Pages

May 29, 2009

தோரணை - திரைவிமர்சனம்

WWW.TKADA.COM

அந்த கால இந்தி பட ஸ்டைலில் சின்ன வயசில ஓடி போன அண்ணனை தேடி வரும் தம்பியின் கதை.  1970களில் வந்த படத்தையெல்லாம் தூசி தட்டி, மீண்டும் எடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே சத்யமில் பட்டும் விஷால் திருந்தவில்லை.

thoranai-latest-movie-stills-images-2

ஊருக்குள்ளே இரண்டு ரவுடிகள், ஆளுக்கொரு பாதியாய் சென்னையை பிரித்து கொண்டு அட்டூழியம் செய்கிறார்கள். வழக்கம் போல் விஷால் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் இறங்கும் போது ஒரு கொலையை பார்க்கிறார். அதற்கு சாட்சி சொல்வதாய் சொல்கிறார். இதற்கிடையில் பத்து வயசில் வீட்டை விட்டு ஓடி போன அண்ண்னின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை வைத்து கொண்டு, நண்பன் சந்தானத்துடன் தேடுகிறார். காமெடி பண்ணுகிறேன் என்று நம்மை நெளிய வைக்கிறார். ஒரு நாள் அண்ணனை கண்டுபிடிக்கிறார். அவர் அண்ணனிடம் தான் தான் அவரது தம்பி என்று சொன்னாரா..? அண்ணனை தன் தாயிடம் சேர்க்க  அவர் செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற்றாரா..? என்பது தான் கதை.
thoranai_shriya_vishal_photo_gallery_tn1

ரெண்டு ரவுடிகளில் ஒருவர் பிரகாஷ்ராஜ், இன்னொருவர் கிஷோர். இருவருக்குமே மிக ஈஸியான ரோல். பிரகாஷ்ராஜ் படத்தில் அதிக இடத்தில், ‘எட்ரா.. வண்டிய..” “அவனை போட்டு தள்ளுங்கடா” என்கிற வசனங்களிஅ தவிர ஏதும் பேசியதாய் நினைவில்லை. கிஷோருக்கு அது கூட இல்லை ஆக்ரோஷமாய் பார்த்தபடி இவர் சுமோவிலும், பிரகாஷ் கருப்பு ஸ்கார்பியோவிலும் சுற்றுகிறார்.
shriya-bollyupdatescom-bikini8_0_0_0x0_600x262

சந்தானம், மயில்சாமி, குண்டு அர்சனா, பரவை முனியம்மாவுடன் விஷாலும் காமெடி பண்ணுகிறார்.  ராமர், அனுமார் வேஷம் போட்டு கொண்டு அலையும் காட்சியிலும் மற்றா சில காட்சிகளிலும் ஏதோ அவ்வப்போது புன்முறுவல் வருவதோடு சரி.. இவர்களைவிட எம்.எஸ்.பாஸ்கர் அடிக்கும் நக்கல் அருமை.

விஷால் படம் முழுக்க அழுக்காய் படு கேவல்மாய் இருக்கிறார். விஜய் போல சீனுக்கு சீன் பஞ்ச் வசனம் பேசுகிறார், நன்றாக சண்டை போடுகிறார்,  காதலிக்கிறார். “ள’ ‘ழ”வை யாராவது அவரின் நாக்கில் வசம்பை தேய்த்தாவது வரவையுங்களேன். கேட்க சகிக்கலை. ஒண்ணும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. ஆனா ஊன்னா சட்டை காலரையும், இன்னொரு பக்க சட்டையை கீழேயும் இழுத்து கொண்டு தோரணையாய் நிற்கிறேன் பேர்விழி என்று  நிற்பது ஏதோ வலிப்பு வந்து நிற்கிறார் போல் இருக்கிறது.
 shriya-bollyupdatescom-bikini3_0_0_0x0_660x495

ஸ்ரேயா அழகாய் இருக்கிறார், முடிந்தவரை க்ளிவேஜ் தெரிய கொடுத்த காசுக்கு காட்டி புண்ணியம் தேடிக் கொள்கிறார். அவரை சொல்லி குற்றமில்லை. என்னா இடுப்புப்பா.. ம்ஹூம்….

பிரியனின் கேமரா சண்டை காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறது. நீட் ஒர்க்.. அதே போல் எடிட்டிங்கும்.. மணிசர்மாவின் இசையில் ஒன்று கேட்க விளஙக்வில்லை. தெலுங்கு பட பாடல் போலவே இருக்கிறது. இரண்டு மொழிகளில் ரிலீஸாவதால் கூட இருக்கலாம்.

