Thottal Thodarum

Aug 29, 2009

Quick Gun Murugan

QuickGunFront

90களில் சேனல் வீ யை பிரபலபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கேரக்டர். அப்போதே மிக பெரிய ஹிட்.. அதை தொடர்ந்து படமாய் வெளீவந்திருக்கிறது.

முருகன் ஒரு இந்தியன் அதிலும் சவுத் இந்தியன் Cow களை காப்பாற்றும் Cowboy. ரைஸ் ப்ளேட் ரெட்டி என்பவன் ஊரில் உள்ள எல்லா சைவ உணவகங்களையும் தன்னுடய கவுபாய் கூட்டத்தை வைத்து, மிரட்டி எழுதி வாங்கி, அசைவ உணவகங்களாய் மாற்றுகிறான். அதை ஒரு கட்டத்தில் எதிர்த்த குயிக் கன் முருகனுக்கு, ரெட்டிக்கு தக்ராறு வர அதில் குயிக் கன் முருகன் கொல்லப்படுகிறான்.

மேலோகத்துக்கு போகும் கன் முருகன், சித்ரகுப்தனிடம் போராடி தான் போய் தான் உலகை காப்பாற்ற வேண்டுன் என்று சொல்லி மீண்டும் அங்கிருந்து டிரான்ஸ்பர் ஆகி,  பூமிக்கு வருகிறான். வரும் போது 2007 ஆண்டு, அப்போது ரெட்டி மேக் தோசா என்று அசைவ தோசையை தயாரித்து உலகையே ஆள நினைக்கிறான்.  சரியான டேஸ்டான் தோசைக்கான ரிஸிப்பிக்காக அலைகிறான். தோசை மாமிகளை கடத்துகிறான். இதில் ரெட்டியா/ முருகன் இருவரில் யார் வென்றார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

கதையை படிக்கும் போதே தெரிந்திருக்கும். காமெடி செய்வதற்கென்றே எழுதப்பட்டதாய் இருக்கிறது. முதலில் இம்மாதிரியான ஒரு கதையை பார்பதற்கு தயாராக இருப்பவர்கள் மட்டுமே படம் பார்க்க போகவும்.
quick-gun-murugan

ரசித்து ரசித்து சீன்களில் உழைத்திருக்கிறார்கள். மேலோகத்துக்கு போகும் முருகன் அங்கே லஷ்மியை பார்க்க “ என் வீட்டு கேலண்டரில் இருப்பதை போலவே இருக்கிறார் “ என்பதும், லேட்டஸ்ட் அப்கிரேடட், சித்ரகுப்தனிடன், தன் ப்ளாஷ்பேககி சொல்லி திரும்பவும் பூலோகத்துக்கு திரும்பும் போது, டெர்மினேடர் பாணியில் மேலோகத்திலிருந்து, மின்னலாய் ஐட்டியுடன் வர,  ஒரு சிறிய டெக்னிகல் எரர் இன் டிரான்ஸ்பர் என்ற குரல் ஒலித்ததுடன் மற்ற உடைகள் விழுவதும், தங்கும் லாட்ஜின் பெயர் welknown lodge.  முருகனைன் அண்ண்னும், தம்பியும், ஒருவரை ஒருவர் பாசம் காட்ட ஆளுக்கொரு துப்பாக்கியை எடுத்து வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் சுடுவதும்,
quick-gun-murugan-stills04
அதை பார்த்து அண்ணி அவர்களின் பாசத்தை கண்டு ஆனந்த கண்ணீர் விடுவது,  பழைய காதலியுடன் “ஓ லிட்டில் ப்ளவர்” பாடலை பாடுவதும்,  முருகனின் அண்ண்ன் தன்னை கொன்றவன் யார் என்று சொல்வதற்கு  ப்ளேட்டில் ரைஸ் இருப்பதும், அதில் கொஞ்சம் ரத்தம்  ஊற்றி அதை காட்டி சொல்லி காட்டுவதும், பழைய தமிழ் சினிமா காட்சிகளை கிண்டலடிப்பதும், வில்லனின் கீப்பான ரம்பாவிடம், “நீ எப்படி கீப்பானே?’ போன்ற கேட்விகளை கேட்பது, என்று பல சிறு, சிறு காட்சிகளை சொல்லி கொண்டே போகலாம்.

குயிக் கன் முருகனாய் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத். கன கச்சிதமாய்  பொருந்தியிருக்கிறார். வில்லனாய் நாசர், சண்முகராஜன், ராஜு சுந்தரம், ரம்பா,  என்று எல்லோருமே சரியாய் செய்திருக்கிறார்கள்

எல்லாவற்றையும் சரியாய் செய்தவர்கள்   ஒரு  மிக முக்கியமான, விஷயத்தை விட்டு விட்டார்கள். அதனால் பெரிதாய் இம்ப்ரெஸ் பண்ணவில்லை. என்றே சொல்ல வேண்டும்.

Quick Gun Murugan -  With Out Soul .. சொல்லிட்டேன் Mind It..



டிஸ்கி:
90களில் பிரபலமான குயிக் கன் முருகனின் வி சேனல் புட்டேஜ்.. உங்கள் பார்வைக்காக..





உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Aug 27, 2009

இசையெனும் “ராஜ” வெள்ளம்-2

இளையராஜாவின் பிண்ணனி இசை பற்றிய ஒரு கட்டுரையை ஆரம்பித்ததும், அவரது இசையை போலவே வழக்கம் போலவே மிக அருமையாய் களை கட்டிவிட்டது பின்னூட்டங்கள். மேலும் தொடரச் சொல்லி உற்சாக ஊக்குவிப்பு. வேறு.. அந்த உற்சாகத்தில் மேலும் தொடர்கின்றேன்.
ilayaraja-maniratnam
சென்ற கட்டுரையில் இளையராஜாவின் பிண்ணனி இசையில் பாரதிராஜா- ராஜாவின் கூட்டணியில் வெளிவந்த சில படஙக்ளை பற்றி சொன்னேன். இந்த முறை மணிரத்னம் – இளையராஜா கூட்டணியில் வெளிவ்ந்த படங்களை பார்ப்போம்.
பல்லவி- அனுபல்லவி
Pallavi anupallavi
மணிரத்னத்தின் முதல் படம், கன்னட படம், லஷ்மி, அனில் கபூர், நடித்து வெளிவந்த படம். இந்த படத்தில் டைட்டில் கார்டுக்கு ஒரு பிண்ணனி இசை ராஜா போட்டிருப்பார் வய்லினை அடிப்டையாய் வைத்து, புல்லாங்குழல், கிடார் என்று எல்லாம் சங்கமிக்க  ஒரு மினி  இசை ராஜாஙகமே அமைத்திருப்பார். அந்த இசையை இன்று வரை மறுபடி, மறுபடி உபயோகபடுத்தி வருகிறார்கள்.  சிவா மனசுல சக்கி திரைப்படத்தின் டைட்டில் காட்சியில் யுவன் அதை உபயோகபடுத்தியிருப்பார். ஐடியா செல்லூலரின் விளம்பர பிண்ணனி இசைக்கு அதை உபயோகபடுத்தியிருப்பார்கள்.  அதே இசையை ராஜாவே “மெல்ல.. மெல்ல என்னை தொட்டு “ என்று ஒரு பாடலாகவே இசையமைத்திருப்பார். இந்த படத்தில் படம் நெடுகிலும் ஒர் அமைதியான, ஆர்பாட்டமில்லாத இசையை ராஜாவும், மணியும் கன்னட திரையுலகத்திற்கு அறிமுகபடுத்தினார்கள் என்றால் அது மிகையாகாது. 



மெளனராகம்
tamil-movies-mounaragam1

இந்த படத்தின் வெற்றியில் இளையராஜாவின் பங்கு எவ்வளவு என்று சொன்னால் பாதிக்கு பாதி என்பேன்.  ஏனென்றால் படம் முழுக்க இயக்குனருக்கு வலது கரம் போல், பாடல்களில் ஆகட்டும், பிண்ணனி இசையிலாகட்டும்  கூடவே இருப்பார் ராஜா.. முக்கியமாய் கார்த்திக் வரும் காட்சிகளில் இருக்கும் இளமை துள்ளல், கார்த்திக் நடிப்பை மேலும் தூக்கி நிறுத்தி துள்ளல், இளமை, குறும்பு கலந்த ஒரு  பிண்ணனி இசையை க்கொடுத்திருப்பார். அதே போல படம் நெடுக மோகன், ரேவதி வரும் காட்சிக்ளில்  அவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப பிண்ணனி இசை அவர்கள் வெளிபடுத்தாத உணர்வுகளை கூட மணியும்- ராஜாவும் வெளிபடுத்தியிருப்பார்கள்.
இதயத்தை திருடாதே
 
இதிலும் மணியின் வழக்கமான குறும்புத்தனமான ஹீரோயின் கேரக்டருக்கு ஒரு பிண்ணனி பீஜிஎம் படம் முழுக்க வலைய வரும். அவளின் குறும்புத்தனத்தை  நமக்கு டிரான்ஸ்பர் செய்து விடுவார் ராஜா.  நாகார்ஜுனை தேடி ஹீரோயினின் குட்டி தgeetanjali-bங்கை, அவளுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்ல, அவனின் வீட்டு கதவை திறக்க, அவளுக்கு முன்னால் பனிபுகை மெல்ல, தரையில் ஊர்ந்து போய், எழும்பி, ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாகார்ஜுனின் முதுகில் தொட, அவர் திரும்பி பார்க்கும் வரையான காட்சியில் ராஜாவின் பிண்ணனி இசைக்காக, அந்த காட்சி எடுக்கப்ட்டதா, அல்லது காட்சிக்காக இசையமைக்கபட்டதா? என்று கேட்கும் வண்ணம் இரண்டு பேரும் உழைத்திருப்பார்கள்.
மேலும் மணி- ரஜா காம்பினேஷன் படஙக்ளை பற்றி பேச நிறைய இருப்பதால் அடுத்த வியாழன் சந்திபோம். அதுவரை உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கும்… கேபிள் சங்கர்
முந்தைய பதிவு
இசையெனும் “ராஜ” வெள்ளம்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Aug 25, 2009

Crossing Over –2009

மீண்டும் ஜெயாடிவியில் ஒரு நிகழ்ச்சி. இன்று படப்பதிவு.

 cross அமெரிக்கா என்கிற ஒரு ஆதர்ச நாட்டை நோக்கி வரும் விட்டில் பூச்சிகளான சட்டவிரோதமான குடியேறிகளை பற்றிய கதை. ஹாரிஸன் போர்ட் ஒரு நேர்மையான ஆனால் மனதில் ஈரம் உள்ள ஒரு இல்லீகல் குடியேறிகளை கண்டுபிடிப்பவர்,  ஒரு சமயம் ஒரு டைடில் ஒரு மெக்ஸிகன் பெண்ணை சந்திக்க, அவள் தன்னை கைது செய்ய வேண்டாம் என்றும், அவளது மகன் காப்பாற்ற வேறு வழியில்லாமல் தான் இருப்பதாகவும் சொல்ல, கடமையுணர்ந்து அவளை கைது செய்து, அவளின் மகன் இருக்கும் முகவரியை கண்டுபிடித்து, அவனின் தாத்தா, பாட்டியிடம் கொண்டு போய் சேர்க்கிறார்.

ஒரு பங்களாதேஷியின் மகள் ஸ்கூலில் டெரரிஸத்தை பற்றி அவர்களுக்கு ஆதரவாய் அமைவதாய் ஒரு கட்டுரை எழுத போக, அதனால் அவளின் குடியுரிமை பிண்ணனி தெரிய வர,  அவளுடய தங்கை தம்பிகள் இங்கே பிறந்த்தால் அவர்கல் இங்கிருக்க, சட்டம் அனுமதிக்க,  குடும்பத்தை பிரிந்து திரும்பவும் பங்களாதேசுக்கு அவளும் அவள் தாயும், பிரிந்திருக்க, ஏர்போர்ட்டில் நேரில் வந்து வழியனுப்ப வந்தால் தானும் கைதாக போகக் கூடிய வாய்ப்பு இருப்பதால் ஒளிந்து கொண்டு மகளை பிரியும் தகப்பன்.
crossingover-mv-9
ஜூயிஸ் இளைஞன் ஒருவன் மீயூசிசியன். தான இதுவரை பழக்கபடாத ஒரு வாழ்கை முறையை, அமெரிக்க ஜூயிஸ்க்ளின் ஒரு இடத்தில் வேலை பார்பதற்காக, ஹூப்ரூ மொழியை தப்பும் தவறுமாய் கற்றுக் கொண்டு, க்ரீன் கார்டுக்காக் அலைபவன்.

