ஏற்கனவே இந்தியில் பார்த்த படம் தான் என்றாலும் மீண்டும் இவர்கள் காம்பினேஷனில் பார்க்க ஆர்வம் குறையவேயில்லை. அதற்கு முக்கிய காரணம் காஸ்டிங். கொஞ்சமே கொஞ்சம் ஸ்ரீகாந்ந்தும் இலியானாவும்தான் இடிக்கிறார்களே தவிர மற்றவர்களெல்லாம் பிக்சர் பர்பெக்ட். பொமன் இரானியை பார்த்தவர்களுக்கு சத்யராஜின் நடிப்பு கொஞ்சம் அதிகப்படியாய் தோன்றினாலும் அசத்தலான நடிப்பு. ஒரு சில காட்சிகளைத் தவிர. முக்கியமாய் விஜய் க்ளாஸ் நடத்தும் காட்சியில் அவர் புத்தகத்தை புரட்டும்படியான ரியாக்ஷனில் இயல்பை விட நாடகத்தனம் தான் அதிகமானதாய் இருந்தது. மற்றபடி மிகச் சிலருக்கே அவர்கள் வயதுக்கேற்ற கேரக்டர்கள் கிடைக்கும் போது மேலும் மிளிர்வாரள். சத்யராஜ் ஜொலிக்கிறார்.
கதாநாயகி என்கிற அந்தஸ்து இலியானாவுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாலும், தனியாய் ரெண்டு பாடல்கள் இருப்பதாலும் அவரைப் பற்றி சொல்ல வேண்டிய கடமையாகிறது. சைஸ் ஜீரோவிலிருக்கும் இவரை பார்த்தால் வத்திப் போன கொத்தவரங்காய் போல் இருக்கிறார். இவரை விட அவரது அக்கா சிவா மனசுல சக்தி கதாநாயகி அனுயா க்யூட்டாகத் தெரிகிறார். மற்றபடி இலியானாவின் நடிப்பை விட அவரது இடுப்பு ஒரு பாடல் முழுவதும் நடித்திருக்கிறது. வாழ்த்துக்கள் இலியானா இடுப்புக்கு.
3 இடியட்ஸில் அமீரை பார்க்கும் போது நாற்பது வயதுக்காரரான அவரது நடிப்பில் இருபது வயது ஆளை தெரிய வைத்த முனைப்பு தெரியும். ஆனால் விஜய்யின் நடிப்பில் இருக்கும் இளமையும், துள்ளலும் அவர் மிகவும் சிரமப்படாமலேயே நச்சென பொருந்திவிடுகிறார். மிக கேஷுவலான நடிப்பு. சட்டென கண்களில் தெரியும் குறும்பு, இரண்டு கைகளையும் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு பார்க்கும் பார்வை, நண்பர்களுக்காக ஓடி ஓடி உதவும் கருணை, வசந்த்தின் ப்ராஜெக்டை செயல்படுத்த முனையும் அவரின் கண்களில் தெரியும் ஆர்வமென்று தன்னால் முடிந்த அளவிற்கான உழைப்பை சரியான படத்திற்கு செலவிட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அவரின் படங்களில் நிச்சயம் சொல்லிக் கொள்கிற வகையான படம் என்பதில் ஐயமேயில்லை. விஜய் வழக்கமாய் பார்க்க அழகாய் இருக்கும் படமெல்லாம் பெரியதாய் ஓடியதில்லை. சச்சின், அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களை உதாரணமாய் சொல்லலாம். ஆனால் அதை உடைத்திருக்கும் படம் நண்பன்.
ஹாரிஸின் இசையில் ஏற்கனவே முத்துகுமாரின் ஆல் இஸ் வெல், மற்றும் மதன் கார்க்கியின் அஸ்கு லஸ்கா பாடல்கள் ஹிட் லிஸ்டில் இருப்பதால் மீண்டும் அதை பற்றி சொல்ல வேண்டியதில்லை. மீண்டும் பின்னணியிசையில் வீழ்ந்திருக்கிறார். பல இடங்களில் இந்த மாதிரியான சாப்ட் படங்களிற்கு ஒவ்வாத இரைச்சல் அதிகம்.
