Pages

Oct 4, 2011

தமிழ் சினிமா ரிப்போர்ட் -செப்டம்பர்2011

சென்ற மாத மங்காத்தா புயல் இம்மாத ஆரம்ப வாரங்களிலும் இருந்ததால் நிறைய பெரிய படங்கள் வெளிவரவில்லை. ஆனால் வழக்கம் போல மதிகெட்டான் சாலை போன்ற பல குட்டிப் படங்கள் தமிழ் சினிமாக் கடலில் தங்கள் கால்களை நினைத்துக் கொண்டு சென்றது. அப்படங்களைப் பற்றி சொல்ல ஏதுமில்லாததால் வழக்கம் போல சொல்ல முடிந்த படங்களைப் பற்றிய ரிப்போர்ட்.

1. எங்கேயும் எப்போதும்
மங்காத்தாவின் பெரும் மசாலா புயலுக்கு பின் வந்த நெகிழ் வைக்கும் படம். படு மோசமான பஸ் விபத்தில் ஆரம்பித்து, அதில் தான் கதை மாந்தர்கள் பயணிக்கிறார்கள் என்று காண்பித்து, கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் என்னவாக இருக்குமென்று யோசிக்க கூடிய ஒரு கதைக் களனில், இண்ட்ரஸ்டிங்கான கேரக்டர்கள், திரைக்கதை கொண்டு சுவாரஸ்யமாய் சொன்ன படம். ஏ.ஆர்.முருகதாஸ், மற்றும் பாக்ஸ் நிறுவனம் என்பதால் நல்ல மார்கெட்டிங் இருக்க, ரீச் நன்றாகவேயிருந்தது. முதல் வாரக் கடைசியில் சில ஊர்களில் தியேட்டர்கள் அதிகப்படுத்தப்பட்டதே இதன் வெற்றியின் உதாரணம்.  விமர்சனம் படிக்க

2. வந்தான் வென்றான்.
பாஸ் (எ) பாஸ்கரன் வெற்றிக்கு பிறகு வாசன் விஷூவல்ஸின் படம். கோவின் வெற்றிக்கு பிறகு சரியான ஹிட்டில்லாம இருக்கும் ஜீவாவின் நடிப்பில் வெளிவந்த படம். கோவின் வெற்றியை வைத்து நல்ல விலைக்கு விற்கப்பட்ட படம். ஆனால் சமீபத்தில் வெளிவந்த ஜீவாவின் படத்தில் பெரிய தோல்விப் படமாய் அமைந்துவிட்டது. வருத்தமான விஷயமே. விமர்சனம் படிக்க

3. ஆயிரம் விளக்கு நெடு நாளாய் தயாரிப்பிலிருந்த படம். பிப்ரவரி 14 இயக்குனர் ஹோசிமின் தயாரித்து இயக்கி வெளிவந்த படம். சத்யராஜ், சாந்தனு என்று மக்கள் அறிந்த நடிகர்கள் இருந்தும், நல்ல லைன் இருந்தும் மிடியகர் திரைக்கதையாலும், மோசமான பப்ளிச்சிட்டியாலும் படு மோசமாய் வீழ்ந்த படம். விமர்சனம் படிக்க
சென்ற மாதக் கடைசியில் வந்த மங்காத்தாவும், அக்டோபரில் எங்கேயும் எப்போதும் மட்டுமே.

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
 

14 comments:

  1. Anonymous1:23 AM

    This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Anonymous1:24 AM

    ஒவ்வொரு மாசமும் ஒரு படம்தான் தேறுது?
    தமிழ்சினிமா பற்றிய ஒரு சிறிய மாறுபட்ட பார்வை நம்ம ஐம்பதாவது பதுவிள்.. வாசித்து உங்கள் கருத்தை சொன்னால் நன்றாக இருக்கும்..
    தமிழ் சினிமாவின் தடைகளும் சந்தானத்தின் பங்களிப்பும்

    ReplyDelete
  3. Anonymous1:29 AM

    ///ஜீவாவின் படத்தில் பெரிய தோல்விப் படமாய் அமைந்துவிட்டது///

    ரௌத்திரம் படத்தை விட பெரிய தோல்வியா?
    ஆனா இது ரௌத்திரம் படத்தை விட ஓரளவுக்கு சுமாராய் இருந்தது.. இந்த மாபெரும் தோல்விக்கு சைமல்டேனியசா வந்த எங்கேயும் எப்போதும் படத்தோட மாபெரும் வெற்றியும் ஒரு காரணமா இருக்குமோ?

    ReplyDelete
  4. Anonymous6:32 AM

    எங்கேயும் எப்போதும் சீக்கிரமே பார்க்கனும்.. நல்ல விமர்சனம்

    ReplyDelete
  5. Very small report with 3 films only. What about other small films that were released??

    ReplyDelete
  6. மற்ற படங்களைப் பற்றி சொல்லிக் கொள்ளூம் அளவிற்கு கூட இல்லை என்பது வருத்தமே..

    ReplyDelete
  7. ஆரம்பிச்சவுடனே பொசுக்,குனு முடுஞ்சுபோச்சே!

    ReplyDelete
  8. பாஸ் மங்காத்தா வசூல் நிலவரம் என்னனு சொல்லுங்க ....

    ReplyDelete
  9. நல்ல பார்வை.

    எங்கேயும் எப்போதும் அஞ்சலியின் துடுக்கத்தனமும் அனன்யாவின் சாந்தமான கலக்கலான நடிப்பும் அருமை. கதையை கொண்டு சென்ற விதம் அருமையிலும் அருமை. நல்ல படம் பார்த்த திருப்தி.

    ReplyDelete
  10. எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் வரவேற்கப்பட வேண்டியவை...அடுத்து தீபாவளி ரேஸ் எப்பிடி இருக்குமோ?
    -அருண்-

    ReplyDelete
  11. kadamai unarvu mikka cable ji avargale
    engae ungal kadamai unarchi ? yen ippadi seigireergal. ubgalai nambi irukkum en pondra vasagargalai yematralama ?
    thanga thalaivi sameera reddy nadithulla VEDI padathin vimarsanam engay ji! !

    ReplyDelete
  12. இதுக்கு பேரு ரிப்போர்ட்டா?

    எல்லா படத்துக்கும் உங்க விமர்சனத்தோட லிங்க் இருக்கு. ரிப்போர்ட் எங்கே சார்?

    ReplyDelete
  13. ithaan ippathi reportu.. ithukku mela solla eethuvum illai.. detail report quaterly podum pothu vanthu pathukkanga..yuva..

    ReplyDelete
  14. சுமாரான பகிர்வு தான்...........

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete