Thottal Thodarum

May 3, 2020

லாக்டவுன் கதைகள்-7-2040


7. லாக்டவுன் கதைகள் -2040

”இதெல்லாம் தேவையானு எனக்குள்ள கேள்வி வந்துட்டே இருக்கு டாக்டர்” என்று கவலையுடன் டாக்டரின் முகத்தைப் பார்த்த பர்வதவர்தினிக்கு முப்பது வயது இருக்கும். முகத்தில் போட்டிருந்த மாஸ்க்கை கழட்டியதும், மேலுதட்டில் லேசாய் வியர்வை பூத்திருந்தது தெரிந்தது. பதட்டமாய் இருக்கிறாள். தடித்த கீழுதட்டைப் பார்க்கும் போது நிச்சயம் எந்த ஆணாலும் கிளர்ச்சியடையாமல் இருக்க முடியாது. முகத்தின் கீழ் பாதி மிச்ச முகத்தைக் காட்டிலும் வெளுப்பாய் இருந்தது.

”மனிதர்களுக்கு தேவையில்லைனு  ஒண்ணு இருக்குதா என்ன? எல்லாமே தேவைதான் மனுஷனோட அத்தனை தேடல்களிலும் ஏதோ ஒரு எக்ஸ்டசி உண்டு. எக்ஸ்டசி சந்தோஷம் துக்கம் ரெண்டையும் சேர்த்துத்தான் கொண்டு வரும். அனுபவிக்கிறவங்களைப் பொறுத்தது. எவனோ எதையோ தேட போய்த்தான் இருபது வருஷமா ஒலகமே வைரஸ் அட்டாக்குல சுருங்கிப் போயிருக்கு” என்ற டாக்டர் அபர்ணாவின் குரலில் அவள் வயதுக்கே உள்ள தளர்ச்சியும், அலுப்பும் இருந்தது.

“ரெண்டு பேரே கூட்டமாயிருச்சு இப்பல்லாம். இந்த இருபது  வருஷத்துல அன்பு, காதல் , குடும்பம், நேசம், நட்பு, மனிதாபிமானம், உயிர்னு எத்தனை இழந்திருக்கோமில்லை டாக்டர்?”

அபர்ணாவுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. பர்வதவர்தினி சொன்ன எல்லாவற்றையும் அவளும் இழந்திருக்கிறாள்.

”யூ நோ ஒன் திங். வைரஸ் பரவ ஆரம்பிச்ச காலத்துல லாக்டவுன் பண்ணப்ப மூணு மாசத்துல 70 லட்சம் பேர் கர்பம் தரிச்சாங்களாம்” என்று சொல்லி சிரித்தாள்.

“அதுல எங்கம்மாவும் ஒருத்தி. வயத்துல மூணுமாசமா இருக்கும் போது சோறில்லாம, வீடில்லாம, என்னையும் வயித்துல புள்ளையும் வச்சிட்டு செத்துப் போனா. நான் மட்டும் எப்படி தப்பிச்சேன்னு இன்னைய வரைக்கும் புரியலை.”

அபர்ணா அமைதியாய் இருந்தாள். சாதாரண ஜலதோஷம் போலத்தான் இதுக்கு போய் இத்தனை அலப்பறை என்று சொல்லி, மூன்று மாதம் லாக்டவுன், முடிந்து பொருளாதாரத்தின் பிரச்சனை பூதாகாரமாக, அரசாங்கம் வேறு வழியேயில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாய் மக்களை மடை திறக்க, ரெண்டாவது வேவ் இன்பெக்‌ஷனில் உலக மக்கள் தொகையில் ஒரு பங்கை அள்ளிப் போட்டதும் தான் புரிந்தது. இது வெறும் ஜலதோஷம் கொடுக்கும் வைரஸ் அல்லவெனறு. அதற்கு பிறகு எந்த அரசாங்கத்தினாலும் எதையும் தடுக்க முடியவில்லை. இன்னமும் மருந்து கண்டுபிடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அபர்ணாவின் பரிசோதனைக்கூடம் மட்டுமே பத்து முறை தோல்வி கண்டிருக்கிறது.

மக்கள் எப்போதும் கண், மூக்கு, வாயை, கைகளை மூடியே வைத்திருக்கிறார்கள். நோய்க்கான அறிகுறியே தெரியாது என்றதிலிருந்து யாரும் யாரையும் நம்புவதில்லை. எல்லோரும் தனிதனியே தான்.

