Thottal Thodarum

May 1, 2020

லாக்டவுன் கதைகள் -6


பாசிட்டிவா பேசிப் பழகுறதே சுத்தமா போயிருச்சு”
“ஏன் இப்படி சொல்லுறீங்க?”
”எல்லாரும் ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போனுதானே சொல்லிட்டிருக்காங்க?’
“ஒன்றுபடுவோம்னு சொன்னா சமூக இடைவெளி விட்டா விடாமயானு ஒருத்தன் மீம் போடுறான்”
“வள்ளுவரே இடுக்கண் வருங்கால் நகுகனு சொல்லியிருக்காரு. பசங்க சும்மா ஜாலிக்கா போடுறாங்க”
“பிரதமர் விளக்கேத்த சொன்னாரு. விளக்கேத்துனா கொரானா போயிருமாங்குறாங்க, கை தட்டுங்கடான்னா அதுக்கும் கிண்டல், கேலி”
“பின்ன என்னாங்க.. விளக்கேத்துங்கடான்னா திபாவளி கொண்டாடுறானுங்க. கை தட்டுங்கடான்னா ரோட்டுல தட்டுல தட்டிட்டு ஊர்வலம் போறானுங்க சங்கிப் பயங்க’
“பாத்தீங்களா? ஒரு குழு பண்ணின தப்பு அவங்களுக்கு பட்டம் கட்டி கட்டம் கட்டுறீங்க. அவங்க தெரியாம பண்ணுறாங்க. இதுக்கு முன்னாடி இந்த மாதிரி பேண்டமிக்க நம்ம தலைமுறை பார்த்திருக்கா? எல்லாருக்குமே இது புதுசு. அவங்களுகு தெரிஞ்ச வழியில இது மாதிரியான கஷ்டமான சூழ்நிலையிலேர்ந்து வெளிய வரப் பாக்குறாங்க”
“யாரு இல்லைன்னா? ஆனா இந்த பேண்டமிக்குக்கு அப்புறம் என்னா ஆகப் போகுதுன்னே தெரியலை? நீங்க மாச சம்பளக்காரரு. வியாபாரி, அவனைக் கூட விடுங்க. ஏதோ ஒரு மாசம் ரெண்டு மாசம் அட்ஜஸ்ட் பண்ணிப்பான். இந்த தினக்கூலி, பொட்டிக்கடைக்காரங்க. ப்ளூ காலர் ஜாப் செய்யுறங்க, மைக்ரெண்ட் தொழிலாளிங்க. இவங்களோட எதிர்காலம்?”
“எல்லாம் சரியாயிருங்க. ஏன் எல்லாத்தையும் கெட்டதாகவே பாக்குறீங்க? ஜப்பான் மேல குண்டு போட்டது அவ்வளவுதானு சொன்னாங்க. எழுந்து நிக்கலை?”
“ஆனா எழுந்து நிக்க எத்தனை வருஷம் ஆச்சு? ஒரு தலைமுறை கஷ்டப்பட்டுத்தானே நிமித்து விட்டுச்சு. அடுத்த தலைமுறை வாழுது. கஷ்டத்துல செத்தவன் செத்ததுதானே?”
“எல்லாத்துலேயும் நெகட்டிவான விஷயத்தைப் பார்க்க கூடாதுங்க”
“ஒரு விஷயம் பத்தி பேசினோம்னா நல்லது கெட்டது எல்லாத்தையும் இல்ல பேசணும்”
“எப்படி? பார்க்குற பர்ஷப்சனு ஒண்ணு இருக்குல்ல. நான் இன்னைக்கு சென்னையில 160 பேருக்குத்தான் கொரானா தொற்றுனு நினைக்கிறேன். நீங்க 160 பேருக்கு கொரோனா பரவியதுனு நினைக்கிறீங்க. நான் நல்லா இருக்குற லட்சக்கணக்கான பேரை நினைக்கிறேன். நீங்க பாதிக்கப்பட்ட லிஸ்ட முன் வைக்குறீங்க?”
“அப்ப பாதிக்கப்பட்டவங்களைப் பத்தி நினைக்கக்கூடாதா?”
“நினைங்க. அவங்களுக்கு என்ன செய்யணும்னு யோசிங்க. ஆனா பதட்டப்படாதீங்க. படுத்தாதீங்க”
“மனுஷனுக்கு சோறில்லைனு கவலைப் பட்டா மாட்டுக்கு இல்லை புலிக்கு இல்லை அது பத்தி யாரும் கவலைப்படலையேனு யோசிக்கிறதுக்கு பேரு பாசிட்டிவ் தாட்டா?”
“அவங்க இடத்துலதான் நாம எல்லாம் இருக்கோம்னு இயற்கை நிருபிச்சிட்டிருக்கு. மிருகங்க எல்லாம் மெயின் ரோட்டுக்கு வந்த வீடியோ வைரல் ஆச்சே அதைப் பார்த்தீங்க இல்லை?’
