Thottal Thodarum

Oct 31, 2010

உங்கள் பக்கம்

ஷவர் ஒரு சந்தோஷ சாத்தான்


குளியலறைக்குள் 

நுழைந்தபின்தான்
நியாபகம் வரும்
டவல் எடுக்க மறந்தது.


உனை அழைத்து கேட்க

வெட்கங்களுடனே எடுத்துக்கொடுத்து

மின்னலாய் வெளியேறுவாய்.


என் இதழ்கள் உன் பெயரை 

மெதுவாய் உச்சரிக்க,
தயங்கியபடியே உள்நுழைவாய். 



ஷவரின் நீர்துளி 

உன்மீது படாதவாறு
எச்சரிக்கையுடன் ஒதுங்கி நிற்பாய்.


உன்னை அருகில் 

இழுக்கும் வேலையை
கச்சிதமாக என் ஒரு கரம் செய்ய, 

மறு கை ஷவரின் திறப்பானுக்கு
கட்டளையிடத்தொடங்கும்





மேலிருந்து நீர்த்துளி
பூவாய் பொழியத்தொடங்க,
பூவையின்ஆடைகள்
மொட்டவிழ்க்கத் தொடங்கும்.


உன் ஆடைகள் முழுவதும்

நீரால் சூழப்பட
நீயோ என்னால் சூழப்படுவாய்.



முழுக்க நனைந்தபின் 

முக்காடு தேவையா என்று 

நான் சூசகமாய் கேட்க,
முறைத்தவாறே திரும்பி நிற்பாய். 


விடுதலை என்றால் 

எனக்கு மிகப்பிடிக்கும்.
அதை உன் அனுமதியின்றி
உன் ஆடைகளுக்கு கொடுப்பேன்.



உன்னை நோக்கி நான்
ஈர்க்கப்படுவதைப்போல நம்மை
நோக்கி நீர் ஈர்க்கப்படும்.


உலகிலேயே நம்

இருவருக்கு மட்டுமே
மழை பெய்யும் இடம்
நம் குளியலறைதான். 



ஆடை தொந்தரவுகளின்றி

இருவரும் இதமாய்
அணைத்தபடி இருக்க,



நம்மிருவரையும் இன்னும்

நெருக்கமாய் இருக்க
வழி செய்தபடி
நம்மீது வழிந்தோடுகிறது
ஷவர் என்னும்
சந்தோஷ சாத்தானின்
நீர் தேவதைகள்.

கவிதைகளின் காதலன் என்கிற பெயரில் எழுதும் மணிகண்டனின் காதல் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இவரின் நால் வரி காதல் கவிதைகள் ஷார்ட் அண்ட் ஸ்வீட்
 இவரின் கவிதைகளை மேலும் படிக்க..

Oct 30, 2010

Baava

baavareview1 பொம்மரில்லுக்கு பிறகு சித்தார்த்துக்கு பெரியதாய் ஏதும் தெலுங்கிலும் சரி, இந்தியிலும் சரி.. ஏதும் குதிரவில்லை. ஓயே என்று ஷாலினி தங்கை ஷாம்லியுடன் நடித்த படம் கொஞ்சம் ஓகே.  கொஞ்சம் கேப்பில் இந்தியிலும் சொல்லும் படியாக இல்லாமல் மிகவும் எதிர்பார்த்த படம் பாவா.

படத்தின் கதை ஒன்றும் புதியதில்லை. வழக்கமான சின்ன வயசு ப்ரெண்ட்ஷிப், இரண்டு கிராமம் பகை, கோயிலில்  ஆளுக்கு பாதி, சொந்த மாமாவையே தெரியாமல் காதலிப்பது, ஹீரோவின் அம்மா அந்த பணக்கார வீட்டு பெண், வீட்டிற்கு தெரியாமல் தாலி கட்டிக் கொண்டு அலையும் ஹீரோயின், சின்னத்தம்பி க்ளிஷேக்கள், என்று இந்திய சினிமாவில் எவ்வளவு டெம்ப்ளேட் விஷயங்கள் இருக்கிறதோ.. அவ்வளவு விஷயங்கள் படம் முழுக்க இருக்கிறது.
bava Wallpapers [THEMY3] சித்தார்த் என்னதான் தன்னுடய ப்ர்மாமென்சால் பரபரப்பாக போகும் திரைக்கதை என்று காட்ட நினைத்தாலும், நகரவே நகர மாட்டேன் என்கிறது திரைக்கதை என்கிற வஸ்து.  சமீப காலத்தில் இவ்வளவு மொக்கையான க்ளைமாக்ஸ பார்த்ததேயில்லை. சக்ரியின் இசையில் ரெண்டு பாட்டுகள் தேவலாம்

ராஜேந்திர ப்ரசாத் சித்தார்த்தின் அப்பாவாக வருகிறார். என்.டி.ஆரை இமிடேட் செய்கிறார். பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படியான கேரக்டர் இல்லை. அவரது மனைவியாக வருபவர் நிச்சயம் ஒரு ரவூண்ட் வருவார். சீதாவுக்கு போட்டி ரெடியாகிவிட்டது. சிந்து துலானி ராஜேந்திர பிரசாத்தின் ப்ளாஷ் பேக்கில் வருகிறார். கொஞ்சம் பூசினார் போல இருக்கிறார்.
Bava-Movie-wallpapers1 (3) சித்தார்த்துக்கு சூட் ஆகாத கிராமத்து இளைஞன்  கேரக்டர். செட்டாகவில்லை. கதாநாயகி பரனிதா.. சட்டென பார்த்தால் பழைய நக்மா போல இருக்கிறார். சரியான இடுப்பூ…. பெரிய கண்கள்.. கீழ்நோக்கி தொங்கும் உதடு.. ஓகே.. மற்றும் பாராட்டும்படியான ஒளிப்பதிவு நம்ம அரவிந்த் கிருஷ்ணா. படத்தில் இயக்குனர் இங்கேயெல்லாம் காமெடி பிச்சிட்டு போகும் என்று நினைத்த இடங்களில் எல்லாம் சொதப்பியது வேறு கதை.
Baava- Better to wait for tv premier
கேபிள் சங்கர்

Oct 29, 2010

எண்டர் கவிதைகள்-17

pic
தொடர் ஹாரன் சத்தம் கேட்கும்

டி நகர் பஸ்ஸ்டாண்ட் ரூம்

புணர்ந்து போட்ட பெண் போலிருந்தது

முட்டை தோசை

குஷ்பூ இட்லி

இட்லி போடும் குண்டு பெண்

பேக்கிரி உனக்கு

உங்கக்கா எனக்கு

அய்யோ.. ஆணாதிக்கவாதி ஆயிட்டேனோ?

உள்ளே போனது நெப்போலியன்

வெளியே வந்தான் அலெக்ஸ்ஸாண்டர்

பல்லில் சிக்கிய சிக்கன் துண்டு

வேறொருவனோடு ஓடிப் போன காதலி

போடாங்க.. அவ என்ன பெரிய பு...யா?

புலம்பியபடி படுக்கையில் விழுந்தேன்

அடுத்த நாள் காலை தயாராய் இருந்தது

சலவை செய்த முகமூடியோடு.
கேபிள் சங்கர்

Oct 28, 2010

ப்ளூ பாக்ஸ் ஸ்ரீதர்

Blue Box  - K.R. Sridharbluebox
கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,
அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.

செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி?என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.

அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.

அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டியபோது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.

ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரியஅளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர்இந்த ஜான் டூயர்.

அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப்,அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால்,ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப்பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.

எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம்தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர்உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கைஎரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம் அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக்கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள்மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும்என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம்பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர்.

ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.

இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும்400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bayநிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும்.

சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதேஎன்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

டிஸ்கி: இது எனக்கு மின்னஞ்சலில் வந்த விஷயம். இதை உங்களுடம் பகிரவே பதிவேற்றியிருக்கிறேன்.


கேபிள் சங்கர்

Oct 27, 2010

இசையெனும் “ராஜ’ வெள்ளம் - 6

இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படித்தான் கமல். இளையராஜாவின் பரம விசிறி. முக்கியமாய் கமல் படத்தில் வரும் ராஜாவின் பாடல்களுக்கு ஒருவிதமான முக்கியத்துவம் இருக்கவே செய்யும்.

கமலின் ஆரம்பகால படங்களிலிருந்து, ஹேராம் வரை இருவருக்குமான பிணைப்பு அவர்கள் இணைந்து உருவாக்கும் படைப்பில் தெரியும் அதில் முக்கியமானது கமலின் ராஜ பார்வை. கண் தெரியாத ஒரு இசைக் கலைஞனின் காதலை சொல்லும் படம். முழுக்க, முழுக்க இசையோடு பயணித்த படம். வழக்கமாகவே ராஜாவின் இசை கோர்வையில் வயலினும், புளூட்டும் பின்னி பெடலெடுக்கும். வயலின் கலைஞர் பற்றிய படம் பின்பு கேட்கவா வேண்டும்.

இப்படத்தில் முக்கியமாய் ஒரு ஆரம்பக் காட்சியில் பார்வையற்றோர் பள்ளியில் கமல் வயலின் வாசிப்பதை போல ஒரு காட்சி ஆரம்பிப்பதாய் ஞாபகம். அதில் ஒரு பெரிய பி.ஜிஎம். ஸ்கோர் செய்திருப்பார் இளையராஜா. அதே ஸ்கோரை படத்தின் பின்னணியிசையிலும் பயன்படுத்தியிருப்பார்.

படத்தில் வரும் முக்கிய பாடலையே பின்னணியிசை கோர்வையாய் பயன்படுத்துவதை தமிழில் அறிமுகப்படுத்தியவர் ராஜா தான் என்று ஞாபகம். ராஜபார்வையில் பாடல்களிலாகட்டும், பின்னணியிசையிலாகட்டும் ராஜா தன் முத்திரையை பதித்திருப்பார். அந்தி மழை பொழிகிறது, அழகே அழகு போன்ற பாடல்கள் இன்றளவிலும் கூட சூப்பர் ஹிட் பாடல்கள் தான்.

அந்த வயலின் பிட்
அழகே அழகு பாடல்

அந்தி மழை
மீண்டும் ராஜ வெள்ளத்தில் நீந்துவோம்..

கேபிள் சங்கர்

Oct 26, 2010

நிதர்சன கதைகள்-24- தனுகு கொண்டாலம்மா..

Lost_angel_02_by_protogeny
“உங்கள் கதையை படித்துவிட்டு என் மனைவி உங்களை பற்றி திட்டியதை சொன்னால் தூக்கு போட்டுக் கொண்டு விடுவீர்கள்.” என்ற ராஜாராமனின் முகத்தில் தெரிந்த தீவிரத்தை பார்த்து எனக்கு ஆச்சர்யமாகிவிட்டது.

ராஜாராமன் என் நண்பனுடய நண்பன். பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் மிகப் பெரிய பொறுப்பில் இருப்பவர். அவருடய கெஸ்ட் அவுஸில் தான் அன்றைய சாராய, சைட் டிஷ்ஷுகளுடனான இந்த பிரதான சந்திப்பு நிகழ்ந்தது. எடுத்து அடித்த முதல் ரவுண்டிலேயே இப்படி ஆரம்பித்தது எனக்கு பிடித்திருந்தது. சில சமயங்களில் போதையின் போது பாராட்டுதலை விட இம்மாதிரியான கிரிடிஸிசம் நிறைய போதை தரும். ஒரு மிடில் ஏஜ் மாது அவனை விட குறைந்த வயதுடையவனுடன் ஏற்பட்ட உறவிற்கு காதலா? காமமா? என்று குழம்பி, காமத்தில் முடிக்கலாமா? என்று முடித்த கதையை பற்றித்தான் திட்டிக் கொண்டிருந்தார்.

“ஒரு விஷயத்தை படித்தால் அதனால் பல நல்ல விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது நம் வாழ்க்கைக்கு வழி காட்ட வேண்டும். ஆனால் உங்கள் கதை என்ன செய்கிறது தெரியுமா? நாம் ஏன் அம்மாதிரி தவறை செய்யக்கூடாது என்று தூண்டுகிறது? இது சமுதாயத்தை கெடுக்காதா..?

”புத்தகம் படித்து ஒருவன் திருந்தி வாழ வேண்டுமென்றால் திருக்குறளை படித்தவன் எல்லாம் நல் வாழ்க்கைதான் வாழ்ந்திருக்க வேண்டும்.”

என்னை கூட்டிப் போன நண்பர் லேசான போதையில் இருந்ததால் கைதட்டி ஆர்ப்பரித்து “அதானே.. தலைவரா.. கொக்கா?’ என்று பெரிதாய் குரல் கொடுத்துவிட்டு இன்னொரு லார்ஜை ஊற்றிக் கொண்டார்.

நான் ராஜாராமனை கூர்ந்து பார்த்தேன். முகத்தில் நிஜமாகவே கோபம் தெரிந்தது. அவரது நாசிகள் இரண்டும் விடைத்து,  பெரிதாய் மூச்சு விட்டார்.

”நான் கதையில் அவள் அவனோடு படுத்தாள் என்று முடிக்கவேயில்லை. படிக்கிறவர்கள் முடிவிற்கு விட்டுவிட்டேன். அப்படியிருக்க அவள் அவனோடு படுத்துவிட்டாள் என்று முடிவெடுத்தது நான் அல்ல.. நீங்கள். இந்த சமூகம்..” என்றதும். ராஜாராமன் “ஸ்மார்ட்” என்று சிரித்தார்.

“இம்மாதிரியான உறவுகள் எல்லாருடய வாழ்க்கையிலும் வரத்தான் செய்யும். நான், என் குடும்பம், என் குழந்தைகள் என்று யோசிக்கும் போது மேலும் இம்மாதிரியான உறவுகள் ஏற்படுத்தப் போகும் சிக்கல்களை நினைத்து பல பேர் ஒதுங்கிவிடுவார்கள்.”

நான் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன். புகையை ஆழ இழுத்து அடைக்கப்பட்டிருந்த அந்த ஏஸி ரூமின் ஜன்னல் கதவினை திறந்து, அதன் வழியே புகையை வெளியிட்டேன். ராஜாராமனும் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டு என்னருகில் வந்தார்.

“என் வாழ்க்கையிலும் இம்மாதிரி ஒரு சிட்சூவேஷன் வந்தது. ஒரு வருஷம் இருக்கும். ஒரு பெரிய ப்ராஜெக்டுக்காக அந்த ஊருக்கு போயிருந்தேன். ஒரு தின்று கொழுத்த ரெட்டியின் சிமெண்ட் பேக்டரிக்கான ஆலோசனை. கிட்டத்தட்ட ஒரு மாதம் நான் அவன் வீட்டின் பின்னால் இருந்த ஒரு கெஸ்ட் அவுஸில் தங்கியிருந்தேன். அப்போதுதான் நான் அந்த தேவதையை பார்த்தேன்”

எனக்கு ராஜாராமனின் ரெட்டி பற்றிய தேவையில்லாத வர்ணனை பிடிக்கவில்லை. அவன் பணக்காரனாக இருப்பதால் தான் இப்படிச் சொல்கிறான் என்று தோன்றியது. இத்தனை பில்டப்பிற்கு பின் ஏதோ ஒரு துரோக கதையிருக்கிறது என்று என்னுள் ஓடும் பல்லி சொல்லியது.

