தங்கள் எதிர்ப்பை உலகிற்க்கு உணர்ந்த,

இவையனைத்தையும் வெளிப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த தமிழின காவலர், உலக தமிழ் மக்களின் காவலர், டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையில் நடந்த வேலை நிறுத்தத்தை கண்டு, பயந்து , அதிர்ந்துபோன ராஜபக்சே அரசு அரண்டு போய் ராவோடு ராவாய் போர் முனையிலிருந்து தஙக்ள் படைகளை வாபஸ் வாங்கிக் கொண்டும் தனி ஈழம் கொடுக்க சம்மதித்து விட்டதாகவும் தெரிகிறது.



தமிழ்சினிமாவின் 90 நாட்களை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

எ.வ.த.இ.மா.படம்? – Mumbai Meri Jaan

14744611_mmj

11-7-2006ல் மும்பையில் நடந்த தொடர் ரயில் குண்டுவெடிப்பு ஓவ்வோரு
மும்பைகாரர்களுக்கும் தனிப்பட்ட முறையில் நடந்த ஓரு அதிர்சியே. கொஞ்சம் நினைத்து பாருங்கள் அந்த நேரத்தில் அதே ரயிலில்களில் நீங்கள் இருந்திருந்தால் அதிலிருந்து தப்பியிருந்தாலும், உங்கள் மனநிலை என்னவாக இருந்திருக்கும். எப்படி அதிலிருந்து மீள்வீர்கள். அதை பற்றி படம் தான் நிஷிகாந்த காமத என்கிற இயக்குனர் இயக்கிய ஹிந்தி படம். "மும்பை மேரி ஜான்".

இன்னும் சில நாட்களில் ரிட்டைய்ர் ஆக போகும் பாடில்(பரேஷ் ராவல்), அவரின் வாழ்க்கை தத்துவம் "எப்பவுமே ஓரமாய் நின்று பார்க்க பழகிக்கொள், அந்த படத்தில் நடிக்க ஆசைபடாதே" என்றும், தன் வாழ்கையில் எந்த ஓரு நேரத்திலும், மிகப் பெரிய திருடனையோ, தீவிரவாதியையோ, பிடித்ததில்லை. என்பதில் எந்த வருத்தமும் இல்லாதவர். பரேஷ் ராவலுக்கு ஓரு லைப் டைம் கேரக்டர்.மனுஷன் சும்மா பின்னியிருக்கிறார்.

அவருடய அசிஸ்டெண்டாக வரும் கதம் (விஜய் மெளரியா) தனது புது பெண்டாட்டியுடன் ஹனிமூன் போகயிருந்த நேரத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால், அவருடய லீவ் கேன்சலாகி, குண்டுவெடிப்பு நிகழ்ந்த நாளன்று பாரில் லஞ்சம் வாங்க மறுப்பதும், இந்த உலகையே மாற்ற நினைத்து அவரின் செய்கிற செய்கைகள் நீர்த்து போவதும், அந்த கோபத்தை கையாலாகாத ரோட் சைட் டீ விற்பவனிடம் காட்டுவதும், குண்டு வெடிப்பினால் நடந்த பாதிப்பையும், தன்னுடய நிலையையும் நினைத்து மனதுக்குள் புழுங்கி, பாடிலின் ஓரு மழைநாள் பார்டியில் போதையின் உச்சத்தில் தன்னைதானே சுட்டுக் கொள்ள  முயற்சிபதும்.  சிம்ப்ளி சூப்பர்.

நிகில் தன்னால் சொந்தமாய் காரும், டிரைவரும் வைத்துக் கொள்ள அனுமதியிருந்தும், எதற்காக உபயோகபடுத்தி ஏற்கனவே கெட்டிருக்கும் மும்பையின் டிராபிகையும், பொலீயுசனையும் அதிக படுத்த வேண்டுமென, பிளாஸ்டிகை யூஸ் பண்ணாமல் இருக்கும்படி அவ்வப்போது பழம் விற்கும் கடைகாரனிடம் பேசும் ஆக்டிவிஸ்டாக மாதவன். அவருக்கு நிறைமாத கர்பிணி மனைவி. குண்டு வெடிப்புக்கு உள்ளான டிரையினில் எந்த வித பாதிப்பில்லாமல் இருந்தாலும் அந்த அதிர்ச்சியில்,மலங்க, மலங்க விழித்துக் கொண்டு , என்ன செய்வதறியாமல் அங்கே நடக்கும் , நடந்திருக்கும் அவலங்களையேல்லாம் பார்த்து கொண்டிருக்கும் ஓருவனை நம் கண் முன்னே நிறுத்துகிறார்.மாதவன்.

ருபாலி ( சோஹா அலி கான்) ஓரு நியூஸ் சேனல் ரிப்போட்டர். பரபரப்பான ஓரு ரிப்போட்டர்.மற்றவர் சோகங்களை எல்லாம் பரபரப்பான நியூஸாக ஆக்குவதில் வல்லவர். திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண். அவரின் வருங்கால கணவன் அந்த குண்டு வெடிப்பில் இறந்துவிட, அதே நியூஸ் சேனலுக்கு, அவரே நீயூஸாவதும், தான் செய்த அதே வேலையை, அதே கேள்விகளை தன்னிடமே, கேட்கப்படும்போது, அவர் நொறுங்கி போவதும், அதை கொஞ்சம் கூட தனிமனித நோக்கிலிருந்து பார்க்காமல்,ஓரு நியூசாகவே  பார்க்கும் அந்த சேனலின் தலைவர்.

தாமஸ் ( இர்பான் கான்) அவரின் இன்னொரு மிகச் சிறந்த நடிப்புக்கு இந்த படம் ஓரு உதாரணம்.பம்பாயில் டீ விற்கும் தமிழன். தன்னால் தனது மகள், மனைவியை மிகப் பெரிய மால்களூக்கு,அழைத்துபோய் அங்கே இருக்கும் செண்ட் கடையில் இருக்கும் செண்ட்களையெல்லாம் ஓசியில் போட்டு பார்க்க, அங்கே இருந்தவர்கள் அவனை அடித்து விரட்டுவது, அந்த மாதிரி மால்களையேல்லாம் பழிவாங்குவதாக நினைத்து, ஓரு ரூபாய் காய்ன் போனில் எல்லா மால் களிலும் பாம் இருப்பதாக போலீசூக்கு போன் செய்து அவர்கள் வியாபரத்தை குழப்புவதால் மன சந்தோஷமடையும் ஓரு , பாமரனை கண்முன்னே காட்டியிருக்கிறார்.  தான் செய்த ஓரு போனால் பாதிக்கப்பட்ட ஓரு வயதானவரின் பாதிப்பை கண் முன் பார்த்த பின் அவர் பிழைத்துவிட்டாரா? என்று அலைபாய்வதும், அவர் டிஸ்சார்ஜ் ஆகி,வரும் வரை தினமும் அந்த ஹாஸ்பிடலின் வாசலில் காத்திருப்பதும், அவர்கள் டாக்ஸிக்காக காத்திருக்கும்போது, ஓரு டாக்ஸியை பிடித்து கொடுத்து, அது நகர்கையில் கையில் ரோஜா கொடுப்பதும், கவிதை.

ஓரு டீக்கடையில் தினமும் உட்காரும் நண்பர்கள், ஓரு கம்ப்யூட்ட்ர் கம்பெனியில் சேல் மேனாக இருக்க்கும் சுரேஷ்(கே.கே.மேனன்) இம்மாதிரியான குண்டுவெடிப்புக்கெல்லாம் காரணம் முஸ்லிம்கள் தான் என்றும், தன்னை போலவே தினமும் அந்த டீக்கடைக்கு வரும் ஓரு முஸ்லிம் இளைஞனை குண்டுவெடிப்பு நிகழ்விலிருந்து காணாததால், அவர் வீடு வரைக்கும் சென்று விசாரித்து, அவர் ஏன் இதற்கு காரணமாய் இருக்கக் கூடாது என்று எல்லா முஸ்லிம் கலையும் சந்தேகப்படும் ஓரு கோபக்கார இளைஞர்.

இவர்களை வைத்து பின்னப்பட்ட ஓரு எமோஷனலான, அருமையான் திரைக்கதை படத்திற்கு பலம்

படத்தை இயக்கிய இயக்குனருக்கு இது மூன்றாவது படம், அவரின் முதல் படமான "டோம்பிவில்லி பாஸ்ட்" என்கிற மராத்தி படம் மிகப் பெரிய ஹிட், பல சர்வதேச விருதுகளை வாங்கிய படம், ஏனோ தமிழில் செய்தபோது "எவனோ ஓருவன்" வரவேற்கபடவில்லை. ஓரு தரம் வாய்ந்த  இயக்குனருக்கான அத்தனை அம்சங்களும் இவரிடம் இருக்கிறது.

டெக்னிகலாக, கேமரவாகட்டும், எடிட்டிங்காகட்டும், பிண்ண்னி இசையாகட்டும், எந்த வித குறையும் கிடையாது.

சிம்ப்ளி சூப்பர்ப்..

எ.வ.த.இ.ம.படம்?= எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம்?

Apr 22, 2009

ஹாலிவுட் சினிமா - Fast And Furious –4

dfgqd8hj_115s9mkzkzh_b

ஹைவேஸில் கார் டிரைவரின் பக்கத்தில் உட்கார்ந்தபடி அவர் கிளட்ச் போடும்போது, நீங்களும் கிளட்ச் போட்டு, அவர் பிரேக் போடும் போது நீஙக்ளும் பிரேக் போடுபவரா..? அப்படின்னா நீங்க காலை மடிச்சு வச்சிகிட்டுதான் படம் பாக்கணும்.

நான் முதல் பாகத்துக்கு அப்புறம் இப்பத்தான் படம் பாக்குறேன். அதனால எதுவும் படம் பாக்கிறதுக்கு பிரச்சனையில்லை. நடுவுல வந்த ரெண்டும் படு சொதப்பல்னு சொன்னாங்க.. இந்த படத்தில் முதல் பாகத்தில் நடிதத முக்கிய நடிகர்கள் விண்டென்ஸல், அந்த ஹிரோயின், டென்சலின் நண்பராக வருபவர் ஆகியோர் மீண்டும் நடித்திருக்கிறார்கள். ஒரு மெல்லீசான கதையை வைத்து உட்டாலக்கடி அடித்திருக்கிறார்கள்.
fastandthefurious04_m

ஓப்பனிங் காட்சி சேஸிங் படமெடுதிருக்கும் விதமும், ஆக்‌ஷன் அமைப்பும், எடிட்டிங்கும் நம்மை மயிர்கூச்செரிய வைத்துவிடும். அப்படி ஒரு வெறி பிடித்த சேஸிங். நீங்கள் தியேட்டருக்கு செல்லும் போது படம் ஆரம்பிப்பதற்கு முன் செல்லுங்கள், முதல் காட்சியே இந்த சேஸிங் தான்,

டென்ஸலும் அவனின் காதலியும் விட்ட திருட்டு தொழிலை மீண்டும் செய்துவிட்டு ஆளாளூக்கு பிரிந்துவிட, ஒரு நாள் டென்ஸலுக்கு அவனுடய காதலி கொல்லப்பட்ட விஷய்ம் தெரிய வர, கொலைகாரனை கண்டுபிடிக்க மீண்டும் திரும்பி வருகிறான்.

