Pages

Oct 13, 2012

மாற்றான்

எந்த நேரத்தில் இந்த வருஷம் வரப் போகும் பெரிய படமெல்லாம் ஓடாது   போலருக்கே என்று சொன்னேனோ தெரியவில்லை. வரிசையாய் வரும் எல்லா பெரிய படங்களும் சொல்லிக் கொள்ளூம்படியாகவே இல்லாமல் இருக்க, என் வாக்கை மாற்றானாவது மாற்றுமா? என்று எதிர்பார்த்தால் கொடுத்த வாக்கை மாற்றாது இந்த மாற்றான் என்றிருக்கிறார்கள்.


ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள். காரணம் ஜெனிட்டிக் சயிண்டிஸ்டான அப்பாவின் சோதனை. அப்பாவின் பால்பவுடர் கம்பெனியின் அசுர வளர்ச்சி. அதன் பின்னணியில் பல ரகசியங்கள். அதனால் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு ப்ரச்சனை. பின்பு என்ன ஆனது என்று நான்கு வரியில் எழுதிவிடக்கூடிய கதைதான்.
ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாய் சூர்யா. இரண்டு பேரின் மேனரிசங்கள், பாடிலேங்குவேஜ், டயலாக் டெலிவரி போன்றவற்றில் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். குறிப்பாய் இடைவேளைக்கு முன்பு வரும் எம்.ஜி.எம் சண்டைக் காட்சிகளிலும், இரு சூர்யாவிற்குமிடையே வரும் சண்டைக் காட்சிகளிலும் சுவாரஸ்யம். மற்றபடி பெரிதாய் பாராட்டும் அளவிற்கு இவரது நடிப்பில் ஏதும் புதுமையில்லை. வழக்கம் போன்ற அவரது உழைப்பு மட்டுமே மிச்சம்.

காஜல் அகர்வால் நன்றாக மொழு மொழுவென இருக்கிறார். பெரிய கண்களுடன் இரண்டு சூர்யாவையும் விழுங்கி விடுவது போல பார்க்கிறார். பல மொழிகளில் பேசுகிறார். எந்த நாட்டுக்கு போனாலும் அங்கே அவருக்கு ஒரு நண்பர் இருக்கிறார். ரெண்டு சூர்யாவில் ஒருத்தர் போன பிறகு இன்னொருத்தரை கதையில் காதலிக்க சொல்லியிருப்பதால் காதலிக்கிறார். இவரை விட இவருக்கு குரல் கொடுத்திருக்கும் சின்மயிக்கு பல மொழிகள் அத்துப்படி என்பதால் அவரின் குரல் படம் நெடுக நன்றாக நடித்திருக்கிறது.
படத்தில் கிட்டத்தட்ட முழு நேர நெகட்டிவ் கேரக்டராக வரும் சூர்யாவின் அப்பா சச்சின் கண்டேல்கரின் திரைமொழியை விட அவருக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கும் குமார் நடராஜனின் நடிப்பு அருமை. பல இடங்களில் அவரது மொக்கை இந்தியில் தன் அகலக் கண்களை விரித்து அவர் சமாளித்திருக்கும் இடங்களில் எல்லாம் பின்னணிக்குரல் அபாரம்.

ஒளிப்பதிவு செளந்தர்ராஜன். இந்தியாவில் முதல் முறையாய் பெர்பாமென்ஸ் கேப்சரிங்  எனும் டெக்னாலஜியை பயன்படுத்தியிருக்கிறார்கள். நார்வேவில் வரும் பாடல் காட்சிகளில் நம்மை ரசிக்க வைக்கிறார். இடைவேளைக்கு முன் வரும் எம்.ஜி.எம் சண்டைக்காட்சிகளில் இவரது ஒளிப்பதிவும், EFX காரர்களின் உழைப்பும், எடிட்டர் ஆண்டனியின் ட்ரிம்மிங்கும் அபாரம். ஆனால் சில பல காட்சிகளில் அவுட் ஆஃப் போகஸில் இருப்பதை ஏன் கவனிக்காமல் விட்டார்கள் என்று தெரியவில்லை.

