30
அடங்காமல்
இருப்பவர்களுக்கு வேறு வழியிருக்கிறது என்று சொன்னேன் அல்லவா? அது கொஞ்சம்
மெச்சூர்டான வியாபார சூட்சி மூலம் நடத்தப்படும். தனிப் பெரும் எம்.எஸ்.ஓவாக
இருப்பதால் எல்லா சேனல் ஆட்களும் தங்கள் கைப்பிடியில் இருப்பதினால், மெல்ல எதிர் பார்ட்டி
ஆட்களுக்கு அவர்களின் இணைப்புகளை உயர்த்தி பணம் கட்டுமாறு செய்யச் சொல்வது.
உதாரணமாய் ஒரு போட்டி ஆப்பரேட்டர் தன் ஏரியாவிற்கு ஈ.எஸ்.பி.என்னுக்கு 500
இணைப்புகளுக்கு பணம் கட்டுகிறார் என்றால் உடனடியாய் அவர்களுக்கு ஒரு நோட்டீஸ்
அனுப்பி, உங்களிடம் எங்களுக்கு கணக்கு காட்டியதைவிட அதிகமான இணைப்புகளுக்கு எங்கள்
சேனலை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறீர்கள். எனவே உங்களது டீக்கோடரை நாங்கள் ஏன் கட்
செய்யக்கூடாது? என்ற கேள்வியோடு, அப்படி கட் செய்ய வேண்டாமென்றால் உடனடியாய்
ஆயிரம் இணைப்புகளுக்கான பணத்தை கடந்த மூன்று மாதத்திற்கும், இனி வரும் மூன்று
மாதத்திற்கும் சேர்த்து உடன் கட்டவும் என்று ஓலை வரும். அல்லது வரவழைக்கப்படும்.
இம்மாதிரியான விஷயங்களுக்கு இந்த சேனல்காரர்களும் உடந்தையாய் இருப்பார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.
ஒன்று இப்படி அவர்களுக்கு
ப்ரெஷர் கொடுப்பதால் வேறு வழியில்லாமல் எம்.எஸ்.ஓவிடம் சேர்ந்துவிடுவார்கள்.
அப்படி சேரும் பட்சத்தில் எம்.எஸ்.ஒ தனியாய் கவனிக்கும். அது மட்டுமில்லாமல்
அவர்களிடமிருந்து இன்னும் கொஞ்சம் இணைப்புகளுக்கான கணக்கு ஏற்றப்படும். அப்படியே
இவர்களுடய ப்ளான் நடக்கவில்லையென்றால் இருக்கவே இருக்கிறது இரண்டாவது சான்ஸ்.
எப்படியிருந்தாலும் கடைசியாய் பஞ்சாயத்து பேசி, ஏற்கனவே இருந்த ஐந்நூறுக்கு மேல்
நூறிலிருந்து, இருநூறுக்குள்ளான ஒரு புதிய அக்ரிமெண்டை போட்டுவிட்டு வந்துவிடலாம்.
எனவே எப்படியிருந்தாலும் லாபம் எனும் பட்சத்தில் ஊரு ரெண்டு பட்ட கூத்தாடிக்கு
கொண்டாட்டம் என்பது போல கொண்டாட்டமாய்த்தான் வாழ்ந்தார்கள்.
இப்படி ஒரு சேனலுக்கு
கொடுக்க ஆரம்பித்தால் அடுத்தடுத்து ஒவ்வொரு சேனலாய் எங்களுக்கும் ஏற்றிக்
கொடுங்கள் என்று ப்ரெஷர் கொடுக்க அரம்பிக்க, வேறு வழியில்லாமல் எம்.எஸ்.ஓவிடம்
ஒட்டிக் கொள்கிறவர்கள் உண்டு. இன்னும் சில பேர் சிறிது காலம் சேனல்களுடன் போராடி,
டிகோடர்களை அணைத்து, எதிர்ப்பைக் காட்டி, கொஞ்சம் சங்கம் அது இதுவென போராடி,
கடைசியில் சங்கமும், எம்.எஸ்.ஓவிடம் சேருவதே உசிதமென ரெகமண்ட் செய்ய
ஆரம்பித்துவிடும். வேறு வழியில்லாமல் சொந்த கண்ட்ரோல் ரூமை நட்த்தியவர்கள்
எம்.எஸ்.ஓவிடம் இணைந்து தொலைத்தார்கள்.