(L to R) Dominic Toretto (VIN DIESEL) reaches for Letty (MICHELLE RODRIGUEZ) during a car chase in the high-octane action-thriller ?Fast & Furious?.

ஒரு போதை மருந்து கூட்டத்தை தேடும் டென்ஸலின் போலீஸ் நண்பனும், தான் தேடுபவனும் ஒருவனே என்று முடிவுக்கு வர, இருவரும் ஒரு ரேஸில் கலந்து கொள்கிறார்கள். அதன் மூலம் அந்த போதை மருந்து கும்பலின் நெட்வொர்க்கில் உள்ளே நுழைய, அவர்களின் டார்கெட்  வில்லனை கண்டுபிடித்து, எவ்வாறு டென்ஸல் பழி தீர்க்கிறான் என்பதுதான் க்ளைமாக்ஸ்,  கடைசியில் டென்சலுக்கு ஜெயில் தண்டனை கிடைத்து போலீஸ் அவனை வேனில் அழைத்து போக, முதல் காட்சியில் வந்தது போல ஒரு சேஸிங் ஆரம்பமாகிறது.

dfgqd8hj_117fnn6prcv_b

படம் முழுக்க , விர்,விர்ரென காரெல்லாம் பறக்கிறது.  குறிப்பாக நகர தெருக்களில் நடக்கும் சேஸிங், மெக்ஸிகன் மலை ஓடு பாதை சேஸிங், அவர்களை பாலோ செய்யும் ஜிபிஆர் எஸ், விஷுவல் என்று ஒரேயடியாய் அதகள படுத்தியிருக்கிறார்கள். சமீபத்தில் நான் பார்த்த நைல் பைட்டிங் சேஸிங்.. படம்

டென்ஸலின் இருப்பு படத்திற்க்கு ஒரு கெத்தை கூட்டுகிறது. கட்டுமஸ்தான பாடியுடன், ஒரு சூப்பர் ஹீரோவை போல அலைகிறார், அவ்வப்போது “Pussy” போன்ற ஒன்றை ஜேம்ஸ்பாண்ட் சொற்களை உதிர்த்து, ஸ்டைலாய் நடக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார். கதாநாயகியின் நடிப்பைவிட, சேஸிங் காட்சிகளில் தெரியும் மார்பகங்கள், லாரா கம்பெட் போன்ற உடையில், ஏற்கனவே சீட்டின் நுனியில் உட்காரவைத்திருக்கும், சேஸிங்கில், சூட்டை கிளப்புகிறார். ..

திடும், திடுமென ஆப் ஆகி போகிறது. லாஜிக் என்கிற வஸ்துவை  எல்லாம் கேட்கக்கூடாது. காதில் பூ சுற்றிக் கொண்டும், மூளையை கழட்டி வைத்துவிட்டுதான் படம்   பார்க்க வேண்டும். ஆனால் நெருப்பு பொறி பறக்கும் சேஸிங்க், ஆங்காங்கே வரும் முத்த காட்சிகள், அற்புதமான ஓளீப்பதிவு, எடிட்டிங் சி.ஜி, பரபரப்பான திரைக்கதை என்று தொழில்நுட்பங்களை வைத்து  விளையாடி நம்மை கட்டி போட்டு விடுகிறது.

Fast & Furious – வேகத்தை விரும்புவர்களுக்கு மட்டும் .

img_10டிஸ்கி:

இண்டர்வெலுக்கு முன்  படம்  நடுவில் திடீரென தொங்கி போய், மாற்றி, ,மாற்றி ஏதோ பேசி கொண்டிருப்பதை பார்த்து வெறுத்து போன இரண்டு பேர்,

‘மச்சான் என்னாடா சொம்மா பேசிட்டேருக்கான், வீட்டுக்கு போலாமா..:

“டேய் இருடா அவங்க எங்கனாச்சும் படத்தோட கதையை சொல்ல வேணாமா.. இனிமே ரேஸ்தான்.. “ என்றபடி பாத்ரூமுக்கு போனார்கள்.

 


தமிழ்சினிமாவின் 90 நாட்களை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Apr 21, 2009

I.P.L – ஒரு பார்வை.

banner1

இந்த ஐ.பி.எல் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சிது, எல்லாருமே பிஸியாட்டாங்க.. இந்த போட்டிய நடத்திறதுனால இந்திய கிரிக்கெட் போர்டுக்கு ஆயிரம் கோடி கிட்ட வருமானம் வருதுங்கிறாஙக், இங்க இந்தியாவில நடத்த முடியாட்டாலும் சவுத் ஆப்ரிக்காவிலாவது நடத்துறாங்க வருமானம் போயிருமென்னு.

இந்த ஐ.பி.எல். எதுக்கு ஆரம்பிச்சிதுன்னா, கபில் தேவ் தலைமையில் ஜீ டிவிக்காரஙக..  இந்தியன் கிரிகெட் லீக்னு ஒன்ணை ஆரம்பிச்சாங்க. ஏன் ஆரம்பிச்சாங்கன்னு அவங்க சொன்ன காரணம் இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிப்பதற்க்காகன்னு சொன்னாங்க. ஆனா நிஜ காரணம் அது இல்ல.. இவங்களுக்கு கிரிக்கெட் போர்டுக்கும் இவங்க ஜீ ஸ்போர்ட்ஸ் சேனல் ஆரம்பிச்சதும் கிரிக்கெட் போட்டி ரைட்ஸ் வாங்க முயற்சி செய்ய, அது ஏதோ பிரச்சனை வந்ததும், ஆஸ்திரேலியாவில சேனல் 9 ஆரம்பிச்ச மாதிரி ஒரு கிரிகெட் லீக் டீமை ஆரம்பிச்சாங்க.. இவங்க ஏன் இப்படி கிரிகெட், கிரிகெட்ன்னு அலையுறாங்கன்னா.. அதன் மூலமா வர்ற காசு. கொஞ்ச நஞ்சமில்ல..

இவங்க ஆரம்பிச்ச ஐ.சி.எல்.ல விளையாடுற வீரர்களுக்கு, லட்சக்கணக்குல பணம் கொடுக்க, நிறைய வீரர்கள் ஐ.சி.எல் பக்கம் சாய,  முதல் ஐ.சி.எல் ப்ரபரப்பை பார்த்து மிரண்டு போன கிரிக்கெட் போர்டு, உடனடியா ஆரம்பிச்சதுதான் இந்த ஐ.பி.எல்.

ஸ்டார் இந்திய வீரர்களோ, புதிய இளம் வீரர்களோ ஐ.சி.எல்ல விளையாடினா எந்த காலத்திலேயும் இந்திய கிரிக்கெட் டீமில் விளையாட இடம் கிடையாது, போட்டிகள் நடத்த ஸ்ட்டேடியம் கொடுக்காமல் இழுத்தடிப்பது. அப்படி கொடுத்தால் அந்த ஸ்டேடியத்தில் இந்திய கிரிக்கெட்டின் விளையாட்டுக்கள் நடத்த மாட்டோம் என்று மறைமுக மிரட்டல்கள் என்று எல்லாம் சேர்ந்து ஐ.சி.எல் மவுசை டம்மியாக்கி விட்டார்கள்.

ஒரு காலத்தில் இ.எஸ்பி.என் மட்டுமே ஸ்போர்ட்ஸ் சேனலாய் இருக்க, பின்பு  ஸ்டார் ஸ்போர்ஸ் ஆரம்பிக்க பட்டது. அந்த நேரத்தில் ஷார்ஜா ஒன்டே மேட்சுக்கள் பிரபலமாக, அந்த போட்டிக்கான இந்திய ஒளிபரப்பு உரிமைக்காக போட்டியிட்டது இந்த இரு நிறுவனங்கள் தான்.  ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரை தவிர யாருமில்லாத காரணத்தினால். இவ்ர்கள் இருவருமே சேர்ந்து ஈ.எஸ்.பி.என். ஸ்டார் என்று ஒரே கம்பெனியாக்கி, அடிமாட்டு விலைக்கு ஒளிபரப்பு உரிமை கேட்க,  நொந்து போன ஷார்ஜா ஆர்கனைசர் புகாதிர்  கோபத்தில் ஆரம்பித்ததுதான் டென் ஸ்போர்ட்ஸ்.

இவர்கள் எல்லாம் இப்படி கோடி கணக்கான பணத்திற்காக ஆளுக்கொரு சேனல் ஆரம்பித்து கல்லா கட்ட, நேற்று மாலை  மார்கெட்டே வெறிச்சோடியிருக்க, இரண்டு கடை பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“பாருக்கா மூணு நாளா மார்கெட்டுல ஆள் நடமாட்டமேயில்லை”

“ஏதொ கிரிக்கெட் மேட்ச் நடக்குதாம்  அஞ்சலை, அதான் சனங்க எல்லாம் சாயங்காலம் ஆனா வீட்டிலேயே அடைஞ்சிர்றாங்க..”

“ ஒரு வாரம் நடக்குமா கிரிக்கெட்டு.?

” என்னது  ஒரு வாரமா..? அம்பது நாளாம்”

“அய்யோ அம்பது நாளா.? என் பொழைப்பு நாறிருமே. நான் தெனம் தண்டல் கட்டறது எப்படி? சாப்பாட்டுக்கு என்ன செய்வேன்?. ரெண்டு நா த்ண்டல்  கொடுக்காட்டி எங்கனாச்சும் படுத்தாவது தண்டல கட்டுனு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம  சொல்றான்..  அம்பது நாளைக்கு நான் என்ன பண்ணுவேன்: என்று புலம்பியபடி தலையில் கை வைத்தாள்.

