
தமிழ் சினிமாவை நிதிகளின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்ததாக சொல்லப்பட்ட காலத்தில் தனியொரு சிறு படமாய் வெளிவந்து அசத்திய களவாணி திரைப்படத்தை இயக்கிய சற்குணத்தின் அடுத்த படம். பீரியட் படம். புதிய இசையமைப்பாளரின் இசையில் பாடல்கள் கவனிக்கப்பட தக்க வகையில் அமைந்தது என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.

1960களில் கதை நடப்பதாக சொல்லப்படுகிறது. தன் மகன் எப்படியாவது அரசாங்க உத்யோகஸ்தன் ஆக்குவதே தன் லட்சியமென இருக்கும் அப்பாவின் ஆசைக்காக ஒரு குக்கிராமத்தில் கிராம சேவக்கின் ஆசிரியர் பணியை செய்ய போகிறார் விமல். அந்த ஊரே செங்கல் தயாரிப்பதை நம்பி வாழ்கிறவர்கள். மொதலாளி பொண்வண்ணனின் ஏவலுக்கு கட்டுப்பட்டு அவர் கொடுக்கும் சொற்ப கூலிக்காக மாடு மாதிரி உழைப்பவர்கள். படிப்பு வாசனை என்பதை தங்கள் பரம்பரையே அறியாதவர்கள். இந்த கிராமத்தில் வந்து வேண்டா வெறுப்பாக படிப்பு சொல்லிக் கொடுக்க வரும் விமல். அவரை பார்த்த மாத்திரத்திலேயே காதலிக்க அரம்பிக்கும் கதாநாயகி. இவரை பார்த்தாலே பயந்து ஓடும் பையன்கள் படிக்க வந்தார்களா? விமல் விரும்பும் அரசாங்க வேலை கிடைத்து ஊரை விட்டு போக வேண்டிய நேரத்தில் என்ன முடிவெடுத்தார்? என்பது போன்ற கேள்விகளூக்கு மிகப் பொறுமையாய் நகர்த்திக் கொண்டு போய் கதை சொல்லியிருக்கிறார்கள்.

அறுபதுகளின் களன். இதற்காக உருவாக்கப்பட்ட கிராம செட். அந்த செங்கல் சூளை, மாட்டு வண்டி, ஹீரோவின் காஸ்ட்யூம், லாரி போன்ர விஷயங்களை பார்த்து பார்த்து செய்திருக்கும் ஆர்ட் டைரக்டர் சீனுவுக்கு ஒரு சல்யூட். அசல் அந்தக்கால ஜெமினி கணேசன் போலிருக்கிறார் விமல். இன்னொரு சாம்பார் என்று நிச்சயம் சொல்லலாம். இந்த கேரக்டரில் அவர் சரியாய் சூட் ஆகிறார். வாத்யாரை ஊரே ஆளாளுக்கு கலாய்க்கும் காட்சிகளில் முந்தானை முடிச்சு பாக்கியராஜ் வாத்தியார் ஞாபகம் வந்தாலும், அவர் அளவிற்கு சுவாரஸ்யமில்லை. நாயகி இனியா டிகிளமரைஸ்ட் ரோலில் அழுந்த படிந்த தலைமுடியும், இறுக்க கட்டிய தாவணி, என்று சட்டென மனதில் உட்காரக்கூடிய, அதிலும் படபடவென பேசி ஒட்டிக் கொள்ளும் சுபாவப் பெண் கேரக்டர்தான் என்றாலும் நிறைய க்ளிஷே காட்சிகள். படம் நெடுக வரும் சிறுவர்களின் நடிப்பில் ஆங்காங்கே சுவாரஸ்ய மத்தாப்பூக்கள்.

எப்படி ஆர்ட் டைரக்டர் தன் உழைப்பை கொடுத்திருக்கிறாரோ அதைப் போல ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷுக்கும் நம் பாராட்டை தெரிவிக்க வேண்டும். அருமையான ஒளிப்பதிவு. படம் நெடுக வரும் செபியா டோன். அந்த சரசர சாரக் காத்து பாட்டின் வைட் ஷாட்கள் எல்லாம் ஒரு விண்டேஜ் டச். இசையமைப்பாளர் ஜிப்ரான். முதல் படத்திலேயே மனதை கொள்ளைக் கொள்ளும் பாடல்களை கொடுப்பது என்பது பெரிய விஷயம்தான். சரசரசாரக்காத்தும், போறானே பாடலும் அருமையான காம்போசிஷன்கள்.

