Thottal Thodarum

May 31, 2014

சாப்பாட்டுக்கடை - சீனா பாய் இட்லிக்கடை

இட்லி சாப்பிடறதுக்காக சவுக்கார்பேட்டை போகலாமா? என்று கேட்ட போது தமன் ஆச்சர்யமாய் பார்த்தார். எனக்கு அவரின் பார்வை போலவே நிறைய நண்பர்களின் ஆச்சர்ய பார்வையை சந்தித்திருப்பதால் சாதாரணமாய் எடுத்துக் கொண்டு ‘வாங்க.. ஒரு வாட்டி வந்து சாப்பிட்டு பார்த்துட்டீங்கண்ணா ஏன் இவ்வளவு தூரம் வந்தோம்னு கேட்க மாட்டீங்க” என்றேன். என்னைப் போலவே கொஞ்சம் அட்வென்சரஸ் ஆனவர் என்பதால் விட்டோம் போர்ட் பிகோவை சவுக்கார்பேட்டை என்.எஸ்.சி போஸ் ரோட்டுக்கு.

May 26, 2014

கொத்து பரோட்டா -26/05/14 - திரை விமர்சனம், தொட்டால் தொடரும், நடுநிசிக்கதைகள்,

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
தொட்டால் தொடரும் ஆரம்பித்த சமயம். இயக்குனர் பார்த்திபன் அவர்களை சந்திக்க நண்பர் குலசேகரன் கூப்பிட்டிருந்தார். பார்த்த மாத்திரத்தில் மிகவும் பழகியவர் போல பேசினார். நிறைய சினிமா பற்றி பேசினோம். சமீபத்திய படங்கள், அவரின் மலையாள ப்ராஜெக்ட், அவர் எடுக்க போகும் படம் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். போகும் போது அவரின் எண்ணைக் கொடுத்து எப்ப வேணும்னாலும் கூப்பிடுங்க என்று நம்பர் சொன்னார். நான் என்னுடயதை கொடுத்த போது “அட ஏற்கனவே உங்க நம்பர் என்கிட்ட இருக்கே.. சங்கர் நாராயணன்னு வச்சிருக்கேன். எதுக்கோ உங்களை முன்னாடியே மீட் பண்ணனும்னு நினைச்சிருக்கேன் என்றார். அந்த சந்திப்பிற்கு பிறகு அவரை என் பட பாடல் டீசருக்காகத்தான் அழைத்தேன். படப்பிடிப்பில் இருந்தார். அதனால் ஒரு தேதி சொல்லி, அவரது உதவியாளர் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி, அவரது வேலைகளுக்கு நடுவே எங்கள் டீசர் படப்பிடிப்புக்கும் ஒத்துழைத்தார். ஆனால் அதற்காக அவர் எடுத்த மெனக்கெடல்கள் அபாரம். பெரிதும் நெருக்கமில்லாத எனக்கே இவ்வளவு மெனக்கெடல்கள் என்றால் அவரின் படத்திற்கு எவ்வளவு இருக்கும்?. காலை 9 மணிக்கு ஆரம்பித்த அவரது கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தின் ஆடியோ வெளியீடு மதியம் 12 மணிக்குத்தான் முடிந்தது. ஒவ்வொரு நிகழ்விலும் அவரது பங்களிப்பு இல்லாமல் ஏதுவும் நடக்கவில்லை. சுவாரஸ்யமாய் நடந்தது விழா. நான்கு இசையமைப்பாளர்கள், ஒரு பாடலும், ட்ரெயிலரும் வெளியிட்டார்கள். நச்.இவரின் இவ்வளவு மெனக்கெடல்களும் இவருக்கு  மாலையாய் விழ என் நெஞ்சார்ந்த வேண்டுதல்கள். 
@@@@@@@@@@@@@@@@@@@

May 19, 2014

கொத்து பரோட்டா -19/05/14 - மினி

கேட்டால் கிடைக்கும்
பீனிக்ஸ் மாலில் பைக் பார்க்கிங் செய்பவர்களிடம் ஒரு மணி நேரத்திற்கு 50 ரூபாய் வாங்கி கொள்ளையடிக்கிறார்கள் என்று சொல்லி, அதை குறித்து எழுதி வந்தேன். இப்போது அதற்கு அந்த மாலில் தியேட்டர் நடத்தும் சத்யம் சினிமாஸ்காரர்கள்  டிஸ்கவுண்ட் கொடுக்க வழி செய்துள்ளனர். இது குறித்து லூக்ஸ் புக்கிங் கவுண்டரில் விசாரிக்கும் படி ட்விட்டரில் சொல்லியிருக்கிறார்கள். நன்றி சத்யம் சினிமாஸ். கேட்டால் கிடைக்கும் என்பது நிருபணமாகிக் கொண்டிருக்கிறது. கேளுங்க.. கேளுங்க. கேட்டுக்கிட்டே இருங்க உங்க உரிமைகளை..
Visitors of Luxe can avail discount on two wheeler parking! Approach the counter at the Luxe lobby for more details!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

May 12, 2014

கொத்து பரோட்டா -12/05/14 - Montage/Hasse To Passe, Thieves, Always, யாமிருக்க பயமே, நீயா நானா?

