Sep 16, 2011

எங்கேயும் எப்போதும்

Engeyum-Eppothum-Movie-Reviewசமீபகாலமாய் தமிழ் திரைப்படங்களை பார்ப்பதில் பெரும் சலிப்பு இருந்தது. அதுவும் மீண்டும் திரைப்பட விநியோகத்திற்காக அரை மணி நேரம் கூட உட்கார்ந்து பார்க்க முடியாத படங்களையெல்லாம் மீண்டும் பார்க்க வேண்டிய இம்சையில் இருக்கும் காலத்தில் படம் ஆரம்பித்த முதல் ஷாட்டிலிருந்து ஒர் படம் நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் அதனூடே பயணிக்க வைக்குமா? என்றால் ஆம் வைக்கும் என்று அடித்து சொல்லியிருக்கிறார்கள்.

 engeyum_eppothum_movie_stills_07 சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு பஸ், திருச்சியிலிருந்து சென்னைக்கு ஒரு பஸ் இரண்டும் விழுப்புரம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிறது. திருச்சியிலிருந்து சென்னைக்கு பயணிக்கும் ஜெய், அஞ்சலி, சரவ். சென்னையிலிருந்து திருச்சிக்கு பயணிக்கும் அனன்யா. இவர்கள் யார்? இந்த விபத்து இவர்கள் வாழ்க்கையில் நிகழ்த்தும் தலைகீழ் மாற்றங்கள் என்ன என்பதுதான் கதை. 
 Engeyum-Eppothum-Movie-Stills32 தூரத்து மொட்டைமாடி பெண்ணை கரெக்ட் செய்ய ஆறு மாசமாய் முயற்சிக்கும் ஜெய், அவள் என்ன கலர் டிரஸ் போடுகிறாளோ அதே கலரில் சட்டைப் போட்டலைவதும், திடுதிப்பென வீட்டிற்குள் நுழைந்து எல்லாவற்றையும் செக் செய்து கொண்டிருக்கும் அஞ்சலியை பார்த்து “யார் நீ என்று கேட்பதும்” அதற்கு அவர் “அங்.. தெனம் மொட்டைமாடியில நின்னு கையாட்டும் போது தெரியலை இப்ப யார்னு கேட்குற” என்றதும் ஜெய் “அவங்களுக்கு நீட்டு தலைமுடியிருக்கும்” என்றதும் பின்பக்கம் திரும்பக்க்காட்டி சாயங்காலம் அங்க வா.. இங்கவான்னு அலைய வைத்து டெஸ்ட் செய்யும் ஒவ்வொரு காட்சியும் சுவாரஸ்ய அதகளம். ஏன் அலைய வைத்தேன் என்று அஞ்சலி சொல்லும் காரணமும், அதற்கான டயலாக்கும் நச். என்னாமா நடிக்குது இந்தப் பொண்ணு. ஜெய்யை டீஸ் செய்யும் போது கண்களின் ஓரத்தில் தெரியும் குறும்பும், அவன் தன் காதலன் என்று அறிவிக்கும் போது முகத்தில் தெரியும் பெருமிதமும்,  ப்ரச்சனையின் முடிவெடுக்கிற தீர்க்கமும், காதலிச்சா பின்னாடி வரப் போற ப்ரச்சனையை சமாளிக்க வேண்டிய மனபலமும் உறுதியும் கொண்ட டாமினெண்ட் பெண் கேரக்டரில் அஞ்சலி அப்படி சூட் ஆகிறார். அவர் இடும் ஆர்டர்களுக்கெல்லாம் ஜெய் குட்டிப் போட்ட பூனையாய் பின்னலையும் போது என்னாடா இது இப்படி பம்மனுமா? என்ற கேள்வி நம்முள் ஓடினாலும், இந்த மாதிரி ஒரு தீர்க்கமான பொண்ணு கிடைச்சா, எவ்வள்வு நல்லாருக்கும்னு நினைக்க வைச்சதினால படம் பார்க்கும் நாமும் அஞ்சலி கூப்பிடுமிடத்துக்கெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறோம் ஜெய்யை போல.  பார்க்கும் போதெல்லாம் அள்ளி அணைத்து கன்னத்தில் முத்தமிடலாமா என்று ஏங்க வைக்கும் அஞ்சலியை க்ளைமாக்சில் தோளில் சாய்த்து ஆறுதல் கொடுக்க முடியாதா? என்று உருக வைக்கிறார்.
engeyum_eppothum_movie_stills_29 ஜெய் மிகவும் அடக்கி வாசித்திருக்கிறார். கேரக்டருக்கு ஒரு சண்டை சீன் வாய்ப்பு இருந்து அதை காட்டாமல் தவிர்த்து வேறொரு காட்சியில் அதை ஒரு சின்ன கிராஸிங்கில் காட்டியது புத்திசாலித்தனம். சரவ் கேரக்டர் இன்றைய சாப்ட்வேர் கலாச்சார இளைஞர்களின் உதாரணம். பஸ்ஸ்டாண்டில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய் அனன்யாவுடன் பயணிக்கும் அந்த பயணம் இருக்கிறதே அதை கொஞ்சம் அவர்களோடு பயணித்தால் தான் தெரியும். முக்கியமாய் அந்த கோவிந்தா பாடலில் வரும் மாண்டேஜுகள் படு க்யூட்.  சரவ்வுக்கு தமிழில் இது அபீஷியலாய் இரண்டாவது படம். மாடர்ன் அர்பன் யூத் கேரக்டருக்கு சரியாய் பொருந்தியிருக்கிறார். சிகரெட்டுக்கு சில்லரையில்லாமல் அனன்யாவிடம் சில்லரை வாங்குவது, அக்கா வீடு வந்தவுடன் பசங்களுக்கு சாக்லெட் வாங்குகையில் சரவுக்கும் சேர்த்து சிகரெட் வாங்குவது, என்று குட்டிக் குட்டியாய் வரும் காட்சிகள் சுவாரஸ்ய குதூகலம்.
Engeyum-Eppothum-Movie-Stills44
படத்தின் முக்கியமான தூணே ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தான். அத்தூணூண்டு பஸ்ஸுக்குள்ளேயும் சரி. பஸ் ஓவர் டேக் செய்யும் போதும் சரி,  முதல் பஸ்சிலிருந்து, அடுத்த பஸ்சின் அடியில் வெளிவரும் போதும் சரி, பஸ்கள் நேருக்கு நேர் மோதி நசுங்கும் காட்சியும் சரி அடிதூள் பரத்தியிருக்கிறார். ஆனால் விபத்துக் காட்சியில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ என்று ஒரு குட்டி நப்பாசை.

