Thottal Thodarum

Dec 31, 2012

கொத்து பரோட்டா - 31/12/12

இந்த வருடத்தின் கடைசி கொ.பரோட்டா. டெல்லி பெண்ணின் மரணம் காரணமாய் மனம் முழுவதும் சோகம் அப்பியபடியே எழுத வேண்டியிருக்கிறது. அப்பெண்ணின் மரணத்தினால் எழுந்த சோகத்தை விட, தொடர்ந்து தமிழகத்தில் மட்டுமில்லாது இந்தியாவெங்கும் பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன்முறைகளைப் பற்றி தெரியவரும் போது மேலும் மனம் துன்பப்படுகிறது. இவ்வளவு எதிர்ப்பும், ஆதரவும் டெல்லி பெண்ணுக்காக மட்டுமில்லாமல் இம்மாதிரியான பாலியல் வன்முறையினால் பாதிக்கப்படும் எல்லா பெண்களுக்கு எதிராகவும் இருக்க வேண்டுமென மனம் விரும்புகிறது. எல்லா சமூக வலைத்தளங்களிலும், என்ன ரெண்டு நாள் அழுதுவிட்டு, ஸ்டேடஸ் போட்டு விட்டு கிரிக்கெட் மேட்ச் பார்க்க போய்விடுவீர்கள் என்று புலம்புகிறார்கள். சுனாமியில் குடும்பத்தையே பறிகொடுத்து அநாதையாய் இருப்பவர்கள் கூட சோகங்களைக் கடந்து அவர்தம் வாழ்கையை வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். குடும்பத்தை இழந்ததால், சாப்பிடாமலோ, சிரிக்காமலோ, காதலிக்காமலோ, கல்யாணம் செய்யாமலோ இல்லை. வாழ்க்கை அதன் பாட்டிற்கு ஓடும். ஓடித்தான் ஆகவேண்டும். எனவே இது பற்றி தினம் புலம்ப வேண்டும், ஸ்டேடஸ் போட வேண்டும் என்று நினைக்காமல் இனி வரும் காலங்களில் பெண்களையும் வெறும் சதை கோளங்களாய் பார்க்காமல், அவர்களுக்கும் மனதுண்டு, ஆசாபாசங்கள் உண்டு, வலி உண்டு என்பதை புரிந்து அவர்களை  சக மனுஷியாய் மதிக்கும் பண்பை வளர்க்க பாடுபடுவோம்.
@@@@@@@@@@@@@@@@@@@@

Dec 28, 2012

CZ12


ஜாக்கி சான் உலகளவில் பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்ட ஒரு நடிகர். இவரது படத்தை விரும்பாதவர்கள் கூட இவரது நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் நடிப்புக்காக விரும்புவார்கள். படிக்கும் காலத்தில் அலங்காரில் ஜாக்கிசான் படம் வெளியான நாளே பார்த்த இம்பாக்ட்டில் அவரைப் போலவே ஓடுவதாய் நினைத்து பஸ்ஸில் புட்போர்ட் அடித்த காலெமெல்லாம் உண்டு. அப்படி ஒவ்வொருவருக்கும் என்னதான் புதிய ஹீரோக்கள் வந்தாலும் இன்றைக்கும் இவருக்கு ரசிகர்கள் பெருகிக் கொண்டுதானிருக்கிறார்களே தவிர குறையவில்லை. அப்படிப்பட்ட ஜாக்கிசான் இனியும் அடிப்பட உடலில் இடமில்லை என்றும் வயது வேறு ஆகிவிட்டதால் இத்துடன் இனி ஆக்‌ஷன் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்த பிறகு வெளிவரும்  படம் சைனீஸ் சோடியாக் 12.

Dec 27, 2012

தமிழ் சினிமா ரிப்போர்ட் -2012

தமிழ் சினிமா இந்த வருடம் கொஞ்சம் ஆச்சர்யகரமான வருடமாகவே அமைந்துவிட்டது. ஏனென்றால் நிச்சயம் பெரிய வசூல் வரும் என்று நம்பி எடுத்த பெரிய நடிகர்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் மண்ணைக் கவ்விக் கொள்ள, கதையும், அதை சொன்ன விதமும் பிடித்துப் போனதால் சிறு முதலீட்டு படங்கள் ஹிட்டாக, மேலும் பல புதிய, சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்கள் உருவாக்கிய வருடமிது. அது மட்டுமில்லாமல் சிறிய படங்களை வாங்க ஆளில்லை என்ற நிலை மாறி நான் நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு புதிய விநியோகஸ்தர்கள் வேறு உருவாகியிருப்பது ஒரு நல்ல மாற்றத்தை நோக்கி செல்லும் பாதையை காட்டியிருக்கிறது என்பது சந்தோஷமான விஷயமே. சுமார் 168க்கும் மேற்பட்ட படங்கள் வெளியானது இந்த வருடம். சென்ற வருடத்தை விட இது அதிகம்.

Dec 26, 2012

மக்களை ஏமாற்றும் தியேட்டர்கள் /மால்கள் -4

சரி மால்களில் மட்டும்தான் இம்மாதிரி கொள்ளைகள் என்று நினைத்தால் அது  தவறு. சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் உள்ள் ப்ரச்சனைகள் அதை விட அதிகம். அதில் முக்கியமானது டிக்கெட்டின் விலை. மல்ட்டிப்ளெக்ஸிலாவது பரவாயில்லை. அதிகபட்ச கட்டணமாய் 120 என்று அரசு நிர்ணையித்த விலையில் டிக்கெட் தருகிறார்கள். ஆனால் இந்த சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்கள் செய்யும் அட்டூழியம் சொல்லி மாளாது. சென்னையில் சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்களின் அதிகபட்ச அரசு நிர்ணைய விலை 50. குறைந்த பட்ச டிக்கெட் 10. ஆனால் சென்னையை சுற்றியுள்ள, ஜோதி, எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம், காசி, தாம்பரம் வித்யா என்று லிஸ்ட் எடுத்தால் எல்லா தியேட்டர்களிலும் குறைந்த பட்ச டிக்கெட் விலையே 90-120 என்று விற்கிறார்கள். இன்னும் சில தியேட்டர்களில் பெரிய நடிகர்கள் படமாய் அமைந்துவிட்டால் 200,300 என்று தான் முதல் மூன்று நாட்களுக்கு. இவர்களிடம் ஏன் இப்படி விற்கிறீர்கள் என்று கேட்டால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களிடமிருந்து அதிக விலை எம்.ஜி கொடுத்திருக்கிறோம் அதை வசூல் செய்ய வேறு வழி கிடையாது என்பார்கள்.

Dec 25, 2012

Sarocharu

 சில படங்களை மாஸ் ஹீரோக்கள் நடித்தால் நன்றாக ரீச் ஆயிருக்குமே என்ற எண்ணம் தோன்றும் சில படங்களை மாஸ் ஹீரோக்கள் நடித்ததால் கிடைக்க வேண்டிய வெற்றி கிடைக்காமல் போய்விடக்கூடிய வாய்ப்பு இருக்கும் சரோசாரு படம் ரெண்டாவது வகை

Dec 24, 2012

கொத்து பரோட்டா -24/12/12

தலைநகர் டெல்லி கற்பழிப்பு  நகரமாகிக் கொண்டிருக்கிறது. மருத்துவ கல்லூரி மாணவி துர்நிகழ்வுக்கு பிறகும் இரண்டு கற்பழிப்புகள் நடந்தேறியிருக்கிறது. ஏற்கனவே இம்மாதிரியான கற்பழிப்புகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் அரசுக்கு எதிராய் போர்கொடி தூக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு எந்தவிதமான உதவியும் செய்யவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். டெல்லி என்றில்லாமல் இந்தியாவெங்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சமீபத்தில் ஏழாம் வகுப்பு மாணவி புனிதாவை கற்பழித்து கொலை செய்திருக்கிறான் ஒரு 35 வயது வெறிபிடித்தவன். கடும் தண்டனை மட்டுமே இம்மாதிரியான கொடுமைகளை தடுக்கும். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Dec 22, 2012

சட்டம் ஒரு இருட்டறை

முப்பது வருஷத்துக்கு முன்னாடி எஸ்.ஏ.சி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்து வெளியான ஹிட் படம். விஜய்காந்துக்கு ஒரு மார்கெட்டை உருவாக்கிய படம்  இப்படி பல பெருமைகளை கொண்ட சட்டம் ஒரு இருட்டறை மீண்டும் அதே ஹிட்டை தந்திருக்கிறதா?

Dec 21, 2012

மக்களை ஏமாற்றும் தியேட்டர்கள்/மால்கள்-3

ஐநாக்ஸ் +கள்
சென்னையின் முக்கியமான மால்களில் ஒன்று ஐநாக்ஸ். மொத்தம் நான்கு ஸ்கிரீன்கள். டிஜிட்டல் ஒலி மற்றும் ஒளிபரப்பு என டெக்னிக்கலாய் எல்லா தரமும் உள்ள மல்ட்டிப்ளெக்ஸ்தான். சமீபத்திய 48HFR டெக்னாலஜி உட்பட எல்லா தரத்தையும் அப்கிரேட் செய்திருக்கிறார்கள். 3டி கண்ணாடிகளுக்கு அட்வான்ஸாய் 50 ரூபாய் வாங்கிக் கொண்டு, படம் பார்த்துவிட்டு கண்ணாடியை திரும்பக் கொடுத்தால் பணத்தை திரும்பக் கொடுக்கிறார்கள். 

Dec 20, 2012

மக்களை ஏமாற்றும் தியேட்டர்கள்/ மால்கள்-2

முந்தைய பதிவில் தேவி திரையரங்க வளாகம் செய்த தில்லாலங்கடியைப் பற்றி சொன்னேன் அல்லவா? இதோ இன்னொரு திரையரங்கம். சென்னையின் முதல் மால் என்ற பெருமையை சொல்லும் அரங்கம் இது. அபிராமி மால். இதன் கட்டமைப்பை பார்த்தவர்களுக்கு ஒன்றுமே புரியாது ஏனென்றால் ஏற்கனவே இருந்த தியேட்டருக்கு முன் இன்னொரு பில்டிங் கட்டி, பழைய தியேட்டர் கட்டிடத்தோடு இணைத்து ஒரு மாதிரி குழப்படியாய் ஒரு கட்டிடம் கட்டியிருப்பார்கள். 

Dec 19, 2012

மக்களை ஏமாற்றும் தியேட்டர்கள்/மால்கள்-1

தேவி திரையரங்கு வளாகம் புதுப்பிக்கப்பட்ட பிறகு டிக்கெட் விலையை 10,85,95 என்று மூன்று நிலைகளில் விற்று வந்தார்கள். மூன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருக்கும் வளாகத்தில் இம்மாதிரியான டிக்கெட் முறைதான் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாதங்களில் இவர்கள் 85 ரூபாய் டிக்கெட்டை எடுத்துவிட்டு, நேரடியாய் 10, மற்றும் 95 என்று ஆக்கினார்கள்.  மக்களும் முணுமுணுத்துக் கொண்டே டிக்கெட் வாங்கினார்கள். ஒரு காலத்தில் சென்னையில் அருமையான கலெக்‌ஷன் செண்டர் என்று சொன்னால் அது தேவி வளாகம் தான். ஏனென்றால் அங்கே தான் டிக்கெட் விலை 45 ரூபாய்க்கு மிகாமல் நல்ல ஏர்கண்டீஷனோடு, சிறப்பாக நடைப்பெற்றுக் கொண்டிருந்த அரங்கமாய் இருந்தது. 

