நடுராத்திரி, நான் உட்கார்ந்திருந்த சேர், கம்ப்யூட்டர் டேபிளோடு ஆட, அந்தக் குலுக்கல் மேலும் அதிகமாகிக் குலுங்கி, குலுங்கி, நானும் என் கம்ப்யூட்டரும் தலைகீழாய் புரண்டு கீழே போக, அய்யய்யோ.. பூகம்பம் என்று கத்தி கண்விழித்தேன். பஸ் ஒர் தொடர் ஸ்பீட் ப்ரேக்கரில் குதித்துக் குதித்து போய்க் கொண்டிருந்தது. அடுத்த நாள் நியூஸில் ஜப்பான் பூகம்பம். பட்டர்ப்ளை எபெக்ட் போல எங்கோ நடக்கும், அல்லது நடக்கப்போகும் ஒர் பேரழிவை ஒட்டிய கனவு என்னுள் தோன்றக் காரணம் என்ன?. தொடர்ந்து இம்மாதிரியான நிகழ்வுகள் என் கனவினில் தெரிந்தால் நன்றாக செட்டிலாகிவிடலாம் என்று என் ஞான திருஷ்டி சொல்கிறது. திடீர் திருப்பூர் பயணம் ரதிபாலா வோல்வோவில் ஆரம்பித்து, துரந்தோ எக்ஸ்பிரஸில் சுகமாய் முடிந்தது.
##################################
காலையிலேயே சுறுசுறுப்பாய் இயங்கும் திரும்பூர் டல்லடித்துக் கொண்டிருந்தது.ஏன் என்று கேட்டதற்கு டையிங் யூனிட் ப்ரச்சனை, தொழில் அழியும் அபாயம் என்று சொன்னார்கள். ஆளும் அரசை திட்டினார்கள். இதற்கு அரசு என்ன செய்யும்? சுப்ரீம் கோர்ட் ஆணையைத்தானே அவர்கள் இம்ப்ளிமெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் அவர்கள் செய்வதில் ஏதும் தவறிருப்பதாய் தெரியவில்லையே? என்று சொன்ன போது நண்பர் ஒருவர் சொன்னார். “தலைவரே… எல்லாம் செரிதான்.. ஆனா நேத்த வரைக்கும் சும்மா இருந்திட்டு இன்னைக்கு உடனே எல்லாத்தையும் இழுத்து மூடின்னா அவன் என்ன செய்வான். 11 ஆயிரம் கோடி வியாபாரம் செய்திட்டிருக்கிற ஊர்ங்க இது.. மூடணுமின்னு சொல்லறதுக்கு முன்னாடி அதுக்கான மாத்து விஷயத்தை உக்காந்து பேசி ரெடி பண்ணிட்டு இதுக்குள்ள நீங்க ரெடியாவுலைன்னா இழுத்து மூடிடுவோம்னு சொல்லு.. அதை விட்டுட்டு.. இப்ப வந்து ப்ரச்சனை பண்ணா என்ன அர்த்தம்?” சரிங்க ப்ரச்சனை ஆரம்பிச்சப்பவே மொதலாளிங்கெல்ல்லாம் உக்காந்து பேசி இதுக்கு ஒரு மாத்து கொண்டு வந்திருக்கலாமில்லீங்களா? அப்ப வுட்டுப்போட்டு, சுப்ரீம் கோர்ட் வர்ற வரைக்கும் என்ன செஞ்சிட்டிருந்தீங்க? சரி.. அப்ப அடுத்த ஆட்சி வந்தா மட்டும் சுப்ரீம் கோர்ட் ஆர்டரை மதிக்காம அப்படியே விட்டுருவாங்களா?ன்னு கேட்டேன்.பதில் சொல்லவில்லை. இது பற்றி இன்னும் நிறைய கேள்விகள் என்னுள் எழுந்து கொண்டேயிருக்கிறது. இன்னும் கொஞ்சம் புரிந்து கொண்டு கேட்கிறேன்.
