Pages

Aug 9, 2011

தமிழ் சினிமா ரிப்போர்ட்-ஜூலை 2011

ஜூன் மாதத்தின் மந்த நிலை இந்த மாதமும் தொடருமோ என்று ஒரு எண்ணம் எனக்குள் ஓடிக் கொண்டுதானிருந்தது. இந்த மாதம் அரும்பு மீசை குறும்பு பார்வை, இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரனின் தேநீர் விடுதி, வேங்கை, விக்ரமின் தெய்வதிருமகள், ராகவேந்திரா லாரன்ஸின் காஞ்சனா, களஞ்சியத்தின் கருங்காலி, கெளதமின் உதவியாளர், பெண் இயக்குனர் அஞ்சனா இயக்கிய வெப்பம். ஆகியவை குறிப்பிடத்தக்க படங்களாய் வெளியாகின.


அரும்பு மீசை குறும்புப் பார்வை
படத்தை  பற்றி விமர்சகர்களிடையே நல்ல கருத்து இருந்தாலும் வசூல் ரீதியாய் எதுவும் பெரிதாய் செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான மோகன்பாலுவின் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தால் அவருக்கு இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.

தேநீர் விடுதி.
இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கிய படம். காமெடி என்று நினைத்து செய்த பல விஷயம் வேலைக்கு உதவாமல் போய் விட்டதால் படு மொக்கையாய் அமைந்தது.

வேங்கை
சன் டிவி வாங்கி பின்பு மீண்டும் அதன் தயாரிப்பாளர்களிடமே கொடுத்த படம். திரும்பி கொடுத்தற்கான காரணம் வேறாக இருந்தாலும் மகக்ளுக்கு பத்து நிமிஷத்திற்கு சூப்பர் ஹிட் பட விளம்பரம் இல்லாமல் இருந்ததிற்காக நன்றி சொல்வார்கள். வழக்கமான ஹரி படமாய் இல்லாமல் அரைத்த மாவை ரொம்பவே அரைத்துவிட்டதால் மாவு விற்கவில்லை. அருவாள் சைஸிலிருந்து கொண்டு அருவாளை தூக்கி வரும் தனுஷை பார்க்கும் போது பரிதாபமாகவே இருந்தது பலருக்கும். ஹரி காம்பினேஷனில் ஒரு படம் பண்ண மாட்டோமா? என்று சிங்கத்தின் வெற்றிக்கு பிறகு எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் யோசனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

தெய்வதிருமகள்.
யுடிவி, விக்ரம், விஜய், அனுஷ்கா என்று பெரிய கேங்குகளின் படமாய் வெளிவந்தது யுடிவியின் தொடர் மார்கெட்டிங்கும், படத்தின் ஓப்பனிங்கிற்கு வரிசை கட்ட, படம் வெகு ஜன ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் வாய்மொழி பப்ளிசிட்டியும் ஏற, விக்ரமுக்கு ஒரு ஹிட் படத்தை அளித்துள்ளது. ஐயாம் சாம் படத்தின் காப்பி, பாடல்களின் காப்பி என்று இணையதளங்களில் மட்டும் எல்லோரும் புலம்பிக் கொண்டிருக்க, படம் பார்க்கும் மக்கள் காப்பியாக இருந்தாலும் சூடாக, சுவையாக இருக்கிறதா? என்பதை மட்டுமே பார்த்ததால் ஓடுகிறது. முக்கியமாய் பாராட்டபட வேண்டியது யுடிவியின் தொடர் மார்கெட்டிங்.. வாழ்த்துகள் தனஞ்செயன் சார்.

