Pages

Oct 25, 2010

கொத்து பரோட்டா-25/10/10

மீண்டும் பதிவுலகம் தனி மனித தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துவிட்டது. இனி ஆளாளுக்கு ஆதரித்தும், எதிர்த்தும், நடுநிலை கொண்டும் பதிவு போடுவார்கள். எங்கு பார்த்தாலும் அதை பற்றி பேசி, எழுதி, டீக்கடை சந்திப்புகளில், எங்காவது குழுமினால் அதை பற்றி  பேசி மாய்ந்து போவார்கள்.  பின்பு வேறொரு நபர், வேறொடு தனி நபர் தாக்குதல் என்று போய்க் கொண்டேயிருக்கும். அட விடுங்கப்பா.. லூசுல..
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வெள்ளியன்று இரவு பரிசல்காரனை சந்திக்க பிரசாத் ஸ்டூடியோவுக்கு ஷூட்டிங் முடித்து போயிருந்தேன். நீயா நானா? படப்பிடிப்புக்காக மனிதர் வந்திருந்தார். வழக்கமான ப்ளா..ப்ளா..வாக நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. நானும் நண்பர் கே.ஆர்.பியும் இன்னொரு பக்க செட்டில் ஒரு வினையில் ஷீட் விரித்து படுத்து கொண்டிருந்தோம். அப்போது அங்கே ஒருவருக்கு டிவி பரிசளிக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் அஹா..ஓஹே என்று சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தார் டிவி வென்றமைக்கு. பாவம் அவருக்கு தெரியாது அந்த பரிசு அறிவிப்புக்கான அட்டையில் உள்ள் டிவி கூட கிடைக்காது என்று. நல்ல வேளை பரிசலுக்கு டிவி கிடைக்கலை.. வெள்ளியன்று ஷூட் செய்ததை ஞாயிறே ஒளிபரப்பிவிட்டார்கள்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
செவிக்கினிமை
மீபத்தில் கேட்டவுடன் திரும்ப திரும்ப கேட்க வைத்த பாட்டு மைனாவில் வரும் “ஜிங் சிக்கா” பாடல் தான். புதிதாய் ஏதுமில்லாவிட்டாலும், கிராமிய வாசனையுடன் வரும் சாய் மற்றும் கல்பனாவின் குரலும், பாடலின் ஊடே வரிகளில் கசியும் லேசான கிறக்கமான காமமும் , தூள் கிளப்புகிறது. 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
Raktha Charithra ராம்கோபால் வர்மாவின் படம் நேற்று இந்தி மற்றும் தெலுங்கில் வெளியாகியிருக்கிறது. இது முதல் பாகமாகும். இதன் இரண்டாவது பாகத்தில்தான் சூர்யா வருகிறார். இரண்டாவது பாகம் அடுத்த் மாதம் நவம்பர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. பரிதாலா ரவி என்கிற ஒரு அரசியல்வாதியின் கதைதான். இக்கதையில் முன்னாள் முதல்வரும், நடிகரும், தெலுங்கு தேச கட்சியின் நிறுவனருமான என்.டி.ஆர்ரை அவமதித்துவிட்டார்கள் என்று ஒரே களேபரமாம் தெலுங்கு தேசக் கட்சிக்காரர்கள். படத்தின் மிகப்பெரிய ப்ள்ஸ் மற்றும் மைனஸ் வயலென்ஸ் தானாம். இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடவில்லை.
##################################################################
விஜய் டிவியில் சூப்பர் சிங்கருக்கு வந்து பார்டிசிபேட் செய்ய ஆர்வத்துடன் வந்து பாடியவர்களின் திறமையை நகைச்சுவையாக கோர்த்து ஏர்டெல் சூப்பர் சிங்கர் ப்ளூப்பர் என்ற டைட்டிலில் வழங்குகிறார்கள். வந்தவர்கள் எல்லோரும் தங்களூக்குள் ஏதோ இருக்கிறது என்ற நினைப்பில் தான் வந்து கலந்து கொண்டிருப்பார்கள். அதை வெளிக் கொணர முடியாமல் செலக்ட் ஆகாமல் போயிருக்கலாம் ஆனால் அவர்கள் பாடியதை, அவர்கள் நடந்துக் கொண்டதை ஒரு நிகழ்ச்சியாக தொகுத்து வழங்குவது கொஞ்சம் ஓவரோ என்று தோன்றியது. ஆனால் நிச்சயம் அந்த வீடியோவை பார்க்கும்போது சிரிக்காமல் இருக்க முடியாது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார குறும்படம்
மிட்டாய் வீடு பாலாஜியின் படம் தான். ஜூனியர்ஸ்.. கொஞ்சம் சினிமாட்டிக்கான கதை தான். ஆனால் அதை இண்ட்ரஸ்டிங்கான திரைக்கதையாக்கியிருக்கிறார் பாலாஜி. இவ்வளவு கொஞ்சம் நேரத்திலும் ஒரு சின்ன ஹூயூமரை தூவியிருப்பது அழகு. எடிட்டிங்கும், கேமரா கோணங்களும் ப்ரொபஷனல்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார விளம்பரம்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார கார்ப்பரேட் தத்துவம்
உன்னால் ஒரு விஷயத்தில் முதல் அட்டெம்ப்டில் வெற்றி பெற முடியாவிட்டால் அதை வெர்ஷன்1.0 என்று சொல்லிவிடு. 
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார ப்ளாஷ்பேக்
ஒரு காலத்தில் தமிழ் நாட்டையே கலக்கிய இந்தி பாடல். இருபது வருடங்களுக்கு மேலாக நம்மை இன்னும் கட்டிப் போடும் ஷைலேந்தர்சிங்கின் காந்த குரல். இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் சொல்லப்பட்ட டிம்பிளை மீறி எல்லோரு லயித்த ஒரு விஷயம்.. இப்பாடல்

