Pages

Nov 1, 2011

ரெண்டு இட்லி.. ஒரு வடை..

இந்த சொல்வடை  பொது மக்களிடையே ஒரு குறிப்பிட்ட குழுவினரை கிண்டல் செய்ய மிகப் பிரபலம். இது யாரைக் குறிக்கும் என்றால் ஜூனியர் ஆர்டிஸ்ட் எனப்படும் துணை நடிகர்களை குறிக்கும். பொதுமக்களிடையே புழங்கும் இந்த மாதிரியான கிண்டல் எப்படி வந்தது என்று பார்க்கும் போது அவர்கள் சொல்லும் காரணம்.  படு கற்பனையான விஷயம். காலையில் டிபனுக்கு ரெண்டு இட்லி, ஒரு வடை சாப்பிட்டு விட்டு கும்பலில் நின்றுவிட்டு போய்விடுபவர்கள் என்று கிண்டலாய் சொல்கிறார்கள்.


ஆனால் இவர்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு சினிமா முழுமையாகாது என்பது சினிமாவில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும். ஒரு பஞ்சாயத்துக் காட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள் அதில் சுமார் நூறு பேர் சுற்றி நின்று கொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளுக்கு ஏற்றபடி ரியாக்‌ஷன்கள் கொடுத்துக் கொண்டோ, அல்லது கூச்சல் குழப்பம் செய்ய வேண்டுமென்றால் அவர்களில் சிறந்த கரெக்ட் டைமிங் சென்ஸுடனான நடிப்பு இல்லையென்றால் அந்த காட்சியே கேவலமாகிவிடும் ஒரு சினிமாவில் ஒரு முக்கிய காட்சியில், கூட்ட நெரிசலில் அவன்  ஒருவன் மட்டுமே தனிமையாக தெரிய வேண்டுமென்றால், கேமரா அவனை  நோக்கி வைத்திருந்தாலும் அவன் வெறுமையாய் நின்றிருக்க, மற்றவர்கள் எல்லோரும் தம்தம் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். இமமாதிரியான காட்சிகளில் நடு நாயகமாய் இருக்கும் நடிகனின் மனநிலையை விட பின்னணியில் நடிக்கும் நடிகர்கள் கேமரா பார்க்காமல் நடிக்க, சரியான டைமிங்கில் நடந்து பாஸ் செய்ய, என்று நடிக்க வேண்டும். இவர்கள் சொதப்பினால் மொத்த காட்சியின் இம்பாக்ட் இல்லாமல் போய் மறுபடி, மறுபடி ரீடேக் எடுக்க வேண்டியதாகிவிடும். சினிமாவில் உதவி இயக்குனர்களில் ஒருவர் ஆக்‌ஷன் கண்டின்யூட்டி பார்ப்பதற்காக ஒருவர் இருப்பார். அவரின் வேலை என்னவென்றால், கதாநாயகன், நாயகி, கையில் என்ன வைத்திருந்தார்கள். மாஸ்டர் ஷாட்டில் எங்கிருந்து உள்நுழைந்தார்கள், எங்கே வெளியே சென்றார்கள். வெளியே செல்லும் போது அவர்கள்  கையில் இருக்கும் பொருட்கள் எந்த பக்கம் இருந்தது, என்பது போன்ற விஷயங்களை பேடில் படங்களாய் வரைந்து கொள்வார்கள். பின்னணியில் நடக்கும் துணை நடிகர்கள்  எப்போது எங்கே கிராஸ் செய்தார்கள் என்றெல்லாம் சரியாக மார்க் செய்து கொண்டு அந்த நேரத்தில் அவர்களை  அனுப்ப வேண்டும்.  பல அனுபவமிக்க  துணை  நடிகர்கள் அவர்களாகவே புரிந்து கொண்டு சரியான டைமிங்கில் நுழைந்து வெளியே வருபவர்கள் இருக்கிறார்கள்.