கால் முளைத்த பூவே, நாணி கோணி ஆகிய பாடல்கள் கேட்கும் படியாய் இருந்தாலும், கோ அளவிற்கு ஹிட்டடிக்காததால் ஹாரிஸ் இந்த முறை மறுக்கா, மறுக்கா கேட்டாலும் ஒர்க்கவுட் ஆகவில்லை என்பதும், தனக்கும் பின்னணியிசைக்கும் ஏதும் சம்பந்தமில்லை என்பதை ஏழாம் அறிவிலேயே நிருபித்தவர், இரண்டாவது பாதியில் வரும் சேசிங் சீன்களில் வரும் பின்னணி இசையே அதற்குச் சான்று.
வசனம் சுபா. ஆங்காங்கே ஒரிரு இடங்களில் பளிச். மற்றபடி கதை திரைக்கதையில் தான் இவர்களின் உழைப்பு தெரிகிறது. கதை திரைக்கதை எழுதி இயக்கியவர் கே.வி.ஆனந்த்.  வழக்கமாய் இவரது முந்தையப் படங்களில் எல்லாம் பெரிதாய் கதை இருப்பதாய் சொல்ல முடியாவிட்டாலும்,  குட்டிக் குட்டியாய் நிறைய காட்சிகளை திரைக்கதையில் நுழைத்து ஏதோ பெரிதாய் இருப்பதைப் போல காட்டுவதில் வல்லவர். அயனில் செயல்படுத்த அரம்பித்து, கோவில் அதை வெற்றி பார்முலாவாக்கி, மாற்றானில் அதை மேலும் உறுதிப் படுத்துகிறார். குறிப்பாக, ஜெனட்டிக் சயன்ஸ் மூலம் குழந்தை பிறப்பது, அவர்கள் இரட்டையர்களாக பிறப்பதில் ஆரம்பித்து, விமலன், அகிலனின் வளர்ச்சி, இதனிடையே அவர்களின் அப்பா சச்சினின் வாழ்க்கை, அதில் அவரின் தற்கொலை முயற்சி, பின்பு அவரின் வெற்றி என்பதை எல்லாம் படம்  ஆரம்பித்த  பத்து நிமிஷத்தில் பரபர மாண்டேஜ் ஷாட்களாகவே சொல்லியிருப்பது அபாரம்.

இரண்டு சூர்யாவை வைத்துக் கொண்டு பாரில் டான்ஸ் ஆடும் காட்சி, ஆங்காங்கே கலீல் ஜிப்ரான், பாரதி என்று ஜல்லியடிப்பது எல்லாம் சுபாவின் இன்ப்ளூயன்ஸாகத் தெரிகிறது.  பரபர பத்து நிமிடங்களுக்கு பிறகு திடீரென தொய்வடையும் திரைக்கதை இடைவேளைக்கு முன் இருபது நிமிடங்கள் தீயாய் பரபரக்கிறது. குறிப்பாக விமலன், அகிலன் இருவரும் சேர்ந்து போடும் அந்த நீளமான சண்டைக் காட்சி.  அதற்கு பிறகு வழக்கம் போல ஒரு சூர்யாவை வைத்துக் கொண்டு தன் அப்பா கம்பெனி ப்ராடெக்டான எனர்ஜியானில் இருக்கும் ரகசியத்தை கண்டுபிடிக்க நாடு நாடாக சென்று தேடுவது, இரண்டாவது சூர்யாவிற்கும், காஜலுக்குமிடையே ஆன காதல் என்று படத்தில் அவர்கள் அலைவது போலவே திரைகக்தையும் தாறுமாறாக அலைகிறது.
ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை வைத்து ஒரு அற்புதமான காதல் கதையை  கொடுக்க முடியும். சரி அதையாவது யாரும் முயற்சி செய்யவில்லை. அட்லீஸ்ட் இந்த படத்தில் சாப்ட்டான அகிலனை காதலிக்கும் காஜல் அவர் இறந்தவுடன் ஏதோ அந்த சூர்யா இல்லைனன இந்த சூர்யா என்பது போல ஒரே காட்சியில் சூர்யா இடுப்பில் கை வைத்தவுடன், எதையோ முழுகியது போல முகத்தை வைத்துக் கொண்டு அவரின் தோளில் காஜல் கை போட்டு காதலிக்க ஆரம்பிப்பது எல்லாம் படு அபத்தம். உங்களுக்கு என்னடா பாட்டு பாட ஒரு ஹீரோயின் வேண்டும் அவ்வளவுதானே? என்று நம்மை கேட்பது போல இருக்கிறது. அயனில் சொந்த தங்கையையே அயிட்டம் என்று சொல்லி காமெடி செய்ததை ஏற்று ஹிட்டடித்தால் இது போதும் என்று விட்டு விட்டார் போல.