“ஏங்க அது பாதி படங்கள்ல எடுத்த வீடியோ.”
“பாருங்க உண்மைய ஏத்துக்க மனசில்லை. விதண்டாவாதம் பண்ணுறீங்க”
“அட நிஜமாங்க. வாட்ஸப் பார்வர்டுல நமக்கு ஏத்தாப் போல இருக்குறதப் பத்தி மட்டும் யோசிக்க கூடாது. எல்லா தகவல்களையும் பகுத்தாயணுமில்லை”
“ஒலகத்துல அமெரிக்காவை விட இந்தியால பாதிக்கபட்டவங்க கொறைச்சல்”
“இங்க டெஸ்ட் பண்ணவேயில்லைங்க”
“பண்ண டெஸ்டுக்கு குறைச்சல் தானே?”
“அதெப்படி டெஸ்ட் பண்ணாமல் நீங்க சொல்லுற கணக்க நான் எப்படி நம்புறது?”
“என்னாங்க எதிர்கட்சிக்காரங்க மாதிரியே கேள்வி கேட்குறிங்க?”
“ஃபேக்டை கேக்குறேன். அது தப்பா?’
“எல்லாரும் நல்லா செயல்படுறாங்க. இன்னும் கொஞ்சம் செயல்பட்டா இன்னும் நல்லாருக்கும்னு சொல்லுறது எப்படி? இப்படி குத்திக் கிழிக்குறது எப்படி?”
“ஏங்க எப்படி சொன்னாலும் ரெண்டு பேரும் ஒரே விஷயத்தைதான் சொல்லுறோம். நான் சொல்லுறது இப்படி மெல்ல சொல்லி புரிய வந்து செயல்படுற நேரமில்லை. உடனடியா வேணுங்கிறதுனால அப்படி அடிச்சி சொல்லுறோம்”
“வீட்ட விட்டு வெளிய வர வேணாம்னு சொன்னா? கூட்டம் கூட்டமா போய் வைரஸை பரப்புறாங்க”
“உங்க வீட்டுல எப்படி?”
“நான் கொரானானு அனென்ஸ் பண்ண ஆரம்பிச்ச போதே உலகத்துல இருக்குற எல்லா நாடுகள்ல நடக்குற விஷயங்களை அப்சர்வ் பண்ணி, என் வீட்டுக்கு ரெண்டு மாசத்துக்கு தேவையான மளிகை, சாப்பாடு, கிரேவிங் அயிட்டம், ஸ்பேர் எலக்ட்ரிக்கல் அயிட்டம். ஸ்நாக்ஸ்னு தேவையானது எல்லாத்தையும் ஸ்டாக் பண்ணிட்டேன். மெடிசன்ஸ் உட்பட. எல்லா ஓ.டீ.டீ ப்ளாட்பார்முக்கும் ஒன் இயர் சப்ஸ்கிரிப்ஷன். டிஜிட்டல் புக்ஸ்னு எண்டர்டெயின்மெண்டுக்கு ரெடி. என் வேலையும் ஒர்க் ப்ரம் ஹோமுக்கு மாறிடுச்சு. டெய்லி ஈவினிங் யோகா, ஸோ.. உண்மைய சொல்லணும்னா எனக்கு பதட்டமேயில்லை. நிச்சயம் வரக்கூடிய மாதங்கள்ல எல்லாம் சரியாயிரும். பாஸிட்டிவ் திங்கிங்க் தான் உலகத்தை மாத்தும்.”
“உங்க அப்பா அம்மா உங்க கூட இருக்காங்களா?”
“இல்லை.”
“ஏன்?”
“அவங்க எப்பவும் தனியாத்தான் இருப்பாங்க”
“இந்தமாதிரியான நேரத்துல வயசானவங்களை கூட வச்சிட்டு பார்த்துக்கலாமில்லை?”
“வயசானவங்களைத்தான் உடனடியாய் தாக்குதாம். ஸோ.. அப்பா அம்மான்னா என்ன ஷோஷியல் டிஸ்டன்ஸிங் முக்கியமில்லை. அதான் அவங்களை கூட்டிட்டு வரும் போது இன்பெக்ட் ஆயிட்டாங்கன்னா. என் பேமிலிக்கும் வந்திருமில்லை”
”இதுக்கு பேரு பாஸிட்டிவ் திங்கிங்கா?”
“பின்ன?’
“சுயநலம்ங்க”
“சென்னையில மட்டும் எத்தனை சுகாதார துறை ஆட்கள், டாக்டர்கள், நர்ஸுகள், போலீஸ், அரசு அதிகாரிகள்னு லட்சம் பேருக்கு மேல வேலை செய்யுறாங்க அவங்க எல்லாம் நமக்கு வந்திருச்சுன்னானு யோசிச்சா என்னாகும்?”
“அதான் அவங்களுக்கும் இன்பெக்ட் ஆக ஆர்மபிச்சிருச்சே?”
“பாத்தீங்களா இப்ப நீங்க நெகட்டிவா பேசறீங்க?”


Post a Comment

No comments: