Thottal Thodarum

Mar 28, 2011

கொத்து பரோட்டா-28/03/11

ழ பதிப்பகத்தின் நான்கு புத்தகங்களுக்கான வெளியீட்டு நிகழ்வு இனிதே நிறைவேறியது. ராஜமாணிக்கம், ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார், பொன்.வாசுதேவன், சாமிதுரை, ஆகியோர் ஆளுக்கொரு புத்தகங்களை வெளியிட, லக்கி, முத்து, நேசமித்ரன், மணிஜி ஆகியோர் முறையே ஆளுக்கொரு புத்தகங்களை பெற்றுக் கொள்ள, சிறப்பாய், நிகழ்சி நடந்தேறியது. நிகழ்ச்சியை மிகச் சிறப்பாய் தொகுத்தளித்த நண்பர் சுரேகாவுக்கு நன்றிகள் பல.   ஒரு சந்தோஷ விஷயம் புதிய எழுத்தாளராய் அவதரித்திருக்கும் நண்பர் என்.உலகநாதனின் புத்தகங்கள் இது வரை ஆன்லைனில் என்பதுக்கும் மேல் புக் ஆகியிருப்பது மகிழ்ச்சிக்குறிய விஷயம். அது மட்டுமில்லாமல் கே.ஆர்.பி செந்திலின் பணம், என்னுடய் கொத்து பரோட்டாவுக்கும் கிடைத்திருக்கும் ஆதரவும் நம்பிக்கைத் தருகிறது. எல்லாப் புத்தகங்களிலும் நூறு புத்தகங்கள் புக் செய்து பதிப்பகத்தையும், எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் ஜெயவேல் அவர்களுக்கும், மற்றும் கலந்து கொண்ட அத்துனை இனிய நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல. நாளை விழாப் படங்களை தொகுத்து அளிக்கிறேன்.
###############################################
குஜராத் அரசாங்கத்தை உலகின் சிறந்த இரண்டாவது அரசாங்கமாய் ஒரு இண்டர்நேஷனல் கவுன்சில் அறிவித்துள்ளது. பத்து வருடஙக்ளுக்கு முன்னால் 50,000 கோடி உலக வங்கியில் கடங்காரனாய் இருந்த அரசு இப்போது ஒரு லட்சம் கோடி டெபாசிட் செய்திருக்கிறதாம். குஜராத்தில் டாஸ்மாக் இல்லை, மின்சார வெட்டில்லை, இலவசங்கள் ஏதுமில்லையாம். 100% பெண்கள் கல்வி கற்றவர்களாக திகழ்கிறார்கள். இன்னும் இருபது வருடங்களில் குஜராத் இந்தியாவின் குட்டி சிங்கப்பூராக மாறிவிடும் என்கிறார்கள். நாம எப்போ அப்படி மாறுவோம்?
&&&&&&&&&&&&&&&&&&&&&
தமிழகமெங்கும் தேர்தல் ஜுரம் எல்லா அரசியல் கட்சி தலைவர்களுக்குள்ளும் வந்துவிட்டது. ஆனால் எந்தவிதமான ஆர்ப்பாட்டம், படாடோபமில்லாமல் இதெல்லாம் நடப்பது நமக்கு புதுசாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது. நிச்சயம் இதை நாம் வரவேற்க வேண்டும். தேர்தல் ஆணையர்களின் கெடுபிடியால் சிற்சில விஷயங்கள் பொது மக்களுக்கு இடையூறாக இருப்பதாக சொல்லப்பட்டாலும், அதை மீறி ஒரு நல்லது இருக்கத்தான் செய்கிறது. அப்பாவி மக்களின் திருமணத்திற்காக, மற்றும் சிறு வியாபாரிகள் எடுத்துப் போகும் பணப்பெட்டிகள் பறிமுதல் செய்வது பற்றி சம்பந்தப்பட்டவரை விட, மற்ற அரசியல் கட்சிகள் அலறுவது வேடிக்கையாக இருக்கிறது. எதிர்காலத்தில் டிவியில் தான் அரசியல் பிரச்சாரம் நடைபெறும் என்று தெரிகிறது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