எழுதி இயக்கியவர் சற்குணம். களவாணியின் வெற்றியை தொடர்ந்து கமர்ஷியலான ஒரு களனை எடுக்காமல் ப்ரீயட் படம், குழந்தை தொழிலாளர் பிரச்சனை என்று எடுத்த வரையில் பாராட்ட வேண்டும். மிக நுணுக்கமாய் பல காட்சிகளில் உழைத்திருக்கிறார். முக்கியமாய் அந்த கால உடைகள். கவர் போட்ட டிரான்ஸிஸ்டர். வாய் கணக்கு கேரக்டர், அப்புறம் அந்த குருவிக்காரர் கேரக்டர், படபடக்கும் இளைமையான கதாநாயகி, டிரான்ஸிஸ்டரில் சிச்சுவேஷனுக்கு தகுந்தார் போல ஒளிபரப்பாகும் அக்கால இலங்கை கூட்டு ஸ்தாபன ஒலிபரப்புப் பாடல்கள், மண்வாசனையுடனான சடங்குகள், அந்த ஒப்பாரி பாட்டு, முப்பதாம் நாள் சடங்கு, என்பது போன்ற சிற்சில சுவாரஸ்யங்களுக்காக மெனக்கெட்ட இயக்குனர் கொஞ்சமே கொஞ்சம் கதைக்காகவும், திரைக்கதைக்காகவும் செலவிட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
திருமதி பழனிச்சாமி என்றொரு படம். சத்யராஜ், சுகன்யா நடித்த படம். கமர்ஷியல் விஷயங்களை நீக்கி பார்த்தால் அதில் சொல்லியிருக்கும் சுவாரஸ்யங்களை குறைவாகவே யோசித்த திரைக்கதை தான் படத்திற்கு மெயின் வில்லன். கதைக்குள் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. பொன்வண்ணன் செய்யும் செங்கல் பில்டப் எல்லாம் படு ஓவர். பாக்யராஜ் வந்து ரூல்ஸ் சொன்னவுடன் எதுவும் சொல்லாமல் போய்விடுகிறார் வில்லன். சரி. வழக்கமான க்ளைமாக்ஸ் வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்திருக்கலாம். கதாநாயகி விமலை பார்த்த அடுத்த சில காட்சிகளிலேயே அவர் மீது காதல் கொள்ள ஆரம்பித்துவிடுகிறார். அதெப்படி பார்த்த மாத்திரத்திலேயே காதல் வருகிறது?. அப்படி காதல் வரும் அளவிற்கு விமல் ஏதும் செய்ததாகவும் தெரியவில்லை. எட்டிப் பார்த்தால் யார் யாரோடு நிற்கிறார்கள் என்று தெரிந்து விடக்கூடிய ஊரில் ஹீரோவும், ஹீரோயினும் சேர்ந்து சுத்துவது பற்றி ஊர்காரர்கள் ஏதும் கண்டு கொள்ளவேயில்லை. ஒரு வேளை கதை அதை பற்றி இல்லையென்பதால் கவலைப்படாமல் இருந்துவிட்டீர்களோ? அந்த குருவிக்கார கேரக்டர் எதற்கு? அதனால் என்ன பலன். ஹீரோ இடைவேளைக்கு முன் ஊருக்கு போவதை தடுத்து நிறுத்துவதை தவிர?. பாடல் காட்சிகளை எடுப்பதில் மிகவும் கற்பனை வறட்சி தெரிகிறது. என்னா மாதிரியான பாடல் அந்த போறானே..? நிஜத்தில் அந்த காதல் ட்ராக் மட்டும் நம்முள் ஏறியிருந்தால் போறானே பாடல் உருக்கியிருக்கும். ஆனால் படத்தை நேரத்தை நிரப்ப இட்ட பாடலாய் அமைந்துவிட்டது.அடுத்த காட்சி என்னவென்று படத்தில் நடித்திருக்கும் குழந்தைகள் கூட சொல்லிவிடக்கூடிய திரைக்கதையமைத்திருப்பது தான் பெரிய மைனஸ், நல்ல கருத்தை முன் வைத்தாலும் உட்கார முடியாமல் நெளிய வைக்கிறது என்பதை வருத்தத்துடன் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
45 comments:
தல,
களவாணிக்கும் இப்பிடித்தான் சொன்னீங்க. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு.
