Man On A Ledge
நியூயார்க் நகரத்தின் முக்கியமான ரூஸ்வெல்ட் ஓட்டலின் உயர்ந்த மாடிகளைப் நிமிர்ந்து பார்த்தபடி ஒர் இளைஞன் அதற்குள் நுழைக்கிறான். பார்ப்பதற்கு படு ஸ்மார்ட்டாகவும், ஹெப்பாகவும் இருப்பவன்.தனக்கென ஒர் அறையை எடுத்துக் கொண்டு மிக சாவதானமாய் அந்த அறையின் கதவுகளை திறந்து எட்டிப்பார்க்கிறான். அறைக்குள் அவன் தொட்ட எல்லாவற்றையும் கைரேகைகளை அழித்துவிட்டு, ஒரு சின்ன பேப்பரில் “நான் ஒரு அப்பாவி. குற்றமற்றவன்” என்று எழுதிவிட்டு, ஜன்னல் கதவை திறந்து கொண்டு முப்பதாவது மாடியின் விளிம்பிலிருந்து கீழே குதிக்க தயாராகிறான். இது தான் படத்தின் முதல் காட்சி. அரைத்தூக்கத்தில் படத்தைப் பார்க்க ஆரம்பித்த நிமிடங்களில் தூக்கம் கலைக்க வைத்த ஓப்பனிங் சீன்.