click here

TT

Thottal Thodarum

Jan 26, 2016

Soggade Chinni Nayana

மனம் படத்திற்கு பிறகான நாகார்ஜுனின் படம். டபுள் ஆக்‌ஷன். ர்மயா கிருஷ்ணன், லாவன்யா திரிபாதி, ப்ரம்மானந்தம் என வழக்கம் போல நட்சத்திர பட்டாளம் கொண்ட படம். கதையென்று பார்த்தால் பங்கார்ராஜு இளம் வயதில் இறந்து போய் நரகத்தில் கூட சுற்றி பேய் பிகர்களுடன் சுற்றிக் கொண்டிருக்கும் அஜாய் குஜால் நாயகன். இங்கே பூமியில் அவனுக்கு பிறந்த நாகார்ஜுனுக்கும் அவருடய மனைவி லாவன்யா திரிபாதிக்கும் ப்ரச்ச்னை. கணவர் தன்னை கவனிப்பதேயில்லை. ஏன் கல்யாணமான ஒரு வருஷத்தில் மூணே மூணு முறை தான் மேட்டரே நடந்திருக்கிறது எனும் நிலை. இருவருக்குமான புரிதல் இல்லாததால் அம்மாவிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு விடுதலை கொடுக்கிறேன் என்று அமெரிக்காவிலிருந்து வருகிறார்கள். வந்த இடத்தில் அம்மா ரம்யா கிருஷ்ணன் தன் கணவனின் படத்தின் முன் உன்னைப் போல ஸ்திரிலோலனாய் ஆகிவிடக்கூடாதே என்று பொத்தி பொத்தி வளர்த்தது தப்பாயிருச்சே. இப்ப என்ன பண்ண? என்று இறைஞ்ச, மேலோகத்தில் அதை கேட்ட எமதர்மன் பங்காரு ராஜுவை அவன் மனைவிக்கு உதவ அனுப்புகிறார். அதாவது ஒரு பெளர்ணமி நாளில் திரும்பி வர வேண்டுமென்றும், மனைவியின் கண்களுக்கு மட்டும் பார்க்க, கேட்க முடியுமென்ற வரத்தையும் தருகிறார். வந்த போதுதான் தெரிகிறது தன்னுடய மரணம் இயல்பானது இல்லை என. பின் பங்கார ராஜு எப்படி தன் மகனின் இல்லற வாழ்வையும், தன்னை கொலை செய்தவர்களையும் பழி வாங்குகிறார் என்பதுதான் கதை.

படம் முழுக்க, நாகார்ஜுன். அவரின் இரண்டு பையன்களுக்கும் சரியான போட்டி, அவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கிறார்.உடன் ரம்யா கிருஷ்ணன் வேறு வெட்கப்பட்டே கொல்கிறார். பையன் நாகார்ஜுனுக்கு பொண்டாட்டியாய் வரும் லாவண்யாவின் க்யூட். அதிலும் பின் பக்க ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுகள் அட்டகாசம்.

ரொம்பவும் ப்ரெடிக்டபிளான கதை, திரைக்கதையை, நாகார்ஜுனும் ப்ரொடக்‌ஷன் வேல்யூவும் தான் காப்பாற்றுகிறது. பி.எஸ்.விநோத், சித்தார்த்தின் ஒளிப்பதிவு சிறப்பு. அனூப் ரூபனின் இசை ஓகே. முழுக்க முழுக்க நாகார்ஜுனை மட்டுமே ந்ம்பி எடுத்திருக்கிறார் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா. கை கொடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
கேபிள் சங்கர்

Jan 25, 2016

கொத்து பரோட்டா - 25/01/16

கேட்டால் கிடைக்கும்
வெள்ளத்தில் என் வீட்டு டெலிபோன் மற்றும் இண்டர்நெட் இரண்டாம் தேதி டிசம்பர் அன்று கட் ஆனது. அதன் பிறகு என் வீட்டு லைன் 18 ஆம் தேதிதான் திரும்பவும் வந்தது. ஆனால் அதற்கு பில் தொகையாய் ஒரு முழு மாத தொகையை கட்டச் சொல்லி, அனுப்பியிருந்தார்கள். போன் செய்து கேட்ட போது டிஸ்கவுண்ட் கொடுக்கிறோம் முன்னூறு ரூபாய் என்றார்கள். அது என்ன கணக்கு? எப்படி முன்னூறு ரூபாய் வரும். என்னுடய கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேல் எனக்கு எந்த விதமான டெலி கம்யூனிகேஷன் தொடர்பு உங்களது நெட்வொர்க்கில் இல்லையே என்று தொடர்ந்து கேட்டதில் மாதம் 1500 ரூபாய் பேக்கேஜில் இருக்கும் எனக்கு உடனடியாய் பில் தொகை வெறும் 535 கட்டச் சொல்லி வந்தது. அதே போனில் என் மொபைல் எட்டு நாட்கள் வேலை செய்யாததற்கு 180 ரூபாய் டிஸ்கவுண்டும் பெற்றேன். ஏதோ என்னைப் போன்ற வேலையில்லாதவர்கள் கேட்டால் கிடைக்கும் என்று நம்புகிறவர்கள் கேட்கிறோம் கிடைக்கிறது. இவனுங்க கிட்ட என்ன கேட்டு என்னத்த? என்று என்னத்த கன்னைய்யா போல இருக்கிற எத்துனை பேர் முழு பில்லையும் கட்டியிருப்பார்கள். இந்த ஏரியாக்களில் தங்களது லைன் வேலை செய்யவில்லை என்பது தெரிந்தே பில் அனுப்பும் ஏர்டெல் போன்ற கார்பரேட் நிறுவனங்களை என்ன செய்தால் தகும்? மக்களே பில்லை கட்டியிருந்தாலும் டைம் வேஸ்ட் ஆகுது என்று பார்க்காமல் கேளுங்கள் நிச்சயம் கிடைக்கும். அடுத்து சேஃப்பில் வைத்திருக்கும் லைனுக்கும் முழு பில் தொகை அனுப்பி டெய்லி டார்சர் செய்து கொண்டிருக்கிறார்கள். என் சித்தி வீட்டில் அவர்களுக்காக கேட்க புறப்படணும் பை.. கேட்டால் கிடைக்கும்

Jan 22, 2016

நிவாரணத்துக்குரியவன்

நிவாரணத்துக்குரியவன்
வெள்ளம் எனக்கொன்றும் புதியதில்லை. என்பதுகளில் ஒரு முறை என் வீட்டின் தரைத்தளம் முழுவதும், மெல்ல கசிவாய் ஆரம்பித்து, சடசடவென வீடு முழுதும் ஈர வாசனையோடு பரவி, எங்கும், எங்கும் தண்ணீராய் ஆக்கிரமித்தை கண் முன்னால் பார்த்திருக்கிறேன். வெள்ள ஆக்கிரமிப்பால் என் உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டேன். இரவு முழுவதும் அழுது கொண்டேயிருந்தேனாம். ஜுரம் வந்து ”தண்ணி வருது.. தண்ணி வருது”என புலம்பியிருக்கிறேன்.  பின்பு தண்ணீர் வடித்த வீட்டின் கதவை திறந்து உள்ளே போன மாத்திரத்தில் அத்துனை சேற்றின் நடுவே “ஓ’வென அலறி உட்கார்ந்தபடி அழுத அம்மாவைப் பார்த்து அழுதிருக்கிறேன். அப்பா.. ஏதும் சொல்லாமல் ஒரு கணம் நிறுத்தி நிதானமாய் சுற்றி பார்த்துவிட்டு, கலைந்து சிதைந்திருந்த பொருட்களையெல்லாம்  கவனித்தபடி “சரி வா.. போனா போகட்டும் வாங்கிக்கலாம்.. வேலைப் பாப்போம்” என்று சொல்லி அம்மாவை எழுப்பினதை பார்த்திருக்கிறேன். டிவி,  விளையாட்டுப் பொருட்கள் போனது எல்லாம் பெரும் விஷயமாய் இருந்திருக்கிறது.