இரண்டாவது பாதியில் பால் பவுடரின் பின்னணியில் இருக்கும் ரகசியத்தை  தேடியலையும் போது சொல்லப்படும் சப் ப்ளாட்டுகளான 35 அத்லெட்டுகளின் மரணம் போன்ற விஷயங்கள் தமிழ் சினிமாவில் புதுசு என்று நினைத்து செய்திருந்தாலும், எல்லாமே எதிர்ப்பார்த்த திருப்பத்தையே தருகிறது.  அதிலும் ராணுவ அதிகாரியிடம் சூர்யா மாட்டிக் கொண்டு அவரிடமிருந்து தப்பிப்பதாய் காட்டப்படும் காட்சிகளும், பசூக்காவால் சுடப்படும் காட்சிகள் எலலாம் படு இழுவை. என்ன தான் சேஸிங், இன்வெஸ்டிகேட்டிவ் காட்சிகள்  பரபர எடிட்டிங் என்று  மெனக்கெட்டிருந்தாலும், படத்தின் வில்லன் யார் என்று முதல் பாதியிலேயே தெரிந்துவிட்டதால் பக்கத்தில் இருக்கும் வில்லனை விஜயகாந்த் பெஞ்ச், டேபிள், சுவர், விட்டம் எல்லாம் பறந்து அடிப்பது போல எதுக்கு இவ்வளவு தூரம் இழுக்கணும் என்ற கேள்வி நமக்குள் எழுகிறது.

படம் நெடுக லாஜிக் மிஸ்டேக்குகள் கொட்டிக் கிடக்கிறது. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த ஒருவன் இந்த ஓட்டம் ஓடுவது எல்லாம் சிரிப்பாக இருக்கிறது. ரஷ்ய அதிகாரிகளின் காட்சிகள் எல்லாம் அபத்த லாஜிக் மீறல்களின் உச்சம்.  குஜராத்தில் விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாட்டு ரிஜிஸ்ட்ரேஷன் வண்டி இருப்பது, ஊர் ஊராய் அவர் அலைவது. பத்து பேரின் விந்தணுக்களிலிருந்து பிறந்தவர்கள்தான் அமலன் விமலன் என்று தெரியப்படும் அந்த குகை காட்சி எல்லாம் இழுவையின் உச்சம்.  ஆங்காங்கே சிற்சில சுவாரஸ்ய முடிச்சுக்கள் முதல் பாதியின் கடைசி இருபது நிமிடம். இரண்டாவது பாதியில் ஆரம்ப பத்து நிமிடங்களைத் தவிர, மற்றவைகள் எல்லாம் அயர்சியாய்த்தான் இருக்கிறது. விமலன், அமலனுக்கு சட்டை போட ஜிப் வைத்த டிசைனை யோசித்த அளவிற்கு இன்னும் கொஞ்சமேனும் யோசித்திருக்கலாம்.
கேபிள் சங்கர்

33 comments:

  1. சார் படம் நல்லா இருக்க நல்லா இல்லையா ??????

    ReplyDelete
  2. மாற்றான் ஏமாற்றான்னு நினைச்சேனே...