அடுத்த பலம் இசையமைப்பாளர் சத்யா. படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே ஹிட்லிஸ்டில் இருக்க, மற்ற பாடல்களும் சுவாரஸ்யம் குறையாமலிருக்க, வேறென்ன.. சமீபத்தில் கேட்டவுடன் பிடித்து போன பாடல்களை கொடுத்து சூப்பர் ஹிட் இசையமைப்பாளர் ஆகிவிட்டார். வாழ்த்துக்கள் சத்யா. யூ டிசர்வ் திஸ். சொட்டச் சொட்டநினைந்துவிட்டாயில் சின்மயி மயக்குகிறார். பாடலின் பிஜிஎம்மில் ABBA வை ஞாபகபடுத்தினாலும் அருமை. ” உன் பேரே தெரியாது.” ” சொட்ட சொட்ட நினைந்துவிட்டாய்” ஆகிய பாடல்களில் நா.முத்துகுமாரின் வரிகளை கேட்டுச் சொல்லுங்கள் படு சுவாரஸ்யம்.
Engeyum-Eppothum-Movie-Stills6 முதல் காட்சியிலேயே தூக்கி போடும் ஒரு பஸ் விபத்துடன் ஆரம்பிக்கும் படத்தில் ப்ளாஷ்பேக்குகளாய் நிறைய அத்யாயங்கள் திரையில் விரிந்தாலும், மெல்ல, மெல்ல அதனுள்ளே பயணிக்க வைத்ததற்கு காரணம் படு சுவாரஸ்யமான திரைக்கதை.  அனன்யா, சரவ் ஜோடியின் ஒரு நாள் பயணம் குட்டி ஹைக்கூ கவிதையென்றால். ஜெய், அஞ்சலி காதல் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் குட்டி சிறுகதைகள்.  இவர்கள் மட்டுமில்லாமல், பஸ்ஸில் வரும் ஒரு கல்லூரி மாணவன், மாணவிக்கிடையே ஏற்படும் ஈர்ப்பு, பயணம் முடிவதற்கு காதலாய் மாறி நம்பர் மாற்றிக் கொள்ளும் காட்சி, புது மனைவியை பிரிய முடியாமல் பஸ் ஏற்ற வரும் கணவன், குட்டிப் பெண், சமையல் கார பயணி, ஜெய்யின் ஊர்கார பெரியவர். வெளிநாட்டில் ஐந்து வருடமாய் இருந்துவிட்டு முதல் முறையாய் தனக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக ஊர் திரும்பும் ஒரு பாசக்கார அப்ப, அவரது ரிங்டோன். அனன்யாவின் அக்கா, நடுவில் ஏறும் முஸ்லிம் பெண்மணி என்று மேலும் பல குட்டிக் சிறுகதைகளை மிக இயல்பாக கேரக்டர்களாய் உலவ விட்டிருக்கிறார் இயக்குனர் சரவணன். ஏற்கனவே பாடல் வெளியீட்டன்று  கோவிந்தா பட பாடலை பார்த்துவிட்டு மாண்டேஜில் இந்த கலக்கு கலக்கியிருக்கிறாரே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் படத்தில் வரும் மாசமா பாட்டை தவிர எல்லா பாடல்களையும் மாண்டேஜிலேயே சொல்லியிருப்பது இயக்குனரில் பலத்தை காட்டுகிறது. க்ளைமாக்ஸின் போது அனன்யா, சரவ்வை பார்த்ததும், முகத்தில் தெரியும் ஒரு அமைதியிருக்கிறதே உருக்குகிறது. ஒரு நெகிழ வைக்கும் க்ளைமாக்ஸ் உடைய படத்தை படு சுவாரஸ்யமாய் திரைக்கதை அமைத்ததில்  இயக்குனரின் உழைப்பு பளிச்சிடுகிறது. வாழ்த்துக்கள் சரவணன். உங்களால் முருகதாஸின் கம்பெனியில் இன்னும் நாலு புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
எங்கேயும் எப்போதும் – என்னா படம்டா..!! Don’t Miss
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