”சொன்னேன் பார்த்தீர்களா ராஜாராமன்? ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இம்மாதிரியான சம்பவங்கள் வந்திருக்கத்தான் செய்யும். என்ன... தப்பு செய்ய சான்ஸ் இல்லாதவன் நல்லவனாக உலா வருவான் அவ்வளவுதான்.”

ராஜாராமனுக்கு கோபம் வந்தேவிட்டது. “ நோ.. இதை நான் ஒரு காலும் ஒத்துக் கொள்ளவே மாட்டேன். நானெல்லாம் நல்லொழுக்கத்தை தவிர எதையும் பின்பற்றியதில்லை எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து” என்று சொல்லியபடி கடைசி பஃபை இழுத்து ஊதிவிட்டு அணைக்க, நான் பார்ப்பதை பார்த்தபடி.. “இது... இந்த சாராயத்தையும் தவிர” என்றான்.

“சரி அதை விடுங்கள்.. கதையை சொல்லுங்கள்” என்று ஆரம்பித்தேன். ராஜாராமனும் ஆர்வத்துடன் ஆரம்பித்தான்.

“அந்த ரெட்டி வீட்டிலிருந்து தினமும் சைட்டுக்கு கிளம்பி போனால் சாயங்காலம் தான் திரும்புவேன். என்னை கவனித்து கொள்ள அனுப்பப்பட்டவனின் மனைவிதான் அவள். என் வாழ்நாளில் இதுவரை எந்த பெண்ணை பார்த்தாலும் அவளை மனதால் கூட அடைய நினைக்காத எனக்கு, அன்று அவளை பார்த்த மாத்திரத்திலேயே அடைய ஆசைப்பட்டது. அவ்வளவு அழகு. பார்த்தவுடன் அப்படியே அள்ளிக் கொள்ளலாம் என்று கை பரபரக்கும். அவளின் அமைதியான சோகம் ததும்பிய கண்களில் முத்தமிட வேண்டுமென்று தோன்றும், அளவான இடுப்பை இழுத்து வளைத்து என் மடிமீது உட்கார வைக்க மாட்டோமா என்று தோன்றும். அந்த செப்பு போன்ற மார்பகங்களை ஆள மாட்டோமா என்றளையும் மனதையும், உடலையும் தடுத்து நிறுத்த நான் பட்ட கஷ்டம் இதுவரை என் வாழ்வில் கண்டதில்லை”

அவளை பற்றி சொல்லும் போது ராஜாராமனின் கண்களில் ஒருவிதமான ஒளி தெரிந்தது. என்னால் அவளுக்கு ஒரு உருவம் கொடுக்க முடிந்தது.

“ஒவ்வொரு முறையும் அவளுக்கும் எனக்கும் ஏதாவது நடந்துவிடுமோ என்ற பயம் எனக்கும் அவளுக்கும் இருந்து கொண்டேயிருந்தது. கொஞ்சம் முயன்றால் நிச்சயம் முடித்துவிடலாம். ஆனால் அவளை தேவதையாய் பூஜிக்கும் அவன் கணவனின் நிலையையையும், என் மனைவியையும் மனதில் நினைத்த போது என்னால் துரோகம் செய்ய முடியவில்லை. நான் கிளம்பும் கடைசி நாள் வரை அவளுக்கும் எனக்குமிடையே எந்தவிதமான ஒரு உடல் ரீதீயான தொடர்பு ஏதுமின்றி என் கார்டை மட்டும் கொடுத்து விட்டு கிளம்பிவிட்டேன்.”

எனக்கு பொசுக்கென ஆகிவிட்டது. “இதற்குத்தான் இவ்வளவா?”. ஒரு வேளை ராஜாராமன் தன்னை நல்லவன் என்று காட்டிக் கொள்வதற்காக பில்டப் செய்கிறாரோ? என்று கூட தோன்றியது. 

”இல்லை பொறுங்கள். பொறுங்கள்.. இதற்கு பிறகுதான் கதையே.. அவளிடமிருந்து போன மாதம் போன் வந்தது. முதலில் சாதாரணமாய் பேச ஆரம்பித்தவள் கொஞ்சம் கொஞ்சமாய் செடக்டிவ்வாக பேச ஆரம்பித்தாள். தன் கணவன் மிக நல்லவன் ஆனால் தன் உணர்வுகளை புரிந்து கொள்ளாதவன். தன்னை தேவதையாக பூஜிக்கிறானே தவிர ஆண்டு ஆள மாட்டேன் என்கிறான். என்னால் முடியவில்லை என்றாள். அதன்பிறகு அவளுக்கு எனக்குமான போன் தொடர்பு அதிகமானது. ஒரு நாளில் சில மணி நேரங்கள் வரை.”

”என்னால் அவளை பேச வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. அவளை இக்னோர் செய்ய முடியவில்லை. அவளின் குரலில் தெரியும் தாபத்தையும், விரகத்தையும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போலிருந்தது. நான் ஒரு விதமான போன் செக்ஸ் வக்கிரம் பிடித்தவனோ என்று கூட தோன்றியது. என்னை அவளுக்கு ரொம்ப பிடித்து போனதாக சொன்னாள். அதனால் தான் இவ்வளவு பேசுகிறேன். எனக்கு தெரியும் உங்களுக்கும் என் மேல் அன்பு உண்டென்று. உங்களை தவிர என்னால் இவ்வளவு வெளிப்படையாய் யாரிடமும் என்னால் கேட்க முடியுமா என்று தெரியவில்லை என்றாள்.”

ராஜாராமனின் கண்கள் பளபளவென இருந்தது. நிச்சயம் அதில் காமம் இல்லை என்று சொன்னால் நம்ப மாட்டேன். வேறேதும் கேள்வி கேட்டால் அது ஃப்ளோவை குறைக்குமோ என்றெண்ணி ராஜாராமனையே பார்த்தேன்.

“நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று எனக்கு தெரியும். இவ்வளவுக்கும் பிறகு எந்த கேணயனாவது போனில் பேசிக் கொண்டிருப்பானா என்று தானே?”

நான் அதற்கு ஏதும் ரியாக்‌ஷன் செய்யாமல் இருந்தேன்.

“நான் போனில் தான் பேசினேன். எனக்கும் அவள் மேல் ஆசையிருந்தாலும் என் மனதை சமாதானப்படுத்திக் கொண்டு, இதோ பார் ஏன் இதை பற்றி நீ உன் கணவனிடம் பேசக்கூடாது? மூன்றாவது மனிதனான என்னிடம் இவ்வளவு வெட்கம் விட்டு உன்னை தர விழையும் போது ஏன் உன் உணர்வுகளை உன் உடல், மன தேவைகளை பற்றி அவனுக்கு புரிய வைக்கக்கூடாது?. யோசித்து பார். ஒரு வேளை நான் அங்கு வந்து நமக்குள் ஏதாவது நடந்தாலும் அது பின்னாளில் நம் இருவர் மனதிலும் குற்ற உணர்ச்சியாகத்தான் அலைந்து கொண்டிருக்கும். நிச்சயம் உன்னை தேவதையாய் தாங்கும் உன் கணவன் உன்னை புரிந்து கொள்வான். இதன் பிறகு நீ எனக்கு போன் செய்யக்கூட நேரமிருக்காதுன்னு சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன். அதன் பிறகு அவளிடமிருந்து எந்தவிதமான தகவல்களும் இல்லை. என்னால் ஒரு பெண்ணின் மனம் சஞ்சலம் அடைந்தாலும் அவளை நேர்வழி படுத்தியதை நினைத்து என்ன நானே மெச்சிக் கொண்டிருக்கிறேன். இப்போது சொல்லுங்கள் நான் உங்களுக்கு ஒரு உதாரண புருஷனாக தெரியவில்லை?”

அவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.

“ராஜாராமன் நீங்கள் சொன்ன அந்த பெண்ணின் ஊர் தனுக்கா?”

“ஆமாம்”

“கோதாவரி மாவட்டம். ரங்கராஜ ரெட்டியின் சிமெண்ட் பேக்டரிக்குதான் நீங்கள் வேலைக்கு போனீர்களா?”

“ஆமாம்.. ஏன்?”

“அவள் பெயர் கொண்டாலம்மாவா..?”

“அட.. உங்களுக்கெப்படி தெரியும்?”

“அந்த பெண் போன வாரம் அவளின் கணவனால் உயிரோடு கொளூத்தப்பட்டாள். என்ன காரணம் தெரியுமா? தன் உடல் சார்ந்த ஆசைகளை பூர்த்தி செய்யச் சொல்லி அவள் கேட்டதால் அவளின் மேல் சந்தேகப்பட்டு, அவளை உயிரோடு கொளுத்தியிருக்கிறான் அவள் கணவன்.” என்று நேற்றைய பத்திரிக்கையை எடுத்து ராஜாராமன் முன் போட்டேன்.

ஒரு சின்ன கட்டத்தில் கருகிப் போன ஒரு பெண்ணின் உடலை படமெடுத்து போட்டிருந்தார்கள். பக்கத்தில் அவளுடய பழைய திருமண படத்தையும் போட்டிருந்தார்கள். நிஜமாகவே தனுகு கொண்டாலம்மா.. ஒரு தேவதைதான்.. ராஜாராமன் கண்களில் கண்ணீருடன்..

“நான் அவளுக்கு அந்த அட்வைஸ் செஞ்சிருக்க கூடாதோ  சார்..?” என்றார்.

கேபிள் சங்கர்

Oct 25, 2010

கொத்து பரோட்டா-25/10/10

மீண்டும் பதிவுலகம் தனி மனித தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துவிட்டது. இனி ஆளாளுக்கு ஆதரித்தும், எதிர்த்தும், நடுநிலை கொண்டும் பதிவு போடுவார்கள். எங்கு பார்த்தாலும் அதை பற்றி பேசி, எழுதி, டீக்கடை சந்திப்புகளில், எங்காவது குழுமினால் அதை பற்றி  பேசி மாய்ந்து போவார்கள்.  பின்பு வேறொரு நபர், வேறொடு தனி நபர் தாக்குதல் என்று போய்க் கொண்டேயிருக்கும். அட விடுங்கப்பா.. லூசுல..
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வெள்ளியன்று இரவு பரிசல்காரனை சந்திக்க பிரசாத் ஸ்டூடியோவுக்கு ஷூட்டிங் முடித்து போயிருந்தேன். நீயா நானா? படப்பிடிப்புக்காக மனிதர் வந்திருந்தார். வழக்கமான ப்ளா..ப்ளா..வாக நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. நானும் நண்பர் கே.ஆர்.பியும் இன்னொரு பக்க செட்டில் ஒரு வினையில் ஷீட் விரித்து படுத்து கொண்டிருந்தோம். அப்போது அங்கே ஒருவருக்கு டிவி பரிசளிக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் அஹா..ஓஹே என்று சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தார் டிவி வென்றமைக்கு. பாவம் அவருக்கு தெரியாது அந்த பரிசு அறிவிப்புக்கான அட்டையில் உள்ள் டிவி கூட கிடைக்காது என்று. நல்ல வேளை பரிசலுக்கு டிவி கிடைக்கலை.. வெள்ளியன்று ஷூட் செய்ததை ஞாயிறே ஒளிபரப்பிவிட்டார்கள்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
செவிக்கினிமை
மீபத்தில் கேட்டவுடன் திரும்ப திரும்ப கேட்க வைத்த பாட்டு மைனாவில் வரும் “ஜிங் சிக்கா” பாடல் தான். புதிதாய் ஏதுமில்லாவிட்டாலும், கிராமிய வாசனையுடன் வரும் சாய் மற்றும் கல்பனாவின் குரலும், பாடலின் ஊடே வரிகளில் கசியும் லேசான கிறக்கமான காமமும் , தூள் கிளப்புகிறது. 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
Raktha Charithra ராம்கோபால் வர்மாவின் படம் நேற்று இந்தி மற்றும் தெலுங்கில் வெளியாகியிருக்கிறது. இது முதல் பாகமாகும். இதன் இரண்டாவது பாகத்தில்தான் சூர்யா வருகிறார். இரண்டாவது பாகம் அடுத்த் மாதம் நவம்பர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. பரிதாலா ரவி என்கிற ஒரு அரசியல்வாதியின் கதைதான். இக்கதையில் முன்னாள் முதல்வரும், நடிகரும், தெலுங்கு தேச கட்சியின் நிறுவனருமான என்.டி.ஆர்ரை அவமதித்துவிட்டார்கள் என்று ஒரே களேபரமாம் தெலுங்கு தேசக் கட்சிக்காரர்கள். படத்தின் மிகப்பெரிய ப்ள்ஸ் மற்றும் மைனஸ் வயலென்ஸ் தானாம். இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடவில்லை.
##################################################################
விஜய் டிவியில் சூப்பர் சிங்கருக்கு வந்து பார்டிசிபேட் செய்ய ஆர்வத்துடன் வந்து பாடியவர்களின் திறமையை நகைச்சுவையாக கோர்த்து ஏர்டெல் சூப்பர் சிங்கர் ப்ளூப்பர் என்ற டைட்டிலில் வழங்குகிறார்கள். வந்தவர்கள் எல்லோரும் தங்களூக்குள் ஏதோ இருக்கிறது என்ற நினைப்பில் தான் வந்து கலந்து கொண்டிருப்பார்கள். அதை வெளிக் கொணர முடியாமல் செலக்ட் ஆகாமல் போயிருக்கலாம் ஆனால் அவர்கள் பாடியதை, அவர்கள் நடந்துக் கொண்டதை ஒரு நிகழ்ச்சியாக தொகுத்து வழங்குவது கொஞ்சம் ஓவரோ என்று தோன்றியது. ஆனால் நிச்சயம் அந்த வீடியோவை பார்க்கும்போது சிரிக்காமல் இருக்க முடியாது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார குறும்படம்
மிட்டாய் வீடு பாலாஜியின் படம் தான். ஜூனியர்ஸ்.. கொஞ்சம் சினிமாட்டிக்கான கதை தான். ஆனால் அதை இண்ட்ரஸ்டிங்கான திரைக்கதையாக்கியிருக்கிறார் பாலாஜி. இவ்வளவு கொஞ்சம் நேரத்திலும் ஒரு சின்ன ஹூயூமரை தூவியிருப்பது அழகு. எடிட்டிங்கும், கேமரா கோணங்களும் ப்ரொபஷனல்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார விளம்பரம்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார கார்ப்பரேட் தத்துவம்
உன்னால் ஒரு விஷயத்தில் முதல் அட்டெம்ப்டில் வெற்றி பெற முடியாவிட்டால் அதை வெர்ஷன்1.0 என்று சொல்லிவிடு. 
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார ப்ளாஷ்பேக்
ஒரு காலத்தில் தமிழ் நாட்டையே கலக்கிய இந்தி பாடல். இருபது வருடங்களுக்கு மேலாக நம்மை இன்னும் கட்டிப் போடும் ஷைலேந்தர்சிங்கின் காந்த குரல். இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் சொல்லப்பட்ட டிம்பிளை மீறி எல்லோரு லயித்த ஒரு விஷயம்.. இப்பாடல்