Dec 18, 2012

சாப்பாட்டுக்கடை - மங்களாம்பிகா காபி பார்

கும்பகோணம் என்றதும் எல்லோருக்கும் டிகிரி காப்பி ஞாபகம் வரும். அதே போல அங்குள்ள குட்டி குட்டி மெஸ்கள் ஞாபகம் வராமல் போனால் ஆச்சர்யம்தான். என் ஞாபகத்தில் அங்கே மாமி மெஸ் என்றொரு மெஸ் இருந்தது. சென்ற முறை சாப்பிடப் போன போது சீக்கிரம் மூடிவிட்டார்கள். இம்முறை போனதும் அம்மெஸ்ஸை காணோம். என்ன ஆயிற்று என்று விசாரித்தால் மூடிவிட்டார்களாம்.  அதை கேள்விப் பட்டு அடடா என்று வருத்தப் பட்டுக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் அது போனா என்ன? இங்க  இன்னொரு மெஸ் மாதிரியான பழைய உணவகம் இருக்கு வாங்க.. என்று அழைத்துப் போனார். அது தான் இந்த மங்களாம்பிகா காபி பார். மசாலா க்ஃபே போல ஒரு உணவகம்.

Dec 17, 2012

கொத்து பரோட்டா -16/12/12

கேட்டால் கிடைக்கும்
இன்றைய தினத்தந்தி வெறும் பதினெட்டு பக்கத்தோடு வர, பக்கத்தை சரி பார்க்க மேலே பார்த்தால் இன்றைய விலை 900 காசுகள் என்று போட்டிருந்தது. வெறும் சினிமா விளம்பரம் பாக்க, தெனம் வாங்கிக் கொண்டிருக்கும் இந்த பத்திரிக்கைக்கு ஒன்பது ரூபாயா ஏன் என்று பார்த்த போது கேலண்டருடன் என்று போட்டிருக்க, செம கடுப்பாகி விட்டது. யார் கேட்டார்கள் இந்த கேலண்டரை. வாடிக்கையாளர் கேட்காமலேயே அவர்களுக்கு எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் திருட்டுத்தனமாய் விலையேற்றி விற்பது குற்றமல்லவா?. இதே முறையைத்தான் தினமலரும் செய்கிறது. ஊருக்குத்தான் உபதேசமெல்லாம் போல. தினசரிகளை தினமும் கடைகளில் போய் வாங்குகிறவர்களுக்கு விலை பார்த்து வாங்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் மாத கணக்கில் பேப்பர் போடுகிறவர்களை வைத்து பேப்பர் வாங்குபவர்களுக்கு அடுத்த மாத பில் வரும் போதுதான் தெரியும். இவர்களின் இந்த தில்லு முல்லு வேலை. அதற்குள் அந்த கேலண்டர் குப்பைக்கோ, அல்லது எங்கோ மாட்டப்பட்டுவிட, வேறு வழியில்லாமல் ஐந்து ரூபாய்தானே என்று கொடுத்துவிடுவார்கள். யோசித்துப் பாருங்கள். ஒரு லட்சம் பேப்பருக்கு காலண்டருடன் விற்றிருந்தால் ஐந்து லட்சம் ரூபாய்க்கு வாங்குபவர்களின் விருப்பம் இருக்கிறதோ இல்லையோ விற்றாகிவிட்டது. நாளை இதே டெக்னிக்கை வைத்து ஒரு ஷாம்பூ பாக்கெட் கொடுத்துவிட்டு, கூட ரெண்டு ரூபாய் போட்டு விட்டால் யாருக்கு தெரியப் போகிறது. இதை கேட்டே ஆக வேண்டும்  என்று முடிவெடுத்து எனக்கு பேப்பர் போடுகிறவரிடம் “இன்னைக்கு போட்டிருக்கிற கேலண்டரை நான் கட்டாயம் வாங்கித்தான் ஆகணுமா?” என்று கேட்டேன். அவர் கொஞ்சம் தயக்கத்துடன் “ ஆமா சார்.. விலையில போட்டிருக்கு இல்லை.. “ என்று இழுக்க, “அப்ப இன்னைக்கு எனக்கு தந்தி வேணாம்” என்றேன். சற்று யோசித்தவர்..”சரி சார்.. வேணாம்னா.. நான் கேலண்டரை திரும்ப வாங்கிட்டு பேப்பர் விலை மட்டும் போட்டுக்கிறேன்” என்றார். தயவு செய்து இம்மாதிரியான விஷயங்களை ஐந்து ரூபாய் தானே என்று யோசித்து விட்டு விடாமல் உடனே உங்கள் பேப்பர் போடுகிறவரை கூப்பிட்டு கேளுங்க. அல்லது தினத்தந்திக்கு போன் செய்யுங்கள். இது அநியாயக் கொள்ளை. உங்கள் பேப்பர் போடுகிறவருடன் விலை குறைக்க முடியாது என்றால் இன்றைய பேப்பர் தேவையில்லை என்று சொல்லிவிடுங்கள். ஒரே நாளில் இம்மாதிரி பல ஆயிரம் பேப்பர்கள் திரும்ப வரும் போது பேப்பர்காரனுக்கு புரியும். இல்லாவிட்டால் தினத்தந்தி அலுவலகத்திற்கே போன் செய்து உங்கள் கண்டனத்தை தெரிவிக்கவும் http://www.asklaila.com/listing/Chennai/Vepery/Daily+Thanthi/1uQwHcze/. சென்ற வாரம் நண்பர் ஒருவர் இதே போல தினமலர் பேப்பரிடம் பேசியிருக்கிறார். மூன்று பேப்பர்கள் வாங்கினால் மூன்று கேலண்டரையா வைத்துக் கொள்ள முடியும்? கேட்டால் கிடைக்கும்
@@@@@@@@@@@@@@@@@@@@

Dec 15, 2012

நீ தானே என் பொன்வசந்தம்.

 விண்ணைத்தாண்டி வருவாயாவிற்கு பிறகு கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். அதற்கு முக்கிய காரணம், இளையராஜாவின் இசை. பாடல்கள் வெளியாகி கிட்டத்தட்ட ரெண்டு மாதங்களுக்கு மேல் இருந்தாலும் இன்றும் இசை ரசிகர்களிடையே இப்பட பாடல்களைப் பற்றி சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Dec 14, 2012

கும்கி

புதிதாய் ஏதும் கதை பண்ண முடியாது. ஆனால் புதியதாய் ஒர் களம் பிடிக்கலாம். அதற்கு இன்ஸ்பிரஷனாய் பல விஷயங்கள் இருந்தாலும் அதை நமக்கு ஏற்றார்ப் போல சரியான திரைக்கதையாக்கும் வித்தை தெரிந்தால் போதும் மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும். அந்த வகையில் கும்கி தமிழ் சினிமாவிற்கு புதிய களன் என்றே சொல்ல வேண்டும். ஆனால் இன்ஸ்பிரேசன் எதுவாக இருக்கும் என்று கேட்டீர்கள் என்றால் ஆச்சர்யப்படுவீர்கள்.

முடியலை... அவ்வ்வ்வ்

”ஹலோ சாமி”

“சொல்லுங்கம்மா உங்க பேர் என்ன?”

“சுப்புலச்சுமிங்க. எங்க வீட்டுக்காரர் வெளி ஊர்ல வேலை செய்யுறாரு.. புது வேலைக்கு ட்ரை பண்ண கிடைக்க மாட்டேங்குது.”

“அவர் பேரு என்னம்மா?”

“ரவிங்க”

Dec 13, 2012

விஸ்வரூப செய்தியும் அதன் பின்னணியும்.

விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் ஒளிபரப்ப அனுமதித்தால், அந்தப் படத்தை ரிலீசாகும் அன்றே கேபிளில் 1. இலவசமாக ஒளிபரப்புவோம் என கேபிள் டிவி உரிமையாளர் சங்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு கேபிள் உரிமையாளர்கள் சங்க 2.மாநில தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சில தயாரிப்பாளர்கள் எதிர்மறை விளம்பரங்கள் மூலம் தங்ளுடைய திரைப்படங்களுக்கு பார்வையாளர்களை கவர முயற்சிக்கிறார்கள். அதில் கமலஹாசனின் ‘விஸ்வரூபம்' திரைப்படமும் ஒன்றாகி உள்ளது. 

Dec 12, 2012

அடுக்குகளிலிருந்து - செத்துப் பிழைச்சவண்டா

சீரியல்களில் சாவுக் காட்சிகளில் நடிப்பது என்பது ஒவ்வொரு நடிகனுக்கும் மிக மோசமான ஒரு அனுபவம் ஆகும். செத்துப் போவது போல நடிப்பதால் அல்ல. அதன் பிறகு அந்த சீரியலில் போட்டோவாக மட்டுமே நாம் பயன்படப் போகிறோம் என்பதை நினைக்கும் போதும், தினமும் விழும் சம்பள மீட்டர் வராது என்பதாலும் தான். ஆனால் சில சமயங்களில் டி.ஆர்.பி விழும் நேரத்தில் செத்துப் போனவர்களையெல்லாம் உயிர்ப்பித்து ப்ளாஷ்பேக்கில் எல்லாம் கதை போகக்கூடும், சீரியல் தயாரிப்பாளரும், திரைக்கதையாசிரியர் தயவினால். நான் இங்கே சொல்லப் போவது அவர்களைப் பற்றியல்ல. ஒரு சாவுக் காட்சியில் நடித்ததைப் பற்றி.

Dec 11, 2012

பார்க்கிங் லாட்டுகள் ஆகும் சென்னை தெருக்கள்

சென்னையில் இரு சக்கர வண்டிகளின் பெருக்கம் ஆரம்பித்த காலத்தில் திருவல்லிக்கேணி போன்ற மேன்ஷன் ஏரியாக்களில் இரவு நேரங்களில் பெரிய வண்டிகளோ, கார்களோ செல்ல முடியாது. ஏனென்றால் அங்கே தங்கியிருக்கும் பேச்சுலர்களின் இரு சக்கர வண்டிகள் தெருவெங்கும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இம்மாதிரியான ப்ரச்சனைகள் ஏதோ அங்கொன்று  இங்கொன்றுமாய்த்தான் இருந்தது. பின்பு சென்னையில் குடியேறியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க, இருக்கும் இடமெல்லாம் ரூமாய் கட்டி வாடகைக்கு விட்டதால் அம்மாதிரி வீடுகளில் குடியிருப்பவர்கள் எல்லோரும் இரவு நேரங்களில் தங்கள் வாகனங்களை தெருவில்தான் வைக்க வேண்டியிருக்க, இன்னும் இரவு நேர தெரு ஆக்கிரமிப்பு அதிகரித்தது.

Dec 10, 2012

கொத்து பரோட்டா - 10/12/12

நேற்று முன் தினம் காந்தி மக்கள் இயக்கம் நடத்திய பாரதி விழாவுக்கு அதன் அமைப்பாளர்கள் அழைத்திருந்தார்கள். கவியரங்கமும், பட்டிமன்றமும் நடந்தேறியது. சனி மாலையில் பாரதி விழாவிற்காக அரங்கு நிறைந்திருந்தது ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. கடைசியாய் தமிழருவி மணியன் பேசினார். இவரது பேச்சை முதல் முறையாய் கேட்கிறேன். நிஜமாகவே தடதடவென அருவி போல நடு மண்டையில் தடேலென்று விழுந்து பொறிகலங்க வைக்கும் பேச்சு. பேச்சின் நடுவே கூட்டத்தில் யாரோ சலசலவென பேச, அதே வேகத்தில் ”பேசறவங்க வெளிய போயிருங்க” என்று சொல்லிவிட்டு தடையில்லாமல் மீண்டும் பேச ஆரம்பித்தார். வந்தேமாதரம் என்போம் என்கிற பாடலுக்கு அவர் கொடுத்த விளக்கமும், அவரது பாடி லேங்குவேஜும் அட்டகாசம்.  மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பேச்சு.
@@@@@@@@@@@@@@@@@

Dec 9, 2012

விஸ்வரூபம் தமிழ் சினிமாவை அழித்துவிடுமா?