##################################
திருப்பூர் போலீஸாரிடம் ஒரு கேஸ். ஒரு பதினாலு வயது பையனின் பெற்றோர் கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுடய மகனுக்கும் , நாற்பது வயது பெண்ணிற்கும், அவளுடய மகளுக்கும் இடையே உறவு ஏற்பட்டு, நிரந்தரமாக அவர்களுடனே தங்கி விட்டதாகவும், அவனை மீட்டு தங்களுடன் சேர்த்து வைக்க வேண்டுமென கேட்டிருக்கிறார்கள். போலீசார் அவர்களை கூப்பிட்டு விசாரித்த போது, அவர்களுக்குள்ளான உறவு நிஜமென்றும் எங்கள் மூவரையும் பிரிக்க முடியாது என்று சொல்லி அழுதிருக்கிறார்கள். பையன் அவன் பெற்றோர்களிடம் இவங்களிடமிருந்து என்னை பிரித்தால் அவ்வளவுதான் என்று மிரட்டுகிறானாம். என்னா நடக்குது லோகத்தில.. சமீபத்தில் தமிழ்ல சினிமாவில் கூட இந்த மாதிரி கதையோட படம் எடுக்கலையே? அப்படி கலாச்சாரம் கெட்டுப் போக சொல்லித் தருவதற்கு? நம்ம கலாச்சார காவலர்கள் எங்கே போனாங்க? ஒரு வேளை கலி முத்திருச்சோ?
##################################
துரந்தோ எக்ஸ்பிரஸ், சதாப்தியின் தம்பி போல இருக்கிறது. ஏஸி சேர் கார், தொடர் தின்னி அயிட்டங்கள் என்று ஆறுநூற்றிப் பத்து ரூபாய்க்கு ஏழு மணி நேரத்தில் சென்னையை அடைகிறார்கள். ஆனால் சாப்பாடு குவாலிட்டி படு சுமார். சப்பாத்தி மட்டும் ஓகே. எல்லாம் முடிந்து ரயில் சென்னையை அடைய ஒரு மணி நேரத்திற்கு முன் சர்வீஸ் செய்த சப்ளையர்கள் டிப்ஸுக்காக அசடு வழிவதும், பத்து ரூபாய் கொடுத்தாலும், மேலும் வேண்டி நிற்பதும் கொஞ்சம் ஓவராய்த்தான் படுகிறது. ஆறு நூற்றிச் சொச்சத்தில் வடை போச்சே என்பது போல், சாப்பாடு வேறு சொதப்பியதில் நொந்து போயிருக்கும் நேரத்தில், டிப்ஸ் கேட்டு இம்சிப்பதை பொறுக்க முடியவில்லை. எதாவது சொல்லலாம் என்று நினைத்து ஆரம்பிப்பதற்குள், அவர் கிளம்பிவிட்டார்.
######################################
நில நடுக்கங்களூடே வாழ பழகிய ஜப்பானியர்களையே புரட்டிப் போட்டுவிட்டது சுனாமி. இந்த வீடியோவை பாருங்கள். ஜப்பானியர்களின் கட்டுமானத் திறன் எப்படி இருக்கிறது என்று புரியும். பூகம்பத்தை தாங்கக்கூடிய அளவிற்கு உறுதியான கட்டிடங்களை கட்டியுள்ளார்கள். அதனால் தான் உயிர் பலி மிகவும் குறைவு. இதுவே நம் நாடாக இருந்திருந்தால்? அவ்வளவு தான்.

11 நாள் தூங்காமல் சாதனை செய்தவரின் பெயர் ராண்டி கார்னர். 1965ஆம் ஆண்டு. இச்சாதனை இதுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. எனக்கு தூக்க வருது.