இதுவும் அப்பிடித்தானா :))))
எங்கை இன்னும் விமர்சனத்தை காணலியேண்ணு பார்த்திட்டிருந்தேன்.
///// வழக்கமான க்ளைமாக்ஸ் வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்திருக்கலாம்.////
கதையின் போக்கு அப்படித் தான் சொல்லுது.
அண்ணாச்சி யாழ்ப்பாணத்திற்கு இன்னும் வாகை சூட வரல..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
Fashion Show ல் கவிண்டு விழுந்த அழகிகள் படங்கள்
அட இன்னா பாஸ் நீங்க?
நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்து சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!
ரெம்ப எதிர் பார்த்த படம்.. சொதப்பீட்டாங்களா..?? அவ்வ்
இந்தமாதிரியான படத்தில் குறைகளை சுட்டிக்காட்டுவதை தவிர்த்திருக்கலாம்...
Parthuda vendiyathuthan
ஒரு வேளை கதை இல்லேன்னு தான் ,ஜிகினாவுல கவனம் போயுருட்சோ
ஆத்தாடி பாவாடை காத்தாட - பார்ட் 1
வாகை சூட வராதே!
முகிலன்
அப்படி நான் நல்லாயில்லைன்னு சொன்னதுனால ஓடிச்சின்னா சந்தோஷ படற முத ஆள் நான் தான்.
@பிலாசபி பிரபாகரன்
//இந்தமாதிரியான படத்தில் குறைகளை சுட்டிக்காட்டுவதை தவிர்த்திருக்கலாம்..//
அப்படி எழுதுவது நியாயம் கிடையாது பிரபா.. அது தவறு..மற்றவர்கள் சொல்வதற்கும் நான் சொல்வதற்கு வேறு பாடு உள்ளது.
ஒரு செங்கல் சூளையிலை செட் போட்டே மொத்த படத்தையும் எடுத்திருப்பதால் விமல்லின் கெட்டப் தவிர 1960 காலகட்டம் தெரியவேயில்லை.
பேச்சுவழக்கில் பாவனைகளில் இந்தகால படம் போலத்தான் இருக்கிறது.குழந்தைத் தொளிலாளர்களுக்கு அர்ப்பணிக்க்கூடிய படமாக தெரியவில்லை. மொத்தத்தில் அழுத்தமே இல்லை!
பாஸ் உண்மைய சொல்லுங்க சற்குணத்துக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சனையா?
avarai நான் பார்த்ததே கிடையாது. ராஜா.
படம் சுமார் தான்......
உங்கள் விமர்சனத்துக்கு நன்றி.....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
சட்குனத்தை பார்க்கும்போது பொறாமையாக உள்ளதா?
வாகை சூட வா (நடுநிலையான) பட விமர்சனம் http://thatstamil.oneindia.in/movies/review/2011/09/30-vaagai-sooda-vaa-movie-review-aid0136.html
//avarai நான் பார்த்ததே கிடையாது. ராஜா.
ஸார் உங்களின் களவாணி விமர்சனம் படித்து படம் பார்க்காமல் நீண்ட நாட்கள் கழித்து படம் பார்த்து மிகவும் பிடித்து போய் , மனதிர்க்குல் உங்களை திட்டியிருக்கிறேன்...
இப்பொழுது வாகை சூட வா ,
ஆரண்யகாண்டம் எங்கேயும் எப்போதும் போன்ற செயற்கையான சினிமாதானம் நிரம்பிய படங்களை கூட ஆதரிக்கும் நீங்கள், வாகை சூட வா போன்ற நல்ல படைப்புகளை ஏன் ஆதரிக்க தயங்குகிறீர்கள்? ஒரு சின்ன கேள்வி , பதில் தராவிட்டாலும் பரவாயில்லை , ஆரண்யகாண்டம் எங்கேயும் எப்போதும் போன்ற படங்களை விட இந்த படம் எந்தவிதத்தில் குறைந்து விட்டது?