விஸ்வரூபம் படத்தை வெள்ளித்திரை வெளியீட்டிற்கு முன் டிடிஎச்சில் வெளியிடப்போவதாய் சொன்ன நேரத்திலிருந்து தமிழ் சினிமா உலகமே அல்லோல கல்லோலப் படுகிறது. இனி சினிமா அவ்வளவுதான். தியேட்டர்கள் முடங்கி விடும். தொழில் படுத்துவிடும் என்று ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிறைய தயாரிப்பாளர்கள் சின்ன படங்களுக்கு இனி வாழ்க்கையே இல்லை என்கிறார்கள். தியேட்டர் அதிபர்களோ இனி நாங்கள் தியேட்டர்களை மூடிவிட்டு போய்விட வேண்டியதுதான் என்று புலம்புகிறார்கள். இன்னொரு பக்கம் வெளிப்படையான அறிக்கை விடாவிட்டாலும் இதனால் வரும் லாபக் கணக்கை பல தயாரிப்பாளர்கள் போட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.

Dec 7, 2012

எஸ்.ராவின் பேருரையும் - புத்தக விற்பனையும்

கடந்த மூன்று நாட்களாய் எஸ்.ராவின் பேருரை நிகழ்ச்சிக்கு போய் வருகிறேன். நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன் தான் போக முடிகிறது. வேலைகள். இருந்தாலும் அங்கே ஆஜராவதில் ஒரு சின்ன சந்தோஷம் பல பழைய நண்பர்கள், வாசகர்கள், என்று பல பேரை சந்திப்பதால். பேருரை முதல் ரெண்டு நாளை விட எனக்கு நேற்று சத்யஜித்ரேவை பற்றியது பேசியது சுவாரஸ்யமாய் இருந்தது. ஒரு வேளை நம்மூர்காரராக இருப்பதால் இருக்குமோ? உட்கார இடமின்றி மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. அவர் கூறும் பல படங்களை நான் ஏற்கனவே பார்த்ததிருந்ததினால் கேட்ட விஷயத்தையே கேட்பது கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவாகவே இருக்கிறது. ஆனால் புதியதாய் கேள்விப்படுகிறவர்களுக்கு அப்படங்களை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை உண்டு பண்ணுகிறார்.  மனுஷர்  நின்ன வாக்கில் ரெஸ்டே இல்லாமல் ரெண்டு மணி நேரத்துக்கு மேல் பேசுகிறார். எதிர்காலத்தில் எஸ்.ரா ரெகமெண்ட் பண்ணிய படங்களையெல்லாம் பார்த்துவிட்டு, தமிழ் கூறும் நல்லுலகத்தில் வெளிவரும் நற்படங்களை ஆதரிப்பார்கள் என்று நம்புவோமாக.

Dec 6, 2012

Krishnam Vande Jagadgurum

 பாபு பிடெக் படித்துவிட்டு தாத்தாவின் நாடக ட்ருப்பில் நடித்து வருபவன். அவனது தாத்தா அந்தக்கால பிரபல நாடக கலைஞர். தன் பேரனை வைத்து தன்னுடய கடைசி நாடகமான “கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்” என்கிற நாடகத்தை நடத்த மிகவும் ஆசைப் படுகிறார். ஆனால் பாபுவுக்கோ யு.எஸ் போகத்தான் விருப்பம். நாடகத்தில் ஈடுபட்டு வறுமையில் வாட விருப்பமில்லை என்று சொல்லிவிட, அதை தாங்காத தாத்தா இறந்துவிடுகிறார். தன்னுடய அஸ்தியை துங்கபத்ரா கரையில்தான் கரைக்க வேண்டும் என்ற அவருடய கடைசி ஆசையினால் அவருடய அஸ்தியை கரைப்பது மட்டுமில்லாமல், அவருடய நாடகத்தை அங்கேயே அரங்கேற்றுவது என்று முடிவு செய்து கிளம்புகிறான் பாபு. பெல்லாரியில் சுரங்க தொழிலில் மிகப் பெரிய மாபியாவாக வலம் வரும் ரெட்டப்பாவின் கோட்டையில் உள்ளவர்களுடன் சிறு உரசல் ஏற்படுகிறது. ரெட்டப்பாவின் சுரங்க மாபியாவை துகிலுரித்துக் காட்ட தில்லாக வரும் டிவி சேனல் ரிப்போர்ட்டராக தேவிகா வர, பாபுவுக்கும் தேவிகாவுக்கும் வழக்கம் போல காதல். ரெட்டப்பாவிற்கும் கர்நாடக சக்ரவர்த்தி என்பவனுக்கும் உள்ளூரிலேயே பிரச்சனை. இதன் நடுவில் பாபுவின் ஒரிஜினல் பிறப்புப் பற்றி அவனுக்கு தெரிய வர, அதில் சக்ரவர்த்தியினால் தன் குடும்பம் பிரிந்தது என்று தெரிய வருகிறது. ஒரு பக்கம் சகரவர்த்தியை பழிவாங்க, இன்னொரு பக்கம் ரெட்டப்பாவின் கோபத்தை எதிர்கொள்வதுமாய் போராடி எப்படி வெற்றி கொள்கிறான் என்பதுதான் கதை.

Dec 4, 2012

Talaash

அமீர்கானின் படம் பார்த்து நாளாகிவிட்டது. கடைசியாய் டோபிகாட் பார்த்த ஞாபகம். போலீஸ் கெட்டப்பில் மிகவும் ஸ்மார்ட்டாக, மீசையெல்லாம் வைத்துக் கொண்டு இருந்த போஸ்டரைப் பார்த்ததும் ஒரு அதிரடியான ஆக்‌ஷனை எதிர்பார்த்து படம் பார்க்க போனீர்களானால் நிச்சயம் ஏமாந்து போவீர்கள்.

Dec 3, 2012

கொத்து பரோட்டா - 03/12/12

சென்னை மாநகராட்சிக்கு 1900 கோடியை தமிழக முதலமைச்சர், இதயதெய்வம், புரட்சித் தலைவி, அம்மா அவர்கள் ஒரே ஆண்டில் ஒதுக்கியிருப்பதாகவும், இதே சென்ற ஆட்சியில் 1500 கோடி ஐந்து ஆண்டுகளுக்கு ஒதுக்கியதாய் மேயர் அவர்கள் பெருமையாய் அறிக்கை விட்டிருக்கிறார். சென்னையில் உள்ள பல தெருக்களில் குப்பை மலையாய் தேங்கிக் கிடக்கிறது. மழைக்கு முன் போட்ட சாலைகள் அனைத்தும் ஒரே மழையில் மீண்டும் பள்ளதாக்குகளாய் மாறி போய் விட்டது. ஐந்து வருஷத்துக்கு 1500 கோடி செலவு செய்த சென்ற அரசில் இவ்வளவு மோசமில்லை. ஆனால் ஒரே ஆண்டில்1900 கோடி செலவுக்கு  கொடுத்தும் நாறுவது ஏன்? என்று யாராவது அறிக்கை விட்டால் நல்லாருக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@

Dec 1, 2012

நீர்ப்பறவை

60 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி, தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் -கேபிள் சங்கர்
தென்மேற்கு பருவக் காற்று படத்தின் மூலம் தேசியவிருதை தட்டி வந்த இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படம்.  அதே தயாரிப்பாளருக்கு படம் ஆரம்பிக்க இருந்து பின்பு உதயநிதிஸ்டாலினின் தயாரிப்பில் இப்போது வெளி வந்திருக்கிறது. 

Nov 30, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.

60 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் -கேபிள் சங்கர்


விஜய் சேதுபதிக்கு அடுத்த நாள் திருமணம். அதுவும் காதல் திருமணம். தன் நண்பர்களை பார்க்க சேது அவர்களது வருகிறார். பேசிக் கொண்டிருந்தவர்கள், வா ஒரு ஆட்டம் கிரிக்கெட் ஆடுவோம் என்று ஆட, ஆட்டத்தின் நடுவில் கேட்ச் பிடிக்கப் போய் மல்லாக்க விழுகிறார் சேது. அதன் பிறகு அவருக்கு ஸ்டாப் பளாக் போல கிட்டத்தட்ட ஒரு வருடம் நடந்த சம்பவங்கள் மறந்து போய்விடுகிறது. அவரின் காதல், நாளைய திருமணம் என்று எல்லாமே. இந்த பிரச்சனையை சமாளித்து எப்படி அவரது நண்பர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். எப்படி?

Nov 29, 2012

Dhamarukam

 
அருந்ததியில் ஆரம்பித்து மகதீராவில் சூடுபிடித்து இப்போது தமருகமில் வந்து நின்றிருக்கிறது. மாய மந்திரம், சாமி, பூஜை, பக்தி, போன ஜென்மம், கெட்ட சக்திகள், நல்ல சக்திகள் இவைகளுக்குள் நடக்கும் போராட்டம் போன்ற கதையம்சம் உள்ள படங்களின் வெற்றி கொடுத்த தைரியம். அந்த தைரியத்தில் தான் இந்த தமருகம்.

Nov 28, 2012

தமிழ் சினிமா இந்த மாதம் - செப்டம்பர் 2012

சென்ற மாதம் வரை இந்த வருடம் ரிலீஸான பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் ஊத்தி மூடிக் கொள்ள, அட்லீஸ்ட் இந்த மாதம் வரும் பெரிய பட்ஜெட் படமான தாண்டவமாவது முறியடிக்குமா? என்ற கேள்வியோடு ஆரம்பித்தது செப்டம்பர் மாதம்.

Nov 26, 2012

கொத்து பரோட்டா - 26/11/12

அரசே டி.டி.எச் தரப்போவதாய் ஒரு புரளி கிளம்பியிருக்கிறது. அது வேறொன்றுமில்லை. சல்லீசான விலையில் கேபிள் டிவி இணைப்பு தருவதாக ஆரம்பிக்கப்பட்ட அரசு கேபிள் டிவியில் ஒவ்வொரு ஆப்பரேட்டர்களிடமும் இருபது ரூபாய் இணைப்புக் கட்டணமாய் வசூலிக்கிறார்கள். அவர்கள் கொடுத்த கணக்கின் படி சுமார் அறுபது லட்சம் இணைப்புகள் மட்டுமே இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. ஆனால் உணமையில் அதிகம் இருக்கும் என்ற பட்சத்தில் ஒவ்வொரு வீடாக சென்று கணக்கெடுக்க முடியாது என்பதற்காக ரேஷன் கார்டுகளை வைத்து கணக்கெடுப்பதற்காக அங்கே ஒரு பாரமை கொடுத்து பில்லப் செய்யச் சொல்வதாய் தகவல்.விலையில்லாமல் எதுவும் கிடைக்காது என்பதை  தெரிவிப்பதற்காகவே இந்த அறிவிப்பு.
@@@@@@@@@@@@@@@

Nov 24, 2012

Life Of Pi

60 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் -கேபிள் சங்கர்
Ang Lee. இவரைப் பற்றி தெரியாதவர்கள கூட இவரது படங்களைப் பற்றித் தெரியும். Sense And Sensibility, The Crouching tiger Hidden dragon, Brokeback Mountain, The Hulk, Lust Caution என்று வரிசையாய் விமர்சகர்களின் பாராட்டும், கமர்ஷியல் வெற்றியும் கலந்த பல படங்களின் சொந்தக்காரர். இந்த படத்தின் ட்ரைலைரைப் பார்த்ததுமே படம் பார்த்தாக வேண்டும் என்று சங்கல்பமே எடுக்கும் அளவிற்கு இம்ப்ரசிவ். இதே தலைப்பில் Yann Martel எழுதிய  நாவலை அடிப்படையாய் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த நாவலுக்காக 2002ல் மேன் ஆப் புக்கர் பரிசு பெற்றார்.

Nov 21, 2012

சாப்பாட்டுக்கடை - சார்மினார்

60 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் -கேபிள் சங்கர்
ஹைதராபாத் என்றதும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நினைவு வரும் ஆனால் எனக்கு பிரியாணிதான் நினைவுக்கு வரும். பாவர்சி, பாரடைஸ் பிரியாணி, செகந்தராபாத் ஸ்டேஷனின் வாசலில் இருக்கும் ஒரு  பிரியாணி என்று தேடித் தேடி சாப்பிடுவேன். என்னதான் சென்னை முழுவதும் ஹைதராபாத் பிரியாணி என்று போர்டு வைத்து கூவிக் கூவி அழைத்தாலும் ஒரிஜினல் ஹைதராபாத் பிரியாணியை யாரும் கொடுப்பதில்லை. பெரும்பாலும் வழக்கமான பாஸ்மதி பிரியாணியையே தருகிறார்கள். ஹைதை பிரியாணியில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேட்டீர்கள் என்றால்  அதை சொல்லும் போதே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.

Nov 20, 2012

கருத்து சொல்லலாமா? வேண்டாமா?

நேற்று ஃபேஸ்புக்கில் மும்பை கடையடைப்புக்கான காரணம் மரியாதையில்லை பயத்தினால் என்று விமர்சித்த பெண்ணையும், அதற்கு லைக் போட்ட பெண்ணையும் மும்பை போலீஸ் கைது செய்திருக்கிறது. இருவரும் இருபது வயதுக்குட்பட்டவர்கள். இம்மாதிரியான கதவடைப்புகளினால் எரிச்சலானவர்கள். இந்தக் கடையடைப்பைப் பற்றி ஊரில் உள்ள யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள் இவர்கள் சொன்னதைத்தான் சொல்வார்கள். அது தான் உண்மையும் கூட.ஆனால் வெளியில் சொல்ல பயம். அந்த பயம் இன்றைய இளைஞர்களிடம் இல்லை.

Nov 19, 2012

கொத்து பரோட்டா - 19/11/12

கேபிளின் கதை புத்தக வெளியிடு சிறப்பாக நடந்தேறியது. புத்தகத்தைப் படித்துவிட்டு யுடிவி தனஞ்செயன் அவர்கள் ஒரு சினிமா ஸ்கிரிப்டைப் போல இருக்கிறது என்று பாராட்டினார். வெளியிட்ட ஏக்நாத் அவர்கள் புத்த்கத்தைப் பாராட்டிவிட்டு, அவரைப் பற்றி விட்டுப் போன தகவல்களை பட்டியலிட்டார். நிஜமாகவே வருத்தமாக இருந்தது. எழுதிய காலத்தில் அவரை தொடர்பு கொள்ள விழைந்த போது எனக்கு அவருடய தொடர்பு கிடைக்கவில்லை. இருநதாலும் நேற்றைய  நிகழ்வில் அவரைப் பற்றி நிறையவே தெரிந்து கொண்டேன். குட்டிப் புக் போடும் அளவிற்கு அவ்வளவு விஷயங்களை செய்திருக்கிறார். கேபிளின் கதையில் அவரது எபிசோட் கேபிள் தொழிலில் அவர் நுழைய விழைந்ததிலிருந்து ஆரம்பித்திருக்கிறேன். அவரின் சாதனைகளில் பல வீடியோ புரட்சி நாட்கள். அது கேபிளின் வரவுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு. நிச்சயம் அடுத்தப் பதிப்பில் அவரைப் பற்றிய தகவல்களை எழுதிவிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.  சிறப்புரை ஆற்றிய ஈ.கோ தயாரிப்பாளர் பெரியசாமி ரவிச்சந்திரனின் வெள்ளந்தியான பேச்சு பல பேரை கவர்ந்தது. வ்ந்திருந்து வாழ்த்திய பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். கேபிளின் கதை புத்தகத்தைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவுகளிலோ, அல்லது மின்னல் செய்தாலோ தன்யநாவேன்.
@@@@@@@@@@@@@@@@@

Nov 17, 2012

கேபிளின் கதை புத்தக வெளியீடு -அனைவரும் வருக

நாகரத்னா பதிப்பகத்தின் மூலமான் என்னுடய ஏழாவது புத்தகமான “கேபிளின் கதை” இன்று வெளியாகிறது. 2010 பிப்ரவரி 14ஆம் தேதி என்னுடய முதல் புத்தகதகமான “லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும்” வெளியானது. அதன் பிறகு இந்த இரண்டு வருடங்களில், சினிமா வியாபாரம், மீண்டும் ஒரு காதல் கதை, கொத்து பரோட்டா, தெர்மக்கோல் தேவதைகள், சினிமா என் சினிமா அகிய புத்தகங்கள் வெளியாகி,  ஏழாவதாக இப்புத்தகம் வெளியாவது மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது. அந்த சந்தோஷ விழாவில் உங்களையெல்லாம் சந்திக்க ஆவலாய் உள்ளேன். 


 உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்கும் உங்கள் - கேபிள் சங்கர்

Nov 16, 2012

போடா.. போடி.

 
சிம்புவின் படமென்றால், அதுவும் புது இயக்குனர் படமென்றால் அது சாதாரணமாய் வெளிவராது என்கிற ஐதீகத்தை இந்தப் படமும் நிருபித்திருக்கிறது. மூன்று வருடங்களுக்கு மேலாக தயாரிப்பில் இருந்து தயாரிப்பாளர் நொந்து நூலாகிப் போய் படத்தை வெளியிட்டால் போதுமென கொண்டு வந்திருப்பது தெரிகிறது.

Nov 15, 2012

Jab Tak Hai Jaan

காதல் கதைகளுக்கு புகழ் பெற்ற யாஷ்சோப்ரா, மொழு மொழு அழகி காத்ரீனா, துள்ளும் இளமை அனுஷ்கா, இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக், உலக சூப்பர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இதைவிட எதிர்பார்ப்பை எகிற வைக்க வேற என்ன காம்பினேஷன் வேண்டும்? இவ்வளவு பேரும் சேர்ந்து கொடுத்திருந்த ஹைஃப் எப்படி என்றால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை.

Nov 13, 2012

துப்பாக்கி


முதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது  உடைத்து வெற்றியடையாதா? என்ற கேள்விக்கு இந்த துப்பாக்கி பதில் சொல்லியிருக்கிறது. 

Nov 12, 2012

கொத்து பரோட்டா 12/11/12

வாசகர்கள்.. பதிவர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள் -கேபிள் சங்கர்
நான்கைந்து படங்கள் வந்து போட்டிப் போடும் பண்டிகை நாட்களை மீண்டும் கொண்டு வந்திருக்கிறது இந்த தீபாவளி. இந்த ஆண்டு தீபாவளிக்கு துப்பாக்கி, போடா போடி, அம்மாவின் கைபேசி, காசிகுப்பம் ஆகிய நான்கு படங்கள் ரேஸில் இருப்பது ரசிகர்களுக்கு படம் பார்க்கும் ஆப்ஷனை அதிகப்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.  பெரிய படங்களுடன் சிறிய முதலீட்டு படங்களை வெளியிட்டால் கவனம் பெறாமல் போய்விடக்கூடிய வாய்ப்புண்டு என்பதாலும், அவர்களுடய படங்களுக்கு தியேட்டர் கிடைக்காமல் இருக்க வாய்ப்புண்டு என்பதாலும், சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் ஆட்டத்திற்கு வர மாட்டார்கள். ஆனால் இம்முறை சிறு முதலீட்டுப் படமான அம்மாவின் கைபேசி, காசிகுப்பம் போன்ற படங்கள் வருவது ஒரு விதத்தில் இந்த பெரிய பட மொனோபாலியை உடைக்கும் முயற்சியாகவே படுகிறது. நிறைய சமயங்களில் பெரிய படங்களோடு வெளியான சிறு முதலீட்டு படங்கள் வெற்றி பெற்ற கதைகளும் உண்டு. பார்ப்போம் இந்த வருடம் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்களின் வெற்றி கேள்விக்குறிதான் என்று அடியேன் சொன்னதை இந்த துப்பாக்கியாவது தகர்க்குமா? 
@@@@@@@@@@@@@@@@@@@

Nov 10, 2012

Stolen

 நான்கு நண்பர்கள் சேர்ந்து பேங்குகளை கொள்ளையடிக்கும் கூட்டம். ஒரு கொள்ளையின் போது போலீஸ் சுற்றுப் போட்டுவிட,  பணத்துடன் மாட்டினால் தண்டனை அதிகம் என்பதால் அதை எரித்து விடுகிறார் நிக்கோலஸ் கேஜ். எட்டு வருட தண்டனைப் பெற்றுவிட்டு திரும்பும் போது எப்.பி.ஐ அவரின் பின்னே தொடர்கிறது. நிச்சயம் ஐம்பது கோடி பணத்தை அவன் எங்கோ மறைத்து வைத்திருக்கிறான் என்று. கேஜுக்கு தன் பெண்ணின் மேல் அதீத பாசம். அவளை பார்க்க, செல்கிறான். பெண் முகம் கொடுத்து பேசமாட்டேன் என்கிறாள். கேஜுன் நண்பர்களில் ஒருவன் இறந்துவிட்டதாக சொல்லப்பட, அப்படி சொல்லபப்ட்ட நண்பன் கேஜுன் பெண்ணை தன் டாக்சியில் கடத்துகிறான். எப்.பி.ஐ நினைப்பது போல கேஜ் பணத்தை ஒளித்து வைத்திருக்கிறான் என்று அவனும் நினைக்கிறான். 12 மணி நேரத்துக்குள், பத்து மில்லியன் பணத்தை கொடுக்காவிட்டால் கேஜின் பெண்ணை கொன்றுவிடுவேன் என்று சொல்கிறான். வேறு வழியேயில்லாமல் இல்லாத பணத்தை கொடுப்பதாய் சொல்லி எப்படி தன் பெண்ணை மீட்கிறார் என்பதுதான் கதை.

Nov 9, 2012

ARGO

கலகக்காரர்களுக்கு பயந்து தப்பி, வேறொரு நாட்டின் தூதரகத்தில் மறைந்து கொண்டிருக்கும் ஆறு பேரை அமெரிக்காவின் சி.ஐ.ஏவின் உதவியுடன் அங்கிருந்து தப்புவிப்பதுதான் கதை. மிகச் சாதாரணமான மசாலா படக்கதை என்று தோன்றும் ஆனால் இது ஒரு உண்மை சம்பவம் என்றவுடன் அட என்று எழுந்து உட்கார வைக்கிறது.

Nov 7, 2012

சாப்பாட்டுக்கடை- பூர்ணா உணவகம்.

சமயங்களில் பெரிய ஓட்டல்களில் கிடைக்கும் உண்வுகளை விட சின்னச் சின்ன கடைகளில், மெஸ்களில் சாப்பாடு அட்டகாசமாய் இருக்கும். அப்படி ஒரு சின்னக் கடைத்தான் இந்த பூர்ணா உணவகம்.


சென்னை கோடம்பாக்கம் ராம் தியேட்டருக்கு எதிரில் உள்ள கங்கையம்மன் கோவில் தெருவில், கங்கையம்மன் கோவிலை தாண்டிய பிறகு, வலது பக்கம் பார்த்தல் ஒரு பேக்கரி, அதற்கடுத்து ஒரு உணவகம் இருக்கும் அதுதான் பூர்ணா உணவகம், மற்றும் பேக்கரி.