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நண்பேண்டா
இண்டர்வியூ போய் வந்தததும்
அப்பா: என்னடா இண்டர்வியூ முடிஞ்சிச்சா..? நல்லா செஞ்சியா?
அம்மா: எவ்வளவு சம்பளம்டா.. வரும் ?
நண்பன்: மச்சான்.. எத்தனை பிகர்டா வந்திருந்தாங்க..
###################################################################
அடல்ட் கார்னர்
ப்ரொபசர் ஜானியை பார்த்து “ஐந்து காக்கைகள் உட்கார்ந்திருக்கும் போது அதில் ஒரு காக்காயை சுட்டுவிட்டால் மீதம் எவ்வளவு இருக்கும்?’ என்று கேட்க.. ஜானி “எல்லா காக்கையும் பறந்துவிடும்” என்றான். அதற்கு ப்ரொபசர்” இல்லை நான்கு காக்கைகள். இருந்தாலும் உன் பதில் எனக்கு பிடித்திருந்தது” என்றாள்.
இப்போது ஜானி “ஒரு ஐஸ்க்கீரிம் ஷாப்பில் மூன்று பெண்கள் ஆளுக்கொரு ஐஸ்கீரிம் வைத்துக் கொண்டு ஒருத்தி நக்கிக் கொண்டும், இன்னொருத்தி கடித்துக் கொண்டும், இன்னொருத்தி முழு கோனையும் வாய்க்குள் விட்டு சப்பிக் கொண்டும் இருக்கிறார்கள் இவர்களில் யார் திருமணமானவள்? என்று கேட்டான். ப்ரொபசர்.. கொஞ்சம் சுதாரிபோடு.. அசடு வழிந்தபடி “கோனை முழுதாக சப்பிக் கொண்டிருப்பவள்” என்றாள். அதற்கு ஜான்.”இல்லை. யார் கையில் வெட்டிங் ரிங் இருக்கிறதோ அவள் தான் திருமணமானவள். இருந்தாலும் உங்கள் பதில் எனக்கு பிடித்திருக்கிறது என்றான்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

கேபிள் சங்கர்

Oct 24, 2010

உங்கள் பக்கம்

thirumanam

நமக்குத் திருமணமாகும்...ஒவ்வொருநாளும் நம் திருமணநாளாய்...ஒவ்வொரு இரவும் நம் முத........,,,நாம் சந்தோஷமாக வாழ்வோம்!

ஆசை ஆசையாய் அருகினில் வருவாய்...நான் நெருங்க நெருங்க...வெட்கமாய் விலகிப்போவாய்...
வீம்பாய் நான் திரும்பிப்படுக்க...
வந்தமர்வாய் வெகுஅருகில்!
விடியும் வரையிலும் தொடர்ந்திடும் விளையாட்டு...
விடியும் முன் விழிகள் தழுவும் உறக்கம்...
ஒவ்வொரு விடியலும் புதிய விடியலாய்!
நீ எழுப்ப வேண்டும் என்பதற்க்காய்...
அலாரம் வைக்க அவசியமற்றெழும்...
என் வழக்கம் தாமதிக்கும்!


முழுதும் விடிந்தப் பின் எழுப்ப வருவாய்...
உனைபற்றி எதுவுமே தெரியாதே எனக்கு...
எனைப்பற்றியும் எதுவுமே தெரியாதே உனக்கு...
எப்படி எழுப்பப் போகிறாய் எனை!
நேற்றுதான் உறவானோம்...
இன்றெப்படி அறிவாய்...
என் உறக்கம் கலைக்கும் உபாயத்தை!
ஆசை ஆசையான அன்பு முத்தத்தினாலா...
இல்லை ஆவி பறக்கும் அருமையான தேநீரோடா...
என்று ஏதேதோக் கற்பனையில் கண்மூடிக் கிடந்தேன்!


எங்கே இன்னமும் காணவில்லை...
அருகே நீ வந்த அரவம் கேட்டதே...
நேற்றைய ஊடலில் கிழிந்துபோன...
போர்வை ஓட்டை வழியே விழித்துப்பார்த்தேன்
திருட்டுத்தனமாய்!


இடுப்பில் கைவைத்துக் கொஞ்சும் கோபத்தோடு
எதிரே நீ நின்றிருந்தாய்...
என் தூக்க நாடகத்தை தொடர்ந்தேன்!
ஓரிரு மணித்துளிகள் ஓடியிருக்கும்...
இன்னமும் எனை எழுப்பவில்லை நீ!
ஏது செய்கிறாய் என அறிந்துகொள்ள
ஆவலாய் விழித்த என் விழிகளுக்கு
வெகுஅருகில் ()ன் காதல் முகம்
எனது போர்வைக்குள்ளேயே...
உன் உதட்டு எச்சிலால்
என் விழிஉறக்கம் கலைத்தாய்...
ஆமடி நான் உன்னை காதலிக்கிறேன்...
இப்படி ஓர் இன்ப அதிர்ச்சியை
நான் எதிர்ப்பார்க்கவே இல்லை
என்பதால்...


மீண்டும் மீண்டும்
நமக்குத் திருமணமாகும்...
ஒவ்வொரு நாளும் நம் திருமணநாளாய்...
ஒவ்வொரு இரவும் நம் முதலிரவாய்...
ஒவ்வொரு விடியலும் புதிய விடியலாய்...
நாமிருவரும் சந்தோஷமாக வாழ்வோம்...
-
என்றும் என்றென்றும்!


டிஸ்கி: உங்கள் பக்கம் பகுதியில் உங்கள் கதை, கட்டுரைகள், கவிதைகள் வெளிவர என்னுடய மின்னஞ்சலுக்கு உங்கள் படைப்புகளை அனுப்புங்கள்.  தெரிந்தெடுத்து வெளீயிடப்படும்.. நன்றி..

Oct 23, 2010

சாப்பாட்டுக்கடை

சாப்பாட்டுக்கடை எழுதி ரொம்ப நாளாச்சுன்னு நிறைய பேர் கேட்டுக்கிட்டேயிருந்தாங்க.. கடந்த மூணு மாச காலமா ஷூட்டிங் சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருப்பதால் வெளியில் சாப்பிடுவதற்கான வாய்ப்பேயில்லாமல் போய்விட்டது. ஷூட்டிங் சாப்பாடு வெளியிலிருந்து பார்பவர்களுக்கு கன ஜோராய் பெரிய ஆச்சர்யமாய் இருக்கும் தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டால். நாம் சாப்பிடும் அளவு குறைந்து ஒரு மந்த நிலையை உருவாக்கிவிடும். சரி அதை விடுங்கள் அதை பற்றி ஒரு தனி பதிவே எழுதலாம் அவ்வளவு விஷயம் இருக்கிறது.
br br1
br3 br4
சென்னையில் நார்த் உஸ்மான்ரோடில் ஜீதமிழ் டிவிக்கு எதிரே உள்ள சோமசுந்தரம் பார்க் அருகில் பார்பக்யூ நேஷன் என்ற ஒரு உணவகம் உள்ளது. பெயர் மட்டுமல்ல உள்ளே அவர்களது சர்வீஸும் வித்யாசமாய் இருந்த்து. நமது டேபிளின் நடுவே ஒரு பெரிய ஓட்டை இருக்கும் நீங்கள் உட்கார்ந்தவுடன் அதில் ஒரு கரி அடுப்பு க்ரில்லோடு நமது டேபிளின் நடுவே உட்கார, அதில் இரும்பு கம்பியில் சொருகப்பட்ட, சிக்கன், மட்டன், மற்றும் வெஜ் அயிட்டஙக்ள் எல்லாவற்றையும் , குமுட்டி அடுப்பின் மேல் தனலில் வைக்க, அதன் மேல் ஊற்றுவதற்காகான சாஸேஜுகள் எல்லாம் நாமே அதன் மேல் தடவி மேலும் அதற்கு சுவைகூட்ட, ஒரு பதத்தில் எடுத்து வாயில் வைத்தால், ம் ஹா…. அருமை. இது வெறும் ஸ்டார்டர்கள் மட்டுமே.. இதை முழுசாய் சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும்.