படம் முழுக்க இளமை பொங்கும் வண்ணங்கள் பொங்கி வழிகிறது ஓளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில். காலேஜ் காம்பஸ் டாப் ஆங்கிள் காட்சிகளாகட்டும், பாடல் காட்சிகளாகட்டும், எங்கும் இளமை பொங்கி வழிகிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் ஒளிப்பதிவாளரும், எடிட்டரும் மற்றவர்களோடு இணைந்து உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
வழக்கமாய் தன் கதை திரைக்கதை இயக்கும் ஷங்கர் இம்முறை வேறொருவர் கதை, திரைக்கதையில் பயணித்திருக்கிறார். ஒரிரு பாடல் காட்சிகளைத்தவிர, அப்படியே இந்தி படத்தில் என்ன வந்ததோ அதையே பின்பற்றியிருக்கிறார். ஏற்கனவே இப்படத்தில் வரும் ப்ரீ க்ளைமாக்ஸ் பிரசவக் காட்சியை எந்திரனில் பயன்படுத்தியிருப்பார். இந்தப்படத்தை அவர் எடுக்கப் போகிறார் என்றதும் இந்த காட்சிக்கு பதிலாய் என்ன செய்யப் போகிறார் என்ற ஒரு ஆவல் என்னுள் இருந்து கொண்டேயிருந்தது. கொஞ்சம் கூட அசராமல் அதே காட்சியை வைத்து ஒரிஜினல் படத்தில் கொடுத்த உணர்வுகளை சரியாகக் கன்வே செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஏன் ஒரிரு காட்சிகளில் ஷாட்களில் கூட அப்படியே எடுத்திருக்கிறார் என்பது இவரைப் போன்ற கேலிபர் உள்ள இயக்குனரின் தகுதிக்கு கொஞ்சம் மாற்றுக் குறைவேயானாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சில காட்சிகளை மாற்றிவிட்டு திரைக்கதை தங்கள் பெயரை போட்டுக் கொள்ளும் இயக்குனர்களிடையே, வேறொரு எழுத்தாளர் எழுதிய திரைக்கதைக்கு மரியாதை கொடுத்து அவருக்கு கிரெடிட் கொடுக்கும் தன்மையை பார்க்கும் போது மேன் மக்கள் மேன் மக்களே என்று பாராட்டத்தான் தோன்றுகிறது. என்ன இந்தியில் தான் ஒரிஜினல் எழுத்தாளர் சேத்தன்பகத்தின் பெயரை கடைசியில் போட்டார்கள். இப்படத்தில் அதையும் போடவில்லை. குறையென்று சொல்லப் போனால் கொஞ்சம் லெந்தியான முதல் பாதி, கொஞ்சம் ப்ரீசிங்காக வரும் வசனங்கள். இந்தியில் வந்தது போலவே ஆபீஸ் ரூமில் ஷேவ் செய்யும் காட்சியை கூட மாற்றாதது. மற்றும் இந்த மாதிரியான ராஜா டிரேட்மார்க் ரீமேக்கிற்கு ஷங்கர் அவசியமா?, படத்தின் நீளம் போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் பெரிதாக தெரியவில்லை.
நண்பன் – ஆல் ஈஸ் வெல்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
35 comments:
Vadai
Wait Boss Review Read pannittu Vaaren ;)))
Regards
M.Gazzaly
greenhathacker.blogspot.com
படம் பார்த்த மாதிரியே...இருக்கு விமர்சனங்களும் படங்களும்..அழகு..அருமை..
சூப்பர் பதிவு தல ஆனாலும் எனக்கு முதல் பாதி கொஞ்சம் நீளமாக இருந்தது.. எண்டாலும் இறுதி பாதி சூப்ப்பர்ர்
இது
மு.கஸ்ஸாலி
(greenhathacker.blogspot.com)
ஷேவ் செய்யும் காட்சிகள் கூட பரவாயில்லை. ஆனா சட்னி கலரை கூட மாத்தாம அப்படியே எடுத்திருக்காங்களே! என்னானு சொல்லறது.
