வணக்கம்.தமிழகத்தின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக புகழப்படுபவர். உலக சினிமா அளவிற்கு தமிழில் சினிமாவை தருகிறவர் என்ற பெயரை இலக்கியவாதிகள் முதல் உயர் சினிமா ரசிகன் வரை பாராட்டப்படுபவர். மார்கெட் போய் நொந்து போயிருக்கும் காலத்தில் உங்கள் படத்தில் ஒரு ஐந்நூறு நாள் கால்ஷீட் கொடுத்துவிட்டால் அடுத்து ஒரு மூணு வருஷத்துக்கு ஒப்பேத்திவிடலாம் என்கிற நம்பிக்கையை நடிகர்களிடம் ஏற்படுத்தியவர். வாழ்நாளில் இயல்பாய் சந்திக்க சான்சேயில்லாத கேரக்டர்களினால் பேசப்படுபவர். என்பது போன்ற பல விமர்சனங்கள் இருந்தாலும் உங்களது படங்களுக்கான ஈர்ப்பு உயர் தட்டு மக்களிடையேவும், இலக்கியவாதிகளிடையேவும், பெரும் எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. சில படங்களை பார்த்தால் அன்றைய நாள் முழுவதும் சந்தோஷமாய் இருப்போம், சில படங்களைப் பார்த்தால் மனம் கனத்துப் போய் இருப்போம். இன்னும் சில படங்கள் நம் நினைவிலிருந்து நீங்க பலநாட்கள் ஆகும். அவ்வகையில் உங்களின் சேதுவிற்கு பிறகு பெரிதாய் மனதை தைத்த படங்கள் வரவேயில்லை. தயாரித்த தயாரிப்பாளர்கள் மனதில் வேண்டுமானால் தைத்திருக்கலாம். சரி அதை விடுங்கள். அவன் இவனுக்கு வருவோம்.
ஒரு ஊரில் ஒரு வாழ்ந்து கெட்ட ஜமீந்தார். ஆனால் இன்றும் அதே ஜமீந்தாரின் பந்தாவில் வாழ்ந்து வருபவர். தன்னைத் தானே ஹைனஸ் என்று அழைத்துக் கொள்ளும் ஒரு கோமாளி. இவரின் அடிபொடிகள் ஆர்யாவும், விஷாலும். இவர்கள் மூவரும் சேர்ந்து படம் முழ்வதும் ஏதோ செய்கிறார்கள். ஆங்.. காமெடி செய்கிறேன் என்று செய்கிறார்கள். என்ன எழவு சிரிப்புத்தான் வர மாடேன்கிறது. இன்னொரு விஷயம் இவர்களுக்கு தனித்னி அம்மா, ஒரு அப்பா. குடும்பமே குலத்தொழிலாய் திருட்டுத்தனம் செய்கிறார்கள். விஷாலின் அம்மா அம்பிகா பீடி வலிக்கிறார். ஒண்ணுக்கு, பீ, என்று சரளமாய் பேசுகிறார். இவரது அப்பா.. இரண்டு பொண்டாட்டிகளுக்கு நடுவே அலைகிறார். இவர்களின் ஊர் வாசலில் ஒரு மணி வேறு கட்டி வைத்து ஊருக்குள் போலீஸ் வந்தால் உஷார் படுத்துகிறார். இத்தனைக்கும் இவர்கள் ஊர் போலீஸ் காமெடி பீஸு. ரவுடிகளையும், திருடர்களையும் வைத்து கிடா விருந்து வைப்பவராம். வழக்கமாய் உங்கள் படங்களில் ஏதாவது ஒரு கேரக்டர்தான் வித்யாசமாய் இருக்கும். ரொம்ப நேரமாய் ஏதுவும் நடக்காமல் கடைசியில் திடீரென ஒரு வில்லன் வந்து சம்பந்தமேயில்லாமல் அடிமாடு, ப்ளூகிராஸ் என்று கதை போய் ஜமீந்தார் அம்மணமாய் நடந்து கொல்லப்பட, வில்லன் கொல்லப்படுகிறான். என்ன எழவுக்குடா என்னிடமே கதை சொல்கிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது? இல்லை நான் உங்க கதையை ஒழுங்கா சொல்லுறேனான்னு செக் செய்திக்கத்தான். கரெக்டுதானே அப்புறம் உலகபட விமர்சகர்கள் எல்லாம் படம் பாக்க தெரியலைன்னு சொல்லிடப் போறாய்ங்க..
விஷால் ஏன் ஒன்னரைக் கண் ஆளாய் இருக்க வேண்டும்? விஷால், ஆர்யா இருவருமே திருடர்கள் என்றால் அதை வைத்து அவர்கள் என்ன செய்தார்கள் படத்தில்?. ஆர்யாதான் பூட்டை உடைப்பதில் வல்லவர். பின்பு விஷாலை ஏன் முதலில் கூட்டிப் போனார்கள்?. நீதிப்தி வீட்டில் பூட்டை உடைத்து திறந்து கொடுக்கும் காட்சிக்கும் படத்திற்கும் ஏதாவது ஸ்நான ப்ராப்தி இருக்கிறதா?. ஆர்யா ஆர்ப்பாட்டமாய் சுழல் விளக்கு வைத்த காரில் வருவதைத் தவிர?. சரி.. இரண்டு பேரும் திருடர்கள். ஏன் விஷால் ஒரு நடிகனாக அலையும் கேரக்டராய் சித்தரிக்கப் படுகிறார்?. அதுவும் பெண்மைத் தன்மையாய் இருக்கும் கேரக்டரில்?. அம்பிகா கூட விஷால் பேசும் போது அப்படி பேசாதேன்னு எத்தனை தடவ சொல்றது என்கிறார். அப்போ விஷால் கேரக்டர் அரவாணியா? அல்லது அரவாணி மாதிரியா?. ஆர்யா கேரக்டர் அவ்வப்போது காமெடி செய்ய உபயோகப்பட்டிருக்கிறது என்றாலும், அந்த சதுரவட்டை கேரக்டரினால் அவர் என்ன சாதித்தார்?. ஹெட்போனில் ஆங்கில மீயூசிக் கேட்டுக் கொண்டு அறிமுகமாகும் கேரக்டர் என்கிறீர்கள் ஏன் எப்போது அரைகிறுக்குத்தனமாகவே இருக்கிறார்?. சேதுவில் விக்ரம் கல்லூரி செல்லும் பெண்ணிடம் செய்த அதே விஷயங்களை திரும்ப செய்யும் போது உங்களில் கற்பனை வறட்சி நன்றாக தெரிகிறது. படம் நிறைய கேள்விகளால் தொடுக்கப்பட்டிருப்பது ஏதாவது பின்நவீனத்துவமா? அப்படியானால் நான் எஸ்கேப்பாகிறேன்.
இடைவேளை வரை என்ன செய்வது என்று தெரியாமல் ஆளாளுக்கு காதல் வேறு செய்கிறார்கள். அதுவும் போலீஸ் காரி திருடனும் லவ்வுகிறார்கள். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் லூசுப் பெண் லைலா கேரக்டரை வைத்துக் கொண்டு மாரடிப்பீர்கள்?. அப்புறம் அந்த அபித குஜாம்பால் பாத்திர பெண். ஆர்யாவின் ஜோடி. கல்லூரி படிக்கும் பெண் எப்படி இம்மாதிரியான ஆளை காதலிப்பாள். எந்த பெண்கள் காலேஜில் ஆண்கள் பாட்டுப் பாடி கிளாஸ் அட்டெண்ட் செய்யும் அளவிற்கு விடுவார்கள். பரிட்சை வேறு எழுதுவது போல் காட்சி வருகிறது. அதெப்படி?. ஓ.. சாரி.. இது காமெடி படமென்றுதானே சொன்னார்கள் ரைட்டு.. காமெடி. அப்புறம் திடீரென காட்டு இலாகா அதிகாரியை அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து தாக்குகிறார்கள். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மரத்தை கடத்துகிறார் விஷால்? அதற்காக ஒன்பது வருஷம் ஜெயில் என்றெல்லாம் கூட சொல்கிறார்கள். அப்புறம் கதையில் அதைப் பற்றி யாரும் மூச்சைக் கூட விடக்காணோம். படம் முடியும் தருவாயில் அய்யோ இவ்வளவு நேரம் விளையாட்டா ப்ரோடியூசர் பணத்தை வைத்து விளையாடிவிட்டோமே? என்று உணர்ந்து, ஜமீன் எதிரியின் பெண் தான் ஆர்யாவின் காதலி என்று சண்டையிட வைத்து, அப்புறம் ஒரு பாட்டில் எல்லாம் சரியாகும் போதே. அவர் சாகப் போகிறார் என்று தெரிகிறது. அப்போதுதானே க்ளைமாக்சில் உங்கள் ட்ரேட் மார்க்கான புழுதி, சாக்கடை, சகதியில் சண்டை போட்டு வன்முறையாய் ஒரு சண்டைக் காட்சி வைக்க முடியும்.. என்ன கொடுமை உங்களை நம்பி உயிரைக் கொடுத்து நடித்துள்ள விஷால், ஆர்யா, நிர்வாணமாகவே நடித்த ஜிஎம்.குமார் போன்றவர்கள் உழைப்பை வீண் செய்துவிட்டீர்கள். என்றே சொல்ல வேண்டும். மேலே உள்ள கேள்விகளுக்கான விடையை கதை என்கிற வஸ்துவை யோசிக்கும் போதும்,
திரைக்கதை என்கிற வஸ்துவை யோசிக்கும் போதும் யோசித்திருந்தால் ஒரு நல்ல படத்தை அளித்திருக்க முடியும். அது எப்போது பழக்கமில்லாத ஒன்று என்பதால் இப்படத்தில் பெரிய சறுக்கலாய் அமைந்துவிட்டது. நடுவில் வரும் சூர்யாவின் காட்சிகள் எல்லாம் படத்தின் நேரத்தை நிரப்ப எடுக்கப்பட்ட காட்சியாகவே தெரிகிறது. அட்லீஸ்ட் ஒரு விஷயத்திற்கு உபயோகம். விஷாலின் நடிப்பை வெளிப்படுத்த கிடைத்த காட்சியாக வேண்டுமானல் பார்க்கலாம். ஆனால் அதனாலும் படத்திற்கு பிரயோஜனமில்லை. படத்தில் பாராட்ட ஆயிரம் இருந்தாலும் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராய் போனதால் பிரயோஜனமில்லாமல் போய்விட்டது.
