Oct 8, 2011

வர்ணம்

varnam படத்தின் விளம்பரத்தில் மாண்ட்ரீயல் உலக திரைப்பட விழாவிலும், லண்டன் ஏசியன் பட விழாவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட படம் என்று போட்டிருந்தார்கள். எனவே படத்தின் மீது ஒரு குட்டி எதிர்பார்ப்பு இருந்தது எனக்கு. ஏனென்றால் சில நல்ல படங்கள் சத்தமேயில்லாமல் வந்து போய்விடுவது உண்டு.


varnam1 மணி தன் தந்தையின் கொலைக்கு பின் தன் தாய் மாமனிடம் வளர்வதற்காக ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். தாய் மாமன் ஒரு சோக்காளி, பணக்காரன். தன்னைப் போலவே தன் மருமகனையும் வளர்க்கிறான். தாய்மாமனின் கார் ட்ரைவராய் இருக்கும் அன்வர் தான் மணியின் தந்தையை கொன்றவன் என்று தெரியாமல் வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஊரில் உள்ள அத்துனை சிறு வயது பெண்களையும் ஜாதி பார்க்காமல் கை வைப்பதில் மன்னன் மாமா துரை. இதற்கிடையில் ஊரில் டீச்சராய் வேலை செய்யும் மோனிகாவுக்கும் தாய்மாமனுக்கு கல்யாணம் நிச்சயமாகிறது. டீச்சருக்கும், அன்வருக்கும் காதல். அதனால் ஊரை விட்டு ஓட முயற்சி செய்கிறார்கள். அப்போது தன் தந்தையை கொன்றவன் தான் அன்வர் என்று தெரிந்து அவனை கொல்லப் போகிறான் மணி. என்னாயிற்று என்பதுதான் கதை.
Varnam08 கதை என்று எடுத்துக் கொண்டால் ஜாதிப் பிரச்சனை மேட்டர் தான் என்றாலும் அதை சொன்ன விதத்தில் கொஞ்சம் வித்யாசமாய் தான் செய்திருக்கிறார்கள். அடலசண்ட் வயதிலிருக்கும் கிராமத்து பசங்களின் ஆட்டிட்டியூட். அவர்களின் பேச்சுக்கள் எல்லாவற்றையும் கொஞ்சமே நிஜத்துக்கு அருகில் வைத்ததால் இண்ட்ரஸ்டாக இருக்கிறது. அதே போல அந்த முனி கதையும், அந்த பாடலும். அதை வைத்து ஊர் எல்லை முனி கோவிலில் யாரும் போனதில்லை என்ற பில்டப். அதன் பின்னணியில் நடக்கும் விஷய்ம் எல்லாம் சுவாரஸ்யம்தான்.
varnam2 மோனிகாதான் டீச்சர். படு பாந்தமாய் அழகாய் இருக்கிறார். அன்வருடன் காதல் செய்யும் காட்சியில் மிக அழகாய் எக்ஸ்ப்ளாயிட் செய்திருக்கிறார். நல்ல நடிக்க தெரிந்த நடிகையாய் இருப்பதால் பாவம் பெரிய வாய்ப்பில்லாமல் இருக்கிறார். அதே சீனுவாக நடித்த அந்த பையன். தந்தையை கொன்றவன் மேல் இருக்கும் வஞ்சம், தனிமையாய் உள்ளுக்குள்ளேயே அழுது கொண்டு அதை முரட்டுதனமாய் வெளிப்படுத்துவது, என்றிருப்பவனுக்குள் இருக்கும் படம் வரையும் திறமையும், அதனால் அவனுக்குக்ம் கீழ் ஜாதி பெண்ணுக்கு வரும் காதல் நன்றாகவேயிருக்கிறது. டீச்சருக்கும் அன்வருக்மான உடலுறவு காட்சியை பார்த்தபின் அவனுக்கு இருக்கும் குழப்பத்தையும், அதை வெளீயே சொல்லாமல் இருந்தபடி மென்று விழுங்குவதும் நல்ல நடிப்புக்கு சான்று. தாய் மாமன் துரையாய் சம்பத்துக்கு ஏற்ற கேரக்டர். மனுஷன் அருமையாய் செய்திருக்கிறார். கீழ் ஜாதிப்பெண் தங்கமாய் வரும் அஸ்வதாவின் நடிப்பும் அவரின் அந்த தயங்கிய பார்வையும் செம க்யூட்.
varnam3 கிருஷ்ணா டாவின்ஸி உட்பட நிறைய ஆட்கள் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். ஐசக் கொடுக்காப்புளி இசையமைத்திருக்கிறார். ஓரிரு பாடல்கள் கேட்கும் வண்ணம் இருக்கிறது.முக்கியமாய் அநத முனி கதை பாடலை சொல்லலாம். பிரேம் குமாரின் ஒளிப்பதிவு பற்றிச் சொல்ல பெரிதாய் ஏதுமில்லை. 