கதாநாயகன் ஒரு வீரம் மிக்கவனாக, அன்பானவனாக, மக்கள் நாயகனாய் காட்ட நல்ல துணை நடிகர்களை வைத்துத்தான் காட்சியை மெறுகேற்ற வேண்டும். அவர்கள் சொதப்பினால் மொத்தமும் சொதப்பலாகிவிடும். இப்படி இவர்களை பற்றி சொல்வதானால் நிறைய சொல்லலாம். சரி அதை விடுங்கள் நாம் இப்போது நம் கட்டுரையின் தலைப்புக்கு வருவோம். ஷூட்டிங்கில் இரண்டு இட்லி, வடை மட்டுமே சாப்பிடுபவர்கள் என்று யார் இப்படி கதை கட்டி விட்டது என்றே தெரியவில்லை. ஒரு நாளைக்கான ஷூட்டிங் மெனுவை சொல்கிறேன் கேளுங்கள். இட்லி, வடை, பொங்கல், வடைகறி, மூன்று விதமான சட்டினிகள், ராகி, அல்லது கோதுமை உப்புமா, வெள்ளை உப்புமா அதாங்க ரவை உப்புமா என்று வரிசைக் கட்டி இருக்கும் அயிட்டங்களுடன், டீ, காபியும் உண்டும். இது தவிர எல்லோருக்கும் கேன் வாட்டரும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு டீ யோ காபியோ இருக்கும். இது தவிர மதியம் சாதம், ஒரு கலந்த சாதம், சாம்பார், ரசம், மோர், நான் வெஜ் என்றால் குழம்போ, அல்லது ட்ரை அயிட்டமோ ஒரு முறை மட்டுமே காட்டப்படும். ஆனால் உண்டு. முக்கியமாய் லைட்மேன்களுக்கு நான் வெஜ் இருந்தாக வேண்டும். பளுவான லைட்டுகளை தூக்கிச் செல்பவர்களாதலால் அந்த கவனிப்பு. இது தவிர இரண்டு பொரியல், கூட்டு, சைவமாய் இருந்தால் அப்பளம், அசைவம் சாப்பிட்டால் கிடையாது.  திரும்பவும் மதியம் ஒரு மூன்று மணிக்கு ஒரு டீயோ, அல்லது லெமன் டீயோ உண்ட பின் வரும் மயக்கத்தை தெளிவிப்பதற்காக.. மறுபடியும் டீ.. காபி.. என்று ஓடும் . சாயங்காலம் பேட்ட வாங்கிக் கொண்டு போகும் போது டிபன் என்று ஒரு ஸ்வீட், ஒரு காரம் கொடுக்கப்படும்.

பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகள், என்று வெய்யிலில் கூட்டமாய் நிற்கும் காட்சியன்று உச்சி வெய்யிலுக்கும்  மோரோ, அல்லது சில்லென லெமன் ஜூஸோ, அல்லது இர்ண்டு லிட்டர் பேண்டாவோ அனைவருக்கு வெய்யில் ஏற ஏறக் கொடுக்கப்படும். இதைத் தவிர, இரவு ஷூட்டிங் என்றால் நிச்சயம் டீ காபி தொடர்வதும், அது மட்டுமில்லாமல், இரவு சாப்பாட்டுக்கு இட்லி, பரோட்டா, தோசை, சட்னி வகைகள் மூன்று, வடகறி அல்லது குருமா.. அசைவத்தில் சிக்கனோ, மீனோ குழம்பாய் இருக்கும்.  பைனல் டச்சாய் தயிர்சாதம் ஊறுகாய் கூட இருக்கும்.