Nov 6, 2012

Luv Shuv Tey Chicken Kurana


ஓமி பத்து வருடங்களுக்கு பிறகு லண்டனிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியிருக்கிறவன். வீட்டில் உள்ள அனைவருக்கும் இவனது வருகை சந்தோஷத்தைக் கொடுக்க, அவனுடய மாமாவுக்கு மட்டும் கோபம். சொல்லாமல் கொள்ளாமல் போனதால். குடும்பமே ஓமி லண்டனில் பெரிய அளவில் வக்கிலாய் ப்ராக்டீஸ் செய்து சம்பாதித்து வைத்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  நிஜத்தில் ஓமி லண்டனில் நம்மூர் லோக்கல் தாதாவிடம் கடன் பட்டு அதை அடைக்க, தாய்நாடு திரும்பி சொத்தை விற்று அடைக்கலாம் என்ற ப்ளானில் வர, ஆனால் இங்கே ப்ரச்சனை தாண்டவமாடுகிறது. குடும்ப பிஸினெஸான தாபா தள்ளாடிப் போய் கிடக்கிறது. அதற்கு காரணம் தாபாவின் ஸ்பெஷாலிட்டி அயிட்டமான சிக்கன் குரானா. அதை செய்யும் ரெஸிபி தெரிந்த தாத்தாவுக்கு மெமரி லாஸ் ஆகி மரமாய் உட்கார்ந்திருக்க, என்ன செய்வது என்று தெரியாமல் குடும்பமே முழித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம், கடன்காரன்கள் துரத்தல், இன்னொரு பக்கம் தாத்தாவிடமிருந்து ரெஸிப்பி வாங்கிவிடலாம் என்ற முயற்சியின் போது தாத்தாவும் செத்துப் போய்விட சிக்கன் குரானா ரெஸிபியை கண்டு பிடித்தானா? ரெசிப்பிக்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்க தயாராக இருக்கும் போட்டிக் கடைக்காரனிடம் விற்றானா? அண்ணன் முறையில் இருப்பவனுக்கு பார்த்து நிச்சயம் செய்திருந்த சைல்ட்வுட் பெண்ணிடமான காதல் ஜெயித்ததா? என்பதை தியேட்டரில் போய் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Nov 5, 2012

கொத்து பரோட்டா 05/11/12

சரவணக்குமாரையும், ராஜன்லீக்ஸையும் பெயிலில் எடுத்திருக்கிறார்கள். இதன் நடுவில் கார்த்திக் சிதம்பரம் வேறு தன்னைப் பற்றி அவதூறு சொன்னார் என்று ஹசாரே ஆதரவாளர் ஒருவர் மீது புகார் கொடுத்து, அவரை கைது செய்து பெயில் கொடுத்திருக்கிறார். உடனே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஃபேஸ்புக்கில் நண்பர் ஒருவர் தலித்துகளைப் பற்றி தவறான கருத்து எழுதியதாய் அவர் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால் இணையத்தில் எல்லாராலும் கலாய்க்கப்பட்ட, ஓட்டப்பட்ட, சாம் ஆண்டர்சன், பவர் ஸ்டாரெல்லாம் கூட மன உளைச்சல் கொடுத்தார்கள் என்று கேஸ் கொடுப்பார்கள் போல. கருத்து என்ற இணையதளத்தை ஆரம்பித்து நடத்திய கார்த்திக் சிதம்பரம் போன்றவர்கள் பொது வெளியில் மக்களின் கருத்துக்களை ஏற்கும் சகிப்புத்தன்மை கூட இல்லாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் திரைவிமர்சனம் எழுதியவர்கள் மீது இப்படத்தின் விமர்சனத்தில் திட்டியதால் மன உளைச்சல் ஆனேன் என்று தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் எல்லாம் கேஸ் போட்டால் என் நிலைமை என்ன ஆவது? ரூல்ஸை மாத்துங்கப்பா...
@@@@@@@@@@@@@@@@@@@@@

Nov 3, 2012

Denikaina Ready

எதுக்கும் தயார் என்கிற அர்த்தம் வரும் டைட்டிலில் விஷ்ணுவின் நடிப்பில், அவருடய அப்பா மோகன்பாபுவின் தயாரிப்பில் வந்திருக்கும் படம்.  படம் ஆவரேஜ் ஹிட் என்கிறார்கள் தெலுங்கு மார்க்கெட்டில் அந்த நம்பிக்கையில் பார்க்கப் போனால் நாமும் எதற்கும் தயார் நிலையில் பார்த்த படம். 

Nov 2, 2012

Skyfall


ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளிவந்து 50வது ஆண்டு  கொண்டாட்டத்தோடு வெளி வந்திருக்கும் புதிய படம் இந்த ஸ்கைஃபால். பாண்ட் படங்கள் என்றாலே மாசிவ் ஓப்பனிங் காட்சியும் சில்வுட்டில் பறக்கும் சில்வண்டுகளின் நடனத்தோடு வரும் பாடல் டைட்டில் காட்சியும் அத்தனை பிரசித்தம். ஆனால் சமீப காலங்களில் பாண்ட் படங்களை விட சுவாரஸ்யமான சேஸிங் சண்டைக் காட்சிகள் எல்லாம் வரத் தொடங்கிவிட்ட பிறகு இவர்கள் மண்டையை உடைத்துக் கொண்டு ஓப்பனிங் சீன் அமைக்க வேண்டியதாகிவிட்ட நிலையில் சும்மா ஜிவ்வென அட்ரிலின் பம்ப் செய்யும்படியான சேஸிங்கோடு படம் ஆரம்பித்தது.

Nov 1, 2012

கேபிள் டிவி டிஜிட்டல் மயமாக்கல் தள்ளிவைப்பு பின்னணி என்ன?

நியாயமாய் இன்று முதல் சென்னையின் எல்லா டீவிக்களிலும் அனலாக் சிக்னல் கட்டாகியிருக்க வேண்டும். ஆனால் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் ஹைகோர்ட்டில் கேஸ் போட்டு வருகிற 5 ஆம் தேதி வரை தடையுத்தரவு வாங்கியிருக்கிறார்கள். அனலாக் சிக்னல்களை கட் செய்து முழுவதும் டிஜிட்டல் மயமாக்கும் மத்திய அரசின் ட்ராயின் சட்ட அமலாக்கத்தை தடுப்பது ஏன்? என்று கேட்டால் அதற்கு முக்கிய காரணம் செட்டாப் பாக்ஸ்கள் ஆப்பரேட்டரிடமோ, எம்.எஸ்.ஓவிடமோ இல்லாமையும், இத்தொழிலில் சென்னையில் மட்டும் நிலவும் குழப்பமும்தான்.

Oct 31, 2012

Student Of The Year


 கரண் ஜோஹரின் புதிய படம். முற்றிலும் புதுமுகங்களை வைத்து இம்முறை அவுட்டிங் அடித்திருக்கிறார். அழகான ஹைஃப் பை பள்ளி, மினி ஸ்கர்ட் மாணவிகள். உடல் பிடிக்கும் டீ ஷர்ட் அணிந்து நினைத்த மாத்திரத்தில் ராம்ப் வாக் நடக்க தயாராக இருப்பது போன்ற சிக்ஸ் பேக் ஆணழகன்கள், என்று எல்லா க்ளிஷேக்களோடு ஒரு படம்.

Oct 29, 2012

கொத்து பரோட்டா - 29/10/12

புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு  முன் அந்த கட்டிடங்களுக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்ய என்ன வசதிகள் செய்திருக்கிறார்கள் என்பதை பற்றி நமது மாநகராட்சி கவலைப் படுகிறதா இல்லையா? என்றே தெரியவில்லை. முக்கியமாய் திநகர் போன்ற ஏரியாக்களில் இருக்கும் டிராபிக், மற்றும் பார்க்கிங் ப்ரச்சனைகளை சொல்லி மாளாது. சரி ஒரு காலத்தில் கட்டிங் வாங்கிக் கொண்டு ஏழு மாடி எட்டு மாடியெல்லாம் கட்ட இடம் கொடுத்துவிட்டார்கள்.  ஆனால் பார்க்கிங் பிரச்சனைகள் தலைவிரித்தாடும் காலத்தில் சென்னையில் அதுவும் ஜி.என்.செட்டி சாலையில் வாணிமஹாலுக்கு அருகில் புதியதாய் திறக்கப்பட்டிருக்கும் போத்தீஸின் பன்னிரெண்டு மாடி பொத்தீக்குக்கு பார்க்கிங் பிரிட்ஜுக்கு கீழேயும், இடது பக்க ராமகிருஷ்ணா ஸ்கூல் க்ரவுண்டை சுற்றியுள்ள இடங்களில் மட்டுமே.. ஏதோ ஒரு சின்ன பார்க்கிங் இடத்தை மட்டும் பேருக்கு வைத்துவிட்டு, ரோட்டில்தான் பார்க் செய்ய விடுகிறார்கள். அடித்தளத்தைக் கூட இவர்களின் கடை வியாபாரத்துக்குத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். அரசு இதை உடனடியாய் கவனத்தில் கொண்டு செயல் பட வேண்டும். இல்லையேம் தி.நகர் என்றில்லாமல் இனி எல்லா இடங்களிலும் சாலையிதான் பார்க்கிங் என்றால் எத்தனை ஓவர் பிர்ட்ஜுகள், சப்வேக்கள் கட்டினாலும் ட்ராபிக் ஜாம் ஓயாது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@

Oct 27, 2012

வவ்வால் பசங்க

அரசு, கம்பீரம் போன்ற படங்களை இயக்கிய சுரேஷின் இயக்கத்தில் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். பாவம் மனிதர் அந்த காலத்திலேர்ந்து வெளியே வரவேயில்லை போலிருக்கிறது.

Oct 26, 2012

ஆரோகணம்.


சமீப காலமாய் சின்ன படங்களில் எல்லாம் ஆரோக்யமான விஷயங்களை விவாதிக்க தொடங்கியிருக்கும் காலமிது. வியாதிகள் எல்லாம் தமிழ் சினிமாவில் சிம்பதி கிரியேட் செய்ய மட்டுமே பயன்படுத்த உபயோகிக்கப்படும் காலங்களில் அதை பாஸிட்டிவாக எப்படி அப்ரோச் செய்வது என்று சொல்லியிருக்கும் படம் இந்த ஆரோகணம்.

Oct 23, 2012

Taken 2

Taken லீயாம் நீசனின் நடிப்பில் வெளியான படம். முதலில் அமெரிக்காவில் டிவிடி வெளியீடாக வந்தது. பின்பு திரையரங்குகளில் வெளியாகி இதெல்லாம் ஒரு படமா? என்று மீடியாவால் கிண்டலடிக்கப்பட்டிருந்தாலும், கலெக்‌ஷனில் சூப்பர் ஹிட். அந்த முதல் பாகத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என்று ஆளாளுக்கு தம் தம் பங்குக்கு சுட்டு உபயோகப்படுத்திக் கொள்ள, தமிழில் ஆண்மைதவறேலில் க்ளைமாக்ஸிலும், தலைவர் கருப்பு எம்.ஜிஆர் விஜயகாந்த் தன் கடைசி படமான விருதகிரியில் முழுவதுமாய் எடுத்து தள்ளி வெற்றி வாகை சூடியதற்கான காரணப் படம் இந்த டேக்கன்.