இப்படியாக தங்களுடய
கரங்களை பலப்படுத்திய எஸ்.சி.விக்கு சோதனைகள் வராமல் இல்லை. இதற்கு முன்னர்
எம்.எஸ்.ஓக்களின் ஆதிக்கத்துக்கு முன் சூப்பர் டூப்பர் ஊத்தி மூடிக் கொண்டதும், ஜெ
ஆட்சிக்கு வந்த புதிதில் கேபிள் டிவி தொழிலை நடைமுறை படுத்தப் போவதாகவும், அதற்கு
கமர்ஷியல் டாக்ஸ் போட்டு வரி வசூலிக்க வேண்டுமென ஒரு ஐடியாவை கொடுத்தார்கள்.
முதலில் மீண்டும் டிவிக்களுக்கு வரி வசூலிப்போம் என்ற ஐடியாவைத்தான் செய்தார்கள்.
ஏனோ பின்னர் அதை கைவிட்டுவிட்டு, 40 சதவிகிதம் வசூலிக்கும் தொகையில் வரி என்று
போட்டு வசூல் செய்து கட்ட வேண்டுமென சட்டம் போடப்பட்டது. தினம் இதே வேலையாய்
அலையும் சேனல் டிஸ்ட்ரிப்பூட்டரால் முடியாத இந்த விஷயத்தை கமர்ஷியல் டாக்ஸ்
ஆட்களால் எப்படி செய்ய முடியும் என்று யோசிக்காமல் போடப்பட்ட சட்டம. நூறு ரூபாய் வாங்குகிறோம்
என்றால் அதற்கு நாற்பது ரூபாய் வரி என்பது கொஞ்சம் நஞ்சம் ஓவரல்ல.. படு ஓவர்.
ஆனால் அதன் பின்னால் தாங்கள் நினைத்து நடக்காத எரிச்சல் இருந்தது ஆப்பரேட்டர்கள்
எல்லோருக்கும் புரிந்ததுதான் இருந்தது. இந்த அறிவிப்பை கேபிள் டிவி
ஆப்பரேட்டர்களின் மாநாட்டில் அறிவித்தார்.
ஆனால் இந்தச் சட்டம்
நடைமுறைபடுத்தப்பட்டு செயலுக்கு வருவதற்குள் ஆட்சி மாற்றம் நடந்துவிட்டது.
பின்புதான் தெரியுமே அம்மா செய்ததை அய்யா தொடர மாட்டார் என்பது தெரிந்த
விஷயமாதலால் தொடரவில்லை. ஆனால் அதற்கு பதிலாய் காம்பவுண்ட் டாக்ஸ், பிக்ஸ்டு டாக்ஸ்
என்று என்ன்னவோ குழப்பி அடித்தார்கள். கடைசியில் ஒரு ஐந்து வருடங்களுக்கு சல்லீசான
தொகையை மாதா மாதம் வழக்கமான கட்டிங்கோடு கமர்ஷியல் டேக்ஸ் ஆட்கள் வாங்கி
சம்பாதித்த்துதான் மிச்சமே தவிர, வேறேதும் பெரிதாய் சாதிக்க முடியவில்லை. பின்பு
வந்த ஆட்சியிலும், இதே மாதி குழப்படிகளை செய்த்தினால் அப்படியே ஓடியது. ஒரு
கட்ட்த்தில் இதற்கான லெட்ஜர் மெயிண்டெய்ன் செய்யும் செலவுக்கு வேறு ஏதாவது வேலையை
பார்க்க்லாம் என்ற எண்ணம் அரசுக்கே வந்துவிட்டதாலோ என்னவோ கலைஞரே அந்த டாக்ஸையும்
எடுத்துவிட்டார். ஒரு வேளை சர்வீஸ் டாக்ஸில் இதை இணைத்த்தால் இருக்கலாம் என்று
தோன்றுகிறது. அந்த சர்வீஸ் டாக்ஸுக்கான விஷயம் அது தனிக் கதை. நாம் கேபிள்
டிவிக்கு வருவோம்.
சட்டரீதியாய், வரி, போன்ற
விஷயங்களில் ப்ரச்சனைகள் வந்தாலும், எம்.எஸ்.ஓவுக்கு வேறு ப்ரசனைகள் தலை தூக்க
ஆரம்பித்த்து. வடநாட்டில் இருக்கும் எம்.எஸ்.ஓக்களின் பார்வை தமிழ்நாட்டில் கால்
பதிக்க துடித்தன. ஆனால் அதை எல்லாம் இரும்புக்கரம் கொண்டு அடக்குவதில்
எஸ்.சி.விக்கு சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. ஆனால் அப்படிப்பட்ட ஒரு
போட்டியாளராய் ஹத்வே எழும்பி நிற்குமென்று அவர்களுக்கு அப்போது தெரியவில்லை. அப்படி
தெரிந்திருந்தால் மற்றவர்களை முளையிலேயே கிள்ளியதைப் போல கிள்ளியிருப்பார்கள்.
ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது உண்மையாயிற்று.
முன்பே சொல்லியிருந்தபடி,
எஸ்.சி.வி இங்கு காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே ஹாத்வே சென்னையில் முக்கிய
இடங்களில் தங்கள் நெட்வொர்க்கை பலப்படுத்தியிருந்தது. முக்கியமாய் அடையாறு,
திருவான்மியூர், மைலாப்பூர், புரசைவாக்கம், போன்ற ஏரியாக்களில் நன்றாக
காலூன்றியிருந்தது. கேபிள் டிவி எம்.எஸ்.ஓக்கள் தங்கள் நெட்வொர்க்கை பல வழிகளில்
பயன்படுத்த முடியும். அதில் ஒன்று இண்டெர்நெட் இணைப்புகள். ஹாத்வே ஒரு ஐ.எஸ்பியாகவும்
இருந்ததால் கேபிள் மோடம் மூலமாய் இண்டெர்நெட்டும் வழங்க ஆரம்பித்திருந்த நேரம்.
அந்நேரத்தில் தான் எஸ்.சி.வி நுழைந்தது.. ஏற்கனவே ஆட்சியை வைத்து கேபிள் டிவி
ஆப்பரேட்டர்களை மிரட்டி இணைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தபடியால்,
ஹாத்வேயுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்ததை போட முடிவு செய்தது எஸ்.சி.வி. அதாவது
அவர்களது ஏரியாவில் அவர்கள் அப்படியே இருந்துவிடுவது. மீதி இருக்கும்
ஏரியாக்களுக்கு அவர்கள் வரக்கூடாது என்று ஏரியா டிமார்கேஷன் செய்து கொண்டு இந்தியா
பாகிஸ்தான் பாடர் போல ஒரு கோட்டை அமைத்துக் கொண்டது. ஹாத்வேயும் அதற்கு ஒத்துக்
கொண்டது.
ஹாத்வே ஒத்துக் கொண்டதற்கான
காரணம் நிஜமாக சொன்னால் வேறு வழியில்லை. ஏற்கனவே அவர்கள் இருந்த ஏரியாவில் எல்லாம்
எஸ்.சி.வி கேபிள் இணைப்புகளை ஆப்பரேட்டர்களுக்கு கொடுக்க ஆரம்பித்திருந்தது, அது
மட்டுமில்லாமல் அப்படி எஸ்.சி.வியுடன் சேர விரும்பாத ஆப்பரேட்டர் ஏரியாவில் புதிய
ஆப்பரேட்டரை உருவாக்கி, ப்ரச்சனை செய்ய ஆரம்பிக்க, வேறு வழியில்லாமல்
ஆப்பரேட்டர்கள் எஸ்.சி.வியின் பக்கம் சாய ஆரம்பித்தார்கள். அது மட்டுமில்லாமல்
கேபிள் இணைப்புகள் அவ்வப்போது அறுத்து போட்டபடி இருக்க, வேறு வழியில்லாமல் போட்டி
போட்டு தொழில் செய்யக்கூடிய நிலையை விட, அட்ஜெஸ்ட் செய்து கொண்டு தொழில் செய்து
இருப்பதை தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்தது. ஒப்பந்தத்தில் இருவருக்கும் ஒரே
கட்டுப்பாட்டு அறையிலிருந்து சிக்னல் போக வேண்டும். அவசரத்துக்கு வேண்டுமானால்
அவர்களுடய கட்டுப்பாட்டு அறையை உபயோகிக்கலாம் என்றெல்லாம் இருந்தாலும், இருவரும்
அவரவர் கட்டுப்பாட்டு அறையிலிருந்துதான் ஒளிபரப்பி வந்தார்கள். இப்படி அமைதியாய்
ஒப்பந்தப்படி போய்க் கொண்டிருந்த நேரத்தில் எஸ்.சி.வி சென்னை ப்ரச்சனையை
முடித்துவிட்டு, மற்ற மாவட்டங்களில் கவனம் செலுத்தி தங்களை நிலை நிறுத்தி விட,
ஆட்சி மாற்றம் வந்ததும் வேறு விதமான ஆட்டத்தை ஆட ஹாத்வே இறங்கியது. அதன்
பின்னணியில் இருந்தது சசிகலாவின் குடும்பம்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
2 comments:
mmmmmmmmm....:-))))
நல்ல தகவல்...
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
Post a Comment