விஜய்காந்தின் செங்கல்பட்டு தேர்தல் பிரசாரத்தின் போது கலைஞரை வாய்க்கு வந்தபடி பேசினார். இவரின் ஆட்சி சரியில்லாததால்தான் இவர் அரசியல் கட்சியே ஆரம்பித்ததாகவும், இல்லாவிட்டால் இவர் வீட்டிலேயே உட்கார்ந்திருப்பேன் என்றும் பேசினார். எக்காரணம் கொண்டும் ஜெயலலிதாவின் பெயரை சொல்லாமல் உஷாராய் பேசினார். அவர் எம்.ஜி.ஆர். ரசிகன் என்பதால் தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாய் சொன்னார். கலைஞர் 3000 கோடியில் கலர் டிவி கொடுத்து மாதம் ஒவ்வொரு டிவிக்கும் நூறு ரூபாய் வாங்கி ஒரு வருடத்தில் 3600 கோடி சம்பாதிப்பதாகச் சொன்னார். சரி கலைஞர் டிவி கொடுத்தார். கேபிள் இணைப்புகளை மக்களுக்கு வழங்கும் வேலையை எங்களைப் போன்ற கேபிள் ஆப்பரேட்டர்கள்தான் இணைப்புக் கொடுத்து பணம் வாங்குகிறோம். வேண்டுமானல் ஒவ்வொரு ஊரிலும் உள்ள எம்.எஸ்.ஓ எனப்படும் ஆட்களுக்கு ஒவ்வொரு இணைப்புக்கும் குறைந்த பட்சமாய் இருபது ரூபாய் வரை போகும் அவ்வளவுதான். சும்மா.. மம்மி போல டம்மியாக பாயிண்ட் சொல்லக்கூடாது மக்களே. சே.. சாரி. அவர் பேசினது மாதிரியே பேச வருது.
#############################
அம்மா மாற மாட்டார் என்பதை முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல, தாந்தோன்றித்தனமான வேட்பாளர் அறிவிப்பு பட்டியல், மதிமுக வெளியேற்றம், மற்ற கூட்டணிக் கட்சிகளுடனான முரண். வேட்பாளர் பட்டியல் எப்படி வெளியானது என்றே தெரியாது என்கிற அறிக்கை. இதையெல்லாம் விட உச்சம். தேர்தல் அறிக்கை. சென்ற தேர்தலில் இலவசங்கள் எதையும் அளிக்க முடியாது என்று சொன்னவர், இந்த தேர்தலில் இலவசங்களின் உச்சமாம் திமுக அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் அடித்திருப்பது மகா கொடுமை. அதிலும் மகா கொடுமை நிதமும்  இலவச அறிவிப்புகளை ஏற்றிக் கொண்டேயிருப்பது. இது அவரின் தோல்வி பயத்தை காட்டுகிறது. அது மட்டுமில்லாமல் ஏற்கனவே மெட்ரோ ரயிலுக்காக பல கோடி ரூபாயை செலவு செய்திருக்கிறது தமிழக அரசு. அப்படியிருக்க மீண்டும் சென்னையில் மோனோ ரயில் கொண்டு வருவேன் என்றால் என்ன அர்த்தம்? மெட்ரோ ரயில் கருணாநிதி ஆரம்பித்ததால் சென்ற ஆட்சியில் அம்போவென விடப்பட்ட பெரம்பூர் பிரிட்ஜ் போல அம்போவெனப் விடப்படும்.  யார் வீட்டு காசு? இப்படி ஏட்டிக்கு போட்டியாய் யோசிப்பதை விட்டு விட்டு இன்னும் சிரத்தையாக யோசித்தால் அவர்களுக்கும் மக்களுக்கும் நல்லதாப் போகும்.
##################################
ப்ளாஷ்பேக்
ஏக் துஜே கேலியேவுக்கு பிறகு இந்தி திரையுலகில் எஸ்.பி.பியின் கொடி பறக்க ஆரம்பித்தது. சாகர், மே நே பியார் கியா, போன்ற படங்களின் பாடல்கள் ஹிட்டினால் எரிச்சலடைந்த இந்திப் பாடகர்கள் எல்லோரு சேர்ந்து எஸ்.பி.பியை ஓரங்கட்டினார்கள் என்ற குற்றச்சாட்டிருந்தாலும் அற்புதமான பாடல். வழக்கப்படி எஸ்.பி.பி. கமல் காம்பினேஷன் ராக்ஸ்.
#######################################
குறும்படம்
How to write screenplay? என்கிற இந்த குறும்படம் காலேஜ் ப்ராஜெட்டுக்காக எடுத்தப்படமாம். பார்த்தவுடன் பக்கென பற்றிக் கொள்ளூம் நகைச்சுவையுடன் இருக்கிறது. செம நக்கல் நையாண்டி. என்ன எவ்வளவு தூரம் காட்டினால் அது நகைச்சுவையாய்  எடுபடும் என்று தெரியாமல் இழுத்திருப்பதை தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். நல்ல முயற்சி இயக்குனர் சுதர்சன்.
########################################
டவுட்டு?
மோனோரயில்னா என்ன? மெட்ரோ ரயில்னா என்ன?
மோனோ ரயிலுக்கு ப்ரிட்ஜு மேல தண்டவாளம் இருக்கும் ஆனால் ரயில் தொங்கிட்டே போகும். மெட்ரோ ரயில் ப்ரிட்ஜ் மேல தண்டவாளம் இருக்கும் அதுக்கு மேல ரயிலு போகும்.