45 comments:

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

me first wow !
comment next...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

will watch tomorrow

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னா படம்டா..!! //

I think tamil movie :)

சி.பிரேம் குமார் said...

கலக்கல் விமர்சனம் அருமை

IlayaDhasan said...

முத்துகுமார் பேரே தெரியாது மற்றும் சொட்ட சொட்ட ,ரெண்டுலயும் அசதிடாறு ...அத புது இசை அமைப்பாளர்
சும்மா நச்சுனு கொடுதிருகாறு

சூர்யா படத்தில் விஜய் வில்லன்

சங்கர் நாராயண் @ Cable Sankar said...

ஏற்கனவே ரெண்டு பட இசையமைப்பாளர். அவர் இளைய தாசன்.
அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Real Santhanam Fanz said...

அந்த கோவிந்தா பாட்ட பார்த்ததுமே தோணுச்சு இது ஒரு முக்கியமான படம்னு.. உங்க விமர்சனம் அத உறுதி செஞ்சிருகச்சி...

Real Santhanam Fanz said...

தேசிய விருது வாங்கின எடிட்டர் கிஷோர பத்தி ஒன்னுமே சொல்லலியா அண்ணே?

kanavugalkalam said...

UNGA KITA IRUNTHU EPPADI ORU VIMARSANAM ENDRAL PADAM KANTIPAGA NALLA IRUKUM SRY ROMBA NALLA IRUKUM..............

Real Santhanam Fanz said...

உங்ககிட்ட இருந்து முழுக்க முழுக்க பாசிடிவ் விமர்சனம் வந்த முதல் படம்னு நெனைக்கிறேன்?

//வாழ்த்துக்கள் சரவணன். உங்களால் முருகதாஸின் கம்பெனியில் இன்னும் நாலு புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ///
அண்ணே எதுக்கோ ரூட் போடுறாரு!! வாழ்த்துக்கள் கேபிள் அண்ணே...

முருகதாஸ் மாதிரி தயாரிப்பாளர்கள்/இயக்குனர்கள் தான் தற்போதைய தமிழ் சினிமாவின் தேவை.