கரப்பான்பூச்சிக்கு எலியக் கண்டா பயம், எலிக்கு பூனையக் கண்டா, பூனைக்கு நாயக் கண்டா, நாய்க்கு மனுஷனைக்கண்டா, மனுஷனுக்கு அவன் கேர்ள்ப்ரெண்டைக் கண்டா, கேர்ள் ப்ரெண்டுக்கு கரப்பான்பூச்சியக் கண்டா, வாழ்க்கை ஒரு வட்டம் சார்
“Pack my box with five dozen liquor jugs” இந்த ஒரே வாசகத்தில் ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களையும் கொண்டது. வாழ்க இங்கிலீஷ், வாழ்க குடிப்பவர்கள். ###################################
குறும்படம்
இப்படத்தைப் பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். செம க்யூட்டான கோயம்புத்தூர் குசும்புப் படம். படத்தின் டைட்டில் காட்சியிலிருந்து கடைசி வரை செம நக்கல், கிண்டல் கேலியோடு போகும் ..க.. சாரி.. அதுதான் அவங்களே சொல்லிட்டாங்களே.. இல்லைன்னு.. நீங்களும் பாருங்க.
##############################
ப்ளாஷ்பேக்
இளையராஜாவின் இந்தப் பாடல் தெலுங்கு சினிமாவையே கலக்கியெடுத்த பாடல். இந்தியில் அனந்த் மிலிந்த் சுட்டு மேலும் பிரபலமான பாடல். தெலுங்கு , இந்தி இரண்டிலேயும் கதாநாயகிகளான ஸ்ரீதேவி, மாதுரி தீட்ஷித்துக்கு ஒரு பெரிய மார்க்கெட்டை தூக்கித் தந்த பாடல். இதே ட்யூனில் இதற்கு பிறகு ஆளாளுக்கு பிழிந்தெடுத்துவிட்டாலும், இன்றைக்கும் சூப்பர் ஹிட்டான பாடல். அப்ப நி தீயனி தெப்பா.. அப்படியென்றால்.. (தெலுங்கு தெரிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்) சரி விடுங்க.. நம்ம எஸ்.பி.பி கொஞ்சிட்டே பாடுற ஸ்டைலுக்கு உருகிப் போய் உட்கார்ந்திருவோம். பாட்டுக்கு நடுவுல ஒரு பிஜியெத்தில ரெட் கலர் ட்ரெஸ்சுல ஸ்ரீதேவி ரிதத்திற்கு ஏற்ப இடுப்பை ஒரு வெட்டு வெட்டுவாங்க பாருங்க.. அடடடடடட…ம்ஹும்.

அடல்ட் கார்னர்
ப்ராக்களுக்கெல்லாம் டாக்ஸ் போட வேண்டும் என்று ஆணையிடப்பட்டால்
44-42 சைஸுக்கு பர்டன் டாக்ஸ்
42-38 சைஸுக்கு வெல்த் டாக்ஸ்
38-32 சைஸுக்கு எண்டர்டெயிண்ட்மெண்ட் டாக்ஸ்
32-28 சைஸுக்கு எக்ஸைட்மெண்ட் டாக்ஸ்
28-22 சைஸுக்கு டெவலப்மெண்ட் டாக்ஸ்
22க்கு கீழே சிம்பதி டாக்ஸ்
இரட்டைக் குழந்தைகள் கர்பத்திலிருக்கும் போது பேசிக் கொண்டிருக்க, அப்போது ஒரு “லுல்லா” உள் நுழைய, முதல் குழந்தை: ஏய் அதோ பாரு அப்பா உள்ள வர்றாரு. என்று சொல்ல.. இரண்டாவது குழந்தை : சீ.. அது அப்பா இல்லை.. அங்கிள். அப்பா எப்ப ரெயின்கோட்டோட வந்திருக்காரு. என்றது.