அறியாமையில் சிக்கி அடிமையாகவே வாழ்ந்து முடித்த , வாழ்ந்து கொண்டிருக்கும் நம் சக கிராம மனிதர்களின் யதார்த்தமான பதிவு இந்த படம்... அவர்களூடே வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை போன்ற கிராமத்தானுக்கு உங்களின் இந்த பதிவு கண்டிப்பாக ஏமாற்றம்தான் ...
ஜனங்க மெண்டாலட்டி நல்லாவே புரிஞ்சு வெச்சிருக்கீங்க சங்கர் :)
செய்யாதேன்னு சொன்னா செய்வாங்க பார்க்காதேன்னு சொன்னா பார்ப்பாங்க அது போல இப்படி விமர்சனம் எதிர்மறையா கொடுத்தால் கண்டிப்பா அப்டி என்ன தான் இருக்குன்னு பார்க்க போவாங்க என்ற உங்க வித்தியாச முயற்சியை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை சங்கர்...
அப்ப கண்டிப்பா இந்தபடம் பார்க்க சொல்றீங்க....
அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு.
ஆரண்யகாண்டம் எங்கேயும் எப்போதும் போன்ற படங்களை விட இந்த படம் எந்தவிதத்தில் குறைந்து விட்டது?//
- திரைகதையில்...
//வாகை சூடவா- வரும்.. ஆனா வராது//
இப்படி நெகடிவ்வா எழுதினா,, எப்பிடி சார் வரும்..?
//அறியாமையில் சிக்கி அடிமையாகவே வாழ்ந்து முடித்த , வாழ்ந்து கொண்டிருக்கும் நம் சக கிராம மனிதர்களின் யதார்த்தமான பதிவு இந்த படம்... அவர்களூடே வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை போன்ற கிராமத்தானுக்கு உங்களின் இந்த பதிவு கண்டிப்பாக ஏமாற்றம்தான் ...//
யதார்த்தமான பதிவு ஒக்கே... பட்... திரைகதைதான் முக்கியம்...
படம் சுவாரசியமாக இருந்தால் தானே அனைவரும் படம் பார்த்து, அதில் சொல்லபடும் கருத்தை ஏற்றுகொள்வர்... படத்தின் சுவாரசியம் கெட்டுபோயிள்ளது... அதுமட்டுமல்ல தேவையில்லாத காதல் காட்சிகளால் முக்கிய கருவை சிதைத்துள்ளனர் என்றே சொல்லுவேன்...
இதைதான் சங்கர் சாரும் சொல்லுகிறார்...
பொறுமையாக பார்த்ததால் உங்களுக்கும், எனக்கும் படம் பிடித்துள்ளது(உன்மையாக என்க்கு படம் பிடித்துள்ளது)பாமரனும் பார்க்க கதையில் சுவாரசியம் வேண்டும் அல்லவா...
பின்குறிப்பு: இவ்வள்வு பெரிய comment அ இத post அ facebookல போட்டுருந்தா நாலு பேரு like ஆவது போட்டுருப்பாங்க...
வாகை சூட வா பற்றிய என் கருத்து.
http://nasthenka.blogspot.com/2011/10/blog-post.html
வாகை சூட வா பற்றிய என் கருத்து.
http://nasthenka.blogspot.com/2011/10/blog-post.html
"திருமதி பழனிச்சாமி என்றொரு படம். சத்யராஜ், சுகன்யா நடித்த படம். கமர்ஷியல் விஷயங்களை நீக்கி பார்த்தால் அதில் சொல்லியிருக்கும் சுவாரஸ்யங்களை குறைவாகவே யோசித்த திரைக்கதை தான் படத்திற்கு மெயின் வில்லன "
ரோடு ஹோம் ரேஞ்சுக்கு படம் எடுத்தவரை
கேவலபடுதிட்டிங்களே . . .
Thanks
//இவ்வள்வு பெரிய comment அ இத post அ facebookல போட்டுருந்தா நாலு பேரு like ஆவது போட்டுருப்பாங்க...
இதுதான் நம்மாளுக பிரச்சனை .. எல்லாத்தையும் கமர்ஷியல் கண்ணோட்டத்தோடு பார்க்க ஆரம்பித்து விட்டோம்...