இலவச நிலமெல்லாம் கொடுக்க முடியாது என்று போன எலக்‌ஷனில் சொன்ன ஜயலலிதாவுக்கு இப்போது மட்டும் எப்படி எல்லாவற்றையும் விட அதிகமாய் கொடுக்க முடியும் என்று வாக்குறுதி கொடுக்க முடிகிறது?
#####################################
உன் எதிரியின் பேச்சைக் கவனி. ஏனென்றால் உன் தவறுகளை அவன் தான் உன்னிப்பாக கவனிப்பவன் – ஷேக்ஸ்பியர்

எவனொருவனையும் இன்றைய நிலையில் வைத்து பார்க்காதே. ஏனென்றால் காலம் தான் நிலக்கரியை வைரமாக்குகிறது.
#####################################
நம்பினால் நம்புங்கள்
ரஞ்சனா அகர்வால் என்கிற இந்தப் பெண்ணுக்கு கண்களை முழுவதும் துணியால் கட்டினாலும் பார்க்க முடிகிறது, படிக்க முடிகிறது. இது பற்றிய சர்ச்சை ஒன்று கூட ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் காணொளி இங்கே
இந்த பெண்ணைப் பற்றிய சர்ச்சை http://nirmukta.com/2010/06/23/exposing-the-miracle-of-blindfolded-sight-the-story-of-ranjana-agarwal/
########################################
அடல்ட் கார்னர்
secretaryக்கும் பர்சனல் secretaryக்கும் என்ன வித்யாசம்..?
secretary 'காலை வணக்கம் சார்' என்று சொல்வாள்..
ஆனால் பர்சனல் secretary, 'வணக்கம் சார்.. இது காலை' என்பாள்.

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Post a Comment

40 comments:

sugi said...

wow gujarat! kothu s super as usual..

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்ன அண்ணே !!!! மறைமுகமாக திமுக ஆதரவோ !!! ஹீம்ம்ம்ம்.... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங் !!!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

எனக்கென்னமோ அம்மாவின் தோல்வி பயத்தை விடவும் உங்களுடைய தொழில் பற்றிய பயமே அதிகமிருப்பதை காணமுடிகிறது !!!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

இலவசங்களை ஏற்றிக்கொண்டே போவதற்கு பயம் காரணம் அல்ல வெற்றியை நிச்சயமாக்கவே!!! அப்படி இல்லையெனில் கருணா போன்ற ஆட்கள் அதை ஏன் விமர்சனம் செய்ய வேண்டும்? அம்மாவின் பிடிவாதம் காரணமாக கூட சில நல்ல விசயங்கள் நடக்க கூடும் !!! கேபிள் அரசுடமை நிச்சமாக நல்ல விசயம்.. நீங்கள் வேண்டுமானால் 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் ஆனால் சென்னை தவிர 150 முதல் 250 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.. நான் மாதம் 200 ரூபாய் செலுத்துகிறேன் அதில் 1000 திரும்ப பெற முடியாத ஏதோ கட்டணம் !!!