    ReplyDelete
  3. //English vinglish நல்லாருக்குன்னு ரஜினி சொல்லிட்டாரம். இனி ஓடுன மாதிரிதான். //

    //சுவாரஸ்ய இந்திய சினிமா செய்ய முடியும் என்று ஆணித்தரமாய் பதிலளித்திருக்கிறார்கள் இந்த இங்கிலீஷ் விங்லீஷ் மூலம்//

    //எந்த நேரத்தில் இந்த வருஷம் வரப் போகும் பெரிய படமெல்லாம் ஓடாது போலருக்கே என்று சொன்னேனோ தெரியவில்லை//

    பதிவுலக சூப்பர் ஸ்டாருக்கு கருநாக்கு. சொன்னதெல்லாம் பலிக்குமாம் :) :)

    பாஸூ அப்படியே காவேரியையும் கரண்டையும் தொறந்துவிடச்சொல்லுங்க. :):)

    ReplyDelete
  4. Anonymous9:29 AM

    Appadi surya ku oru tholvi padam.

    ReplyDelete
  5. //எந்த நேரத்தில் இந்த வருஷம் வரப் போகும் பெரிய படமெல்லாம் ஓடாது போலருக்கே என்று சொன்னேனோ தெரியவில்லை//
    துப்பாக்கி தூள் கிளப்புமாக ! ஆமென்

    ReplyDelete
  6. //விமலன், அமலனுக்கு சட்டை போட ஜிப் வைத்த டிசைனை யோசித்த அளவிற்கு இன்னும் கொஞ்சமேனும் யோசித்திருக்கலாம்.//

    இந்த பன்ச் சூப்பர் தலைவரே...


    ReplyDelete
  7. அடுத்து கே.வி. ஆனந்த் கிட்ட இருந்து பதிவர்களுக்கு எல்லாம் டோஸ் இருக்குன்னு சொல்லுங்க. ஆமா ஏதோ Stuck on you படத்தோட தழுவல் அப்படீன்னு சொன்னாங்களே, அப்படியெல்லாம் இல்லையா கேபிள்ஜி?

    ReplyDelete
  8. Anonymous6:52 PM

    இந்த விமர்சனத்தை படிக்கவே இவ்வளவு அயர்ச்சியா இருக்கே.. அப்ப படம்?
    ஆனால், எனக்கென்னமோ இந்த படம் ஹிட் ஆகிரும், ஆனால் சூர்யா இன்னும் கொஞ்சம் கவனமா இருக்கனும், அஜித், விஜய், விக்ரம் மாதிரி இவரும் கதை விசயத்துல சொதப்ப தொடங்கிட்டாரு....

    ReplyDelete
  9. அண்ணே

    அருமையான கேள்வி . . .

    ReplyDelete
  10. உங்களுக்கு என்னடா பாட்டு பாட ஒரு ஹீரோயின் வேண்டும் அவ்வளவுதானே?


    அண்ணே அருமையான கேள்வி . . .

    ReplyDelete
  11. படம் பார்த்தேன் (த்யேட்டரில்). ரொம்ப பிடிச்சிருந்தது. கண்டிப்பாக ஒரு முறை குடும்பத்தோடு பார்க்கலாம்...

    ReplyDelete
  12. ஜேசன் சாந்தம் க்ராங்க் ஹை வோல்ட்டேஜில் இதயமே இல்லாம ஓடும்போது இதுல ஓடினாலும் ஏத்துக்கங்க கேபிள்ஜி.

    ReplyDelete
  13. Anonymous11:06 PM

    Thambi!!! Tea innum varala...:)

    ReplyDelete
  14. senthazal ravi

    ஜேசன் சாந்தம் க்ராங்க் படத்தை போல ஒரு மொக்கை படத்தை ஹாலிவுட்டுலேயே சமீபத்துல பாக்குல.

    ReplyDelete
  15. கேபிள்ஜி,

    சூர்யா என்ன பாவம் பண்ணார்?

    போட்டு வாரியிருக்கிங்களே?