Jan 18, 2016

கொத்து பரோட்டா - 18/01/16

ஜல்லிக்கட்டு பற்றி ஆளாளுக்கு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கும் ஜல்லிக்கட்டுக்கும் தூரம் கி.மீட்டர் அளவு என்பதால் அது குறித்து நான் கருத்து சொல்ல விழையவில்லை. ஆனால் இம்மாதிரியான ப்ரச்சனைகள் வரும் போது பெரும்பாலான இணையர்கள் உடனடியாய் பார்ப்பன எதிர்ப்பு, ஆதிக்கம் என்று எத்தையாவது உளறிக் கொண்டிருப்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. பெரும்பான்மை நினைத்தால் எதை வேண்டுமானால் சாதிக்கலாம், போராடலாம் என்கிற நிலையில் இம்மாதிரியான குற்றம் சாட்டும் முறை போராட்டத்தினை வலுவிழக்க செய்யும் என்பது என் எண்ணம்.

Jan 11, 2016

கொத்து பரோட்டா - 11/01/16

13வது சென்னை உலகப் பட விழாவிற்கு கெஸ்ட் பாஸ் இருந்தது. ஆரம்பித்த நாளில் போகலாமென்று இருந்த போது படு பயங்கர வேலை. ரெண்டு நாள் போக முடியாமல் சனியன்று ரெட்கார்பெட் ஷோவிற்கு இரானிய படமான “டாக்சி”க்கு சென்றேன். அருமையான படம். நிறைய அரங்குகளில் படம் போடும் போது அங்கே இங்கே சென்று அலைய, கார் சரியான வாகனம் கிடையாது. ஒவ்வொரு இடத்திலும் பார்க்கிங், பின்பு திரும்ப எடுப்பது என்பதெல்லாம் அம்பூட்டு ஈஸியான விஷயமில்லை. அதற்கு மால் போன்ற பார்க்கிங் சிறந்தது. ஆனால் மால்களில் ஒரு நாள் முழுவதும் பார்க்கிங் கொடுத்தால் சொத்து அழிந்துவிடக்கூடிய வாய்ப்பு அதிகம். அதனால் மிகவும் செலக்டிவாக பார்க்க எண்ணம். நேற்று கார்த்திக் சுப்பாராஜின் “அவியல்”.
@@@@@@@@@@@@@@@
Hot Girls Wanted
நெட்ப்ளிக்ஸ் லிஸ்டில் கண்ணில் பட்ட டாக்குமெண்டரி படத்தின் பெயர். எப்படி இணையத்தில் இம்மாதிரியான பெயர்களைப் பார்த்ததும் சட்டென க்ளிக் செய்வோமோ அதைப் பற்றித்தான் இப்படமே. போர்ன் இண்டஸ்ட்ரி என அழைக்கப்படும் ப்ளூ பிலிம்களில் முன்னரெல்லாம் அதற்கான நடிகைகள் இருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் 18 வயதான அமெச்சூர்கள் நிறைய பேர் “கேர்ள் நெக்ஸ்ட் டோர்” போலத் தெரியும் பெண்கள் நிறைய பேர், கொஞ்சம் கூட யோசிக்காமல் பணத்திற்காகவும், புகழுக்காகவும் நடிக்க தொடக்கியிருப்பதைப் பற்றியும், இம்மாதிரியான அமெச்சூர் போர்னோகிராபி வீடியோக்கள், அதன் பின் இயங்கும் குழுக்கள், என இந்த டாக்குமெண்டரியில் விஸ்தாரமாய் கவர் செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் கண்கள் முழுக்க, கனவுடன், நிறைய பணம், விமானப்பயணம், பெரிய ஹோட்டல்கள், அதீத செக்ஸ் பற்றிய எக்ஸைட்மெண்ட் என கண்கள் விரிய ஆயிரம் கதை பேசும் பெண்கள், கொஞ்சம் கொஞ்சமாய் அதனுள் இருக்கும் பிரச்சனைகள், வலி, வேதனை, எல்லாவற்றையும் மீறி இதிலிருந்து மீறி வெளியே வர முடியாமல் தடுக்கும் பணம், அது கொடுக்கும் சுதந்திரம்,

வீட்டுக்கு தெரியாது என்று நினைத்துக் கொள்ளும் முட்டாள் தனம், பின்னாளில் அம்மாவுக்கு தெரிந்து அவருக்கும், அப்பெண்ணுக்கும் நடக்கும் பேச்சுவார்த்தைகள் சான்ஸ்லெஸ். அப்பெண்ணுடய காதலன், அவளை அப்படியே ஏற்றுக் கொள்ள விழைவதும், அவளை இத்தொழிலிருந்து வெளிவர சொல்லி முடிவெடுக்கச் சொல்ல, அவள் மிகவும் தயங்கி மெசேஜ் அனுப்பும் காட்சி நிதர்சனம். இத்தொழிலில் இருக்கும் பெண்களுக்கு எத்தனை நாள் சர்வைவல் என்று இதன் ஏஜெண்ட்டிடம் பேசும் போது, மேக்ஸிமம் மூன்று மாதங்கள், இன்னும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போகிறவளாயிருந்தாள் ஆறு மாதம். அதற்கு மேல் மிகவும் கஷ்டம். என்பான். ஆனால் இது அறியாமல் அவர்கள் படும் அவஸ்தைகள் அதை சொல்லுமிடம், அதை ஏற்றுக் கொண்டு அவர்கள் பேசும் காட்சிகள் எல்லாம் நெத்தியடி.  எங்கேயும் நெஞ்சை நக்கும் விஷயமாய் இல்லாமல் இன்றைய அமெரிகக் இளம் தலைமுறையினரிடம் செக்ஸை பணமாக்கும் ஆசையும், ஈஸி புகழும், டிவிட்டர் எப்படி இம்மாதிரியான நெட்வொர்க்கு இணக்கமாய் இருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறார்கள். க்ரீமி பீ, ப்ளோஜாப், மார்க்கெட்டில் ஒருவனைப் பார்த்தேன். மிகவும் குள்ளமாய் இருந்தான் அவன் என்னிடம் வது நான் உங்களுடய போர்ன் படத்தின் ரசிகன் என்று சொல்லும் போது சந்தோஷமாய் இருந்தது. என்னுடன் படுக்க அழைத்து அறைக்கு சென்றான். அவன் உயரத்திற்கும், அவனுடய “லுல்லா”வுக்கும் சம்பந்தமில்லை. முழங்கை வரை இருந்தது என்று எக்ஸைட் ஆகி பேசும் வசனங்கள், ஷூட் முடிந்த பின் ஒரே நாளில் அதிகப்படியான செக்ஸ் வைத்துக் கொண்டதன் காரணமாய் வஜைனாவில் ஒரு விதமான மாய்ஸ்சர் ஏற்பட்டு அதற்கான மெடிக்கல் ட்ரீட்மெண்ட், கடைசியில் வேறொரு பெண் 300 டாலருக்கு ஒரு ப்ளோஜாய் ஷூட்டில் போய் கலந்து கொண்டு விட்டு, அது வயலண்ட் ப்ளோஜாய் ஷூட் ஆரம்பித்து 15 நிமிடங்கள் ஷூட் செய்தாகிவிட்டது பின்பு நிறுத்துவது என்பது தொழில் தர்மம் கிடையாது. என்று சொல்லி அழவும் முடியாமல், பேசும் விதம் என  கிட்டத்தட்ட பயோகிராபிக்கல் டாகுமெண்டரிதான். டோரண்டிலோ, அல்லது நெட்பிளிக்ஸிலோ பார்த்துவிடுங்கள். சண்டேன் பிலிம் பெஸ்டிவலில் கலந்து கொண்டு பாராட்டுப் பெற்ற படம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
Taxi
ஜாபர் பனாஹி என்ற ஈரானிய இயக்குனரை அந்நாடு 20 வருடங்களுக்கு சினிமா எடுக்க தடை விதித்து இருக்கிறது. இவரது முந்தைய படங்களான "This is not a film" "closed curtain" மிகவும் ரகசியமாய் ஒரு வீட்டிற்குள்ளேயே எடுக்கப்பட்ட படம். இப்படம் ஒரு டாக்சிக்குள்ளே எடுக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு டாக்குமெண்டரி போல,  அதில் நடித்திருக்கும் நடிகர்கள் அத்தனை பேரும் அமெச்சூர் நடிகர்கள், ஒரு மனித உரிமை பேசுபவன், பெண் வக்கீல், பைரஸி டிவிடி விற்கும் வியாபாரி, வயது முதிர்ந்த பெண்கள், பனாஹியின் உறவுக்காரப் பெண் குழந்தை என பயணிக்கும் பயணிகள், அவர்கள் பேசும் சமகால அரசியல், மற்றும் பொது விஷயங்கள். பனாஹியின் உறவுக்காரப் பெண் குழந்தையின் மூலம் அவர் எடுக்கும் குறும்படத்திற்காக