Oct 22, 2012

கொத்து பரோட்டா 22/10/12

கேட்டால் கிடைக்கும்
வாகனங்கள் வெளியீடும் நச்சுப் புகை நம் சுற்றுப் புற சூழலை எப்படியெல்லாம் மாசுபடுத்துகிறது என்று கவலைப் பட்டு, மீண்டும் சைக்கிளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது சைக்கிள் எடுத்துச் சென்றதால் கிட்டத்தட்ட அடிவாங்கி அவமானப்பட்டிருக்கிறார் நண்பர் ஒருவர். ஐடி துறையில் பணி புரியும் நண்பர் அரவிந்துக்கு எப்போது அருகில் உள்ள இடங்களுக்கு சைக்கிளைத்தான் பயன்படுத்துவார். நேற்று முன் தினம் “பீட்சா” படம் பார்க்க ஃபேம் தியேட்டரில் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்துவிட்டு சைக்கிளில் சென்றிருக்கிறார். ஃபேம் மால் வளாகத்தில் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. காரணம் சைக்கிள் பார்க் செய்ய அனுமதி கிடையாது என்பதால். இவர் ஏன் சைக்கிளை பார்க் செய்யக்கூடாது? வேண்டுமானால் பைக்குக்கு என்ன பணம் வாங்குகிறீர்களோ அதே தொகையை நான் தருகிறேன், படம் பார்க்க டிக்கெட் எடுத்துவிட்டிருக்கிறேன் நான் எப்படி சைக்கிளை வெளியே வைத்து விட்டு போவது என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த செக்யூரிட்டி “மாசம் எட்டாயிரம் சம்பளம் வாங்குறேன். உன் சைக்கிளை உள்ளே விட்டா என் வேலை போயிரும் நீ கொடுப்பியா?” என்று கேட்டிருக்கிறார். இதற்குள் அங்கே மூன்று குண்டர்கள் நிஜமாகவே குண்டர்கள் தான். அங்கே வந்து அவரது சைக்கிளை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டு, ஆபாசமாய் பேசி அடித்திருக்கிறார்கள். மூவரும் இங்கே வைக்க முடியாது. முடிஞ்சா எங்கே வேண்டுமானாலும் கம்ப்ளெயிண்ட் பண்ணிக்கோ.. என்று அலட்சிய பதிலும் கிடைத்திருக்க, அவமானப்பட்ட நண்பர் வேறு வழியில்லாமல் வேடிக்கைப் பார்த்த எவரும் அவருக்கு உதவிக்கு வராததால் சைக்கிளை வெளியே வைத்துவிட்டு படம் பார்க்கும் போது சைக்கிளுக்கு என்ன ஆயிருக்குமோ? என்று பதைப்பிலேயே பார்த்திவிட்டு வந்திருக்கிறார். 


Oct 19, 2012

பீட்சா

தமிழ் சினிமாவில் கார்பரேட் கம்பெனிகள் செய்ய முனையாத முயற்சிகளையெல்லாம் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் தான் செய்வார்கள். ஆனால் சமீப காலமாய் அம்மாதிரியான சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்களூம், வழக்கமான கதைகளையே எடுத்துக் கொண்டிருக்க, இப்படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் அட்டகத்தி போன்ற வித்யாச படத்தை எடுத்து வெற்றி பெற, இதோ அவரது அடுத்த வித்யாச படைப்பு.

Cameraman Gangatho Rambabu

கப்பர்சிங்கின் சூப்பர்ஹிட்டும், இந்தப் படத்தின் பெயர், பவன் கல்யாண், பூரி ஜெகந்நாத் காம்பினேஷன் என்று எல்லாமே பாசிட்டிவாக இருக்க, எதிர்பார்ப்புக்கு சொல்ல வேண்டுமா? தியேட்டர் வாசலில் இருபது மிக இளைஞர்கள் வெள்ளைக் கலரில் டீசர்ட் அணிந்து அதன் பின்னால் Pawanism is More than Religion என்ற வாசகத்தோடு அலைந்து கொண்டிருந்தார்கள்.

Oct 18, 2012

Bhoot Returns

A Ramgopal Varma Film னு ஒரு விளம்பரம் வந்தா ஒரு காலத்தில எப்படா படம் வரும்னு ஒரு பரபரப்பு நமக்குள்ள தொத்திக்கும். ஆனா இப்பல்லாம் அட அதுக்குள்ள இன்னொரு படம் எடுத்துட்டாரான்னு ஒரு அங்கலாய்ப்பு தான் தோணுது. அதிலேயும் மனுஷன் கேனான் 5டி கேமராவில படம் எடுக்க ஆரம்பிச்சவுடனே இண்டு இடுக்கில எல்லாம் ஷாட் வச்சி பார்த்து நம்மளை சையிண்டிஸ்ட் எலியாக்கி விட்டுறாரு..

Oct 17, 2012

சாப்பாட்டுக்கடை - டவுசர் ஓட்டல்

என்னடாது ஓட்டல் பேரே ஒரு மாதிரியாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? சட்டென கண்டு பிடிக்க முடியாத வகையில் தான் இந்தக் கடை அமைந்திருக்கிறது. நாலு பேரிடம் கடையின் பெயரை கேட்டு விசாரிக்கலாம் என்றால் டவுசர் கடை என்று கேட்டு அவர் என்ன் நினைத்துக் கொள்வார்களோ என்ற வெட்கம் வேறு வந்து தொலைக்க, ஒரு வழியாய் தேடிப் பிடித்து கண்டுபிடித்தோம். மைலாப்பூரிலிருந்து ஆர்.கே மடம் சாலையில் ஓம் மெடிக்கல்ஸின் எதிரில் ஒரு குட்டிக் கடை. வாசலில் பெயர் பலகை கூட கிடையாது. இரவு நேரங்களில் வாசலில் பரோட்டா போடும் சாதாரண உணவகம் போலத்தான் இருக்கிறது. ஆனால் ஏரியாவில் டவுசர் என்று சொன்னவுடனே இடத்தை சொல்லுமளவிற்கு பிரபலமாக இருப்பதற்கு காரணம் அவ்வுணவகத்தின் சுவை மற்றும் அதன் ஓனர் வெறும் டவுசர் மட்டுமே அணிந்து கொண்டிருப்பதும் தான்.

Oct 16, 2012

தமிழ் சினிமா ரிப்போர்ட் - ஆகஸ்ட் 2012

ஆகஸ்ட் மாதம் வழக்கம் போல் புற்றீசலாய் பல சிறிய படங்கள் வெளிவந்தாலும், குறிப்பாய் மதுபானக்கடை, ஆச்சர்யங்கள் போன்ற கவனிக்கதக்க படங்களும் வெளிவந்தது. பனித்துளி, பெருமான், எப்படி மனசுக்குள் வந்தாய்?, 18 வயசு போன்ற படங்களும் வந்தன.

Oct 15, 2012

கொத்து பரோட்டா 15/10/12

நான் தான் மலாலா என்று  மொத்த பாகிஸ்தானில் உள்ள பெண்கள் தலிபானுக்கு எதிராக போர்கொடி தூக்கியிருக்கிறார்கள். யார் இந்த மலாலா? பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் என்ற மாநிலத்தில் உள்ள மிங்கோரா எனும் இடத்த்தில் ஒன்பதாவது படிக்கும் மாணவி. 2009ல் தலிபானால் பெண்கள் படிக்கக் கூடாது என்று தடை விதித்த காலத்தில் தடை விதித்த தலிபான்களை ஆட்சியை எதிர்த்து பிபிசிக்காக உருது மொழியில் ப்ளாகில் பெண்களின் கல்விக்காக எழுதியிருக்கிறாள்.அந்த கட்டுரைக்காக பாகிஸ்தான் அரசு, முதல் National Youth Peace Prize கொடுத்து கவுரவித்து இருக்கிறது.  அவளை எழுதக்கூடாது என்று அவளுக்கும் அவளது குடும்பத்தினருக்கும் தலிபான்கள் மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்க, ஒரு கட்டத்த்தில் பாகிஸ்தான் அரசாங்கம் அந்த மாநிலத்தில் தலிபான்கள் மீது அட்டாக் செய்து அவர்களை ஒழித்துவிட்டதாக பிரகடனப்படுத்த, மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த மலாலாவின் பள்ளி வேனை ஒருவன் வழிமறித்து, ‘யார் இங்கே மலாலா? சொல்லாவிட்டால் எல்லாரையும் சுட்டுவிடுவேன்” என்று மிரட்டி, மலாலாவை கண்டுபிடித்து அவளது தலையிலும், கழுத்திலும் சுடப்பட்டாள். அவளுடன் மேலும் இரண்டு பெண்கள் குண்டடிப்பட்டு காயத்துடன் தப்பியிருக்கிறார்கள். இது நடந்தது கடந்த அக்டோபர் மாதம் 12ஆம் தேதி. மலாலாவின் சிகிச்சைக்காக ஆகும் செலவை அரசாங்கமே ஏற்று அவளை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் மலாலாவுக்கும், அவளது தந்தைக்கும் ஃபத்வா விதித்திருகிறது தலிபான். அவள் உயிர் பெற்று வந்தால் மீண்டும் அவளை கொல்வோம் என்று சொல்லியிருக்கிறார்கள் தலிபான்கள். இந்த வெறி பிடித்த மதவாதிகளை தனியொரு பெண்ணாய் எதிர்த்தது இப்போது ஒரு பெரிய வேள்வியாய் மாறி நாட்டின் உள்ள அத்துனை பெண்களும் நான் தான் மலாலா வா.. வீரத்தோடு போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். யாரையும், எப்போதும், எந்நேரமும் மதத்தின் பெயரால் அடக்கி வைக்க முடியாது என்பது மீண்டும் நிருபணமாக்கியிருக்கிறாள் இந்த பதினைந்து வயது மலாலா. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Oct 13, 2012

மாற்றான்

எந்த நேரத்தில் இந்த வருஷம் வரப் போகும் பெரிய படமெல்லாம் ஓடாது   போலருக்கே என்று சொன்னேனோ தெரியவில்லை. வரிசையாய் வரும் எல்லா பெரிய படங்களும் சொல்லிக் கொள்ளூம்படியாகவே இல்லாமல் இருக்க, என் வாக்கை மாற்றானாவது மாற்றுமா? என்று எதிர்பார்த்தால் கொடுத்த வாக்கை மாற்றாது இந்த மாற்றான் என்றிருக்கிறார்கள்.

Oct 8, 2012

English Vinglish


சில படங்களின் விளம்பரம் பார்க்கும் போதே பார்க்க வேண்டுமென்று தோன்றும். இன்னும் சில படங்களின் கதைக் களனை கேள்விப்படும் போது இதை வைத்து ஒரு சுவாரஸ்ய இந்திய சினிமா செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுந்து கொண்டேயிருக்கும். அக்கேள்விகளுக்கு முடியும் என்று ஆணித்தரமாய் பதிலளித்திருக்கிறார்கள் இந்த இங்கிலீஷ் விங்லீஷ் மூலம்

Oct 6, 2012

நண்பர்களே

6 ஆம் தேதியிலிருந்து 11ஆம் தேதி வரை சிங்கப்பூரில் இருப்பேன். சிங்கப்பூரில் என்னுடய லோக்கல் தொடர்புக்கு +6582037082

Oct 4, 2012

போலீஸ்

நேற்று மாலை  ஜோன்ஸ் ரோடில் உள்ள சப்வேயின் இடது பக்கம் உள்ள வழியில், மார்கெட் பக்கம் செல்வதற்காக போய்க் கொண்டிருதேன். அப்போது ஒரு இண்டர்நேஷனல் கால் வர வண்டியை சுவற்றோரமாய் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, போனை அட்டெண்ட் செய்து கொண்டிருந்தேன். திடீரென அந்த சிறு வழியில் ட்ராபிக் ஜாம் ஏற்பட,  ஒரே ஹாரன் சத்தம். என்னவென்று பார்த்த போது எதிர் திசையில் ராங் ரூட்டில் நிறைய வண்டிகள் வழிமறித்திருந்ததுதான் காரணம். எல்லா வண்டிகளுக்கு முன்னால் இருந்தது ஒரு புல்லட். அதன் மீது ஆஜானுபாகுவாய் ஸ்மார்டாய் ஒரு கருத்த ஆள் அமர்ந்திருந்தார். என்னடா இது ட்ராபிக் ஜாமாக இருக்கிறதே என்று நிமிர்ந்து என்னைப் பார்த்து ‘அலோ.. வண்டிய எடுங்க” என்றார்.