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நண்பேண்டா
இண்டர்வியூ போய் வந்தததும்
அப்பா: என்னடா இண்டர்வியூ முடிஞ்சிச்சா..? நல்லா செஞ்சியா?
அம்மா: எவ்வளவு சம்பளம்டா.. வரும் ?
நண்பன்: மச்சான்.. எத்தனை பிகர்டா வந்திருந்தாங்க..
###################################################################
அடல்ட் கார்னர்
ப்ரொபசர் ஜானியை பார்த்து “ஐந்து காக்கைகள் உட்கார்ந்திருக்கும் போது அதில் ஒரு காக்காயை சுட்டுவிட்டால் மீதம் எவ்வளவு இருக்கும்?’ என்று கேட்க.. ஜானி “எல்லா காக்கையும் பறந்துவிடும்” என்றான். அதற்கு ப்ரொபசர்” இல்லை நான்கு காக்கைகள். இருந்தாலும் உன் பதில் எனக்கு பிடித்திருந்தது” என்றாள்.
இப்போது ஜானி “ஒரு ஐஸ்க்கீரிம் ஷாப்பில் மூன்று பெண்கள் ஆளுக்கொரு ஐஸ்கீரிம் வைத்துக் கொண்டு ஒருத்தி நக்கிக் கொண்டும், இன்னொருத்தி கடித்துக் கொண்டும், இன்னொருத்தி முழு கோனையும் வாய்க்குள் விட்டு சப்பிக் கொண்டும் இருக்கிறார்கள் இவர்களில் யார் திருமணமானவள்? என்று கேட்டான். ப்ரொபசர்.. கொஞ்சம் சுதாரிபோடு.. அசடு வழிந்தபடி “கோனை முழுதாக சப்பிக் கொண்டிருப்பவள்” என்றாள். அதற்கு ஜான்.”இல்லை. யார் கையில் வெட்டிங் ரிங் இருக்கிறதோ அவள் தான் திருமணமானவள். இருந்தாலும் உங்கள் பதில் எனக்கு பிடித்திருக்கிறது என்றான்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

கேபிள் சங்கர்

34 comments:

  1. A joke "A classssssssssssssssssss"

    ReplyDelete
  2. A joke ellam rasikka aarambicuttanee appo naan 18+ aayaachaa

    ReplyDelete
  3. athu shailender singh padam Bobby
    ssr.sukumar

    ReplyDelete
  4. மன்னிக்கவும் சுகுமார்.. மாற்றிவிட்டேன்.நன்றி

    ReplyDelete
  5. இன்னைக்கும் பரோட்டா அருமையுங்க ..

    ReplyDelete
  6. நீங்கள் சொல்லியிருக்கும் சூப்பர் சிங்கர் விடீயோவை முக நூலில் பார்த்துவிட்டு நான் அளித்திருந்த பின்னூட்டம்:

    திறமை இருப்பவர்களுக்கான தேடல்னு சொல்லிட்டு திறமை இருக்குன்னு நம்புறவங்கள காட்டி காமெடி பண்ணி, விளம்பர இடைவேளை வேற. இதுக்கு சிரிக்கிற சத்தத சேத்து கமர்ஷியல் பிரேக்னு வியாபாரம் பண்றாவஙக்ள செருப்ல அடிக்க வேண்டாம்?

    ReplyDelete
  7. கொத்து சூப்பர்............
    நீயா நானா .......... பரிசு டிவி விவகாரம் ......வழக்கமாக நடப்பதுதான்....

    ReplyDelete
  8. //பின்பு வேறொரு நபர், வேறொடு தனி நபர் தாக்குதல் என்று போய்க் கொண்டேயிருக்கும். அட விடுங்கப்பா.. லூசுல.. //

    நர்சிமுக்கு நடக்கையில் நல்லா “வெயிட் அண்ட் வாட்ச்” பண்ணீங்க, இப்போ ஜாக்கிக்கு நடக்கையில “லூஸ்ல விடுங்கப்பா” அட்வைஸ்.

    ரொம்ப நல்லாருக்கு கேபிள், தொடருங்க உங்க சேவையை..

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  9. சங்கர் - அந்த ஏர்டெல் எபிசோட் படு கேவலம். என்னால் அந்த எபிசோட் டைரக்டரின் ரசனையை நினைத்து காறி உமிழாமல் இருக்கமுடியவில்லை.அந்த வயதானவரின் வயதுக்கு கூட மரியாதை குடுகத் தெரியாமல் அவ்வளவு தரங்கெட்டா போய்விட்டார்கள்? யூட்யூபில் நான் இட்ட கமெண்ட் கீழே.

    //
    Vijay TV has no respect to the individuals who participated. The whole episode is very distasteful. To telecast this as a episode shows the totally rude attitude of the episode producer. There was no necessity for those laugh sound clips to be added. ( To me that old man was showing the committment).

    Before anyone jumps on guessing - I dont watch this program or know anyone who was in this episode but just couldn't digest the attitude of the episode director.
    //

    ReplyDelete
  10. நல்ல பரோட்டா!

    http://tn-tourguide.blogspot.com
    http://senthilathiban.blogspot.com

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் பரிசல்.

    கொத்து- கெத்து

    ReplyDelete
  12. //இந்த வார கார்ப்பரேட் தத்துவம்

    உன்னால் ஒரு விஷயத்தில் முதல் அட்டெம்ப்டில் வெற்றி பெற முடியாவிட்டால் அதை வெர்ஷன்1.0 என்று சொல்லிவிடு. //

    Super..!!! :)

    ReplyDelete
  13. 1. நன்றி சொல்லணுமா கேபிள்?


    2. இந்த வார விளம்பரம் ரசிக்கற மாதிரி இல்லை..

    3. நண்பேண்டா ஜோக்கில் அம்மா அப்பா கேள்விகள் இடம் மாறியிருக்கறாப்ல இருக்கு..! :-)

    4. இதைச் சேர்க்காம மூணு பின்னூட்டம் போட்டாச்சு.