அவுட்டோர் கூட்டிக் கொண்டு போனால் காலையில் ரூமில் காபி/டீயுடன் தான் பள்ளியெழுச்சியே நடக்கும். இப்படி ஒரு ஆளுக்கு சைவம் என்றால் இன்றைய விலைவாசிக்கு இவ்வளவும் போட்டு நூறு ரூபாயிலிருந்து நூற்றியமைப்பது ரூபாய் வரை செலவு செய்கிறார்கள். விஜயகாந்த், எம்.ஜி.ஆர் படப்பிடிப்புகளில் அவர்கள் சாப்பிடும் சாப்பாடே துணை நடிகர்களுக்கும் போடச் சொல்லி பசியாறுவதை பார்த்து சந்தோஷப்பட்டவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். எனவே இனிமேலாவது கட்டுரைத் தலைப்பை வைத்து பொத்தாம் பொதுவாய் யார் மனைதையும் ஏன் இப்படி சொல்கிறேனென்றால்.. சாப்பிடுபவர்களையும் சாப்பாடு போடுபவர்களையும் சேர்த்து அவமதிப்பது போலிருக்கிறது அந்த சொல்வடை.. அவர்களும் கலைஞர்கள் தான்.  அவர்கள் இல்லாமல் சினிமா இல்லை. ..இல்லை. இல்லை…
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
அதீதம் இதழுக்காக எழுதியது.

டிஸ்கி: வெளியூர் பயணமாய் ஒரு வாரம் செல்லவிருப்பதால். யாராவது மகானுபாவர்கள் திரட்டிகளில் சேர்த்து விடவும். அவர்களுக்கு என் சொத்தில் பாதியை ஏன் முழுவதையும் தருகிறேன்.:)

21 comments:

  1. எங்க, எப்போ registration வச்சுக்கலாம்ன்னு சொல்லுங்க.

    ReplyDelete
  2. தலைப்ப பாத்திட்டு விருகம்பாக்கத்தில இருக்குற ஹோட்டல் பத்தியோன்னு நினைச்சிட்டேன்.

    ReplyDelete
  3. ஒரு பஞ்சாயத்துக் காட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள் அதில் சுமார் நூறு பேர் சுற்றி நின்று கொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளுக்கு ஏற்றபடி ரியாக்‌ஷன்கள் கொடுத்துக் கொண்டோ, அல்லது கூச்சல் குழப்பம் செய்ய வேண்டுமென்றால் அவர்களில் சிறந்த கரெக்ட் டைமிங் சென்ஸுடனான நடிப்பு இல்லையென்றால் அந்த காட்சியே கேவலமாகிவிடும்

    100% நிதர்சனம். திரைக்கு பின் இருப்பவர்களை கெளரவப்படுத்தும் பதிவு!

    ReplyDelete
  4. Anonymous4:40 AM

    முதலில் உங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

    ReplyDelete
  5. புரடக்சன் சாப்பாடு எப்பவுமே அருமை .நானும் ருசித்து இருக்கிறேன் ..

    ReplyDelete
  6. இது மீள் பதிவு தானே.....

    ReplyDelete
  7. உங்களுக்கு எதுக்குன்னா திரட்டி, கூகிள் போய் உடான்ஸ் தட்டினாலே உங்க பேர் தான் வருது

    ReplyDelete
  8. அவர்கள் காட்சியில் தோன்றும்போது அணியும் உடை அவர்களே போட்டுக்கொண்டு வருவதா இல்லை படக்கம்பெனி தருவதா?

    லைட்மேன்கள் தவிர்த்து மற்றவர் யாரும் அவ்வளவு உடலுழைப்பைத் தருவது போல் தெரியவில்லையே? ஒரு சராசரி மனிதனுக்கு இவ்வளவு உணவு/கலோரிகள் தேவையா?

    சில உணவு வகைகளைத் தவிர்த்துவிட்டு மிச்சமாகும் பணத்தை பேட்டாவாகப் பெற்றுக் கொண்டால் என்ன?

    ReplyDelete
  9. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நூறு, நூற்றைம்பது ரூபாய் ரொம்பக் குறைவாகத் தெரிகிறதே! சரவண பவனிலிருந்துகூட உணவு சப்ளை நடக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அப்படிப் பார்த்தால் காலை சிற்றுண்டிக்கே அவர்கள் 100 ரூபாய் வாங்கிவிடுவார்களே! - ஜெ.