Oct 3, 2012

வாஸ்து


Car_by_Shuttercolour”வாஸ்து சரியில்லை சார்.அதான் இப்படி படுத்தறது” என்ற என் நண்பரை ஒரு மாதிரி பார்த்தேன். என்ன எழவுடா இது காருக்கெல்லாம் கூட வாஸ்து பார்க்கும் அளவுக்கு முத்தி போய்ட்டாரே என்று நினைத்துக் கொண்டேன்.

Oct 1, 2012

கொத்து பரோட்டா -1/10/12

சமீபத்தில் இரண்டு விதமான கொள்ளைகள். ஒன்று வொயிட் காலர் கிரிமினல்கள். இரண்டு லைவான கிரிமினல்கள். ஒயிட்காலர் டி.சி.எஸ் கம்பெனியில் வேலை செய்யும் பெண் ஒருவர் சிட்டி பேங்கில் நெடுநாளாக ஆப்பரேட் செய்யப்படாத அக்கவுண்டுகளை கண்டுபிடித்து அந்த அக்கவுண்டுகளின் அட்ரஸ், புதிய டெபிட்கார்ட் ரிக்வெஸ்ட் எல்லாம் போட்டு, மொத்த பணத்தையும் அபேஸ் செய்து நண்பர்கள் மூலமாய் ரியல் எஸ்டேட் பிஸினெஸில் இன்வெஸ்ட் செய்திருக்கிறார். அவர் மாட்டியது எப்படி என்றால் புதிய அட்ரஸ் மாற்றத்தை செய்துவிட்டோம் என்று பழைய அட்ரஸுக்கு வந்த லெட்டரினால். விதி வலியது. அந்தப் பெண் கைதாகி பெயிலில் வந்தாகிவிட்டதாம். இப்போதுதான் கூட்டாளிகள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். இரண்டாவது ஒரு ஏடிஎம் பண பட்டுவாடா செய்யும் வேனை துப்பாக்கி முனையில் பட்டப்பகலில் மடக்கி, பின்னாடி நீண்ட கழி போன்ற துப்பாக்கி வைத்திருப்பவரை சுட்டு, வண்டியோடு கொள்ளையடித்திருக்கிறார்கள். கொள்ளையானது சுமார் 51/2 கோடியாம். நண்பர் ஒருவரிடம் இதைச் சொன்ன போது “நல்லா போகட்டுங்க..நம்ம கிட்ட கிரெடிட் கார்டுல அநியாய வட்டிப் போட்டு ஆள் அனுப்பி மிரட்டி கொள்ளையடிச்சாங்க இல்ல. அவங்க பணம் இப்படித்தான் போகும். கடவுள் இருக்காரு?” என்றார் சீரியஸாக.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Sep 28, 2012

தாண்டவம்


 படம் வெளியாவதற்கு முன்பே பரபரப்பை வேறு விதமாய் ஏற்படுத்தியிருந்த படம். இது என் கதை, என்று ஒரு உதவி இயக்குனரும், இல்லை என்று இயக்குனரும் தயாரிப்பாளர் ஆளாளுக்கு ஆட்டம் ஆட ரகசியமாய் நடந்தத விஷயங்கள் வெளியே வர, இயக்குனர் சங்க தலைவர் ராஜினாமா செய்யும் அளவிற்கு விறுவிறுப்பு கொடுத்த இந்தப்படம் திரையில் அதே பரபரப்பை, விறுவிறுப்பை கொடுத்ததா? என்று கேள்வியை எழுப்பினால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சாப்பாட்டுக்கடை - அருளானந்தா ஓட்டல்

சென்னையில் கிருஷ்ணவேணி தியேட்டருக்கு பின்னால் ஒரு மாடி வீட்டில் மெஸ்ஸாக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த அருளானந்தா மெஸ். நண்பர் ஒருவர் இங்கு பரோட்டா நன்றாக இருக்கும் என்று சொல்லிக் கூட்டிப் போனார். பஞ்சு போன்ற பரோட்டாவும், கூடவே காரமில்லாத அருமையான கிரேவியும் நம்மை மீண்டும் மீண்டும் அழைத்தது. இதெல்லாம் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன். பின்பு இவர்கள் தங்கள் உணவகத்தை ஹோட்டலாய் உருமாற்ற, உஸ்மான் ரோட்டில் இருக்கும் சரவணபவனுக்கு நேர் எதிரே உள்ள விவேகானந்தா காபி ஹவுஸுக்கு ஒரு இடத்தைப் பிடித்து ஹோட்டலாய் அமைத்தார்கள். 

Sep 25, 2012

Heroine

மதுர் பண்டார்கரின் படம் என்றால் கொஞ்சம் ராவாக இருக்கும் என்பது இவரது முந்தைய படங்களை பார்த்தவர்களுக்கு தெரியும். பேஜ் 3 பிரபலங்களின் பின்னணியை உரித்துக் காட்டியது என்றால், ட்ராபிக் ஜாம் ப்ளாட்பாரத்தில் வாழும் மக்களின் வாழ்க்கையை சொன்னது, ஃபாஷன் மாடல் உலகின் அவலங்களை, போட்டிகளை, வெற்றி தோல்விகளை அப்பட்டமாக காட்டியது. அதே அளவிற்கு இவரது கார்பரேட், ஜெயில் ஆகிய படங்கள் இல்லை என்றாலும் பரபரப்பாக பேசப்பட்ட படமாகவே அமைந்தது. இந்த வரிசையில் சினிமா கதாநாயகியைப் பற்றி ஒரு படம் என்றதும் இயல்பாகவே கொஞ்சம் ஆர்வம் எகிறத்தான் செய்தது.

Sep 24, 2012

கொத்து பரோட்டா - 24/09/12

பேஸ்புக்கில் கார்டூனிஸ்ட் பாலாவின் தலையை ஆளாளுக்கு உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தான் பெரியாரின் நேரடி புத்திரர்கள் போல வரிந்து கட்டிக் கொண்டு திட்டி எழுதி வருகிறார்கள். அதற்கு காரணம் அவர் போட்ட கார்டூன். பார்பனர்களை மட்டும் பெரியார் எதிர்க்க சொல்லவில்லை. எல்லா ஜாதிகளுக்கான வெறியையும் தான் எதிர்க்கச் சொல்லியிருக்கிறார் என்றும், முற்போக்கு, மற்றும் இடைநிலை என்கிற பெயரில் உலாவரும் ஜாதி வெறியர்களை பற்றித்தான் அந்தக் கார்டூனில் கிண்டலடித்திருந்தார். அவர் ஏதும் தவறாய் சொல்லியிருப்பதாய்  எனக்கு  தெரியவில்லை. எல்லாவற்றையும் தப்பாகவே புரிந்து கொள்பவர்களுக்காக மீண்டும் அக்கார்ட்டூனை விளக்கமாக போட வேண்டிய நிர்பந்தம்  அவருக்கு வந்துவிட்டது. கார்டூனுக்கெல்லாம் விளக்கவுரை போட்டு சொல்லணும் போலருக்கே..
@@@@@@@@@@@@@@@@@@@@@@

Sep 22, 2012

சாருலதா


தமிழ் சினிமாவில் சமீபத்திய சென்ஷேஷன் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பற்றிய படமெடுப்பது. ஒரு சின்ன பட்ஜெட் படம், அடுத்து மீடியம் பட்ஜெட் படமான இந்த சாருலதா. மற்றொன்று பெரிய பட்ஜெட்டில் வரப் போகும் மாற்றான். சின்ன பட்ஜெட் படத்தை ரிலீஸானது போல ரிலீஸாக்கி காலியாக்கிவிட்டார்கள் என்று கேள்வி. ஆனால் அதே போல இப்படத்தை பண்ண முடியவில்லை. ஏனென்றால் சன்னிலிருந்து வெளியேறிய பிறகு சக்ஸேனா தனியா கம்பெனி ஆரம்பித்து வெளியிட்டிருக்கும் முதல் படம் அதனால் மீடியாவின் கவனம் பெற்றது ஒரு தனி விஷயம் என்றாலும், ஒட்டிப் பிறந்த ரெட்டையர்கள், அதுவும் பெண்கள் எனும் போது ஒரு சுவாரஸ்யத்தை அளிக்கத்தான் செய்தது.

Sep 21, 2012

சாட்டை

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது என்றும், அரசு தரப்பில் அதை மேன்மை படுத்த வேண்டும் என்று ப்ரெஷ்ர் கொடுத்துக் கொண்டிருக்கும் சமயத்தில்,தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளின் நிலையை, அதன் ஆசிரியர்களின்   நிலையை, அதனால் ஏற்படும் பாதிப்புகளை இப்படத்தின் மூலமாய்  சாட்டைக் கொண்டு அடித்திருக்கிறார்கள் 

Sep 20, 2012

சாப்பாட்டுக்கடை - Siddique Kabab Centre

Kebab  என்று சொல்லப்படும் உணவு வகைகள் பெரும்பாலும் வட இந்தியாவில் புகழ் பெற்ற ஒன்றாகும். ஆனால் இதன் ஆர்ஜின் என்று பார்த்தால் அது அரேபிய, துருக்கிய மண்ணிலிருந்து என்று வரலாறு சொல்கிறது. மாமிச வகைகளை எண்ணையில் போட்டு பொரிக்காமல் மாமிசங்களின் மேல் மசாலாவை போட்டுப் பிரட்டி, அதை தணலில் வாட்டி காரம், மணம் குணத்தோடு, ரொட்டி போன்ற அயிட்டங்களை வைத்துக் கொண்டு மாமிசத்தை மெயின் டிஷ்ஷாக வைத்துக் கொண்டு சாப்பிடுவது ஒரு கலாச்சாரம். 

Sep 19, 2012

Barfi

ஃபர்பி. இதன் ட்ரெயிலரை பார்த்த எவரும் படம் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். அவ்வளவு க்யூட்டான விஷுவல்களோடு நம்மை ஆகர்ஷித்தது அந்த சின்ன டீசர். அந்த டீசர் கொடுத்த உணர்வை படம் கொடுத்ததா? என்று கேட்டீர்கள் என்றால்  கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்.

Sep 18, 2012

நெல்லை சந்திப்புரத்தத்தை பார்த்தாலே மயங்கி விழும் ஒருவன் மூன்று பேரை கொல்லும் அளவிற்கு மாறுகிறான். அதற்கு காரணம் என்ன? யார் அவனை இந்த நிலைமைக்கு துரத்தியது. நட்ட நடு ரோட்டில் அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஒருவனை என்கவுண்டர் செய்வதில் ஆரம்பிக்கிறது படம். இன்னொரு பக்கம் அம்மா, அப்பா, அக்கா, அக்காவுக்கு நிச்சயம் செய்யப் பட்டிருக்கும் மாமா, என்று அற்புதமான குடும்பம் கொண்ட ஹீரோ. அஸிஸ்டெண்ட் கமிஷனரின் கீப்புக்கு பிறந்த பெண் தான் ஹீரோவின் காதலி. இப்படியாக போகும் கதையில் என்கவுண்டரினால் ஒரு திடீர் திருப்பம் ஏற்படுகிறது. அதை இரண்டு மணி நேரப் படமாய் பரபரப்பாய் சொல்ல முயற்சித்திருக்கிறார் புதுமுக இயக்குனர் நவீன். கே.பி.பி.