ஐ.பி. எல் கிரிக்கெட்..  கோடிக்கணக்கான பணம் புரளும் இந்தியர்களின் விளையாட்டு

 

டிஸ்கி:

இந்த பதிவை எழுதியதால் நான் என்னவோ கிரிக்கெட் எதிர்பாளன் என்று நினைக்க வேண்டாம். ரிலையன்ஸ் கோப்பை நடந்த போது மேட்ச் பார்பதற்க்காக வேலையை ரிசைன் செய்த கிரிக்கெட் காதலன் நான்.  இப்போ கல்யாணமாயிருச்சு.. அதனால ?????

Apr 18, 2009

தமிழ்சினிமாவின் 90 நாட்கள்

எவ்வளவுதான் ரிசஷனில் இருந்தாலும் பெரிதாய் பாதிக்கபடாத சில தொழில்களில் சினிமாவும் ஒன்று. மக்கள் பொழுது போக்கிக்கிற்காக, செலவு செய்வதை பெரிதாய் கருதுவதில்லை.  அவர்கள் கொடுக்கும் காசுக்கு தகுதியானது கிடைக்கும் வரை. அப்படி கடந்த 90 நாட்களில்  அதாவது ஜனவரி 1 முதல் மார்ச் வரையில் வெளியான திரைப்ப்டஙக்ளை பற்றிய ஒரு கண்ணோட்டம்.

ஜனவரி 2009
இம் மாதத்தில் ஏவி.எம். குமரனின் அ.ஆ.இ.ஈ,  வில்லு, காதல்னா சும்மா இல்லை, படிக்காதவன், என்னை தெரியுமா, சற்று முன் கிடைத்த தகவல், வெண்ணிலா கபடிக் குழு ஆகியவை வெளியானது.
dhanush

இதில் அ…ஆ….இ…ஈ மிக்ப் பெரிய தோல்வியை சந்தித்த படம். தெலுங்கிலிருந்து ரீமேக் செய்யப்பட்டு மிகவும் எதிர்பார்க்க பட்ட படம்.
காதல்னா சும்மா இல்லை திரைப்படமும், தெலுங்கில் கம்யம் என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் ஏனோ தெரியவில்லை தெலுங்கில் பெரிய ஹிட்டான இந்தபடம். தமிழில் வேலைக்காகவில்லை. முக்கியமாய் பாதி படத்தை தெலுங்கிலிருந்து டப் செய்துவிட்டு, ரவிகிருஷணா வரும் காட்சிகளை மட்டும் தமிழில் எடுத்து வெளியிட்டது ஒரு மைனஸ்..

வில்லை பற்றி நாம் சொல்தற்கு ஏதுமில்லை உலகமறிந்ததே. தெலுங்கிலும், தமிழிலுமாய் எடுக்கபட்ட என்னை தெரியுமா படம் யாருக்கும் தெரியாமலே தியேட்டரை விட்டு ஓடிவிட்டது. அதே நிலைதான் சற்று முன் கிடைத்த தகவலுக்கும். படிக்காதவன் படத்தை பற்றி பெரிசாய் சொல்ல ஏதுமில்லாவிட்டாலும், சன் பிக்சர்ஸின் மார்கெட்டிங், விவேக் காமெடி எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய ஹிட். மாத கடைசியில் வந்தாலும், மெகா பட்ஜெட் படங்களுகிடையே குறைந்த செலவில் நிறைந்த  இன்பம் என்பது போல் வந்த வெண்ணிலா கபடிக் குழு அருமையான ஓப்பனிங்கோடு வெற்றி பெற்றது..
vennila-kabadi-kuzhu
ஹிட் லிஸ்ட் : படிக்காதவன், வெண்ணிலா கபடிக் குழு

பிப்ரவரி
நான் கடவுள், சிவா மனசுல சக்தி, லாடம், த.நா.அல.4777

இதில் நான் கடவுளுக்கு பெரிய ஓப்பனிங் கிடைத்தது. ஆனால் அந்த படத்துக்கான செலவு செய்தது ரிட்டர்ன் கிடைத்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். விமர்சகர்களிடம் பெறும் பாராட்டையும், திட்டையும் வாங்கிய படம்.
Siva-Manasula-Sakthi-3
சிவா மனசுல சக்தி மிக சுமாரான படம. விகடன் குழுமத்திடமிருந்து, வந்த படம், சன் வாங்குவதாய் இருந்து, பின்பு அவர்கள் விலகிவிட,  டிஸ்ட்ரிபூஷன் முறையில் வெளீயான படம். சந்தானத்தின் காமெடிஇளைஞர்களை, கவர்ந்தது, சில சமயம் எதற்கு ஓடுகிறது என்று தெரியாமல் சில படங்கள் ஓடும். அதில் SMSம் அடங்கும். லாடம், த.நா.அல. போன்றவை சுவடே தெரியவில்லை.

ஹிட் லிஸ்ட் : சிவா மனசுல சக்தி,
ஆவரேஜ் : நான் கடவுள்

மார்ச்

தீ, யாவரும் நலம்,1977, காஞ்சீவரம், அருந்ததீ, பட்டாளம்.
Yavarum-Nalam-Stills-10

தீ சன் டிவியில் மட்டும் வெற்றிநடை போட்ட படம், யாவரும் நலம் யாருமே எதிர்பார்காத ஒரு அர்பன் ஹிட். அருந்த்தீ டப்ப்ங் படமாய் இருந்தாலும், நேரடி தமிழ் படங்களுக்கான ஓப்பனிங் கிடைத்த படம். சரத்குமாரின் 1977 சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட படம், பட்டாளம் ப்டையெடுப்பு தோல்வியே. காஞ்சீவரம் தமிழிலிருந்து ஒரு உலக சினிமா.. வழக்கம் போல் நல்ல சினிமா ஓடாது. அதற்கு இப்படமும் விலக்கல்ல..
arunthathi-09

ஹிட் லிஸ்ட் : யாவரும் நலம், அருந்ததீ

மொத்தம் மூன்று மாதங்களில் வெளியான 17 படங்களில் 5 படங்கள் மட்டுமே ஹிட் லிஸ்டில் இருக்க, ஒரு ஆவரேஜ் படம் இடம் பெற்றிருக்கிறது.  கொஞ்சம் ஆரோக்கியமாய்தான் தெரிகிறது. இப்படங்களை தவிர, சின்ன படங்கள் சிலது ரீலீஸ் ஆகியிருக்கலாம். அவற்றை பெரிதாய் எடுத்து கொள்ள ஏதுமில்லாததால் எழுதவில்லை

Technorati Tags: ,

Apr 16, 2009

உலக சினிமா – Death Proof

Death_Proof_%28Netherlands%29 அர்லின், ஷானா, ஜங்கிள் ஜூலியா மூவரும் ஜங்கிள் ஜூலியாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக டெக்ஸாஸை நோக்கி செல்கிறார்கள். இவர்களை பாலோ செய்யும் ஸ்டண்ட்மேன் மைக் தன்னுடய டெத்புரூப் காரில பயணிக்கிறான். அவன் ஒருவிதமான சைக்கோ.. இந்த மூன்று பெண்களை பற்றிய விஷயங்களை முன்பே அறிந்திருக்கிறான்.

மைக் பாலோ செய்வதை முன்பே கவனித்திருந்த ஜங்கிள் ஜூலியானா. அவள் ஒரு ரேடியோ ஆர்.ஜே. பெண்கள் மூவரும் ஒரு பாரில் அமர்ந்திருக்க, அங்கே மைக் வர, அவனின் கட்டுமஸ்தான உடலையும், அவனுடய ஆண்மையையின் காரணமாய் அவன் தொடர்ந்து வந்த விஷயம் தெரிந்தாலும், அவனுடன் பழகுகிறாள். அப்போது ஜூலியானாவின் தோழி பாம் பார்ட்டி முடிந்ததும், அவளை தான் ட்ராப் செய்வதாய் கூறி தன்னுடய டெத்புருப் காரில் அழைத்து சென்று அவளை காரை படு வேகமாய் ஓட்டி சென்று, திடீரென ப்ரேக் போட்டே கொன்று விடுகிறான். ஜூலியானாவையும் அவள் தோழிகளையும் தனியே துரத்தி, அவனுடய காரை நேருக்கு நேராய் மோதி அவர்கள் மூவரையும் கொல்கிறான்.

அந்த விபத்தில் சிறிய காயமடையும் அவன் மீண்டும் பதினான்கு மாதம் கழித்து வேறு ஒரு செட் ஆப் பெண்களை பாலோ செய்கிறான். லி, ரோஸ், மற்றும் மேத்திஸ் இவர்கள் மூவரும் அவர்களுடய ஸ்டண்ட் தோழி ஜோபெல்லை பிக்கப் செய்கிறார்கள்.

வழக்கம் போல் மைக் இவர்களை காரில் துரத்தியே அவர்களை கொல்ல முயற்ச்சிக்க,  அதிலிருந்து தப்பிய நால்வரும் எவ்வாறு மைக்கை கொல்கிறார்கள் என்பதே கதை.

வழக்கமாய் Quentin Tarantinoவின் படங்களை போல பெரிதாய் கதையில்லை என்றாலும் அப்நார்மல் காட்சியமைப்புகள், நீள, நீளமான் வசனங்கள் என்று அவருடய அக்மார்க் சீன்கள். அருமையான சேஸிங் காட்சிகள், மயிற்கூச்செரியும் ஆக்ஸிடெண்ட் காட்சிகள, இளமை துள்ளும் பெண்களிடயே நடக்கும் டைலாக்குள் பல சமயம் நம் காதுக்ளை மூடிக் கொள்ள செய்யும், முதல் ஆக்ஸிடெண்ட் செய்யும் காட்சியும், அதை படமெடுத்த விதமும் சிம்பிளி சூப்பர்ப். அதே போல் ஜூலியானா மைக்கை ஒரு பாரில் வைத்து அவனின் முன்பாய் செக்ஸியாய் நடனமாடும் காட்சி, என்று காட்சிக்கு Quentin Tarantinoவின் முத்திரை. இரண்டாவது செட் பெண்கள் மைக்கை துரத்தி, துரத்தி சேஸ் செய்யும், காட்சிகளில் நாமே வண்டியோட்டுவதை போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

படத்தின் ஒளிப்பதிவும் Quentin Tarantinoதான். மிகவும் அருமையான ஒளிப்பதிவு, அதிலும் முதல் கேங்கை நேருக்கு நேராய் புயல் போன்ற் வேகத்தில் மோதுவதை காரில் இருந்த மூன்று பெண்களின் பாயிண்ட் ஆப்வியூவில் அவர்களின் மீது கார் மோதிய இம்பாக்டை படமெடுத்திருக்கும் காட்சி ஒன்றே சான்று. இதே போன்ற ஒரு காட்சியை நம் தமிழ்  சரோஜாவில் முயற்சித்திருப்பார்கள்.

படம் நெடுகில் எழுபதுகளில் வரும் பிண்ணனி இசை. எடிட்டிங் ஸ்டைல் என்று காட்சிக்கு காட்சி இயக்குனரின் முத்திரை. வித்யாசமான ஆக்‌ஷன் பிரியர்களுக்கு

Death proof -  கல்ட் பட ரசிகர்களுக்கு


கார்த்திக் அனிதா திரைவிமர்சனத்தை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Apr 14, 2009

கார்த்திக் - அனிதா - திரைவிமர்சனம்

பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


karthik-anitha-stills54

\படத்தின் பூஜையின் போது வெளியிட்ட டிசைன் கண்டிப்பாய் வித்யாசமாய் ஒரு படமாய் இருக்கும் என்று கட்டியம் கூறியது. அதன் பிறகு படத்தின் போஸ்டர் டிசைன் மேலும் வா,, வா… என்று அழைக்க, தியேட்டரில் நான்.

கார்த்திக்கும் அனிதாவும் எதிர் எதிர் வீட்டில் வசிப்பவர்கள், சிறு வயதிலிருந்தே சேர்ந்தே எலியும் பூனையுமாய் இருப்பவர்கள். கார்த்திகின் அப்பா கோட்டா சீனிவாசராவ் எதிர்வீட்டு அனிதாவின் அம்மாவை தங்கையாய் பாவிக்க, இருவர் குடும்பமும் உறவு முறை சொல்லி அழைக்கும் அளவுக்கு ஒற்றுமையான குடும்பம்.

karthick-anitha-new-stills24

கார்த்திக் அனிதா இருவருக்கும் இடையே நடக்கும் போட்டி சண்டைகளில், ஒருவரை ஒருவர் வாரி விட்டு கொண்டிருக்க, ஒரு நிலையில் அனிதாவால் கார்த்திக் காலேஜில் ச்ஸ்பெண்ட் செய்யப்படுகிறான். இந்த இடைப்பட்ட நிலையில் அனிதாவுக்கு கார்த்திக்கின் மேல் காதல் வர, கார்த்திக் அவளை காதலித்தானா.. அனிதாவுக்கு நிச்சயத்த திருமணம் நடந்ததா.? கார்த்திக்கின் அப்பா ஏன் திடீரென்று இற்ந்து போனார் என்பதை வெள்ளிதிரையில் காண்க.

கார்த்திக்காக வரும் ரத்தன் நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஆனந்த தாண்டவம் சித்தார்த்தைவிட நன்றாகவே எக்ஸ்பிரஷ் செய்கிறார். அனிதாவாக மஞ்சு கேரள வரவு. பக்கத்து வீட்டு பெண்ணை போல இருக்கிறார். கொஞ்சம் நடிக்கவும் முயற்சி செய்கிறார்.

karthick-anitha-new-stills34

கார்த்திக்கின் அப்பாவாக வரும் கோட்டாவின் நடிப்பு ஆர்பாட்டமில்லாதது.  அதே போல் ராஜன் பி.தேவின் நடிப்பும் மிகையில்லாதது.

கார்த்திக் தன் அப்பாவுக்கு பதிலாய் காலனி லூசு மனோகரை காலேஜுக்கு அழைத்து சென்று, அடிக்கும் லூட்டி நிஜமாகவே ரசிக்கலாம். மற்றபடி திரும்ப, திரும்ப இவர்கள் இருவருக்கும் நடக்கும் போட்டியில் மாற்றி, மாற்றி போட்டு கொடுப்பதையே எவ்வளவு நேரம்தான் காட்டுவார்கள்.

karthik-anitha-stills20

புதிய இசையமைப்பாள்ரின் ஜாக் ஆனந்தின் இசை ஸோ..ஸோ..  கேமரா பல இடங்க்ளில் அவுட் ஆப் போகஸாய் இருக்கிறது.

புதிய இயக்குனர் ஸ்ரீ ஹரியின் திரைக்கதை ஏற்கனவே பிரியாத வரம் வேண்டும் படத்தை நினைவூட்டுகிறது. ஸ்டில் செஷனுக்கும், போஸ்டர் டிசைனுக்கு மெனக்கெட்டிருந்ததை,  திரைக்கதையிலாவது கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

மொத்ததில் கார்த்திக் – அனிதா –உலக் தொலைக்காட்சிகளில் விரைவில்



ஆனந்த தாண்டவம் திரைவிமர்சனத்தை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Apr 13, 2009

கொத்து பரோட்டா 13/04/09

பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் தமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள்..

சமீபத்தில் போலந்தில் ஒருவர் ஒரு மானை காப்பாற்றியதற்காக கைது செய்யப்பட்டார். ஒரு நாள் காரில் வேலைக்கு செல்கையில் ரோடின் ஓரத்தில் ஒரு மான் படுத்திருப்பதை கண்டு கிட்டே சென்று பார்த்தார், மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தது. சரி இறந்து போய்விட்டது என்று எண்ணி  போகிற வழியில் போலீஸில் சொல்லிவிட்டு போகலாம் என்று நினைத்தவர், மானை எடுத்து பின் சீட்டில் போட்டு விட்டு கிளம்பினார்.  அவசர வேலையாய் ஆபீஸுக்குள் சென்றவர், மானை மறந்தே போனார். மயக்கமுற்றிருந்த மான் தெளிந்து காரினுள் அலைய, வெளியேயிருந்து பார்த்தவர்கள், மிருக வதை தடுப்பு ஆட்களிடம் சொல்ல, காரின் உரிமையாளரை கைது செய்திருக்கிரார்கள். உடனடியாய் ஆஸ்பத்திரியில் சேர்காமல், அடைத்து வைத்ததுக்காக அவருக்கு ஏதாவது குறைந்த படசம் சிறைவாச தண்டனையும், அபராதமும் விதித்திருக்கிறார்கள். நல்லதுக்கு காலமில்ல போலருக்கு..

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
வர வர பல கடைகளில் ஐம்பது பைசா சில்லறை தருவதேயில்லை. அதற்கு பதிலாய் நாம் கேட்காமலேயே ஒரு சாக்லெட்டை கொடுத்து விடுகிறரர்கள், காக்லெட் வேண்டாம் காசு கொடுங்கள் என்றால் சில்லறையில்லை என்றே சொல்கிறார்கள். நாட்டில் ஒன்றும் 50பைசா நாணயங்கள் தட்டுப்பாட்டில் இல்லை. அப்படியிருக்க இப்படி வம்படியாய்  சாக்லெட்டை விற்கிறார்கள்., அப்படி கொடுக்கும் சாக்லெட்டும் டுபாக்கூர் கம்பெனியுடையாதிருக்கு. இவர்களுக்கு  வியாபாரத்துக்கு வியாபராமும் ஆச்சு,  என் நண்பர் ஒருவர் ரொம்ப நொந்து போய் வழக்கமாய் ஒரு வாங்கும் கடையில், கடைக்காரர் சில்லறைக்கு பதிலாய் கொடுத்த சாக்லெட்டையெல்லாம் சேர்த்து வைத்து, தான் கொடுக்க  வேண்டிய நூறு ரூபாய் கடனுக்காக,  பெரிய பஞ்சாயத்து வைத்து ”நீமட்டும் சில்லறை கொடுக்க காசில்லைன்னு சாக்லெட்டை கொடுக்கலாம், நாம் மட்டும் நான் கொடுக்க வேண்டிய பாக்கிக்காக நீ கொடுத்த சாக்லெட்டையே கொடுக்க கூடாதா?” என்றார். கும்பல் சேர்ந்து நண்பர் பக்கம் ஆதரவு அதிகமாக, வேறு வழியில்லாமல் வாங்கிக் கொண்டார். இப்போதெல்லாம் அந்த கடைக்காரர் சாக்லெட் கொடுப்பதில்லை. உங்க உரிமையை கேளுங்கப்பா..
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

ஏ- ஜோக்

ஒரு வயதான கிழவர் தன்னுடய இளம் மனைவியை கர்பமாக்க விரும்பி, டாக்டரிடம் தன்னுடய விந்தணுக்களை செக் செய்ய சென்றார். டாக்டர் ஒரு பாட்டிலை கொடுத்து அதில் அவரது விந்தை கொண்டு வரச் சொல்ல, அடுத்த நாள் வெறும் பாட்டிலோடு வ்ந்த பெரியவரிடம் ஏன் என்ன ஆச்சு என்று டாக்டர் கேட்டார். அதற்கு முதியவர், நானும் என் மனைவியிடத்திலும், என்னுடய, வலதுகை, இடதுகை, என் மனைவினுடய வலதுகை, இடதுகை, அவளுடய வாய், பின் மனைவியின் தோழியின் கை, வாய் எல்லாவற்றையும்  முயன்று பார்த்துவிட்டேன். என்று சொல்லும்போது, இடைமறிந்த, டாக்டர்.. என்ன சொன்னீர்கள் உஙக்ள் மனைவியின் தோழியுடனுமா..? என்று ஆச்சர்யத்தோடு கேட்க, ஆமாம் டாக்டர் இவ்வளவு பேர் முயன்றும் பாட்டிலின் மூடியை திறக்க முடியவில்லை. என்றார்.

 

ஒர் ஆணும் பெண்ணும் திடீரென மூடு வந்து  நடுகாட்டில் இருட்டில் ”மேட்டர்”  செய்ய ஆரம்பிக்க, ஒரு பதினைந்து நிமிடம் கழித்து,

ஆண் : சே. அட்லீஸ்ட் ஒரு டார்ச் லைட்டாவது எடுத்து வந்திருக்கலாம்

பெண் :  ஆமாமா.. பதினைஞ்சு நிமிஷமா நீ புல்லைத்தானே பண்ணிட்டிருக்கே.



