Posts

Showing posts with the label அனுபவம்

இடுப்பில் ஒர் மடிப்பு - நீயா நானா ஸ்பெஷல்

”டாக்டர்.. இதோ வலது பக்க இடுப்பு கிட்ட கட்டியா இருக்கு. அழுத்தினா வலிக்குது” என்றேன்.

அழுக்கு

செகண்ட் லைனில் பத்து மிஸ்ட் கால்கள். அப்படியாகப்பட்ட அவசரம் என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தில் அந்த நம்பருக்கு திரும்பக் கூப்பிட்டேன். போன் ஆன் ஆனதே தவிர என்னிடம் பேசாமல் போனின் சொந்தக்காரர் வேறு ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

எஸ்.ராவின் பேருரையும் - புத்தக விற்பனையும்

கடந்த மூன்று நாட்களாய் எஸ்.ராவின் பேருரை நிகழ்ச்சிக்கு போய் வருகிறேன். நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன் தான் போக முடிகிறது. வேலைகள். இருந்தாலும் அங்கே ஆஜராவதில் ஒரு சின்ன சந்தோஷம் பல பழைய நண்பர்கள், வாசகர்கள், என்று பல பேரை சந்திப்பதால். பேருரை முதல் ரெண்டு நாளை விட எனக்கு நேற்று சத்யஜித்ரேவை பற்றியது பேசியது சுவாரஸ்யமாய் இருந்தது. ஒரு வேளை நம்மூர்காரராக இருப்பதால் இருக்குமோ? உட்கார இடமின்றி மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. அவர் கூறும் பல படங்களை நான் ஏற்கனவே பார்த்ததிருந்ததினால் கேட்ட விஷயத்தையே கேட்பது கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவாகவே இருக்கிறது. ஆனால் புதியதாய் கேள்விப்படுகிறவர்களுக்கு அப்படங்களை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை உண்டு பண்ணுகிறார்.  மனுஷர்  நின்ன வாக்கில் ரெஸ்டே இல்லாமல் ரெண்டு மணி நேரத்துக்கு மேல் பேசுகிறார். எதிர்காலத்தில் எஸ்.ரா ரெகமெண்ட் பண்ணிய படங்களையெல்லாம் பார்த்துவிட்டு, தமிழ் கூறும் நல்லுலகத்தில் வெளிவரும் நற்படங்களை ஆதரிப்பார்கள் என்று நம்புவோமாக.

Free Fall

மூன்று மணி இருக்கும் வெய்யில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது. காலையிலிருந்து சரியான அலைச்சல். சமிபத்தில் படம் பிடித்ததை வெட்டி, ஒட்டும் வேலை ஓடிக் கொண்டிருந்தது. அவசரமாய் வேறொரு ஸ்கிரிப்டை என் லேப்டாப்பிலிருந்து மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று வீட்டிற்கு போய்க் கொண்டிருந்தேன். டிராபிக் கண் முழி பிதுங்கியது. ஒரு பெட்டிக் கடையில் வாட்டர் பாட்டில் வாங்கி மெதுவாய் குடிக்க ஆரம்பித்தேன். ரெண்டு வாய் அண்ணாந்து வேடிக்கைப் பார்த்தபடி குடித்துக் கொண்டிருந்த போது ஷீனமாய் ஒரு அலறலோடு, எதிரே இருந்த மூன்று மாடி ப்ளாட்டிலிருந்து ஒரு உருவம் கீழே வந்து கொண்டிருந்தது. படிகளிலிருந்து அல்ல அந்தரத்திலிருந்து.

என்ன பாட்டு பாட?

Image
பாடுவது எனக்கு பிடித்தமான விஷயங்களில் ஒன்று. அது கேட்பவர்களுக்கு எப்படி என்று நான் பாடிக் கேட்டவர்கள் தான் சொல்ல வேண்டும். ஏதோ ஒரு காலத்தில் கீதம் வரை  கொஞ்சமே கொஞ்சம் கர்நாடக சங்கீதம் கற்று கொண்டதைத் தவிர பெரிய சங்கீத புலமை கிடையாது. ஆனாலும் பாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என்றைக்கு நான் பாடி என் குரலை நானே கேட்பேன் என்று ஒரு ஆசை மனதினுள் அரித்துக் கொண்டிருதானிந்தது.