    ReplyDelete
  14. இரசனைக்குரிய கொத்து..!!

    ReplyDelete
  15. //ு. பாவம் அவருக்கு தெரியாது அந்த பரிசு அறிவிப்புக்கான அட்டையில் உள்ள் டிவி கூட கிடைக்காது என்று//

    அப்போ...வாயைப் பிளந்திருக்க வேண்டாமா? ரைட்ட்ட்டு தல.

    ReplyDelete
  16. நல்லா இருக்கு

    ReplyDelete
  17. விடியோக்கள் பார்க்கவில்லை. அதைத் தவிர மற்றவை வழக்கத்தைவிடவும் சுவாரசியம். Keep going கேபிள்.!

    ReplyDelete
  18. தமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help

    http://vandhemadharam.blogspot.com/2010/10/please-help.html

    ReplyDelete
  19. லூஸ்ல விடறதுதான் லூஸ் மாதிரி பிஹேவ் பண்றவங்களுக்கு சரியான பதிலடியாக இருக்கும்..

    குறும்படம்.. விளம்பரம் வழக்கம்போல் அருமை ...

    பரிசல், கார்க்கி, சுரேகா மற்றும் நாம் இன்ட்ரஸ்டிங் சந்திப்பு ...

    ReplyDelete
  20. கொத்து சூப்பர் கேபிள்ஜி,
    விஜய் டிவி(நகைச்சுவையாக மட்டும் பார்த்தால்) மற்றும் அந்த குறும்படமும் கலக்கல்....
    இது மாதிரி விளம்பரங்கள் போடாதீங்க கேபிள்ஜி...முடிந்தளவு வன்முறை தவிர்க்கலாமே!!!

    ReplyDelete
  21. BoBBy song & adult corner joke is nice

    ReplyDelete
  22. #புதிய மனிதா
    நன்றி

    @vinu
    நன்றி

    @ம.தி.சுதா
    நன்றி

    @லதாமகன்
    :(

    @வழிப்போக்கன் யோகேஷ்
    அதற்காக அப்படியே விட்டு விடுவதா?

    ReplyDelete
  23. #பாஸ்டன் ஸ்ரீராம்

    நர்சிம்முக்கு ஆகட்டும் ஜாக்கிக்கு ஆகட்டும். இந்த மாதிரி ஆட்களை இக்னோர் செய்வதுதான் சரியான பதில். உணர்ச்சிவசப்பட்டு பதிவு போடுவதில் எனக்கு உடன்பாடுஇல்லை.

    சில மாதங்களுக்கு முன் என் பதிவில் தொடர்ந்து ஒரு நபர் பின்னூட்டமிட்டே பிரச்சனை செய்த போது நான் புலம்பவில்லை.. அதை எப்படி சமாளிப்பது என்று அறிந்து நானே சமாளித்தேன். நான் எழுதும் கதைகள் ஃபோர்னோ கதைகள் என்று ஒருவர் பதிவே போட்டிருந்தார். அதற்கும் நான் கொஞ்சமும் கவலை படவில்லை ஸ்ரீராம்.. ஏனென்றால் நான் இவர்களை எல்லாம் லூஸுல விட்டிருவேன். நான் அப்படித்தான் பழகியிருக்கிறேன்

    ReplyDelete
  24. @டுபுக்கு
    எனக்கும் அதே வருத்தம்தான். ஊருக்கு வந்திட்டு பாக்காம போயிட்டீங்களே..

    2டம்பிமேவி
    :))

    @தமிழ் மகன்
    நன்றி

    ReplyDelete
  25. @காவேரி கணேஷ்
    நன்றி

    @ரமேஷ்
    நன்றி

    @சென்
    நன்றி

    @பரிசல்காரன்
    நான் கேட்டேனா?

    அதைத்தான் சொல்லியிருக்கிறேன்.

    அப்படியா கவனிக்கிறேன்

    மூணுத்துக்கும் நன்றி

    @வெற்றி
    நன்றி நண்பா..