இயக்குனர் சபா ஐயப்பனின் கதை திரைக்கதை  அரத பழசாய் இருப்பதால் வழக்கமாய் இம்மாதிரியான் மாஸ் படங்களில் இருக்கும் அடிப்படை ஆர்வம் கூட குறைவாகவே இருக்கிறது. அதிலும், வில்லனை மடக்கும் காட்சிகளில் பயங்கர கற்பனை வரட்சி, தெலுங்கு படங்களிலேயே நல்ல பண்றாங்க பாஸூ.. க்ளைமாக்ஸ் காட்சியில் இரண்டு கேங்குகளில் ஏற்படும் குழப்பங்கள் மட்டும் ஓகே. படம் பூராவும் த்லைப்பை அவ்வப்போது யாராவது ஒருவர் சொல்லிக் கொண்டேயிருப்பது படு காமெடி.

தோரணை -  வெறும் தோரணை மட்டுமே..

57 comments:

  1. காசு குடுத்தாப் பார்த்தீங்க?

    நீங்க ரொம்ப நல்லவருங்கோவ்.

    ReplyDelete
  2. நீங்க ரொம்ப நல்லவருங்கோ... இது மாதிரி படங்கள் எல்லாம் பார்த்து இருக்கீங்களே... ம்... ஐயோ பாவம்.

    ReplyDelete
  3. I'm Escape! Thanks for the review!

    ReplyDelete
  4. தோரணைக்கும் சங்குதானா...... அப்பா சாமி... சத்யம் பாத்த பயமே இன்னும் போகல... இன்னொன்னா... அது சரி அவங்க காசு அவங்க படம்.... நீங்க கொடுத்திருக்கிற அந்த நாலாவது காட்சிக்குதான் படமே எடுக்குறாங்கன்னு நெனக்கிறேன்...

    ReplyDelete
  5. //முடிந்தவரை க்ளிவேஜ் தெரிய கொடுத்த காசுக்கு காட்டி புண்ணியம் தேடிக் கொள்கிறார்.//
    நீங்க காசு கொடுத்து படத்துக்கு போனதுக்கு சரியாப்போச்சு ...

    ReplyDelete
  6. மறுபடி பல ஆயிரம் தமிழ் மக்களை காப்பாதிடீங்க... உங்களுக்கு கண்டிப்பா award தரனும்

    ReplyDelete
  7. இந்த மாதிரி படம் பார்த்து திருப்பியும் முதுகு வலி அதிகமாக்விட போகுது... வாழ்க்கையில் ரொம்ப ரிஸ்க எடுக்கிறீங்க.. வேணாம்

    ReplyDelete
  8. ஸ்ரேயா அழகாய் இருக்கிறார், முடிந்தவரை க்ளிவேஜ் தெரிய கொடுத்த காசுக்கு காட்டி புண்ணியம் தேடிக் கொள்கிறார். அவரை சொல்லி குற்றமில்லை. என்னா இடுப்புப்பா.. ம்ஹூம்…./////

    இதுக்குதான் இயக்குனரே, உங்க பதிவுல வர்ற விமர்சனத்த படிக்கிறதே. எங்க மனசப் புரின்சு தேவையான மேட்டர கரெக்டா சொல்றீங்க.

    ReplyDelete
  9. அப்ப இதுவும் இன்னொரு சத்யம் வில்லு மாதிரின்னு சொல்லுங்க.. ஐயோ ஐயோ

    ReplyDelete
  10. //ஏற்கனவே சத்யமில் பட்டும் விஷால் திருந்தவில்லை.//

    ((((((((((((((

    ReplyDelete
  11. ஷ்ரேயா ரோல் ரொம்ப சிரிசு போல..,

    ReplyDelete
  12. என்னடா இது தமிழ்சினிமாவுக்கு
    வந்த சோதனை.

    ReplyDelete
  13. காப்பாத்திட்டிங்க தல...ஆனாலும் இங்க வேற டைம்பாஸ் பண்ண இதையும் பார்த்துடுவோம்ல ;)

    ReplyDelete
  14. சங்கர் உங்க விமர்சனம் படித்த பிறகுதான் இப்போது படம் பார்க்கவே செல்கிறேன். 50 ருபாய் மிச்சம் . உங்க தோரணை விமர்சனம் படித்த பிறகு திபாவளி ரிலீஸ் ஆக
    இந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக என்று இந்த படம் வந்து விடும் போல இருக்கிறது .

    ReplyDelete
  15. sir.....
    neengA romba risk yedukkuringa....

    ReplyDelete
  16. நல்ல முன் எச்சரிக்கை...
    (இப்படி ஒவ்வொரு தடைவையும் இப்படி முன்னாலே சொல்லி எங்கல காப்பாத்திடுங்க பாஸ்!!)

    ReplyDelete
  17. மலைக்கோட்டை ரேஞ்சு வருமா பாசு?

    ReplyDelete
  18. எப்படி இருந்தாலும் ஸ்ரேயக்காக ஒரு தடவையாவது பாப்போம்ங்க.