3 இடியட்ஸ் பார்த்த பிறகு இது எப்படி இருக்கும் என்று பார்பதற்காகவே போனேன். ஆரம்பித்த கொஞ்ச நேரம் இரண்டு பட கேரக்டர்களையும் கம்பேர் செய்து கொண்டே இருந்தேன். ஆனால் கொஞ்ச நேரத்தில் மறந்து விட்டது. இலியானா டி.பி பேஷன்ட் போல் இருக்கிறார். ஓ.கே.
இன்னும் படம் பார்க்கவில்லை. விமர்சனம் சீக்கிரம் பார்க்கத் தூண்டுகிறது.
sir, padam odumaa illaiya... neenga pattanathu pathivar ellam summa high class people pola nallairukku -nu solringa.. nanum padam paarthen.. padam odaathu eena ithu vijay padamum illai shankar padamum illai.
3 idiots already parthatchu! one week appuram than indha padatha parkanum, athukulla indha vimarsanam oru idea koduthutchu!
im going to watch . thanks for ur review
நல்ல விமர்சனம் கேபிள். விஜய்க்கு எதிராக நீங்கள் எழுதுவதாக பலர் சொல்வார்கள். அவர்கள் உங்களின் இந்த விமர்சனம் படிக்க வேண்டும்
enna sir... so intha padathula VIJAY nu oruthar nadichu irukar. Ilaya thalapathi - Punch dialogue and power Hero - DR.VIJAY nadika(??) layaa? :)
NO action sequence and Punch dialogues???
இந்தி படம் போலவே இன்ச் பய் இன்ச் அதே சீன் அதே டயலாக், இந்த மாதிரி எடுத்தா சிபி ராஜ், பிரசன்னா, ஸ்ரீகாந்த் நடிச்சா கூட படம் சூப் ஹிட்டாயுடும். இதை சங்கர் இல்ல, எந்த புது டைரக்டர் எடுத்தாலும் சூப்பர் ஹிட் தான்.......! ஆகையால் இந்த வெற்றி ஒரு வெற்றியே அல்ல....!
நண்பன் = Xerox காப்பி
கடைசியில் சேட்டன் பகத் என்ற உண்மையான இந்த கதை எழுத்தாளரை அனைவரும் மறைத்து விட்டனர்....five point some is 3 idiots and nanban
சங்கர் என்ன செஞ்சாலும் 'ஆல் இஸ் வெல்"????
\\வேறொரு எழுத்தாளர் எழுதிய திரைக்கதைக்கு மரியாதை கொடுத்து அவருக்கு கிரெடிட் கொடுக்கும் தன்மையை பார்க்கும் போது மேன் மக்கள் மேன் மக்களே என்று பாராட்டத்தான் தோன்றுகிறது.\\Boys படம் ஏதோ ஆங்கிலப் படத்தில் காபி, அந்தப் படத்திற்கு கிரெடிட் கொடுத்தாரா? மேன் மக்கள் எப்போதும் மேன்மக்களாக இருக்க வேண்டும், அவ்வப்போது மேன்மக்கள் போல வேடம் போடுபவரை மேன் மக்கள் லிஸ்டில் வைக்க முடியாது.
Shankar pola yaaru Machaan,
Remake Trend da maathi vechaan!!
Movie superb.. Naan 3 idiots paathuten..but still Nanban 3idiots ku endha alavulayum koranju poidala...
Remake padamna ipdi dhaan edukkanum!!
Neraya per Chumma 3 idiots alavukku illannu blind da solla vendiyadhu!!!
3 idiots a apdiye eduthaa, Xerox nu solvaanga...
Change pannina, Original la kolai pannitaangannu solvaanga...
Shankar rockzzzzzzzz
ella characters um Superb...Vijay ku good comeback!!! ippa dhaan correct track ku vandrukaar..
Cinematography attakasam!! ENthiran ku Manoj paramahamsa pannirundha semaya irundhurukkum..
inimel Shankar padathula Manoj dhaan iruppaarnu nenaikaren..