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

அழகான வார்த்தை நடை !
மெல்லிய நகைசுவை ..!
ரொம்ப நாளைக்கு பிறகு
அருமையானா..விமர்சனம் .
ரசித்து எழுதி உள்ளீர்கள் .
படம் பார்த்த உணர்வு .
இயக்குனராக சரவணன் இதனை
படித்து எம்புட்டு சந்தோசம் .
அடைவரோ ! அந்த சந்தோசம்.
நான் அடைந்தேன்...
நான் சமிபமா படம் பார்பதில்லை .
அதனை உடைத்து உள்ளீர்கள் .
சின்ன சின்ன மெல்லிய உணர்வுகள்
வாழ்வை அழகாக்கும் ...அந்த அடிபடையில் ..
இந்த விமர்சனம் அந்த படைப்பை அழகாக்கியது.
வாழ்த்துக்கள் ...இனிய வாழ்த்துக்கள்
அன்புடன் .
யானைக்குட்டி

D.R.Ashok said...

தலைவரே ரொம்ப இழைச்சியிருக்கீங்க... சரி தியேட்டர்ல பார்த்துடுவோம் :)

’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...

முருகதாஸ் பெயரை காப்பாத்திட்டாரு இயக்குனர்.அதெப்படி இயக்குனர்கள் மட்டும் சரியான வெற்றி பட இயக்குனரை பிடித்து படம் தயாரித்துவிடுகிறார்கள்?

Ravikumar Tirupur said...

படத்தின் இயக்குனரை டீவி பேட்டியில் பார்த்தேன் வயதுகுறைந்தவராக இருக்கிறார். இவர் யாரிடம் உதவியாளராக இருந்தார்?
புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஏ.ஆர்.முருகதாசின் எண்ணம் சிறப்படைய படங்கள் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துக்கள்!

shortfilmindia.com said...

Ravi he is a.r.murugadoss asso

கார்த்திக் குமரசாமி said...

இந்த படம் அனைவருக்கும் ஒரு பாடம் ,சிறந்த விமர்சனம் ,வாழ்த்துக்கள்

Elamparuthi said...

must watch movie...this movie teach the lesson for every one...

நல்லவன் said...

மிக அருமையான படம்... எல்லோரும் பாருங்க... பாக்காதவங்களை பார்க்க சொல்லுங்க...

மோகன் குமார் said...

Good review. I wanted to see this movie on the release day because of the 2 songs that was seen already (Masamaa & Govinda), but could not see because of work. Will see soon.

வைரை சதிஷ் said...

அசத்தலான விமர்சனம் சூப்பர்

வைரை சதிஷ் said...

நேரடி ரிப்போர்ட்

இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6

NAAI-NAKKS said...

Thanks.....
Yours best thirai vimarsanam

sivakasi maappillai said...

தலைவரே... உங்ககிட்ட பேசின பிறகு நேத்து போனோம்....

படம் சூப்பர்... ஆனா க்ளைமாக்ஸ் கொஞ்சம் பாலீஸ் பண்ணீருக்கலாம்...

நமக்கெல்லாம் ஒரு ஃபீல் குட் என்டிங்தான் பிடிக்கும்... சும்மா டார்ச்சர் பண்ணி அனுப்பக்கூடாது.....

sivakasi maappillai said...

எனக்கு அனன்யா, சர்வா எபிசோட் ரொம்ப பிடிச்சிது....

அஞ்சலிய இன்னும் ஏன் பெரிய நடிகர்கள்/டைரக்டர்ஸ் யூஸ் பண்ணல....

ஒரு திறமையான நடிகை வீணடிக்கப்படுகிறார்....

ஜெய்க்கு ஒரு ப்ரேக்....

kavi said...

விமர்சனத்தில் இருக்கும் அளவுக்கு படம் சூப்பராக இல்லை...திருச்சியில் நர்ஸாக இருக்கும் அஞ்சலி புத்திசாலியாம், ஆனால் பி.ஈ. படித்த அனன்யா விவரம் தெரியாதவராம்...ஒத்துக் கொள்ள முடியவில்லை..முதல் பாதியில் மிகவும் நீ........ளமான காட்சிகள்..ஜெய், சர்வ், இயல்பாக நடித்திருக்கிறார்கள். அஞ்சலியும், அனன்யாவும் ஓவர் ஆக்டிங்தான்...மல்டிபிளக்ஸ், மற்றும் ஏ சென்டர்களில் மட்டும் வேண்டுமானால் கொஞ்சம் ரசிப்பார்கள்..உடல் உறுப்பு தானம் பற்றிய விஷயம் மட்டுமே மனதைக் கவர்ந்தது...