ஃபாதர் கேரக்டர்

Image
”ஹலோ.. சங்கர்நாராயணன் சாருங்களா?” “ஆமாம்” “.. ப்ரொடக்‌ஷன் மேனேஜர் பேசுறேன். டைரக்டர் சார் தான் நம்பர் கொடுத்தாரு” “சொல்லுங்க”

நீங்க ரொம்ப நல்லவரு…

செல்போன் அடித்தது. வண்டியை ஸ்லோவாக்கிக் கொண்டே ஷார்ட்ஸின் பாக்கெட்டில் கைவிட்டு போனை எடுத்தபடி வண்டியை நிறுத்த, படுவேகமாய் குறுக்கே பாய்ந்தார் ஒரு இன்ஸ்பெக்டர். டிராபிக் போலீஸ் இல்லை.  அதிர்ந்து போய் பார்த்தேன்.

குளிச்சா.. குத்தாலம்-2

Image
முன்னும் பின்னும் அருவியாகியிருந்தவரை கொண்டு போய் ஒரு ஆஸ்பிட்டலில் சேர்க அழைத்து சென்றோம் அது ஒரு மினி கிளினிக் கம் ஹாஸ்பிடல். நாங்கள் போன பொது அழகான ஒர் இளம் பெண் ஒருத்தி அந்த ஹாஸ்பிடல் வளாகத்திலேயே நடை பயின்று கொண்டிருக்க, நம்ம ஆள் அதற்குள்ளாக, அங்கேயிருந்த குரோட்டன்ஸ் செடிகளுக்கு நீர் வார்க்க, வாசலில் மது அருந்தி வருபவர்களுக்கு அனுமதியில்லை என்று போர்டில் எழுதியிருந்தது. நடை பயின்ற் பெண் இப்போது அருகே வந்து என்ன வேண்டும் என்று கேட்க, நாஙக்ள் விஷயத்தை சொல்ல, நேரே உள்ளே போய் டாக்டரிடம் போய் சொல்லி விட்டு, மீண்டும் நடை பயில ஆரம்பித்தாள். இதற்கிடையில் அங்கிருந்த நர்ஸ் நண்பரை உள்ளே அழைக்க, நடுவில் வ்ந்து என்ன நடக்கிறது என்று பார்ட்த்துவிட்டு சில உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு, மீண்டும் நடை பழக, உள்ளே வர, நடை பழக உள்ளே வர, என்று நிமிடத்திற்கு ஒரு முறை உள்ளே வருவதும், நடைபழகுவதுமாய் இருந்தது கவனத்தை கவர்ந்தது. நண்பர் உடனே சரியாக வேண்டுமானால், ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், அல்லது டிரிப்ஸ் ஏற்ற வேண்டும் என்று டாக்டர் சொல்ல,  அவரை அட்மிட் செய்துவிட்டு , உடன் வந்த இன்னொரு நண்பரை ...

என் டைரியிலிருந்து அப்பாவின் பக்கங்கள்

Image
“படத்துல கடைசில ஒரு டான்ஸ் பாட்டு வருது பாருப்பா.. ஆது செம போர்.. ஸ்டெரெயிட்டா ஃபைட் போட்டிருந்தா நல்லாருந்திருக்கும்” என்று அப்பாவை பார்த்தேன். அவர் சைக்கிளை தள்ளிக் கொண்டே என்னை பார்த்து சிரித்தார். “உனக்கு படத்தில என்ன பிடிச்சது.?” “எனக்கு கமல், ஸ்ரீதேவி  பிடிச்சது, அந்த ப்ளைட் பாட்டு பிடிச்சது.. சண்டை பிடிச்சது” என்றேன். “உனக்கு பிடிச்சது மாதிரி பெரியவங்களுக்கு பிடிக்கணுமில்ல.. சினிமா உனக்கு மட்டும் இல்ல.. எல்லாருக்கும் அதனால தான் அந்த டான்ஸ்” என்று ஜெயமாலினியின் டான்ஸுக்கு விளக்கம் கொடுத்தபடி எனக்கு சினிமா சொல்லிக் கொடுத்தார்  அப்பா. வேகமாய் நடந்தோம் வீட்டிற்கு. அம்மா ஆபீஸிலிருந்து வருவதற்குள் போக வேண்டும். பத்தாவது பைனல் பரீட்சையின் கடைசி பரிட்சைக்கு இடையே இரண்டும்  நாள் விடுமுறை இருக்க, ரொம்ப நாளாய் நான் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த குரு திரைப்படம் அருகில் உள்ள தியேட்டரில் ஓட, ஒரு வாரம் மட்டுமே என்று போஸ்டரில் போட்டது வேறு என்னுள் உளப்பி கொண்டேயிருக்க, என் உளப்பல் தாங்காமல் என்னை தியேட்டருக்கு அம்மாவுக்கு தெரியாமல் கூட்டி போய் விட்டு வரு...