அமெரிக்க மாடலிங் உலக கனவுகளுடன் போலி குடியுரிமை அட்டைகளை வைத்து கொண்டு மாடலிங் உலகை வலம் வர துடிக்கும் ஆஸ்திரிலேயில பெண். அவளின் அழகில் மயங்கி, மூன்று மாதத்திற்கு தன் கட்டுப்பாட்டில் வைத்து அனுபவித்த பின் அவளுக்காக  குடியுரிமை வழங்கும் அப்ளிகெஷனி கையெழுத்திடும் க்ரீன் கார்ட் அப்புரூவல் ஆபீஸர். அவனின் வக்கீல் மனைவி ஆஷ்லி ஜுட்.

இரானிய அமெரிக்கனான ஹ்மீத், ஹாரிசனுடன் வேலை பார்ப்பவன், தன் தந்தையின் குடியுரிமைக்காக காத்திருப்பவன், அவனுடய தங்கை இல்லாமிய மத கோட்பாடுகள் படி நடக்காமல், போதை, முறை தவறிய  செக்ஸ் என்று அலைபவள். அவளின் தந்தைக்கு பொறுக்காமல், அவள் அமெரிக்க குடியுரிமையில் வாழும்  ஹமீதின் இன்னொரு சகோதரனாலேயே கொல்லப்பட, 
Crossinng Over
அமெரிக்க குடியுரிமைக்காக அப்ளை செய்து போராடும் ஒரு சைனக்குடும்பம். இங்கே வாழ்வதை விரும்பாத அவனுடய டீனேஜ் மகன், தவறான சேர்கையால் ஒரு கடையை கொள்ளையடிகும் கும்பலுடன் சேர்ந்து கொள்ளையில் முற்பட, ஒரு கடைசி நிலையில் ஹமீத் அவனை காப்பற்றுகிறான்.
crossingover-mv-8

ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு, சுபிட்ச நாளை நோக்கி  கனவு தேசத்தின் நிதர்சன கதவுகளை தட்டிக் கொண்டிருப்பவர்கள். இவர்களின் கனவு நிலைத்ததா..? கலைந்ததா..? மனதை உருக்கும் சம்பவங்களுடன் படத்தை தந்திருக்கிறார்கள்.. ஹாரிஸன் போர்டு இந்த படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்கவில்லை என்றாலும் நயமான நடிப்பு, இயக்குனர் வேயின்க்ராமர் படம் பார்த்துவிட்டு ஒரு மாதிரி கனமாய் இருந்தது ராத்திரி முழுவதும்.



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Aug 23, 2009

விஜயகாந்தின் “பஞ்ச்”

vi2

1 படிச்சா என்ன சர்டிபிகேட் வேணும்னாலும் வாங்கலாம்.. ஆனால் உன்னால் உனக்கு டெத் சர்டிபிகேட் வாஙக முடியுமா? ..ம்கும்.


2 நீ ஏர்டெல் வச்சிருக்கலாம், ஏர்செல் வச்சிருக்கலாம், ஆனா நீ தும்மினா ஹட்சுன்னுதாண்டா தும்மணும்


3 இன்ஜினயரிங் காலேஜில படிச்சா இன்ஜினியர் ஆகலாம், அனா பிரசிடெண்ட்ஸி காலேஜில படிச்சா பிரசெடெண்ட் ஆக முடியாது.


4 மெக்கானிகல் இன்ஜினியர் மெக்கானிக்கா ஆகலாம். ஆனா சாப்ட்வேர் இன்ஜினியர் சாப்ட்வேர் ஆக முடியுமா?


5 டீ கப்புல டீய பாக்கலாம் வேர்ல்ட் கப்புல வேர்ல்ட பாக்க முடியுமா?


6 கீ போர்டுல கீயை பாக்க முடியும், மதர் போர்டுல மதரை பாக்க முடியுமா?


7 பஸ் ஸ்டாப்புல் பஸ்ஸை எதிர்பாக்கலாம். புல் ஸ்டாப்புல “ஃபுல்”ல எதிர்பார்க்க முடியுமா?



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Aug 22, 2009

கந்தசாமி - திரைவிமர்சனம்

kandasamy_1

ரொம்பவும் மோசமான நிலையில் உள்ள தமிழ் சினிமா உலகம் மிகவும் எதிர்பார்த்த ஆக்ஸிஜன்  படம். பெரிய பட்ஜெட், பெரிய ஆர்டிஸ்ட்,  கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் இழைத்து, இழைத்து செய்யப்பட்ட படம்.. மிக பெரிய ஓப்பனிங் எதிர்பார்க்கப்பட்ட படம். கந்தசாமி.
Kanthasamy22

படம் ஆரம்பித்ததும், கதை என்னவென தெரிந்துவிடுகிறது. அந்நியன், ரமணா, ஜெண்டில்மேனில் செய்ததை மறுபடியும் வேறு நிலைப்பாட்டில் செய்திருக்கிறார்கள். அதில் ஸ்பிலிட் பர்சனாலிட்டி, இதில் தெரிந்தே..  ஜெண்டில்மேனில் சரண்ராஜ் என்றால் இதில் பிரபு, என்ன அதில் எல்லாம் நல்ல திரைக்கதை என்று ஒன்று இருந்தது. இதில் அது இல்லை. ஆரம்ப காட்சி அதிரடியாய் ஆரம்பித்தாலும், ஏற்கனவே பார்த்த பீலீங் வந்துவிட்டதாலும், தெரிந்த கதையாகி போனதினாலும் பெப் இருக்கவே இல்லை. ஸ்ரேயாவின் பழிவாங்கு நடவடிக்கை, காதல், மோதல் என்று ஆரம்பித்ததும் சூடேறும் காட்சி, மீண்டும் வேறு எங்கே, எங்கேயோ பயணித்து, கலைத்து போட்ட சீட்டு கட்டாய் ஆகிவிடுகிறது.
kandasamy_3

கந்தசாமி சேவல்  கோழியின்  கெட்டப்பில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுத்தியவர்கள் அதை சஸ்பென்ஸாய் வைத்திருக்காமல் நம்ப முடியாத ஒரு செட்டபபை காட்டி, அதையும் புஸ்ஸென ஆக்கிவிடுகிறார்கள்.  அதை காட்டியதாலேயேஎ ஓப்பன் க்ரவுண்டில் இருட்டில் சுத்தி, பறந்து அடிப்பது எப்படி முடியும் என்ற கேள்வி எழுகிறது. முதல் ஒரு முக்கால் மணி நேரம் அந்த சேவல் கேரக்டரை வைத்து கும்மி அடிப்பதோடு சரி அதற்கப்பறம் அதையும் காணோம். சரி ஒரிஜினல் கந்தசாமியை கண்டு பிடிக்க, டி.ஜிபி. பிரபு வந்ததும், அவர் ஏதோ செய்ய போகிறார் என்றால் பல காட்சிகளில் காமெடிபீஸாய் லாஜிக் இல்லா சீன்களுக்கு விளக்கவுரையாற்றுகிறார்.  தெலுங்கு முன்னாள் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவும் தெலுங்கு வாடையில் நடித்திருக்கிறார். வடிவேலு இடையிடையே வருகிறார். சிரிப்பு தான் வர மாட்டேன் என்கிறது.
kandasamy_4

திடீரென ஒரு வில்லன் முளைத்து தமிழ்நாட்டின் முக்கிய புள்ளி என்று அவனே சொல்லி கொள்கிறான். பஸ்ஸிலேயே பிகர்களுடன் சல்லாபிக்கிறான், பஞ்சாயத்து பேசுகிறான், முமைத்கானுடன் டான்ஸ் ஆடுகிறான்.  ஸ்ரேயாவின் அப்பா ஆஷிஷ்தான் வில்லன் என்று நினைத்தால்,  தமிழ்நாட்டின் முக்கிய புள்ளி, என்று ஒருவன் மெக்ஸிகோவில் அலெக்ஸ் என்று எங்கெங்கோ போய் சுற்றி நம்மையும் சுற்றி விடுகிறார்கள்.

விக்ரமின் உழைப்பு படம் பூராவும் தெரிகிறது. மொத்த திரைக்கதை சொதப்பல்களையும் தன் தோள்களில் சுமக்கிறார். பாவம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர். பெண் வேடமிட்டு வருவது, வயதானவராய் வருவது ஏன் கந்தசாமி கோழி கெட்டப் உட்பட எல்லாமே சும்மா பில்டப்பாக இருக்கிற்தே தவிர படத்துக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.

அதே போல் ஸ்ரேயா இன்னொரு சேவிங் கிரேஸ் இந்த படத்திற்கு,  அந்த “மியாவ்..மியாவ்” பாட்டில் ஒரு துண்டை கட்டிக் கொண்டு போடும கெட்ட ஆட்டம் போட்டு நம் மனதை துண்டாடுகிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட். ஆனால் அதை படமாக்கிய விதத்தில் கோட்டைவிட்டிருக்கிறார்கள். பிண்ணனி இசையில் ரொமப் சொதப்பல்.  படத்தில் பார்க்கும் போது மிக்ச் சாதாரணமாய் இருக்கிறது.
kandasamy_5

படம் பார்க்க போகும் முன் உங்கள் வீட்டின் டிவி பெட்டி முன் உட்கார்ந்து தலையை ஆட்டியபடியே படம் பார்த்து பழகி கொள்ளுங்கள். அப்போது தான் படத்தில் ஆடிக் கொண்டே இருக்கும் காட்சிகளை பார்க்க முடியும். இலலாவிட்டால் கண் வலி நிச்சயம். ஏகாம்பரமா ஒளிப்பதிவு. ?? அந்த மெக்ஸிகோ ஹெலிகாப்டர் காட்சிகள் எல்லாம் ஏதோ திருட்டு தனமாய் ஓளிந்து கொண்டு எடுத்தது போல் இருக்கிறது. அதே போல எடிட்டிங்கும் சில காட்சிகளில் பத்து செகண்டு கூட ப்ரேம் ஓட மாட்டாமல் ஒரே இரிடேடிங்க்.

kandasamy_8

எ பிலிம் பை சுசி கணேசன் என்று போட்டு விட்டு, தனி, தனியாய் கதை, திரைக்கதை, வசனம என்று தனக்கு டைட்டில் கார்டு போட்டுக் கொள்கிறார். படம் பூராவும் தேடினாலும் கதாசிரியர் சுசியும், திரைக்கதை ஆசிரியர் சுசியும் தென் பட மாட்டார்கள். ஆங்காங்கே அதிலும் ஸ்ரேயாவிடம் கேள்வியாகவே பதிலை சொல்லும் காட்சியும், ஸ்ரேயாவிடம் பேங்க் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் கேள்விகளிலும் புத்திசாலிதனம் தெரிகிற்து. பல இடங்களில் இறங்கி, இற்ங்கி ஏறுகிறது படத்தின் க்ராப். படத்தில் உட்சபட்ச காமெடி,  ஸ்ரேயா தன் துணிகளை கிழித்து கொண்டு, சிபிஐ ஆபீஸில் அலறுவது, பின்னர் சிசிடிவியில் எல்லாம் ரெக்கார்ட் ஆகும் என்பது நேற்று பிற்ந்த குழந்தைக்கு கூட தெரியும்  இயக்குனர் சுசி அவர்களே. இதில் இவர்கள் ஏன் இப்படி ஆனார்கள் என்ப்தை விளக்க ஒரு ப்ளாஷ்பேக், இயக்குனர் வேறு நடித்திருக்கிறார். சாரி.. நடந்திருக்கிறார். அவரின் கேரக்டரினால் என்ன பயன் என்று அந்த கந்தசாமிக்கே வெளிச்சம். கோயிலுக்கு போய் ஒரு லெட்டரை எழுதி வைக்கணும்…………………… நீங்களே பில் பண்ணிக்கங்க.