ஆர்தர் ஆர்.வில்சனின் ஒளிப்பதிவு யுவனின் இசை என்று குறிப்பிட்டு சொல்லாம் ஆனால் என்ன பிரயோஜனம்?. விஷாலின் உழைப்பு மிகவும் பாராட்டப்பட வேண்டியது தான். ம்ஹும். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் விஷால். விளிம்பு நிலை மனிதர்களை வைத்து படமெடுக்கிறேன். அவர்களின் கருப்பு பக்கங்களை எடுக்கிறேன் என்பதை விட, நிஜ மனிதர்களை வைத்து எடுக்க வேண்டிய கதைகள் நிறைய இருக்கிறது. ஆனால் உங்கள் படங்களின் மேல் மாறு பட்ட கருத்துக்கள் கொண்டவனாக இருந்தாலும் உங்களின் மேக்கிங்கின் மேல் நல்ல மரியாதையுள்ளவன். அட்லீஸ்ட் அடுத்த படத்திலாவது ஒரு சேதுவை எதிர்பார்க்கிறேன்.
நன்றி வணக்கம்.
Post a Comment
128 comments:
ஏற்கனவே நான் எல்லாம் பைத்தியமாகவே எப்பொழுதும் திரிவதால், நான் எப்பொழுதுமே பாலாவின் படங்களை பார்ப்பதில்லை...
>>...அதே விஷயங்களை திரும்ப செய்யும் போது உங்களில் கற்பனை வறட்சி நன்றாக தெரிகிறது...
>>இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் லூசுப் பெண் லைலா கேரக்டரை வைத்துக் கொண்டு மாரடிப்பீர்கள்?...
இப்படியெல்லாம் கேட்டப்பின்..
>>அட்லீஸ்ட் அடுத்த படத்திலாவது ஒரு சேதுவை எதிர்பார்க்கிறேன்.
I am reading between the lines :).
ஆயிரம் கைகள் மறைத்தாலும் , ஆதவன் மறையாது .
:(
என்ன தல.. இப்படி சொல்லிடீங்க ??? படம் அவ்வளவு மொக்கையா..?
இன்னிக்கு படம் பார்க்கப்போய் படம் வராததால் திரும்பி வந்தேன்.நல்ல காலம் படம் நாளைக்குத்தான் வருகுது தப்பித்தேன்
//விளிம்பு நிலை மனிதர்களை வைத்து படமெடுக்கிறேன். அவர்களின் கருப்பு பக்கங்களை எடுக்கிறேன் என்பதை விட, நிஜ மனிதர்களை வைத்து எடுக்க வேண்டிய கதைகள் நிறைய இருக்கிறது//
athan sankar neenga irukenkalla....
paavam bala , ungala mathiri ulaga cinema director pola aaga mudiyathu...
கமர்சியலாக வெற்றி பெற வாய்ப்பிருக்கா..?தயாரிப்பாளருக்கு துண்டுதானா..?பாலா இயக்கினால் அதில் விசயம் இருக்கும் என விசயம் இல்லாமலே தலையில் அவரை தூக்கி வைத்து கொண்டாடுபவர்கள் இனி யோசிக்க வேண்டும்.
>>...அதே விஷயங்களை திரும்ப செய்யும் போது உங்களில் கற்பனை வறட்சி நன்றாக தெரிகிறது...
>>இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் லூசுப் பெண் லைலா கேரக்டரை வைத்துக் கொண்டு மாரடிப்பீர்கள்?...
இப்படியெல்லாம் கேட்டப்பின்..
>>அட்லீஸ்ட் அடுத்த படத்திலாவது ஒரு சேதுவை எதிர்பார்க்கிறேன்.
I am reading between the lines :).
naan kadavul maathiri evnaavathu badam edukka mudiyumaa?...
200000kaikal maraiththaalum athan maraivathillai
character narration என்ற பெயரில் ஜனங்களை கொல்லும்
பாலாவிற்கு சரியான தர்ம அடி
Thanks
எது சரி? இரண்டு முரண்பாடான விமர்சனம்கள்
http://tamil.webdunia.com/entertainment/film/review/1106/17/1110617042_1.htm
BALA IS GREAT.NEVER LIKE THIS REVIEW
OF FILM AVAN-IVAN.EVAN SONNALUM ANKE VANTHU VETTUVOM.
BALA IS GREAT.NEVER LIKE THIS REVIEW
OF FILM AVAN-IVAN.EVAN SONNALUM ANKE VANTHU VETTUVOM.
எனக்கென்னமோ படம் பரவாயில்லை என்றே சொல்லவேண்டும். ஆனாலும் இன்னும் கதை வலுவாக இருந்திருக்கலாம். இடைவேளைக்காக ஒரு கலவர முடிச்சு கடத்தல், பின்பு கடைசி climaxக்காக ஒரு மாடு கடத்தும் முடிச்சு. ஒரு சுவாரசியமில்லை இந்த முடிச்சுகளில். திரைக்கதை என்றால் story narrationக்கான முன் இழுத்துச்செல்லும் சம்பவங்கள் என்றால் அது இந்த படத்தில் இல்லை. ஆனால் சம்பவங்கள் ஓரளவு ஈர்புடையதாகவே இருக்கிறது. கதை சொல்கிறேன் என்று பல படங்கள் நம்மை பதம் பார்க்கிறது. இது ஒரு light hearted படம் என்று முன்பே எல்லோர்க்கும் தெரியும். ஆனால் இது பாலா படம் என்பதால் நிச்சியம் மேலும் எதிர்பார்ப்பிருக்கிறது. அது ஒரு திருப்தியின்மையை அளிக்கிறது.
Looks like the mixture of Sethu and Pitha magan....Same bala template movie....
படம் அப்படி இருக்கும் இப்படி இருக்கும்னு நீங்களா ஒரு கற்பனை பண்ணிக்கிட்டு போயிட்டு நீங்க நினைச்ச மாதிரி இல்லைன்னதும் உங்க இஷ்டத்துக்கு ஒரு விமர்சனத்தை போட்டுட்டு தியேட்டர்ல போய் படம் பார்க்கிற ஒரு நாலு பேரையும் கெடுத்துருங்க
இவ்வளவு சொல்றீங்களே இது மொக்க படம் தான
இந்த மொக்க படத்தில் வர்ற மாதிரி ஒரே ஒரு நிமிசத்துக்கு ஏதாவது ஒரு காட்சியை எடுத்திட்டு பேசுங்க உங்க அறிவாளிதனத்தை நான் மெச்சறேன்
அத விட்டுட்டு விழலுக்கு இறைத்த நீர் __ழலுக்கு இறைத்த நீர்னு லாம் சொல்லாதீங்க
உங்களின் சேதுவிற்கு பிறகு பெரிதாய் மனதை தைத்த படங்கள் வரவேயில்லை - அப்படியா?
நல்லா இருப்பீங்க நீங்க எங்களுக்கு புரியாத மொழியிலே உலக சினிமாவே பாருங்க
பி ன்னு சொன்னா நாறுது shit நு சொன்னா மணக்கு என்னத்த சொல்ல
theriyama thaan nan kaekuraen nee yenna avaloo paeriya appatackaraa!!!...
//theriyama thaan nan kaekuraen nee yenna avaloo paeriya appatackaraa!!!...//
:))) கேபிள்... தீர்ப்பு வழங்கற மாதிரியேயேயே பேசிட்டு இருக்காம, நீங்களும் எதாச்சும் பண்ணுங்க. உங்க குறும்படத்தை பாத்துட்டு எனக்கு குறும்படம் மேல இருக்க மரியாதையே போயுடுச்சு.
இந்த அப்பாடக்கர்னா என்னங்க?
சங்கர்,
படம் எனக்கும் பிடிக்கவில்லை. ஆயினும் சில கருத்துக்கள்.
1. மதுஷாலினி படிப்பது பெண்கள் கல்லூரி அல்ல, டுட்டோரியல் காலேஜ். பசங்க பொண்ணுங்க சேர்ந்து படிப்பது போலத்தான் காட்சியமைப்பு இருக்கும்.
விமர்சனத்தை திருத்துவது நலம். அல்லது படத்தை இன்னொருமுறை பார்ப்பது அதைவிடநலம்.
2. சேதுவிற்கு பின்னர் பாலா நல்லபடம் கொடுக்கவில்லை என்ற உங்கள் கருத்து ஏற்புடையதில்லை.
கால்நூற்றாண்டுக்கு முன்னரே கற்பனை வறண்ட மணிரத்னத்தை இன்னமும் நீங்கள் கொண்டாடுவதில் உங்கள் நேர்மை அடிபடுகிறது.
எனக்கு என்னமோ கேபிள் ஷங்கர் சார் விமர்சனம் மாதிரி தெரியல்ல. விமர்சனத்தில், எழுத்தில் பல மாற்றங்கள். எழுத்தில் காரமும், நேர்மையும் அதிகமாக உள்ளது.