ஆனந்த தாண்டவம் திரைவிமர்சனத்தை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Apr 10, 2009

ஆனந்த தாண்டவம் – திரைவிமர்சனம்

ananda-thandavam1-500x411
மறைந்த எழுந்தாளர் தல சுஜாதா எழுதிய விகடனில் தொடர்கதையாய் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் நாவல். அதுவும் நாவலின் க்ளைமாக்ஸை மாற்ற சொல்லி கேட்டு வந்த கடிதங்கள் எவ்வளவோ என்றனர். அப்படி பட்ட நாவலை காந்திகிருஷ்ணா இயக்குகிறார் என்றதும் சுஜாதாவின் ரசிகர்களுக்கு எல்லாம் எதிர்பார்ப்பு எகிறி போனதென்னவோ நிஜம் தான். அன்று உன் அருகில் என்கிற நாவலை மிக அழகாய் படமெடுத்தவர்தான் இந்த காந்திகிருஷ்ணா.. அதனால் இன்னும், இன்னும் எதிர்பார்ப்பு.. கூடியது. மொத்தமாய் எதிர்பார்ப்பு பானையை ந்டு ரோட்டில் உடைத்துவிட்டார். என்றுதான் சொல்ல வேண்டும்.

 anandha-thandavam-wallpaper07
வேலை தேடி அலையும் ரகுபதி, பாணதீர்த்ததில் அவனும் அப்பாவும் மட்டுமே இருக்க, உயர் அதிகாரி கோபிநாத்தின் மக்ள் மதுமிதாவை பார்த்த மாத்திரத்தில் ரகுபதி காதலிக்க ஆரம்பிக்க, நிச்சயம் வரை போன காதல், தீடீரென ராட் என்கிற அமெரிக்க ராதாகிருஷ்ணன் புயல் போல வந்து மதுமிதாவை கவர்ந்து போக, சுயமாய் எந்த முடிவும் எடுக்க தெரியாத, விளையாட்டு தனமான மதுமிதா, ராதாகிருஷ்ணன் என்கிறா புயலில் தூக்கி போகப்படுகிறாள். காதலில் தோற்ற ரகுபதி, என்ன முடிவு எடுக்கிறான். மீண்டும் மதுவை சந்தித்தானா, அவனை காதலித்த ரத்னா என்னவானாள் என்பது பற்றி விரிவாய் திரையில்.
anandha-thandavam-wallpaper13

மதுமிதாவாய் தமன்னா..  இருபது வருடஙக்ளுக்கு முன் என் மனக்ண்ணில் ஓடிய மதுமிதாவை கண் முன்னே வலைய வர விட்டிருக்கிறார் இயக்குனர். தமன்னாவுக்கு டப்பிங் கொடுத்த பெண்ணுக்கு சுத்தி போட சொல்லுங்க.
 anandha-thandavam-photos47

மீனாட்சியாய் பொம்மலாட்டம் ருக்மிணி, சரியான சாய்ஸ் எனக்கென்னவோ இவர் மட்டும் கொஞ்சம் சதைபோட்டு சரியான வேடம் கொடுத்தால் பின்னியெடுப்பார் என்றே தோன்றுகிறது..

இவர்களை தவிர அருமையா கேரக்டராகவே இயல்பாய் இருப்பவர் கிட்டி, தன் மகனால் அவ்வப்போது ஹர்ட் ஆகும் போதாகட்டும், கோபமாகட்டும், இயல்பாய் மெக்னானிமஸாய் நண்பனை போன்ற தகப்பனை கண் முன்னே கொண்டு வ்ந்திருந்தார்.

ஹீரோ சித்தார்த், கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லாத ஒரு முகத்தை வைத்து கொண்டு, ஆடவும் முடியாமல், நடிக்கவும் முடியாமல் முதல் படத்து சூர்யாவை விட மோசமான நடிப்பு நடித்திருக்கிறார்  லாங் வே டு கோ.. சித்தார்த்

அமெரிக்க மோகன்ராம் கேரக்டருக்கு  சரியான தேர்வு. அதே போல் மீனாட்சியின் பாட்டி, தாத்தா, அப்பா எல்லாருமே குறையொன்றுமில்லை. மார்க்ராய் சார்லி சரியான சாய்ஸ்.anandha-thandavam-wallpaper15

இசை ஜி.வி. பிரகாஷ் படு மோசமான பிண்ணனி இசை, அதிலும் பாடல்கள் அனைத்தும் மிஸ் ப்ளேஸ்ட். கனா காண்கிறேன் பாடலை தவிர பெரிதாய் மனதில் நிற்கவில்லை.

ஷங்கரின் ஒளிப்பதிவு ஆகா ஓகோ என்று சொல்ல முடியவிலலை.

.
tamanna-03

படம் முழுவதும் சுஜாதாவின் வசனம் மிளிர்கிறது. ஆனால் மோசமான நடிப்பும், திரைக்கதை சொதப்பல்கள், ஃபைவ் ஸ்டார் கிருஷனாவின் காமெடி சுத்த போர். ராட்டாக வரும் ராதாகிருஷ்ணைன் உச்சி மண்டையை எதுக்காக் ஷேவி செய்திருக்கிறார்கள்?

வரிக்கு வரி சிந்தாமல் சிதறாமல் பிரிவோம் சந்திப்போம் நாவலை திரைக்கதையாக்கும் வகையில் சொதப்பிவிட்டீர்களே.. எப்படி நீங்கா இப்படி ஒரு ஹீரோவை செலக்ட் செய்தீர்கள். ஏன் பல இடங்களில் ஜம்ப், பேசும் போதே கட் செய்யப்பட்டு அடுத்த க்ளோசப் ஏன்? நிறைய இடஙகளில் லிப் சிங்க் ரொம்ப கேவலம்.  மதுமிதா கேரக்டரை சரியாக சொல்லவில்லை. நாவலை படித்தவர்களுக்கு மட்டுமே உணர முடியும்.  ஏன் உணர்வு பூர்வமாய் வரவேண்டிய காட்சிகளை எல்லாம் ஏன் இப்படி  ஆர்டிஸ்டின் ரியாக்‌ஷன்கள் இல்லாமல் எடுத்திருக்கிறீர்கள்? இப்படி பல ஏன்களுடன்.. இப்படி ஏமாத்திட்டீங்களே காந்தி கிருஷ்ணா…

ஆனந்த தாண்டவம்  -  ஸ்லிப் ஆயிடுச்சு

 

டிஸ்கி:
நல்ல வேலை தல சுஜாதா செத்து போயிட்டாரு. மதுமிதாவை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும் பார்க்க போகலாம். மற்றவர்கள், மீண்டும் பிரிவோம் ச்ந்திப்போம் இரண்டு பாகங்களையும் மீண்டும் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்.


அயன் திரைவிமர்சனத்தை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

மனைவி அகராதி

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள, அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்

மனைவி : நமக்கு வேணும்
அர்த்தம் : எனக்கு வேணும்

மனைவி ; உங்க முடிவு
அர்த்தம் : நான் சொல்றதுதான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க இஷ்டம்

மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க..
அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க

மனைவி : தாராளமா.. செய்யுங்க
அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை

மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை
அர்த்தம் : வருத்த்மாயிருக்கிறேன்

மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க..
அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை.

மனைவி : இந்த கிச்சன் ரொம்ப கீக்கிடமாயிருக்கு
அர்த்தம் : வேற வீடு பாக்கணும்

மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா..?
அர்த்தம் : பெரிசா ஏதோ கேட்க போறேன்

மனைவி : என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?
அர்த்தம் : உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செஞ்சிருக்கேன்.

மனைவி : நான் குண்டாயிட்டேனாப்பா?
அர்த்தம் : அப்படியில்லை அழகாயிருகேன்னு சொல்லு

மனைவி : சரி
அர்த்தம்   :  நோ..

மனைவி : நோ
அர்த்தம் : சரி

மனைவி : உங்களுக்கு புது ரெஸிபில செஞ்ச இந்த டிபன் பிடிச்சிருக்கா?
அர்த்தம் : பழகிக்கங்க

மனைவி ; ஒண்ணுமில்லை
அர்த்தம :  நிறைய இருக்கு

மனைவி : நான் அதை பத்தி பேச விரும்பலை
அர்த்தம் : இப்படி ஏத்திவிட்டுத்தான் பேச ஆரம்பிக்கணும் 

ஏதோ என்னால முடிஞ்சதை சொல்லியிருக்கேன். உஙக்ளுக்கு தெரிஞ்சதை நீங்களும் சொல்லுங்க..

Apr 8, 2009

பதிவர் சந்திப்பு பற்றி ஏன் எழுதவில்லை.?

சமீபத்தில் கடந்த ஞாயிறன்று சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை பின்புறம் சென்னை பதிவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. புதிய பதிவர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள். இதுவரை பதிவர் சந்திப்புக்கு வராதவர்கள் கூட வந்திருந்தார்கள்.

வழக்கமாய் பதிவர் சந்திப்பு முடிந்தவுடன் உடனடியா போய் வந்த சூட்டோடு பதிவுகள் இடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை எனக்கு தெரிந்து இரண்டே இரண்டு பதிவுதான் வந்திருந்தது. ஒன்று வழக்கம் போல டோண்டுவின் பதிவும், இன்னொரு புதிய பதிவர் என்று நினைக்கிறேன். வெறும் படங்களை மற்றும் போட்டிருந்தார். மற்றவர்கள் யாரும் பதிவு போட்டதாய் தெரியவில்லை.


பழைய பதிவர்களூம் பதிவர் சந்திப்பை பற்றி எழுதவில்லை. புதிய பதிவர்களும் எழுதவில்லை. இதற்கு காரணம் இந்த முறை எந்த பிரச்சனையை பற்றியும் பேசாமல் பொதுவாய் புதிய பதிவர்களை வரவேற்று சந்திப்பு நடத்தியதாலா..? அல்லாது நிறைய பேர் உட்கார்ந்து பீச்சில் பேசியது ஒழுங்காய் காதில் விழாததினாலா..? புதிதாய் வந்த ஒரு பதிவர் என்னிடம் சொன்ன விஷயம்.. பதிவர் சந்திப்பு வர்றதுக்கு முன்னாடி எப்படி யாரையும் தெரியாதோ.. அதே நிலைமைதான் வந்த பின்னாடியும் என்றார்.

இனிமேல் நாம் பதிவர் சந்திப்பு நடத்த சில ஆலோசனைகள் பதிவர்களிடமிருந்து சேகரிக்க பட்டது.

1) ஏன் பீச் போன்ற ஓப்பன் இடங்களுக்கு பதிலாய் சின்ன ஹாலில் நடத்த கூடாது..?
2) பழைய, புதிய பதிவர்களுக்குள் ஒரு கலந்துணர்வை, ஏற்படுத்தும் விதமாய் அறிமுக படலம் செய்யக்கூடாது.?
3) ஏன் எல்லா பதிவர் சந்திப்புகளுக்கும் ஒரு பிரச்சனையையோ, அல்லது ஏதாவது ஒரு தலைப்பை முன்னிறுத்தி சந்திப்பை ஏற்படுத்த கூடாது..?