நிகழ்வுகளை வைத்து திரைக்கதை அமைப்பது என்பது மிக எளிது , கில்லி படத்தை கூட மிக சிறந்த திரைக்கதை என்று சொல்லி கொள்ளலாம் , ஆனால் இதை போன்ற வாழ்க்கையோடு இயந்த கதைகளை , திரையில் கொண்டுவரும் போது அதற்க்கு திரைக்கதை அமைப்பது என்பது கொஞ்சம் கடினம்... ரொம்ப பொறுமையாதத்தான் நகரும் (ஆனால் இந்த படத்தில் திரைக்கதை ரொம்பவெல்லாம் பொறுமையாக நகரவில்லை) அதனால்தான் இந்த மாதிரியான படங்களை நாம் ஆர்ட் ஃபிலிம் என்று ஒதுக்கி விடுகிறோம்...
இந்த படத்தின் திரைக்கதை நொட்டை என்று சொல்லுவதெல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியாது ...
//பொறுமையாக பார்த்ததால் உங்களுக்கும், எனக்கும் படம் பிடித்துள்ளது(உன்மையாக என்க்கு படம் பிடித்துள்ளது)பாமரனும் பார்க்க கதையில் சுவாரசியம் வேண்டும் அல்லவா...//
பாமரனா யாரு அண்ணாச்சி இங்க பாமரன். பாமரனுக்கு விளக்கம் சொல்ல முடியுமா?
இன்ன தேதியில காத்து வீசுற திசையை வச்சி அது எந்த திசையின்னு சொல்லுவான்; பாமரன்.
காலையில பல்லு விளக்காதவர்கள் எல்லாம் பாமரனைப் பத்தி வந்துவிட்டார்கள்.
--------------------
மினியேச்சர் மணிரத்னம் அவர்களின் விமர்சனம் அருமையோ அருமை. இது எல்லாம் எங்களுக்கு பெருமையோ பெருமை.
Boss INNUM ETHANA NALAIKUTHAN NITHIKALIN PIDIYIL TAMIL CINEMA KATHAIYAVEY SOLLA PORINGA ATHELLAM MARI 4 MONTHS AAGUTHUNU THERIYATHA AVANGALA YEN SUMMA VAMPUKU ILUKIRINGA OK OK OK
கோடாலிக் கொம்பு சங்கர் அவர்களே!
எந்த பிரமாண்டத்தையும் நம்பாமல், ஏ ஆர் ரகுமான்/அஜித்/விஜய் போன்ற ஸ்டார்களை நம்பாமல்,தானும் புதிதாய் இருந்து கொண்டு பல புதிய முகங்களின் உதவியுடன் ஒரு நல்ல கலைப் படைப்பைத் தந்திருக்கும் சக தோழரை மதிக்கா விட்டாலும் பரவாயில்லை தயவு செய்து மிதிக்க வேண்டாம்.
இந்த சினிமாவை இயக்குனர் சற்குணம் கலையாகக் கையாண்டு இருக்கிறார்.தொழிலாக அல்ல.நல்ல கலைப் படைப்புகளை விரும்பும் நண்பர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கலாம்.
And one more thing, நான் சினிமா துறையை சார்ந்தவன் அல்ல.
சங்கர், நான் படம் பாத்துட்டேன்.. எனக்கு பிடிச்சிருக்கு.. ஆனா ஏதோ ஒண்ணு மிஸ் ஆகுற மாதிரி தோணுது.. அது என்னனு எனக்கு சொல்ல தெரியல..
இது போங்காட்டம்... நான் ஒத்துக்கிட மாட்டேன்... :)
வைட் ஷாட்கள், விண்டேஜ் ....தொழில் சொல்லிக்குடுங்க குருவே!
//Philosophy Prabhakaran said...
இந்தமாதிரியான படத்தில் குறைகளை சுட்டிக்காட்டுவதை தவிர்த்திருக்கலாம்.//
கேபிள் அண்ணனின் விமர்சனத்தை குறை சொல்லும் அளவுக்கு துணிச்சலா? என்ன ஒரு இறுமாப்பு.வானகமே. வையகமே. இனி பொறுப்பதில்லை.
தலைவா.. என்ன சொல்றாங்க மஞ்சுபாஷிணியும், ராஜாவும்? சீக்கிரம் விளக்கம் தேவை.