இப்படி ஒரு விமர்சனம் தொடர்ந்து வந்தால் எப்பேர்பட்ட கொம்பனாக இருந்தாலும் உங்கள் விமர்சனத்துக்கு பயந்துதான் ஆகவேண்டும் குறைகள் வாராமல் இருக்க.
வாழ்த்துக்கள் இதுப்போன்று தொடர்ந்து விமர்சிக்க.
காவேரி கணேஷ
கொடுத்து வச்சவரு.
@ராஜ் சந்திரா
:0) atleast even he repeats.. tha t will be good.
@சென்
வேற வழியேயில்ல.. அழுதுதான் ஆகணும் படம் பார்த்து.
@மமதி
முடியலை..
2கோபிராஜ்
எந்த ஊரு?
@ராஜேஷ் ப்ளாக்
விமர்சனத்தை அவர் கூட ஏற்று கொண்டுவிடுவார் போலருக்கு. ஓகே.. நான் படம் பண்ணினதும் அதுக்கு நீங்க விமர்சனம் செய்யுங்க..ஓகே
காவேரி கணேஷ
கொடுத்து வச்சவரு.
@ராஜ் சந்திரா
:0) atleast even he repeats.. tha t will be good.
ஆர்.கே.சதீஷ்குமார்
கமர்ஷியல் வெற்றியா? சேதுவை தவிர இதுவரை அவரது படங்கள் கமர்ஷியலாய் வெற்றிப் பெற்றது இல்லை. அவரை வைத்து தயாரித்த, சேது தயாரிப்பாளர், நந்தாவின் தயாரிப்பாளர், பிதாமகன் தயாரிப்பாளர்கள் இன்றைக்கு லைனிலேயே இல்லை. எஸ்கேப்பானது ஒருவர் அவ்ரு சிவஸ்ரீ சீனிவாசன். ஏஜிஎஸ். பெரிய கை.. தாங்கும்.
2காவ்யா
ஏன் வேற ஒருத்தர் நான் கடவுளை எடுக்கணும். அவரு ஒண்ணு எடுத்தாரே அது போதாதா? அதிலாவது கொஞ்சமாச்சும் ஓகேவாயிருந்திச்சு.. ம்ஹும்.
@
உதவி இயக்கம்
நன்றி
@ஒரு வாசகன்
விமர்சனஙக்ள் முரண் படலாம். அவரவர் பர்ஷப்ஷன்.
@கணேஷ்.
கிழிச்சே நீ.. பேர சொல்லவே தைரியமில்லை.. வெட்டுவாராம் ஹி..ஹி..
@விஜய்.
லைட் ஹார்ட்டட் படம் என்று நீங்கள் சொன்னது போல யாரும் நினைத்தும் இதை பார்த்துவிட முடியாது. விஜய். பெரும்பாலான காட்சிகள் இரிடேட்டிங்.
@குலசேகரன்
இலலை தலைவரே.. ரெண்டும் கெட்டானை விட மோசம்.
//படம் அப்படி இருக்கும் இப்படி இருக்கும்னு நீங்களா ஒரு கற்பனை பண்ணிக்கிட்டு போயிட்டு நீங்க நினைச்ச மாதிரி இல்லைன்னதும் உங்க இஷ்டத்துக்கு ஒரு விமர்சனத்தை போட்டுட்டு தியேட்டர்ல போய் படம் பார்க்கிற ஒரு நாலு பேரையும் கெடுத்துருங்க//
பாலா படங்களை எதற்கு கற்பனை செய்தெல்லாம் பார்க்க வேண்டும். அவரே இது வரை அதெல்லாம் செய்ததில்லை.
//இவ்வளவு சொல்றீங்களே இது மொக்க படம் தான
இந்த மொக்க படத்தில் வர்ற மாதிரி ஒரே ஒரு நிமிசத்துக்கு ஏதாவது ஒரு காட்சியை எடுத்திட்டு பேசுங்க உங்க அறிவாளிதனத்தை நான் மெச்சறேன்
அத விட்டுட்டு விழலுக்கு இறைத்த நீர் __ழலுக்கு இறைத்த நீர்னு லாம் சொல்லாதீங்க
//
நீங்க தான் படம் பார்த்துட்டு ஒரு விமர்சனம் எழுதுங்களேன். அதை படிச்சிட்டு நாலு பேர் என்ன நாற்பதாயிரம் பேரைக்கூட பார்க்க வையுங்க.. நான் எடுத்துருக்கேன். பார்த்துட்டு பிடிக்கலைன்னா சொல்லுங்க.. அது உங்க உரிமை..
செந்தில்
ஆமா .. நான் அவ்வளவு பெரிய அப்பாடக்கர்தான். முதல்ல அப்பா டக்கர் யாருன்னு தெரியுமா உங்களுக்கு.? சந்தானம் சொன்னதுனால காமெடி பீசுன்னு நினைச்சிட்டிங்களா? அவ்வ்வ்வ்..
கதிர்.
நான் என்ன பண்ணனும்னு நீங்க எனக்கு சொலல் வேணாம். கதிர்.. பண்ணிட்டும் இருக்கேன். ஸோ.. ஒரு விஷயத்தை பத்தி கருத்து சொல்ல நீயும் அதை செய்து காட்டுன்னு சொல்வது ஸ்கூல் பையன் ரேஞ்சு.. அப்புறம்.. நான் இது வரைக்கும் மூணு குறும்படம் எடுத்துருக்கேன். அது உங்களுக்கு பிடிக்கலைன்னு இங்க சொல்லியிருக்கீங்க இல்லை. அது உங்க உரிமை. அது போல இந்த விமர்சனம் என் உரிமை. எனக்கு விமர்சனத்தை தாங்குற சக்தியிருக்கு. நான் உஙக்ளை ஒரு குறும்படம் எடுத்துக்காட்ட சொல்ல மாட்டேன்.
சரி காமெடி சார்..நீங்க.. உங்களுக்கும் அப்பா டக்கர் யாருன்னு தெரியாதா? ஹி..ஹி.
@காத்தவராயன்
//சங்கர்,
படம் எனக்கும் பிடிக்கவில்லை. ஆயினும் சில கருத்துக்கள்.
1. மதுஷாலினி படிப்பது பெண்கள் கல்லூரி அல்ல, டுட்டோரியல் காலேஜ். பசங்க பொண்ணுங்க சேர்ந்து படிப்பது போலத்தான் காட்சியமைப்பு இருக்கும்.
விமர்சனத்தை திருத்துவது நலம். அல்லது படத்தை இன்னொருமுறை பார்ப்பது அதைவிடநலம். //
விமர்சனத்தை வேணும்னா திருத்திடறேன். மக்கா.. தயவு செய்து இன்னொருவாட்டி மட்டும் படத்த பாக்க சொல்லாதீங்க.. அவ்வ்வ்
//2. சேதுவிற்கு பின்னர் பாலா நல்லபடம் கொடுக்கவில்லை என்ற உங்கள் கருத்து ஏற்புடையதில்லை.
கால்நூற்றாண்டுக்கு முன்னரே கற்பனை வறண்ட மணிரத்னத்தை இன்னமும் நீங்கள் கொண்டாடுவதில் உங்கள் நேர்மை அடிபடுகிறது.//
சரி ஏற்றுக்கொள்ளாதீர்கள்.. நீஙக்ள் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எனக்கென்ன கட்டாயம் உள்ளதோ அதே கட்டாயம்தான் உங்களுக்கும் எனவே.. சாரி..
தொப்பி தொப்பி
நன்றி.. விமர்சனம் செய்வதற்காக இதை சொலல்வில்லை.. படம் பார்த்து சில மணி நேரம் நொந்து போய்விட்டேன்.
அன்பின் விமர்சகர் கேபிள் சங்கர் அவர்களுக்கு,
யோவ்!! உனக்கு எந்த மாதிரி படம் தான்யா வேணும். மொக்க படத்தை(ஆரண்ய காண்டம்) நல்ல உலக படம்ன்கிற, நல்ல படத்தை மொக்கைன்னு விமர்சனம் பண்ற. இந்த படத்துக்கு என்ன குறைச்சல்.? படம் நல்ல டைம் பாஸ் ஆகத்தான் இருக்கு. ஸ்க்ரீன்ப்ளே மட்டும்தான் கொஞ்சம் (after interwal ) slow ஆக இருக்கு. ஆனா கிளைமாக்ஸ் ஓகே. நீ என்ன பெருசா எதிர்பாக்குற இந்த படத்துல. முடிஞ்ச நீ ஒரு நல்ல உலக படம் எடுய்யா பாக்கலாம். சாப்பாடு திங்கறது சுலபம். அதை செய்யறது எவ்வளவு கஷ்டம். நீ 100 ரூபாயில படம் பாத்துட்டு உனக்கு என்ன கடுப்போ, மிதப்போ தெரியல இப்படி விமர்சனம் எழுதிட்ட? ஒரு நல்ல லாபம் தர்ற மாதிரி படம் எடுக்குறது எவ்வளவு கஷ்டமுன்னு நீ தெரிஞ்சுக்கப்பா!! ஏதோ நீ எழுதற விமர்சனம் கொஞ்சம் காமெடியா timepass ஆக இருக்கும்முன்னு இங்க வந்த, வர வர நீ ரொம்ப ஓவரா ஏதோ ஆஸ்காருக்கு தீர்ப்பு சொல்ற மாதிரி விமர்சனம் எழுதிறியே இப்பெல்லாம்.
verdict on recent cable sankar's movie reviews: romba overaa irukku!!
nalla maarupatta alasal... ullathai ulla padi sollum ungkal vimarsanam padikka niraiya naparkal ullaarkal enpathai immuraiyum nirupiththu vitteerkal.. vaalththukkal
மிஸ்டர்.எஸ்.எஸ்.கே.. மிக்க நன்றி.. நீ ஒரு விமர்சனம் எழுதேன். அப்படின்னு கேட்க மாட்டேன். ஏன்னா கேக்க நான் உன்னைப் போல காமெடி பீஸா.. இந்த் விமர்சனத்தைப் பற்றிய உங்களது விமர்சனத்துக்கு நன்றி..
நன்றி மதுரை சரவணன். மேல உள்ளவ்ர் கூட அப்படித்தான்.. என்னதான் சொன்னாலும் வுடாம படிச்சிட்டுத்தானிருக்கிறாரு.. அவருக்கும் நன்றி.. அவருக்கு இந்த விமர்சனம் புடிக்கலை.. அதுக்கு நாம என்ன பண்ணமுடியும். அவரு எதை எதிர்பார்த்து விமர்சனம் படிக்க வந்தாரோ? அவ்வ்..
எனக்கும் அதே சந்தேகம்தான். ஆரண்யகாண்டம் நல்ல படம்னு சொன்னிங்க. இந்த படத்தை வேஸ்ட்னு சொல்றீங்க. அது பரவாயில்ல. உங்களுக்கு ஏன் யாரவது ஒரு படம் எடுத்து காட்டுங்க சொன்னா அவங்கள ரொம்ப மட்டமா டீரீட் பண்றீங்க? நாளைக்கு உங்களுக்கு வாய்ப்பு வந்தா தயாரிப்பாளரும் அப்படிதான் கேட்கபோறாரு. அவரையும் இப்படிதான் ட்ரீட் பண்ணுவீங்களா?
oru mokayae mokkayana vimarsanam eluthukirathae!!
Ungal Kalavaani vimarsanathai than innamum jeeranikka mudiyavillai...padathai innorumurai partheergala? any change of mind?
ராஜரத்னம். ஒரு தயாரிப்பாளர் கேட்டால் அவருக்கு பதில் சொல்வது நியாயமான விஷயம். ஆனால் விமர்சனம் படிக்க வரும் ஆட்கள் எல்லாம் எடுத்துக் காட்டச் சொன்னால்.. இப்படித்தான் பதில் வரும். ஏன் நீங்கள் கேட்டால் கூட அப்படித்தான். வரும. நான் என்ன எடுத்திருக்கிறேன் என்று கூட தெரியாமல் வெறும் விமர்சனம் மட்டும் படித்துவிட்டு பேசுபவர்களை விட.. நான் எவ்வளவோ மேல்.
@hihi
அட பெயரில்லாத மொக்கையா.. நன்றி.. உங்கள் விமர்சனத்திற்கு.. மொக்கையாய் இருந்தால் இங்கு வந்து படிக்க மாட்டீர்கள்.:)
லக்ஷ்மண்
இல்லை லக்ஷமண். என்னளவில் அது ஒரு ஆவரேஜ் படம்தான் இன்றும்..ஆனால் அந்த படத்தின் வெற்றியை என்று மறைப்பவன் அல்ல.. என்னை தொடர்ந்து படிப்பவர்களுக்கு புரியும்.
நான் எப்பவுமே அப்படி கேட்கமாட்டேன். அப்படி கேட்டாலுமே உங்கள் பதிலில் எனக்கு ஒப்புதல் இல்லை. என்னை யாராவது அப்படி கேட்டால் எனக்கு வாய்ப்பு வரும்போது அதை பாருங்கள் என்றுதான் சொல்லியிருப்பேன். அப்படி கேட்டவரும்கூட ஒரு வருங்கால தயாரிப்பாளராக இருக்கலாமே? நடிகன் மேடையில்தான் நடிப்பேன் என்று சொல்வது முறையாகுமா? எப்படியுமே யாரையும் underestimate செய்வதில் எனக்கு உடன்பாடில்லை.
என்ன படமெடுத்துக் காட்டு என்று இங்கு பின்னூட்டமிட்டு கேட்பவர்கள் எல்லாம் நிச்சயம் தயாரிப்பாளர் ஆவதற்கு தகுதியே இல்லாதவர்கள். ஆகவும் மாட்டார்கள். ஒரு தயாரிப்பாளன் இப்படிப்பட்ட கேவலமான கேள்வியை கேட்கவே மாட்டான். அதெல்லாம் சினிமா தெரியாதவர்கள் பேசுவது.. அண்டர் எஸ்டிமேட் இல்லை. எஸ்டிமேட்டே பண்ண மாட்டேன்.
பாலா மீதான கரிசனத்தால் அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்! நேற்றைக்கு இந்தப்பதிவைப் படித்து விட்டு கேபிளின் மீதுதான் கோபம் வந்தது. நைட்டு படத்தப் பாத்தேன் கண்கள் பனித்தது, இதயம் இனித்தது! தக்காளி தாளிச்சு உட்டுட்டானுக! கேபிள் சங்கருக்கு மறுப்பாக கருத்துச் சொன்ன நண்பர்கள் படம் பார்க்காமல் இருக்கும் பட்சத்தில் படத்த பாத்துட்டு வந்து தங்கள் கமெண்ட்டை மீண்டும் படிக்கவும். (கீழயே குப்பைத் தொட்டி போன்ற சிம்பல் இருக்கும் அதை கிளிக்கினால் தங்களது கமெண்ட் எளிதாக அழிக்கப் பட்டு விடும்)
உங்கள் விமர்சனம் மிகையானது. பாலா இதைத்தான், இப்படித்தான் எடுக்க வேண்டும் என்று சொல்ல உங்களுக்கு உரிமையில்லை. அதேபோல பாலா என்ன கொடுத்தாலும் பார்த்துவிடும் ரகமல்ல மக்கள்.
இந்தப் படத்தை மக்கள் ரசிக்கிறார்கள் என்றால், இந்த ரசனையைப் புரிந்து அவர் எடுத்திருக்கிறார் என்றுதான் அர்த்தம்.
இந்தப் படம் வெகுஜன ரசனைக்கான படம். சென்னைவாசிகளுக்குப் பிடிக்காவிட்டால் என்ன... பாலா உங்களுக்காக மட்டும் இதை எடுக்கவில்லையே.
பாலா என்ற வைரத்திலிருந்து இந்த முறை கொஞ்சம் குறைவாக வெளிச்சம் வந்திருக்கிறது. அவ்வளவுதான்.
யாரெல்லாம் 'பாலாவை குறை சொல்ற நீ ஒரு படம் எடுத்துக் காட்டேன்" என உங்களைச் சொல்கிறார்களோ, அவர்களை மரியாதைக் குறைவாகப் பேசுவது உங்களின் அறியாமையை, சிறுபிள்ளைத்தனத்தைக் காட்டுகிறது.
ஒரு பொதுவெளியில் மீடியாக்காரனாக காட்டிக் கொள்ளும் நீங்கள், இந்த விமர்சனங்களை அமைதியாக ஏற்றுக் கொள்ளவே வேண்டும். அதை எதிர்த்து பதிலுக்கு அசிங்கமாக நீங்களும் திட்டலாம்... ஆனால் இந்த வலைப்பூவில் அல்ல... வெறும் வாசகனாக மாறி. இந்த முரண்பாட்டை ஏற்பது, எழுத்தாளனாக உங்களைக் காட்டிக் கொள்ள நீங்கள் தரும் முதல் விலை. மறந்துவிட வேண்டாம்.
-சிவா
i saw this film yesterday...im very very disappointed...i felt like sachin tendulkar got duck out..who cares but he is still sachin...thats the same way with bala.. i saw naan kadavul nearly 15times,thats the best movie ever taken in tamil cinema..i think bala is mocking us for asking such a film from him.i think this is not his cup of tea.film is not about the content,its about the making.even though bala's previous four films had mal content the making was top class..but in this movie the making and the content was awful..talking about bala's usual platform..every director has its own style.if you take bergman,woody allen or any top directors of the world.those are their signature style.i think aranya kaandam is 100 times better than this movie.i dont care whether its inspired from quentin or guy ritchie but the experience what you get out a scene or the total movie is the true review of the movie..i was so ecstatic when i got out of sethu,pithamagan and naan kadavul and recently with aranya kandam..but certainly not with avan ivan..i seriosly ask bala to get back on track.please dont do movies because of commercial motive. it was lke watching a Hari's movie.bala's biggest strength is his characterisation,black humour filled dialogues,heartbreaking cinematagraphy,beautifully composed shots,strong background score,ability to swing the audience mind no matter what and of course a brilliant background score by illayaraja. all these are missng in this movie.talking about cliches,quentin tarantino and even guy ritchie has cliches,pulp fiction,kill bill series,reservoir dogs,inglorius basterds all of them have his cliches and the same with guy ritchie(lock,stock rock an rolla,snatch).i dont know whats wrong with bala having his own style and signature.i already said its all about how we experience about the movie ,thats what it matters and nothing else
cable sir....siva sir sonna comment yetru kolla vendiyathu thaan....ethu ungal vimarsanithin rasiganaga ungalidam yethirpaarthu....entha rasiganudaya aasaiya yerpadum...niragaripathum...ungal virupam.....nanri
sivaa..விமர்சனத்தை விமர்சனம செய்வது உங்கள் உரிமை. ஆனால் அதற்காக படமெடுத்துக்காட்டு என்று கேட்பதெல்லாம் காமெடிபீசுத்தனம். அப்படி கேட்பவர்களை நான் மதிக்கமாட்டேன். விமர்சனத்தை விமர்சியுங்கள். நீங்கள் என்னை தொடர்ந்து படிப்பவராக இருந்தால் என்னை பதிவுகளுக்கான விமர்சனங்களை அபப்டியே போட்டிருப்பேன். முட்டாள் தனமான கேள்வி கேட்பவகளுக்கு நிச்சயம் சரியான பதில் கொடுக்கத்தான் செய்வேன். மீண்டும் சொல்கிறேன். இந்த விமர்சனத்தின் மீதான விமர்சனத்துக்கு நன்றி.
சார்,கண்டிப்பா வசனகர்த்தா வீட்டுக்கு மட்டும் போய்டாதீங்க அப்படியே போனாலும் அவர் வீட்ல தோசையோ,வடையோ சாப்புட்ராதீங்க.
cable,
Sethu, nandha matrum pithamagan eduththa producers ellam antha padathoda field out aagala. ivanga ellorume aduththa padam eduthanga athula Nandha producers eduththa mounam pesiyathe mattum average movie( aparajeeth movies?).
Sethu eduththa kanthasamy athukku appuram oru padam eduththar - 4 heros "solla marantha kadhai " radhi heroine. antha padam out.
pithamagan evegreen dorai aduththu captain i vachchu Gajendra eduththar athu out.
ennoda question ennana - Bala padam than avanga ellathyum field out aakkinatha? - apdina avanga ellam aduththa padam eppadi eduthanga - ellame Bala padaththula vittathai pidikkathan nu sonna - sethu idikkuthe ?
கேபிள் சார்,
நான் இன்னும் படம் பாக்கல ஆனா இங்க வர எதிர் விமர்சனத்த டென்ஷன் ஆகாம நல்லாவே பதில் சொல்லுறீங்க
என்ன பொறுத்த வரைக்கும் ஒரு டைரக்டர் கு ரொம்ப தேவையானது சமயோசிதம், ஸ்கிரிப்ட் writing .. அது ரெண்டுமே உங்க கிட்ட இருக்கு .. நீங்க ஒரு நல்ல டைரக்டர் ஆக என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்
- அருண்
நான் முதல் நாள் பார்க்கும் படங்கள் எல்லாமே மொக்கையாக தான் இது வரை இருந்துள்ளது. அவன் இவன் ல் ஆவது அதை முறியடிக்கலாம்
என்று பார்த்தால் முடியவில்லை. உங்கள் விமர்சனம் நேர்மையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
எது எப்படியோ. படம் பாக்கறமாதிரி இருந்தா சரி.
களவாணி பற்றிய உங்கள் விமர்சனத்தையும் அது போன வருட ஜூன் மாத ஹிட் என்பதையும் உங்களை தொடர்ந்து வாசிப்பவர்கள் அறிவார்கள்.அவன் இவன் பற்றி உங்கள் பார்வையில் நீங்கள் விமர்சித்திருக்கிறீர்கள்,படம் தேறும் என்பது என் கருத்து.
-அருண்-
அது சரி, விளிம்பு நிலை மனிதர்கள், நிஜ மனிதர்கள் என்று பிரிவினை உண்டா என்ன?
நீங்கள் ஆரண்ய காண்டம் படம் சாதாரண ரசிகனுக்கு பிடிப்பது கடினம் என்று கூறினீர்கள். அவன் இவனை கடுமையாக சாடி உள்ளீர்கள். நாங்கள் இந்த விமர்சனங்களை எங்களை போன்ற சாதாரண வாசகர்களுக்கு எழுதப்பட்ட விமர்சனம் அல்ல என்று எடுத்து கொள்ளலாமா? ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள். சாதாரண வாசகர்கள் மற்றும் சாதாரண ரசிகர்களின் மெஜாரிட்டி தான் அதிகம். எங்களை போன்றவர்களுக்கு பிடிக்க வில்லை என்றால் அது குப்பைக்குத்தான் போய் சேரும். சினிமா தெரியாதவர்கள் பேசுவது.. என்று கூறுவதெல்லாம் உலகம் அறியாமல் நீங்கள் பேசுவது போல் உள்ளது. நம்ம நாட்டில் சினிமாவையும் கிரிக்கெட்டையும் பற்றி அலசி பேசாதவர்கள்தான் மிக மிக குறைவு. மீடியா மற்றும் டெக்னாலஜி வளர்ச்சி இன்று குகிராமங்களியும் போய் சேர்ந்து விட்டது. எதுவுமே கடினம் கிடையாது. எங்களுக்கு பொழுதுபோக்கே சினிமா தான்.
அடுத்த வாரம் பிள்ளையார் தெரு கடைசி வீடு படம் ரிலீஸ். பாருங்க it is going to be a commercial hit.
@jaleel
அது தெரியாம் இருக்கிறதே நல்லது ஜலீல்.
@அருண்
களவாணி பற்றிய என் விமர்சனம். அது எல்லோரும் அறிந்தது. அதன் ஹிட்டையும் நான்மறுக்கவில்லை. ஆனால் அவன் இவன் படம் ஓடினால் எனக்கொன்றும் வருத்தமில்லை சந்தோஷமே.. நீங்கள்படம் பார்க்காமல் சொல்வதாய் தெரிகிறது.
@சேவியர்
எனக்கு அந்த ப்ரச்சனையெல்லாம் கிடையாது பெரும்பாலான படங்கள் மொக்கை லிஸ்டில்தான் தேறும். இதுவரை நான் ப்ரிவியூ பார்த்த 200க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாகவேயில்லை.
2@arun
thanks
@sanjay
சேது எடுத்த கந்தசாமியிடம் படம் ஆரம்பித்த போது சொன்ன பட்ஜெட் என்ன? முடித்த போது நடந்த பட்ஜெட் என்ன? என்பது உங்களுக்கு தெரியாது. எனக்கு தெரியும். அதை வாங்க நாங்கள் முயன்ற கதையை படிக்க சினிமாவியாபாரம் படியுங்கள்.
அப்படம் இயக்குனருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் வெற்றி, அதெப்படி என்பதையும் சினிமாவியாபாரம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நந்தா தயாரிப்பாளர்களிடம் படஜெட் பற்றியும் வியாபாரம் பற்றியும் கேளுங்கள். அடுத்த படமான மெளனம் பேசியதேவும் தோல்விப்படமே
சேது கந்தசாமி எட்டு வருடத்துக்கு பிறகு எடுத்த படம் கும்மாளம். அது பெரும் தோல்வி.
கேப்டன் ப்டம் பட்ஜெட் சொன்னபடி தான் எடுத்தார்கள். ஆனால் பிதாமகன் அப்படியல்ல.. சொன்ன பட்ஜெட்டை மீறி மிக அதிகமான படம். அதில் நஷ்டமானவர் அதே நேரத்தில் கஜேந்திராவும் தயாரிக்க.. மொத்தமும் அம்பேல். இதுக்கு முதல் காரணம் பாலா என்றால் இரண்டாவது டாக்டர் விஜய்காந்த்
உங்களுக்கு சினிமா வியாபாரம் தெரியாது. சஞ்செய். தெரிஞ்சா கேட்க மாட்டீங்க.. எனக்கு தெரியும்.
இலவசமாய் எது கிடைத்தாலும் இப்படிதான் மனிதர்கள் இருப்பார்கள் என்று நீங்கள் இந்த அவன் இவன் படத்தின் திரை விமர்சனத்தின் மூலம் நிருபித்து உள்ளீர்கள் .......
//சேது கந்தசாமி எட்டு வருடத்துக்கு பிறகு எடுத்த படம் கும்மாளம். அது பெரும் தோல்வி.//
சங்கர்,
மீண்டும் மீண்டும் தவறான தகவல்களை தரக்கூடாது. நான் கடவுள் பின்னூட்டத்திலும் இதையையே கூறியிருந்தீர்கள்.
சேதுவும், கந்தசாமி தயாரிப்பில் ரதி நடித்த படம். இரண்டின் ரிலீஸ் தேதியை உங்களால் தைரியமாக சொல்ல முடியுமா? குறைந்த பட்சம் ரிலீஸான வருடத்தையாவது சொல்லமுடியுமா?
1999 - டிசம்பர் - சேது ரிலீஸ்.
2006 - டிசம்பருக்கு பின் 2007 - நவம்பர் வரை - உங்கள் கணக்குப்படி, சேதுவிற்கு பிறகு கந்தசாமி தயாரித்த 2வது படம் ரிலீஸாகி இருக்க வேண்டும்.
இரண்டிற்கும் எட்டு வருடம் வித்தியாசம் இல்லாவிட்டால். "அவன் இவன்" விமர்சனத்தை தார்மீக அடிப்படையில் இந்த பக்கத்தில் இருந்து நீக்கத்தயாரா? சவடால் அல்ல சவால் விட்டு கேட்கிறேன்.
ரதியம்மா 2004/5 இல் மீண்டும் பல் டாக்டருக்கு படிக்க போயிட்டாங்கோகோகோகோகோ
kaathavarayan.. தார்மீக ரீதியாய் நான் சொன்ன வருடம் தவறாக இருந்தால் அந்த வருடத்தை மட்டும் வேண்டுமானால் சரி செய்து விடுகிறேன். ஆனால் அவன் இவன் விமர்சனத்தை நீக்க மாட்டேன்.
ரிலீஸ் டேட்டை சொல்ல தைரியம் எதற்கு?. படம் நல்லாருக்கா இல்லையான்னு சொல்ல்த்தான் தைரியம் வேணும் அது எனக்கிருக்கு.