இது தவிர புல் பஃபே வேறு. சகல விதமான அயிட்டங்களோடு. இத்துடன் வெல்கம் ட்ரிங்காய் குட்டி பீர் முதல் எல்லாவிதமான் ட்ரிங்களும் தரப்படுகிறது. ஒரு முறை. வார நாட்களில் பகலில் லஞ்சுக்கு இரண்டு பேகேஜுகளில் உணவு கிடைக்கிறது, 300 ரூபாய்க்கு ஒரு பேக்கேஜும், 450 ரூபாய்க்கு ஒரு பேக்கேஜும். சார்ஜ் செய்கிறார்கள். ஆனால் இரவு உணவிலும், வார இறுதி நாட்களிலும் எந்த விதமான் பேக்கேஜ்கள் கிடையாது. 575 ஆகும். நிச்சயம் அவர்களின் பர்பக்க்யூ சுவை உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இவர்கள் கெஸ்ட் டேபிளில் ஒரு சின்ன கொடி ஒன்றை வைத்திருக்கிறார்கள். அந்த கொடியை ஏற்றி வைத்திருந்தால் அவர்கள் நீங்கள் கேட்காமலேயே ஸ்டார்டர்களை சர்வ் செய்து கொண்டிருப்பார்கள். எப்போது நீங்கள் அந்த கொடியை மடக்கி வைக்கிறீர்களோ.. அப்போது உங்களுக்கான ஸ்டாட்ட்ர்கள் சர்வீஸ் முடிந்துவிடும்.
  • Shri Devi Park Hotel, Near Soma Sunder Ground, 1, Hanumantha Street, T.Nagar, Chennai
  • Landmark: Behind Prashant Real Gold Tower
  • Phone: 42694481, 42694482

கேபிள் சங்கர்

Oct 21, 2010

எண்டர் கவிதைகள்-16

Chasing_Through_The_Woods_by_Tapdanza தூங்குமூஞ்சி மரங்கள்

தூரத்தில் தெரியும் ட்யூப்லைட்

எழுத்து தெரியாத சிவப்பு போர்டு

எகிறிக் குதித்த காம்பவுண்டுகள்

சிதறிக் கிடக்கும் ப்ளாஸ்டிக் க்ளாசுகள்

உள்ளங்கால் முதல் உச்சி வரை ஏறும் முட்கள்

ஆங்காங்கே வழுக்கும் ரப்பர் குப்பைகள்

சந்து அறைகளின் வழியே கசியும்

குண்டு பல்பு வெளிச்சம்

"டைமாச்சு சார் சீக்கிரம்"குரல்கள்

காலி டேபிள்களில் ஆல்கஹால் வீச்சம்

சிந்துகிறது மீதித் திரவம்

கையறு நிலையில் நான்...

கேபிள் சங்கர்

Oct 20, 2010

Brindavanam

brindavanamreview முதல் தேதியில் தெலுங்கு எந்திரன். அடுத்த வாரம் மஹேஷ்பாபுவின் கலேஜா, இந்த வாரம் ஜூனியர் என்.டி.ஆரின் பிருந்தாவனம். என்று தெலுங்கு சினிமா பரபரப்பாய் தான் இருக்கிறது. அநேகமாய் அடுத்த வாரமோ, அதற்கு அடுத்த வாரமோ நாகார்ஜுன் வருகிறார் என்று நினைக்கிறேன். இப்படி கோலாகலாமாய் இருக்கிறது தெலுங்கு படவுலகம்.
brindavanam1 அதே போன்ற ஒரு கோலாகலமான, கொண்டாட்டமான படம் தான் பிருந்தாவனம். கிருஷ்ணா என்கிற கிருஷ் ஒரு பில்லியனர் முகேஷின் ஒரே செல்ல மகன். கிருஷ்ஷுக்கு ஒரு பழக்கம் என்னவென்றால் காதலர்களை எப்பாடு பட்டாவது சேர்த்து வைப்பது. கிருஷ்ஷுக்கு ஏற்கனவே சமந்தாவுடனான காதல் இருக்க, சமந்தா தன் சிநேகிதியான பூமிக்கு அவளுடய அப்பா பிரகாஷ் ராஜ் அவளுக்கு பிடிக்காத மாமா மகனை திருமணம் செய்து வைக்க ப்ளான் செய்வதால் தனக்கு ஹைதராபாத்தில் ஒரு பாய் ப்ரெண்ட் இருப்பதாக பொய் சொல்லிவிட்டாள். ஆனால் இப்போது அவளுடய அப்பா பூமியின் பாய்ப்ரெண்டை கூட்டி வர சொல்லி விட்டார். அதனால் கொஞ்ச நாள் நீ அங்கு போய் அவளுடய பாய் ப்ரெண்டாக நடிக்க வேண்டும் என்று சொல்லி பூமியுடம் அனுப்புகிறாள். ஒரு கட்டட்தில் பூமி, கிருஷ்ஷை காதலிக்க ஆரம்பித்துவிடுகிறாள். பூமியின் வீட்டிலும் கிருஷ்ஷை பீடித்துப் போகிறது. இப்போது சமந்தா உள் நுழைகிறாள். இது தான் பிருந்தாவனத்தின் கதை.. மிகுதியை வெள்ளி திரையில் பார்த்துக் கொள்க…
brindavanam-movie-download க்யானு ரீவ்ஸ் நடித்த “Walking on the Clouds”  படத்திலிருந்து, பழைய சிரஞ்சீவி, என்.டி.ஆர். நாகேஸ்வரராவ், லேட்டஸ்ட் பொம்மரில்லு வரை எல்லா படஙக்ளில் வந்த காட்சிகளே வந்தாலும். ஜூனியர் என்.டி.ஆரின் புதிய கோலம் புதிசாய் தெரிகிறது. இதை தவிர லட்டு மாதிரி இரண்டு பொண்ணுங்க.. சமந்தா, காஜல் அகர்வால். இவங்க இருக்கும் போது எவனுக்குத்தான் படத்தை விட்டு வெளிய வரத்தோணும். ம்ஹும். ஆனால் இவையெல்லாம் ஞாபகப்படுத்தினால் கூட சும்மா விறுவிறுவென போகிறது.
ஜீனியர் என்.டி.ஆருக்கு வழக்கமான கோபக்கார இளைஞனிடமிருந்து கொஞ்சம் சாப்ட் ரொமாண்டிக் பாத்திரம். முகத்தை பாவமாய் வைத்துக் கொள்வதிலிருந்து அவருடய கோபக்கார முகம் மறைந்தாலும். சண்டைக்காட்சிகளில் அவரிடம் தெரியும் வேகம அட்டகாசம். அதே போல மனுஷன் காமெடியில் நல்ல ரியாக்‌ஷன் கொடுக்கிறார். இவருடம் வேணுவும், ப்ரம்மானந்தமும் செய்யும் அட்டகாசம் அதகளம்.
bridndavanam2 சமந்தாவுக்கு பெரியதாய் நடிக்க வாய்ப்பில்லாவிட்டாலும் க்யூட் அண்ட் ஸ்வீட். வழக்கம் போல காஜல் அகர்வால் மனதை கொள்ளை கொள்கிறார். ப்ரகாஷ்ராஜுக்கு இதெல்லாம் அவல் பொறி கேரக்டர் ஊதித் தள்ளூகிறார். சாய், கோட்டா சீனிவாசராவ், மற்றும் இதர பல டெம்ப்ளேட் குடும்ப பட நடிகர்கள் படம் பூராவும் ஆங்காங்கே தேவைப்படுமளவுக்கு நடித்து போகிறார்கள்.
 brindavanam சோட்டா கே.நாயுடுவின் ஒளிப்பதிவு தரம். அதே போல எஸ்.தமனின் இசையில் இரண்டு பாடல்க்ள் கேட்கும் ரகமென்றால். மற்ற ரெண்டு செம குத்து.  மார்தாண்ட் வெங்கடேஷின் எடிட்டிங் க்ரிஸ்ப். அதிலும் அந்த சமந்தா, காஜல், என்.டி.ஆர் பாடல். அய்யோ.அய்யோ.. என்னத்தை சொல்ல..  முதல் பாதியை விட ரெண்டாவது பாதி சுவாரஸ்யம். படத்தின் க்ளைமாக்ஸில் இரண்டு பேரில் ஒருவரை தவிக்க விட்டு வேறு யாரை கல்யாணம் செய்திருதாலும் நான் கண் கலங்கியிருப்பேன். ஸோ.. ஸ்வீட்.. க்யூட்டீஸ்..