#########################
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment
17 comments:
sankar, Tripur special..and the death toll is almost exceed 10000..It s not minimum:(
kothu super boss
I have alreay seen this short film 3 times....I damn enjoyed..whenever I watch this, my lips will extend till my ears.rain coat:)..Thx for giving nice kothu parota.
//சமீபத்தில் தமிழ்ல சினிமாவில் கூட இந்த மாதிரி கதையோட படம் எடுக்கலையே? அப்படி கலாச்சாரம் கெட்டுப் போக சொல்லித் தருவதற்கு? நம்ம கலாச்சார காவலர்கள் எங்கே போனாங்க? ஒரு வேளை கலி முத்திருச்சோ?//
பார்த்து பேசுங்க. இப்படி சொன்னிங்கின்னா, பிரபல பதிவர்கள் நிறைய பேரு உங்ககிட்ட பேசுவதை நிப்பாட்டி விடுவார்கள். அல்லது சிரித்துக்கொண்டே பேசுவார்கள்.
"தொடர்ந்து இம்மாதிரியான நிகழ்வுகள் என் கனவினில் தெரிந்தால் நன்றாக செட்டிலாகிவிடலாம் என்று என் ஞான திருஷ்டி சொல்கிறது."
Mr.Sankar, hope you would have watched the film - Iyer the Great (Mamooty).. DMK / ADMK may send Autowalas.. Don't think about future events..
good morning anne
Anna koththup parotta super...
திருப்பூர்க்கு எதுக்கு போனேல்னு இப்பதான் புரியுது.. சின்ன பையன் மேட்டர் க்கு நல்லா பஞ்சாயத்து பண்ணேலா ??? ஹ ஹா.....
குறும்படம் சூப்பர்...
www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.
New Classified Website Launch in India - Tamil nadu
No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.com
எல்லாமே கலக்கல்,ராஜா சார் சாங் சூப்பர்.
-அருண்-
பின்னே உங்க திருடன் முன்னேற்றக் கழகத்தை குறை சொன்னால் அது எப்படி?
அருமையான கொத்து கேபிள்ஜி...
ஏற்கனவே பார்த்து இருந்தாலும் அந்த குறும்படம் கலக்கல்..
அப்புறம் ஸ்ரீதேவி...
எப்பா...எப்பா..என்ன வெட்டு...
வழக்கம் போல் அருமையான கொத்து. ஆனால் கனவுக்கும் butterfly effectக்கும் என்ன சம்பந்தம், நீங்க சொல்ல வந்தது ESPயா?
//இதே ட்யூனில் இதற்கு பிறகு ஆளாளுக்கு பிழிந்தெடுத்துவிட்டாலும்// தமிழில் சம்மதம் தந்துட்டேன் நம்பு என்னும் பாடல்......
//அப்ப நி தீயனி தெப்பா.. அப்படியென்றால்.. (தெலுங்கு தெரிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்)//
தெலுங்கு தெரியாத, எங்களைப் போன்ற வெளிநாட்டில் வசிப்பர்கள் யாரிடம் கேட்ப்பது?? உங்களுது பதிவுகளை வெளிநாட்டில் உள்ளவர்களும் படிக்கின்றேம் அவர்களுக்குமாகவும் எழுதவும்.
இது போலத்தான் சன் ரீவியில் டோனி ஒரு செல் போனை வைத்துக் கொண்டு"கச் கரோ ...மச் கரோ) என்னுவார் இன்று வரை அவர் என்ன சொல்கின்றார் என்று தெரியாது.
யாராவது அப்ப நி தீயனி தெப்பா..வுக்கும் கச் கரோ ...மச் கரோவுக்கும் தமிழ் ச்சொல்லுங்களேன்
யாராவது சொல்லுவாங்கன்னு நினைச்சு விட்டுட்டேன். அப்ப நீ தீயனி தெப்பா என்றால்.. அய்யா நீ கொடுத்த அடி.. இதில் டபுள் மீனீங்க் இருக்கு..
kothu parota super machi
Post a Comment