Unknown said...

மிக்க நன்றி தலைவரே...

moe said...

may be, you shouldn't put your political views . you are not Vadivel !!!

செ.சரவணக்குமார் said...

கொத்து புரோட்டா நன்று. நூலையும் வாசிக்க விருப்பம்.

வாழ்த்துகள் தலைவரே.

iniyavan said...

சந்தோசம் கலந்த நன்றி தலைவரே!

Thirumalai Kandasami said...

பாஸ், நான் குஜராத்தில தான் இருக்கேன்..கடந்த மூணு மாசத்தில ஒரே ஒரு நாள் ,காலையில 30 நிமிஷம் கரண்ட் கட் ஆச்சு அவ்வளவு தான்..மீதி எல்லா நேரமும் கட் ஆனா அடுத்து 3 நிமிசத்துல வந்துரும் :),,சரக்கு கிடைக்கும் (illegal ) :) ,ஆனா விலை ரொம்ப ஜாஸ்தி..சோ,,ஏழைகள் எல்லாம் தினமும் குடிக்க முடியாது..அப்புறம் ரோடு எல்லாம் சூப்பர் பாஸ்,,பெரிய பெரிய ரோடு..

Thirumalai Kandasami said...

அம்மாவும் இலவசம் தர முடியாது என்ற உண்மையை சொல்லி பாத்துச்சு..மக்கள் கேட்கிற மாதிரி தெரியல..இலவசமுன்னு சொன்ன,வாய பிளந்து ஓட்டு போடுறானுங்க..
அப்புறம்,வேற என்ன பண்ண முடியும்? சோ ,என்ஜாய்..
அம்மா வர வேண்டும்,லோக்கல் லில் அலம்பல் பண்ணும் DMK ஆட்களை அடக்க வேண்டும்.

CS. Mohan Kumar said...

//லக்கி, முத்து, நேசமித்ரன், மணிஜி ஆகியோர் முறையே ஆளுக்கொரு புத்தகங்களை வெளியிட//

பெற்று கொள்ள என்றிருக்க வேண்டும். தூக்க கலக்கமா?

உதயகுமார் said...

நான் இதுவரை உங்கள் வலையின் ரசிகனாக இருந்துள்ளேன்.ஆனால் நீங்கள் மக்கள் பணத்தை சுரண்டி கொள்ளை அடித்த ஒரு அரசியல் கட்சியை ஆதரிக்கிறீர்கள்.ஆனால் மற்றொருக் கட்சியை எதிர்க்கிறீர்கள்.நீங்கள் நடுநிலையாளர் இல்லை என்றே இதில் தெரிகிறது.அந்த கொள்ளைக்காரனை விட இந்தக் கொள்ளைக்காரி சிறியதாய் கொள்ளை அடிப்பதால் எனக்குத் தெரிந்து அந்த அம்மாவே பராவாயில்லை என்பது என் கருத்து. கடந்த ஐந்து ஆண்டுகளில் கடந்து வந்த்ப் பாதையைக் காண்கையில் கலைஞரும் அவர் குடும்பமும் மக்களாகிய எங்கள் பணத்தைக் கொள்ளை அடிப்பது தவிர்க்கப் பட வேண்டும்.நான் கண்டிப்பாக எந்தக் கட்சியும் கிடையாது

பிரபல பதிவர் said...

உங்க கணிப்பு எப்பவுமே ஆப்போசிட் சைட்தான் ஒர்க் அவுட் ஆகும்... களவானி, எந்திரன், கமல் எல்லாமே ரிவர்ஸ் சைட் கோல் போட்ட உலகம் தெரியாத குழந்தை நீங்க.... அத‌னால‌தான் சொல்றேன் அம்மா ஜெயிப்பாங்க‌....

அப்புற‌ம் சினிமா வியாபார‌ம் + கொத்து புரோட்டா + போஸ்டேஜ் எவ்ளோ ட்ரான்ஸ்ப‌ர் செய்ய‌னும்.... சொல்லுங்க‌... அனுப்பிடுறேன்.... அனுப்பீறுங்க‌....

Unknown said...

அனைத்து தரப்பு வாசகர்களையும் கொண்ட கேபிள் இப்படி திமுக பிரச்சாரகர் போல எழுதுவது இந்த இனையத்தின் தன்மையை பாதிக்கிறது, ஒரு வேளை திமுக ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு சுய ஆதாயம் கிடைக்கும் என்றால் வாசகர்களிடம் சொல்லி விடுங்கள். மற்றபடி அதில் பொது நோக்கு இல்லை - அரவிந்த் சொக்கன்

'பரிவை' சே.குமார் said...

திமுக ஆதரவோ?

கொத்து புரோட்டா நன்று. நூலையும் வாசிக்க விருப்பம்.

K.S.Muthubalakrishnan said...

I agree with kurai onrum illai, moe, thirumalai kandasami,aravindan,udayakumar and kumar

Sketch Sahul said...

.நீங்கள் நடுநிலையாளர் இல்லை என்றே இதில் தெரிகிறது

Ŝ₤Ω..™ said...

அண்ணே.. முதல்ல வாழ்த்துக்கள்.. அப்புறம் வர முடியாமைக்கு மண்ணிச்சுடுங்க..

இந்த வாரம் சரியான அரசியல் கொத்தாயிருக்கு..

அண்ணே.. இங்கே பலர் ஒரு கட்சி சார்பா நீங்க எழுதியிருக்கறதா சொல்லியிருக்காங்க.. So wat?? இணையம், பொதுவெளி அது இதுன்னு ஏதாவது சொல்லுவாங்க.. அத விடுங்க.. Blog உங்க இடம்.. உங்க கருத்தை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கு.. உங்களை பாதித்த நிகழ்வுகளை எழுதறீங்க, உங்களுக்கு பிடித்த உணவகத்தை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தறீங்க, உங்களுக்கு பிடித்த குறும்படத்தை காட்டறீங்க, நீங்க ரசித்த ஜோக்குகளை பகிர்ந்துகறீங்க... அதெல்லாம் உங்களுக்கு பிடிச்சது.. அரசியல்ன்னு வந்துட்டா மட்டும் நீங்க நடுநிலை வாதியாகவேண்டுமா?????? என்ன நியாயம் இது??? அதே போல், இதுலும் உங்களுக்கு இந்த கட்சி பிடிச்சியிருக்கு.. இது உங்க நிலைபாடுன்னு ஏத்துக்கமுடிஞ்சா ஏத்தும்.. மாற்று கருத்துயிருக்கா, நாசுக்கா சொல்லிட்டு போய்ட்டே இருக்கனும்..

எப்போதும் போல உங்க மனசுக்கு பிடிச்சதை / தோணறதை எழுதுங்க..

:-)

divyan said...

//சென்ற தேர்தலில் இலவசங்கள் எதையும் அளிக்க முடியாது என்று சொன்னவர், இந்த தேர்தலில் இலவசங்களின் உச்சமாம் திமுக அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் அடித்திருப்பது மகா கொடுமை. அதிலும் மகா கொடுமை நிதமும் இலவச அறிவிப்புகளை ஏற்றிக் கொண்டேயிருப்பது. இது அவரின் தோல்வி பயத்தை காட்டுகிறது// நான் உங்கள் பதிவினை ரசித்து படிப்பவன். இப்படி நடுநிலையில்லாமல் பதிவு எழுதுவது மனத்திற்கு வருத்தத்தை தருகிறது.

Feroz said...

நண்பா தங்களுடைய ஒவ்வொரு பதிவிலும் திமுகு நெடி அதிகமாக இருக்கே.தோழமையுடன்

Anonymous said...