    ReplyDelete
  19. "டேய் நானும் மதுரை தாண்டா.."..அப்படின்னு விஷால் எல்லா படத்திலயும் ஒரு டயலாக் பேசுவாரே இந்த படத்துல அது இருக்கா..

    ReplyDelete
  20. உங்களுக்கு உயிர் காக்கும் தெய்வம் என்ற பட்டம் வழங்கப் படுகிறது. :)

    சங்கர்ஜி, ஷ்ரேயாவ ரொம்ப நேரம் வராங்களா? படம் எல்லாம் சும்மா படம் காட்டுதே.. :)

    ReplyDelete
  21. விஜய்க்கு அப்பரம் விஷாலும் கட்சி ஆரம்பிச்சுட வேண்டியது தானான்னு சொல்லுங்க....சரி சரி விஷாலுக்கு யாராச்சும் சிரஞ்சீவி நம்பர கொடுங்க...ஆந்திராவில் கட்சி ஆரம்பிக்கட்டும்!

    என் தலைவன் விஜய்க்கு யாரும் போட்டியாக வரகூடாது!! :)

    ReplyDelete
  22. 1970களில் வந்த படத்தையெல்லாம் தூசி தட்டி, மீண்டும் எடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே சத்யமில் பட்டும் விஷால் திருந்தவில்லை.//

    ஆமாங்ண்ணா... (விஜய் ஸ்டைல்)

    இந்தாளு விஷால் கடைசியா நடிச்ச படம் எல்லாத்துலயும் பாருங்க நகரத்துலயிருந்து கிராமத்துக்கு வந்து சண்டை பிடிக்கிற மாதிரி தான் இருக்கு...
    80கள்ல எடுத்திருந்தாலும் வெற்றி பெற வைத்திருக்கலாம்..
    இப்போ எடுத்து கழுத்தை அறுக்கிறாங்கல்ல... :-)

    ReplyDelete
  23. ஸ்ரேயா அழகாய் இருக்கிறார், முடிந்தவரை க்ளிவேஜ் தெரிய கொடுத்த காசுக்கு காட்டி புண்ணியம் தேடிக் கொள்கிறார். அவரை சொல்லி குற்றமில்லை. என்னா இடுப்புப்பா.. ம்ஹூம்….//

    ஆமாங்க..
    அதான் எனக்கும்..
    அந்த இடுப்பும்..................
    சொல்ல முடியலையே...
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
    :-)

    ReplyDelete
  24. இடையென்ற ஒருபாகம் இல்லாத நங்கைன்னு சங்க இலக்கியத்தில் ஷ்ரேயா பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.

    ReplyDelete
  25. பாஸூ, நானும் உன் பதிவை புல்லா.. 2 தடைவ படிச்சிடேன்

    ஒரு இடத்துல கூட அந்த "லிப் லாக்" கை பத்தி சொல்வேல்ல?
    படத்தை மட்டும் போட்டுருக்க..

    சீக்கிரம் சொல்லுங்க பாஸ்
    படத்தை டவுன்லோட் பண்ணனும்! இத காசு கொடுத்து வேற பாக்குறாங்கலா?

    ReplyDelete
  26. cable sssreayaaa eppudi??

    ReplyDelete
  27. நன்றி தல :)

    ReplyDelete
  28. டிக்கெட் காசு நூறு ரூபா மிச்சம்..

    போயிருந்தா கூடவே வந்திருக்கும் தலைவலி, காய்ச்சலுக்கான செலவும் மிச்சம்..

    வாழ்க கேபிளார்..!

    ReplyDelete
  29. உங்களுக்கு உயிர் காக்கும் தெய்வம் என்ற பட்டம் வழங்கப் படுகிறது. :)


    I too agree this Sir,

    ReplyDelete
  30. உங்களுக்கு உயிர் காக்கும் தெய்வம் என்ற பட்டம் வழங்கப் படுகிறது. :)


    I too agree this Sir,

    ReplyDelete
  31. அப்ப தோரனை ரோதனைன்னு சொல்லுங்க தலை

    ReplyDelete
  32. நீங்க ரொம்ம்ம்பொ நல்லரு தலைவரே...

    ReplyDelete
  33. உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுதான் போங்க !

    இதல்லாம் தேவையா !!! விஷாலுக்கு

    ReplyDelete
  34. just escape... i wanted to go today night

    :)

    ReplyDelete
  35. சங்கர்,

    உங்களைப் போன்றோரின் விமர்சனங்கள் என் போன்றோரின் நேரம், மற்றும் பணத்தை மிச்சப்படுத்த பெரிதும் உதவியாய் இருக்கிறது. பன்ச் டயலாக் பேசுவதை ஏதாவது சட்டம் போட்டு தடுத்தாலும் பரவாயில்லை பாஸ்... சத்தியமா தாங்கல...