Samantha said...

my fav actor jai..finally a hit movie..gonna watch today ;)

மதுரை said...

நண்பர் கவி அவர்களுக்கு, எனக்கு தெரிந்து பி.இ முடிச்ச பல பொண்ணுங்க லூசு மாதிரித்தான் நடந்துக்குவாங்க ஏன்னா சின்ன வயசிலே இருந்து படிப்பு படிப்புன்னு ஜி.கே வே இல்லாம மண்ணு மாதிரி இருப்பாங்க பட நர்சிங் முடிக்கிற பொண்ணுங்க வேலை பார்க்குற ஆஷ்பிடலே மனிதர்கள பத்தி சீக்கிரம் புரிஞ்சுக்குறாங்க இப்ப உங்க டவுட் கிளியரா

KathaiSolli said...

உடனே படத்தை பார்க்க தூண்டும்படியான விமர்சனம் நைட்ஷோக்கு உடனே புக் பண்ணிடுவோம்.

kavi said...

@மதுரை - இந்த காலத்துல அனன்யா மாதிரி பொன்னுங்க யாரும் சென்னைக்கு வர்றதுக்கு அந்த அளவுக்கு பயப்படறதும் இல்ல, திருச்சில இருக்கிற பொன்னுங்க இந்த மாதிரி இருக்கிறதும் இல்ல..திருச்சியும் சென்னை மாதிரி மாறி ரொம்ப நாளாயிடுச்சி...நீங்க படத்தைப் பார்த்துட்டு சொல்லுங்க...சென்னைய பத்தி தேவையில்லாத ஒரு பயத்தை ஏற்படுத்தறாரு இயக்குனர்..

சேட்டைக்காரன் said...

// பார்க்கும் போதெல்லாம் அள்ளி அணைத்து கன்னத்தில் முத்தமிடலாமா என்று ஏங்க வைக்கும் அஞ்சலியை க்ளைமாக்சில் தோளில் சாய்த்து ஆறுதல் கொடுக்க முடியாதா? என்று உருக வைக்கிறார்.//

இப்படியா உசுப்பேத்துவீங்க? உடனே படத்தைப் பார்க்கணும் போலிருக்குதே?

// ஒரு நெகிழ வைக்கும் க்ளைமாக்ஸ் உடைய படத்தை படு சுவாரஸ்யமாய் திரைக்கதை அமைத்ததில் இயக்குனரின் உழைப்பு பளிச்சிடுகிறது.//

கண்டிப்பா நான் miss பண்ண மாட்டேன். :-)

Dinesh said...

superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

முரளிகுமார் பத்மநாபன் said...

ஒரு வருடத்திற்கு ஒன்றரை லட்சம் உயிரிழப்புகள் நடைபெறும் சாலை விபத்துகள் குறித்த சமூக விழிப்புணர்வுகள் மிகவும் குறைவு. இது குறித்து பதிவுகள், திரைப்படங்கள், விளம்பரங்கள், விதிமுறைகள் என இன்னும் நிறைய விழிப்புணர்வு தேவை. அதை எடுத்துக்கொண்ட எங்கேயும் எப்போதும் திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்

Dhamu said...

Superu Sir!

rajan said...

SIR, IT IS POSSIBLE TO MAKE A FILM IN 2 CR

shortfilmindia.com said...
This comment has been removed by the author.
siva said...

இது படம் அல்ல அனைவருகும் பாடம் !!!!!!!
Hatts Of 2 Ship of the MOvie!!!!!!
Expecting more 4 him......

shortfilmindia.com said...

rajan we can. for more info please do call me
cable sankar.

Kannan said...

அருமையான விமர்சனம்.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

tamilvijaycell said...

super film

மாரி-முத்து said...

படமும் அருமை.
விமர்சனமும் அருமை.

//பஸ்ஸில் வரும் ஒரு கல்லூரி மாணவன்//

- அந்த முகவரியை கிளைமாக்ஸில் பயன்படுத்தியிருப்பது சோகமான டைரக்டர் டச்...