காத்தவராயன்.. நானெல்லாம் ஒருவாட்டி எழுதினா எழுதினதுதான்.. :)
sir, Padam edir paarthadai vida sumar ragam thaan. Making is amazing.
Baala Sir padam naa yaarukku nattam naalum Actor and Actress ikku ellam laabam thaan.Avar Life Time ill naditha padangilil oru nalla padam aaga thaan irukkum baala sir padam.
// படம் நல்லாருக்கா இல்லையான்னு சொல்ல்த்தான் தைரியம் வேணும் அது எனக்கிருக்கு.//
நான் நேற்று இரவு பதிவு செய்த பின்னூட்டத்தை மீண்டும் பார்க்கவும்.
உங்கள் பின்னூட்டத்தை பார்த்ததும் படத்தை பார்க்கும் என்னத்தையே கை விட்டுவிட்டேன். காசு மிச்சம். ஏதாவது வாங்கி சாப்பிட்டு உடம்பை தேத்துவம்...!!!
மற்றுமொரு கேபிள் சங்கரின் விமர்சனம்... நான் மீண்டும் உங்களிடம் சொல்வது, ஒவ்வொரு கலைஞனுக்கும் அவன் படைப்பு என்பது ஒரு குழந்தை தான். அது நன்றாக இருந்தாலும் இல்லை என்றாலும். ஒவ்வொரு மனிதருக்கும் ரசனை வேறு படலாம். ஆனால் உங்கள் எதிர் மறையான விமர்சனம் படத்தை பார்பதை தடுக்கிறது. நீங்கள் ஒரு படத்தின் நல்லது கேட்டது சொல்வதோடு நிறுத்திக் கொள்ளலாம். முடிவை படம் பார்பவரிடம் விட்டு விடுங்கள். நீங்களே நீதிபதி ஆகி விடாதீர்கள். உங்களை படம் எடுக்க சொன்னால் என்னை காமெடி பீசு என்று சொல்வீர்கள். நான் அப்படி சொல்லவில்லை. ஆனால் உங்கள் படத்திற்கு வரும் அல்லது வரப்போகும் எதிர் மறை விமர்சனங்களால் உங்கள் படைப்பு புறக்கணிக்கபட்டால்? விமர்சனங்களை நீங்கள் தாங்கலாம் ஆனால் புறக்கணிப்புகளை தாங்குவீர்களா? நீங்கள் தங்கினாலும் உங்கள் எதிர்காலம் என்ன ஆகும்? உங்களை தேடி மற்றொரு தயாரிப்பாளர் வருவாரா? அதனால்தான் மீண்டும் சொல்கிறேன், தீர்பிடாதீர்கள்... நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். எந்த அளவையால் நீங்கள் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும். இது சாபம் அல்ல ஐயா... பைபிள் வாக்கியங்கள்.
பின்குறிப்பு: நான் படம் பார்த்து விட்டேன்.
தல ஒன்ன ஞாபகம் வச்சுக்கோங்க இங்க மும்பைல நீங்க நல்லா இருக்குன்னு சொன்னா ஸ்டான்லி கி டப்பாவோ சைதானோ வாங்காத கைதட்டல் இந்த அவன் இவன் வாங்குறான் (ஹிந்தி காரங்ககிட்ட ) மொக்கை படம் டான் சீனு நீலத்தாமர இப்படி நம்ம ஆளுக பாக்காத படத்துக்கெல்லாம் வரிஞ்சு கட்டி ரெவிஎவ் எழுதறிங்க. இது உங்களோட தனிப்பட்ட கருத்துன்னு ஜக்கி அண்ணன் மாதிரி சொல்ல வன்டியது தானே
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்திற்கு போனால் படம் நன்றாகத்தான் இருக்கிறது..படம் முழுக்க தியேட்டரில் சிரித்து கொண்டு தான் இருந்தனர்..
படத்தின் முடிவை அந்த பழிவாங்கலின் தீவிரத்தை நான் ரசிக்க வில்லை..
charles
நான் பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லையே.. முடிந்தால் போய் பாருங்கள். என்னவோ நான் சொல்லியதால் தான் மக்கள் எல்லோரும் படம் பார்ப்பதாக நான் நினைப்பதேயில்லை. அப்புறம் தயவு செய்து சுவிஷேஷ பிரசாரங்களை தவிர்த்தால் என் உடலுக்கு நல்லது.
ஹிந்த்க்காரங்க தமிழ் புரிஞ்சு கைதட்டினாங்களா? அஹா.. சரி நீங்க கேரளாக்காரன்.. உங்களுக்கு எதைச் சொல்லி புரிய வைப்பது. ஒரு விஷயம் சந்தோஷமாய் இருக்கும் தொடர்ந்து என் எழுத்தை படித்து வருவது குறித்து. நமக்கும் தீவிர வாசகர்கள் இருக்காங்கப்பா.. :)
அசோக்
அவன் இவன் அற்புதமான படம்.. அப்பாடி..
//மற்றுமொரு கேபிள் சங்கரின் விமர்சனம்... நான் மீண்டும் உங்களிடம் சொல்வது, ஒவ்வொரு கலைஞனுக்கும் அவன் படைப்பு என்பது ஒரு குழந்தை தான். அது நன்றாக இருந்தாலும் இல்லை என்றாலும். ஒவ்வொரு மனிதருக்கும் ரசனை வேறு படலாம். ஆனால் உங்கள் எதிர் மறையான விமர்சனம் படத்தை பார்பதை தடுக்கிறது. நீங்கள் ஒரு படத்தின் நல்லது கேட்டது சொல்வதோடு நிறுத்திக் கொள்ளலாம். முடிவை படம் பார்பவரிடம் விட்டு விடுங்கள். நீங்களே நீதிபதி ஆகி விடாதீர்கள். //
இந்த விமர்சனம் கூட என் குழந்தை மாதிரிதான். உங்களின் விமர்சனங்களை நான் எதிர்மறையாக எடுத்துக் கொள்ள மாட்டேன். என் கருத்தை நான் கூறுகிறேன். நீங்கள் உங்களதை. அவ்வளவே.. புறக்கணிப்பு போன்ற விஷயங்களை நான் அனுபவித்தவன். அதிலிருந்து மீண்டு, என்னை கொண்டாட செய்ய வைத்தவன். முடிந்தால் நீங்கள் என்னை புறக்கணியுங்கள். இன்னொருமொரு கேபிள் சங்கரின் விமர்சனம் எனும் போதே புறக்கணிப்பு எவ்வளவு தூரம் சாதகமாய் ஆகும் என்று எனக்கு தெரியும். இவ்வளவு தெரிந்து தொடர்ந்து நான் பாலா படங்களை பார்ப்பதைப் போல..
Shankar Narayan sir you really hit the nail on this movie and I am in 100% agreement with your comments. Following was my comment yesterday to my friends.
Avan Ivan - Bala directs one more non entertaining, boring movie that lacked script + Bad screenplay that makes me feel Naan kadavul was 100 times better. After the first few minutes feelsl like another Aadukalam is coming results in a odu!kalam for the audience. +points Few jokes here and there, Vishals Navarasam acting scene & in general his acting, G.M.Kumar might bag the best supporting actor national award.
நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று தெரிந்தும் பின்னூட்டம் இட்டது என் தவறுதான்...
உங்களுக்கு பைபிள் வசனங்கள் கேட்பது உடலுக்கு நல்லது இல்லைதான். ஆனால் காசு குடுத்தால் மட்டும் நீர் பாதிரியார் அங்கி மாட்டி நடிப்பீர். அப்போது சொல்லவேண்டியதுதானே என்னக்கு உடம்புக்கு ஆகாது என்று? இதற்கும் அது நடிப்பு, இது வேறு என்று ஜல்லி அடிப்பீர். நல்ல சந்தர்ப்பவாதி....
Very bad review ....
Really very nice film....
And I don't like your father acting which I seen two weeks before your acting very bad and very worst....
charles எழுதியிருப்பது அப்பட்டமான தனி மனித தாக்குதல். எனக்கு கூட சங்கரின் எந்த விமர்சனத்தையும் 100 சதம் ஒப்ப மனம் இல்லை. ஆனால் உங்கள் கருத்துபடி ஒருவன் கிறித்தவனாக நடித்தால் பைபிளை ஒப்புகொள்ள வேண்டிய அவசியமில்லை. அமிர் யோகி படத்தில் எப்படி நடித்தார்? அவர் இந்து மதத்தை எந்த விதத்திலும் ஒப்புகொண்டவர் இல்லை. இவரை போன்ற நிறைய பேர். ஆனால் இந்த சுவிசேஷ காரர்கள் உலகின் எந்த மூலையிலும் ஒரே மாதிரிதான் உள்ளனர். மாறுங்கள் charles
cable Sankar watched the film in full mappula. ha ha . I dont want to read his review hereafter.
Bala - one of a kind!
No one can imitate Bala and no one can direct films like him!
When he was giving world class movies, it failed to attract commercial audiences!
This made him to direct such a commercial movie!
So, fault is simply with the Tamil Nadu 'masala' audiences like you!
@atvoc blog
thanks
்சார்லஸ்
நடிப்பது என் தொழில். அத்ற்கான ஊதியம் பெற்றுத்தான் நடித்தேன். நடிப்பேன்.அதனால் என் உடம்புக்கு ஆகும். ஊழியம் செய்வது உங்கள் தொழில் என்று சொல்லுங்கள். கிடைக்கிற இடங்களில் எல்லாம் கிறிஸ்துவ போதனைகளை பரப்புவது தான் என் தொழில் என்று ஒத்துக் கொள்ளுங்கள் சார்லஸ். நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் மரியாதையாய்தான் பதில் சொன்னேன். என்னை நாய் என்று திட்ட உங்களுக்கு உரிமையில்லை.ஊழியக்காரரே..
@கார்த்திக்
நன்றி.. உங்களின் என் நடிப்பு பற்றிய விமர்சனத்துக்கு. அந்த நடிப்பு எனக்கே பிடிக்கவில்லை என்றுதான் எழுதியிருந்தேன். எல்லோருக்கும் என்னைப் பிடித்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயமில்லை.
ராஜரத்தினம்.
விடுங்க.. அவரு ரொம்ப நல்லவரு...
@மணி.
நன்றி.. மணி. உங்கள் இஷ்டம். :)
காமசூத்திராவை தலைகீழாக கற்று வைத்திருப்பதற்கும் , கலவியில் வெற்றிகரமாக ஈடுபடுவதற்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் தான் சினிமாவைப் பற்றி பேசுவதற்கும் , சினிமாவில் இயங்குவதற்கும் இடையில் இருப்பது ---இதை புரிந்து கொள்ளுங்கள் திரு.யஸ்.ராமகிருஷ்ணன் {எழுத்தாளர் } அவர்களே......
R.S.செந்தில் குமார்
ரிஷோபன்.
பாலா நிச்சயம் ஒன் ஆப் எ கைண்ட் தான். அற்புதமான உணர்வுகளை கொடுக்ககூடிய காட்சிகளை திரையில் கொடுக்கக்கூடியவர்தான். ஆனால் மொத்த படமாய் பார்க்கும் போது அவையெல்லாம் ட்ரெயின் ஆகிவிடும். எனக்கு படம் பிடிக்கவில்லை.அவ்வள்வுதான். அது கமர்சிஷியலா இல்லையா என்பதை பற்றியெல்லாம் நீங்கள் ஏன்குழம்ப வேண்டும்.
நீங்க மட்டும் லுல்லா கல்லன்னு சொன்னா நல்லா வார்த்த அவங்க குஞ்சுமநின்னு சொன்னா கேட்டா வார்த்தையா
-
Mr.Cable, நல்ல விமர்சனம்.பாலா பெரிய இயகுனர்கரகாக, மட்டர்வர்களை போல் கண்முடித்தனமாக பாராட்டி எழுதாமல், நடுநிலையான கருத்துடன் எழுதியதற்கு நன்றி. விஷாலின் நடிப்பு அட்டகாசம். கதை (different story line not always below poverty line people story) நல்ல இருந்திருத இன்னும் அவரின் நடிப்பை ரசிச்சு இருக்க முடியும்.
Very Bad(one sided review against Bala)and one more, I really wonder how can you able to see that since sethu, you ve nt seen a better from Bala????
mister keralakaran
நான் எங்கய்யா அவரு குஞ்சு மணி பத்தி பேசுனதை தப்பா சொன்னேன். நீயா நினைச்சிக்க கூடாது. சரி.. கேரளாக்காரர் நீங்க தமிழ் அவ்வளவா தெரியாது இல்லை.. அது நான் பறைஞ்சதில்லை. அட நமக்கும் மலையாளம் கொஞ்சம் வருதோ../ நன்னி சேட்டா..
ப்ரீஸ்
எல்லோருடய அருமையான உழைப்பு இருந்து விழலுக்கு இறைத்த நீர் ஆகிவிட்டது.
கிருபாகரன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.. என்னை பொறுத்த வரை சேதுவுக்கு பிறகு நான் பாலாவிடமிருந்து ஒரு முழுமையான திருப்தியான படத்தை பார்க்கவேயில்லை. அவரின் கதை கேரக்டர்களைப்பற்றி ஆர்க்யூமெண்ட் செய்வதாய் இருந்தால் நாள் போதாது.
யாருப்பா அது shortfilmindia? கேபிள் அண்ணன் பதிவுல வந்து பதில் கமன்ட் போடுறது?
இங்க நடக்கின்ற விவாதம் தான் சார் படத்தின் வெற்றி
கார்த்திக் கவி..
படத்தின் வெற்றி என்பது கமர்ஷியல் என்றால்.. பாவம் நீங்கள்.
நான் கம்ர்ஷியல் என்றால் குட்.. நானும் ஆரோக்கியமான விவாதங்களை வரவேற்கிறேன் என் விமர்சனைத்தை உள்பட.
அதுவும் நாந்தேன் சிவகுமார்.
கேபிள் சார் .,
வேண்டா வெறுப்பா பிள்ள பெத்து , காண்டா மிருகம்னு பேரு வச்ச மாதிரி படத்த சரியாய் பாக்காமலே விமர்சனம் எழுதின மாதிரி இருக்கு .
நிறைய சின்ன சின்ன விசய்ழ்ங்கள கவனிக்காமலேயே வண்டி வண்டிகேள்வி கேட்டு இருக்கீங்க .
படம் உலகத்தரம் இல்லனாலும் ,பாக்க வேண்டிய ஒன்னுதான் .
தியேட்டர் புல்லா கேட்ட சிரிப்பு இன்னும் காதுக்குள்ள இருக்கு .
ஒரு தலை பட்சமான விமர்சனம் . சேது மாதிரி இன்னொரு படம் வேணாம் . வெரைட்டியான படங்கள் வரணும் பாலாகிட்ட இருந்து .
//நீங்க தான் படம் பார்த்துட்டு ஒரு விமர்சனம் எழுதுங்களேன். அதை படிச்சிட்டு நாலு பேர் என்ன நாற்பதாயிரம் பேரைக்கூட பார்க்க வையுங்க..//
//மிஸ்டர்.எஸ்.எஸ்.கே.. மிக்க நன்றி.. நீ ஒரு விமர்சனம் எழுதேன். அப்படின்னு கேட்க மாட்டேன். ஏன்னா கேக்க நான் உன்னைப் போல காமெடி பீஸா..//
You are contradicting Cable.
But your review is good. Just take all feedback comments in your stride and move on.
மிஸ்டர் ரொம்ப முக்கியம்.
படத்துக்க்கு முக்கியமான விஷயங்களை விட்டுட்டு.. சும்மா சும்மா சின்ன சின்ன விஷயங்களை பத்தி பேசி ஏத்தி விட்டுத்தான்.. இந்த மாதிரி ப்டம் கொடுக்கிற தைரியம் வருது. ஒலக தரம்னு ஒண்ணுமேயில்ல.
கோபிண்ணே..
ரெண்டுத்துக்கு வேற வேற அர்த்தம். ஏன்னா.. முதல்ல நான் சொன்னது. நான் விமர்சனம் எழுதி நிறைய பேரை பார்பதை தடுப்பதை சொன்னதற்காக.. இரண்டாவது நான் விமர்சனம் எழுதியதை விமர்சனம் செய்யாம.. உன்னால் படமெடுக்க முடியுமா? என்பத்ற்காக.. ரெண்டுத்துக்கு கண்டெண்டோடு படித்தால் வித்யாசம் தெரியும்.
கோபிண்ணே..
ரெண்டுத்துக்கு வேற வேற அர்த்தம். ஏன்னா.. முதல்ல நான் சொன்னது. நான் விமர்சனம் எழுதி நிறைய பேரை பார்பதை தடுப்பதை சொன்னதற்காக.. இரண்டாவது நான் விமர்சனம் எழுதியதை விமர்சனம் செய்யாம.. உன்னால் படமெடுக்க முடியுமா? என்பத்ற்காக.. ரெண்டுத்துக்கு கண்டெண்டோடு படித்தால் வித்யாசம் தெரியும்.
கேபிள் சார்,
நான் உங்க பதிவுகளை தொடர்ந்து 3 வருசமா படிச்சுட்டு வர்றேன்... உங்கள பார்த்து ரொம்ப ஆச்சர்யப்படிருக்கேன், பெருமபட்டிருக்கேன்... உங்களுடைய விமர்சனங்கள், கதைகள் பிடிக்கும். ஆனால், இப்ப நீங்க பாலாவை பத்தி எழுதினது ரொம்ப வருத்தமா இருக்கு...
'அவன் - இவன்' என்னையும் எதிர்பார்த்த அளவுக்கு திருப்திபடுத்தலை... வைரம் கொஞ்சம் குறைவா ஒளி வீசிருக்கு... ஆனா அவர் ஒரு சிறந்த இயக்குனர். I hope none disagree with this point. His 'Pidha magan' and 'Naaan Kadavul' are pretty good examples.
He is one among the tamil best directors... but, as i said earlier, 'avan-ivan' disappointed me... i hope he ll give good moveis in future...
Thanks and regards,
Shankar S
சங்கர், உங்கள் தளத்தில் பின்னூட்டம் இடவில்லை என்றாலும், தொடர்ச்சியாக படித்து வருபவன். தங்களுக்கு பாலா பிடிக்கவில்லை என்றால் இவ்வளவு கீழ்த்தரமாக அவரின் படத்தை விமர்சித்திருக்க வேண்டாமே? ஒரே வரியில் பிடிக்க வில்லை என்று எழுதினால் போதுமே? எதுக்கு இவ்வளவு பிலாக்கணம்? படம் பார்த்தேன், லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே இருந்தாலும், பாலாவின் அக்மார்க்த்தனம் நன்றாகவே வெளிப்படுகிறது. அவரின் உள் குணம் என்னவோ அதே திரையில் பிரதிபலிக்கிறது.. வாழ்க்கையில் அவர் அழுக்கனாகவே இருக்க ஆசைப்பட்டிருக்கலாம், அதுவே அவர் படங்களில் பிரதிபலிக்கிறது. வொயிட் காலர் படங்கள் அவர் எடுப்பதில்லை... நீங்கள் அப்படி எதிர் பார்த்து சென்று எமான்று எழுதியதாகப் படுகிறது இந்த விமரிசனம்???