கந்தசாமி – பார்த்து நொந்தசாமி

டிஸ்கி

பாவம் விக்ரம் பீமா, கந்தசாமி மாதிரியான படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு நொந்து போவதை விட நல்ல கதையில் குறுகிய கால படங்களில் நடிப்பது எவ்வளவோ மேல். எத்தனையோ இளம் இயக்குனர்கள் உங்களை வைத்து படம் செய்ய காத்திருக்கிறார்கள்.

தெரிந்த கதையை, அருமையான திரைக்கதையினாலும், மேக்கிங்கினாலும் உட்காரவைக்க முடியும் என்பதை சமீபத்திய சூப்ப்ர் ஹிட்டான ஹிந்தி படம் கமீனேவை பார்த்து இயக்குனர் புரிந்து கொள்ளலாம்.



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Aug 20, 2009

இசையெனும் ”ராஜ” வெள்ளம்

ilaiyaraja001-249x300

நேற்று ஒரு படம் பார்த்து கொண்டிருந்தேன். மிக முக்கியமான கட்டம் க்ளைமாக்ஸ், பிண்ணனி இசையினாலேயே நம்மை அள்ளி இழுத்து கொள்ள வேண்டிய இடம்,  அங்கே தன் ஆளுமையை காட்டவில்லை அந்த படத்தின்  இசையமைப்பாளர்,

அதே போல் காமராஜர் படத்தின் டபுள் பாஸிடிவ் பார்க்க சென்றிருந்தேன். அப்போது படத்தில் இயக்குனர் சில புட்டேஜுகளை விட்டிருந்தார்.  அவர் ஏன் விட்டிருந்தார் என்று எனக்கு புரிந்தது. அது பிண்ணனி இசை கோர்வைக்காக விடப்பட்டிருந்தது. இசை கோர்ப்பு முடிந்ததும் அது எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும் ஏனென்றால் அந்த படத்தின் இசையமைப்பாளர் “இசைஞானி’ இளையராஜா.

எத்தனையோ இசையமைப்பாள்ர்கள் கோலோச்சியுள்ள தமிழ் சினிமாவில், ஆர்.ஆர்னா அது ராஜா தான் என்று இன்றளவும் பேசப்படும் ஒரு மாபெரும் கலைஞன் இளையராஜா மட்டும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

அவரது பிண்ணனி இசை படத்தில் இயக்குனர் சொல்லாமல் விட்ட விஷயங்களை கூட சொல்லிவிடும், இவரது பிண்ணனி இசையால் சாதாரணமான க்ளைமாக்ஸ் காட்சிகள், படம் பார்க்கும் பார்வையாளனின் உணர்வுகளை தூண்டப்பட்டு மிக சிறந்த க்ளைமாக்ஸாக மாறிய படங்கள் எத்தனையோ. இன்றளவில் என்னுடய அனுபவத்தில் சந்தோஷம், துக்கம், காதல், ரொமான்ஸ், துரோகம், என்று மனித உணர்வுகள் அத்தனையையும் இசையால் திரையில் கொண்டு வந்த ஒரு மேதை நம்ம இசை ஞானி.

இளையராஜாவின் ஆரம்ப கால படங்களில் அவரது பிண்ணனி இசை பற்றி பேசபடாவிட்டாலும் மனுசன் கொஞ்சம், கொஞ்சமா ரசிகர்களை ட்யூன் ஆக்கிட்டேதான் வந்தாரு. குறிப்பாக சொல்லணுமின்னா,  சாய்தாடம்மா சாய்ந்தாடு, பத்ரகாளி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள்
nram

பாரதிராஜாவும், இளையராஜாவும் சேர்ந்து படம் கொடுக்க ஆரம்பிச்சதும்தான் பிண்ணனி இசைன்னா என்னன்னு மக்களும், விமர்சகர்களும்  கவனிக்க ஆரம்பித்தார்கள். குறிப்பாய் நிறம் மாறாத பூக்கள் படத்திலிருந்து சொல்லலாம். படம் முழுவதும் கிடாரும், வயலினும், கதையில் ஒரு கேரக்டர் போல கூடவே எல்லா உணர்வுகளுக்கு பதில் சொல்லும். படத்தின் வெற்றிக்கு பாடலகள் ஒருபுறம் உதவ, உறுத்தாத பிண்ணனி இசை நம்மை படத்துடன் ஒன்றச் செய்தது நம்ம மொட்டை தான்.

ராஜாவின் பிண்ணனி இசை பற்றி மிகவும் பேசப்பட்ட படம் சிகப்பு ரோஜாக்கள். படம் முழுவது தீம் மீயூசிக் போல கமலனின் ப்ளாஷ்பேக் கட்சிகளுக்கு  “டுடுன், டுடுன்,டுடுன், டுடுன்” ஒரு விதயாசமான இசையை  அளித்திருப்பார். அது  கமலின் குழம்பிய மனதின் வெளிப்பாடாகவே இருக்கும், முக்கியமாய் கதவு திறக்கும் சப்தம், பூனையின் மியாவ், காலடி ஓசைகள், கமல் டேபிளின் மேல் நத்திங் நத்திங் என்று கோபத்துடன் எழுதும்போது வரும் உடல் கூசும் அந்த ஒலி, என்று  எஃபக்ட்ஸுக்கும், முக்யத்துவம் கொடுத்து அதையே பிண்ணனி இசையாய் பயன்படுத்தியதில் தமிழ் திரையுலகில் முதன்மையானவர் இளையராஜா. க்ளைமாக்ஸ் காட்சியில் பூனையை பார்த்து ஸ்ரீதேவி பயப்பட ஆரம்பித்து, ஓட ஆரம்பிப்பதிலிருந்து ஒரு படம் முடியும் வரை சுமார் இருபது நிமிடம் மயிர்கூச்செரிய வைக்கும் பிண்ணனி இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார்.

அதே போல் முதல் மரியாதையில் ரஞ்சனும், ரஞ்சனியும் நிலாவை பிடிக்க, ஓடுவது போன்ற ஒரு காட்சி, உங்களுக்கு அந்த படத்தின் டிவிடி எங்காவது கிடைத்தால், அந்த காட்சியை முதல் முறை மியூட்டில் வைத்து பாருங்கள், வெறுமையாய் இருக்கும்,  பிறகு அதே காட்சியை ராஜாவின் பிண்ணனியோடு பாருங்கள புல்லாங்குழலும், வயலினும் ஒரு சேர அவர்களுடனே ஓடும், சிரிக்கும், மூச்சு வாங்கும், அவர்களின் சந்தோஷம் உங்க்ளுக்கும் தொற்றி கொள்ளும். அதே போல் ராதா, சிவாஜிக்கு ஒரு புல்லாங்குழலை வைத்தே அவர்களின் பாசம், காதல், சோகம், பரிவு, பிரிவு என்று ஒவ்வொரு உணர்வுகளுக்கு பாரதிராஜா எடுத்த ஷாட்டுகளை, உணர்வாய் மாற்றி மகக்ளிடையே சேர்த்தது ராஜாவின் இசைதான்.

நாடோடி தென்றல் படத்தில்  ஒரு காட்சி கார்த்திக், ரஞ்சிதா இருவரும் காதல் வயப்பட்டு கூடும் நேரம் அதை பாரதிராஜா விஷூவலாய் காட்ட, மூங்கில் காடுகள் உரவுவதும், ஓடுகிற் அ ஆற்று தண்ணீரில் எதிர் போக முயற்சித்து தத்தளித்து திமிரும் வாத்துகளையும், விஷூவலாய் கொடுக்க,  அதற்கு  ஒரு பிண்ணனி இசை அமைத்திருப்பார் பாருங்கள்.  வாவ். அவர்க்ளீன் கூடலின் இன்பமும், முயக்க்மும், உணர்வுகளின் உந்துதலால் தத்தளிக்கும் வாத்துகளின்  தவிப்பையும்,  தன் இசையால் இளையராஜாவும், விஷூவலால் பாரதிராஜாவும் கவிதையாய் சொல்லியிருப்பார்கள்.

டிஸ்கி:

இசையை வார்தைகளால் விவரிப்பதென்பது முடியாத காரியம், நான் இங்கே கொடுத்திருக்கும் படங்களை பார்தவர்களுக்கு நான் சொன்ன காட்சிகள் மீண்டும் மனதில் ஓடினாலோ, மீண்டும் படம் பார்க்க தூண்டி, அந்த காட்சிகளை உணர்தாலே நான் எழுதியது வெற்றியே என்று கொள்ளவேண்டும்,  நம்ம மொட்டையுடன் இணைந்து வெற்றி பெற்ற இயக்குனர்களின் படங்களை பற்றி இன்னும் எழுதலாம் என்று நினைக்கிறேன் நீங்கள்???


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Aug 19, 2009

Kaminey – Hindi Film Review

kaminey-poster

இரட்டை பிற்வி, உருவ ஒற்றுமை, ஒருவன் நல்லவன், இன்னொருவன் கெட்டவன்,  உருவ ஒற்றுமை காரணமாய் ஆள் மாறாட்டம். என்று பார்த்து, பார்த்து சலித்து போன ஒரு விஷயத்தை சுவாரஸ்யமாய் சொல்ல முடியுமா..? அதுவும் 135 நிமிட படத்தில் ஒரு பத்து நிமிஷம் மிஸ் செய்தால் கூட புரியாமல் போய்விடக்கூடிய திரைக்கதையில். சும்மா அனல் போல பறக்க வைத்திருக்கிறார் இயக்குனர் விஷால் பரத்வாஜ், ஓம்கார், மக்பூலின் இயக்குனர்.

சார்லி, குட்டூ இருவரும் இரட்டை பிறவி சகோதரர்கள், மும்பய் தாராவியில் வாழ்க்கை நடத்த, ஒரு கட்டத்தில் இருவரின் ஆசாபாசங்களும் வேறு வேறு விதமாய் இருக்க, சார்லி குறுக்கு வழியில் சம்பாதிக்க ஒரு வழியில் போக, குட்டு ஒரு என்.ஜி.ஓவில் ட்ரைனியாய் வேலைக்கு சேர்ந்து ஒரு கார்பரேட் தலையாக, முதல் படியை வைக்க, மூன்று வருடங்களாய் சந்திக்காமல் இருக்கிறார்கள்  சகோதரர்கள். ஒரு  நாள் வருகிறது. அந்த ஒரு நாள் அவர்களின் வாழ்கையில் அவர்களுக்கு ஒரு மாறுபட்ட ஒரு நாளாய் அமைகிறது. அந்த நாள்  அவர்களின் வாழ்கையை பணயம் வைக்கும் நாளாய் அமைகிறது.
kaminey

சார்லிக்கு ஒரு பிரச்சனையிலிருந்து தப்பிக்கும் போது மும்பை போலீஸின் வண்டியை கடத்தி கொண்டு வந்துவிட, அதில் மும்பை போலீஸில் உள்ள இரண்டு உயரதிகாரிகள் மூலமாய் கடத்தபட இருக்கும்  தஷி எனும் மிகப்பெரிய அண்டர்வேர்ல்ட் ஆளின் பல கோடி ரூபாய் கோக்கைன் ஒரு கிடாரில், அந்த காரில் இருக்க,  அதை தேடி அவர்கள் இருவரும் சார்லியை தேடி அலைகிறார்கள்.

