Thottal Thodarum

Jan 29, 2015

கோணங்கள் -14

எங்கே இருக்கிறது அந்த இணையதளம்? - கோணங்கள் 14

எப்போது தொழில்நுட்பம் வளர ஆரம்பித்ததோ, அப்போதிலிருந்தே பைரஸியும் ஆரம்பமாகி விட்டது. திரையரங்கு மூலம் கிடைக்கும் வருமானத்தைத் தாண்டி, சிறிய முதலீட்டில் படமெடுத்து, உலகப் பட விழாக்களில் திரையிட்டுக் கோடிகளில் வருமானம் சம்பாதிக்கும் இயக்குநர்கள் எப்படிப்பட்ட படத்தை இம்மாதிரியான விழாக்களில் பங்கெடுக்க வைக்கிறார்கள்?

Jan 18, 2015

கொத்து பரோட்டா -19/01/15

தொட்டால் தொடரும்
ஜனவரி23 ஆம் தேதி முதல் தொட்டால் தொடரும் தமிழகம், கர்நாடகம், கேரளா, மற்றும் சிங்கப்பூர், மலேசியாவில் வெளியாகிறது. யாருடா மச்சான்?” பாடல் எக்ஸ்க்ளூசிவாய் இசையருவில் தொடர்ந்து ஒளிபரப்பாகி படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சேரன் மற்றும் திரையுலக நண்பர்களின் கருத்தோடு வெளியான வீடியோக்கள், சில சினிமா மற்றும் நண்பர்கள் அல்லாதவர்களுக்கு படம் போட்டுக் காட்டப்பட்டு ரெண்டொரு நாட்களுக்கு பிறகு அவர்களின் எண்ணத்தில் என்ன உள்ளதோ அப்படியே அதை ஒரு செல்பி வீடியோவாக அனுப்பச் சொன்னேன். நல்ல வரவேற்பு அவர்களிடத்திருந்து. அதே வரவேற்பு ரசிகர்கள் மற்றும் நண்பர்களாகிய உங்களிடமிருந்தும் வருமென்று நம்புகிறேன். கிட்டத்தட்ட கமல்ஹாசனின் வசனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். :)
@@@@@@@@@@@@@@@@@@@@

Jan 6, 2015

கோணங்கள் -13 -எல்லாவற்றையும் மாற்றுமா சேரனின் முயற்சி?

கோணங்கள்-13: எல்லாவற்றையும் மாற்றுமா சேரனின் முயற்சி?

திரையரங்க வசூல் மட்டுமே சினிமாவில் போட்ட முதலை எடுப்பதற்கான வழி என்றிருந்த காலம் கடந்து போய்விட்டது. மொழிமாற்று உரிமை, மறுஆக்க உரிமை, ஆடியோ உரிமை என ஆரம்பித்து, வானொலியில் பாடல்களை ஒலிபரப்ப, ஒலிச்சித்திரம் ஒலிபரப்ப என்று வழிகள் கிளைத்தன. தூர்தர்ஷனில் பாடல்களையும், படத்தையும் போட வரிசையில் நின்று விற்றுக் காசாக்கும் காலம் வந்ததது.

Jan 5, 2015

கொத்து பரோட்டா -05/01/15

திருவாதிரை களியும்.. பேலியோ டயட்டும்
வாரத்துக்கு ஒரு முறை சீட்டிங்கில் இருக்கும் நிலையில் திங்களன்று மீண்டும் டயட் முருங்கையில் ஏறலாம் என்றால் திருவாதிரை இன்னைக்கு, களி வேண்டாமோ? என்று எகத்தாளமிட்டாள் மனைவி. வெல்லம், நெய்யோடு, அரிசியை ரவையாய் உடைத்த மாவோடு, தேங்காய், எல்லாம் போட்ட களி ஒரு விதமான அசட்டு தித்திப்போடு இருக்கும். வெறும் களியை விட, உடன் வழங்கப்படும் காய்கறிகள் எல்லாம் சேர்த்த கூட்டுக் குழம்பு தான் திருவாதிரை களியின் ஸ்பெஷாலிட்டி. தித்திக்கும் களியோடு, காரம், மணம் நிரம்பிய காய்கறிக்கூட்டு ஒரு மாதிரி தத்தக்கா பித்தக்காவாக இருக்குமென்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் சாரி.. வாவ்..வாவ்.. சூடான களியோடு, கூட்டை குழைத்து வாயில் போட்டால்.. டிவைன். ”இன்னொரு கரண்டி போடேன்”  “டயட்டுன்னு சொன்னீங்க?” “அப்படியா சொன்னேன். அது நாளைலேர்ந்து. சாமி குத்தம் ஆயிரப்பிடாது இல்லை..” வாழ்க திருவாதிரையும், நடராஜரும்.
@@@@@@@@@@@@@@@@@@@@