    @நர்சிம்
    ரைட்டு

    @பா.பாலமுருகன்
    நன்றி


    @பொன்.கார்திக்
    நன்றி

    ReplyDelete
  26. @சாம்ராஜ்யப்ரியன்
    நன்றி

    @ஆதிமூலகிருஷ்ணன்
    உற்சாகமூட்டுகிறது...

    @சசிகுமார்
    நிச்சயம்

    @கே.ஆர்.பி.செந்தில்
    நன்றி


    @சீனு
    வன்முறை கூடாது என்பதற்கும் வன்முறையை சொன்னால் தானே புரியும் சீனு.. எனிவே தவிர்க்க முயற்சிக்கிறேன்.

    @ரவிகுமார்
    நன்றி

    ReplyDelete
  27. //Cable Sankar said...

    #பாஸ்டன் ஸ்ரீராம்

    நர்சிம்முக்கு ஆகட்டும் ஜாக்கிக்கு ஆகட்டும். இந்த மாதிரி ஆட்களை இக்னோர் செய்வதுதான் சரியான பதில். உணர்ச்சிவசப்பட்டு பதிவு போடுவதில் எனக்கு உடன்பாடுஇல்லை.

    சில மாதங்களுக்கு முன் என் பதிவில் தொடர்ந்து ஒரு நபர் பின்னூட்டமிட்டே பிரச்சனை செய்த போது நான் புலம்பவில்லை.. அதை எப்படி சமாளிப்பது என்று அறிந்து நானே சமாளித்தேன். நான் எழுதும் கதைகள் ஃபோர்னோ கதைகள் என்று ஒருவர் பதிவே போட்டிருந்தார். அதற்கும் நான் கொஞ்சமும் கவலை படவில்லை ஸ்ரீராம்.. ஏனென்றால் நான் இவர்களை எல்லாம் லூஸுல விட்டிருவேன். நான் அப்படித்தான் பழகியிருக்கிறேன் //

    கேபிள், சாட்ல சொன்னா மாதிரி, எனக்கு தப்புன்னு பட்டது, நண்பர் என்கிற முறையில் நேரே சொல்லிட்டேன், நீங்களும் பதில் / உங்க நிலைப்பாட்டை சொல்லிட்டீங்க.

    இப்பவும் பிரபல பதிவர் என்கிற முறையில் உ.த மாதிரி பின்னூட்டத்திலாவது நீங்க உங்க கண்டனத்தைத் தெரிவிச்சு இருக்கணும் என்பது என் கருத்து..

    கருத்தையும், கருத்தைக் கொண்ட நபரையும் பிரித்துப் பார்க்கும் பக்குவம் நம்ம ரெண்டு பேருக்குமே இருப்பதால் நட்புக்கு பங்கமேற்படாதுன்னு நம்பறேன்

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  28. //கருத்தையும், கருத்தைக் கொண்ட நபரையும் பிரித்துப் பார்க்கும் பக்குவம் நம்ம ரெண்டு பேருக்குமே இருப்பதால் நட்புக்கு பங்கமேற்படாதுன்னு நம்பறேன்//

    yoov.. இலலாட்டி பின்னூட்டமும் போட்டுட்டு சாடுலேயும் வந்து சொல்வேனா..? நண்பேண்டா..:))

    ReplyDelete
  29. //yoov.. இலலாட்டி பின்னூட்டமும் போட்டுட்டு சாடுலேயும் வந்து சொல்வேனா..? நண்பேண்டா..:)) //

    நன்றி யூத்து.. :)))
    (என்னோட ஸ்மைலி உங்களோடதோட பெரிசு)

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  30. Hello Sir

    Please vote for our tamil hero - Plesase cehck the this link and vote http://erodethangadurai.blogspot.com/2010/10/please-vote.html

    Regards,

    MohamedRaja. S

    ReplyDelete
  31. Nalla Taste Inniku


    லேட்டஸ்ட் தமிழ் சினிமா படங்களுக்கு
    Tamil Movie Gallery

    ReplyDelete