தங்கள் படைப்புகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகள்.

மாயாவி said...

உங்க ஓட்டு யாருக்கு என்று தெரிந்துவிட்டது நன்றி....

மாயாவி said...

உதயகுமார் சரியாக சொன்னார்... ஆனால் அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.... முன்பு தொப்பி தொப்பியும் ஜாக்கியும் என்ன காரணத்திற்க்காக முரண்பட்டார்களோ அதே அடிநாதம்தான் இதிலும். (சினிமாவில் உள்ளவர்கள் உலகம் வேறு, நாளை பேரன்கள் மூவரின் கம்பெனியில் இருந்து ஒரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக கலைஞரை திட்டி எழுதியிருந்தால் அது மைனஸ் பாயிண்ட்டாக மாறும் அதே வேளையில் ஜெ இந்த ஜென்மத்தில் சினிமா எடுக்க போவதில்லை.) யோசிங்க உதயகுமார் காரணம் புரியும்.

Prakash said...

Many are saying Gujarat is growing fast, this is because,
1. Highest industrialized state even before Independence days.
2. Nearly 50% of population is economically and Socially Forward Community, not like rest of other states, where at least 85% shall be backward/SC communities.
3. Focuses mainly on Commercial Crops (Cotton, Sugarcane etc).
4. Most of the Population are from Business Communities/Society (Bhaniya etc) , hence they turn into entrepreneurs by default.
5. Gujarathi’s migrated to UK, US and Canada well before independence are supporting with their investments.

DR said...

நூல் வெளியீட்டிற்க்கு வாழ்த்துக்கள்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ஏற்கனவே மெட்ரோ ரயிலுக்காக பல கோடி ரூபாயை செலவு செய்திருக்கிறது தமிழக அரசு. அப்படியிருக்க மீண்டும் சென்னையில் மோனோ ரயில் கொண்டு வருவேன் என்றால் என்ன அர்த்தம்? மெட்ரோ ரயில் கருணாநிதி ஆரம்பித்ததால் சென்ற ஆட்சியில் அம்போவென விடப்பட்ட பெரம்பூர் பிரிட்ஜ் போல அம்போவெனப் விடப்படும். யார் வீட்டு காசு?//
ஏண்ணே!!! இத எழுதும் பொது உங்களுக்கு சிரிப்பு வரல? எப்போவோ வர போற மோனோ (வரும் ஆனா வராது !!!) ரயில் திட்டத்துக்கு ஒதுக்குற காசப்பத்தி பேசற நீங்க ஏற்கனவே அரசு கேபிள் திட்டத்துக்கு ஒதுக்கிய பணம் பத்தி ஏன் கண்டுக்கல ? உங்களுக்கும் இதயம் இனித்ததோ !!!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

அண்ணே ஒரு விசயத்த நீங்க மறந்துட்டீங்க (??!!).. கேபிள் அரசுடமை மஞ்சள் துண்டின் திட்டம் அம்மாவுடையது அல்ல !!! அதனால் தான் மஞ்சள் துண்டின் ஆட்சியிலேயே நிதி ஒதுக்கி அத அடக்கமும் செஞ்சாச்சு !!!

பின்னோக்கி said...

என்னங்க இது. மோனோ ரயில் வந்தால் கருணா கஷ்டப்பட்டு பணம் செலவழித்து போட்டுக்கொண்டிருக்கும் மெட்ரோ என்ன ஆகும்னு கேட்குறீங்க ?. யாரு வீட்டு காசு ? எல்லாமே நம்ம காசு தான் அது ஜெ.ன்னாலும் க.ன்னாலும். சேதுசமுத்திரத்தில போட்ட பணம் என்ன ஆச்சு ? யார் பணம் அது ?. 2ஜி பணம் யாரோடது. எல்லாமே நம்மளோடதுதானே... இதுல ஒருத்தற சப்போர்ட் பண்றது வேண்டாமே. மேலும், மெட்ரோவ இடிச்சுட்டு மோனோ ரயில் வரும்னு எனக்கு தோணலை. மெட்ரோ ஓடாத இடங்களில் மோனோ கொண்டு வரலாம். மெட்ரோ ஒட ஆரம்பிக்கும் போது அதன் ப்ராப்ளம் தெரியும். மோனோ ரயிலில் சில வசதிகளும் உண்டு.

raghul said...