Finally..
Shankar Thalaivaaa... U r great!!
Waiting for the announcement ur Next Movie with Thalaivar :)
இந்தியில் வந்தது போலவே ஆபீஸ் ரூமில் ஷேவ் செய்யும் காட்சியை கூட மாற்றாதது. மற்றும் இந்த மாதிரியான ராஜா டிரேட்மார்க் ரீமேக்கிற்கு ஷங்கர் அவசியமா?,
இந்தியில் வந்தது போலவே ஆபீஸ் ரூமில் ஷேவ் செய்யும் காட்சியை கூட மாற்றாதது. மற்றும் இந்த மாதிரியான ராஜா டிரேட்மார்க் ரீமேக்கிற்கு ஷங்கர் அவசியமா?,
Valid Point
கேபிள்,
விமர்சனம் ஓ.கே, ஆனால்..
// கேள்வி கேட்க வேண்டும் என்றால் ஒரிஜினல் படத்திலேயே கேட்டிருக்க வேண்டும். ஏற்கனவே வெற்றி பெற்றதை எதற்கு ரிப்பேர் செய்ய வேண்டும் என்று யோசிப்பது சரிதான். //
மேற்கண்டவாறு ஒஸ்தி படத்திற்கு திருவாய் அருளி மொழிந்ததும் நீங்கள் தான், பின்னர் தற்ப்போது நண்பன் படத்திற்கு கீழ் கண்டவாறு அருள் வாக்கு சொல்லியுள்ளீர்கள்,
// குறையென்று சொல்லப் போனால் கொஞ்சம் லெந்தியான முதல் பாதி, கொஞ்சம் ப்ரீசிங்காக வரும் வசனங்கள். இந்தியில் வந்தது போலவே ஆபீஸ் ரூமில் ஷேவ் செய்யும் காட்சியை கூட மாற்றாதது. மற்றும் இந்த மாதிரியான ராஜா டிரேட்மார்க் ரீமேக்கிற்கு ஷங்கர் அவசியமா?,//
ஒரிஜினலில் இருப்பது ரீமேக்கில் அப்படியே வந்தா தப்பில்லைனு சொல்றிங்க ,அதே போல எடுத்தால் குறையும் சொல்றிங்க :-))
பின்னர் எப்படித்தான் எடுக்கணும்னு நீங்களே எல்லா இயக்குநர்களுக்கும் சொல்லி கொடுத்திடுங்க ,பாவம் அவங்க எல்லாம் படம் எடுக்க தெரியாம கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் :-))
என்னோட தனிப்பட்ட கருத்து ரீ மேக் ஆக இருந்தாலும் கொஞ்சம் சுய கற்பனையும் சேர்த்து மேம்படுத்த வேண்டும் என்பதே. எல்லா ரீமேக் படத்துக்கும் ஒரே கருத்து தான்.அடிக்கடி மாற்றிக்கொள்ளமாட்டேன்.
// சைஸ் ஜீரோவிலிருக்கும் இவரை பார்த்தால் வத்திப் போன கொத்தவரங்காய் போல் இருக்கிறார். இவரை விட அவரது அக்கா சிவா மனசுல சக்தி கதாநாயகி அனுயா க்யூட்டாகத் தெரிகிறார்.//
என்ன தான் நானும் யூத்து தான்னு சொல்லிக்கிட்டாலும் வயசாச்சு என்பதை நீங்களே காட்டிக்கொடுத்துடுறிங்களே கேபிள்ஜி :-))
//3 இடியட்ஸில் அமீரை பார்க்கும் போது நாற்பது வயதுக்காரரான அவரது நடிப்பில் இருபது வயது ஆளை தெரிய வைத்த முனைப்பு தெரியும். ஆனால் விஜய்யின் நடிப்பில் இருக்கும் இளமையும், துள்ளலும் அவர் மிகவும் சிரமப்படாமலேயே நச்சென பொருந்திவிடுகிறார்.//
ஹி..ஹி விஜய்கும் 42 அல்லது 43வயசாகிடுச்சுங்கோ ... ராகுல் காந்தி யூத் காங்கிரஸ்ல சேர்க்க முடியாதுனு சொன்னாருங்கோ.