அரசு கொடுத்திருக்கும் விதிமுறைகளை பற்றி சொல்லும் போது இருக்கும் சர்காஸம், அப்பெண் வீடியோ எடுக்கையில் ஒரு குப்பை பொறுக்கும் பையன் கீழே கிடந்த ரூபாயை திருடும் வீடியோ வந்துவிட, அவனை அழைத்து நீ என் படத்தை கெடுத்துவிட்டாய் உடனே போய் அவர்களிடம் பணத்தை திரும்பக் கொடு அப்போதுதான் என் படம் வெளியாகும் என்று சொல்லுமிடமெல்லாம் அட்டகாசம். இன்னும் சொல்ல பல சுவாரஸ்யங்கள் இருக்கிறது. அதை நீங்கள் பார்க்கும் போது சிலாகிப்பதற்காக விடுகிறேன். பட்.. ஒர் சிறந்த கலைஞனின் சினிமா எனும் கலை மீதான அர்பணிப்பும், காதலும் இப்படம் நெடுக தெரிகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Nenu Shailaja
ராமும், நம்மூர் கீர்த்தி சுரேஷும் காதலிக்கிறார்கள். பின்னாளில் ஒரு சிறு பிரச்சனை. அதற்காக அவரின் வீடு வரை போய் குடும்பத்தின் பிரச்சனை எல்லாம் சரி செய்து எப்படி காதலியையும், காதலையும் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. இதே மாதிரியான தில்வாலே கதையை  அக்காலத்திலிருந்து இந்திய ஹீரோக்கள் எல்லோரும் அதே கதையில் நடித்திருக்கிறார்கள். ஹிட் டெம்ப்ளேட். அதை எப்படி சுவரஸ்யமாய் சொல்கிறார்கள் என்பது மட்டுமே முக்கியம் அந்த வகையில் ராமின் ஸ்கீரின் ப்ரெசென்ஸ், தேவிஸ்ரீபிரசாத்தின் இசை, அருமையான ஒளிப்பதிவு. என சரியாய் ப்ரெசெண்ட் பண்ணியிருக்கிறார்கள். டெம்ப்ளேட் ஹிட்
@@@@@@@@@@@@@@@@@@@@
Charli
நினைச்சபடி வாழ ஆசையுள்ள ஒரு பெண், அவள் வீட்டிலிருந்து எஸ்கேப்பாகி போய் சேருமிடத்தில் ஏற்கனவே வசித்தவனைப் பற்றி அங்கே கிடைக்கும் அனுபவங்கள், அவன் அறைகுறையாய் சொல்லிச் சென்ற கதையினால் ஈர்க்கப்பட்டு, அவனை சார்ந்தவர்களை தேடிப் போகிறாள். அங்கே அவனைப் பற்றிக் கிடைக்கும் அனுபவங்கள், செய்திகள் மெல்ல அவனை விரும்ப வைக்கிறது. ஒரு கட்டத்தில் அவள் தன்னை தேடுகிறாள் என்று தெரிந்தும் அவன் கேட் அண்ட் மெளஸ் கேம் ஆடுகிறான். அந்த ஆட்டம் நின்றதா? இல்லையா? எனப்துதான் கதை. என்ன ஒரு நடிப்பு. இந்த பார்வதி மேனனிடம். அவ்வளவு க்யூட். அவுட் ஆப்த பாக்சாய் யோசிக்க வேண்டுமென்றால் அறிவு ஜீவியாய் காட்ட வேண்டுமென்றால் சாராயம், டோபூ, இலக்கிய புத்தகங்கள், கொஞ்சம் பார்திபத் தனமான பொருட்கள், மார்டன் ஆர்ட், விபசாரிகளை மதித்தல் போன்ற டெம்ப்ளேட் நெஞ்சை நக்கும் காட்சிகள் இருந்தாலும், பார்வதி மேனன், துல்கர், அருமையான ஒளிப்பதிவு, ஆங்காங்கே நெகிழ வைக்கும் காட்சிகள் மெட்ராஸை நியாபகப்படுத்தினாலும் ஹாண்டிங் இசை என சார்லி மனதை வருடுகிறான் டோண்ட் மிஸ்
@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Peter: "Your secretary is very sexy..." Tony: "Thanks! It's a robot actually, named 'Maria'. If you squeeze her right boob, she takes dictation & if you squeeze her left boob, she types letters! I'll Lend it to you for a day & you can see her functions..." Next day Peter called Tony from hospital & shouted: "You bastard!" You didn't tell me that the "HOLE" between Maria's legs is a pencil sharpener.
கேபிள் சங்கர்

