Pages

Aug 26, 2010

Neelathamara(2009)

Malayalam Movie Neelathamara Wallpapers- _5_ சமீபகாலமாய் மலையாள படங்கள் பார்ப்பது குறைவாகிவிட்டது. அதையும் மீறி சில நண்பர்கள் ரெகமண்டேஷனில் சில படங்கள் பார்ப்பதுண்டு அப்படி வந்த சிபாரிசில் நான் பார்த்த படம் தான் நீலத்தாமரை. எம்.டி.வாசுதேவன் நாயர் கதையில், லால்ஜோஸ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் என்று சொன்னார்கள். முப்பது வருடங்களுக்கு முன்னால் இதே பெயரில் வெளிவந்த படத்தைத்தான் ரீமேக்கியிருக்கிறார்கள் என்பது உபரி செய்தி.

வழக்கமாய் மலையாளத்தில் அவ்வளவாக காதல் கதைகள் பார்த்ததில்லை. இது ஒரு காதல் கதை. வயதான முத்தச்சி ஒருத்தி தனியாய் உடல் நலம் குன்றியிருக்க, அவரை பார்க்க, அவரது டாக்குமெண்டரி எடுக்கும் பேத்தியும், மருமகளும் வருகிறார்கள். பேத்தி அவ்வூர் கோயிலில் இருக்கும் ஒரு அதிசயமான காசு வைத்து தொடர்ந்து கடவுளிடம் வேண்டினால் மட்டுமே பூக்கும் நீலநிற தாமரை பூவை பற்றி டாக்குமெண்டரி எடுக்கிறாள். முன்பு அந்த முத்தச்சியின் வீட்டில் வேலை பார்த்த குஞ்சுமோல்  அவரை பார்க்க வருகிறாள். வந்த இடத்தில் மருமகளும், குஞ்சுமோலும் தங்க நேரிட, இரவு இருவரும் தனிமையில் இருக்கும் போது மருமகள், குஞ்சுமோலிடம் உனக்காக என் கணவர் சாவதற்கு ரெண்டு நாள் முன் ஒரு லெட்டர் எழுதி வைத்திருந்ததாகவும், அதை போஸ்ட் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகவும் அந்த கடிதம் தன்னிடமிருக்கிறது உன்னிடம் கொடுக்கட்டுமா என்று கேட்கிறாள். குஞ்சுமோல் வேண்டாம் என்று சொல்ல,  ஒரு ப்ளாஷ்பேக் ஆரம்பிக்கிறது.
Neelathamara photos இருபது வருடங்களுக்கு முன்னால் முத்தச்சியின் வீட்டில் வேலைக்கு வந்து சேருகிறாள் வண்ணாத்தியான குஞ்சுமோல். நல்ல அழகும் இளமையும் ததும்பும் வயதில் வேலைக்கு வரும் அவள் முத்தச்சியின் மகனான ஹரிதாஸின் அழகில் மயங்குகிறாள். அஃதே ஹரிதாஸும். பின்பு ஒரு சுபயோக சுபதினத்தில் அவனிடம் தன்னை இழக்கிறாள். பின்பு அவன் தன்னைத்தான் திருமணம் செய்து கொள்வான் என்று நினைத்திருந்த நேரத்தில் அவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வர, தன் நிலையை கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அழுகிறாள். ஒரு கட்டத்தில் வேலைக்கார பெண் குஞ்சுமோலுக்கும்  தன் கணவனுக்குமிடையே இருக்கும் உறவை தெரிந்து கொண்ட மனைவி, கணவனை திட்ட, கொஞ்சம்கூட மனவருத்தமோ, குற்ற உணர்ச்சியோ இல்லாமல் இருக்க, வேறு வழியில்லாமல் அவள் வேலைக்கார பெண்ணை வீட்டை விட்டு போகச் சொல்கிறாள். அவளுடய முறை மாப்பிள்ளை அவளை வந்து கூட்டிப் போய் திருமணம் செய்து கொண்டு விட மீண்டும் இருபது வருடங்களுக்கு பிறகு முத்தச்சி உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் வந்து பார்க்க வருகிறாள். ப்ளாஷ் பேக் முடிந்து படமும் முடிந்துவிடுகிறது.
 Neelthamara Photos கதையாய் பெரிதாய் ஏதும் என்னை இம்ப்ரஸ் செய்யவில்லை என்றாலும். ஒளிப்பதிவும், வித்யாசாகரின் இசையும் அப்பப்பா.. ஆனந்தமயம். அதிலும் அந்த பச்சை பசேலென்ற கேரள கிராமமும், குளம், ஒத்தையடி பாதை, அப்போது வரும் பின்னணியிசை என்று மனதை நெகிழ வைத்திருக்கிறார்கள் இருவரும் இவர்கள் இல்லையென்றால் படமே இல்லை என்று சொல்லலாம். அவ்வளவு அழகு.