//எவனொருவனையும் இன்றைய நிலையில் வைத்து பார்க்காதே. ஏனென்றால் காலம் தான் நிலக்கரியை வைரமாக்குகிறது. //

நன்றாக இருக்கிறது .அனுபவ வார்த்தைகளா?

பரிசல்காரன் said...

உங்களுக்கு வாழ்த்துச் சொல்லி போரடிச்சாச்சு! அதுனால இனியவன் உலகநாதனுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்!!

shortfilmindia.com said...

@குறையொன்றுமில்லை.

ஒரு விஷயம் எனக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கேபிள் டிவிக்காக நான் ஜெயலலிதாவை எதிர்க்கவில்லை.கேபிள் டிவியை அவர்கள் கையில் எடுத்தாலும் அது எம்.எஸ்.ஓவுக்கான ப்ரச்சனையே தவிர எங்களுக்கில்லை. எங்களை பகைத்துக் கொள்ளவும் மாட்டார். சோ.. எனக்கு எந்த விதமான கவலையும் இல்லை.. பாவம் மக்கள் தான்..

shortfilmindia.com said...

ஆவூவென்றால் நான் திமுக ஆள் என்று சொல்லிவிடுகிறார்கள். அதுவுமில்லாமல் நான் ரெட் ஜெயண்டிலோ, தயாநிதி அழகிரியிடத்திலோ, சண்டிவியிலோ.. படம் கிடைத்தால் அதற்கு பய்ந்து இப்படி சொல்வதாகவும் சொல்கிறார்கள். ஒரு காமெடி என்னவென்றால் நீங்கள் சரியில்லை என்பதை அவர்களிடமே நேரில் சொல்ல்ல்மளவுக்கு தைரியமானவன் நான் சொல்லியிருக்கிறேன்.

நீங்கள் எல்லாம் நடுநிலையில்லாமல் அதிமுகவுக்கு ஆதரிக்கும் போது நான் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தால் என்ன தப்பு.

Sukumar said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாஸ்... மென்மேலும் கலக்குங்க... இதேபோல் உங்களது இசை வெளியீட்டு விழாவில் விரைவில் கலக்கவேண்டும்...

புருனோ Bruno said...

// இப்போது ஒரு லட்சம் கோடி டெபாசிட் செய்திருக்கிறதாம்.//
ஆதாரம் இருக்கிறதா


//இலவசங்கள் ஏதுமில்லையாம்.//
சத்துணவு இருக்கிறதா

இலவச மிதிவண்டி இருக்கிறதா

// 100% பெண்கள் கல்வி கற்றவர்களாக திகழ்கிறார்கள்.//
ஆதாரம் இருக்கிறதா

// இன்னும் இருபது வருடங்களில் குஜராத் இந்தியாவின் குட்டி சிங்கப்பூராக மாறிவிடும் என்கிறார்கள். நாம எப்போ அப்படி மாறுவோம்?//

இது போல் எவனாவது எழுதிய பொய்களை எல்லாம் அடுத்தவருக்கு பரப்பாமல் உண்மையை மட்டுமே நம்பும் போது

புருனோ Bruno said...

http://kutchdp.gujarat.gov.in/kutch/english/sakhao/samaj-kalyan-shakha/scheme1.htm


Gift of cycle under Saraswati Sadhana Yojana
A scheme to give cycles to scheduled castes girl students studying in stands 8, 9 and 10 since 1998-99.

புருனோ Bruno said...

http://www.gujaratindia.com/state-profile/demography.htm

Population Density 258 per Sq. Km.
Rural Population 62.64(%)
Urban Population 37.36(%)
Decadal Growth Rate 22.66% (1991-2001)
Birth Rate 23.5 (2006)
Death Rate 7.3 (2006)
Growth Rate 16.6 (2005)
Sex Ratio 920 females per 1,000 males (2001)
Effective Literacy Rate 69.14 % (2001)

புருனோ Bruno said...