இன்னொரு பக்கம், பிரியங்காவை,(ஸ்வீட்டி) குட்டு (ஷாகித்கபூர்)  ஒரு காண்டமில்லா தினத்தில் கர்பமாக்கிவிட, அதனால் உடனடியாய் திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை, ஆனால் அதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் ஸ்வீட்டி லோக்கல் மாகாராஷ்ட்ரா அரசியல் கம், அண்டர்வேர்ல்ட் தாதா போபேவின் தங்கை.  அவனை ஏமாற்றி அவர்கள் திருமணம் செய்ய,  போபே அவர்களை துறத்த, போலீஸின் பார்வையில் இவன் சார்லியாய் தோன்ற், அவனை போலிஸ் தூக்கி கொண்டு போகிறது.
kaminey-wallpaper (1)

இன்னொரு பக்கம் சார்லி பல பிரச்சனைகளூக்கு பிறகு தஷியிடமே கோக்கெய்ன் பாக்கெட்டை விற்க முயல, அந்த பாக்கெட்டுகளை குட்டுவை வைத்து அடைய போபே முயல,  இன்னொரு பக்கம, துறத்தும் கடத்தல்கார போலீஸ்காரர்கள் இருவரில் ஒருவரை அவர்கள் கொன்றுவிட, க்ளைமாக்ஸ் அதகளம், ரத்தகளரி. விடியோ கேமில் நாம் சுட்டு விளையாடுவோமே அது போல.  படம் பார்கையில் இவர்களின் ஆட்டத்தில் நாம் ஆட்டத்தில் எந்த அளவு இன்வால்வ் ஆகி விளையாடுவோமோ அவ்வளவு இன்வால்வ் ஆகிவிடுகிறோம்

சார்லி, குட்டூ என்று இரண்டு வேடஙக்ள், இருவருக்கும் பேசுவதில் ப்ரச்சனை, சார்லிக்கு லைட்டாய் ஒரு மாதிரி ப்டபடக்கும் போது திக்கும்,  குட்டூக்கு நல்லாவே திக்கும். சாக்லெட் பாய் இமேஜிலிருந்து வெளியே வந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். சார்லி கேரக்டருக்கு மிக பொருத்தமாகி இருப்பதே அதற்கு சான்று.
kaminey-wallpaper

பிரியங்கா வழக்கம் போல இயல்பாய் நடித்திருக்கிறார். முழு மஹாராஷ்டிரிய பெண்ணாய் வருகிறார். பல இடஙக்ளில் மராத்தி பேசுகிறார் குட்டூவால் தான் கர்பமானதை சொல்லும் காட்சியில் ச்ச்சோ க்யூட்.

படத்தில் ஆளாளுக்கு கேரக்டராகவே வாழ்கிறார்கள், பிரியங்காவின் தாதா அண்ணனாக வ்ரும் போபே. இவரின் பாடி லேங்குவேஜும், நடிப்பும், சூப்பர்ப். இவர்தான் தாரே ஜமீன் பர் படத்தின் கதாசிரியராம்.

படத்தை சீட்டு  நுனிக்கு கொண்டு வருபவர்களில் முக்கியமானவர், கேமராமேன். சும்மா பின்னி பெடலெடுத்திருக்கிறார். பிண்ணனி இசையிலும், இரண்டு பாடல்களிலும் தூள் கிளப்பியிருக்கும் விஷால் பரத்வாஜும், எடிட்டிங்கும், என்று எல்லா துறையினரும் போட்டி போட்டிருக்கிறார்கள்.
kaminey_01

நைல் பைட்டிங் திரைக்கதை என்றால் அவ்வளவு டென்ஷனான திரைக்கதை, குட்டூ, ஸ்வீட்டி காதலை ஒரெ காட்சியில் விளக்கியிருக்கும் விதம் சூப்பர். அதே போல் க்ளைமாக்ஸ் காட்சி படமெடுத்திருக்கும் விதம்.. படம் முழுவதும்  இயல்பாய் ஓடும் நகைச்சுவை,  ஒரு பத்து நிமிஷம் மிஸ் செய்தால் அவ்வளவு தான்.  படத்தின் ஆதாரமான கதை அரத பழசாய் தெரிந்தாலும் அதை கொடுத்த விதம் குவாண்டின் டரண்டினோவின் ஸ்டைலில் ஒரு அதிரடிதான்.

Kaminey – Don’t Miss If You Like Quentin…

Technorati Tags: ,


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Aug 18, 2009

பயோடேட்டா – கேபிள் சங்கர்

sankar

பெயர் : கேபிள் சங்கர்

Original பெயர் :  பி.சங்கர் நாராயண்

வயது :  யூத்துகளின் வயதுதான்.

தொழில் : சுயதொழில், சினிமா

உபதொழில் :  சினிமா

நண்பர்கள் : சினிமா பற்றி பேசும், சிந்திக்கும்,எல்லோரும்

எதிரிகள் :  எனக்கு வாய்ப்பு தராதவர்கள் :)

பிடித்த வேலை : சமீபத்தில் பதிவு எழுதுவது

பிடிக்காத வேலை :  அப்படி ஏதுமில்லை

பிடித்த உணவு : எது எங்கே கிடைத்தாலும் அதில் பெஸ்ட் எதுவோ அது.

பிடிக்காத உணவு :  தெரியல

விரும்புவது : சினிமாவில் வெற்றி பெற்று   ஒரு கார்பரேட் கம்பெனியின் தலைமையாக. வேண்டும்

விரும்பாதது :  யோசிக்கணும்

புரிந்தது :  சினிமாவில் வாய்ப்பு கிடைக்க நிறைய உழைக்கணும்ங்கிறது

புரியாதது : எப்படி சில பேருக்கு வாய்ப்பு கிடைக்குதுன்னு?(இதை காண்டுன்னு கூட சொல்லலாம்)

சமீபத்திய எரிச்சல் :  பொக்கிஷம்

நீண்டகால எரிச்சல் :  நம்ம ஊர் வெயில்தான்

சமீபத்திய சாதனை : மூன்று குறும்படங்கள் இயக்கியது, இரண்டு சீரியலுக்கும், இரண்டு திரைப்படங்களுக்கும் திரைக்கதை வசனம் எழுதியது.  எழுதியது இரண்டு சிறுகதைகள் ஆ.வியில் வந்து நானும் ரவுடியாயிட்டேன் போல எழுத்தாளர் ஆனது.

நீண்டகால சாதனை : சீக்கிரம் படம் எடுத்துவிடுவேன் என்று சொல்லிக் கொண்டு நம்பிக்கையாய் இருப்பது.

*********************************************************



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Aug 15, 2009

பொக்கிஷம் – சேரனுக்கு ஒரு கடிதம் (திரைவிமர்சனம்)

சுதந்திரதின வாழ்த்துக்கள்

pokisham-ja21-2009_70 copy

அன்பான சேரன் அவர்களுக்கு,

உங்களது இயக்கத்தில் வந்த படங்களை ரசித்து பார்த்து வந்த ரசிகன் எழுதுவது. மனதை வருடும் காதலை சொல்லும் படத்தை இலக்கிய ரசனையோடு கொடுக்க நினைதது உருவாக்கிய ஒரு கதையில் எப்படி சார் நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைத்தீர்கள்.  மனசாட்சி என்பது உங்களுக்கு கிடையவே கிடையாதா..? கொஞ்சமாவது உங்கள் மனத்திரையில் உங்கள் கதாநாயகனை ஓட்டி பார்த்திருந்தால், உங்களுக்குள் இருக்கு இயக்குனர் கண்டிப்பாக இப்படி ஒரு அழுமூஞ்சி முத்திய முகத்தை தன் கதாநாயகனாய் ஏற்றிருக்கமாட்டார். நடிகர் சேரன் அவரை வென்று விட்டார் போலும்.

கொஞ்சம் யோசித்து பார்த்தால் படத்தில் உங்கள் மகனாய் வரும் ஆர்யன் ராஜேசை ப்ளாஷ் பேக் ஹீரோவாக்கி விட்டிருந்தால் அட்லீஸ்ட் தெலுங்கிலாவது டப்பிங் ரைட்ஸ் போயிருக்கும். அது சரி கதைக்கு வருவோம். பழைய ட்ரங்க் பெட்டியில் இறந்து போன அப்பாவின் பழைய பொக்கிஷமாய் கருதும் கடிதங்களை, மகன் படித்துபார்க்க, அவரின் காதல் கதை 1970களில் விரிகிறது.
pokkisham

உங்களின் தந்தை உடல் நலமில்லாமல் இருக்கும் போது பக்கத்து கட்டிலில் வந்து சேரும் வயதான பெண்ணின் மகளான நதிரா என்கிற முஸ்லிம் பெண்ணின் இலக்கிய அறிவை பார்த்தும், அழகை பார்த்தும் இன்ஸ்பயர் ஆகி அவளுக்கு ஒரு கடிதம் எழுதப்போக, அது தொடந்து காதாலாவது கவிதையே. அதற்கான கடிதங்களை வடித்தவர்களை பாராட்டியே தீரவேண்டும். கடிதம் எழுதும் பழக்கமே வழக்கொழிந்து போய்விட்ட இந்நாளில் அந்த கடிதத்திற்காக காத்திருக்கும் வலி உணர்ந்தாலே புரியும்.  அவளை தேடி மீண்டும் காரைக்கால் வரும் காட்சியின் நடுவில் ஒரு முஸ்ஸிம் கும்பல் இன்னொரு முஸ்ஸிம் இளைஞரை கத்தியால் குத்தி கொல்கிறது. சரி நீங்கள் அதை வைத்து ஏதோ சொல்லப் போகிறீர்கள் என்று நினைத்து தொங்கி போய் சரிந்து உட்கார்ந்திருந்த என்னை போன்ற ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தால், மீண்டும் தொபுகடீர் என்று சரிந்து விழ வேண்டி இருக்கிறது.

இப்படி எழுந்து, எழுந்து விழும் வலுவில்லாத சவலைப்பிள்ளை திரைக்கதையில், திருப்பமாய் நீங்கள் நினைத்த காட்சிகள் எல்லாம் 1970களிலேயே வந்து விட்டது. ஓ. சாரி.. இந்த கதை 70களில் நடப்பதுதானே. அப்ப சரிதான்.
 

அதன் பிறகு கதையில் இருக்கும் ஒரே ஈர்ப்பு நதிராவுக்கு என்ன  ஆயிற்று என்பதுதான் . அதை ராஜேஷ் தேடி கண்டுபிடித்து உங்களின் முகவரியில்லா நதிராவுக்கான கடிதங்களை கொடுக்கும் காட்சி கண்களில் நீரை வரவழைத்தது. ஆனால் இந்த ஒரு காட்சியை காண மூன்று மணி நேரம் பொறுமை காக்க வேண்டுமென்பது. அதுவும் காசு கொடுத்து  என்பது கொஞ்சம் ஓவரே. இந்த காட்சிக்கு பிறகு வரும் நதிரா திருமணம் செய்யாமலே இருந்திருக்கிறார் என்கிற விளக்க வியாக்யானமெல்லாம் ஏறவேயில்லை. காட்சிகளிலும் சரி. டெக்னிகலாய்  வாய்ஸ் ஓவர்லாப்பும் மிக மெலிதாய்தான் கேட்கிறது.  நதிராதான் வேறு ஊருக்கு மாற்றி போய்விடுகிறார். ஆனால் சேரன்(நீங்கள்) அதே ஊரில் அதே அட்ரஸில்தானே இருக்கிறீர்கள். நதிராவின் காதல் உண்மையாக இருந்திருந்தால் யார் மூல்மாவது, ஏன் நதிராவுக்கு உதவும்  தோழியின் மூலமாவது உங்களுக்கு தகவல் சொல்லியிருக்க முடியுமே?. இம்மாதிரியான் கேள்விகள் ஏன் எழுகிறது என்றால் படம் ரொம்ப போரடிப்பதால் தான் இதையெல்லாம் கவனிக்க் வேண்டியிருக்கிறது.

ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு அருமையோ அருமை. எனக்கு தெரிந்து உஙகளது படத்தில் ஒரு சிறந்த ஒளிப்பதிவை இந்த படத்தில் காண்கிறேன். அதே போல் சபேஷ் முரளியின் பாடல்களில் நிலா அது வானம் காற்று என்ற பாடலை தவிர எதுவும் தேறவில்லை என்றுதான் சொலல் வேண்டும். வைரபாலனின் கலை இயக்கம் குறிப்பிடதக்கதாய் அமைந்திருப்பது உங்களுக்கு பலம் என்றே சொல்ல வேண்டும்.