வழக்கமாய் நானும் எங்கள் ஹீரோ தமனும் வாரத்தில் ஏழு நாட்கள் இரவில் சந்திப்பதுண்டு. எப்போது சந்தித்தாலும் ஏதேனும் சினிமாவைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம். மனுஷன் அநியாய சினிமா அப்டேட் உள்ளவர். தமிழ் தவிர, கொரிய, அமெரிக்க, ஐரோப்பிய சினிமாக்கள், சீரியல்களைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டேயிருப்பார். சமீபகாலமாய் கொரிய படங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அன்றிலிருந்து மீண்டும் கொரிய படங்களைப் பார்க்கும் அரிப்பு அதிகமாகிவிட்டது. பெரும்பாலான கொரியப் படங்கள் தமிழ் இந்தி படங்களைப் போலவே இருக்கிறது. ஒருபக்கம் பக்கா மசாலா என்றால் இன்னொரு பக்கம் நெஞ்சை நக்கிவிடுகிறார்கள். அப்படி இந்த வாரம் பார்த்த படங்களைப் பற்றிய ஒர் தொகுப்பாய் இந்த கொத்து பரோட்டா
@@@@@@@@@@@@@@@@@@

May 5, 2014

கொத்து பரோட்டா - 05/05/14

கேட்டால் கிடைக்கும்
டொமினோ பிட்சாவில் பில் போடப்பட்டவுடன் வழக்கம் போல செக் செய்ய ஆரம்பித்தேன். மொத்த தொகைக்கு 4.49 சதவிகிதம் சர்வீஸ் டேக்சும், 14.5 சதவிகிதம் வாட்டும் போட்டிருந்தான். அது ஒரு செல்ப் சர்வீஸ் ரெஸ்ட்ராரெண்ட். அதில் என்ன சர்வீஸ் சார்ஜ்? என்று கேட்டதற்கு முழி முழி என முழித்தான். மேனேஜர் என்றொருவர் வந்து அவரும் தன்  பங்கிற்கு முழித்துவிட்டு, டோர் டெலிவரி எல்லால் செய்யுறோமில்லை அதுக்குத்தான் என்றார் ஸ்மார்ட்டாய். அது டெலிவரி செய்யுறதுக்கு நான் இங்கே வாங்கிட்டு போறேன் எனக்கெதுக்கு? என்றதும் அவர் பங்கிற்கு “ஙே”. எனக்கு இந்த சர்வீஸ் டேக்ஸ் மற்றும் வாட் குழப்பம் ஒவ்வொரு பில்லுக்கும் வந்து கொண்டேத்தானிருக்கிறது. இந்த நேரத்தில் என் பெரிய மகன் பில்லை நோட்டம் விட்டுக் கொண்டேயிருந்தான். அதில் ப்ளாஸ்டிக் கவருக்கு 6.11 பைசா போட்டு, அதற்கு சேர்த்துத்தான் வாட், சேவை வரி எல்லாம் போட்டிருந்தார்கள். “அப்பா நாமத்தான் இங்கயே சாப்பிடப் போறோமே எதுக்கு ப்ளாஸ்டிக் பேக்குக்கு காசு தரணும் என்று கேட்க, நீயே போய் கேளு என்றேன். அவனும் போய் கேட்க, அங்கிருந்து வந்த ஒருவர்.. அது பில்லிங் போட்டவங்க சரியா கேட்கலை உங்க கிட்ட டாக்ஸ் எல்லாம் சேர்த்து பத்து ரூபாய் இந்தாங்க என்று மிச்சம் கொடுத்தார். ஆனால் அங்கே உட்கார்ந்து சாப்பிட்ட அனைவரின் பில்லிலும், அவர்கள் டீபால்டாய் ப்ளாஸ்டிக் கவர் பில் செய்திருந்தார்கள். எனக்கு பணம் கொண்டு வந்து கொடுத்தவரின் பார்வையில் ஒர் ஏளனம் இருந்தது. ஆனால் எனக்கு மிகவும் பெருமையாய் இருந்தது. என்னைப் போலவே கேள்வி கேட்க என் மகன் ஆரம்பித்திருக்கிறான். நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது.கேட்டால் கிடைக்கும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@