Dr . ராஜ்
ஒரு மொக்கைப் படவிமர்சனத்துக்கு,இவ்வளவு கண்டனகணைகளா?!!!. ஆசர்யமாக இருக்கிறது. கண்டனம் தெரிவித்தவர்களுக்கு ஒரு கேள்வி நீங்கள் குழந்தை,குட்டியுடன் போய் இப்படத்தை பார்க்கமுடியுமா? ரெட்டை அர்த்த வசனம் வைக்கும் கலாசாராம் போய்,நாற்றமெடுக்கும் வசனம் வைப்பது இப்போது பேஷனாக போய்விட்டது.எந்த வீட்டிலும் படுக்கை அறைகளும் கழிவரைகளும் திறந்தேவைக்கப்படுவதில்லை[பிசியாகயிருக்கும்போது]ஆனால் சினிமாவில் இதை தெறந்து வைத்து படமெடுத்துவிட்டு யதார்த்தம் என்கின்றனர்.அழுக்காணவர்களின் படம் அப்படித்தான் இருக்கும் ,ஓய்ட் காலர் நீ ஏன் போறே என்ற கேள்வி வேறு? அதை பாலா பட விளம்பரத்தில் சொல்லி தொலைத்திருந்தால் நாங்கள் ஏன்? போகப்போகிறோம்.ஒட்டு துணியில்லாமல் சீனியர் நடிகர் ஒருவர் துணிச்சலாக நடித்திருக்கிறார்.அவரை விட துணிச்சலாக பாலா ஒட்டு கதை யில்லாமல் படம் எடுத்து இருக்கிறார்.இவர்கள் இருவரையும் விட துணிச்சலானவர்கள் சகிப்பு தன்மையுடன் படம்பார்பவர்கள்தான்.
முதலில் எனது விமர்சனத்துக்கும் வந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றிகள்!
உங்கள் பல கருத்துகளுடன் கேள்விகளுடன் நான் ஒருமித்து போகிறேன்.
அதானே ஒரு கோடி கடத்தினா ஆளுக்கு தண்டன பற்றி கதயயே பிறகு காணோமே! பாலா கனக்க காலம் இருந்து படம் எடுத்ததாதான் லொஜிக்மீறல்கள் குறைவா படம் எடுக்கலாம் போல!!
சங்கர்... ஒரு பட விமர்சனத்துக்கு இத்தனை பின்னூட்டங்கள்... உங்களுக்கு ஒரு பெரிய சரணம்... இவ்வளவு பொறுமையா எல்லாவற்றிற்கும் பதில் எழுதுகிறீர்கள்...
ஒரு விஷயத்தை ஏன் புரிதலுக்கு இத்தனை கஷ்டம்? - ஒரு கலை படைப்பு பலரால் பல விதமாக பார்க்கப்படும். உங்களுடையது ஒரு பார்வை. அவ்வளவுதானே... இதில் சச்சரவு எதற்கு? என்னளவில் உங்கள் பார்வையோடு நான் ஒத்து இல்லை ஆனாலும் உங்கள் பார்வையின் நிலை எனக்கு புரிகிறது. அதை மதிக்கத்தான் வேண்டும். இந்த கருத்து விவாதத்தில் கருத்து சொல்பவரை விமர்சிப்பது எனக்கு உடன்பாடில்லை.
அனைவருக்கும் வணக்கம் ...............
படத்தையும் பாலாவையும் மட்டும் பார்த்து அனைவரும் எழுதாதீர்கள் .................பால சார் படத்தை நன்றாக எடுக்கா விட்டாலும் விஷாலுக்கும் நடிக்கத்தெரியும் என்று காட்டிகொடுத்து விட்டார் ............அதற்க்கு பாலா சார்க்கு நன்றி .....................பாலா சார்க்க்காக இல்லாவிட்டாலும் விஷாலுக்காக படத்தை பார்க்கலாம் ............................
your review is awesome...
Can I get link to your Shortfilms? were they uploaded to youtube?
pradeep
you can get it in my குறும்படங்கள் லிங்க்
இந்தப்படம் பாலாவுக்கு கிரியேட்டிவ் மலட்டுத்தன்மை வந்து விட்டதை அப்பட்டமாக காட்டுகிறது.உங்கள் விமர்சனத்தை விடக்காட்டமா நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன்
{தலைப்பே அவன் இவன் இயக்கியது எவன்?}
உங்கள் பின்னூட்டம் அத்தனையும் சச்சின் சிக்ஸர்கள்.இதை பாலா படிச்சாலே பித்தம் தெளிஞ்சிரும்.
en enniya tamil makkala
YALLAM loose madri vala pandrika
mr. bala adutha vala pakapoitaru
mr . kal pathi andra poitaru
neega mattum yanda adichukuringa
poi polla kutty ya padika vaika pa
ipadiku
rajesh d g8
enakku padam suthama pudikkala ... paavam vishal,g.m.kumar... sethu 2n half la vikram apdi irukkura maari kaatunadhula oru artham irukku adhae maari dhaan pidhamagan , naan kadavul la yum.. aana idhula yaen vishalku ondra kannu ??? seri charactera irukkattum .. aana aarya mandai yaen apdi irukku... enga irundhu enga clgku poraanga andha ponnungana yaedho kaatukkulla vandhu love pannittu poraanga... padathula vishal thiruduvaara maattaara ... thideernu oru sombayaaadhu thiruda mudiyumaangra maari varudhu aana pootta therakka kootittu poraanga,naan andha judge character pinnadi use aaga pogudhunu nenachaen aana.... avana pathi ivana pathi paatukkagavum ponaen adha kaanavae kaanom kadhaikku thaeva illana pinna yaen adha audio cd la vitaanga??? edhirpaarpu illama ponumna cd la irukkura paatta koodava padathula edhirpaakka koodadhu.... naanum oru sethuva edhirpaakkuraen... adhum sethu 1st half ethni thadava paathaennu enakkae theriyaadhu....ena porutha varaikkum sethu first half bala range vera ,2nd half,nandha,pithamagan ,naan kadavul bala vera ... avan ivanla balavayae kaanumngra maaridhaan sir irukku....
நம்ம மக்களோட மெண்டாலிட்டி இது.. பிடித்த நடிகரோ இயக்குனரோ.. விமர்சிக்கபட்டால் என்ன ஏது என்று புரியாமலே வரிந்து கட்டுவது!!.. என்னை பொருத்த வரையில்.. கேபிளின் .. ஏமாற்றமே விமர்சனமாக வெளிப்பட்டுள்ளது!! பாலாவுக்கும் இது மணி கட்ட வேண்டிய நேரமே. ஒரு நெகட்டிவ் விமர்சனம் வந்தால்தானே..தன்னுடைய க்ளிஷேக்களை மாற்றி கொள்வார். இன்னொன்று பாலா ஒன்றும் அறிமுக இயக்குனர் அல்லவே இப்படம் ஓடாமல் போனால் வாய்ப்பின்றி ஒடிப்போவதற்கு. கேபிளின் ஆதர்சமான மணி சாரே..வியக்கும் இயக்குனர் தானே பாலா :-)
Hello Mr,Cable Sankaranaraynan..
I watched all your three shortfilms, oops... nothing to say... expected more but disappointed a lot.. As a reviewer you are doing a great job but as a director???????????,,, my one line reviews to your shortfilms:
1. மெளனமே--: I can't accept this as a shortfilm, Just to demosntrate a poem u wasted 250rupees...
2. நிதர்சனம்: Looks like a small clip of a B grade movie...
3.ஆக்ஸிடெண்ட்: this one is not too bad in visualization compared to your previous two shortfilms, but you have much more to learn.. Way to go.... even a 20year old boy is making amazing films (check behindwoods shortfilms column)
மெளனமே
நிதர்சனம்
ஆக்ஸிடெண்ட்
நன்றி பிரதீப். உங்கள் விமர்சனத்துக்கு.
அப்பாடக்கர் என்றால் என்ன?
இது சென்னையைச் சேர்ந்த செந்தமிழ். மகான் தக்கர் பாபா சென்னையில் சிலகால இருந்தபோது சென்னைவாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர். வேதங்களிலும்,ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக எந்தக் கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதேபோல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லபட்டு பின்னர் சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது. அப்பா தக்கர் பாபா வித்யாலயான்னு டிநகர்ல ஒரு ஸ்கூல் இருக்கு. இப்படி சொல்லிக் கேட்டீங்கன்னா அங்க ஒரு பயலுக்கும் தெரியாது. அப்பாடக்கர் ஸ்கோலு எங்கருக்குன்னு கேளுங்க, டக்குனு காட்டுவானுங்க :)
ithuvum theriyama Cable a Pugalureengale!!! :D :D
athaanee.. mohammed..:)
Vidunga Boss Arasiyalla ithellam SAGAJAM!!!
களவாணி படத்தோட கமெண்ட படித்ததில் இருந்து, நீங்க நெகடிவ் கமெண்ட எழுதினா அது பாசிடிவ் ஆக இருக்கும் என்று நம்பி இந்த படத்துக்கு போனேன்.ஆனா இப்ப புரிகிறது, எல்லாரும் எப்போதும் தவறு செய்யமாட்டார்கள் என்று.
you shut up.... edho sollunungaradhukosaram solladhinga.... bala is great... nice movie,....
முதன் முதலாய் உங்க பிளாக் வந்தேன் அவன் இவன் விமர்சனம் பார்த்தேன் . என் மனதில் பட்டதை அப்படியே சொல்லி இருந்தீர்கள் . சரியான விமர்சனம்.
Post a Comment