    ReplyDelete
  10. துணை நடிகர்கள் பற்றி தெரிந்து கொண்டோம்.

    ReplyDelete
  11. really good post

    ReplyDelete
  12. cable ji
    indha mathiri public yarum avangalai kindal pandra mathiri theriyala may be unga film industryla irukkaravangalay kindal pandrangalo ?
    by the way rendu idly oru vadai appadinna athu 18+ matter thaan engalukku theriyum

    ReplyDelete
  13. padatha paarthaale pasikuthu sir...

    ReplyDelete
  14. Anonymous6:26 PM

    இந்த கிண்டல் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்(சினிமா துறைக்குள்) மட்டுமே இருந்து வந்துள்ளது எனத்தெரியவருகிறது. கிண்டல் பண்ண வேண்டாம் என்று நீங்களே கூறி விட்டு ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் இருந்த விஷயத்தை இப்படி ஜூனியர் ஆர்டிஸ்ட் எல்லாம் ரெண்டு இட்லி.. ஒரு வடை.. என்று என்னை போன்ற சாதாரண மக்கள் எல்லோருக்கும் தெரிய படுத்திவிட்டீர்களே..

    ReplyDelete
  15. உங்க கிட்ட கேட்கனுமின்னு நினைச்சிகிட்டு இருந்தேன்,இது மாதிரி சினிமா லைன் ல என்ன நடக்குதுன்னும் அடிக்கடி எழுதுங்க!

    Latest posts:

    i-Phone னால் வந்த ஆபத்து!


    தைரியம் இருந்தா கை வச்சிப் பாருடா!

    ReplyDelete
  16. Nice posting about Food & hospitality.By this post i came to know that MGR & Vijaykanth has a good quality of feeding Co artist with same type of food

    ReplyDelete
  17. "rendu idli oru vadai" appadina dooble meaning dialog illaya..

    ReplyDelete
  18. //விஜயகாந்த், எம்.ஜி.ஆர் படப்பிடிப்புகளில் அவர்கள் சாப்பிடும் சாப்பாடே துணை நடிகர்களுக்கும் போடச் சொல்லி பசியாறுவதை பார்த்து சந்தோஷப்பட்டவர்கள் என்று பெயர் பெற்றவர்கள்.//

    ‘இல்ல சார். இங்க ஏர்போர்ட்டுக்கு முன்னாடி பழைய பின்னி மில்லுல ஷூட்டிங் சார். 14 நாள் நடந்துச்சு. சாப்பாடு சரியா இல்லை. மொத நாள் மோசமான சாப்பாடு. புரடக்‌ஷன்ல சரியாப் பாத்துக்கல. அடுத்த நாள் லைட் பாய்கிட்டப் பேசிக்கிட்டிருக்கறப்ப அவருக்குத் தெரிஞ்சிடுச்சு. உடனே அன்னிக்கு வீட்டுல மட்டன் பிரியாணிக்கு ரெடி பண்ணிக்கிட்டு வந்துட்டாரு. மட்டன் பீஸ் எல்லாம் வீட்டுலயே தயார் பண்ணிக் கொண்டுவந்துட்டாரு. அரிசி ஒரு கிலோ 190 ரூபாய் சார். அவரே சமையல் பண்ணாரு.’

    ‘என்னப்பா விளையாடற? அவரே சமையல் பண்ணாரா, இல்லை ஆளுகளை வெச்சு சமைச்சாரா?’

    ‘இல்லைங்க, அவரே சமையல். ஃப்ரீயா இருந்த டெனீஷியன்களைக் கூட்டு வெங்காயம், தக்காளி வெட்டித் தரச் சொன்னாரு. அவரே அரிசியை சோம்பு, பட்டை எல்லாம் போட்டு சமைச்சு, அப்புறம் மட்டனைச் சேர்த்து பிரியாணி செஞ்சாரு.’

    ‘அப்புறம் என்ன ஆச்சு?’

    ‘மொத நாள், எங்க யாருக்குமே பீஸ் கிடைக்கல சார். வெறும் சோறு மட்டும்தான். புரடக்‌ஷன்ல ஆளுங்க வந்து பீஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. டிஃபன் கேரியர்ல அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க. அதுவும் அவரோட காதுக்கு அடுத்த நாள் போயிருச்சு. ஒருத்தரக் கூப்பிட்டு பிரியாணி எப்படி இருந்துச்சுன்னு கேட்டாரு. அவர் வந்து, ‘நல்லா இருந்துச்சு சார், ஆனா பீஸ்தான் கிடைக்கல. எங்களுக்கு யாருக்குமே கிடைக்கலை’னு சொன்னாரு. அன்னிக்கு அவரே திரும்ப பிரியாணி பண்ணினதுமே, புரடக்‌ஷன் மேனேஜரைக் கூப்பிட்டுச் சொல்லிட்டாரு: ‘இன்னிக்கு டிஃபன் பாக்ஸ் கட்டற வேலை எல்லாம் கிடையாது. ஏ, பி, சி அப்பிடின்னு எந்த வித்தியாசமும் இல்லாம, எல்லாரும் இங்கியே உக்கார்ந்து சேர்ந்து சாப்பிடட்டும்.’ அன்னிக்குத் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிஞ்சதும் அவரேதான் சார் யூனிட்டுல உள்ள அத்தனை பேருக்கும் பிரியாணி செஞ்சு போடுவாரு. ஒவ்வொரு நாளும் டேஸ்டு அதிகமாகிக்கிட்டே போச்சு சார்.’

    ‘அப்புறம்?’

    ‘அப்புறம் ஷூட்டிங்குக்கு ஹைதராபாத் போனோம் சார். அங்க சமையல் செய்ய முடியாதுங்கறதுனால, அவரோட சொந்தக் காசுல, கிரீன் பாவர்ச்சின்னு ஒரு ஹோட்டல் சார். அதுலேர்ந்து அத்தனை பேருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுத்தாரு. ஒரு பிரியாணிய நாலு பேர் சாப்பிடலாம். ஹைதராபாத்ல ஷூட்டிங் முடியறவரை அங்கேருந்துதான் சாப்பாடே.’

    ‘சாப்பாடு மட்டும்தானா?’

    ‘இல்ல சார். தீபாவளி சமயத்துல ஒவ்வொருத்தருக்கும் 3,000 ரூபாய்க்கு வெடி, ஆளுக்கு 500 ரூபாய் கேஷ் கொடுத்தாரு சார். அப்புறம் பொங்கல் சமயத்துல ஒவ்வொரு டெக்னீஷியனுக்கும் கால் பவுன் தங்கத்துல மோதிரம் வாங்கிப் போட்டாரு சார். வருஷப் பொறப்புக்கு...’

    இப்படித் தொடர்ந்துகொண்டே போனார். கமல், ரஜினி போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் பலருக்கு உதவி செய்துள்ளதையும் சுட்டிக் காட்டினார். ஆனால் அஜித் அளவுக்குத் தான் யாரையுமே பார்த்ததில்லை என்றார்.

    செட்டில், உடல் நலம் சரியில்லாமல் யாரேனும் வேலைக்கு வரவில்லை என்றால் உடனே தன் மேனேஜரை அனுப்பி, என்ன விஷயம் என்று தெரிந்துகொண்டு, உடல் நலக் குறைவுக்கு ஏற்றார்போலப் பணம் அனுப்பிவைப்பாராம். கூட வேலை செய்வோரை அண்ணே என்றுதான் அழைப்பாராம்.

    மேக்கப் கலைஞரின் குரல் தழுதழுத்தது.

    ReplyDelete