வழக்கமாய் நம் பதிவர் சந்திப்புகள், சிறப்பாய் அமைவது சந்திப்பு முடிந்தவுடன் டீகடையில் நடக்கும் பேச்சுக்களில் தான். இம்முறை புதிதாய் கலந்து கொண்டவர்கள் பல பேர் எழுதாமல் விட்டதற்கு காரணம் கூட என்ன எழுதுவது, யாரை பற்றி எழுதுவது என்பது போன்ற குழப்பங்களினால் கூட இருக்கலாம். இதையே ஒரு ஹாலில் வைத்தால் டீ,காபி எல்லாமே அங்கேயே நடக்கும், பதிவர்கள் கலந்துரையாட வழிவகுக்கும் என்று பலரது எண்ணம். ஹாலுக்கான செலவுகளை நாம் ஒரு சின்ன எண்ட்ரி ஃபீஸ் கலெக்ட் செய்து நடத்தலாமே..?

எழுதிய இரண்டுபதிவில் படஙக்ள் போட்ட பதிவர் என்னை மட்டும் படம் போடாமல் விட்டதற்கு ஏதாவது உள்குத்து, நுண்ணரசியல் இருக்குமோ.. என்று பதிவரசியல் உலகத்தில் பேசி கொள்கிறார்கள். (எப்படியெல்லாம் நம்மள புரொமோட் பண்ணிக்க வேண்டியிருக்கு)

டிஸ்கி
பதிவர் சந்திப்பை பற்றி நான் கூட எழுதவில்லை, ஆணிபுடுங்க நிறைய ஆணியிருப்பதால் நானே மீள்பதிவை நம்பி கடை நடத்தி கொண்டிருக்கிற காரணத்தால் என்னை ஆட்டத்தில் சேர்க்க வேண்டமென கேட்டு கொள்கிறேன்.

அயன் திரைவிமர்சனத்தை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Apr 7, 2009

ரமேஷும்.. ஸ்கூட்டி பெண்ணும்..



ஓசியில் பினாயில் கொடுத்தாலும், சந்தோஷமாய் குடிப்பவன் ரமேஷ். உலகமகா கஞ்சன். அதைப்பற்றி சொல்லி அவனை கிண்டலடித்தால் வேறு யாரையோ கிண்டல் செய்வதாய் பாவித்து, அவனும் சிரிப்பான். யாருக்காவது ஏதாவது உதவி தேவையென்றாலும் கூட என்ன ஏதென்று கேட்க மாட்டான்.. ஏன் என்று கேட்டால், “அத கேட்கபோய்..அவங்க நம்ம கிட்டயே எதாவது கேட்டுட்டா..?” என்பான். தலையிலடித்து கொண்டு நகர்வேன்.

அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்றே தெரியவில்லை.. முடிந்த வரை எனது அலுவலகத்தில் எல்லோரும் அவரை அவாய்ட் செய்வார்கள், அல்லது கிண்டல் செய்வார்கள். அன்று நான் அலுவலகத்திலிருந்து கிளம்புவதற்கே ரொம்ப லேட்டாகிவிட்டது, கிளம்புகையில் பின்னாடி என் பேரை யாரோ கூப்பிடுவது போல இருக்க.. பார்த்தால் ரமேஷ்.

“சார்.. என்னை கொஞ்சம் போற வழியில டிராப் செய்றீங்களா..?”

என்று கேட்டபடி என் பதிலை எதிர்பாராமல் என் பைக்கின் பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டான். எனக்கு கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தது.. என்ன விதமான ஜந்து இவன்.. கொஞ்சம் கூட மற்றவர்களை பற்றி யோசிக்காமல்.. நடந்து கொள்கிறானே.. என்று மனதுக்குள் திட்டினாலும், நான் ஓன்றும் அவனுக்காக ஊரை சுற்ற் போவதில்லை. போகிற வழியில்தான் அவன் வீடு இருக்கிறது. அதனால் ஓன்றும் சொல்லாமல் வண்டியை கிளப்பினேன்.

அவனுக்கும் எனக்கும் பேசிக் கொள்வதற்கு எதுவும் இல்லாததால், அமைதியாகவே வண்டியோட்டி கொண்டிருந்தேன். என்னுடய் வீடு நகரத்துக்கு வெளியே இருக்கிறது.. அதற்கு முன்னால் ரமேஷின் வீடு.. இரவு லேட்டானால் பஸ், ஆட்டோ எதுவும் கிடைக்காது. மணி 11.30 மேல் ஆனதால் டிசம்பர் மாதத்து குளிர் முகத்திலடிக்க, கொஞ்சம் வேகமாகவே வண்டிய செலுத்தினேன்.

“ சார்.. சார்.. கொஞ்சம் வண்டிய நிறுத்துங்க சார்..” என்றான் ரமேஷ் பதட்டமாய்,

“ என்ன ரமேஷ்.. என்னாச்சு.. எதையாவது கீழே போட்டுட்டீங்களா..?” என்று கேட்டபடி வண்டியை நிறுத்தினேன். அவன் பதில் சொல்லாமல் வந்த திசை நோக்கி ஓடினான். அங்கே ஓரு பெண் ஸ்கூட்டியை பிடித்தபடி நிற்க, அவளுடன் அவன் எதையோ பேசி.. அவளுடய வண்டியை ஸ்டார்ட் செய்ய முயன்று கொண்டிருந்தான். நான் வண்டியை திருப்பி அவர்களை அடைந்து,

“என்ன ஆச்சு ரமேஷ்..?”

“ வண்டி ரிப்பேர் ஆயிருச்சு சார்..ஸ்டார்ட் ஆகலையாம்.. அதான் பாக்கறேன்..”

அப்போதுதான் நான் அந்த பெண்ணை பார்த்தேன். நல்ல உயரம், அளவான உடல், வண்டியை ரொம்ப தூரம் தள்ளிக் கொண்டு வந்திருக்க வேண்டும், முகத்தில் வேர்வை.., முகத்தில் கொஞ்சம் பயம் கலந்ததிருந்தது. இடுப்பில் கைவைத்து ரமேஷ் சைக்கிளுக்கு காத்தடிப்பதை போல எகிறி, எகிறி, கிக்கரை உதைப்பதை பார்த்து கொண்டிருந்தாள். எனககு அவனை பார்க்க ஆசச்ர்யமாகிவிட்டது. இவனா இப்படி உதவுகிறான்.. நாலு உதைக்கு ஓரு முறை அந்த பெண்ணை ஏறிட்டு பார்த்து கொண்டிருந்தான். ஓ..பிகரை மடிக்கிறதுக்காகவா..?

“எங்கே வேலை செய்றீங்க..? “ என்றேன்..

அவளின் பதட்டத்தை குறைப்பதற்காக, அவள் என்னுடய அலுவகத்தின் அருகே உள்ள ஓரு பிரபல கம்பெனியை சொல்ல..

“ எதுக்காக ராத்திரியில ரிஸ்க் எடுக்கிறீங்க.. கம்பெனி கேப் இருக்கில்ல..” என்று கேட்டேன்.

ரமேஷ் இன்னமும் காத்து அடித்து கொண்டிருந்தான்.. மனதுக்குள் சிரித்து கொண்டேன்.. என்ன ஓரு அர்பணிப்பு.. “ரமேஷ்.. வண்டியில பெட்ரோல் இருக்கா பாருங்க.. என்றேன்.”

ரமேஷ் வண்டியின் டாங்கை திற்ந்து பார்த்து, “ அட ஆமா சார்.. சுத்தமா டிரை..” என்று சொன்னவுடன். இங்கே பக்கதில நாலு கிலோ மீட்டருக்கு பங்க் எதும் கிடையாதே.. என்று தனக்குள் பேசியாடி யோசித்தவன் முகத்தில் பல்ப் எறிய, சற்று தூரத்தில் ஓரு பெட்டி கடை தெரிய, பரபர வென்று ஓடி திரும்பி வரும் பொது ஓரு மினரல் வாட்டர் பாட்டிலை வாங்கி வந்திருந்தான். “த..பார்றா..பிகருன்னதும்.. என்ன ஓரு பில்டப்பு..” இதே நமக்கு ஓண்ணுன்னா.. செய்வானா.. என்று யோசிக்கும் போதே..

“சார். கொஞ்சம் தண்ணி குடிங்க..,என்று அவன் கொஞ்சம் குடித்துவிட்டு, எனக்கும் குடித்துவிட்டு, மிச்சத்தை, அந்த பெண்ணிடம் கொடுத்து குடிக்க சொல்லிவிட்டு, பாட்டில் காலியானவுடன் சுத்தமாய் அதிலிருந்த தண்ணியை வெளியேற்றி, என்னுடய் வண்டியிலிருந்து என்னுடய் அனுமதியில்லாமலே..பெட்ரோல் டியூபை க்ழற்றி வண்டியிலிருந்து பெட்ரொலை அந்த பாட்டிலில் பிடித்து, அந்த் பெண்ணின் வண்டியில் ஊற்றி.. வண்டியை ஸ்டார்ட் செய்து, அவளிடம் கொடுத்து “பார்த்து போங்க.. வழியில எங்கயும் நிறுத்தாதீங்க.. பார்த்துபோ..” என்று கரிசனத்துடன் வழியனுப்பினான்.

எனக்குள் கோபமும், ஓரு பக்கம ரமேஷை பார்த்து நகக்லும் எட்டி பார்த்தது.. எதையும் காட்டிக் கொள்ளாமல் வண்டியை ஸ்டார்ட் செய்து கிளப்பினேன். ரமேஷும் ஏறிக் கொண்டான்..வழியில் எதுவுமே..பேசவில்லை.. நான் இந்த விஷயத்தை அதும் ரமேஷ் தன் கை காசிலிருந்து பத்து ரூபா செலவு செய்து ஓரு பெண்ணிக்கு கொடுத்ததை பரப்ப வேண்டும் என்று நினைத்தப்டியே.. வண்டியை ஓட்ட..அது..ஓரு ரெண்டு கிலோ மீட்டர் தாண்டியவுடன் திக்கி..திக்கி ஓடி நின்று போனது. என்னவென்று பார்த்தால் வண்டியில் பெட்ரோல் இல்லை.. நான் ரமேஷை பார்த்தேன்.. “ சாரி சார்..உங்க வண்டியில பெட்ரோல் இருக்கும்னு நினைச்சு புல்லா எடுத்திட்டேன்.. கொடுங்க சார் பகக்த்துல ஓரு கிலோ மீட்டர் தூரத்துல பங்க இருக்கு நான் தள்ளீகிட்டு வரேன்..” என்று என்னிடமிருந்து வண்டியை தள்ளி கொண்டு வர, அவனை திட்ட முடியாமல் அவனை ஆச்சர்யமாய் பார்த்தபடி..

