இணையத்தில் கொஞ்சம் கில்மாவான படங்களை பார்க்க வேண்டுமென்றால் பலான வெப்சைட்டுகளுக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால் சமீப காலமாய் கூகுளின் மூலமாய் வெகுஜன இணையதளங்களில் வரும் விளம்பரங்களில் டூபீஸில் பெண்களின் மார்பு மற்றும் இடையை மட்டுமே படங்களாய் போட்டு, வீட்டில் போரடித்துக் கொண்டிருக்கும் பெண்களை சந்திக்க விருப்பமா? என்று அழைக்கும் விளம்பரமும், இன்னொரு பக்கம் பெட்டில் மார்பகத்தை அழுத்தியபடியான ஒரு படத்துடன் ஏன் என்னை முயற்சி செய்யக்கூடாது? என்ற அழைப்போடு படங்களைப் போட்டு அந்தந்த இணையதளங்களுக்கான லிங்கை க்ளீக் செய்ய வைக்கிறார்கள். சாதாரண சினிமா வெப்சைட்டுகளில் கூட இத்தகைய விளம்பரங்கள் வர சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவ்விளம்பரங்களைத் தாண்டித்தான் வந்தாக வேண்டியிருக்கிறது. கூகுள் நிறுவனத்தில் விளம்பர கணக்கு வைக்கும் முன்பு நமது தளத்தை வயது வந்தோர்க்கான தளமா? என்றெல்லாம் விசாரித்துத்தான் விளம்பரம் வெளியிடவே அனுமதி கொடுக்கும். அப்படிப்பட்ட பட்சத்தில் வெகுஜன தளங்களில் இம்மாதிரி விளம்பரங்களை கூகுள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது என்ற உண்மை ஒரு புறம் கில்மாவாக இருந்தாலும்.. கொஞ்சம் சமுதாயப் பொறுப்பு இருக்கிற காரணத்தினால் படத்தோடு சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. சொல்லிவிட்டேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
அப்சல்குரு தூக்கிலடப்பட்ட சில மணி நேரங்களில் டெல்லியில் ஸ்பெஷல் செல் போலீசாரால் பத்திரிக்கையாளர் இஃப்திக்கார் கிலானியை கிட்டத்தட்ட ஹவுஸ் அரஸ்ட் செய்யப்பட்ட நிலையில் பிடித்து வைத்தும், அவரது குழந்தைகளை படுக்கையறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்நடவடிக்கைக்கான காரணம் அவரது மாமனார் சையத் அலி ஷா கீலானி ஒரு ஹுரியத் தலைவர். அவர்களையும் தான் போலீசார் வீட்டுக்காவலில் வைத்திருந்திருக்கிறார்கள். தன்னை வீட்டிலிருந்து கிட்டத்தட்ட மாமனாரின் வீட்டைக் காட்டச் சொல்லி இழுத்து சென்றதாகவும், பின்னாலேயே தன் மனைவியையும் இழுத்து வந்ததாகவும், பெட்ரூமில் பூட்டி வைக்கப்பட்டதால் தன் குழந்தைகள் பீதியில் உறைந்திருப்பதாகவும் சொன்னவர். கீலானி என் மாமனாராக இருந்தாலும் அவரது அரசியலுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லாமல் இரண்டு தலைமுறைகளாய் டெல்லியில் வசித்துக் கொண்டு பத்திரிக்கையாளராய் பணி செய்து கொண்டிருப்பவனிடம் இம்மாதிரியான செயல்களில் அரசு ஈடுபடுவது சரியான வழியல்ல என்று குமுறியிருக்கிறார். இம்மாதிரியான நடவடிக்கை ஏதுவும் நடக்கவேயில்லை என்று போலீஸ் தரப்பு பூசி மழுப்புகிறது. மாமனார் இஸ்லாமிய அமைப்பின் தலைவர் என்பதற்காக ஒரு பத்திரிக்கையாளரை இப்படி விசாரணை என்கிற பெயரில் அவமானப்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல். பத்திரிக்கையாளர் என்பதால் சில மணி நேரங்களில் எல்லாம் முடிந்திருக்கிறது. இதே நிலை சாதாரணன் ஒருவனுக்கு என்றால் அவன் நிலை? மத அமைப்புகளின் தலைவர் குடும்பம் என்றால் அவர்களும் இந்தியாவிற்கு எதிரானவர்களாய் இருப்பார்கள் என்று நினைப்பது அசிங்கமில்லையா? ஏன் இம்மாதிரியான நடவடிக்கை? விசாரணையை தவறு என்று சொல்லவில்லை. அதை மரியாதையாய் மனிதநேயத்தோடு அணுகட்டுமே..?