பிருந்தாவனம் – ஒரு ஃபேமிலி மசாலா கொண்டாட்டம்.

கேபிள் சங்கர்

Oct 19, 2010

தொட்டுப்பார்

thottupaar ரேஷன் கார்டை வைத்து ஜாமீன் கொடுப்பதையே வாழ்க்கையாய் கொண்டிருக்கும் மகாராஜா (எ) மகா.  ஒரு நாள் மகா ஒருவனுக்கு ஜாமீன் கொடுக்க, அதனால் அவன் வாழ்க்கையே தலைகிழாக மாறிப் போகிறது. இது தான் தொட்டுப்பார்

வித்யார்த்தும், லக்‌ஷனாவும் அறிமுகங்கள். வித்யார்த் கூத்துப்பட்டறை தயாரிப்பாம். அனுஹாசனின் சாவுக் காட்சியில் நல்ல நடிப்பு தெரிகிறது. சண்டைக்காட்சிகளிலும், நடனங்களிலும் இன்னும் பயிற்சி தேவை. இவருக்கும் எஸ்.ஐ. ஹனீபாவுக்குமான உறவு இண்ட்ரஸ்டிங்கான ஒரு கெமிஸ்ட்ரி. அனுஹாசனும், அழகம் பெருமாள் கேரக்டர்கள் ஒரு குழப்ப லிங். கதாநாயகி லக்‌ஷணாவைவிட லட்சணமாய் நிறைய பெண்கள் படத்தில் வளைய வருகிறார்கள். நடிப்பதற்கோ, இல்லை சொல்லிக் கொள்கிறார் போல ஏதுமில்லாத ஒரு கேரக்டர்.
thottupaar1
வித்யார்த்தின் டாஸ்மாக் சப்ளையர் நண்பனாக நண்டு ஜெகன். பல இடங்களில் ஓவர்லாப்பில் டயலாக்குள் அபாரம். வில்லனாக ரமணா.. அதிரடியான கமிஷனர் குழந்தைகளையே கடத்தி மிரட்டும் அளவுக்கான ஒரு டெரர் கேரக்டர் என்று காட்டுகிறார்கள். ஆனால் ஒரு லோக்கல் வில்லன் போல ஆவூனென்றால் ஏன் எதற்கு என்று தெரியாமல் ஆட்களை அடித்தும், ஆசனவாயில் குச்சியை குத்தியும் கொல்கிறார். டெரர் வில்லனாமாம். இதில் சம்மந்தமேயில்லாமல் அரவாணி விஷயம் வேறு. 
ramana
கொஞ்சமே கொஞ்சம் சூடேறும் போது, கெடுப்பதற்காகவே தொடர்ந்து வரும் ஸ்ரீகாந்த தேவாவின் பாட்டுக்கள் இம்சை. நிரவ்ஷாவின் உதவியாளர் சசியின் ஒளிப்பதிவு பற்றி ஏதும் பெரிதாய் சொல்ல முடியவில்லை.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பது நந்து. ஒன்லைனாக கதையை கேட்டால் அட நல்லாத்தானிருக்கும் போலருக்கே என்று நிமிர்ந்து உட்கார வைக்கும் லைன் தான்  ஆனால் அதை திரைக்கதையாய் மாற்றும் போது சறுக்கியிருக்கிறார். அடுத்த காட்சி என்ன வரும் என்று ஜெட்டிக்ஸ் பார்க்கும் குழந்தை கூட சொல்லிவிடும்படியான திரைக்கதைதான் கல்ப்ரிட். ஆங்காங்கே டாஸ்மாக்கில் வரும் வசனங்கள் நச் ரகம். முக்கியமாய் டாஸ்மாக்கில் வரும் கேரக்டர்களுக்கான வசனங்கள். ஹீரோவை அறிமுகப்படுத்தும் போதே ஏதோ ஒன்னாம் நம்பர் தில்லாங்கடி போல ஆயிரம் ரூபாய் ஜெராக்ஸ் நோட்டு கொடுத்து ஏமாற்றுபவனாகவும், பெரிய ரவுடியை போலவும் காட்டுகிறார்கள். ஆனால் சென்னைக்கு வந்ததும் ஏதோ ஒரு அப்பாவியின் மேல் பழி விழுந்துவிட்டதை போல சித்தரிக்கப் படுவது எல்லாம் கேரக்டரைஷேஷனில் தவறாகிவிட்டதால் எமோஷன் ஏற மாட்டேனென்கிறது. காதல் காட்சிகள் வழக்கம் போல டெம்ப்ளேட் அபத்தங்கள். திடீர் திடீரென புது புது கேரக்டர்கள் வருகிறது. அவர்களுக்கான டீடெய்ல் கிடையாது. எங்கோ வசனங்களில் ஒளிந்திருக்கிறார்கள். ரமணாவின் அரவாணி அவதாரம் எதற்கு? வேஸ்ட் அப் எபர்ட்.. ஆங்காங்கே வ்ரும் டாஸ்மாக் காட்சிகளும், காந்தி ஜெயந்தி அன்று காந்திக்கு கொடை பிடிக்கும் காட்சியை தவிர.. குறிப்பிட்டு சொல்லும்படியாகா ஏதுமில்லை.
தொட்டுப்பார்- பாத்துக்கோயேன்..