@sharing thoughts: அஜித் ஏ.ஆர். ரகுமானையெல்லாம் நம்பாமல் படம் எடுத்தா.. அப்படத்தை குறையே சொல்ல கூடாதா?(இந்த படத்திற்கு எதற்கு அவிங்கன்னு சதியமா புரியல!!) திரைக்கதையிலும் வெற்றியிலும் இயக்குனர் சற்குணம் சறுக்கியிருக்கிறார் என்றே சொல்லுவேன். இருந்தாலும் இன்னும் சற்குணத்திற்கு காலம் இருக்கு.மேக்கிங்கிள் அசத்தியுள்ளார். இருப்பினும்..கேபிளின் கடைசி பாரவுக்கு சரியான பதில்.. சொல்லிவிட்டு அப்புறம் விமர்சனத்தை குறை சொல்லுங்க பாஸூ!!
@Rafeek:
1)கதாநாயகி விமலை பார்த்த அடுத்த சில காட்சிகளிலேயே அவர் மீது காதல் கொள்ள ஆரம்பித்துவிடுகிறார். அதெப்படி பார்த்த மாத்திரத்திலேயே காதல் வருகிறது?.Refer-அலைபாயுதே,பம்பாய்(with mask)
2)எட்டிப் பார்த்தால் யார் யாரோடு நிற்கிறார்கள் என்று தெரிந்து விடக்கூடிய ஊரில் ஹீரோவும், ஹீரோயினும் சேர்ந்து சுத்துவது பற்றி ஊர்காரர்கள் ஏதும் கண்டு கொள்ளவேயில்லை. ஒரு வேளை கதை அதை பற்றி இல்லையென்பதால் கவலைப்படாமல் இருந்துவிட்டீர்களோ?.-----நெருக்கமான காட்சிகள் எதுவும் சித்தரிக்கப் பட வில்லை மற்றும் ஹீரோயின் கேரக்டர் அவள் கூச்ச சுபாவம் உள்ளவள் போல் சித்தரிக்கப்படவில்லை.
3)அடுத்த காட்சி என்னவென்று படத்தில் நடித்திருக்கும் குழந்தைகள் கூட சொல்லிவிடக்கூடிய திரைக்கதையமைத்திருப்பது தான் பெரிய மைனஸ் - சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொன்னால் யாருக்கும் புரியும்.சுத்தி வளைத்து அவர் உங்களை குழப்பவில்லையே.
இந்த படத்தில் நான் கண்ட ஒரே குறை, படம் முழுவதும் ஒரே இடத்தில் எடுத்திருப்பதால் ஒரு வித அலுப்பும், மெதுவாக செல்கிறது என்ற எண்ணமும் ஏற்படுவதை தவிற்க்க முடியவில்லை.லகான் ஹிந்தி படம் பார்த்த போதும் இந்த உணர்வே எனக்கு ஏற்பட்டது.அதில் கிரிக்கெட் என்ற மாயை ஏற்படுத்திய ஈடுபாடு இந்த படத்தில் கல்வி எனும் நிஜம் ஏற்படுத்தாமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.
//இந்த படத்தில் நான் கண்ட ஒரே குறை, படம் முழுவதும் ஒரே இடத்தில் எடுத்திருப்பதால் ஒரு வித அலுப்பும், மெதுவாக செல்கிறது என்ற எண்ணமும் ஏற்படுவதை தவிற்க்க முடியவில்லை.லகான் ஹிந்தி படம் பார்த்த போதும் இந்த உணர்வே எனக்கு ஏற்பட்டது.அதில் கிரிக்கெட் என்ற மாயை ஏற்படுத்திய ஈடுபாடு இந்த படத்தில் கல்வி எனும் நிஜம் ஏற்படுத்தாமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.//
இதைத்தான் திரைக்கதையில் கவனமின்மை என்று சொல்வார்கள். பம்பாய், அலைபாயுதே போன்ற படங்களில் எல்லாம் இப்படி காதல் ஏற்படுவதை யோசிக்க முடியாமல் இருந்ததற்கு காரணம் சுவாரஸ்யமான திரைக்கதை. நானும் இப்படத்தில் பாராட்ட வேண்டிய எல்லாவற்றையும் பாராட்டிவிட்டுத்தான். குறைகளை சொல்லியிருக்கிறேன். ஸோ.. நீங்கள் இவ்வளவு தூரம் எனக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி விளக்கித்தான் எனக்கு புரிய வேண்டியிருந்தால் அது ஒரு தோல்வி படமே..
இதைத்தான் திரைக்கதையில் கவனமின்மை என்று சொல்வார்கள். பம்பாய், அலைபாயுதே போன்ற படங்களில் எல்லாம் இப்படி காதல் ஏற்படுவதை யோசிக்க முடியாமல் இருந்ததற்கு காரணம் சுவாரஸ்யமான திரைக்கதை. நானும் இப்படத்தில் பாராட்ட வேண்டிய எல்லாவற்றையும் பாராட்டிவிட்டுத்தான். குறைகளை சொல்லியிருக்கிறேன். ஸோ.. நீங்கள் இவ்வளவு தூரம் எனக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி விளக்கித்தான் எனக்கு புரிய வேண்டியிருந்தால் அது ஒரு தோல்வி படமே..//
- ungalukku oru LIKE sir...
Facebook la pottu pottu palagiruchi...
எனது வார்த்தை உங்களை பாதித்திருந்தால் அதற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நிறை, குறைகளை தாங்கி வருவதுதான் விமர்சனம் என்ற உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் இது போன்ற சினிமாக்களுக்கு குறைகளை ஒரு வரியில் நாசுக்காக சொல்வதை விட்டு ஒரு பாரா எழுதியது என்னைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ள முடியாதது.அது மட்டுமின்றி உங்களது Final Verdict: "வாகை சூடவா- வரும்.. ஆனா வராது" என்ற கேலியான வாசகம் படிப்பவருடைய மனதில் எதிமறையான தாக்கத்தையே ஏற்படுத்தும்.
ஒரு எந்திரனை/மங்காத்தாவை/காவலனை Promot செய்ய ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.ஆனால் அந்த சினிமாக்களால் எந்த ஒரு சமூக மாற்றமும் ஏற்பட போவதில்லை.இது போன்ற படங்களுக்கு நம் போன்ற வலையுலக நண்பர்கள் முன்மொழிந்தால் தான் படம் நல்ல reach கிடைக்கும்.இந்த படத்தை பார்த்து பத்து பேருக்கு மாற்றம் ஏற்பட்டால் டைரக்டருக்கு வெற்றி தானே.
நல்ல படைப்புகளை ஆதரிப்போமே!
sharing thoughts.
எதற்கு மன்னிப்பெல்லாம். என்னைப் பொறுத்த வரை இம்மாதிரியான போலி ஏஸ்தடிக் அரைகுறை படங்களினாலும் சமூகத்தில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை. தயாரிப்பாளர் வேண்டுமானால் தன் பணம் இழந்து நொந்து போய் வேறு ஒரு மாற்றத்திற்கு வரலாம். பாவம்.
Sir,
I can't post my blog on Udanz, it is saying my url is blocked.. Please help to resolve this issue.
http://suresh-tamilkavithai.blogspot.com
User Name: Sureshteen
your review not acceptable.. try to encourage good movies. Sargunam will become a standard director in this industry.
இந்த விமர்சனம் படித்தவுடன் எனக்கு புரிந்தது தங்களுக்கு அந்த படத்தை புரிந்துகொள்ளும் அளவுக்கு ------- இல்லை என்று!! நிச்சயம் இந்த படம் தமிழ் சினிமாவின் மைல் கல்!!
அன்பரே தாங்களே ஒரு நல்ல படத்தை இயாக்கி எடுத்து கட்டக இருக்க கூடாது ? அதுவே தக்க பதிலாக அமையும் .டைரக்டர் பாலா வால் முடியதாய் தாங்கள் நிருபியுங்கள் ,
அப்புறம் விமர்சிக்கலாம்
@mahe
i too expect the same from sargunam.. mahe.. you have to read the review fully.
@jawahar shanmugham.
thanks for your review about me jawahar.. its my opinion.
@kandasami
அன்பரே.. நீங்கள் ஏன் என் படத்திற்கு தயாரிப்பாளர் ஆகக்கூடாது?
Post a Comment