“ ஏன்..ரமேஷ் உங்க கையிலேர்ந்து பத்து பைசா கூட செலவு பண்ணமாட்டீங்க.. இன்னைக்கு என்னடானா.. ஓரே தாராளமா பின்னி பெடலெடுக்கிறீங்க..? பிகர்ன்னதும் என்னமா உதவுறீங்க..?” என்றேன் கிண்டலாய்..

ரமேஷ் எதுவும் பேசாமல் கொஞ்சம் தூரம் வண்டியை தள்ளிக் கொண்டே.. “ பிகருக்காக, இல்லசார்.. நாலு வருஷம் முந்தி இதே ஏரியாவுல ஓரு பொண்ணு ஆபீஸ் விட்டு லேட்டா வரும் போது அந்த பொண்ணை மடக்கி ரேப் பண்ணி கொன்னுட்டானுங்க.. அது வேற யாருமில்ல... என் லவ்வர் தான்.. இன்னொரு பொண்ணுக்கு அந்த மாதிரி ஆயிரகூடாதுன்னுதான்..” என்று கண்கள் பனிக்க சொல்லிவிட்டு..

‘ இதோ.. பங்க் பக்கத்துல வந்திட்டோம் சார்.. ” என்றபடி வண்டியை வேகமாய் தள்ளி சென்றான்.

நான் அவன் போவதையே பார்த்து கொண்டிருந்தேன்..

அயன் திரைவிமர்சனத்தை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Apr 6, 2009

மக்கள் சக்தியும், டிஜிட்டல் புரொஜெக்‌ஷனும்

இண்டர்வெல் முடிந்து பரபரப்பாய் போய் கொண்டிருந்தது அயன் திரைப்படம், திடீரென்று படம் கட் ஆகியது. மெலொடி தியேட்டரில் டிஜிட்டல் புரொஜெக்‌ஷன் என்பதால் படம் திரும்ப வருவதற்கு சற்று நேரம் ஆனது. (ஏன் என்பதற்கான காரண்ம் பின்னால்).  நொந்து போன ரசிகர்கள்களின்  விசிலும், சத்தமுமாய் தியேட்டரே அல்லோல கல்லோலபட,  திடீரென படம் முதலில் இருந்து ஆரம்பித்தது, திரும்பவும் கட் ஆகி, பாதியிலிருந்து ஆரம்பிக்கபட்டு, கட், மீண்டும் ஸ்டார்ட். ஆனால் இப்போது ஆரம்பித்ததோ நாங்கள் பார்த்து கொண்டிருந்த காட்சியிலிருந்து அரை மணி நேரம் கழித்து வரும் காட்சியிலிருந்து. ஏற்கனவே முதல் காட்சியில் படம் பார்த்திருந்த ரசிகர்கள் காட்சிகளில் ஜம்ப் ஆகிவிட்டது எதிர்த்து புரொஜெக்டரில் துணியை வைத்து மூடி, கலாட்டா செய்ய ஆரம்பித்தார்கள்.

தியேட்டர்காரர்களோ, அப்படியே ஓட்டினால் சரியாகிவிடுவார்கள் என்று நினைத்து மேலும் படத்தை ஓட்ட நினைக்க, உயரமான ஒருவர் சீட்டின் மீது ஏறி தன்னுடய டவலால் முழு புரொஜெக்‌ஷன் திரையையும் மறைக்க, தியேட்டர் மேனேஜர் ஆட்களுடன் வந்து, மிரட்ட, மக்களும் ஒன்று சேர்ந்து கத்த, வேறுவழியில்லாமல் மறுபடியும் கட் ஆகி கரெக்டான இடத்திலிருந்து பட்ம் ஆரம்பித்தது.

படம் ஆரம்பித்து ஒரு பாடல் காட்சியின் போது திடீரென தியேட்டருள் ஒரு இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் சகிதமாய் திரையை மறைத்த உயர இளைஞரை அழைத்து கொண்டு போனார்கள், இதை பார்த்த மக்களூம் நமக்காக போராடிய ஒருவரை போலீஸை வைத்து அழைத்து போவதை பார்த்து கொதித்து எழுந்து மேலும் பலர் அவர்களின் பின்னே போக,  வெளியே போனவுடன், அவரை போலீஸார் அடிக்க முற்பட, அதற்குள் வெளியே சென்ற ரசிகர்கள் உள்ளே புகுந்து மேனேஜர் நோக்கி கத்த, ஒருகிணைந்த மக்கள் ச்க்திக்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் மேனேஜர் தன் தவரை ஒத்துக் கொண்டு, வெளியேறினார்.

இதே போல பல தடவை சத்யம் திரையரங்கில் நடைபெற்றிருக்கிறது. அப்போதெல்லாம் லோக்கல் ஸ்பிக்கர் மூலமாய் தியேட்டரின் உள்ளே வ்ந்து இத்தனை நிமிடங்களுக்குள் பிரச்சனை சரி செய்யப்படும் என்று அறிவிப்பர்கள். மீறி நேரம் ஆகும் என்றால் உங்கள் பணம் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். பார்க்கிங்க் சார்ஜ் உட்பட், இதுவல்லவா நிர்வாகம்.

அநியாயத்துக்கு எதிராய் எழும் மக்கள் சக்தியின் பவர் இது. இதே போல் மக்கள் அனைவரும் தங்களுக்கு எதிராய் நடக்கும் எல்லாவிதமான அநியாயங்களுக்கும் பொங்கியெழுந்தால்  கண்டிப்பாய் நியாயம் கிடைக்கும்.

டிஜிட்டல் புரொஜக்‌ஷன் பிரச்னை

டிஜிட்டல் புரொஜக்‌ஷனில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போது சில சமயம் ஹாங் ஆகி படம் கட் ஆகிவிடும்,  நாம் திரும்பவும் கம்யூட்டரை ரீபூட் செய்து படத்தின் டைம் கோடை தெரிந்திருந்தால் சரியாய் அந்த கோடுக்கு வரவைத்து படத்தை ஆரம்பிக்கலாம். முக்கால் வாசி தியேட்டர்களில் சாதாரண ப்ரஜெக்‌ஷன் தியேட்டர்களில் எப்பவுமே இரண்டு புரெஜெக்டரில் மாறி, மாறி படம் ஓட ஒரு அசிஸ்டெண்டாகவது, இருப்பார். ஆனால் ப்ளாட்டர்,  டிஜிட்டல் புரொஜக்‌ஷன் வந்த பிறகு அசிஸ்டெண்ட் கட், ஆப்பரேட்டர் ஒருவர் மட்டுமே சுவிட்சை ஆன் செய்தவுடன் அது பாட்டுக்கு ஓட ஆரம்பித்து விடும், சரியாக இண்டர்வெல் சமயத்தில் வந்து ஆப் செய்தால் போதும். அதனால் இருக்கும் ஒரு ஆப்பரேட்டரும் படம் கட் ஆனது, ரசிகர்கள் சத்தத்தினால் தெரியவந்து  அத்ற்கு பிறகு உள்ளே வருவதால் டைம் கோட் தெரியாமல் தேட வேண்டிவருகிறது.



அயன் திரைவிமர்சனத்தை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Apr 4, 2009

அயன் – திரைவிமர்சனம்

250வது பதிவு


ayan-stills-7

பரபரவென ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் போன்ற படம் பார்க்க வேண்டுமா.? யஹிஹே ரைட் சாய்ஸ் பேபி. படம் ஆரம்பம் முதல் கடைசி வரை சும்மா தூள் பரக்க அடித்து ஆடியிருக்கிறார்கள்.

கள்ளக்கடத்தல் செய்யும் தாஸின் சகாவான சூர்யா, புத்திசாலி, படிப்பாளி, ஸ்மார்டானவன். ஒவ்வொரு முறையும் அவன் கடத்தி வரும் பொருட்களூக்கு எப்பாடு பட்டாவது எந்த்வித பாதகமில்லாமல் கொண்டு வந்து சேர்ப்பவன். அம்மா மீது பாசக்காரன். அப்பா போன்ற தாஸின் அன்புக்கு கட்டுப்பட்டவ்ன்.
ayan1

தாஸின் புது எதிரியாய் சவுகார்பேட்டை வில்லன், நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெனகெட்டிருக்கலாம். ஒவ்வொரு முறையும் போட்டு கொடுக்க, அதிலிருந்து ஒவ்வொரு முறையும் தாஸும், சூர்யாவும், தப்பிக்க், பரபர கேட் அண்ட் மவுஸ் கேம்.

கேமின் உச்சகட்டமாய் திருடனை வைத்தே திருடனை பிடிக்கும் டெக்னிக் அருமை. காங்கோவில் நடக்கும் சண்டை காட்சிகளாகட்டும், தமன்னாவுடன் காதல் செய்வதகட்டும், படம் முழுக்க சூர்யா துள்ளித்திறிகிறார்.
surya

ம்ஹூஹூம்.. ஸ்டாபரி ஐஸ்கிரிமாய், சாக்லெட்டாய்,  கோடை மழையாய், குளிர்கால வெயிலாய்,  தமன்னா, அவருடய கேரக்டர் பெரிதாக இல்லாவிட்டாலும், படம் முழுக்க, நம்மை உருக்குகிறார். என்னா ஒரு இன்னொசென்ஸ் அவர் முகத்தில். ஆனந்த தாண்டவம் மதுமிதாவுக்காக காத்திருக்கிறேன்.

விஜய் டிவி நண்டுக்கு நல்ல பலமான கேரக்டர், உணர்ந்து செய்திருக்கிறார். என்ன அண்ணன் தன் தங்கையிடம் ஓரிடத்தில் உன்னை ஐயிட்டம்னு நினைச்சிட்டான் என்று சொல்கிறார். படம் முழுக்க அவர் தமன்னாவுக்கு அண்ணன் என்பதைவிட மாமாவாக வைத்திருந்தால் ஏற்றுபுடையதாய் இருந்திருக்கும்
 
படத்திற்கு மிகப்பெரிய பலம் புத்திசாலிதனமான திரைக்கதை, கடத்தல் செய்ய கையாளும் புதிய வ்ழிமுறைகளும், அதிலிருந்து தப்பிக்க செய்யும் வழிமுறைகளும் அருமை. அதிலும் எப்படி தப்பித்தார்கள் என்பதற்க்கு அதற்கான காட்சிகளை ப்ளாஷ்கட்டில் காட்டும் உத்தி நன்றாகவே உள்ளது.
படத்தில் ஒவ்வொரு சீனுக்கும் ஒரு டிவிடி கேட்டு வரும் இயக்குரை காட்டும் இப்படத்தின் இயக்குனர் கிண்டல் செய்திருக்கிறாரா..? அல்லது வருத்தமா..? இரண்டு உணர்வு என்றாலும் தவறானதே. இப்படத்தின் அடித்தளமே ஸ்பீல்பெர்க்கின் “Catch Me If You can”  திரைப்படத்தின்  தழுவல்தான். அதிலும் காங்கோவில் நடக்கும் மயிற்கூச்செரியும்  சண்டைகாட்சி District B13 இன்ஸ்ப்ரேஷன். எதுக்கு அட்வைஸோ, கிண்டலோ,  இயக்குனரே.
Sakkarai sureh
படத்தில் பிரபு, வில்லன் நடிகரின் கணக்காளராக வரும் பரத்வாஜ், கருணாஸ்,  என்று அனைவருமே உணர்ந்து நடித்திருக்கிறார்கள். வில்லனுக்கு பிண்ணனி குரல் கொடுத்த கோலங்கள் புகழ் அஜய்யின் குரல் செமையாய் செட்டாகியிருக்கிற்து.