இந்த கால காதலை சொல்ல ராஜேஷ், அவனின் காத்லியுடன் ஏற்படும் சம்பாஷணைகளை வைத்து பார்த்தால் நீங்கள் யூத்தாக ஃபீல் செய்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என்றே தோன்றுகிறது. கதாநாயகியின் முகத்தை பார்பதற்கு முழுநிலவை காட்ட மாட்டாயா என்பது போன்ற புராண இலக்கிய வசனங்கள் எதற்கு. ஏதோ 300 வருஷத்து பீரியட் பிலிம் போன்ற எண்ணம் வந்துவிட்டதோ உங்களுக்கு. அதே போல் நதிராவின் அப்பா கல்யாணத்துக்கு சரி என்று ஒத்துக் கொள்வதெல்லாம் உட்டாலக்கடி என்பது இப்போது படம் பார்க்கும் 2 வயது குழந்தை கூட சொல்லிவிடும்.pokkisham2

படத்தின் நல்லாருக்கு என்பதற்கான காட்சிகளே இலலியா? என்று நீங்கள் என்னிடம் கேட்பது தெரிகிறது. இருக்கிறது. நிலா பாடலில் வரும் மாண்டேஜ் காட்சிகள், பத்மபிரியாவின் அழகு முகத்தின் க்ளோசப்புகள்,  நீங்கள் அனுப்பும் காதல் கடிதங்கள் மேல் சாப்பா குத்தும் போது வரும் சின்ன ஒலிப்பதிவின் வலி. தன்னுடய கடிதம் தன் காதலியிடம் ஒழுங்காய் போய் சேருகிறதா என்று போஸ்ட் பாக்ஸிலிருந்து போஸ்ட் ஆபீஸ் வரை தொடரும் காட்சி, ஆர்யன் ராஜேஷ் தன்னுடய நம்பரை நண்பரிடம் சொல்லும் போது அவரின் காதலி அவருக்கு முன்பே முணுமுணுப்பாய் சொல்வது ஒளிப்பதிவு,   அந்த காதல் கடிதங்கள். மற்றும் நீங்கள் வராத நடிக்காத  கடைசி காட்சிகள். மட்டுமே.

இயக்குனர் சேரன் அவர்களுக்கு மீண்டும், மீண்டும் தயை கூர்ந்து தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். இனிமேலாவது உங்களுக்காக கதை தேடாமல் வேறு நலல் நடிகரை வைத்து நல்ல படைப்புகளை கொடுக்க பாருங்கள்.

இப்படிக்கு

நிச்சயமாய் அடுத்த படத்திலாவது எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கும் உங்கள் ரசிகன்

டிஸ்கி
கொரியன் படமான க்ளாசிக்கின் ஆரதழுவல் என்று நண்பர் சொன்னார் நான் இன்னும் பார்க்கவில்லை.



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Aug 13, 2009

Anjaneyalu –Telugu Film Review

மூன்று லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர் அன்பும், ஆதரவும் தந்து கொண்டிருக்கும் சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..

 anjaneyulureview
ஆஞ்சநேயலு துறுதுறுப்பான கேர்ஃபீரி இளைஞன். பாசக்கார அப்பா, அம்மாவுக்கு ஒரே மகன். ஒரு டிவி கம்பெனியில் வேலை செய்கிறான்.  நடுரோட்டில் ரவுடிகளிடமிருந்து ஹீரோயினை காப்பாற்றி லவ் செய்கிறான். திடீரென ஊரில் உள்ள மிகப்பெரிய ரவுடியிடம் சேர்ந்து, அவனை பற்றிய தொடர்புகள், சதிகள் எல்லாவற்றையும் தன் டிவி சேனல் மூலம் வெளியிருகிறான். ஏன்? எதற்காக? என்பதுதான் கதை.

முழுக்க முழுக்க ரவிதேஜாவை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம். அவரின் படங்களில் வழக்கமாய் வரும் காமெடி முதல் பாதி முழுவதும் இருக்கிறது. லாஜிக் என்ற ஒரு வஸ்துவை படம் முழுக்க எங்கு தேடினாலும் கிடைக்காது. செகண்ட் ஹாப்பில் போக்கிரி படம் போல உளவு வேலை அங்குதான் படம் தொம் என்று விழுகிறது. எழுந்திருக்கவேயில்லை.Nayanthara17[2]

நயந்தாராவா அது முகத்தில் கொஞ்சம் கூட ப்ரெஷ்ஷாகவே இல்லாமல் அசோகவனத்து சீதை போல சோகத்துடன், ஏதோ கடனுக்கு நடித்ததுபோல் நடித்திருக்கிறார். ரொம்பவே உத்து பார்த்து தான் நயந்தாரா என்று உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.

வழக்கம் போல ப்ரம்மானந்தம் கலக்கியிருக்கிறார். என்ன அவரது கேரக்டரை ஷேஷனில் கொஞ்சம் டெப்த் இல்லாத்தால் ப்ரோலாங் செய்ய  முடியவில்லை.
Anjaneyalu_2 (15)

தம்ன்.எஸ்ஸின் இசையில் இரண்டு பாடல் கேட்கலாம். தமிழிலில் சிந்தனைசெய் படத்தில் வரும் குத்து பாட்டு ஒன்று இதிலும் இருக்கிறது. அதே டான்ஸ் மூவ்மெண்டோடு.. யார் முதலில் எடுத்தார்கள் என்று தெரியவில்லை.

ஒளிப்பதிவு ஓகே. சண்டை காட்சிகள் ரொம்பவே ஹீரோத்தனமாய் இருந்தாலும் எபக்டிவாக இருக்கிறது.  திரைக்கதையில் “போல்டந்த” ஓட்டை இருப்பதால் ஒன்றும் வேலைக்காகவில்லை.

ஆஞ்சநேயலு – பஜனை 



டிஸ்கி:
இன்று ஆ.வியில் நர்ஸிமின் ஒருபக்க கதை ஒன்று 50ஆம் பக்கம் வெளியாகியிருக்கிறது. வாழ்த்துக்கள் நர்சிம்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Aug 12, 2009

ஆதியிடம் பின்னூடட டெலி மார்கெட்டிங்.

மூன்று லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர் அன்பும், ஆதரவும் தந்து கொண்டிருக்கும் சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..

ப்ளாக் எழுதறதே பைசாக்கு பெறாத வேலையத்த வேலை, ராத்திரி பகலெல்லாம் லொட்டு, லொட்டுனு அந்த பொட்டிய தட்டிட்டி இருக்கீங்களே. என்னைய கட்டிகிறதுக்கு பதிலா அந்த பொட்டிய கட்டிக்க வேண்டியதுதானேன்னு திட்டு வாங்கிட்டாவது எழுதிட்டிருக்கிறா நிலமையில  ஒரு பின்னூட்டம் வாங்கறதுக்குள்ளே கண்ணு முழி பிதுங்கி போவுது. 

ஆயிரம் தான் நாம பதிவு எழுதினாலும், மார்கெட்டிங்குனு ஒண்ணு இல்லியானா எதுவுமே வேலைக்காவாது. அதனால ஒரு டெலி மார்கெட்டிங் கம்பெனி மூலமா மார்கெட் பண்ணினா என்னான்னு தோணுச்சு.  அதுக்கான முதல் கள பலியா நம்ம அண்ணன் (நான் யூத்தில்ல)  ஆதிக்கு ஒரு ட்ரிங்..ட்ரிங்..

”ஹலோ.?”

“நாங்க கேபிள் சங்கர் ப்ளாக்லேர்ந்து ரீட்டா பேசறேன். நீங்க மிஸ்டர் ஆதிதானே?’

“ஆமாங்க.. தாமிரா என்கிற ஆதிமூல கிருஷணன் நாந்தான்.”

உள்ளேயிருந்து ஆதியின் தங்கமணி “ஆமா இதுல ஒண்ணும் கொறைச்சலில்ல.. கடைக்கு போய் நாலு வெள்ளை பூண்டு வாங்கிட்டு வாங்கன்னா அதுக்கு கிளம்பக்காணும் என்று புலம்ப..

”ஏன் கேபிளுக்கு பதிலா.. நீங்க பேசறீங்க..? அவர் எதாவது படம் பாக்க போய்ட்டாரா. இல்லை யூத்துன்னு சொல்லிட்டு எங்கயாவது சுத்திட்டிருக்காரா?”

“இல்லீங்க.. நான் அவரோட டெலி மார்கெட்டிங்,”

”என்னது டெலி மார்கெட்டிங்கா.. எதுக்கு?” என்று ஆதி அதிர,

”அவரோட கேபிள்சங்கர் ப்ளாகுக்கு.  அவரு பதிவு போட்டவுடனேயே. ஒரு நாளைக்கு ரெண்டு மூணு வாட்டி எங்க டேட்டா பேஸில இருக்கிற பதிவர்கள் நம்பரில் அவரு பதிவு போட்டதை சொல்லி, உங்களை படிக்க சொல்லி, பின்னூட்டம் போட சொல்றதுக்காக போன் பண்ணியிருக்கேன்.’

”அதத்தான் அந்த ஆளு போன்ல, மெயில்ல, எஸ்.எம்.எஸ்லேன்னு உயிர வாங்கிட்டிருகானே இதுல நீ வேறயா..? சரி அதவிடு உங்க வாய்ஸ் சோ..ஸ்வீட் தனிமனம் காட்டில் புல்லாங்குழல் வாசிப்பு போல..” என்று கவிதை சொல்ல ஆரம்பிக்க, அதை பற்றி கவலைபடாத ரீட்டா

“நீங்க அவரு பதிவுக்கு போய் படிச்சிட்டு இது போல கவிதையா பின்னூட்டம் போடலாமே ஆதி..?” கடுப்பாகி போன ஆதி

“ஏம்மா நல்லாருந்தா நாங்களே படிக்க மாட்டமா..?  அந்த ஆளு ஏதோ தெரிஞ்ச மூஞ்சியா போச்சேன்னு அவரோட தொல்லை தாங்க முடியாம ராத்திரி பண்ணெண்டு மணிக்கெல்லாம் உட்கார்ந்து பின்னூட்டம் போட்டுட்டு இருக்கேன். ஏற்கனவே பேங்குகாரங்க போன் தொல்லையே தாங்க முடியலையே.. இதுல இது வேறயா.?”

“நாங்க ஓண்ணும் சும்மா படிச்சு பின்னூட்டம் போட சொல்லல சார்.. ஒரு பின்னூட்டதிற்கு ஒரு பைசா வீதம், மொத்தமா நூறு பின்னூட்டம் வந்ததும், மொத்தமா 100 பைசா கொடுப்போம். இது வந்து :), நைஸ், தூள், பின்னிட்டீங்கன்ற மாதிரியான டெம்ப்ளேட் பின்னூட்டத்துக்கு, ஏதாவது ஒரு நாலு வரியை கட் அண்ட் பேஸ்ட் பண்ணி அதுக்கு பின்னூட்டம் போட்டா அதுக்கு ரெண்டு பைசா.. இல்ல முழு பதிவையுமே பிரிச்சு மேஞ்சி பின்னூட்டம் போட்டா 5 பைசா ஒரு பின்னூட்டத்துக்கு. பாருங்க நீங்க மத்தவஙக் ப்ளாக் படிக்கிற நேரத்துல பல லட்ச ரூபா சம்பாதிக்க வழியிருக்கு.”

“எப்படி ஒவ்வொரு பைசாவா சேர்த்து லட்சரூவா.?” ரைட்டு ”

“அது மட்டுமில்லைங்க. இப்ப நீஙக் ஒரு பின்னூட்டம் போட்டுட்டு.  உங்க ப்ளாகுலேர்ந்து வாரத்துக்கு ஒரு முறை  எங்க ப்ளாகை பத்தி பத்தி எழுதி அங்கேயிருந்து லிங் கொடுத்து எங்க ப்ளாகுக்கு வந்தாங்கண்ணா. முதல் இரண்டு பேர் வந்து பின்னூட்டம் போட்டதும், உங்களுக்கு ஆளுக்கு ரெண்டு பைசா விதம் நாலு பைசா கிடைக்கும், அப்படியே உங்க மூலமா வந்த ரெண்டு பேர் மூலமா நாலு பின்னூட்டம் வ்ந்தா உங்களுக்கு நாலு பைசா கிடைக்கும், அவங்களுக்கு ஆளுக்கு ரெண்டு பைசா. அடுத்து நாலு பேர் எட்டு , பதினாறு, முப்பத்திரெண்டுன்னு  போயிட்டேருக்கும். இதுக்கு பேர் ரெபரல் ஸிஸ்டம். “

“போற போக்க பாத்தா எல்லா ப்ளாகரும் உங்களுக்கு லிங்க் கொடுக்கிற்தான் பதிவா போடணும்னு சொல்றீங்க.   அந்தளு இப்படித்தான் ரெண்டுலட்சம், மூணுலட்சமுணு ஹிட்ஸ் வாங்குறான..? சரிங்க அதுக்கு இப்ப என்ன பண்ணனுமினு  சொல்றீங்க.. சீக்கிரம் சொல்லுங்க   தங்கமணிக்கிட்ட சொல்றேன். பாரு நான் ப்ளாக் எழுதி லட்சம் லட்சமா சம்பாதிக்க போறேன்னு”

“ரொம்ப சிம்பிள் ஜாயின் பீஸா ஒரு 15000 ரூபா கட்டிட்டீங்கன்னா,  உங்க பளாக்கு பத்தியும் இதே போல பேசி மார்கெட்டிங் பண்ணுவோம். அது ஒரு மாசத்திற்கு ஃபிரி.  அடுத்த மாசத்திலேர்ந்து மாசம் 1000 ருவா சரிவீஸ் சார்ஜ். மட்டும்தான். என்ன சார் நீங்க ஜாயின் பண்றீங்களா.? ஓகேன்னு சொன்னீங்கண்ணா எங்க எக்ஸிகியூட்டிவ் சோனாலி உங்கள வந்து பாப்பாங்க”

ஆதி போனை வைத்து விட்டு தலையில் கைவைத்தபடி உட்கார்ந்திருக்க, அதை பார்த்த தங்கமணி, “என்னைக்காவது ஒருநா இந்த பொட்டினால இவருக்கு சித்தப்ரமை பிடிக்க போவுதுன்னு நினைச்சேன். ஆனா இவ்வளவு சீக்கிரமா ஆவும்னு நினைக்கிலியே..?  என்று ஆதியின்  புலம்பங்களை  தங்கமணி  தொடர..

