Thottal Thodarum

Nov 25, 2013

கொத்து பரோட்டா - 25/11/13

தொட்டால் தொடரும்
42 நாட்கள் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. இன்னும் சில தினங்களில் கதைக்கு முக்கியமான காட்சிகளையும், ஒரு பாடல் காட்சிகளையும் எடுத்துவிட்டால் எல்லாம் சுபம். இச்சமயத்தில் என் படத்தின் நாயகனைப் பற்றி ஒன்று சொல்லியாக வேண்டும். இரண்டாம் கட்ட பாண்டிச்சேரி படப்பிடிப்பின் போது ஒரு ஆக்‌ஷன் ப்ளாக்கிற்க்காக குதித்த போது அவருக்கு வலது கால் முட்டியில் லிகமெண்ட் டேர் ஆகிவிட்டது.  கதையில் முக்கியமான நேரம் அது. வலியில் துடித்தார். தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர்  அன்றைக்குத்தான் சிங்கப்பூருக்கு கிளம்பியிருந்தார். விஷயம் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாய்  ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்று ஆக வேண்டிய காரியங்களை பாருங்கள் என்று சொல்ல, தமன் சற்று நேரம் யோசித்து,.. இருக்கட்டுங்க.. “என் ஒருத்தனால ஷூட்டிங் பாதிக்கக் கூடாது என்று சொல்லி, அன்றைக்கு மட்டுமில்லாமல் இன்றைக்கு வரை அதற்கான பிஸியோ ட்ரீட்மெண்டை மட்டுமே எடுத்துக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் டெடிக்கேஷனுக்கு என் நன்றிகள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@

Nov 13, 2013

B.A. Pass

 
தொட்டால் தொடரும் படப்பிடிப்பு காரணமாய் படம் பார்ப்பதற்கு நேரமில்லாமல் போய்விட்டது. இரண்டு நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் போனில் “தலைவரே நீங்க தொடரா எழுதிட்டு இருந்த கதை ஹிந்தியில படமா வந்திருச்சு” என்றார்.  நான் எழுதி வந்த நான் ஷர்மி வைரம் கதையைத்தான் சொல்கிறார் என்று புரிந்தது. ஆண் விபசாரனைப் பற்றிய கதை.  உடனடியாய் படத்தை தேடி டவுன் லோட் செய்து பார்க்க ஆரம்பித்தேன்.

Nov 11, 2013

கொத்து பரோட்டா -11/11/13

”பவா என்றொரு கதை சொல்லி” எனும் ஆவணப் பட வெளியீட்டுக்கு சென்றிருந்தேன். பவா ஒர் எனும் மனிதனைப் பற்றி பேசி கொண்டேயிருக்கலாம். அதே போல அவர் கதை சொல்லும் பாங்கிற்காக கேட்டுக் கொண்டேயிருக்கலாம். ஒரு முறை நான், கார்க்கி, எஸ்.கே.பி கருணா, மிஷ்கின் என நண்பர்கள்  முன் பவா கிணறு வெட்ட வருபவனைப் பற்றி சொன்ன கதை இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ ஆளுமைகளுடனான அன்பு, ஆழ்ந்த படிப்பறிவு, அனுபவறிவு என பெற்றிருக்கும் பவாவிடம் ஏதாவது சொன்னால் அப்போதுதான் கேட்பது போல அவர் முகத்தில் தெரியும் ஆர்வமும், குழந்தைத்தனமும், நாம் சொன்னதற்கான பாராட்டோ, அல்லது விமர்சனமோ ச்ட்டென உறுத்தாமல் விழும். பார்க்கும் எல்லாவற்றிலும் ஏதாவது கதை இருக்கும் என நம்புகிறவர். அதை மிக அழகாய் சொல்கிறவர்கள் இல்லாத காலத்தில் அப்படிப்பட்டவரைப் பற்றி அவர் வாழும் காலத்திலேயே ஆவணப்படுத்தும் முயற்சியை மேற்க் கொண்ட செந்தழல் ரவி, எஸ்.கே.பி.கருணாவை பாராட்டியே தீர வேண்டும்.  ஆவணப்படத்தில் டெக்னிக்கலாய் சவுண்ட் சைடில் சில குறைபாடுகள் இருந்தாலும், தயாரிப்பாளர் என்பதால் செந்தழல் ரவி அவர்கள் பெரும்பாலான காட்சிகளில் அவருடன் பயணிப்பதும், எல்லாவற்றிக்கும் “உம்” கொட்டுவதை தவிர்த்திருக்கலாம். பவா வேட்டை கதை சொல்லும் இடம் அருமை. பார்த்து கேட்டால் மட்டுமே அதன் சுகம் புரியும். நம் வாழ்நாளில் நம்முடன் இருக்கும் கதைசொல்லியை பற்றிய ஆவணப்படம் இன்னும் சிறப்பாக வந்திருக்க வேண்டுமோ என்ற ஒர் சிறிய ஆதங்கம் தோன்றத்தான் செய்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@
ஒர் ஆவணப்பட வெளியீட்டுக்கு இவ்வளவு கூட்டம் எதிர்பார்க்கவில்லை. அரங்கம் நிரம்பி வழிந்தது. மைக்குக்கு பின்னால் கிடைத்த சீட்டில் படம் பார்த்தேன்.  பட ஒளிபரப்புக்கு பின் வந்திருந்த பிரபலங்கள் அனைவரும் மேடைக்கு அழைக்கப்பட, இயக்குனர் சேரன், நா.முத்துகுமார் ஆகியோர் அன்புடன் அழைத்து “தொட்டால் தொடரும்” பட வேலைகள் குறித்தும் பேசினார்கள். பார்க்கும் பத்திரிக்கை நண்பர்கள், திரைப்பட நண்பர்கள் அனைவரும் படம் குறித்து விசாரித்தது ஒர் விதத்தில் சந்தோஷமாய் இருந்தாலும் உள்ளூர லேசான நடுக்கம் இருக்கத்தான் செய்கிறது. வீரம்னா பயமில்லா நடிக்கிறதுன்னு கமல் சொன்னாரில்லை அதை பாலோ பண்ணிட்டிருக்கேன். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Nov 7, 2013