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சென்ற வாரம் எழுதியிருந்தது போல போஸ்டர் ஒட்டுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு மாநகராட்சியின் பக்கத்திலிருந்து வெளிவந்த விஷயத்திற்கு பிறகு கண்ட் இன்னொரு நல்ல விஷயம் கோயம்பேடிலிருந்து, அசோக் நகர் வரை மெட்ரோ ரயில் மறைப்புகளின் மீது ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டிருந்ததுதான். தொடர்ந்து இதே போல சென்னையின் மேம்பால சுவர்கள் மீது ஒட்டப்படும் போஸ்டர்களின் மீதும் நடவடிக்கை எடுத்தால் சென்னை அழகுறும். செய்வீர்களா மேயர் சார்..?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சமீப காலமாய் சென்னை நகரில் எங்கு பார்த்தாலும் பத்து பத்தரைக்கு மேல் செம போலீஸ் செக்கிங். வழக்கமாய் நிற்கும் இடத்தில் நிற்காமல் ஐடியா மணியாய் அதற்கு எதிர் திசையில் எல்லாம் நின்று இரவு நேர போதை பயணிகளின் மப்பை சரக்கென இறக்குகிறார்கள். சில நேரங்களில் எட்டு மணிக்கெல்லாம் போகிற வழியில் நிறுத்தி “ஊதுங்க” என்று கேட்பவர்களிடம் “ இப்பத்தான் போறேன் வர்றப்ப ஊத சொல்லுங்க ஊதுறேன்” என்றதும் அசடு வழிய சிரிக்கிறார்கள். போன வாரம் பைக்கில் வந்து கொண்டிருந்த போது வழக்கப்படி போலீஸ் நிறுத்த, பேப்பரை எல்லாம் காட்டிவிட்டு, “ஏன் சார்.. பைக்குல வர்றவன் மட்டும் தான் தீவிரவாதி, ரவுடி, குடிகாரனா?” “ஏன்?” “ எழுபதாயிரம் ரூபா போட்டு பைக் வாங்கினவனை அத்தைக் கொடு இத்தைக் கொடுன்னு இம்சை பண்றீங்க? ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஒரு ஒட்டை மாருதியை வாங்கிட்டு சரக்கடிச்சுட்டு வர்றவனை செக் பண்ண மாட்டேன்கிறீங்க? “ என்றதும் போலீஸ்.. “இல்லையே... நாங்க எல்லாரையும்தான் செக் பண்றோம்” “எங்க சார் பண்றீங்க? முந்தா நேத்து நாங்க இதே ரூட்டுல பப்புலேர்ந்து கார்லதான் போனோம். எங்களை விட்டுட்டு, சிவனேன்னு போற பைக்காரங்களை எல்லாம் வண்டிக்கு குறுக்கால விழுந்து பிடிச்சிட்டு இருந்தீங்க?” என்றதும் அவர் சிரித்த சிரிப்புக்கான பெயர் தான் அசடு வழிதல் என்ற அர்த்தம் போல.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து

ஷட்டரை தூக்கிட்டாரு ஷெட்டர்
இவங்களாவே ஆஸ்கருக்கு ஆசைப்பட்டு எடுத்தது, பிலிம்பேருக்கு ஆசைப்பட்டு எடுத்தது என்று புலம்புவது படத்தின் வெற்றியைத்தான் குறிக்கிறது.
கஸாப் முடிஞ்சி அப்சல் குரு. குட்..
நாசர் தமிழ் பேசுகிறாராம். மூணு முறை பார்த்தும் எனக்கு மட்டும் பேசவேயில்லையே.. விஸ்வரூபம் விமர்சகர்கள் வாழ்க.