    ஜேசன் ஸ்டாதம் "கிராங்க்" படம் தான் நினைத்துக்கொண்டே படித்தேன் , செந்தழல் சொல்லிட்டார்.

    பல கத்திக்குத்து, மண்டையில கடப்பாரையால அடிச்சாலும் எழுந்து வந்து சண்டைப்போடுறாங்க தமிழ் சினிமாவில் அப்போ எல்லாம் சிரிக்காம படம் பாருங்க :-))

    கார் நம்பர் பிளேட் வரைக்கும் லாஜிக் பார்க்க ஆரம்பிச்சுட்டிங்களா, இதே போல எல்லாப்படத்திற்கும் பார்க்கவும் :-))

    ReplyDelete
  16. பதிவிற்கு நன்றி கேபிள்ஜி.. படத்தின் இரண்டாம் பாதி வேஸ்ட்.. ஆனாலும் நீங்கள் சொன்னமாதிரி இது மிகப்பெரிய தோல்விப்படமாக அமையாது என்பது என் அனுமானம். பார்க்க முடியாத அளவிற்கு மோசமான படம் அல்ல என்பது என் கருத்து..

    ReplyDelete
  17. //வவ்வால் said...
    //பல கத்திக்குத்து, மண்டையில கடப்பாரையால அடிச்சாலும் எழுந்து வந்து சண்டைப்போடுறாங்க..//

    வவ்வால்ஜி, புல் தடுக்கி விழுந்து செத்தவனும் இருக்கான். புல்டோசர் ஏறி பிழைத்தவனும் இருக்கான். நம்ம ஹீரோக்கள்லாம் இரண்டாவது ரகம்ன்னு வச்சுக்க வேண்டியதுதான்..
    :))

    ReplyDelete
  18. super review.......

    ReplyDelete
  19. //இரண்டாவது பாதியில் ஆரம்ப பத்து நிமிடங்களைத் தவிர, மற்றவைகள் எல்லாம் அயர்சியாய்த்தான் இருக்கிறது.
    //

    சேம் ஃபீலிங்கி..

    ReplyDelete
  20. Hardwork by Surya has gone unnoticed in the review or the comments, or is it a given, that he has to work?

    ReplyDelete
  21. குஜராத்ல தமிழ்நாட்டு ரிஜிஸ்ட்ரேஷன் வண்டி இருக்ககுடாத என்ன? அய்யயோ என்னோட வண்டி நம்பர உடனே மாத்தனும்

    ReplyDelete
  22. /* குஜராத்ல தமிழ்நாட்டு ரிஜிஸ்ட்ரேஷன் வண்டி இருக்ககு */
    /* கார் நம்பர் பிளேட் வரைக்கும் லாஜிக் பார்க்க ஆரம்பிச்சுட்டிங்களா */

    படம் செம SpEED SIR !!!

    ReplyDelete
  23. cable sir, ungla mathiri KALA KALAPPA padam edukka enga Suya vuku theriyadu ....
    konjam adjust panni konga..

    ReplyDelete
  24. "பல கத்திக்குத்து, மண்டையில கடப்பாரையால அடிச்சாலும் எழுந்து வந்து சண்டைப்போடுறாங்க தமிழ் சினிமாவில் அப்போ எல்லாம் சிரிக்காம படம் பாருங்க :-))

    கார் நம்பர் பிளேட் வரைக்கும் லாஜிக் பார்க்க ஆரம்பிச்சுட்டிங்களா, இதே போல எல்லாப்படத்திற்கும் பார்க்கவும் :-))"


    என்ன கேபிள் நீங்களும் படம் எடுக்கத்தான் போறீங்க, பாப்போம். (நிச்சயமாக அது உலக மகா திரைப்படமாக இருக்க போவதில்லை)
    படம் வந்த பிறகு இருக்கு கிழி.

    ReplyDelete
  25. இதே இங்கிலீஷ் படத்தில் எத்தனை ஓட்டை இருக்கு அதையெல்லாம் கண்டு கொள்ளமாட்டங்க. ஏனென்றால் வெள்ளைகாரனை பிழை கண்டு பிடிக்க கூடாது என்ற எண்ணம்.
    இதை ஒருவகை அடிமை புத்தி என்றும் சொல்லலாம்.