நம்ப முடியவில்லை!!!
குறை சொல்லி பெயர் வாங்கும் புலவர் ஆஜர்!! கேபிள் உஷார்!! :) விமர்சனத்தை விமர்சனம் பண்ணும் வவ்வால்ஸ்!!
அந்தக் காலத்தில் சி.வி.ராஜேந்திரன் ‘துஷ்மன்’ ஹிந்திப் படத்தை சிவாஜியை வைத்து தமிழில் எடுத்தார். பசியோடு இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு ராஜேஷ்கன்னா ஜிலேபியும் பாலும் அந்த ஊர் கையேந்தி பவனில் வாங்கிக் கொடுப்பார். சிவ்வஜியும் அதே ஜிலேபி வாங்கிக் கொடுத்தார் தமிழ் நாட்டு க்ராமத்திலும்! அது இன்னும் தொடர்கிறது போலிருக்கிறது!
இன்று (13.1.12) புத்தகக் கண்காட்சியில் நானும் என் மனைவியும் உங்களைப் பார்த்து இரண்டு வார்த்தை பேசியது சந்தோஷம்.
-ஜெகன்னாதன்
//குறை சொல்லி பெயர் வாங்கும் புலவர் ஆஜர்!! கேபிள் உஷார்!! :) விமர்சனத்தை விமர்சனம் பண்ணும் வவ்வால்ஸ்!!//
ஓய் ரபீக் நான் என்ன சொந்தமாகவா சொன்னேன் ,எல்லாம் அண்ணார் கேபிளார் சொன்னதை வச்சு தானே சொன்னேன். ரிமேக் ல குத்தம் கொற சொல்லப்படாது ஏன்னா அது ஒரிஜினல்ல அப்படி இருக்குனார். அவர் சொன்ன வாக்க அவரே கடைப்பிடிக்க வேணாமா?
கோடிக்கணக்குல செலவு பண்ணி எடுத்த படத்துல குத்தம் கொறை சொல்லி பேர் வாங்கினா தான் நீங்க கை தட்டுவிங்களா? நாங்கலாம் பிலாக்குல குத்தம் கண்டுப்பிடிக்கிறவங்க கிட்டேவே குத்தம் கண்டுப்பிடிப்போம்ல :-))
-----------------------------------
//‘துஷ்மன்’ ஹிந்திப் படத்தை சிவாஜியை வைத்து தமிழில் எடுத்தார். பசியோடு இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு ராஜேஷ்கன்னா ஜிலேபியும் பாலும் அந்த ஊர் கையேந்தி பவனில் வாங்கிக் கொடுப்பார். சிவ்வஜியும் அதே ஜிலேபி வாங்கிக் கொடுத்தார் தமிழ் நாட்டு க்ராமத்திலும்! அது இன்னும் தொடர்கிறது போலிருக்கிறது!//
ஜெகன்னாதன் ரொம்ப டீ டெய்லா படம் பார்ப்பார் போல இருக்கு. அந்த துஷ்மன் தமிழ்ல என்னப்பேருல வந்துச்சு... ஒரு வேளை நீதி னு வந்த படமா? அதுல ஜிவாஜி லாரி ஓட்டி கொன்னுருவார் பிராயசித்தமா அந்த வீட்டுல வேலை செய்வார். நாளை முதல் குடிக்க மாட்டேன் இது சத்தியமடி தங்கம்ன்னு சோக்கா பாட்டு கூட இருக்கும். அதுவா ஜகன்னாதம்.
கேபிள் ஜி, படம் தான் xerox copy என்றால், உங்களோட விமர்சனமும் கூட copy தான் போலிருக்கு. நீங்கள் 3 idiots க்கு எழுதிய விமர்சனம் copy எடுத்து அப்டியே போட்டுட்டீங்க சரிதானே.
