கொத்து பரோட்டா 2.0-42
Okja நெட்ப்ளிக்ஸின் திரைப்படம். 2017 கான்ஸ் பெஸ்டிவலில் திரையிடப்பட்ட போது மிக்ஸ்ட் ரெவ்யூவே கிடைத்தாலும், படம் முடிகையில் நான்கு நிமிட ஸ்டாண்டிங் ஓவேஷன் கிடைத்தது என்றார்கள். திரையரங்குகளுக்காக தயாரிக்கப்பட்ட படமல்ல என்றதும் அதற்கு ஒரு எதிர்ப்பும் எழுந்தது. சரி..இப்படியான சர்ச்சைகளை மீறி அப்படி என்ன இருக்கிறது இந்த ஓஜாவில் என்று பார்ப்போம். 2007 மி மிராண்டா கம்பெனியின் லூசி மிராண்டா தங்களுடய பேக்டரியில் ஒர் புதிய வகை காண்டாமிருக சைஸ் பன்னியை உருவாக்குகிறார். அதில் 26 குட்டிகளை உலகமெங்கும் ஒவ்வொருவருரிடம் கொடுத்து வளர்க்கச் சொல்லுகிறார். பத்து வருடங்கள் கழித்து அவைகளில் ஒன்றை சூப்பர் பிக்காக தெரிந்தெடுக்கப்படும் என்று அறிவிக்கிறார். பார்க்கும்போது அஹா.. என்பது போல தோன்றினாலும், அவர்களது உண்மையான எண்ணம் ஜெயண்ட் சைஸ் பன்னியின் மாமிசம். பத்து வருடங்கள் கழித்து சவுத் கொரியாவில் உள்ள ஒர் மலை கிராமத்தில் மிஜா எனும் சிறுமியுடன் ஓஜா அறிமுகமாகிறது. கிட்டத்தட்ட குழந்தையோடு குழந்தையாய் விளையாடுகிறது. மலை உச்சியிலிருந்து கீழே விழ இருக்கும் மிஜாவை தன் உயிரை தியாகம் செய்யும...