Sep 17, 2012

கொத்து பரோட்டா - 17/09/12

டீசல், பெட்ரோல், கேஸ் விலையேற்றம், கேஸ் கட்டுப்பாடு போன்றவைகளுக்கான காரணங்களை இன்றைய தினசரிகளில் இந்திய பெட்ரோலியத்துறை வரிசைப் படுத்தியிருக்கிறது.  அவர்கள் பக்க நியாயத்தை சொல்லிவிட்டு, இதற்கு மாற்றாக விலையேற்றத்தைப் பற்றி விமர்சிக்காமல், மாற்று ஐடியாக்களை கொடுத்தால் வரவேற்கிறார்களாம். நிச்சயம் இது ஒரு சவால்தான். அவர்களுடய சவாலை ஏற்று ஏன் நாம் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கக்கூடாது?. காந்திய மக்கள் இயக்கம் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பல போராட்டங்களை செய்துவருகிறது. அவர்கள் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார்கள். அரசுக்கு மதுக்கடைகளால் கிடைக்கும் வருமானத்தை மதுக்கடையில்லாமல் வருமானத்தை எப்படி கொண்டு வர முடியும் என்று மாற்று ஐடியாக்களை கொடுத்திருந்தார்கள். அதைப் போல மக்களிடமே அரசு கேட்டிருக்கிறது. நாம் கொடுக்க முயற்சிக்கலாமே?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Sep 15, 2012

சுந்தரபாண்டியன்

தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் சசிகுமாரை பெரும்பாலான மக்களுக்கு பிடிக்கும். அதற்கு காரணம் அவரின் முந்தைய சுப்ரமணியபுரம், பசங்க, நாடோடிகள் என்ற மூன்று வெவ்வேறு விதமான ஜெனரில், நல்ல படங்களை தொடர்ந்து கொடுத்ததால் கிடைத்த மரியாதையான சாப்ட்கார்னர். அதற்கு அடுத்த படங்களான ஈசன், போராளி போன்ற படங்கள் சரியாக போகவில்லை. ஆனாலும் நல்ல ஓப்பனிங்கை மக்கள் கொடுத்தார்கள். சென்ற படங்களின் தோல்வியால் தானோ என்னவோ இந்தப்படத்திற்கு மிக லோஃப்ரோபைலான விளம்பரங்களை முன் வைத்து படம் பேசட்டும் என்று நினைத்து விட்டிருக்கிறார்கள். அது அவர்களுக்கு ஓரளவுக்கு கை கொடுத்திருக்கிறது.  சரி இப்போது படத்துக்கு வருவோம்.

Sep 14, 2012

Life Is Beautiful

சேகர் கம்மூலாவின் படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது முதல் படமான டாலர் ட்ரீம்ஸில் ஆரம்பித்து, ஆனந்த், கோதாவரி, ஹாப்பிடேஸ், லீடர் என்று வரிசைக்கட்டி எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். இவரது படங்கள் எல்லாம் மிக மெல்லிதான நகைச்சுவையுடன், பெரும்பாலும் லைட்டான உணர்வுகளூடே பயணிக்கும் கதைகளாகத்தானிருக்கும். அதில் கொஞ்சம் விலகியது லீடர் திரைப்படம். இவரது ஹாப்பி டேஸை இதுவரை 60க்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன். ஆனால் அதே படத்தை வேறு ஒரு மொந்தையில் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை.
அமலா கணவனை இழந்தவர். அவருடய மகன் சீனு, இரண்டு மகள்களை ஹைதராபாத்தில் உள்ள தாத்தா பாட்டி வீட்டிற்கு அனுப்பி அங்கேயே படிக்க சொல்கிறார். மூவரில் சீனு இன்ஜினியரிங் பைனல், அடுத்த சத்யா டாக்டருக்கு படிக்கவிருப்பவள், கடைக்குட்டி சின்னி. இவர்கள் மூவரும் ஹைதையில் செட்டிலாகிறார்கள்.  இவர்கள் இருக்கும் காலனிக்கும் பக்கத்தில் இருக்கும் பணக்கார காலனிக்கும் எப்போதும் தகராறு. காலனியில் சீனுவின்  முறைப்பெண் பத்மா இருக்க, இருவருக்கும் காதல். சீனு வரும் அதே நாளில் புதியதாய் குடிவரும் லஷ்மி எனும் பெண்ணுக்கும் தெலுங்கான  நாகராஜுக்கும் காதல். கொஞ்சம் இண்டெலெக்‌ஷுவலான பையனான அபி தன்னை விட வயது அதிகமான பெண்ணான சிரேயாவுடனான  காதல் இவர்களின் காதல் எல்லாம் என்னவாயிற்று? அமலா ஏன் இவர்களை ஹைதைக்கு படிக்க அனுப்பினார்? என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
ஆஸ்யூஷுவல் வாய்ஸோவரில் கதை ஆரம்பிக்கிறது. கொஞ்சம் Feminine ஆனா சீனு, க்யூட்டான ஹீரோயின். அதிபுத்திசாலி அபி. படிக்காத ஆனால் மனதில் தங்கமான தெலுங்கானா டயலாக்டில் பேசும் நாகராஜ் என்று டெம்ப்ளேட்டான கேரக்டர்கள்தான் அதை வெளிப்படுத்தும் விதத்தில் சுவாரஸ்யமாய் தந்திருக்கிறார்கள். முக்கியமாய் நாகராஜ், வரலஷ்மி காதல். ஸ்ரேயாசரண், அஞ்சலி ஜாவேரி, மற்றும் ஓரிரு நடிகர்களைத் தவிர எல்லோருமே புதுமுகங்கள். அனைவரும் சிறந்த நடிப்பை கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள். ஹீரோ சீனுவை விட, அபி, நாகராஜ், கேரக்டரில் வரும் பையன்கள் நன்றாக செய்திருக்கிறார்கள். பெண்களில் பத்மா, வரலஷ்மி இருவரும் சிறப்பு. அமலா வெகு நாட்களுக்கு பிறகு நடிக்க வந்திருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு சில நிமிடங்களும், க்ளைமாக்ஸில் ஒரிரு நிமிடங்கள் மட்டுமே வருகிறார். சொல்லிக் கொள்ளும்படியாக ஏதுமில்லை. அவர் மீண்டும் நடித்திருக்கிறார் என்பதைத் தவிர. ஸ்ரேயா வழக்கம் போல ஸ்மார்ட் அண்ட் க்யூட். அஞ்சலி ஜாவேரி வரும் காட்சிகள் சுவாரஸ்யமாய் இருந்தாலும் அவரது கேரக்டர் ஸ்கெட்சியாய் இருப்பதாய் ஒட்டவில்லை.
மிக்கி ஜே.மேயரின் இசையில் வழக்கம் போல் தனிப்பாடலாய் இல்லாமல் மாண்டேஜுகளில் வருவதால் மென்மையான இசை வருடுகிறது. பின்னணியிசையில் பெரும்பாலான நேரங்களில் ச..ரி..க..ம. ப..த..நி.ச.. சா..நீ.த..ப.. ம.. க..ரி..ச என்றே விதவிதமான ஒலிகளில் வாசிப்பதை தவிர்த்திருக்கலாம்.  விஜய்யின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். கதையில் பெரும்பாலும் மழையும் ஒரு கேரக்டராய் வலம் வருவதால் அந்த மூட் சரியாய் நம்முடன் பயணிக்கும் படியாய் செய்திருக்கிறார். அதே போல் மாண்டேஜ் காட்சிகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். தோட்டா தரணியின் காலனி செட் அழகு.
எழுதி இயக்கியவர் சேகர் கம்மூலா. வழக்கமாய் சின்னச் சின்ன உணர்வுகளின் வெளிப்பாடுகளை அதுவும் இளைஞர்களின் மன ஓட்டங்களை மிக அழகாய் வெளிப்படுத்தும் இயக்குனர்களில் ஒருவர். அதை மீண்டும் நாகராஜ், லஷ்மி இடையே ஆன காட்சிகளில் அழகாய்  வெளிப்படுத்தியுள்ளார். அபி, ஸ்ரேயா சரண் சம்பந்தப்பட்ட விமான காட்சியில் அவ்வளவு களேபரத்திலும் முத்தமிடும் இடம்.  ரெண்டு காலனிக்குமிடையே ஆன ப்ரச்சனைகளுக்கு நடுவே பணக்கார வீட்டு பெண் சீனுவின் மாமா பையன் லவ்வி கல்யாணம் செய்து கொண்டு விடும் இடம். தன் தங்கை அவளுடய பாய் ப்ரெண்டுக்காக தன்னை புறக்கணிக்கிறாள் எனும் போது சீனு அவஸ்தை படும் காட்சி. பாடல்களில் வரும் மாண்டேஜ் சீன்கள், பளிச், பளிச்சென வரும் வசனங்கள், என ஆங்காங்கே தன் முத்திரையை பதித்திருந்தாலும் முதல் பாதியில் எப்போது இடைவேளை வரும் என்று  நெளியும் அளவிற்கு மகா லெந்த். சரி இரண்டாவது பாதியில் சரி செய்துவிடுவார் என்று நினைத்தால் அது மிக ஸ்லோவாக செல்கிறது. எடுத்துக் கொண்ட விஷயங்களை எப்படி ஆரம்பித்தாரோ அதே ஃபேஸில் முடிக்க முடியாமல் தடுமாறியிருக்கிறார்.  பல காட்சிகள் ஹாப்பி டேஸில் பார்த்த காட்சிகளே இருப்பதால் கொஞ்சம் அலுப்பூட்டத்தான் செய்கிறது. பக்கத்து நிலத்தில் உள்ள மரத்தை வைத்து கட்டடம் கட்ட சட்டப்படி தடை வாங்கும் மாமா. அதை உடைக்க, வில்லன்கள் அம்மரத்தை ஆசிட் ஊற்றி சாகடிப்பது எதற்கு? அந்த கதை என்னவானது? இப்படி சில கதைகள் லூப்பில் விட்டிருக்கிறார். எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க போனால் ஒரு முறை பார்க்கலாம். என்னைப் போன்ற கம்மூலாவின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே.
கேபிள் சங்கர்

எண்டர் கவிதைகள் -23

அடர் மழை

மூடிய கார் கதவுகளுக்குள் 

ஏஸியின் குளிர்

நிர்வாணமாய் கால் அகட்டி

தொங்கும் தந்தூரி சிக்கன்

மழைக்கு ஒதுங்கிய 

முழுக்க நனைந்த வெண்ணுடை 

டைட் ஸ்லீவ் பெண்

யார் கண்ணுக்கும் 

தந்தூரி சிக்கன் தெரியவில்லை.

கேபிள் சங்கர்

Sep 13, 2012

Free Fall

மூன்று மணி இருக்கும் வெய்யில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது. காலையிலிருந்து சரியான அலைச்சல். சமிபத்தில் படம் பிடித்ததை வெட்டி, ஒட்டும் வேலை ஓடிக் கொண்டிருந்தது. அவசரமாய் வேறொரு ஸ்கிரிப்டை என் லேப்டாப்பிலிருந்து மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று வீட்டிற்கு போய்க் கொண்டிருந்தேன். டிராபிக் கண் முழி பிதுங்கியது. ஒரு பெட்டிக் கடையில் வாட்டர் பாட்டில் வாங்கி மெதுவாய் குடிக்க ஆரம்பித்தேன். ரெண்டு வாய் அண்ணாந்து வேடிக்கைப் பார்த்தபடி குடித்துக் கொண்டிருந்த போது ஷீனமாய் ஒரு அலறலோடு, எதிரே இருந்த மூன்று மாடி ப்ளாட்டிலிருந்து ஒரு உருவம் கீழே வந்து கொண்டிருந்தது. படிகளிலிருந்து அல்ல அந்தரத்திலிருந்து.


Sep 12, 2012

Raaz -3

பொதுவாகவே இந்திய ஹாரர் படங்களை அவ்வளவு விரும்பி பார்த்தவனில்லை. பல சமயங்களில் ஹாலிவுட், அல்லது கொரிய ஹாரர் படங்களை அப்படியே சுட்டு நம்மை இம்சை படுத்துவார்கள். அதனால் Raaz படத்தின் முந்தைய இரண்டு பகுதிகளை நான் பார்த்ததில்லை. என்னவோ தெரியவில்லை பிபாபாஷாவினால் இந்த படத்தை பார்கக் வேண்டுமென்று தோன்றியது. எண்ணம் தோன்றியது வேஸ்டாகவில்லை என்றே சொல்ல வேண்டும்.