“அவனுக்கு இதுல விருப்பமேயில்லை”

“பயப்படுறாரா?. அன்னைக்கு என்கிட்ட கவுன்சிலிங் வரும் போது தைரியமா பேசினாரே?”

“எல்லாம் வெளிய போற வரைக்கும்தான் டாக்டர். போனப்புறம் இது ஒண்ணு இல்லைன்னா என்னா? நம்மால சந்தோஷமா வாழ முடியாதானு கேட்டான்”

”இத்தனை வயசுக்கு மேல இந்த ரிஸ்க் தேவையாங்குறான்.”

கடந்த இருபது வருடங்களில் ஷோஷியல் இம்யூனிட்டி யாருக்கும் ஏறவேயில்லை. குறைந்து கொண்டேயிருக்க, மனிதர்களின் சராசரி வயதே நாற்பத்தி ஐந்தாக மாறிக் கொண்டிருக்கிறது. அதற்கு பின் வாழும் காலமெல்லாம் போனஸ் தான்.

அபர்ணாவுக்கு அவள் பயம்  நியாயம் தான் என்று புரிந்தது. ஒவ்வொரு முறை சிகிச்சைக்கு ஒத்துக் கொள்கிறவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் உடனடியாய் இன்பெக்ட் ஆகி இறந்தும் போயிருக்கிறார்கள்.

“இதோ பாருங்க பர்வதவர்தினி. உலகம் தழைக்க ஆரம்பிச்சதே பல பயத்துலேர்ந்து வெளிய வந்துதான். பல  கொள்ளை நோய்களைத் தாண்டித்தான் அத்தனைக் கோடி ஜனங்க உருவானாங்க. இந்த வைரஸ் வேவ் தான் உலகத்தை புரட்டிப் போட்டுட்டு இருக்கு. இருக்குற வரைக்கும் இப்படியே வாழ்திடலாம்னு நினைச்சா பொறக்குறது, பொறக்கப் போறது எல்லாமே AIயாத்தான் இருக்கும்”

“உங்களுக்கான களபலி கிடைக்க என்னவெல்லாம் பேச வேண்டியிருக்கு இல்லை டாக்டர்?”

அபர்ணா வெறுப்பாக தலையாட்டியபடி, “உங்களுக்கு டோட்டல் பாடி செக்கப் பண்ணியாச்சு. எவ்ரிதிங் இஸ் பைன். இது தவிர அரசாங்க விதிமுறைகளின் படி உங்களுக்கான இம்யூனல் ஸ்ட்ரெந்த் ரிப்போர்ட்டும் வாங்கியாச்சு. வழக்கமா முன்ன பின்ன இருக்குறவங்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். பட். அந்த பிரச்சனை கூட இல்லை உங்களுக்கு. அவருக்கு எல்லா டெஸ்டும் ஓக்கே.. இம்முறை மருந்தின் காம்போஷிசனை மாற்றியிருக்கிறேன். தொடர்ந்து எங்களது டெஸ்ட் தோல்வியின் காரணமாய் ரெட் ஜோன்ல எங்கள் பரிசோதனைக் கூடத்தை வைத்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு முறை தவறு நடந்தால் நிச்சயம் எங்கள் லைசென்ஸ் அவ்வளவுதான். ரொம்பவே யோசிச்சுத்தான் இந்த லாஸ்ட் டெஸ்டை பண்ணுறோம்.”

“இப்படி எல்லா ரிப்போர்ட் சரியாயிருந்தும் இன்பெக்‌ஷன் வருது, சில பேர் இறந்தும் போறாங்கனு நியூஸ் வருதே?’”

”முதல்ல நம்பணும். நம்பிக்கைதான் பயங்கிற செயினை அறுக்கும். ஒரு காலத்துல குழந்தை பொறக்கணும்னா அரச மரத்தை சுத்தி வந்தாப் போதும்னாங்க. நம்பி சுத்துனாங்க. அரச மரமா ஃபக் பண்ணிச்சு?. அரச மரம் சுத்திட்டு புருஷனோட ஃபக் பண்ணா குழந்தை பொறந்துச்சு. நம்பிக்கை அதான் கனெக்ட் கார்ட்”

பர்வதவர்தினிக்கு டாக்டர் அபர்ணா சொல்வது புரியாமல் இல்லை. ஆனால் இத்தனை ரிஸ்க் எடுத்து, என் வாழ்க்கையை பணையம் வைத்து எதற்கு இந்த விஷப் பரீட்சை? “வேண்டாம் என்று சொல்லிவிட்டாயா?” என்று சாந்தன் மெசேஜ் அனுப்பியிருந்தான்.

சாதாரண பட்டன் போன். பட்டன்களை அழுத்திய இடங்களில் எல்லாம் எழுத்து மறைந்திருந்தது. வாட்ஸப், இண்டர்நெட், வீடியோ கால் எல்லாம் சாதாரணர்களுக்கு சாத்தியமில்லாத விஷயமாய் போய் ஒரு டிகேட் ஆகிவிட்டது. தொடர் மின்சாரம் என்பதும் பணக்காரர்களுக்கான விஷயமாய் ஆனதிலிருந்து ஸ்மார்ட் போனும் வழக்கொழிந்து போனது. சின்ன வயதில் அப்பாவின் ஸ்மார்ட் போனில் விளையாடியதை நினைத்து இன்றைக்கும் ஆச்சர்யப்படுவாள். மெசேஜுக்கும், காலுக்கு செல்போன் கூட பப்ளிக் போனின் மூலமாய் நோய் பரவுவதை தடுக்கவே அரசாங்கம் சலுகை விலையில் கொடுத்திருக்கிறது. விவசாயத்தை தவிர மற்ற அனைத்தையுமே அரசாங்கத்தின் கையில். தனியார் வசம் என்பதே இல்லையென்று ஆனது..

பர்வதவர்தினிக்கு அரசாங்க டேட்டா செண்டரில் வேலை. இருபது வருடங்களுக்கு முன் அப்பர் மிடில் க்ளாஸாய் இருந்த அவளது குடும்பம் இப்போது வறுமைக்கோட்டுக்கு சற்றே மேலே, பொருளாதாரம் அப்படி இருக்கிறது.  வைரஸின் கோரத் தாண்டவம் எல்லாரையும் தலைகுப்புற போட்டுவிட்டது. நம் பிரதமர் மட்டும் மாசத்துக்கு ஒரு தடவை அரசு டிவியில் தோன்றி எதையாவது செய்ய சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையில் எல்லா வீட்டு வாசலிலும் கோமியம் தெளிக்க சொல்லியிருக்கிறார். விவசாயத்துக்கு தவிர மாடுகள் மக்களிடையே இல்லாத காரணத்தினால், அரசே கோமியத்தையும் சலுகையில் விலையில் மக்களிடம் சனிக்கிழமை அன்றே ரேஷன் மூலம் தரும் என்று அறிவித்திருக்கிறார்கள். கட்டாயம் வாங்க வேண்டும் வாங்காதவர்களின் அக்கவுண்டில் 15 கோடி போடப்படாது என்றிருக்கிறார்கள். கோமிய விற்பனை மூலம் பகற்கொள்ளை என்று ப்ரவீன் காந்தியின் மகன் பப்பு ஜூனியர் ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார்.  

உலக அளவில் இது வரை காணாத அதிசயமாய் இரண்டு முதல்வர்கள் நான்கு துணை முதல்வர்களோடு எல்லா எஸ்களின் வாரிசுகளும் முதல்வராய் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன் கட்டப்பட்டு ஆள் அரவமின்றிப் போன ப்ளாட்டுகளை அரசாங்கமே எடுத்துக் கொண்டு, மக்களுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறது. மாத சம்பளத்தில் வாடகை, ரேஷனுக்கான பணம் எல்லாவற்றுக்கும் பிடித்தம் போய் சொற்பத்தையும் பேங்கில் போட்டு விடுவார்கள். அரசாங்கத்தின் தேவையின் போது அதிலிருந்தே எடுத்து மக்களுக்கு கொடுக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. ஆதார் கார்ட்தான் க்ரெட் கார்ட், டெபிட் கார்ட் என எல்லா கார்டுமாகிவிட்டது. முன்பெல்லாம் கார்டில் உள்ள போட்டோவிற்கும் நிஜ ஆளுக்கும் சம்பந்தேயிருக்காதாம். இப்போது அப்படியில்லை. கார்டில் ஓரளவிற்கு முகம் நன்றாக தெரிகிறது.

“எதையும் யோசிக்காதே பர்வதவர்தினி. நாளைக்கு வந்திரு. ப்ளிஸ். நானிருக்கேன்” என்று இரண்டு கை கூப்பி வணங்கி, தன் முகத்தை மாஸ்க் போட்டு  மூடிக் கொண்டாள் அபர்ணா.

அடுத்த நாள் காலையிலேயே பர்வதவர்தினியும், சாந்தனும் பரிசோதனை சாலைக்கு வந்துவிட்டார்கள். உள்ளே நுழைந்த உடன் இருவரையும் தனித்தனியே வைரஸ் டெஸ்ட், ஸ்பா, மஞ்சள் வெந்நீர் குளியல், சாந்தனுக்கு நல்ல புரதமுடன், பாதாம் பால்  எல்லாம் கொடுத்தார்கள். அபர்ணாவுக்கு ட்ரெடிஷனாய் பட்டுப்புடவை உடுத்தி, டாக்டர் அபர்ணாவின் அறைக்குள் அழைத்துச் சென்றார்கள். சாந்தன் நல்ல காற்றோட்டமான வேட்டியும் ஜிப்பாவும் போட்டு புது மாப்பிள்ளைப் போல இருந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டார்கள்.

”சாந்தன், பர்வதவர்தினி. நீங்க இருக்கப் போகும் அறை முழுக்க, முழுக்க சானிடைஸ் செய்யப்பட்டது. அங்கே இருக்கும் ஒரு பொருளில் கூட அசுத்தம் கிடையாது.  வைரஸ்மானியால். உங்கள் உடைகளில் ஆரம்பித்து, உடல் வரை துல்லியமாய்  செக் செய்யப்பட்டுவிட்டது. ஸோ.. உங்களுக்கு இன்பெக்ட் ஆகும் வாய்ப்பே இல்லை. உங்களுக்கான எங்களது புதிய வேக்ஸின் கொடுக்கப்பட்டிருக்கிறது. பின் விளைவுகள் நிச்சயம் கிடையாது.

ஒரு மாதம் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழப் போகிறீர்கள். நிஜமான செக்ஸ் உறவு கொள்ளப் போகிறீர்கள். உங்களோட உறவின் மூலமாய் உருவாகப் போகும் கருதான் நாளைய உலகத்திற்கான நம்பிக்கை. இயற்கை முறையில் உறவு கொண்டு பிறக்கப் போகும் குழந்தை.

பத்து வருடங்களாய் பர்வர்ஷனில் பிறக்கும் குழந்தைகள் போல் இல்லாமல் நிஜமான அன்பு, காதலோட, பிறக்கப் போகுற குழந்தை.  

பிடிச்ச பொண்ணோட அனுமதியோட அவளோட நிர்வாணத்தைப் பார்த்து அவனும், அவளோட நிர்வாணத்தைப் பார்த்து உணர்ச்சிவசப்படுற அவனோட வீடியோவைப் பார்த்து எக்ஸட்ஸி ஆகுற பெண்ணுக்கும் ஐவி மூலமா பிறக்குற குழந்தையா இல்லாம,  நீங்க எந்தவிதமான தயக்கமில்லாம ஒருத்தர ஒருத்தர் தொட்டுத் தடவி, தழுவி, முத்தம் கொடுத்து, செக்ஸோட அத்தனை வீரியத்தோட விதைச்சு ஒரு உயிர கொடுக்கப் போறீங்க எங்களோட மருந்தும் உங்களோட காதலும், தான் எதிர்கால சந்ததிக்கு கொடுக்கப் போற தைரியம். நூறு வருஷத்துக்கு முன்னாடி பாரதியார்னு ஒரு கவிஞர் எழுதியிருக்காரு. “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே” அப்படினு பாடியிருக்காரு. அதை நிஜமாக்க வேணாம்? ஆல் த பெஸ்ட்” என்று சொல்லி அபர்ணா இருவரையும் அந்த ஸ்பெஷல் அறைக்குள் அனுப்பி வைத்தாள்.

பர்வதவர்தினியை மிக தயக்கத்துடன் இரண்டு கை கொண்டு அவளின் கன்னத்தை ஏந்தி நெற்றியில் முத்தமிட்டான் சாந்தன் .