    பிரபாகர்.

    ReplyDelete
  36. உங்க தைரியத்துக்கு அளவே இல்லை. எம்புட்டு மொக்கைப்படமாயிருந்தாலும் பாக்குறாரு. ரொம்ப நல்லவரு!
    விமர்சனம் அருமை. போகாத சனம் பொழைச்சுது உங்களால.

    ஸ்ரீ....

    ReplyDelete
  37. சார், கமலின் திரைக்கதை பயிலரங்கத்திற்கு போனிங்களா.

    ReplyDelete
  38. உங்களுக்கு உயிர் காக்கும் தெய்வம் என்ற பட்டம் வழங்கப் படுகிறது. :)//

    ரிப்பீட்டே

    ReplyDelete
  39. யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.

    யாருடைய பின்னூடமும் தேவையில்லை.

    படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்

    “வாரம்” இணைய இதழ்(லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)

    வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!

    ReplyDelete
  40. /காசு குடுத்தாப் பார்த்தீங்க?

    நீங்க ரொம்ப நல்லவருங்கோவ்.

    12:53 AM//

    :)

    ReplyDelete
  41. சுகுமார் , சூரியன், இராகவன், ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  42. /இந்த மாதிரி படம் பார்த்து திருப்பியும் முதுகு வலி அதிகமாக்விட போகுது... வாழ்க்கையில் ரொம்ப ரிஸ்க எடுக்கிறீங்க.. வேணாம்

    2:03 AM//

    வேணாம்னுதான் நினைக்கிறேன். ஆனா உஙக்ளை மாதிரியான என் வாசகர்களை காப்பாத்த வேணாமா.. அந்த கடமை யுணர்ச்சி தான் படம் பாக்க வைக்குது.

    ReplyDelete
  43. /இதுக்குதான் இயக்குனரே, உங்க பதிவுல வர்ற விமர்சனத்த படிக்கிறதே. எங்க மனசப் புரின்சு தேவையான மேட்டர கரெக்டா சொல்றீங்க.//
    நம்ம ரசிகர்களை புரிஞ்சிக்காம எழுதி என்ன புரயோஜனம் ப்ப்பு..

    ReplyDelete
  44. நன்றி குரு, அத்திரி

    ReplyDelete
  45. /ஷ்ரேயா ரோல் ரொம்ப சிரிசு போல..//



    எதை சொல்றீஙக் சுரேஷ்.??

    ReplyDelete
  46. நன்றி முரளீகண்ணன், புருனோ, கோபிநாத.

    ReplyDelete
  47. /சங்கர் உங்க விமர்சனம் படித்த பிறகுதான் இப்போது படம் பார்க்கவே செல்கிறேன். 50 ருபாய் மிச்சம் . உங்க தோரணை விமர்சனம் படித்த பிறகு திபாவளி ரிலீஸ் ஆக
    இந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக என்று இந்த படம் வந்து விடும் போல இருக்கிறது //

    உடனடியாய் மாதம் 1000 ரூபாய் ஸ்டைபண்ட் அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்கிறேன்.

    ReplyDelete
  48. நன்றி
    முத்துராமலிங்கம்.
    மாயாவி,
    வெங்கிராஜா,
    அவனயன்

    ReplyDelete
  49. நன்றி வினோத்கவுதம்,
    சஞ்செய் காந்தி. .ஸ்ரேயா நிறைய இடங்களில் காட்டுகிறார்.. சாரி,.. வர்றாஙக்..
    நன்றி
    வேத்தியன்,
    உண்மைதமிழன்,அன்பு, தண்டோரா..

    ReplyDelete
  50. கலையரசன், முத்துபாலகிருஷ்ணன், அசோக், ஆகியோரின் வருகைக்க்ம், கருத்துக்கும் மிக்க் நன்றி

    ReplyDelete
  51. கானா பிரபா, அப்துல்லா, ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  52. நன்றி ஸ்டாஐன்,பிரபாகர், ஸ்ரீ,

    ReplyDelete
  53. போகவில்லை பாலாஜி..

    ReplyDelete
  54. நன்றி கானாபிரபா, பிரபாகர்.. அகியோரின் வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  55. புரட்சி தளபதி புழுதி தளபதி ஆயிட்டார் கரிக்ட்டா ?

    ReplyDelete
  56. இந்த கொடுமையான படத்தை நாங்கள் பார்ப்பதை தவிர்க்க, தானே அனுபவித்து அதை பதிவாகவும் தட்டி இருக்கும் அண்ணன் சங்கருக்கு ஜே.

    சமீபத்திய படங்கள் மூலம் விஷால் கவுந்தடித்து படுத்தும் அவர் மாறுவதாக தெரியவில்லை.... கிடக்கட்டும் விட்டு பிடிப்போம் :)

    ÇómícólógÝ

    ReplyDelete