
டூயட் பாடவில்லை, ஏழை குழந்தைகளை தூக்கி வைத்து, ஆயாக்களை கட்டிக் கொண்டு பாடவில்லை. நான் வளர்ந்ததே உன்னால்தான் என்று பார்வையாளர்களை பார்த்து பாடவில்லை. ஆனால் இதுவெல்லாம் இல்லாமல் அஜித் ஒரு அஜித் படம். பல சமயங்களில் ஓவர் பில்டப் சொதப்பிவிடும். ஆனால் அதே சமயம் ஓவர் பில்டப் சும்மா எகிறி அடித்து தூள் பரத்தவும் செய்யும். மங்காத்தா ரெண்டாவது வகை. சும்மா அடித்து தூள் பரத்தியிருக்கிறார்கள்.

டி20 பைனலை வைத்து ஆடப்படும் கிரிக்கெட் சூதாட்ட பணமான 500 கோடியை போலீஸ் ப்ரச்சனை காரணமாய் ஊரில் சினிமா தியேட்டர் வைத்துக் கொண்டு தில்லாலங்கடி வேலை செய்யும் ஜெயப்ரகாஷ் மூலமாய் ட்ரான்ஸாக்ஷன் செய்ய நினைத்திருக்க, அந்த பணத்தை கொள்ளையடிக்க அவரிடம் வேலை செய்யும் வைபவ், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், பிரேம்ஜி, பிரேம்ஜியின் பார் ஓனர் நண்பன் என்று எல்லோரும் சேர்ந்து ப்ளான் செய்திருக்க, நடு ப்ளானில் ஆட்டத்தில் நுழைகிறார் அஜித். அதை எப்படி கொள்ளையடித்தார்கள்? அப்புறம் என்ன நடந்தது என்பதை வெள்ளித்திரையில் பாருங்கள்.

நிஜமாகவே ரொம்ப நாள் ஆச்சு அஜித்தின் பர்மாமென்ஸை பார்த்து. சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில், நாற்பது வயது ஆள் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளூம் கேரக்டர் செம. முதல் நாள் ராத்திரி போதையில் லஷ்மிராயை கூட்டி வந்து பொரட்டி எடுத்துவிட்டு கேர்ள் ப்ரெண்டான திரிஷாவுடன் சல்லாபிக்கும் இடத்தில் ஆரம்பித்து, மெல்ல, மெல்ல தன் ஆளுமையை அழுத்தமாய் பதித்திருக்கிறார் அஜித். அதிலும் இடைவேளைக்கு முன் ஆட்டத்தை ஆட தனியாய் செஸ் போர்டின் முன் உட்கார்ந்து கொண்டு பேசும் காட்சிகளூம், இரண்டாவது பாதியில் பண வெறி பிடித்தலையும் காட்சிகளும் நல்ல பெர்மாமென்ஸ். முழுக்க முழுக்க அஜித்தின் ராஜ்யம் தான். வெங்கட் பிரபு டீம் முழுவதும் அஜித்தை ஆராதிக்கும் ஆட்களாக இருப்பார்கள் போலிருக்கிறது. சும்மா உட்காருகிற நிற்கிற ஷாட்டுகளில் எல்லாம் என்னன்ன செய்ய முடியுமோ அத்துனை டெக்னிக்குகளையும் உபயோகித்து பில்டப் செய்திருக்கிறார்கள்.

அர்ஜுன்க்கு போலீஸ் கேரக்டர். வழக்கம் போல ரெண்டு காட்சிக்கு ஒரு முறை சீரியஸாய் வருகிறார். துப்பாக்கியால் சுடுகிறார். காரில் துரத்துகிறார். படத்தில் லஷ்மிராய், திரிஷா, அஞ்சலி ஆகியோர் இருந்தாலும் லஷ்மிராய்க்கு கிடைத்திருக்கும் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. என்னா ஒரு இடுப்புடா? அஞ்சலிக்கு இன்னொரு வெத்து கேரக்டர். வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்கள் அனைவருமே இதிலும் ஆஜர். கொஞ்சம் சலிப்பாக இருக்கிறது. முக்கியமாய் ப்ரேம்ஜி அமரன். கொஞ்சம் சலிக்க ஆரம்பித்துவிட்டார். ஜாக்கிரதை வெங்கட் பிரபு.