The Educated Girl Child Initiative was born out of a painful distress call as Women’s Education in Gujarat in 2001 stood on 20th Position with Literacy rate among Female with 48.1%. Hon’ble CM joined hands with all Government officers – IAS, IPS and other beauracrats, in a massive ‘Kanya Kelavani Rath’ and turned into a massive movement to face the challenge in 2009.

Government charts out plans to enroll 525,000 girls in the state in Kanya Kelavani drive. It covers 1,865 routes and as a result, 100% enrollment and reduction in the drop out rate from 40% to 2.29% is achieved. It foresees a vision 2010 that, when Gujarat celebrates its golden Jubilee, there should be a zero - ‘0’ percent drop out rate in Gujarat (Literally No Drop Outs).
Girl Child Education program is initiated in villages across Gujarat. It covers almost 18,000 villages esp. where the literacy rate is below 20 percent and focus on identified suburbs of the urban areas to spread the message of education.

From : http://www.gujaratindia.com/initiatives/initiatives.htm?enc=TEnmkal8rLd9cWRBUEX85lswwfZZ+o8b+w+YfQPy7dU93tk/rntr0H+OnwOK0bubGxn8CTo/zrWp+HvkkBe+9jlVHX/lscs26LErVpv8pL9RZUhsIylDLEz1HE7iVyLfPbyl5bDZyad/OcTg9wXi7g==#Schemes Adopted to Enhance Education

புருனோ Bruno said...

From http://www.gujaratindia.com/pdf/ser0708.pdf : The state has recorded revenue surplus of Rs. 1770.09 crore in the year 2006-07

1770 கோடி மட்டுமே

இதில் எங்கிருந்து 1 லட்சம் கோடி வந்ததாம்

Rajaramesh said...

@ Bruno



------------------------------------------------------------------------------------------------------------
Gujarat has some of the largest businesses in India. Major agricultural produce of the state include cotton, groundnuts (peanuts), dates, sugar cane, milk and milk products. Industrial products include cement and petrol.

* 17% of Fixed Capital Investment
* 16% of Industrial output
* 22% of India's exports
* 16% of Value of Output
* 12% of Net Manufacturing Value
* 10% of Factories
* 98% of Soda Ash production
* 80% of Diamond Export
* 78% of Salt production
* 62% of Petrochemical production
* 53% of Crude Oil (Onshore)
* 51% of Chemical products
* 37% of Groundnut production
* 35% of Cargo Handling
* 31% of Cotton production
* 30% of Natural Gas (Onshore)
* 10% of Mineral production
* 25% of Textile production
* 35% of Pharmaceutical products
* Longest shoreline — 1,670 kilometres (1,040 mi)

Refernce: http://en.wikipedia.org/wiki/Economy_of_Gujarat

------------------------------------------------------------------------------------------------------------

Heven for Investments

Vibrant Gujarat 2011 Summit was held at Gandhinagar on 12–13 January 2011. It is to be held at a special site dedicated for Vibrant Gujarat named Mahatma mandir situated at Gandhinagar sector 13. About 7936 MoUs were signed worth $462 billion in the two days.

I hope you know the value of 462 billion dollars (almost 1/3 of India's GDP[Nominal])

------------------------------------------------------------------------------------------------------------

GIFT

http://www.youtube.com/watch?v=x_UeoTpygR4

http://en.wikipedia.org/wiki/Gujarat_International_Finance_Tec-City

------------------------------------------------------------------------------------------------------------

The India's biggest problem Curruption is very less in Gujarat

http://www.businessstandard.com/india/news/gujarat-scores-highestbudget-transparency-survey/426285/

------------------------------------------------------------------------------------------------------------

River / lake Front

http://www.youtube.com/watch?v=tetOF8oUhM8&feature=related

http://www.youtube.com/watch?v=Orl6ZVv5x5U&feature=related

------------------------------------------------------------------------------------------------------------

a said...

தல : கலந்துகொண்டதில் சந்தோசம்...