குற்றாலம் -2

Image
முன்னும் பின்னும் அருவியாகியிருந்தவரை கொண்டு போய் ஒரு ஆஸ்பிட்டலில் சேர்க அழைத்து சென்றோம் அது ஒரு மினி கிளினிக் கம் ஹாஸ்பிடல். நாங்கள் போன பொது அழகான ஒர் இளம் பெண் ஒருத்தி அந்த ஹாஸ்பிடல் வளாகத்திலேயே நடை பயின்று கொண்டிருக்க, நம்ம ஆள் அதற்குள்ளாக, அங்கேயிருந்த குரோட்டன்ஸ் செடிகளுக்கு நீர் வார்க்க, வாசலில் மது அருந்தி வருபவர்களுக்கு அனுமதியில்லை என்று போர்டில் எழுதியிருந்தது. நடை பயின்ற் பெண் இப்போது அருகே வந்து என்ன வேண்டும் என்று கேட்க, நாஙக்ள் விஷயத்தை சொல்ல, நேரே உள்ளே போய் டாக்டரிடம் போய் சொல்லி விட்டு, மீண்டும் நடை பயில ஆரம்பித்தாள். இதற்கிடையில் அங்கிருந்த நர்ஸ் நண்பரை உள்ளே அழைக்க, நடுவில் வ்ந்து என்ன நடக்கிறது என்று பார்ட்த்துவிட்டு சில உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு, மீண்டும் நடை பழக, உள்ளே வர, நடை பழக உள்ளே வர, என்று நிமிடத்திற்கு ஒரு முறை உள்ளே வருவதும், நடைபழகுவதுமாய் இருந்தது கவனத்தை கவர்ந்தது. நண்பர் உடனே சரியாக வேண்டுமானால், ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், அல்லது டிரிப்ஸ் ஏற்ற வேண்டும் என்று டாக்டர் சொல்ல,  அவரை அட்மிட் செய்துவிட்டு , உடன் வந்த இன்னொரு நண்ப...

அழுகை

Image
அழுகை.. மனிதனின் உணர்வு பூர்வமான ஒரு வெளிப்பாடு. சந்தோஷமோ.. துக்கமோ.. உச்சக்கட்டம் அழுகை.. சந்தோஷத்தில் கூட ஆனந்த கண்ணீர் வரும்.. அதுவும் கண்ணீர்தான். செத்த வீட்டில் அழுகிறவர்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். அவர்களுடய உறவின் நெருக்கத்தை, இழப்பின் சோகத்தை, எதிர்கால கவலைகளை அவர்கள் அழும் நிலையை முன்னிருத்தி தங்களுக்கும், இறந்த நபரிடம் உள்ள ஆழமான உறவை அவர்களின் அழுகை வெளிப்படுத்தும். இதற்கு பல போட்டிகள் வேறு நடக்கும். இறந்தவரின் மனைவியோ, கணவரோ.. உடலின் மீது விழுந்து அழுவது, ஒரு வகை. அப்படி அழுதவரை மிஞ்ச அந்த நபரின் தங்கையோ, தம்பியோ.. போட்டிக்கு இறந்தவரின் மீது விழுந்து அழுவதும் உண்டு, சமயத்தில் இறந்தவர் ஆணாயிருந்து அவர் எங்கேயாவது செட்டப் செய்திருந்தால், அந்த பெண்மணி சந்தடி சாக்கில் இது போல் செய்து தனக்கும், இறந்தவருக்கு உள்ள உரிமையை நிலைநிறுத்த முயற்சிப்பவர்களும் உண்டு. பார்த்தவுடன் மடேர்..ம்டேரென்று மார்பிலடித்து எங்கே அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயத்தை ஏற்படுத்தும்படி அழுபவர்கள் உண்டு. இவர்களின் அழுகை முக்கியமாய் உள்ளே நுழைந்து ஒரு பத்து நிமிடங்களுக்கும், உடலை எடுக்...