படத்திற்கு மிகப் பெரிய பலம் சக்தி சரவணின் ஒளிப்பதிவு. அஜீத்தின் ஸ்கீரின் ப்ரெசென்ஸை அருமையாய் பிரதியெடுத்திருக்கிறார். ஸ்ரீகாந்தின் எடிட்டிங் சில பல இடங்களில் கண்களை உறுத்துகிறது. யுவனின் இசையில் மங்காத்தா டைட்டில் மீசீக்கும், ஒரு பாடலும் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் படத்தின் வேகத்திற்கு பெரிய தடையாய் இருப்பது பாடல்கள் தான். ஒட்டவேயில்லை. பின்னணியிசையில் மிஷன் இம்பாஸிபிள் ட்ராக்கையெல்லாம் தூசு தட்டி போட்டிருப்பது வேடிக்கையாய் இருக்கிறது. இத்தனைக்கு கார்த்திக் ராஜா வேறு வேலை செய்திருக்கிறார் பின்னணியிசையில்.

வெங்கட்பிரபுவின் ஆட்டம் என்று டைட்டிலில் போடுகிறார்கள். ஓஷன் 11, ஹீட், பேங்க் ஜாப் போன்று இன்னும் சில படங்களிலிருந்து எல்லாம் உட்டாலக்கடி அடித்திருக்கிறார் வழக்கம் போல. மெயில் அனுப்புகிறவர்கள் குறைந்தது ஏழு எட்டு மெயில் அனுப்ப வேண்டியிருக்கும். ஐந்நூறு கோடியை கொள்ளையடிக்க வேண்டும் சொல்லும் போதே பிரம்மாண்டமாய் இருக்கிறது அல்லவா.. அதை கொள்ளையடிக்கும் காட்சி எப்படியிருக்க வேண்டும்? படு மொக்கையாய் ஒரு கொள்ளை. அதுவும் அதற்கு ப்ளான் பண்ணுகிறேன் பேர்விழி என்று திரைக்கதையை ஜவ்வாக இழுத்து முதல் பாதியை கொட்டாவி விட்டே டயர்டாக்கி விடுகிறார்கள். அதே போல இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு ஆக்ஷன் காட்சிகளை செய்திருக்கலாம் என்பது என் எண்ணம். சும்மாவாச்சும் டப்பு டுப்பு என சுடுவதும், யார் யாரை சுடுகிறர்கள் என்று உத்து பார்த்தே கண்டுபிடிக்க வேண்டிய க்ட்டாயம் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. அதே போல் திரிஷா காதல் சோகத்தில் பாடும் காட்சி, அஞ்சலி தேவையேயில்லாமல் வைபவிடம் கோபித்துக் கொள்வதும், கட்டி பிடித்து அழுவதும் படத்தின் ஓட்டத்திற்கு தேவையில்லாதது.

படத்தை காப்பாற்றுவதே ரெண்டாவது பாதிதான். முழுக்க, முழுக்க, அஜித்தையும், ஆக்ஷன் கோரியோகிராபர்களை மட்டுமே நம்பி திரைக்கதை அமைத்து அதில் ஜெயித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். சும்மா திகுதிகுவென போகிறது. சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியா சேர்த்து குறைந்த பட்சம் நானூறு ஷோக்கள் ஒரு நாளைக்கு ஓட்டுகிறார்கள். தேவிகருமாரி தியேட்டர் மூணு லட்சம் ஹயர். இன்றைக்கே ஒன்னரை க்ராஸ் செய்துவிடும் என்கிறார்கள். ரொம்ப நாளாய் பெரிய ஆட்டம் ஆடாத குறையிருந்த்தை மங்காத்தா தன் பேயாட்டத்தை ஆட ஆரம்பித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஐம்பதாவது படம், நூறாவது படமெல்லாம் எல்லாருக்கும் ஹிட் ஆவதில்லை. ரஜினி, கமல், விஜய், என்று பெரிய நடிகர்கள் அனைவரது படங்களின் நிலை அதே. ஒரு சில பேருக்கே அந்த அதிர்ஷ்டம் உண்டு. அஜித்துக்கு அது நிறையவே இருக்கிறது.
35 comments:
nice review.... gonna see it when the ticket is available.....