கலிகாலம்.

நீ எதை விதைக்கிறாயோ அதுதான் முளைக்கும் என்று சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன். நல்லது செய்தால் நல்லது நடக்கும், கெட்டது செய்தால் கெட்டது என்பதுதான் விதி என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் இது கலிகாலம் நல்லதுக்கு காலமில்லை போல.. 


Nov 5, 2013

ஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.

ஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும் கிடைக்கவில்லை. அன்றைக்கு மட்டும் தமிழ்நாட்டில் 7000 காட்சிகள் நடத்தப்பட்டிருக்கிறது. அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல். கிங் ஆப் ஓப்பனிங் என்பதை மீண்டும் மீண்டும் அஜித் நிருபித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த நாள் எஸ்கேப்பில் படம் பார்த்தேன். ஆர்யா - டாப்ஸியின் மொக்கை காதல் கதை படத்தின் ஓட்டத்திற்கு இடையூறு. அங்காங்கே விறுவிறுவென இருந்தாலும்,   ஆன்லைனில் ஒரு லட்சம் ட்ரான்ஸ்பர் செய்தாலும், ஒரு மில்லியன் ட்ரான்ஸ்பர் செய்தாலும் ஒரே நேரம் தான் ஆகும் என்பது கூட தெரியாமல் படமெடுப்பார்களா? போன்ற லாஜிக் கேள்விகளை கேட்காமல் பார்த்தால் நல்லது. அஜித் என்றொரு பிம்பம் மட்டுமில்லையென்றால்.. ஆரம்பம்.. முதலெழுத்து மிஸ் ஆகியிருக்கும்.

Nov 1, 2013

தொட்டால் தொடரும் -குட்டியண்ணன் ஜம்ப்

ஒரு வண்டிக்கு குறுக்கே இன்னொரு கார் நுழையுது. அதைப் பார்த்த வண்டிக்காரன் சடன் ப்ரேக் அடிக்கிறான். அது ஸ்கிட் ஆகி அப்படியே வண்டி மேல இடிச்சி பறந்து போய் விழுது. இப்படி எழுதும் போதும், சொல்லும் போது சுலபமாய் இருக்கும் விஷயம் காட்சிப் படுத்தும் போது சுலபமாய் இருப்பதில்லை. அப்படி இருக்காது என்று  கேட்டு, பார்த்தறிந்திருந்தாலும் அதை நாமே நம் படத்திற்காக செய்யும் போது புதிய அனுபவமாய்த்தான் இருக்கிறது.