    ReplyDelete
  26. Ethicalist E
    //என்ன கேபிள் நீங்களும் படம் எடுக்கத்தான் போறீங்க, பாப்போம். (நிச்சயமாக அது உலக மகா திரைப்படமாக இருக்க போவதில்லை)
    படம் வந்த பிறகு இருக்கு கிழி.//

    நிச்சயம் அப்படி எல்லாம் எடுக்க மாட்டேன். ஒரு படத்தில் இம்மாதிரி லாஜிக் ஓட்டைகள் எல்லாம் நம் கண்களுக்கு தெரிவது எப்போது என்றால் ப்டம் நம்மை சுவாரஸ்ய படுத்தாத போதுதான். ஸோ.. உலக மகா படம் எடுக்காவிட்டாலும் சுவாரஸ்யமான படம் கொடுக்க முயற்சி செய்வேன். கிழிப்பது உங்கள் உரிமை.. என் ஜாய்.:))

    மேற்ச் சொன்ன உதாரணம் இங்கிலீஷ் படத்திற்கும் பொருந்தும்.

    ReplyDelete
  27. வணக்கம் ஷங்கர் சார்,

    உங்களது பக்கத்தினை ரொம்ப நாள் வாசித்துவரும் ஒரு ரசிகன் நான். ரொம்ப நல்ல எழுதுறீங்க.
    குறிப்பா உங்க திரை விமர்சனம் நல்ல இருக்கும். ஆனாலும் சில நெருடல்கள் வரத்தான் செய்யுது.
    அதிலும் நீங்க புதிய நடிகர்களது, புதிய இயக்குனர்களது அல்லது Low budget படங்களது விமர்சனங்களை ஆகோ ஓஓஹோ என்று பாராட்டி எழுதுவதும் பெரிய நடிகர்களது படங்களுக்கு விமர்சனங்களை ஒரு காழ்ப்புணர்ச்சியில் எழுதுவது போன்று உணரமுடிகிறது.

    சினிமா ஒரு Fantasy Wolrd என்பது உங்களை போன்றவர்களுக்கு புரியாத ஒன்றல்ல. அதில் திரைப்படங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம் என்பதும் உங்களுக்கு தெரியாதது அல்ல. எல்லா திரைப்படத்துக்கும் திரைக்கதைக்கு "லாஜிக்" இல்லை அல்லது "லாஜிக் மீறல்" என்பது சரியாகாது. ஒரு கதையில் சுவாரிசியமான கதை நகர்வு இருக்கும்போது அங்கே பார்வையாளன் லாஜிக் பற்றி சிந்திக்க மாட்டன். உங்களை போன்ற அதி மேதாவிகளால் மட்டுமே மூன்றாம் கண்ணால் பார்க்கப்படும். "குஜராத்ல தமிழ்நாட்டு ரிஜிஸ்ட்ரேஷன் வண்டி இருக்கு" என்று லாஜிக் மிஸ்டேக் என்று சொன்னீங்க... ஏன் உக்ரைன்ல லிதுவேனியா ரிஜிஸ்ட்ரேஷன் வண்டி ஓட்டினாங்கனு ஒண்ணுமே எழுதல? உங்களுக்கு தெரிஞ்சத "கண்டுபுடிசுட்டோம்ல " எண்ணு சொல்ல்றதுக்காக ஒரு விமர்சனம் தேவை இல்லை. விமர்சனங்கள் நடுநிலைமையோடு எழுதனுமே தவிர தன்னோட ஆளுமையையோ அல்லது புதிசாலித்தனதையோ காட்டுவதற்காக மட்டும் எழுதகூடாது.