கேபிள் சங்கர்

Oct 18, 2010

கொத்து பரோட்டா-18/10/10

இந்த வார சந்தோஷம்
சென்ற ஞாயிறு கல்கி இதழுக்காக நான் எழுதிய எந்திரன் விமர்சனம் வெளியானது. அவர்களுக்காகவே புதிதாக எழுதிய விமர்சனத்தை படித்துவிட்டு போனிலும், நேரிலும் என்னை பாராட்டிய நண்பர்கள், அனைவருக்கும் என் நன்றிகள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார வருத்தம்
கடந்த சில வாரங்களாகவே ஒரு அம்மணி. ஏதேதோ பஞ்சாயத்துகளை இழுத்துக் கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். தொடர் படப்பிடிப்பு காரணமாய்  நான் எதையும் பார்க்கவில்லை. சென்ற வாரம் என்னையும் இன்னும் சில பதிவர்களை தனிபட்ட முறையில் சாட்டுகளில் தாந்தோன்றி தனமாய் பேசியிருப்பது அநாகரீகத்தின் உச்சமாய் இருக்கிறது. அதிலும் சினிமாக்காரர்கள் என்று வேறு பொதுப்படுத்தி சொல்லியிருகிறார். என்னை பற்றியோ.. சினிமாக்காரர்கள் பற்றியோ அவர்களுக்கு என்ன தெரியும்?. பெண் என்பதால் உடனடியாய் காறி உமிழ்ந்தும் தலைகுனிந்தும், என்ன தண்டனை கொடுக்கலாம் என்று பெரிய பெரிய பதிவுகளை யாராவது மண்டபத்திலிருந்து எழுதி கொடுப்பதை தாங்கள் எழுதியதாய் போட்டுக் கொள்பவர்கள் எங்கே போனார்கள்?.  அது சரி அவங்க எல்லாம் பொம்பளைங்களுக்கு ஒண்ணுன்னா தான் வருவாங்களோ?. இத்தனைக்கும் அந்த அம்மாவை பற்றி எனக்கு ஏதும் தெரியாது. விடுங்க.. நான் ஏதோ என்னை பற்றி சொன்னதால் தான் இதை எழுதுகிறேன் என்று நினைப்பவர்கள் நினைத்துவிட்டு போகட்டும். ஆனால் தேவையில்லாமல் சம்மந்தமில்லா விஷயங்களை, தெரியாதவர்களை பற்றி எழுதும்போது கொஞ்சம் யோசித்து எழுதலாமே. &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார வெற்றி
கோவையை சேர்ந்த ஜெயராமன் என்பவர் அயன் படம் பார்ப்பதற்காக கோவை கங்கா தியேட்ட்ரில் டிக்கெட் வாங்க, எழுபது ரூபாய்க்கு வாங்கிய டிக்கெட்டுக்கு நாற்பது ரூபாய் கவுண்டர் பாயிலை கொடுத்திருக்கிறார்கள். அதிக விலைக்கு டிக்கெட் விற்றதாக ஜெயராமன் நுகர்வோர் கோர்ட்டுக்கு போனார். கோர்ட்டு தியேட்டர் நிர்வாகத்தை கண்டித்து, அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் போட்டிருக்கிறது.மிகுதியாக வாங்கிய காசுக்கு 12 சதவிகிதம் வட்டியுடன், வழக்கு செலவு ஆயிரம் ரூபாயுடன் சேர்த்து கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. நீதி கொஞ்சம் லேட்டானாலும் கிடைக்கும். எந்திரனுக்கு நாற்பதுரூபாய் டிக்கெட் விலை 200??
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
நேற்று முதலமைச்சருக்கு மிரட்டல் எஸ்.எம்.எஸ் வந்திருப்பதாக தினசரி செய்தி. ஏற்கனவே இரண்டு முறை இம்மாதிரியான மிரட்டல்கள் வந்திருப்பதாகவும், இம்முறை வான் வழி தாக்குதல் செய்வோமென்று மிரட்டல் வந்திருப்பதாகவும் வெளியிட்டிருந்தார்கள். அம்மா போன வாரம் தான் மொத்தமாய் பத்து மிரட்டல் கடிதங்கள் வந்திருப்பதாக கமிஷனரிடம் புகர்ர் கொடுத்ததாகவும் செய்தி வெளியிட்டிருந்தார்கள். அதுக்கும் இதுக்கும் சமந்தமில்லை என்றுதான் தோன்றுகிறது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
நேற்று அகநாழிகை பதிப்பகத்தின் புத்தக வெளியீடு நடந்தது. காற்றில்லாம புழுங்கி தள்ளியது. சாருதான் வெளியிட்டார். வழக்கமான கவர்சியான சாருவாக இல்லாமல் மொட்டையடித்துக் கொண்டு வந்திருந்தார். அடையாளம் காண சட்டென முடியவில்லை. ஆனால் அவர் பேச்சில் அதே சுவாரஸ்யம். முக்கியமாய் அவர் அந்த கவிதை புத்தகத்தை பற்றி பேசாதது இண்ட்ரஸ்டிங். இன்னொரு முக்கிய விஷயம் சாரு கொஞ்ச வருஷத்துக்கு மேல் ப்ராஸ்டிடியூட்டாக இருந்தாராம். அவரே சொன்னதாக சிலர் சொன்னார்கள் உண்மையா சாரு..? என்று கேட்க வேண்டும.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார கொடுமை
எகிப்தில் சுற்றுலா பயணியாக வரும் சவுதி அரேபிய மற்றும் ஈராக்கிய ஆண்கள் அந்நாட்டில்  சுற்றுலா வந்து தங்கியிருக்கும் காலத்துக்கு பதினாறு வயதுக்குட்பட்ட எகிப்து பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களின் உறவு இவ்ர்கள் தங்கியிருக்கும் காலம் வரை தான் அதன் பிறகு சுற்றுலா முடிந்து போகும் போது விவாகரத்து செய்துவிட்டு போய்விடுவார்களாம்.  இதற்கு விலையாக பெண்ணை பெற்ற தந்தைக்கு நாலாயிரம் எகிப்து பவுண்டுகள் கொடுத்துவிடுவாரக்ளாம். அரசுக்கு இப்போது புதிய தலைவலியை உருவாக்கியிருக்கிறது. இந்த ஒரு மாத உற்வில் கர்பமாகி குழந்தை பெற்றுக் கொண்டுவிடும் பெண்களின் வாரிசுகள் ப்ரச்சனைதான். இதுவரை சுமார் 900த்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்திருப்பதாக சொல்கிறார்கள். என்ன கொடுமைடா சரவணா.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார தத்துவம்
நட்பு தான் உன்னுடய வீக்னெஸ் என்று நீ நினைத்தால் நிச்சயம் நீதான் உலகிலேயே மிக உறுதியானவன் என்று அர்த்தம் –ஆபிரகாம் லிங்கன்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார தகவல்
செக்ஸின் போது நாம் இழக்கும் கலோரிகள்
கீழே படுத்திருக்கும் போது: 90 கலோரிகள்.
நிற்கும் போது                  : 492 கலோரிகள்
டாகி ஸ்டைலின் போது   : 326 கலோரிகள்
இரண்டாவது ரவுண்டின் போது : 824 கலோரிகள
முக்கியமான சமயத்தின்போது மனைவி கதவை தட்டினா: 5000 கலோரிகள்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார விளம்பரம்
எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கய்யா..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார குறும்படம்
செம ஜாலியான.. மொக்கை படம்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அடல்ட் கார்னர்
ஒரு மருத்துவ மாணவன் செக்‌ஷுவல் டிஸார்டரில் ஸ்பெஷலைஸ் செய்ய விரும்பி, அந்த டிபார்ட்மெண்டுக்கு போக. போகிற வழியில் ஒரு ஆள் தன் “லுல்லாவை” பிடித்து “செய்து” கொண்டிருக்க, ஏன் இப்படி என்று கேட்டான். ‘ அவனுக்கு ஒரு நாளைக்கு ஐம்பது தடவைக்கு மேல் எழுச்சியிருகிறது. அதை சரி செய்யாவிட்டால் அவன் கோமாவுக்கு போய்விடுவான்” என்றார் டாக்டர். அப்போது இன்னொரு ரூமில் ஒரு ஆளுக்கு ஓரல் செக்ஸ் செய்ய ஒரு அழகிய நர்ஸோடு இருக்க, “இவனுக்கு என்ன ப்ராப்ளம்?” என்று கேட்டான். இவனுக்கு அதே பிரச்சனைதான். ஆனா இன்ஷுரன்ஸ் இருக்கு என்றார் டாக்டர்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கேபிள் சங்கர்