காஞ்சனா – முனி-2 வெளியாவதற்கு  முன்னமே லாரன்ஸுக்கு லாபத்தை கொடுத்த படம். தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளுக்கும் சேர்த்து தனித்தனியே விலை பேசி விற்றுவிட, தமிழில் வெளிவருவதற்கு ஒரு வாரம் முன்னமே தெலுங்கில் வெளியாகி சக்கை போடு போட ஆரம்பித்துவிட, தமிழில் ராம. நாராயணன் வாங்கி எல்லா ஏரியாக்களும் விற்று விட்டார். NSC ஏரியாவில் மட்டும் இதுவரை 3 சி பண்ணியிருக்கிறது என்று சொல்கிறார்கள். அந்த ஏரியாவில் 5 சியும் மொத்தத்தில் 30 சி வரை வசூல் செய்யும் என்று கணிக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.  படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் பேய் படங்களில் காமெடி எடுபடாது என்று எல்லோரும் நினைத்திருக்க, கோவை சரளாவும், தேவதர்ஷினியும் அடித்த லூட்டியும், சரத்தின் காமியோவும், பெண்களை தியேட்டருக்கு வரவழைத்துவிட்டது. அருந்ததியின் கலக்‌ஷனை தாண்டிவிட்டது என்கிறார்கள். இன்னொரு முக்கிய காரணம் படத்திற்கான விளம்பரம். ஒரு மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ் சினிமாவுக்கு இம்மாதிரியான ஆக்ஸிஜன்கள் தேவைதான்.


கருங்காலி. மு.களஞ்சியம் நடித்து இயக்கியிருக்கும் படம். ரொம்ப நாள் தயாரிப்பில் இருந்த படம். அஞ்சலிதான் ட்ராயிங் அட்டென்ஷன். அடல்டரியை பற்றிய கதை. சரியாக எடுத்தாளாமல் பிட்டுபட ரேஞ்சுக்கு போய்விட்டது. என்ன தான் சாரு நிவேதிதா, கமலா செல்வராஜ் எல்லோரையும் வைத்து எல்லோரும் பார்கக் வேண்டிய படமென்று விளம்பரப்படுத்தினாலும், வசூல் ஒண்ணும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை என்கிறார்கள்.

வெப்பம்
பெண் இயக்குனர் அஞ்சனா எழுதி இயக்கிய படம். கெளதம் வாசுதேவ் மேனனின் தயாரிப்பு. இதுவும் லேட் ரிலீஸ் தான். வழக்கமாய் பெண் இயக்குனர்கள் தொட தயங்கும் ப்ளாட். ஜோஸ்வா ஸ்ரீதரின் அருமையான பாடல்கள் இருந்தும் சரியாக திரைக்கதையில் கவனம் செலுத்தாமையால் தோல்வியை தழுவியது என்றே சொல்ல வேண்டும்.

இது தவிர வாரத்திற்கு மூன்றிலிருந்து நான்கு தமிழ் திரைப்படங்களும், ஆங்கில, தெலுங்கு மலையாள, ஆங்கில, தமிங்கில படங்களும் வரத்தான் செய்கிறது. இப்படி சரமாரியாய் படங்கள் வெளிவருவது தமிழ் சினிமாவிற்கு உகந்தது அல்ல. சில சின்ன படங்கள் நன்றாக இருப்பதாய் வெளியே தெரிவதற்குள் தியேட்டர்களிலிருந்து வசூல் இல்லாத காரணத்தால் தூக்கப்பட்டுவிட, சாட்டிலைட் டிவிக்களுக்காக காத்திருக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் ரசிகர்கள். இது பற்றிய பார்வை வேறொரு கட்டுரையில் பார்ப்போம்.
ஜூலை மாத சூப்பர் ஹிட் : காஞ்சனா – முனி –2
ஜூலை மாத ஹிட் : தெய்வதிருமகள்


சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

21 comments:

  1. wow... i seems like a student report card... apadiyee pichi pichi vechitengaa..

    ReplyDelete
  2. //காப்பியாக இருந்தாலும் சூடாக, சுவையாக இருக்கிறதா? என்பதை மட்டுமே பார்த்ததால் ஓடுகிறது.//

    பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். அப்ப இருக்கு தீபாவளி.

    ReplyDelete
  3. Kanchana mumbaila release kooda aagala enna koduma cable ithellamKanchana mumbaila release kooda aagala enna koduma cable ithellam

    ReplyDelete
  4. "மிக கடுமையான சட்டங்கள் இன்றி மக்கள் திருந்த மாட்டார்கள்".
    Thanks,
    Priya
    http://www.ezdrivingtest.com 

    ReplyDelete
  5. @ravi
    nandri

    சிவகுமார்
    அதெல்லாம் நடக்கவே நடக்காது. அதுக்கு சில ரூல்ஸ் இருக்கு..:))

    @கேரளாககார்ன்
    ஆமா என்ன கொடுமை இது

    @பிரியா
    ம்

    ReplyDelete
  6. என்ன சங்கர் sir, காஞ்சனா சூப்பர் ஹிட்!,தெய்வத்திருமகள் வெறும் ஹிட் ஆ? மும்பைலயே 2 வாரம் ஒடின படம் தெய்வத்திருமகள் இத குறைச்சி சொல்லிட்டிங்களே. தெய்வத்திருமகள் மாதிரி படங்களுக்கு முழு சப்போர்ட் செஞ்சா தான் இந்த மாதிரி முயற்சிகள் தொடர்ந்து வரும் என்பது என் கருத்து.இல்லை என்றால் வெறும் மசாலா படங்கள் தான் அரைச்ச மாவையே திரும்ப அரைக்கும்.

    ReplyDelete
  7. //
    Blogger புஷ்பராஜ் said...

    என்ன சங்கர் sir, காஞ்சனா சூப்பர் ஹிட்!,தெய்வத்திருமகள் வெறும் ஹிட் ஆ?
    //

    சில பதிவர்கள் இப்படித்தான்...

    அவங்களுக்கு புடிச்ச டைரக்டர் அட்ட காப்பி அடிச்சா ஐ லவ் யூன்னு கொஞ்சுவாங்க....

    மத்த யாராவது காப்பி அடிச்சா தெளிய வச்சி தெளிய வச்சி அடிப்பாங்க.... நொட்ட நொள்ள சொல்லுவாங்க....

    இதெல்லாம் பதிவர்களின் அரசியல்.... கண்டுக்காதீங்க....


    அப்புறம் தல... காஞ்சனா ரொம்ப ஆவலா எதிர்பார்த்தேன்... எனக்கு முனி புடிச்சிருந்தது... ஆனா மும்பைல இன்னும் வரல...

    தெரிஞ்ச டிஸ்டிரிபியூட்டரிடம் கேட்டப்ப ரஜினி பட ரேட் சொன்னானுங்கன்னாரு... அதான் ரீசன்... பட் தெலுகு வெர்ஷன் ரிலீஸ் ஆகி சுமாரா போச்சு,,,,

    ReplyDelete
  8. மாப்பிள்ளை

    காஞ்சனா வரவில்லையென்றால் சூப்பர் ஹிட் லிஸ்டில் தெய்வ திருமகள் தான் வந்திருக்கும். ஆனால் காஞ்சனா எல்லா பவுண்டரியையும் தாண்டி பின்னி பெடலெடுக்குது.. சோ..

    ReplyDelete
  9. //அரும்பு மீசை குறும்புப் பார்வை படத்தை பற்றி விமர்சகர்களிடையே நல்ல கருத்து இருந்தாலும்//

    :-)))))))))))))))))))

    ReplyDelete
  10. தங்களின் தளத்தை பல மாதங்களாக தினமும் வாசித்து வருகிறேன். மிகவும் அருமை. தினமும் ஒரு பதிவு கண்டிப்பாக இருக்கிறது. உங்கள் வேலை பளுவுக்கு நடுவே, இதையும் செய்வதற்கு நன்றிகள்

    - கதிர்கா

    ReplyDelete
  11. நல்லாதான் அலசி இருக்கீங்க. காஞ்சனா
    ட்ரெயிலர் பாக்கும்போதே பயம்மா இருந்துச்சு. படம் பாக்கவே தோனலே.