 



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Aug 11, 2009

Hangover

மூன்று லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர் அன்பும், ஆதரவும் தந்து கொண்டிருக்கும் சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..

hg

நான்கு நண்பர்களில் ஒருவனது திருமணத்துக்கு ரெண்டு நாளுக்கு முன் லாஸ்வேகாஸுக்கு டிரிப் போக, ஓட்டலில் ஒரு பெரிய சூட்டை போட்டு தங்குகிறார்கள். ராத்திரி ஹோட்டலின் மொட்டை மாடியில் பார்ட்டியை ஆரமிபிக்க, விடிந்தால் ஹோட்டல் ரூமே கந்தர்கோளமாகியிருக்க, பாத்ரூமில் போனால் உச்சா போகுமிடத்தில் பச்சாவாக ஒரு புலி உட்கார்ந்திருக்க, வெளியே ஒரு சேவலும், கப்போர்டில் ஒரு குழந்தையும், ரூமில் உள்ள ஒருவனது பல் மொத்தமாய் போயிருக்க,  கல்யாண பையனை காணோம்.  சரி காரை கொண்டு போய் தேடலாம் என்றால் ஒரு போலீஸ் காரை ஓட்டல் நிர்வாகம் கொடுக்கிறது. இதைத்தான் நீங்கள் ராத்திரி ஓட்டி வந்தீர்கள் என்று.
(L-r) Alan (ZACH GALIFIANAKIS), Stu (ED HELMS), Doug (JUSTIN BARTHA) and Phil (BRADLEY COOPER) raise a toast on the rooftop to commence Doug's bachelor party in Warner Bros. Pictures' and Legendary Pictures' comedy "The Hangover," a Warner Bros. Pictures release.
PHOTOGRAPHS TO BE USED SOLELY FOR ADVERTISING, PROMOTIONAL, PUBLICITY OR REVIEWS OF THIS SPECIFIC MOTION PICTURE AND TO REMAIN THE PROPERTY OF THE STUDIO. NOT FOR SALE OR REDISTRIBUTION.

முதல் நாள் இரவு நடந்தது எதுவும் யாருக்கும் ஞாபகமில்லை அவ்வளவு மப்பு. சரி என்ன நடந்த்து என்று தேடிப்போனால் திடீர், திடீர் என ஒரு சைனீஸ் மாப்பியா கும்பல் ஒன்று துரத்துகிறது. இதற்கு நடுவில் மூவரில் ஒருவர் ஸ்டிரிப்பர் க்ளப்பில் உள்ள ஒரு பெண்ணை ராவோடு ராவாக திருமணம் செய்திருக்க, அவளுடய குழந்தைதான் ஹோட்டல் குழந்தை என்று கண்டுபிடிக்க,  திடீரென காரின் டிக்கியிலிருந்து ஒரு அம்மண சைனன் எல்லாரையும் அடித்து விட்டு ஓட,  ஓட்டல் ரூமில் மைக் டைசன் ஓங்கி ஒரு குத்து விட்டு ஒழுங்கு மரியாதையாய் புலியை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்க சொல்ல, ஒரு பக்கம கல்யாண பையனை காணோம், இன்னொருபக்கம், சைனீஸ்மாபியா, முதல் நாள் நடந்தவைகள்  ஞாபகமில்லாமை, புலி,  குழந்தை என்று ஒரே காமெடி கூத்துதான் போங்கள்.
_MG_4160.DNG

ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படங்களுக்குண்டான அத்துனை விஷயங்களுடன் ஒரு  காமெடி படம்.  சும்மா விழுந்து, விழுந்து சிரிக்க வைக்கும் படம்.  அதிலும் பாத்ரூமில் புலிக்கு மயக்க மருந்து கொடுத்து, புலியை ஹோட்டலுக்கு தெரியாமல்  கடத்தி, பாதி வழியில் புலிக்கு முழிப்பு வந்து நடக்கும் களேபரங்கள் சொன்னால் புரியாது.. பாருங்கள். திரைக்கதையின் முக்கியமான விஷயமே அந்த ஒரு நாள் இரவு நடந்ததை ப்ளாஷ்பேக்காக சொல்லாமல், எண்ட் கார்டு போடும் போது ஸ்டில்களாய் காட்டி படம் முடியும் போதும் நின்று சிரிக்க வைக்கிறார்கள்.

இந்த படம் எங்கள் அண்ணன் ரமேஷ்வைத்யாவுக்கு சமர்ப்பணம்

Hangover – Dont Miss
டிஸ்கி
(L-r) Alan (ZACH GALIFIANAKIS), Phil (BRADLEY COOPER), Stu (ED HELMS) and Doug (JUSTIN BARTHA) check in with reception at Caesars Palace in Warner Bros. Pictures' and Legendary Pictures' comedy "The Hangover," a Warner Bros. Pictures release.
PHOTOGRAPHS TO BE USED SOLELY FOR ADVERTISING, PROMOTIONAL, PUBLICITY OR REVIEWS OF THIS SPECIFIC MOTION PICTURE AND TO REMAIN THE PROPERTY OF THE STUDIO. NOT FOR SALE OR REDISTRIBUTION.

வெறும் 27 மில்லியன் செலவில் எடுக்கப்பட்டு இதுவரை சுமார் பத்து நாட்களில் 104.8 மில்லியன் சம்பாதித்து கொடுத்திருக்கும் படம். இந்த படத்தை லீகலாய் ரைட்ஸ் வாங்கி இந்தியில் எடுக்கிறார்கள். தமிழில் கமல் அண்ட் கோ காம்பினேஷனில் வந்தால் சும்மா பின்னும். நேத்து ராத்திரி சென்னையில் நிலநடுக்கமா என்ன? நான் படம் பார்த்துவிட்டு விழுந்து, விழுந்து சிரித்து கொண்டிருந்ததால் தெரியவில்லை.

Technorati Tags: ,


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Aug 8, 2009

ஈசா - திரைவிமர்சனம்

 img1090806059_1_1
விக்னேஷும், ஏதேதோ செய்து கொண்டுதானிருக்கிறார். வருடத்துக்கு இரண்டு படங்களாவது நடித்து கொண்டுதானிருக்கிறார் ஆனால் ஒன்றும் சொல்லும்படியாய் இருக்க மாட்டேன் என்கிறது. அந்த வரிசையில் ஈசாவும் வந்திருக்கிறது.

சுடலைஈசா என்கிற ஒரு அனாதை உப்பளத்தில் வேலை பார்க்கிறான். மணிகட்டில் முட்டை தூக்கும் கம்பியோடு அலைகிறான் தனியனாய் இருக்கும் ஒருவனை கொலை செய்கிறான். கொலை செய்தவனை தன்னுடய் வீட்டிற்கு கொண்டு வந்து தன் மனைவியிடம் காட்ட, அவள் வெறி கொண்டு கையில் ஒரு கத்தியை எடுத்து இறந்தவனை மேலும் குத்துகிறாள். ஈசா ஒரு விதமான எக்ஸ்செண்ட்ரிக் ரியாக்‌ஷனோடு ஓங்காரமாய் ஆரவாரமாய் சிரிக்கிறான். இப்படி ஆரம்பிக்கும் படம் இடைவேளையின் போது கொஞ்சம் ஜெர்க்காகத்தான் செய்கிறது. பின்பு ப்ளாடாகி விழுந்துவிடுகிற்து.
167Eeasaa_Priview

விக்னேஷ் அதிக பட்சமாய் இரண்டு பக்கத்திற்கு மேல் வசனம் பேசவில்லை.  தேவையில்லாமல் இவரின் கேரக்டரை பிதாம்கன் விக்ரம் போலவும், காட்டாமல், கோபக்காரனாகவும், காட்டாமல் இரண்டும் கெட்டானாக காட்டியிருப்பதால் அவரின் மேல் எந்தவித உணர்வும் வரமாட்டேன் என்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் பேக் வாட்டரில் வாழைமட்டை பாலத்தில் நடக்கும் சண்டை காட்சி சூப்பர். அந்த ச்ண்டை காட்சி படமாக்கப்பட்ட விதமும், நடித்த விக்னேசுக்கும் சபாஷ்.

சிeesaல சமயங்களில் அர்சனா போல இருக்கிறார் புதுமுகம் லக்‌ஷணா..   பல காட்சிகளில் பெரிதாய் நடிப்பதற்கு ஏதுமில்லை என்றாலும் கதை இவரைச் சுற்றி நடப்பதால், ஒரு ஈர்ப்பு இவரிடம் இருக்கவே செய்கிறது. ஓங்குதாங்கான உயரமும், அந்த வியர்வை உப்பு மினுமினுப்பும், வாளிப்பும். . அதிலும் அந்த முதலிரவு காட்சியில் விக்னேஷிடம் அவர் முயக்கம் காட்டும் காட்சியில்…  ம்ம்ம்.

சிஙகம் புலி, லொல்லுசபா மனோகர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் காமெடி செய்கிறன் என்ரு நம்மை கொல்லுகிறார்கள். இதில் மனோகருக்கும், பாஸ்கருக்கும் இரண்டு அட்டு பிகர்களுடன் ஒரு முழுநீள ரீமிக்ஸ் பாட்டு வேறு முடியலடா சாமி.

வழக்கமான பழிவாங்கும் கதைக்கு தூத்துக்குடி, கடல், லோக்கல் ஆட்கள், உப்பளம் பேக்ரவுண்டை என்று வைத்து கொஞ்சம் வித்யாச படுத்த முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் பாலாகணேசா. ஆரம்ப காட்சிகளிலும், இடைவேளை வரையிலும் சீராக சென்ற ஒரு லைன், இடைவேளைகு பிறகு அழுத்தமில்லாத லவ் ட்ராக்கினாலும்,  விக்னேஷின் கேரட்டரைஷேஷனில்னாலும் பொத்தென விழுந்து விடுகிறது. விக்னேஷ் ஏன் வித்யாசமாய் சிரிக்க வேண்டும், முதலிரவு முடிந்து எழுந்தவுடன் கிங்காங் போல மார்தட்டி கத்த வேண்டும்?  ஏன் ஒரு சில காட்சிகளில் பிதாமகன் விக்ரம் போல நடக்க வேண்டும்.?  என்று ஏகப்பட்ட வேண்டும்கள்.? க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்ட்ர், ஸ்டண்ட் மாஸ்டர் என்று அனைவரது உழைப்பும் தெரிகிற்து.

ஈசா – கடவுளூக்கே வெளிச்சம்


டிஸ்கி:

ப்டத்துக்கு சம்பந்தமில்லாத கதாநாயகி லக்‌ஷணாவின் படம்
lakshana 003



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Aug 7, 2009

சினிமா வியாபாரம் – அறிமுகம்.