Srinivas said...

watched in OMR AGS :)
Movie n theatre - rendume super :)
1st time watching in AGS :)

coming saturday goin again in Sathyam :)

Padathula innoru sema scene :)

one girl : (in phone) bus la irukkenda...hmmm..sollu....hey...appa koopadraanga..vei..thiruppi koopadren...(2nd call attend panni)...solluda.. appa kitta pesitu irundhen..:)

Trichy - chennai weekly once pora enakku konjam bayam yethi vittaanga ;)

2 logic mistakes :)

SETC bus Kelambarthuku munnadi wash panra maadhiri kamicha scene :) ( Moota poochi thollai thanga mudila pa )

SETC 120 KM speed la pora madhiri kaamicha scene:D ( 50 a thandiye otta maatengaraanga )

but,

oru edathula Tyre puncture aagara scene :)
naan ponappaye 3 dhadava aayruku :)

:) :)

Engeyum Eppodhum : Exceed Expectations:)

Siddarth said...

தமிழ் சினிமா உருப்படாமல் போனதற்குக் காரணம் மங்காத்தா போன்ற குப்பைகளால் அல்ல. இது மாதிரி mediocre படங்கள் கொண்டாடப்படுவதால்...
வேல்ராஜ் வெற்றிமாறனிடம் பணிபுரியும் போது அவரது ஒளிப்பதிவு உலகத் தரத்தை எட்டுகிறது. இந்தப் படத்தில் அவரது ஒளிப்பதிவு வாணி மஹாலில் போடும் நாடகத்தை நினைவுபடுத்துகிறது... எங்கே பார்த்தாலும் ஒரே வெளிச்சம்...
இந்தப் படத்தின் பெண் கதாபாத்திரங்களைப் பார்த்தால் இயக்குனருக்கு பெண்கள் வாடையே இல்லை போலிருக்கிறது... லட்சணமாய் இருக்கும், கல்லூரியில் நான்காம் வருடம் படிக்கும் ஒரு பெண்ணை குறைந்தது 10 ஆண்கள் propose பண்ணி இருப்பார்கள்... இது எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரு பெண் முன் பின் தெரியாத ஒருவனிடம் அபத்தமாய் பல்லை இளித்துக் கொண்டு, அவனிடம் தன் மொபைல் நம்பரையும் கொடுத்துவிட்டு வருகிறாள்...இந்த காலத்துப் பெண்கள் இந்த அளவுக்கா முட்டாள்களாய் இருக்கிறார்கள்? அப்புறம் ஜெய்...பாவம் அவருக்கு cold coffee தெரியவில்லை...கிழிந்த ஜீன்ஸ் குறித்தும் தெரியவில்லை...இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட், making, கதை மாந்தர்கள், இவை எல்லாவற்றையும் பார்த்தால் இந்தப் படம் 18ஆம் நூற்றாண்டில் வந்திருக்க வேண்டியது போல் இருக்கிறது...

vijay said...

Nice Movie, it show the creativity of youngster

Rafeek said...

படத்தின் அடிப்படையே.. ஒரு விபத்து அவராவரின் கனவுகளை எப்படி கலைத்து போட்டு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை ரசிகர்களுக்கு நம்பகத்தன்மையோடு கொடுத்து இருப்பது தான். அந்த நம்பகத்தன்மையை கூட்டவே அனைத்து கேரக்டர்களும் உழைத்துள்ளார்கள்.
அப்பா சித்தார்த் அப்பாடக்கரு.. எதுக்கு இவ்வளவு காண்டு!!? தமிழ்சினிமா உருப்படமா போச்சுங்குற உங்க புலம்பல பார்த்தா..கைல வெடி மாதிரு ஏதும் ஸ்க்ரிப்ட் வச்சு இருக்கிங்களோ?

Siddarth said...

என் 'காண்டு'விற்குக் காரணம் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தகுதி இல்லாதவர்கள் மட்டுமே புகழப்படுகின்றனர். பஸ் விபத்து காட்சிகளை தவிர்த்துப் பார்த்தால், இந்தப் படம் ஒரு நல்ல மேடை நாடகம்... அப்புறம் நீங்கள் சொல்லும் நம்பகத்தன்மை எங்கே இருக்கிறது இந்தப் படத்தில்? இந்த
இயக்குனர் அமைத்திருக்கும் காட்சிகள் சினிமாவில் மட்டுமே சாத்தியம்.