குஞ்சுமோலாக வருவது அர்சனா கவி. தற்போதைய வசந்த பாலன் படத்து கதாநாயகி அவரது ரியாக்‌ஷன்கள் கண் மொழி வீச்சும் அபாரம், ஹரிதாஸ் கூப்பிடும் போது முகத்தில் தெரியும் ஆர்வமும், வெட்கமும் அவ்வளவு நிஜம். ஹ்ரிதாஸின் மனைவியாக வரும் சம்விருதாவின் ஓங்கி வளர்ந்த பாங்கும், முகத்து கருப்பு மருவும் பெரிய கண்களும் ம்ஹும்..

வீட்டினுள் இருக்கும் மாடிப் படியில் இருக்கும் மூன்றாவது படி உடைந்திருகிறது என்பதற்காக ராத்திரியில் முக்கியமாய் மூன்றாவது படியில் கால் வைக்காமல் போகுமிடம். பின்பு அதே மாடிக்கு ஹரிதாஸின் மனைவி போகும் போது அவளிடம் மூன்றாவது படியில் கால் வைக்காதீர்கள் என்று துக்கம் மேலிட சொல்லும் காட்சி. பக்கத்து வீட்டு முதிர்கன்னியிடம் ஆங்கிலம் கற்றுக் கொள்ள பேசும் காட்சியில் குஞ்சு மோலின் முகத்தில் தெரியும் வெட்கம். ஹரிதாஸுக்கும் குஞ்சுமோலுக்குமிடையே செக்ஸ் நடந்த பிறகு ஹரிதாஸின் பால் செளஜன்யமாய் மாறும் குஞ்சுமோலின் உடல் மொழி என்று கூர்ந்து ரசிக்க நிறைய இடங்கள் இருக்கிறது.

அதே போல் படத்தில் சின்ன, சின்னதாய் வரும் பக்கத்துவீட்டு முதிர்கன்னி, அந்த மரத்தடி கிழவர், பக்கத்துவீட்டு காட்டப்படாத பாகவதர், மற்றும் அவரது குரல். குஞ்சு மோலின் மனநிலையை அவரது குரலின் மூலமாய் வெளிப்படுத்தும் உத்தி. பின்பு அவளை விட்டு ஹரிதாஸ் கல்யாணம் செய்த பின்பும், அவளுக்கு மட்டும் கேட்கும் பாகவதர் குரல்  என்று குறியீடுகளாய் பல கேரக்டர்கள் மூலம் இயக்குனர் நம் மனதை ஆக்கிரமிக்கவே செய்கிறார்.  பரபரப்பான சினிமா பார்த்து பழகியவர்களுக்கு ஆரம்பத்தில் செல்ப் எடுக்க கொஞ்சம் லேட்டானாலும், ரொம்பவும் போரடிக்கிறபோது சாவகாசமாய் பார்க்க ஏதுவான படம். நீலத்தாமரா
நீலத்தாமரா – கொஞ்சம் கவிதை
கேபிள் சங்கர்

24 comments:

  1. ஹேய்... இதெந்தா?

    ReplyDelete
  2. ஹல்ல்லோ ஸ்ரீ ஸ்ரீ பாலியானந்தா நீங்க என்ன பன்னிண்டுருக்கே இங்க. உங்க பக்தைகள்லாம் உங்களுக்காக வெயிட்டிங்க்..

    ReplyDelete
  3. thala..intha mathiri photo lam potatheenga..engala mathiri chinna pasanga kettu poiduvom.

    ReplyDelete
  4. //குஞ்சுமோலாக வரும் அர்சனா கவி தற்போது வசந்த பாலன் படத்து கதாநாயகியின் பார்வைகளூம், ஹரிதாஸ் கூப்பிடும் போது முகத்தில் தெரியும் ஆர்வமும், வெட்கமும் அவ்வளவு நிஜம். ஹ்ரிதாஸின் மனைவியாக வரும் சம்விருதாவின் ஓங்கி வளர்ந்த பாங்கும், முகத்து கருப்பு மருவும் பெரிய கண்களும் ம்ஹும்..

    //
    இம்ம்...

    ReplyDelete
  5. நல்ல படங்களுக்கு மொழி ஒரு தடையில்லை என்பதை உங்கள் ஆக்கம் மூலம் கண்டு கொண்டேன் சகோதரரே..

    ReplyDelete
  6. அப்படி தான் தெரிகிறது...கவிதை மாதிரினு...சொன்னீங்களே....

    ReplyDelete
  7. படத்தின் ஒளிப்பதிவைப் பாரட்டியிருக்கிறீர்கள். ஓளிப்பதிவாளர் விஜய் தமிழநாட்டுக்காரர். கே.வி.ஆனந்த் உதவியாளர்.

    ReplyDelete
  8. மலையாள படங்களின் யதார்த்தம் என்னை மிக கவர்ந்தது...

    ReplyDelete
  9. ரொம்பவும் போரடிக்கிறபோது சாவகாசமாய் பார்க்க ஏதுவான படம்.


    silla maathangallukku munbu ippadathaiyum, "Bodiguard" padaththaiyum paarthean, iraNdum Neareathir thiraiPpadangal, naan sonna irandavathu padaththai veattaiyadi kuruvi Sura pidithavar nadippathaaga kealvi, ayo kadavulea enna aagappppoguthoooo

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. you should have mentioned about the song "Anuraga Vilochananayi"...by shreya goshal....did you notice her neutral accent?? guess it is one of her best works in south..the song making is also too good

    ReplyDelete
  12. ஒண்ணு புரியல தல..

    மேட்டரே இல்லாமல் மலையாளத்தில் நல்ல சினிமா கூட எடுக்க மாட்டாஙக்ளா?

    ReplyDelete
  13. Anonymous10:44 AM

    ஓணத்தன்று சூர்யாவில் இந்த படம் திரையிடப்பட்டது.

    ReplyDelete
  14. "ஹரிதாஸுக்கும் குஞ்சுமோலுக்குமிடையே செக்ஸ் நடந்த பிறகு ஹரிதாஸின் பால் செளஜன்யமாய் மாறும் குஞ்சுமோலின் உடல் மொழி.. "

    நடந்த பிறகே உடல் மொழி அழகா இருக்குனா, நடக்கும்போது? !!! .... ஹ்ம்ம்ம் ..படத்தை பார்க்கும் ஆவலை தூண்டிட்டிங்க... இப்பதான் பழைய பார்முக்கு வந்து இருக்கீங்க...

    ReplyDelete
  15. //மேட்டரே இல்லாமல் மலையாளத்தில் நல்ல சினிமா கூட எடுக்க மாட்டாஙக்ளா?
    //

    என்ன மேட்டர் கார்க்கி??

    ReplyDelete
  16. என்ன சங்கர் சார், பக்கத்து வீட்டு முதிர்கன்னி-னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டிங்க..,அவங்க பேர் ரீமா கல்லிங்கள், அர்ச்சுவுக்கும், ரீமாவுக்கும் இங்க கொச்சின்ல தனித்தனியா ரசிகர் மன்றம் வச்சிருக்கோம். :)
    பழைய நீலதாமரையில் அர்ச்சனா ரோல் செய்தது அம்பிகா, உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
    'அனுராக விலோச்சனனாயி' பாடல்தான் இங்கு ஒரு ஆறு மாதத்துக்கு தேசிய கீதமாய் இருந்தது.

    ReplyDelete
  17. ஹ்ம்ம்... நானும் நல்ல படம்னு கேள்வி பட்டேன்.... ஆனா என்ன இந்த மாதிரி படம் பாக்க ரொம்பவே பொறுமை வேணும்... பாக்கலாம்...

    ReplyDelete
  18. @இராமசாமிகண்ணன்
    வரட்டும்..வரட்டும்

    @முத்துகுமார்
    யாரு.. அவனவன் மொத்த படமே பார்த்துட்டு கவிதைன்னு எழுதிக்கேன்.. இதுல கெட்டு போறதா..


    @ம.தி.சுதா
    நிச்சயம் மொழி ஒரு தடையேயில்லை

    @ராசராச்சோழன்
    என்ன தெரியுது.?

    @ஜெகனாதன்
    அஹா.. சொல்ல மறந்துட்டேனே..

    @ரியாஸ்
    ஆனால் ரொம்ப யதார்த்தம் இம்சை

    @வினு
    பாடிகார்ட்டு நானும் பார்த்தேன். விஜய் நடிக்கிறாராம்.. பார்ப்போம்

    @ஸ்பைஸ்
    அட ஆமா.. சொல்ல மறந்துட்டேன்..

    @கார்க்கி
    யோவ்.. இது மேட்டர் படமில்லையா..

    @மயில்
    ஆமாம்.. நான் போனவாரம் தான் டிவிடியில் பார்த்தேன்
    @பார்வையாளன்
    நன்றி எங்க ஆளையே காணம்?

    @சிவகாசிமாபிள்ளை
    ஆமா அதானே?

    @சிவன்
    சூப்பர் பிகர் அது.. பேரு தெரியல.. நான் கூட படத்தோட அரம்பத்தில ஹிர்க்கும் அவ்ங்களுக்கும் ஒரு கனெக்‌ஷன் இருக்குமோன்னு நினைச்சேன்..

    @அதிலை
    அது படமா?

    @சிவராம்குமார்
    பாருங்க..

    ReplyDelete
  19. //@அதிலை
    அது படமா?//

    ஆம், ரிது போன வருஷம் வந்த படம். யூத் சப்ஜெக்ட்டு. :)

    படம் இங்க நல்ல ஓடுச்சு, ஆனா பார்க்க முடியலை. நம்ம ரீமா கல்லிங்கள் - இன் முதல் படம் இதுதான்.

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. http://www.youtube.com/watch?v=jk7UQ08xMAk

    இந்தப்பாட்டுக்காவே படம் பாத்தேன் தல
    ரொம்ப நல்ல படம்

    ReplyDelete