//காணாமல் போன தன் நண்பனை தேடி அலையும் மற்ற இரு நண்பர்கள் தங்களின் கடந்த காலத்து காலேஜ் வாழ்க்கையை நினைத்து பார்க்க என்று ஆரம்பிக்கிறது கதை. இஞ்ஜினியரிங் காலேஜில் படிக்கும் மூன்று இளைஞர்களின் கதை. போமன் ஈரானி நடத்தும் டெல்லியின் முக்கியமான இஞ்ஜினியரிங் காலேஜில், பொருளாதார முறையில் வெவ்வேறு நிலையில் இருக்கும் மூன்று இளைஞர்களான, அமீர், மாதவன்,ஷர்மான். அமீர் ஒரு பணக்கார வீட்டு இளைஞன், மாதவன் ஒரு மிடில்க்ளாஸ், ஷர்மான் வறுமைக் கோட்டுக்கு மிக அருகில் இருப்பவன். இவர்களுக்குள் நடந்த அந்த சில வருட காலேஜ் வாழ்க்கையையும் அவர்களின் வெற்றி தோல்விகளையும் இவ்வளவு சுவைபட சொல்ல முடியுமா..? முடியும் என்றிருக்கிறது இந்த குழு.
ஆரம்பத்தில் ஒவ்வொரு கேரக்டரையும் அறிமுகப்படுத்தும் காட்சியிலேயே இம்ப்ரெஸ் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். மாதவனின் கேரக்டரை அறிமுகப்படுத்தும் காட்சியில் ஒருபழைய ஏர்கண்டிஷனரை காட்டி தங்களுடய பொருளாதாரத்தை பற்றி மகனிடம் சொல்லும் அப்பா, இன்னொரு பக்கம் ஷர்மானின் வழக்கமான பரலைஸ்ட் அப்பா, கல்யாணத்துக்கு காத்திருக்கும் தங்கை, உடல்நலமில்லாத அம்மா என்பதை வழக்கமாய் சொலலாமல் படு காமெடியாய் வெளிப்படும் காட்சி, பொமன் இரானி தங்களுடய மாணவர்களுக்கு டெரராய் ஒரு ஸ்பீச் கொடுக்கும் காட்சியில் அங்கேயிருக்கும் ஹாஸ்டல் சிறுவன் அவர் பேசுவதை வரி மாறாமல் மைமிங் செய்வதாகட்டும், பல லட்ச ரூபாய் செலவு செய்து கண்டுபிடித்த அஸ்ட்ரோனாட் பென்னை பற்றி சொல்லும் போது அதை மிக அலட்சியமாய் ஏன் அவர்கள் பென்சில் உபயோகிக்க கூடாது? என்று கேட்டு மூக்குடைபடுவதாகட்டும். ஒவ்வொரு காட்சியும் நச்சென்று உட்காருகிறது.//
வள்ளிநாயகம்,
அட இது வேறய... ஆனால் கதைல அப்படித்தானே இருக்கு ,அதைத்தானே எழுத முடியும்னு ஒரு டெம்பிளேட் பதில் கிடைக்கும் :-))
ஹி ..ஹி ஆனால் கேரக்டர் பேர எல்லாம் மாத்தி டிங்கரிங்க் செய்து இருக்கிறார்ல,ஆனால் டெல்லி என்பதை சென்னைனு மாற்ற மறந்துட்டார் :-))
ரபீக் வாயால புலவர் பட்டம் கிடைக்கும் வாங்கிக்கோங்க ,வருங்காலத்தில நானும் புலவர் தான்னு சொல்லிக்க உதவும் வள்ளிநாயகம்!!!
I see only your review internet and i feel atleast 95% of ur review has been accurate..
வவ்வால் அவர்களே, அதே, அதே நீதி தான்! - ஜெ.
வவ்வால் அவர்களே, அதே, அதே நீதி தான்! - ஜெ.
Lack of Creativity..Why Mr.Shankar is to remake a movie!!!!Very sincere review u've done sir..keep it up..
3Idiots படத்துக்கு ஷங்கர் ஏன் தேவை என்று அறிய MunnaBhai-யும் வசூல் ராஜா -வையும் , A Wednesday-யும் உன்னை போல் ஒருவன் படத்தையும் அடுத்தடுத்து பாருங்கள்.நன்றாக புரியும்
இந்த படத்தில் எஸ் ஆர் எம் காலேஜ் சேர்மன் பச்சமுத்து பற்றி என்ன டையலாக் வருகிறது? இன்று படத்தை நிறுத்தி விட்டார்களாமே ஒரு மல்டி-ப்லெக்சில்? - ஜெ.
ஜெ,
//இந்த படத்தில் எஸ் ஆர் எம் காலேஜ் சேர்மன் பச்சமுத்து பற்றி என்ன டையலாக் வருகிறது? இன்று படத்தை நிறுத்தி விட்டார்களாமே ஒரு மல்டி-ப்லெக்சில்? - ஜெ.//
எனக்கு உங்களப்பார்த்தா சிரிப்பா வருது :-)) இது போல கேள்விக்கு எப்படி இங்கே பதில் எதிர்ப்பார்க்குறிங்க?
அப்புறம் பச்சமுத்து யாருனே அண்ணனுக்கு தெரியாது என்பது தெரியுமா?
புதிய தலைமுறை சேனல் பச்சமுத்துக்கு அவர்களுக்கு தான் சொந்தம் என்பதும் தெரியாது.
பச்சமுத்து இந்திய ஜனநாயக கட்சி னூ ஒரு கட்சி வைத்திருப்பதும் தெரியாது, அவரோட இன்னொரு பேரு தான் பாரிவேந்தர்னும் தெரியாது.
இப்போ ஏன் பச்சமுத்து குருப் ஆளுங்க போய் பிரச்சினை பண்றாங்கனாவது தெரியுமா கேட்டா அதுவும் தெரியாது ...
படத்துல ஹீரோ பேரு பஞ்சமன் பாரிவேந்தன். பச்சமுத்தோட அரசியல் பேரு வருதாம் அது கூட பஞ்சமன் சேர்த்து இருப்பது இழிவுனு சொல்றாங்க. அதாவதூ பஞ்சமர் ஜாதீ என்பது தலித்துகளில் ஒரு பிரிவு. பஞ்சமன் என்றால் அப்படி ஒரு பொருள் வருதுதாம். பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் உடையார் என்பதால் அவருக்கு இழிவாம். அதான் போராட்டம் நடத்துறாங்க அரசியல் காமெடிகள்.
கொசசி பசபுகழ் வாழ்க
இன்னைய தினமலரில் பச்சமுத்து - பாரிவேந்தரைப் பற்றிய வசனங்களை முழுக்க போட்டுவிட்ட்டர்கள்; அதோடு இதற்கு முன்னாலும் சங்கர் எப்படி அவரைத் தாக்கி வசனம் / சீன் வைத்திருந்தார் என்றும் எழுதியிருக்காங்க! தினமலர் ஆஃபீஸ் - ப்ரேக்கிங் ந்யூஸ் இன்று ஏதாவது உண்டா!
-ஜெ.
//இஞ்ஜினியரிங் காலேஜில் படிக்கும் மூன்று இளைஞர்களின் கதை. சத்யராஜ் முதல்வராய் இருந்து நடத்தும் டெல்லியின் முக்கியமான இஞ்ஜினியரிங் காலேஜில், பொருளாதார முறையில் வெவ்வேறு நிலையில் இருக்கும் மூன்று இளைஞர்களான, விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா என்கிற மூன்று பேரை சுற்றி நடக்கும் கதை//
காலேஜ் டெல்லி- லயா இருக்கு. நான் கூட சென்னை மாதிரி தெரியுதேன்னு நெனச்சேன்.
பின்னுட்டத்தில் இதை செய்வது சரியா என தெரியவில்லை. தவறு எனில் மாடரெட்டர் டெலிட்டிவிடவும்.
நண்பன் குமுறல் விமர்சனம்:
http://www.katturai.com/?p=735
Post a Comment