ஹாரிஸ் இந்த படத்தில் கொஞ்சம் சொதப்பிவிட்டிருக்கிறார். வில்லன் ஒவ்வொரு முறை தோற்கும்போதும் ஒரு டாம் ஆண்ட் ஜெர்ரி டைப் பிண்ணனி இசை போட்டிருக்கிறார். ஒரே ஒரு பாடல் சுகம், மற்ற்படி சொல்லிக்கிறபடியா இல்லை.

எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு சூப்பர்ப்.. என்பது சாதாரண வார்த்தை, முக்கியமாய் பாலைவனத்தில் எடுக்கப்பட்ட பாடலாகட்டும், காங்கோவில் எடுக்கப்பட்ட சண்டை காட்ச்சிகளாகட்டும் மனுஷன் பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

கே.வி.ஆனந்த, சுபாவின் திரைக்கதை, வசனம் படத்திற்க்கு மிகப்பெரிய பலம்.அதே போல் ஆண்டனியின் எடிட்டிங்கில் இரண்டாவது பாதியில், கொஞ்சம் நறுக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். சன் டிவியின் முதல் நிஜ வெற்றி நடை போடப்போகும் வெளியீடு.

அயன் - நயன்



Blogger Tips -கொத்துபரோட்டா 03/04/09 படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Apr 3, 2009

கொத்து பரோட்டா –03/04/09

நண்பர்கள் சிலரை ரொம்ப நாள் கழித்து சந்தித்த வேளையில், வழக்கம் போல் ஒரு ஃபுல்லை காலி செய்த பிறகு,  நமிதா, தமிழ் சினிமா, உலகசினிமா,  எல்லாம் தாண்டியவுடன், நம் நண்பர்குழாமில் இருந்த ஒரு இலக்கியவாதி, 

”உங்கள்ல யாராவது  ப்ரமிள் இல்ல நகுலனை படிச்சிருக்கீங்களா..?”

அடுத்த டாபிக் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் எல்லோரும் இருக்க, ஒருவர் மட்டும்  தொண்டையை கனைத்து

“நீங்க ப்ரமிள்னு செல்லமா சொல்றது அரகேற்றம் பிரமிளாவைதானே. நகுலன்ங்கிறது ‘நாக்க மூக்க’ நகுல தானே?” என்றதும் விழுந்தது அடி.

ஏன் சார்.. ப்ரமிள்னா, அது அரகேற்றம் பிரமிளா இல்லையா..? நகுலன்னா நம்ம நாக்க மூக்க நகுல் இல்லியா..? என்ன கெரகம்டா சாமி.. உடம்பெல்லாம் வலிக்குது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சமீபத்தில் கேட்ட திரை பட பாடல்களில் ‘குங்குமபூவும், கொஞ்சுபுறாவும் படத்தின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தது. சின்னசிறுசுங்க ஆரம்பிக்கிற பாட்டின் ஆரம்பத்தில் வரும் கிடார் நம்மை மொத்த பாட்டிற்கும், கட்டியம் கூறி அழைத்து செல்கிறது. அடுத்து  கடலோரம் என்கிற s.p.b.saran பாடும் பாடல் ஸ்லோவாக இருந்தாலும், கண்டிப்பாய் மறுக்கா, மறுக்கா கேட்க வைப்பது டியூனில் உள்ள எளிமைதான். பாடல்கள் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

A- ஜோக்

பெண் தன் காதலனுடன் இருக்கும் போது அவளின் கணவன் திடீரென வந்துவிட வேறு வழியில்லாமல் அவனை ஒரு பிரோவில் ஒளித்திருக்க சொல்ல, உள்ளே அந்த பெண்ணின் மகனும் ஒளிந்திருக்க, 

பையன்: இங்க ஒரே இருட்டா இருக்கு

ஆள் ; ஆமா

பையன்: என்கிட்ட கிரிகெட் பால இருக்கு

ஆள் ; அப்படியா குட்

பையன் : வாங்குகிறயா?

ஆள் ; வேண்டாம்

பையன் : எங்கப்பா வெளிய இருக்காரு..

ஆள் : சரி எவ்வளவு?

பையன் : ஆயிரம் ரூபா

 

அடுத்த சில வாரங்கள் கழித்து மறுபடியும் அதே போல பையனும் ஆளும் அதே பீரோவில் இருக்க,

பையன் : ஓரே இருட்டா இருக்கு

ஆள் : ஆமா

பையன்: என்கிட்ட கிரிகெட் பேட் இருக்கு

ஆள் எவ்வளவு

பையன்: 1500 ரூபா

ஒரு நாள் பையனின் அப்பா மகனை அழைத்து வா கிரிகெட் விளையாடலாம்னு கூப்பிட அதற்கு பையன் நான் அதை 2500 ருபாய்க்கு வித்துட்டேன் என்று சொன்னவுடன் அப்பா ”நீ அநியாயமாய் உன் நண்பர்களை ஏமாற்றி வித்துருக்கே அதனால் கண்டிப்பா பாவ மன்னிப்பு கேட்டே ஆகணும் என்று சொல்லி பாவமன்னிப்பு கேட்டும் அறையில் உட்காரவைத்துவிட்டு போனார்.,

பாதிரியார் வ்ந்து பாவம்ன்னிப்பு ரூமில் அமர்ந்து கதவை மூட,

பையன் : இங்கெ ஒரே இருட்டா இருக்கு

பாதிரியார் : ஓ ஷிட் மறுபடியும் ஆரம்பிக்காதே என்றார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Blogger Tips -பெ’ண்’களூரை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Apr 2, 2009

உலக சினிமா –Leon (1994)

402px-Léon_poster

ஒரு புரபஷனல் கொலைகாரனுக்கும், பன்னிரெண்டு வய்து சிறுமிக்கும் நடக்க்கும் இமோஷனல், திரில்லர். லியோன் ஒரு ஹிட்மேன் அவன் நியுயார்கில் ஒரு ப்ளாட்டில் வசிக்கிறான். எந்த விதமான பந்த பாசத்துக்கும் அடிபணியாதவன். அவனுகென்று அவன் வளர்க்கும் செடியை தவிர எந்தவிதமான உறவுகளும்  இல்லாதவன்.
799px-Leonoutside2

ஒரு நாள் பக்கத்து வீட்டில் வசிக்கும் மடில்டா என்கிற பெண்ணை சந்திக்கிறான். அவளது அப்பா ஒரு தில்லாலங்கடி டிரக் என்போர்ஸ்மெண்ட் ஆபீஸர் ஸ்டான்பீல்டின்  கையாள் அவர் கொடுக்கும் போதை பொருட்களை ம்றைத்து  சப்ளை செய்யபவன். ஒரு நாள் சரக்குகளை தனக்கு எடுத்து வைத்து விற்க முயற்சிக்க, அது தெரிந்து அவனின் குடும்பத்தையே கொன்றுவிடுகிறான். அந்த நேரத்தில் மளிகை கடைக்கு போயிருந்த மடில்டா மட்டும் தம்பிக்க, லியோனின் ப்ளாட்டி அடைக்கலமாகிறாள். தன்னுடய சின்ன தம்பியை கொன்ற் ஸ்டான்பீல்டை கொல்ல வேண்டும் என்று நினைக்கிறாள். இவர்களுக்குள் உறவு மலர்ந்ததா..? மடில்டா பழிவாங்கினாளா? லியோனுக்கு என்ன ஆயிற்று..? என்ற கேள்விகளுக்கு உயிரோட்டமான திரைக்கதை அமைத்து தந்திருக்கிறார்கள்
t51896eaone

மடில்டாகவரும் 12வயது கருமை கண்களுடய நடில்லாவின் நடிப்பும், அழகும் நம்மை ரொம்ப நாளைக்கு  நினைவில் துறத்தும். லியோனாக வரும் ஜீன் ரினோவின் நடிப்பும் அருமை. படத்தில் அவர் ஒரு வசனம் சொல்வார். மடில்டா லியோனிடம் உனக்கு அந்த செடி ரொம்ப பிடிக்குமா ? என்று தொட்டியில் வளர்க்க படும் செடியை பற்றி கேட்க, அதற்கு லியோன் “ ஆம்.. இந்த  செடி என்னை போல..  இதற்கும் வேர்கள் கிடையாது” எனபது போன்ற அருமையான வசனங்கள் ஆங்காங்கே இயல்பாய் வருகிறது.

225px-Natalie_Portman
அதே போல் லியோனுக்கு மடில்டாவின் மேல் வரும்  தந்தையுணர்வை வெளிபடுத்த தெரியாமல் வெளிபடுத்தும் காட்சிகளும், மடில்டா லியோனிடம் ஏற்பட்டுள்ள உறவை வெளிபடுத்த தெரியாமல், அவனை காதலிப்பதய் சொல்லும் காட்சிகளாகட்டும்,  ஜீன் கெல்லியை தவிர வேறு யாரையும் தெரியாத லியோனிடம் மடோனா போல் வேடமணிந்து கொண்டு விளையாடும் காட்சிகளாகட்டும், க்ளைமாக்ஸில்  நடக்கும் சண்டைகாட்சிகளாகட்டும் இவர்களின் நடிப்பும், Theirry Arbocastன் ஒளீப்பதிவும், Luc Bessonனின் இயக்கமும் superb..
180px-Luc-Besson-Taken

இயக்குனர் நிகிதா, டிரான்ஸ்போர்டர், லேட்டஸ்டாய் டேக்கன் போன்ற படங்களை இயக்கிய பிரபலம்.

LEON – கல்லுக்குள் ஈரம்


Blogger Tips -பெ’ண்’களூரை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..