Thottal Thodarum

Dec 21, 2015

கொத்து பரோட்டா - 21/12/15

வெள்ளம் வந்து போய் வாரம் தாண்டியாகிவிட்டது.ஆங்காங்கே நிவாரணப் பணி என்று பேனருடன் முக்கியமாய் அம்மாவின் ஆணைப்படி, அவரது முகம் போட்ட பேனருடன் வளைய வருகிறார்கள். நிவாரணப் பொருட்கள் கொண்டு வந்து கொடுப்பவர்களிடம் கிட்டத்தட்ட பிடுங்கிக் கொண்டு ஒன்றுக்கு ரெண்டாய் வாங்கி வைத்துக் கொள்ளும் மனோபாவம் அதிகமாகிவிட்டது. பல இடங்களில் தகராறு ஏற்பட்டு, விட்டால் போதுமென்ற எஸ்ஸாகிய குழுக்கள் அதிகம். இதனால் நிஜமாய் தேவையானவர்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் போகிற வாய்ப்பு அதிகமாகியிருக்கிறது. சென்னை முழுவதும் எங்கும் மீண்டும் புதிய ரோடுக்களை போடுவதற்கான அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. சென்னை ஆற்காடு சாலை முழுவதும் பகல் நேரத்தில் ஊட்டி, கொடைக்கானல் பனிக்கிடையே பயணிக்கும் எஃபெக்ட்டில் புகை மூட்டத்தில் பயணிக்க வேண்டியிருக்கிறது. மழைக்காலத்தில் தண்ணீருக்குள் பள்ளமிருந்து விழுந்தவர்கள், இப்போது தூசு மூட்டத்தில் விழுகிறார்கள் அவ்வளவே. அப்படியே வாட்ஸப்பில் நான் ஆணையிடுகிறேன் ரோடெல்லாம் சரியா போடுங்கன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்.

Dec 12, 2015

வெள்ளம்.....



வெள்ளம் எனக்கொன்றும் புதியதில்லை. என்பதுகளில் ஒருமுறை என் வீட்டின் தரைத்தளம் முழுவதும், மெல்ல கசிவாய்ஆரம்பித்து, சளசளவென வீடு முழுதும் ஈரவாசனையோடு பரவி, எங்கும், எங்கும் தண்ணீராய் ஆக்கிரமித்தை கண் முன்னால் பார்த்திருக்கிறேன். வெள்ள ஆக்கிரமிப்பால் என் உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டேன். இரவு முழுவதும் அழுது கொண்டேயிருந்தேன். ஜுரம் வந்து ”தண்ணிவருது.. தண்ணிவருது” என புலம்பியிருக்கிறேன்.