ARRIFLEX_435_48019177cc143

மீண்டும் இந்த வாரம் மட்டும் சுமார் ஆறு தமிழ் திரைப்படஙக்ள் வெளியாகிறது. அனைத்தும் சின்ன பட்ஜெட் திரைப்படங்கள். ஒரு விதத்தில் சின்ன பட்ஜெட் படங்களால், நிறைய புது தயாரிப்பளர்களின் வருகையால், சில வருடங்களுக்கு முன் கார்பரேட் நிறுவனங்களினால் சீரழிந்து போக இருந்த  தமிழ் சினிமாவை காப்பாற்றியதே இந்த சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள்தான் என்றால் தவறில்லை.

சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களால் பல புதிய  இயக்குனர்கள், நடிகர் நடிகைகள், டெக்னீஷியன்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. என்றாலும், பெரும்பாலான   நல்ல படஙக்ள் கூட மக்களிடையே சென்றடைய முடியாமல், வந்த சுவடு தெரியாமல் போய்விடுகிறது. அதற்கான காரணம் என்ன?

ஒரு திரைபடத்துக்கு என்ன தேவை? என்ற கேள்வியை வைத்தால் யாராக இருந்தாலும் உடனடியான ஒரு பதிலை வைத்திருப்பார்கள். அது தான் கதை. நல்ல கதை இருந்தால் போதும் நிச்சயமாய் வெற்றி என்று அடித்து கூறுபவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எவ்வளவோ நல்ல படஙக்ள் நல்ல கதை இருந்தும் ஓடாமல், பிற்காலத்தில் டிவியில் போடும் போது பார்த்துவிட்டு நல்லாத்தானே இருக்கு பொறவு ஏன் ஓடலைன்னு யோசிக்க வைக்கிற படங்கள் நிறைய.  நிச்சயமாய் நலல் கதை, திரைக்கதை இருந்தால் மட்டும்  போதாது. அதையும் மீறி திரைபடத்தை சந்தை படுத்துதல் மிக முக்கியம். இதை தமிழ் சினிமாவில் கண்டு கொண்டவர்களில் மிகச் சிலரே..  அதை இம்ப்ளிமெண்ட் செய்து வெற்றியடைந்தவர்கள்.

ஒரு சினிமா தயாரிப்பதற்கு சில கோடிகள்லில் இருந்து இன்று 150 கோடி வரை வந்துவிட்டது. இவ்வளவு பணத்தை எவ்வாறு வியாபாரம் செய்கிறார்கள்.? இவ்வளவு கலெக்‌ஷன், அவ்வளவு கலெக்‌ஷன் என்று ஆளாளுக்கு பிலிம் நியூஸ் ஆனந்தன் ரேஞ்சுக்கு பேசுகிறார்களே.? அதெல்லாம் உண்மையா..? ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கு பிண்ணனியில் உள்ள பணம், உழைப்பு, திறமை எவ்வளவு முக்கியமோ அதே அளவு  பணம், உழைப்பு, திறமை ஒரு படத்தை வெளியீடுவதற்கும் வேண்டும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.? இதையெல்லாம் வருகிற அத்யாயங்களில்  பார்க்கலாமா..?
 

 

.



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Aug 6, 2009

மலை.. மலை –திரைவிமர்சனம்

malai-malai-stills-001
கிராமத்திலிருந்து ஒரு இளைஞன் சென்னைக்கு வருகிறான். வந்த இடத்தில் ஒரு பெரிய ரவுடியை சந்திக்கிறான். அவன் யார் என்று தெரியாமலே அவனை அடித்துவிட, அவனை அழிக்க வில்லன் அலைகிறான். கேட்டு, கேட்டு புளித்து போன கதையாய் தெரிந்தால் அதுக்கு ஒண்ணும் செய்யமுடியாது இதுதான் மலை..மலை திரைப்படத்தின் கதை.
 Malai-Malai-5
பழனியில் அருண் விஜயும், பிரபுவும் இணைபிரியா சகோதரர்கள், எங்கே தனக்கு கல்யாணம் ஆனால் வருகிறவள் தன் தம்பியை பிரித்துவிடுவாளோ என்று எண்ணி திருமணமே முடிக்காமல் இருக்கும் பாசக்குழம்பு பிரபு. இரண்டு பேரும் பெரும் சண்டியர்கள், பிரபுவுக்கு பழைய சப்பி போட்ட மாங்கொட்டை கஸ்தூரி ஜோடி, கோயிலுக்கு வரும் வேதிகா வழ்க்கம்போல் ரவுடி ஹீரோவுக்கு ஜோடி, பார்த்த நாலாவ்து சீனில் காதல் செய்கிறார்கள், அவளை தேடி பழனியில் வேலையிழந்த அருண்விஜய், சென்னை வர, வ்ந்த இடத்தில் சென்னையின் நெ.1 தாதா பிரகாஷ்ராஜை சந்திக்க, வழக்கம் போல் முதல் சீனில் சண்டை போடாமல் பத்து சீன் தள்ளி, அதுவும் ஆளுக்கட்சி இடைதேர்தலுக்காக தன் பலத்தை காட்டும் ஊர்வலத்தில் அவர் என்று தெரியாம அருண்விஜய் அடித்துவிட, அவனை கொல்ல துடிக்கிறார் பிரகாஷ்.

கதையில் மிகப்பெரிய டிவிஸ்டாய் பிரகாஷ்ராஜின் இளமைகால நண்பராக பிரபு இருப்பது மட்டும் தான். மற்றபடி, வழக்கமான வில்லத்தனங்கள் செய்து, கஸ்தூரி இறந்து, அண்ணனும் தம்பியுமாய் சேர்ந்து வில்லனை பழிவாங்குவதுதான் க்ளைமாக்ஸ்.
Malai-Malai-6

அருண்விஜய்க்கு ஜாதகத்தில் என்ன கோளாறோ தெரியவில்லை. எவ்வளவு படம் நடித்தாலும் ஒன்றும் செல்ப் எடுக்க மாட்டேன்கிறது. பாவம் இம்முறை மாமனார் காசு. காசை காசு என்று பார்க்காமல் செலவு செய்திருக்கிறார்கள். ஒண்ணும் வேலைக்காகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அருண் விஜய் நன்றாக ஆடுகிறார், பாடுகிறார், சண்டை போடுகிறார். இவருக்கு தேவை ஒரு நல்ல இயக்குனரும் ஸ்கிரிப்டும்தான் என்று தோன்றுகிறது. சரி அடுத்த படத்தில் பார்ப்போம்.

பிரபு இன்னும் ரெண்டு படத்தில் இம்மாதிரி நடித்தால், போரடித்து போய்விடுவார். நல்ல வேளை இவருக்கும், கஸ்தூரிக்கும் பாட்டு ஏதும் போடவில்லை. நாம் தப்பித்தோம்.

வேதிகாவுக்கு ஒண்ணும் பெரிசாய் ஆடுவது, தண்ணியில் நினைவது தவிர வேறு ஏதும் பெரிய வேலையில்லை. கச்சிதம்.

பிரகாஷ் ராஜ் வழக்கம் போல். வில்லத்தனம் செய்கிறார். எவ்வளவு தான் தெளிவான வில்லனாய் இருந்தாலும், க்ளைமக்ஸில் எல்லா வில்லனும் பிரி கேஜி ரேஞ்சுக்கே யோசிக்கிறார்கள்?.
Malai-Malai-Stills-013

கஞ்சா கருப்பு, சந்தானம், ஆர்த்தி என்று கும்பலாகவும், தனியாகவும் காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். இதில் கொஞ்சமாச்சும் ஓகே ஆகிறவர் சந்தானம்தான். கஞ்சா கருப்பு மீண்டும் தனியாய் செல்ஃப் எடுக்க மாட்டார் என்பதை நிருபித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு, சண்டைகாட்சிகள் எல்லாமே சரியாய் இருந்தும் விழலுக்கு இறைத்த நீர். மணிசர்மாவின் இசை ரொம்பவே கொல்டி வாடை. ஏ.வெங்கடேஷின் வழக்கமான பார்முலா படம். பிரபு, பிரகாஷ்ராஜ் மேட்டரை தவிர தப்பித்தவறி ஏதுவும் வித்யாசமாய் செய்துவிடக்கூடாது என்பதில் பிடிவாதமாய் இருந்து அதில் வெற்றி அடைந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

மலை.. மலை. – சி.ஜி. (Computer Graphics)



போஸ்டர் சிறுகதையை படிக்க.. இங்கே அழுத்தவும்.

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Aug 5, 2009

தமிழ்சினிமாவின் 30 நாட்கள்- ஜூலை09

கடந்த மாதம் தமிழ் சினிமாவின் முக்கியமான மாதமும், மோசமான மாதமும் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் அதிகபட்சமான நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியான மாதம் என்றால் அது சென்ற ஜூலை மாதம் தான்.

இருபத்தியோரு தமிழ் படங்கள் வெளியாகியிருக்கிறது.  பெரிய பட்ஜெட், பிரபல நடிகர்கள் நடித்த படங்களைவிட சின்ன பட்ஜெட், புதுமுகங்கள் நடித்த படங்கள் வெளிவந்ததுதான் அதிகம்.

சிரித்தால் ரசிப்பேன்
இந்த படம் மிக குறைந்த பட்ஜெட்டில் வெளியான ஒரு முழு நீள நகைச்சுவை படம்.  குறைந்த அளவு பிரிண்டுகளே போடப்பட்டு, விளம்பரமும் இல்லாததால் ஒரு வாரத்தில் சுருண்டது. நல்ல காமெடி இருந்தது என்று பார்த்த நண்பர்கள் சொன்னார்கள்.

2 ஞாபகங்கள்
பாடலாசிரியர் பா.விஜய் எழுதி நடித்த திரைப்படம்,  ஹிந்தி ரெயின் கோட்டை திரும்ப தமிழில் தன் நண்பரின் கதை என்று உட்டாலக்கடி விட்டாலும், செல்ப் எடுக்காத படம். பாவம் பல படஙக்ளில் பாட்டெழுதி சம்பாதிச்ச காசு.. :(

3 உன்னை கண் தேடுதே
.ஏ.எல். அழகப்பனின் மகன் உதயாவின் மறு அவதார முயற்சி..  ஒரு வாரம் கூட ஓடியதாய் தெரியவில்லை.

4 இந்திரவிழா
நமிதாவை பெரிதாய் நம்பி எடுத்த படம். படம் ஓடிய சில நாட்களூக்கான காரணமே நமிதாதான் என்பதை விநியோகஸ்தர்கள் எல்லோரும் ஒத்து கொள்கிறார்கள்.

5 வாமனன்
தான் நடிக்கும் படங்களில் இது ஒன்று தான் உருப்படி என்று சொன்னதால் பிரச்சனையில் மாட்டிக் கொண்டார் ஜெய். அவர் நினத்தபடி வந்திருக்க வேண்டிய படம்தான். செகண்ட் ஆப்பில் சொதப்பி விட்டார்கள்.

6 வைகை
புதுமுக நாயக நாயகியர் நடித்து, வெளிவந்த அபவ் ஆவரேஜ் சின்ன பட்ஜெட் படம்.  பெரிதாய் வசூல் இல்லாவிட்டாலும், இரண்டு வாரம் தாண்டியதே பெரிய விஷயம்

7 நீ உன்னை அறிந்தால்
மீண்டும் நம் காலேஜ் நாயகன் முரளியுடன் புதுமுகங்கள் நடித்த படம்,. நான் பார்கக்வில்லை.. அதனால் பெரிதாய் கருத்து எதுவுமில்லை. இதுவும் ஒரு வாரபடம் தான்

தலையெழுத்து
புதுமுக வெளிநாட்டு வாழ் இந்தியர் ரிச்சர்ட் ராஜ் நடித்து தயாரித்து வந்த படம். படத்தின் ஒரு சில விஷயஙக்ள் நன்றாக இருந்ததாய் கேள்வி..  ஒரு வாரம்

9 புதிய பயணம்
இந்த படம் வந்திச்சா? இல்லையான்னு ஒரே குழப்பமா இருக்கு.

10 வெடிகுண்டு முருகேசன்
குண்டு ஏதும் பெரிசா வெடிக்கல.. புஸ்ஸு, வடிவேலு இருந்தும்

11 காதல் கதை
பிட்டு ப்டத்துக்கு என்ன கூட்டம் வருமோ அது வந்திச்சி..