மொத வெட்டு...
அருமையான விமர்சனம்.. தல ஜெயிச்சுட்டார் அது மட்டும் உண்மை.
First half bore...
Second half Superb...
அதிலும் இடைவேளைக்கு முன் ஆட்டத்தை ஆட தனியாய் செஸ் போர்டின் முன் உட்கார்ந்து கொண்டு பேசும் காட்சிகளூம்...
It's also bore... But ajith performance super in this scene...
super review sir
just ajith
ACTIVE வான அஜித் குடுத்ததிக்கே வெங்கட் பிரபுவுக்கு THANKS சொல்லலாம், சும்மா பட்டய கிளப்பியிருக்காங்க
படிக்காமல் பதில் எழுதுவதற்கு மன்னிக்கவும்... இன்னும் படம் பார்க்கவில்லை, அதனால் விமர்சனம் படிக்கவிருப்பம் இல்லை... விரைவில் நல்ல கமெண்ட் போடுகிறேன்...
அன்புடன் சதீஷ் மாஸ் (தல ரசிகன்)
Thanks for ur review
எல்லோருமே படம் நல்லா இருக்கு ஹிட்டுன்னு சொல்லும்போது சந்தோசமா இருக்கு தல...
ஒரு வெளம்பரம்:
மங்காத்தா – THIS IS MY F**CKING REVIEW
http://philosophyprabhakaran.blogspot.com/2011/09/this-is-my-fcking-review.html
எவன் சார் இந்த பேரை கண்டுபுடிச்சான்..சால்ட்டு அண்டு பேப்பரு லுக்காமுல்ல.
வரிசையாக அரசு விடுமுறை, பிறகு சனி, ஞாயிறு. திங்கள் அன்று அமெரிக்க விடுமுறை என்பதால் சாப்ட்வேர் இளைஞர்களும் தியேட்டருக்கு படை எடுப்பார்கள். மங்காத்தா ஜாக்பாட் அடிக்கப்போவதில் சந்தேகமில்லை. One of your best reviews with enough details..!!
naan padam parthuten.... romba nallaiku appuram oru nalla ajith padam.....vetparuthi
சங்கர் ஜி...
அப்படின்னா, பில்லாவுக்கு அப்புறமா இந்த மங்காத்தா தான் “தல”யோட ஹிட் படமா?
எப்படியோ, ரொம்ப நாளைக்கு அப்புறமா ஒரு ஹிட் படம் தந்தாய்ங்களே, அந்த மக்காஸ்க்கு நன்றி....
Mankatha..Ajith walking pannala (Billa),it will be a hit..Thala has rocked in this movie with his dance and acting..So sollavae vendam, this is a huge blockbuster..He had a great charisma when he danced, was very pleasing to see...Venkat prabhu GAME actually started after the movie ended..Chance a ila..Athukagavae 10 times pakalam...
எதிர்பார்த்த ரிசல்ட்தான், super review sir
மங்காத்தா இடைவேளைக்கு பின் படம் முழுவதும் அஜித் மீதே பயணம் செய்கிறது சில இடங்களில் எடிட்டிங் மட்டும், மற்றபடி No logic Nice Magic.
"ஐம்பதாவது படம், நூறாவது படமெல்லாம் எல்லாருக்கும் ஹிட் ஆவதில்லை. ரஜினி, கமல், விஜய், என்று பெரிய நடிகர்கள் அனைவரது படங்களின் நிலை அதே. ஒரு சில பேருக்கே அந்த அதிர்ஷ்டம் உண்டு. அஜித்துக்கு அது நிறையவே இருக்கிறது."
Thala Win Pannitar Cable annathe
//டூயட் பாடவில்லை, ஏழை குழந்தைகளை தூக்கி வைத்து, ஆயாக்களை கட்டிக் கொண்டு பாடவில்லை. நான் வளர்ந்ததே உன்னால்தான் என்று பார்வையாளர்களை பார்த்து பாடவில்லை. ஆனால் இதுவெல்லாம் இல்லாமல் அஜித்// செம குத்து ஜி. பிரபல நடிகர்களையெல்லாம் கொத்து பரொட்டாவக்கிட்டீங்க.
//முக்கியமாய் ப்ரேம்ஜி அமரன். கொஞ்சம் சலிக்க ஆரம்பித்துவிட்டார்//
கொஞ்சம் இல்ல ஜி ரொம்பவே மொக்க போடுறார் . இதுல தேவை இல்லாம அவருக்கு எல்லாம் buildup வேறு படம் முழுவதும்.
//படத்தை காப்பாற்றுவதே ரெண்டாவது பாதிதான்//
முழுக்க முழுக்க உண்மை. முதல் பாதியில் ஒண்ணுமே இல்லை. 500 கோடி கொள்ளை அடிக்கும் சீன் இன்னும் கொஞ்சம் சிந்தித்து இருக்கலாம். இரண்டாவது பாதி தான் அஜித்தின் பரி பூரண ஆட்டம். villain ரோல் with some ஸ்டைல்.
//ஐம்பதாவது படம், நூறாவது படமெல்லாம் எல்லாருக்கும் ஹிட் ஆவதில்லை. ரஜினி, கமல், விஜய், என்று பெரிய நடிகர்கள் அனைவரது படங்களின் நிலை அதே.//
ஆமா தல ரஜினி கமல் ஐம்பதாவது படம் எது ??/
கேப்டனுக்கு அடுத்த அஜித்தான் தல..
அவருக்கு மட்டும்தான் 100வது பட்ம ஹிட் :)))
NAN INNUM PADAM PARKALANNA INNAIKKU NIGHT SHOW POREN UNGA REVIEW KADAISI LINE MADDUM THAN PADICHEN NEENGA SOLTINGALA PADAM APPADINA MEGA GEGA HIT THAN POLA .PADAM PARTHUTTU REVIEW PADIKURENNA.
Nice and Good Review.
Prabhuvukku aduththu vijaythan. Avarukkuthan 25, 50 , 100vathu padam ellam flop.
Tanx 4 ur nice review about our thala's fiftyth film. 50avathu padamna ippdi irukkanum endru solli adiththirukkirar enga thala. This is the best film in thala's career. And inimel evanavathu nanthan king of openingnu solluveenkalada endru tamil nadu muluvathum solli adiththirukkirarkal thala rasikarkal.( Anilin anilkalai nan sollavillai.) irukkanum endru solli adiththirukkirar enga thala. This is the best film in thala's career. And inimel evanavathu nanthan king of openingnu solluveenkalada endru tamil nadu muluvathum solli adiththirukkirarkal thala rasikarkal.( Anilin anilkalai nan sollavillai.)
//ரஜினி, கமல், விஜய், என்று பெரிய நடிகர்கள்//
இந்த வரி எனக்கு புரியல...விஜய் எப்ப இருந்து உங்களுக்கு பெரிய நடிகர். டி. ராஜேந்தருக்கு ஆஸ்கார் நிச்சயம் கிடைக்கணுமுன்னு சிறுபத்திரிகையில் சீரியஸா எழுதினா எப்படி சிரிப்பு வருமோ...அத விட ஜாஸ்தியாதான் எழுதிறீங்க...
எதிர்பார்த்த ரிசல்ட்தான்
படம் பாத்துடேன் பாஸ்... இப்ப தான் உங்க பதிவ படிச்சேன், அப்படி இப்படினு பதிவு ஒரு மாறி இருந்தாலும் படம் நல்லா இருக்கு... தல ரசிகனாச்சே, அவருடைய அடுத்த படமும் வெற்றி பெற வாழ்த்தரோ(ன்)ம்...
என்னை பற்றி மேலும் அறிய http://www.sathishmass.blogspot.com வரவும்.... ஹி ஹி ஹி...
அநியாயத்துக்கு மொக்கை படம். இவங்களை நம்பி தயவு செய்து போயிடாதீங்க.
மிக தெளிவான நியாயமான விமர்சனம்
படத்துல தல நிறய கெட்ட வார்த்தைய சைலன்ட் மோடுல பேசியிருக்கிறார்,அதிலும் லக்ஸ்மி ராய்யய் சுட்டுவிட்டு அவர் பேசும் டயலாக்,. இந்த புது டெக்னிக்க இனி நண்டு,சுண்டு நடிகர்களும் தொடர ஆரம்பித்து விடுவார்கள்.பிரேம்ஜி பாஷையில் சொல்வதானால் என்ன கொடுமை சார் இது.
அருமையான விமர்சனம்.....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Post a Comment