Varnam05
இயக்கியிருப்பவர் எஸ்.என். ராஜு.  பழயனூர் நீலீக் கதைப் போல ஒரு முனிக்கதையை ஒரு பாடலில் சொல்லியிருக்கிறார்கள். அதை வைத்து பின்னால் ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்ததில் எதிர்ப்பார்ப்பு மட்டுமே மிச்சம்.ஆங்காங்கே வரும் பாடல்கள் பெரிய இடர். மணிக்கும் தங்கத்திற்குமான அடலசண்ட் காதல் க்யூட். அதே போல தங்கத்தை மணியின் மாமா சிதைத்ததும், அதைக் கேட்டு மணி செய்வதறியாமல் இருப்பதும், க்ளைமாக்ஸில் அந்தக் கோபத்தை வெளிபடுத்தி பேசும் வசனமும் ஷார்ப். நடுநடுவே ஜாதிப் பெயரை ம்யூட் செய்து ஏதோ சொல்கிறார்கள். கீழ் ஜாதிக்காரனின் வாயில் ஒண்ணுக்கடித்து, மலத்தை கரைத்து ஊற்றுகிறார்கள். வர்ணம் என்கிற டைட்டிலுக்கு சரியான காட்சிகளாய் இருந்தாலும் கொஞ்சம் ஒட்டாமலேயே ஓடுகிறது. அதே போல மணி அப்பா சாகும் காட்சி. அவர் இறந்தது ஒரு விபத்தில் என்பதை விவரிக்கும் அந்த நிகழ்வு நம்ப முடியாமல் இருக்கிறது. கொஞ்சமே கொஞ்சம் கவனமாய் செய்திருந்தால் நிச்சயம் ஒரு மலையாள க்ளாஸிக் பட வரிசை படம் போல தமிழிலும் கிடைத்திருக்கும்.
வர்ணம் – வாட்டர் கலர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

10 comments:

Kannan said...

நல்ல விமர்சனம்....


நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

அருண் said...

நிறை குறைகளை அலசும் நிறைவான விமர்சனம்,இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதா இயக்குனர் சொல்லிருந்தாரு.
-அருண்-

கார்த்தி கேயனி said...

படம் பார்க்கலமா மோனிகாவிற்காக

Rajan said...

// தாய்மாமனின் கார் ட்ரைவராய் இருக்கும் அன்வர் தான் மணியின் தந்தையை கொன்றவனின் மகன் என்று தெரியாமல் வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். //


//அப்போது தன் தந்தையை கொன்றவன் அன்வர் தான் என்று தெரிந்து அவனை கொல்லப் போகிறான் மணி//


ANWAR kolaikarana? or kolaikanin magana?

puriyalaiye..

Kumar Narayanan said...

Hai
I am part of the production team and notice that you have used Alka films visuals. We are no longer associated in any way with Alka films commercially. Please take the visuals from our website www.varnamthefilm.com or I will be more than happy to send you.