12 அச்சமுண்டு அச்சமுண்டு
படம் நலல் குவாலிட்டியான படமாயிருந்தாலும் ரொம்ப ஸ்லோவான திரைக்கதை பல பேரை படுத்தியெடுத்திருச்சு. அதனால படமும் படுத்திருச்சு

13 எங்கள் ஆசான்
இந்த படம் இந்த மட்டும் இதுவரை சென்னையில் ரிலீஸ் ஆகவேயில்லை. சென்னையை தவிர மற்ற ஏரியாக்களில் ரிலீஸ் ஆகி போய்விட்டது.

14 புதிய பார்வை
இதை பத்தியும் எந்த தகவலும் இல்லை

15 மலையன்
பர்ஸ்ட் ஆப் பரவாயில்லை. அரத பழசு கதை., திரைக்கதை,

16 ஐந்தாம் படை
கொஞ்சம் பெரிய பட்ஜெட் டிவி சிரியல் போல இருக்குன்றாஙக.. விவேக் இல்லாட்டி படம் உட்கார முடியாதுன்னு சொல்றாங்க நான் இன்னும் பாக்கல

17 மோதி விளையாடு
மோதி விளையாட வேண்டிய ஸ்கிரிப்ட், சும்மா பாத்துக்க கூட இல்ல. சரணின் மறு பிரவேசம் பெரிய லெட் டவுன் என்றுதான் சொல்ல வேண்டும்.

18 ஆறுமனமே
பெரிசா சொல்றாப்புல எதுவுமில்லன்னு சொல்றாங்க..

19 சிந்தனை செய்
சென்னையில் மட்டும் ரொம்ப சுமாரான ஓப்பனிங் இருந்த படம். அதுகூட இவர்களின் விளம்பர டிசைன்களால் வந்தது என்றால் நம்ப மாட்டீர்கள்.வந்த படங்களில் கொஞ்சம் ஸ்டப் உள்ள படம். ஒழுங்கான விளம்பரம், இருந்தால் நிச்சயமாய் நிற்கும்.

20 மலை மலை
பாவம் அருண் விஜய் இவரும் என்னனவோ செஞ்சு பாக்குறாரூ எதுவும் ஒர்க் அவுட் ஆக மாட்டேங்குது.  அவருடய மாமனார் மாப்பிள்ளைக்காக எடுத்திருக்கும் படம் கடைசியா ரிலீஸ் ஆயிருக்கு. பார்ப்போம்

21 அந்தோணி – யார்?
யார்..?/

ரிலீஸான 21 படங்களில் ஒரு படம் கூட ஹிட் ஆவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. சுமார் 6 படங்களுக்கு மேல் ஒரு வாரம் கூட ஓடவில்லை. ஒரு சிலது ஒரு வார படங்கள். இந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழ் சினிமாவின் இழப்பு மட்டும் சுமார் 60 கோடி இருக்கும். இந்த 60 கோடி தயாரிப்பு செலவு மட்டுமே. இதற்கு பிறகு உள்ள, தியேட்டர் வாடகை, டிஸ்டிரிபூஷன், விளம்பரம், என்று இன்னும் எத்தனையோ இருக்கிறது. இப்படியே போனால் நிலமை என்னவாகும்? சென்ற மாதம் வெளியான நாடோடிகள் படம் மட்டுமே ஹிட் ஆகி இந்த மாதமும் தொடர்கிறது. எங்கே தவறு செய்கிறார்கள்?  விரைவில்….



போஸ்டர் சிறுகதையை படிக்க.. இங்கே அழுத்தவும்.

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Aug 3, 2009

Love Aaj Kal – Hindi Film Review

LAK1

ஒரு இனிமையான, நெகிழ்வான, உருக்கமான, புத்திசாலிதனமான வசனங்களுடன், ஒரு நல்ல காதல் கதை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என்று நினைத்திருந்த போது பார்த்த படம்தான் லவ் ஆஜ் கல்.
lAK

லண்டனில் வேலை பார்க்கும் ஜெய்யும், மீராவும் சந்திக்கிறார்கள், கொஞ்சம், கொஞ்சமாய் நெருக்கமாகி, நண்பர்களாகி, ஒருவரை ஒருவர் உள்ளூக்குள் காதல் கொள்கிறார்கள். இப்படியே ஒரு வருடம் போக, மீராவுக்கு அவளுடய் ஆர்கியலாஜில் துறையில் மேலும் சில விஷயங்களுக்காக, அவளுடய துறையில் சாதிப்பதற்காக  இந்தியா போக வேண்டுமென்ற நிர்பந்தம் வர,  அதே நேரம் ஜெய்யும் தன் கனவு வேலையான ஒரு அமெரிக்க கம்பெனியில் வேலையில் சேருவதற்காக காத்திருப்பதால் அவளுடன் வர முடியாது என்று சொல்ல, இருவருக்கும் தங்களது குறிக்கோள்களே இலக்காயிருக்க, இதற்கு வேறு வழியேயில்லை என்று இருவரும் பேசி வைத்து கொண்டு பிரிகிறார்கள். இதற்கு பிரேகிங்கப்  பார்ட்டி வேறு கொடுக்கிறார்கள்.  அதன் பிறகு ஆளுக்கோரு திசையில் பயணப்பட்டாலும், SMS, Internet, phone  என்று எல்லா இணைப்புகள் வழியாகவும் தொடர்பு  தொடர்ந்து கொண்டிருக்க,  இந்தியாவில் மீராவுக்கு ஒரு புதிய தொடர்பு கிடைக்க, அங்கே ஜெய்க்கு ஒரு வெளிநாட்டு பெண் கிடைக்க, இங்கே இந்தியாவில் மீராவின் திருமணம் நடை பெறுகிறது. திருமணத்தன்று இருவருக்கும் உள்ளே ததும்பி கொண்டிருக்கும் காதல் மேல வர, க்ளைமாக்ஸ்.. ப்ளாஷ் பேக் ஹீரோயின் அவ்வளவா பேசாவிட்டாலும் அழகு.
LAK2

படம் பூராவும் சாயிப் அலிகானும், தீபிகா படுகோனும் கேரக்டராய் வாழ்ந்திருக்கிறார்கள். சாயிப் மட்டும் தன்னுடய முகத்தில் தெரியும் வயதை தன் நடிப்பின் மூலம் பாதியாய் குறைத்திருக்கிறார். தீபிகாவுக்கும், சாயிப்புக்கு உள்ள கெமிஸ்ட்ரி.. அருமை.  அவர்களிடையே நடைபெறு, நெருக்கமாகட்டும், முத்தங்கள் ஆகட்டும், பின்புறம் தடவுவதாகட்டும், ஒரு காட்சியிலாவது விரசம் தட்ட வேண்டுமே.. ? ம்ஹும். தீபிகா படு க்யூட்.. அவ்வளவு இயல்பாய் இருக்கிறார். நடிக்கவும் வருகிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் உயரத்தில் உட்கார்ந்து கொண்டு கண் கலங்கும் காட்சியில் சூப்பர்ப்.
 lak film

நட்ராஜ் சுப்ரமணியமின் ஒளிப்பதிவு அருமையோ அருமை. கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். அதே போல் பிரீதமின் இசையில் வரும் பாடல்கள்.

படத்தின் மிக அழகான ஹைலைட் ரிஷிகபூரின் இளமை கால காதல் கதையை சினிமாவின் சுதந்திரத்தை பயன்படுத்தி சாயிபை கொண்டே அவரின் மேல் ஒரு ப்ளாஷ்பேக் டிராக்கையும், நிகழ்கால நிகழ்வையும் சுவைபட இணைத்து வைக்கும் திரைக்கதை அருமை. அதன் பிற்கு வசனங்கள் , இவ்வளவு இயல்பாய் வசனங்களை அமைக்க முடியுமா..? அவ்வளவு இயல்பு.  ”ஆம் ஆத்மி” க்கு மேங்கோ மனிதன்  போன்ற கிண்டல் தொனிக்கும் தற்கால இளைஞர்களின் மனப்போக்கை சொல்லும் வசனங்கள் இயக்குனர் இம்தியாஸ் அலியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. என்ன செகண்ட் ஹாப்பில் கொஞ்சம் எடிட்டிங் வேலையை செய்திருக்கலாம்.

LOVE AAJ KAL -   காதலிப்பவர்களுக்கும், காதலிக்க போகிறவர்களுக்கும்



போஸ்டர் சிறுகதையை படிக்க.. இங்கே அழுத்தவும்.

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Aug 1, 2009

சிந்தனை செய் - திரைவிமர்ச்னம்

 Sindhanai-Sei-034

சிந்தனை செய் படத்தின் விளம்பர டிசைன்களில் ஒரு கலக்கு கலக்கியிருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பை வீணடிக்கவில்லை என்றுதான் சொலல் வேண்டும்.

படத்தின் ஆரம்ப காட்சிகள் கொஞ்சம் முன்னுக்கு பின், பின்னுக்கு முன் என்று போய் வந்தாலும், சில நிமிடங்களில் செட்டிலாகிவிடுகிறார்கள். பரபரவென சுறுசுறுவென எரியும் மத்தாப்பூ போல போகிறது படம். இடைவேளை பாங்க் கொள்ளையின் போது நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். அதன் பிறகு இரண்டாவது பாதியில், யுவனின் துரோகம் இன்னும் உச்சபட்ட அட்லிரினை ஏற்றி விட .க்ளைமாக்ஸ்.Sindhanai-Sei-001

புதிய நடிகர் கம் இயக்குனர் யுவன் கொஞ்சம் முத்தின மூகமாய் இருக்கிறார். அவ்வப்போது நடிக்க முயற்சி செய்திருக்கிறார். அவரின் நண்பராய் வரும் பாலா, சிபி, ச்ஷான்ந், ஆகியோரின் நடிப்பு கச்சிதம். பாலாவும், யுவனும் அயிட்டம் வீட்டிற்கு போய் மேட்டர் முடித்துவிட்டு, செக் கொடுப்பது செம ரகளை. அதே போல பாரிலும், போலீஸ் ஸ்டேஷனிலும் மயில் சாமியின் டயலாக் டெலிவரியும், பாடி லேங்குவேஜும் அருமை. மீண்டும் ஒரு முறை தன்னை நிருபித்திருக்கிறார். 
Sindhanai-Sei-043

படத்திற்கு முக்கிய கதாநாயகர்கள் கேமரா மேனும், எடிட்டரும் தான், புகுந்து விளையாடியிருக்கிறார்கள். பேக் ரவுண்ட் கலர் காம்பினேஷன்கள், களத்திற்கு ஏற்றார் போல் டோன்களும், ஸ்டைலிஷான கட்டிங்கும் படத்தின் தரத்தை ஒரு படி மேலே ஏற்றுகிறது என்றே சொல்ல வேண்டும்,

தமனின் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே ரகம், ஆரம்பத்தி வரும் காதல் தண்டபாணி கேரக்டர் மொத்த படத்துக்கே தேவையில்லாத கேரக்டர்.  அதே போல கதாநாயகியின் காதல் ட்ராக் டப்பு டிப்பென பரப்பதால் பெரிதாய் ஏறாமல் போகிறது. கதாநாயகனை ஏன் ஆண்மையில்லாதவனை போல காட்ட வேண்டிய அவசியம் என்ன? அதே போல் அவன் மேல் பரிதாபம் ஏற்பட வேண்டும், அவன் ஒரு ஏமாளி என்று நினைக்க வேண்டும் என்பதற்காக மொக்கை சீன்களை வைத்திருப்பது வேகத்தை குறைப்பதாகவே உள்ளது.
 Sindhanai-Sei-045

ஹீரோவின் கேரக்டரில் கொஞ்சமும், திரைக்கதையில் கொஞ்சமும் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கும்.தமிழில் இது மாதிரியான கல்ட் படங்கள், திரில்லர் வகை படங்கள் அவ்வளவாக வந்ததில்லை.. அந்த வகையில் இது வித்யாசமான படமே.

சிந்தனை செய – பார்க்கலாம்

டிஸ்கி
my sassy girl, லவ் ட்ராக்குக்கும், ஹிந்தி jonny gaddarஐயும் ஒன்றாய் போட்டு கலக்கி, கதையின் பின்புலத்தை மாற்றி ஒரு புது கலரில் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் கலக்கலில் கொஞ்சம் கான்சண்ட்ரேட் செய்திருக்கலாம்.



போஸ்டர் சிறுகதையை படிக்க.. இங்கே அழுத்தவும்.

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..