Post a Comment

2 comments:

Singaravelan said...

Fantastic Science fiction story! கதையை அற்புதமாக ஆரம்பித்து அதை முடித்த விதம் அருமை. I am expecting more from this writer!

vinu said...

//சாதாரண பட்டன் போன். பட்டன்களை அழுத்திய இடங்களில் எல்லாம் எழுத்து மறைந்திருந்தது. வாட்ஸப், இண்டர்நெட், வீடியோ கால் எல்லாம் சாதாரணர்களுக்கு சாத்தியமில்லாத விஷயமாய் போய் ஒரு டிகேட் ஆகிவிட்டது. தொடர் மின்சாரம் என்பதும் பணக்காரர்களுக்கான விஷயமாய் ஆனதிலிருந்து ஸ்மார்ட் போனும் வழக்கொழிந்து போனது. சின்ன வயதில் அப்பாவின் ஸ்மார்ட் போனில் விளையாடியதை நினைத்து இன்றைக்கும் ஆச்சர்யப்படுவாள். மெசேஜுக்கும், காலுக்கு செல்போன் கூட பப்ளிக் போனின் மூலமாய் நோய் பரவுவதை தடுக்கவே அரசாங்கம் சலுகை விலையில் கொடுத்திருக்கிறது. விவசாயத்தை தவிர மற்ற அனைத்தையுமே அரசாங்கத்தின் கையில். தனியார் வசம் என்பதே இல்லையென்று ஆனது..

பர்வதவர்தினிக்கு அரசாங்க டேட்டா செண்டரில் வேலை. இருபது வருடங்களுக்கு முன் அப்பர் மிடில் க்ளாஸாய் இருந்த அவளது குடும்பம் இப்போது வறுமைக்கோட்டுக்கு சற்றே மேலே, பொருளாதாரம் அப்படி இருக்கிறது. வைரஸின் கோரத் தாண்டவம் எல்லாரையும் தலைகுப்புற போட்டுவிட்டது. நம் பிரதமர் மட்டும் மாசத்துக்கு ஒரு தடவை அரசு டிவியில் தோன்றி எதையாவது செய்ய சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையில் எல்லா வீட்டு வாசலிலும் கோமியம் தெளிக்க சொல்லியிருக்கிறார். விவசாயத்துக்கு தவிர மாடுகள் மக்களிடையே இல்லாத காரணத்தினால், அரசே கோமியத்தையும் சலுகையில் விலையில் மக்களிடம் சனிக்கிழமை அன்றே ரேஷன் மூலம் தரும் என்று அறிவித்திருக்கிறார்கள். கட்டாயம் வாங்க வேண்டும் வாங்காதவர்களின் அக்கவுண்டில் 15 கோடி போடப்படாது என்றிருக்கிறார்கள். கோமிய விற்பனை மூலம் பகற்கொள்ளை என்று ப்ரவீன் காந்தியின் மகன் பப்பு ஜூனியர் ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார்.

உலக அளவில் இது வரை காணாத அதிசயமாய் இரண்டு முதல்வர்கள் நான்கு துணை முதல்வர்களோடு எல்லா எஸ்களின் வாரிசுகளும் முதல்வராய் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன் கட்டப்பட்டு ஆள் அரவமின்றிப் போன ப்ளாட்டுகளை அரசாங்கமே எடுத்துக் கொண்டு, மக்களுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறது. மாத சம்பளத்தில் வாடகை, ரேஷனுக்கான பணம் எல்லாவற்றுக்கும் பிடித்தம் போய் சொற்பத்தையும் பேங்கில் போட்டு விடுவார்கள். அரசாங்கத்தின் தேவையின் போது அதிலிருந்தே எடுத்து மக்களுக்கு கொடுக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. ஆதார் கார்ட்தான் க்ரெட் கார்ட், டெபிட் கார்ட் என எல்லா கார்டுமாகிவிட்டது. முன்பெல்லாம் கார்டில் உள்ள போட்டோவிற்கும் நிஜ ஆளுக்கும் சம்பந்தேயிருக்காதாம். இப்போது அப்படியில்லை. கார்டில் ஓரளவிற்கு முகம் நன்றாக தெரிகிறது.//bayangaramana nostaligiyaa.....true aagama irrukanumnnu kadavulai vendikkuvom.