தமிழ் நாட்டில் எல்லா ஏரியாக்களிலும் விஸ்வரூபம். நன்றி போராட்டக்காரர்களுக்கு
Even the andhra theater got extrodinary sound Kamala worst. #Viswharoopam
இங்கிலீஷ் தெரிஞ்சு சொம்பு துக்குறவனா இருக்கிறத விட, அவரு எவ்வளவோ மேல்
அதிகமான அனுசரணை மிக மோசமான வலிக்கு வழி
துரோகம் என்பது வாய்பே அன்றி தவறு கிடையாது. # Translation
தோல்வியின் போது குறைவாகவும், வெற்றியின் போது பேசாமல் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
கஷ்மீரிய பெண்கள் இசைக்குழுவுக்கு தடை, மற்றும் மிரட்டல். இதை என்னன்னு சொல்றது?.
கடல் படத்திக்கு தடை கோரிக்கையாம். கேக்காம விட்டா தானா போயிரும்..
நீ.வெ.ஒ.கோடியில் வருகிறவர்களை எல்லாம் செல்லம் என்று விளிக்காமல் இருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்.
ரெண்டு நடுவர், பாடும் குழந்தைகள், வெண்தாடி ட்ரைனர், சீப் கெஸ்ட், வீணை வைத்யா, அம்மாக்களின் அழுகை.. பேர் மட்டும்தான் வேற # சன் சிங்கர்
தலையை கருப்படித்து, வெள்ளை தாடி ட்ரையினர். சன் சிங்கர்.. இந்த காப்பி தேவதானா?
இங்கிலீஷ் தெரிஞ்சு சொம்பு துக்குறவனா இருக்கிறத விட, அவரு எவ்வளவோ மேல்
விகடன் பேட்டியினால் சட்டம் ஒழுங்கு கெட்டதே அதனால் விகடனை தடை செய்யலாமா? லேமே?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@நீ.வெ.ஒ.கோடியில் வருகிறவர்களை எல்லாம் செல்லம் என்று விளிக்காமல் இருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்.
ரெண்டு நடுவர், பாடும் குழந்தைகள், வெண்தாடி ட்ரைனர், சீப் கெஸ்ட், வீணை வைத்யா, அம்மாக்களின் அழுகை.. பேர் மட்டும்தான் வேற # சன் சிங்கர்
தலையை கருப்படித்து, வெள்ளை தாடி ட்ரையினர். சன் சிங்கர்.. இந்த காப்பி தேவதானா?
இங்கிலீஷ் தெரிஞ்சு சொம்பு துக்குறவனா இருக்கிறத விட, அவரு எவ்வளவோ மேல்
விகடன் பேட்டியினால் சட்டம் ஒழுங்கு கெட்டதே அதனால் விகடனை தடை செய்யலாமா? லேமே?
சென்னையைத் தவிர மற்ற ஊர்களில் குறிப்பாய் திருச்சி போன்ற ஊர்களில் சினிமா டிக்கெட் விலை முன்னூறுக்கு குறையாமல் தான் இருக்கிறது. ஒர் மல்ட்டிப்ளெக்ஸ் வந்தால் ஊர் உருப்பட்டுவிடும் என்று சொல்லிக் கொண்டிருந்த திருச்சி வாசிகள் எல்லாம் விஜய் சினிமாஸ் வந்தும் அதே புலம்பலை புலம்பிக் கொண்டு தானிருக்கிறார்கள். திருச்சி தியேட்டரில் ஒரு காலத்தில் பப்ளிக்காக ஆன்லைனிலேயே இருநூறுக்கும், முன்னூறுக்கும் டிக்கெட் விற்றுக் கொண்டிருக்க, அரசு நடவடிக்கை எடுத்ததும், தற்போது ஆன்லைன் டிக்கெட்டுகளை பளாக் செய்ய மட்டுமே முடியும் வகையில் செய்திருக்கிறார்கள். அனைவரும் நேரில் வரும் போது நம்பரைச் சொல்லி, அதிக விலை கொடுத்துத்தான் டிக்கெட் வாங்க வேண்டுமாம். என்னைக்கு இந்த கொடுமை ஒழியுமோ?. இதையெல்லாம் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் அரசின் வருமானத்துக்காக டாஸ்மாக்கை