Jan 4, 2016

கொத்து பரோட்டா -04/01/16

2015
எனக்கு பல விதமான அனுபவங்களையும், பாடத்தையும் புகட்டிய வருடம். 2013ல் ஷூட்டிங் ப்ளான் செய்யப்பட்டு, 2014 மார்ச்சில் ரிலீஸ் செய்ய முடிவு செய்து ஆரம்பிக்கப்பட்ட எனது முதல் படமான தொட்டால் தொடரும், 2015ல் பல தடைகளை கடந்து வெளியானது. வழக்கம் போல தியேட்டர்கள் கிடைக்காமை பெரும் சவாலாகி, முதல் நாள் 145 தியேட்டர்களுக்கு தயாராகி, அடுத்த நாள் அப்படியே பாதி திரையரங்குகளில் வெளியானது. ஓரளவுக்கு நல்ல ரெவ்யூ வந்ததும், தியேட்டர்கள் இல்லாமை பெரும் மைனஸாய் போனது. பின்பு நான்கைந்து மாதங்களுக்கு பின் வெளிநாட்டு ஆன்லைன் உரிமை விற்ற பிறகு உலகமெங்கும் ஆன்லைனில், டோரண்டில், யூ ட்யூபில் பார்த்து கிடைத்த நல் விமர்சனங்கள் கொடுத்தது எல்லாம் எனக்கு அனுபவம். இப்படம் உருவாகிக் கொண்டிருக்கும் போது கிடைத்த அனுபவங்கள் ஒரு பெரிய ரோலர் கோஸ்டர் ரைட். குமுதத்தில் நான் கு பக்க கட்டுரை, சாப்பாட்டுக்கடை வீடியோ வடிவம், என சுவாரஸ்யத்துக்கு குறைச்சல் இலலி. அடுத்த கட்டமாய்,  சிவிகுமாருடன் அவரது இயக்கத்தில் ஆரம்பிக்க இருக்கும் திரைப்படத்துக்கு திரைக்கதை வசனமெழுதும் பொறுப்பு. ஒரு  சிறு முதலீட்டு இன்னோவேட்டிவ் முயற்சிப் படம், ஒர் பெரிய நிறுவனத்துடனான அடுத்த படைப்புக்கான பேச்சுவார்த்தை, என முயற்சிகள் சிறப்பாய் போய்க் கொண்டிருந்த நேரத்தில் வெள்ளம் வந்து மொத்தமாய் வாஷவுட் ஆக்கிவிட்டதை என்னவென்று சொல்ல?. நண்பர்கள் இல்லையென்றால் நானில்லை என்பதை மீண்டும் நிருபித்தது இந்த இக்கட்டு. நன்றி நண்பர்களே. இப்புத்தாண்டு இலக்கியவாதிகளோடு விடிந்தது வித்யாசமான அனுபவம். உயிர்மையில் என் முதல் கட்டுரையோடு.