Regards
Kumar
Co-Producer
Varnam

Just for Laugh said...

வர்ணம் என்றால் என்ன அர்த்தம் : இதை இங்கே : http://goo.gl/W4sgY

இதை வாட்டர் கலர் என்று சன் டிவி டாப் 10 போல பஞ்ச் வைத்துள்ளீர்கள்.

வாட்டர் கலர் என்பதும் சாதாரண விசயமல்ல. அது ஒரு fine-arts வகையில் உலகத்தால் பாராட்டப்படுவதே.

நீங்கள் இந்தப் படத்தை உயர்த்தி விமர்சித்தீர்களா என கன்ஃபர்ம் செய்ய முடியவில்லை. வாட்டர்கலர் என கூறி நீங்கள் பதிவை முடித்ததே காரணம்.

கொங்கு நாடோடி said...

Appo mamba Monicavirkaka parthuda vendiyathuthan

சங்கர் நாராயண் @ Cable Sankar said...

just for laugh..

/வாட்டர் கலர் என்பதும் சாதாரண விசயமல்ல. அது ஒரு fine-arts வகையில் உலகத்தால் பாராட்டப்படுவதே.//

இந்த படத்தை நான் வர்ணமேயில்லை என்று சொன்னால்தான் இதை பற்றியெல்லாம் கேட்டிருக்க வேண்டும். பாராட்டத்தான் அப்படி சொல்லியிருக்கிறேன். அதை மீறி படிக்கிறவங்க பர்ஷப்ஷனுக்கெல்லாம் என்னால் விளக்க்ம சொல்ல முடியாது தலைவரே..

IlayaDhasan said...

// நல்ல நடிக்க தெரிந்த நடிகையாய் இருப்பதால் பாவம் பெரிய வாய்ப்பில்லாமல் இருக்கிறார்.//

அப்ப அவருக்கு நடிக்கவே தெரியலின்னு தான அர்த்தம்!


நம்ம வலையில ஒரு inspirational உண்மை story இவர்கள் மனிதர்களா?

வவ்வால் said...

கேபிள்,

//படத்தின் விளம்பரத்தில் மாண்ட்ரீயல் உலக திரைப்பட விழாவிலும், லண்டன் ஏசியன் பட விழாவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட படம் என்று போட்டிருந்தார்கள். எனவே படத்தின் மீது ஒரு குட்டி எதிர்பார்ப்பு இருந்தது எனக்கு. ஏனென்றால் சில நல்ல படங்கள் சத்தமேயில்லாமல் வந்து போய்விடுவது உண்டு.//
Focus on world cinema என்ற வகையில் ( non competitive section ) கனடாவுக்கு வெளியில் தயாரான எந்தப்படமும் திரையிடலாம், அவை விருதுக்கு போட்டியிடாது சும்மா அங்கே வரவங்க பார்வைக்கு மட்டுமே. இதுக்கு 100 கனடிய டாலர் நாம கட்டணும், இது படத்தயாரிப்பாளர் செய்ற சொந்த முயற்சி, ஒரு விளம்பர யுத்தி, வர்ணம் டீம் கொஞ்சம் இந்த விவரம் எல்லாம் தெரிந்து கொண்டு செய்த ஜிம்மிக் இதைப்பார்த்து உலக திரைப்பட விழாவில் கலந்து கொண்ட படம் என்பதால் நல்லா இருக்கும்னு எதிர்ப்பார்த்தேன் என்றால் நீங்க காம்ப்ளான் குடிக்கும் பருவத்திலேயே இருக்கிங்கனு தான் தோன்றும்!
(no hard feelings)

டொக்டர் விசய் நடித்த காவலன் கூட ஷாங்காய் படவிழாவில் பனோரமா - குலோபல் வில்லேஜ் போகஸ் ஆன் இன்டியா என்றே நான் காம்பெடிடிவ் ஆக திரையிடப்பட்டது. அப்போ அதுவும் உலகப்படமா?!!?