மட்டும் நம்பாமல் இம்மாதிரியான வரி ஏய்ப்பு செய்பவர்களிடம் கவனம் செலுத்தி வருமானத்தை பெருக்க வழியுள்ளது. கவனிக்குமா அரசு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அரசு பேருந்துகளுக்கு பத்து ரூபாய் அதிக விலை என்று எண்ணெய் நிறுவனங்கள் சொன்னதும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசின் கோரிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் செவி கொடுக்காததால் அரசு அதன் பேருந்துகளுக்கு ரீடெயில் அவுட்லெட்டுகளில் டீசல் நிரம்ப உத்தரவிட்ட முடிவு தைரியமான முடிவு. ஆரம்ப காலத்தில் பெரிய பஸ்கள் எல்லாம் பகல் நேரத்தில் டீசல் நிரப்ப வந்து மற்ற வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவாக இருக்க, தற்போது பெரும்பாலும் இரவு நேரங்களில் வந்து டீசல் நிரப்பிக் கொண்டு போய்வருவதால் மக்களுக்கு பெரிய கஷ்டமில்லை. பேருந்துகளைப் போலவே அரசு வண்டிகள் அனைத்துக்கு இதே போல ரீடெயில் அவுட்லெட்டுகள் டீசல், மற்று ம் பெட்ரோல் நிரம்ப அரசு ஏற்பாடு செய்ய போவதாய் செய்திகள் வந்துள்ளது. விலையேற்றத்தை சமாளிக்க அரசு எடுத்த முடிவை பாராட்டினாலும், டீசல் போட வரும் கண்டக்டர்களுக்கும், அல்லது அதிகாரிகளுக்கும் பெட்ரோல் பங்குகளுக்கும் எதிர்காலத்தில் ஏதாவது ஒர் உடன்படிக்கை ஏற்பட்டு, பில் மட்டும் போட்டுக் கொண்டு கணக்கெழுத ஆரம்பித்தால் பிரயோஜனம் ஏதும் இருக்காது. கொஞ்சம் செக் பண்ணிக்கங்க.. கவர்மெண்ட்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கடல் படத் தோல்வியினால் பெரிதும் பாதிப்படைந்த விநியோகஸ்தர்கள் தங்களது நஷ்டத்தை ஈடு கட்ட வேண்டுமென மணிரத்னத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டிருக்கிறார்கள். ரெண்டு நாட்களுக்கு முன் பரபரப்பு செய்தியாய் எல்லா டிவிக்களிலும் ஓடியது. ஆனால் ஒர் விஷயம் வந்திருந்த விநியோகஸ்தர்களுக்கே தெரியும். அவர்கள் கடல் படத்துக்கான வியாபாரத்தை மணிரத்னத்திடம் செய்யவில்லை. ஜெமினியிடம் செய்திருக்கிறார்கள். அதாவது மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸிடமிருந்து ஜெமினி தமிழ் தெலுங்கு வியாபார உரிமைகள் வாங்கி விநியோகஸ்தர்களுக்கு விற்றிருக்கிறது. அப்படியிருக்க, அதன் தோல்விக்கு மணிரத்னம் எப்படி பொறுப்பாக முடியும். கமல் ஹேராமுக்கும், ரஜினி பாபாவுக்கும், மணி ரத்னம் இருவருக்கும் தங்கள் படத்தினால் ஆன நஷ்டத்தை விநியோகஸ்தர்களுக்கு ஈடு செய்திருக்கிறார்கள் அவர்களின் தயாரிப்பாக, வியாபாரம் செய்திருந்த போது. இதையெல்லாம் நன்கு தெரிந்த விநியோகஸ்தர்கள் இப்படி அறிக்கைவிடுவதன் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. மியாவ்... வரும்.. வெளியே வரும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்மகனின் ‘அமரர் சுஜாதா”
நாதன் பதிப்பக வெளியீடான தமிழ்மகன் எழுதிய ”அமரர் சுஜாதா” என்கிற பெயரில் அறிவியல் புனைக்கதைகளின் தொகுப்பு பற்றிய விமர்சனக் கூட்டம் டிஸ்கவரியில் நடந்தது. நான் போவதற்கு முன் அமிர்தம் சூர்யா பேசி முடித்துவிட்டார். பிறகு சந்திரா பேசினார். இதற்கு முன் சுஜாதாவை படித்ததில்லை என்றும், லைட் ரீடிங் தனக்கு ஒத்துவராது எனவும், இக்கதைகளை படித்தவுடன் சுஜாதாவையும் படிக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது என்றார் சிறப்பு. இயக்குனர் கவிதாபாரதி தனக்கும் தமிழ்மகனுக்குமான நட்பைப் பற்றி சிலாகித்துவிட்டு, ஒரிரு கதைகளைப் பற்றி தனக்கு பேசத் தெரியாது என்று சொல்லிவிட்டு சுவாரஸ்யமாய் பேசிச் சென்றார். ஒர் நல்ல எழுத்தாளனை கொண்டாட பப்ளிக்குட்டி வேண்டியிருக்கிறது என்று வருத்தப்பட்டார். ராஜுமுருகனை கடைசியாய் பேச விட்டார்கள். அவரும் தன் பங்குக்கு தமிழ்மகனின் வெட்டுப்புலியை படித்துவிட்டு அவரை சந்திக்க ஆவலாய் இருந்ததாகவும், அதற்கு முன்னுரையாய் ஒர் சுவாரஸ்ய பிகர் கதையையும் சொன்னார். ஃபிகர் கதை சுவாரஸ்யம். ராஜுமுருகன் என் எழுத்துக்களை படிப்பதாகவும், நன்றாக இருப்பதாகவும் பாராட்டினார். அதற்கு கவிஞர் பத்மஜா “ஒரு நாளைக்கு எத்தனை பொய் சொல்வீங்க?” என்றார். ஒரு நாள் நான் அவரின் கவிதைகளை பாராட்டிப் பேசப் போகிறேன் என்றேன். ஒர் முக்கிய நிகழ்வு ஒன்றில் கல்ந்து கொள்வதற்காக சீக்கிரம் கிளம்பினேன். வண்டியில் போய்க் கொண்டிருக்கும் போது கூட்டத்தில் பேசிய பேச்சுக்களை அசைப் போட்டபடி போய்க் கொண்டிருந்தேன். எல்லோரும் ஒருமித்து சொன்ன கருத்துக்கள் ரெண்டு. ஒன்று தமிழ்மகன் சிறந்த எழுத்தாளர் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இரண்டு சுஜாதா கமர்ஷியல் எழுத்தாளர், சுவாரஸ்யமான நடைக்கு சொந்தக்காரர், தமிழ் எழுத்துலகில் ஒர் மறுக்க முடியாத ஆளுமை என்றது தான். ஒரு வழியா இலக்கியவாதிங்கன்னு சொல்லிக்கிறவங்க ஒத்துக்கிட்டாங்கப்பா.. அட்டைப் படத்தில் ஒர் சூப்பர் பிகருடன் தலைவர் சுஜாதா தான் சிரித்துக் கொண்டிருந்தார். ஒத்துக்கிட்டாலும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் தலைவன் தான் இன்னைக்கும் பெஸ்ட் செல்லர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A husband, one bright sunny morning, turns to his lovely wife, "Wife, we're going fishing this weekend, you, me and the dog."

Post a Comment
7 comments:
நானும் கவனித்தேன் ஆனா படம் நல்லா தான் போட்டு இருக்கீங்க
நான் போவதற்கு முன் அமிர்தம் சூர்யா பேசி முடித்துவிட்டார்?? they started early or u went late ????
Actually, These google ads are shown based on your search :-)
adult corner is so wrost today...
Even 'adult jokes' can be of good taste - unlike this one! I sent you one today - check it! - R. J.
Huriyet is a liberation front,not an islamic organization.