    ReplyDelete
  12. நல்லாதான் அலசி இருக்கீங்க. காஞ்சனா
    ட்ரெயிலர் பாக்கும்போதே பயம்மா இருந்துச்சு. படம் பாக்கவே தோனலே.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. chennai collection report

    1 Deiva ThirumagalRs.5.30 Cr
    2 Kanchana (Muni - II)Rs.1.88Cr

    total collection dtm 25 crore +

    kanchana 12 crore +

    dtm hit

    kanchana super hit ??????????????????????

    ReplyDelete
  15. காஞ்சனா சுத்தமா காஞ்சி போயி வேற வேலை இல்லாதவங்க பார்த்தாலும் பாதியிலே வெறுத்து ஓடி வர வேண்டிய படம். இந்த படம் சூப்பர் ஹிட்டாம். சம்ம காமேடி

    ReplyDelete
  16. mugamoodi..

    தெய்வதிருமகளுக்கும், காஞ்சனாவிற்கும் ஒரு வாரம் கேப் இருக்கு. அது மட்டுமில்லாமல். தெய்வ திருமகள் பட்ஜெட் பெருசு. காஞ்சனா சின்ன பட்ஜெட்டில் பெரிய லாபம்.

    பிஹைண்ட்வுட் ரிப்போர்ட் எல்லாம் ரிப்போர்ட் இல்லை.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. என்ன பண்றது அருண் குமார் உங்க ரசனை மக்களுக்கு இல்லையே.. படம் நிஜமாவே சூப்பர் ஹிட்டு.. ஏத்துட்டுத்தான் ஆவணும்.

    ReplyDelete
  19. அரும்பு மீசை குறும்புப் பார்வை படத்தை பற்றி விமர்சகர்களிடையே நல்ல கருத்து இருந்தாலும் வசூல் ரீதியாய் எதுவும் பெரிதாய் செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான மோகன்பாலுவின் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தால் அவருக்கு இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.

    I think, it should be wrong.. i never hear this film story. last month, you told about arainya kandam film. it is ok...

    ReplyDelete
  20. சில பதிவர்கள் இப்படித்தான்...

    \\ அவங்களுக்கு புடிச்ச டைரக்டர் அட்ட காப்பி அடிச்சா ஐ லவ் யூன்னு கொஞ்சுவாங்க....

    மத்த யாராவது காப்பி அடிச்சா தெளிய வச்சி தெளிய வச்சி அடிப்பாங்க.... நொட்ட நொள்ள சொல்லுவாங்க....

    இதெல்லாம் பதிவர்களின் அரசியல்.... கண்டுக்காதீங்க....\\

    இதுல அரசியல் எதும் இல்ல தல, நான் காஞ்சனாவ கெட்ட படம்னும் சொல்லல, தெய்வத்திருமகள் I'M SAMன் காப்பியா கூட இருக்கலாம், ஆனா அந்த ஒரு குறை ய மட்டும் சொல்லி ஒரு நல்ல படத்தின், நல்ல இயக்கத்தின் மதிப்பை குறைக்க வேண்டாம்,இது I'M SAM படத்தின் காப்பினு சொல்ற பதிவர்கள் எத்தன பேரு I'M SAM பார்த்திருப்பார்கள் சொல்லுங்க!. (உண்மைய சொன்னா நான் பார்க்கல.)

    ReplyDelete
  21. அந்த கடைசி இரண்டு வரிகள் மட்டும் இல்லாமல் இருந்தா இந்த ரிப்போர்ட் சூப்பர், நீங்க தயவு செஞ்சு ஒரு படம் நல்லா வசூல் பண்ணா "கமெர்சியல் சூப்பர் ஹிட்" நு சொல்லுங்க, அதை விட்டுட்டு முனி சூப்பர் ஹிட்னு எல்லாம் சொல்ல வேண்டாம்... தெய்வ திருமகள் எப்படி ஒரு நல்ல கருத்தன படம்... நான் நெறைய மதங்களா உங்க பதிவுகள படிக்கிறேன்... ரொம்பவும் பிடிக்காத ஒரே ஒரு பதிவு (கடைசி இரண்டு வரிகள்)..

    ReplyDelete