பெ’ண்’களூர்

Image
கடந்த ரெண்டு நாட்களாய் பெங்களூரில் அவசர வேலை.. ஒரு பைனாசியரை பார்பதற்க்காக உடனடியாக வர சொல்லி அழைப்பு வர, நானும் என்னுடய புரொடியூசரும் ரயில் டிக்கெட் கிடைக்காமல்  காரிலேயே கிளம்பினோம். திங்கட்கிழமை ஆதலால் பெங்களூர் ஹைவேயே எங்களுக்காக அலம்பி விட்டது போலிருக்க, சுமார் 51/2 மணிநேரத்தில் பெங்களூருக்குள் போய் சேர்ந்துவிட்டோம்.. ஒரே வெயில் ************************************************************************************************] ரிசெஷன்காரணமாய் ஸ்டார் ஓட்டல் எல்லாம் புக்கிங் இல்லாமல் காய்கிறது. நாங்கள் பிரிகேட் ரோடில் உள்ள Iris என்கிற ஓட்டலில் தங்கினோம் ஆறாயிரம் ரூபாய் ரூம் மூவாயிரம் ரூபாய்க்கு காலை ப்ரேக்ஃபாஸ்ட் ஃபபே இலவசம். அருமையான கவனிப்பு, அற்புதமாய் உள்ளமைக்கபட்ட ரூம்கள்.. குளு, குளு ஏசி, என்று அருமையாய் இருந்தது. வெளியே கொளுத்தியது. ஏசியை நினைக்கும் போது சுஜாதாவின் ஒரு நடுப்பகல் மரணம் கதையில் ஒரு வசனம் வரும் ”ஏசி ரூம் இருக்குமா?” “பெங்களூர் முழுக்கவே ஏசி தனியா ஏசி வேறயா“ என்பது போல் வசனம்  வரும். குளோபல் வார்மிங். எங் கள் ரூமிலிருந்து பிரிகேட் ரோட் முழுவதையும...

வானமெனும் வீதியிலே..

Image
அஸ்கர் விருதை வாங்கி இந்தியாவுக்கே பெருமை சேர்த்த, ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், ரசூல் பூக்குட்டிக்கும் நன்றி..நன்றி.. நன்றி எப்படியாவது பறந்து போகணும்னு எனக்கு ஆசை வந்திருச்சு. அதுவும் என் பையன் ரெண்டு வாட்டி பெங்களூருக்கும், பாம்பேக்கும் என்னோட உறவுக்காரங்களோட போய்ட்டு வந்ததுக்கப்புறம், எனக்கு அந்த ஆசை ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு. எனக்கென்னவோ ப்ளைட்டுல போறதுக்கு பிடிக்கல, ஏன்னு யோசிச்சா..ரொம்ப சீக்கிரமே போகணும்கிறது ஓரு முக்கியமான விஷயம். நானெல்லாம் வழக்கமா 9 மணி டிரெயினுக்கு, 8மணிக்கு வீட்டிலேர்ந்து கிளம்பி, சென்ட்ரல் ஸ்டேஷனில் வாசல்ல ஓரு கட்டிங் அடிச்சிட்டு, மிச்சத்தை கோக் பாட்டில்ல ஊத்திகிட்டு, சாவகாசமா கிளம்பி போனோம்னா நம்ம ரயில் தன் பின்பக்கத்து 'X' மார்கை காட்டிகிட்டு போய்ட்டுருக்கும். அதை நம்ம தமிழ்பட ஹீரோ கணக்கா..ஹைஸ்பீடுல ஓடி ஏறியே பழக்கப்பட்ட நமக்கு இப்படி இரண்டு மணி நேரம் முன்னாடி போவது கஷ்டம்தான். அவசரமாய் ஹைதைக்கு போக வேண்டியிருந்ததாலும், ரயிலில் டிக்கெட் இல்லாததாலும், இதை சாக்கா வச்சி எப்படியாவது ப்ளைட்டுல போயிறணூங்கற முடிவ எடுத்து, ஹைதராபாதுக்கு போக டிக்கெட் புக் பண்ணலாம்னு ...

அழுகை

Image
அழுகை.. மனிதனின் உணர்வு பூர்வமான ஒரு வெளிப்பாடு. சந்தோஷமோ.. துக்கமோ.. உச்சக்கட்டம் அழுகை.. சந்தோஷத்தில் கூட ஆனந்த கண்ணீர் வரும்.. அதுவும் கண்ணீர்தான். செத்த வீட்டில் அழுகிறவர்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். அவர்களுடய உறவின் நெருக்கத்தை, இழப்பின் சோகத்தை, எதிர்கால கவலைகளை அவர்கள் அழும் நிலையை முன்னிருத்தி தங்களுக்கும், இறந்த நபரிடம் உள்ள ஆழமான உறவை அவர்களின் அழுகை வெளிப்படுத்தும். இதற்கு பல போட்டிகள் வேறு நடக்கும். இறந்தவரின் மனைவியோ, கணவரோ.. உடலின் மீது விழுந்து அழுவது, ஒரு வகை. அப்படி அழுதவரை மிஞ்ச அந்த நபரின் தங்கையோ, தம்பியோ.. போட்டிக்கு இறந்தவரின் மீது விழுந்து அழுவதும் உண்டு, சமயத்தில் இறந்தவர் ஆணாயிருந்து அவர் எங்கேயாவது செட்டப் செய்திருந்தால், அந்த பெண்மணி சந்தடி சாக்கில் இது போல் செய்து தனக்கும், இறந்தவருக்கு உள்ள உரிமையை நிலைநிறுத்த முயற்சிப்பவர்களும் உண்டு. பார்த்தவுடன் மடேர்..ம்டேரென்று மார்பிலடித்து எங்கே அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயத்தை ஏற்படுத்தும்படி அழுபவர்கள் உண்டு. இவர்களின் அழுகை முக்கியமாய் உள்ளே நுழைந்து ஒரு பத்து நிமிடங்களுக்கும், உடலை எடுக்...

வானமெனும் வீதியிலே....

Image
எப்படியாவது பறந்து போகணும்னு எனக்கு ஆசை வந்திருச்சு. அதுவும் என் பையன் ரெண்டு வாட்டி பெங்களூருக்கும், பாம்பேக்கும் என்னோட ரிலேஷன்ஸ் கூட போய்ட்டு வந்ததுக்கப்புறம், எனக்கு அந்த ஆசை ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு. எனக்கென்னவோ ப்ளைட்டுல போறதுக்கு பிடிக்கல, ஏன்னு யோசிச்சா..ரொம்ப சீக்கிரமே போகணும்கிறது ஓரு முக்கியமான விஷயம். நானெல்லாம் வழக்கமா 9 மணி டிரெயினுக்கு, 8மணிக்கு வீட்டிலேர்ந்து கிளம்பி, செண்ட்ரல் ஸ்டேஷனில் வாசல்ல ஓரு கட்டிங் அடிச்சிட்டு, மிச்சத்தை கோக் பாட்டில்ல ஊத்திகிட்டு, சாவகாசமா கிளம்பி போனோம்னா நம்ம ரயில் தன் பின்பக்கத்தை 'X' மார்கை காட்டிகிட்டு போய்ட்டுருக்கும். அதை நம்ம தமிழ்பட ஹீரோ கணக்கா..ஹைஸ்பீடுல ஓடி ஏறியே பழக்கப்பட்ட நமக்கு இப்படி சீக்கிரம் போறதே கஷ்டம்தான். இருந்தாலும் எப்படியாவது ப்ளைட்டுல போயிறணூங்கற முடிவ எடுத்து,ஹைதராபாதுக்கு போக டிக்கெட் புக் பண்ணலாம்னு நெட்டுல போய் தேடினேன். 6000 ரூபாயிலேர்ந்து டிக்கெட் இருந்துச்சு..கடைசியா ஓரு வழியா “கோ ஏர்” ன்னு ஓரு ஏர்வேஸுல 500 ரூபாய்க்கு டிக்கெட்ன்னு சொன்னதும், அடிச்சு பிடிச்சு புக் பண்ணா..மொத்தமா 2500 ரூபாய் கிட்ட ஆயிடுச்சு....