சென்னையில் முக்கிய வீதிகளில் இருக்கும் சுவர்களில் தமிழ் மன்னர்களின் 'கொடை வள்ளல்' மற்றும் இன்னபிற சிறப்புகள், தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் அழகிய ஓவியங்கள் 'அலங்கரித்து' இருக்கின்றன. சென்னையை அழகுப்படுத்தும் பணிகளில் இந்த பணியும் உள்ளடங்கியது. இனி, இந்த 'அழகான ' சுவர்களில் சுவரொட்டி ஓட்டக்கூடாது. மீறினால், கைது, சிறை என சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டே அறிவித்துவிட்டது.
சென்னையை 'அழகுப்படுத்துதல்' பற்றியே நாம் தனியாக பேச வேண்டும். இப்பொழுது நான் சொல்ல வருவது வேறு.
சுவர்களை வெறும் சுவர்களாக பார்த்தவர்களா நீங்கள்? எனக்கு சுவர்கள் அப்படி இல்லை. இந்த சமூகம் ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கின்றன? ஏன் இத்தனை கோளாறுகள்? இதை சரி செய்ய முடியாதா? சரி செய்வது என்றால் எப்படி என்று தேடுதலோடு திரிந்து கொண்டிருந்தேன். தேடுதலோடு திரிந்த என்னை, பாதைக்காட்டி அழைத்துச் சென்றது சுவர்கள் தான்.
நான் வாழ்ந்த பகுதியில், பட்டிமன்றமா? வழக்காடு மன்றமா? கலை நிகழ்ச்சியா அல்லது பொதுக்கூட்டமா? எல்லாவற்றையும் எனக்கு தெரிவித்தவை சுவர்கள் தான். தினம் ஒரு நிகழ்ச்சி. இன்றைக்கு ஒரு சரியான அமைப்பை வந்தடைய உதவியவை சுவர்கள் தான்.
சுவர்களை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள்? வாக்கு அரசியல் கட்சிகள். கொள்கை இல்லாது போனதால், தன் தலைவர்களின், வீரத் தளபதிகளின் மூஞ்சிகளை வரைந்து வைக்கிறார்கள். செத்துப்போன பிறகும், இன்று வரைக்கும் சுவரை கெட்டியாக பிடித்திருப்பது தொப்பி எம்.ஜி.ஆர். இன்னும், விளம்பர சுவரொட்டிகள் மற்றும் மாற்று அரசியலை மக்களிடையே கொண்டு செல்லும் ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர அமைப்புகள்.
இப்படி சுவர்களை தடை செய்வதின் மூலம், யாருக்கு உண்மையிலேயே இழப்பு? வாக்கு அரசியல் கட்சிகள் இப்பொழுது தனித்தனியாகவே தொலைக்காட்சி அலைவரிசையை சொந்தமாக வைத்திருக்கின்றன. அவ்வளவு வசதியில்லை என்றாலும், பத்திரிக்கைகளை சொந்தமாக வைத்திருக்கின்றன. தன் சரக்குகளை விற்பனை செய்யும் விளம்பரதாரர்கள் வேறு ஊடகங்களுக்கு எளிதாக நகர்ந்துவிடுவார்கள். பணம் கொஞ்சம் கூடுதலாக செலவழியும். அவ்வளவு தான். உண்மையில் பாதிப்பு என்பது முற்போக்கு, புரட்சிகர சக்திகளுக்கு தான்? தனது நிகழ்ச்சி நிரலை பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால், தேசிய நீரோட்டத்தில் கலந்து அவர்களோடு அந்த ஜனநாயக சகதியில் படுத்து உருண்டால் தான், சின்ன செய்திகளை கூட வெளியிடுவார்கள். இல்லையென்றால், இருட்டடிப்பு தான்.
இதனால் தான், அரசு, தன்னைப் பார்த்து கேள்வி எழுப்புகிற, குடைச்சலை தருகிற சுவர்களை, 'அழகிய' ஓவியங்கள் மூலம் தடை செய்கின்றன. இனி, மக்களை சென்றடைய புதிய 'சுவர்களை' நாம் கண்டுபிடிக்க வேண்டும். இல்லையென்றால், பழைய 'அழகில்லாத' சுவர்களை நாம் மீட்டெடுக்க வேண்டும்.
Post a Comment