    மாற்றான் அஹா ஓஹோ படம் இல்லாவிட்டலும்... இந்த காதல்... காதல் என்ற ஒரு விஷயத்த மட்டுமே வச்சுக்கொண்டு குண்டுச்சட்டியில் குதிரை ஓடும் இயக்குனர்கள் மத்தியிலே வித்தியாசமான சிந்தனைகளோடு திரைப்படம் எடுக்கும் இயக்குனர்களை ஊக்கப்படுத்துவதில் தவறேதும் இல்லையே. அதிலும் 7ஆம் அறிவு திரைப்படத்தை விட மாற்றான் பரவாய் இல்லையே !!!

    இத நீங்க delete பண்ணாமல் போடுவீங்க எண்டு நம்புறேன்.

    ReplyDelete
  28. Mr. Sanu Paramsothy romba romba thanks....en manathil iruntha athainaiyum neengle sollitinga...
    Surya mathiri genuine actor padam konjam parthu vimarsanam eluthanum..

    ReplyDelete
  29. /*உங்களது பக்கத்தினை ரொம்ப நாள் வாசித்துவரும் ஒரு ரசிகன் நான். ரொம்ப நல்ல எழுதுறீங்க.
    குறிப்பா உங்க திரை விமர்சனம் நல்ல இருக்கும். ஆனாலும் சில நெருடல்கள் வரத்தான் செய்யுது.
    அதிலும் நீங்க புதிய நடிகர்களது, புதிய இயக்குனர்களது அல்லது Low budget படங்களது விமர்சனங்களை ஆகோ ஓஓஹோ என்று பாராட்டி எழுதுவதும் பெரிய நடிகர்களது படங்களுக்கு விமர்சனங்களை ஒரு காழ்ப்புணர்ச்சியில் எழுதுவது போன்று உணரமுடிகிறது.*/

    சரியா சொன்னீங்க, இத அடிக்கடி என்னால உணர முடியுது....

    ReplyDelete
  30. "குஜராத்ல தமிழ்நாட்டு ரிஜிஸ்ட்ரேஷன் வண்டி இருக்கு"

    ஒக்கே கேபிள்ஜி நாளைக்கே என்னோட வண்டி நம்பர மாத்திடறேன்

    ReplyDelete
  31. சானு பரம்சோதி,

    //இத நீங்க delete பண்ணாமல் போடுவீங்க எண்டு நம்புறேன்.//

    ஹி...ஹி இத போல சொல்லப்போய் என் பின்னூட்டம் எத்தினி டெலிட் ஆகி இருக்கு, ஒரு பின்னூட்டம் போட்டுட்டு டெலிட் செய்யாதிங்கோ சொல்லுறிங்களே :-))

    உக்ரெயின் ,லிதுவேனியா நம்பர் பிளேட் செமையாக கண்டுப்பிடிக்குறிங்க, ஆனால் அந்த ஊரின் கார் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் பத்தி தலிவருக்கு தெரியாது , தெரிஞ்சிருந்தா சொல்லி இருக்க மாட்டாரா?

    சென்னையில சில பேரு ஹரியானா நம்பர் போட்டு வண்டி ஓட்டுறாங்க , நான் பாண்டி நம்பர் போட்டு ஓட்டுறேன், (ஆறு மாசம் வரைக்கும் வேற ஸ்டேட் நம்பரில் ஓட்டிக்கலாம்) அப்புறமும் ஓட்டினால் தான் மாத்தணும்.

    ஹி...ஹி நானும் மாற்றான் படம் பார்த்துட்டு இன்னும் என்ன என்ன நம்பர் பிளேட் இருக்குன்னு சொல்லுறேன் :-))

    ReplyDelete
  32. விமர்சனத்துக்கு நன்றி.

    ReplyDelete
  33. கமல் , சூர்யா படங்களில் ஒரு சீன் foreign படத்தில் இருந்து எடுக்க பட்டாலும் அவரது படத்தை கிழி கிழி என கிழிக்கும் வலை உலக சினிமா விமர்சகர்கள், ரஜினி படங்களில் 90 % தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் படங்களில் இருந்து copy அடிக்கப்பட்டு வந்தாலும் அதை கண்மூடி தனமாக ஆதரிப்பது வியப்பாக உள்ளது.

    ReplyDelete