Posts

Showing posts with the label vennila Kabadi kuzhu

வெண்ணிலா கபடி குழு - திரை விமர்சனம்

Image
சமீப காலமாய் தமிழ் சினிமா பார்த்து வெறுத்து போயிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஓர் இனிய அதிர்ச்சியாய் வந்திருக்கிறது இப்படம். கோடிகளை கொட்டி முட்டாள் தனமாய் படமெடுக்கும் கார்பரேட் கம்பெனிகளுக்கு ஒரு பாடமாய் வந்திருகிறது இப்படம். பட்ஜெட் முக்கியமில்லை, ஆர்டிஸ்ட் முக்கியமில்லை, திரும்ப திரும்ப மூளை மழுங்கடிக்கப்படும் டிவி விளம்பரங்கள் தேவையில்லை, சுமாரான கதையும், அதை அழகாய் படமெடுத்தால் போதும் தலையில் வைத்து கொண்டாடுவார்கள் நம் தமிழ் மக்கள் என்பதை மீண்டும் நிருபிக்கும்,என் போன்ற எதிர்கால இயக்குனர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வந்திருக்கும் படம் வெண்ணிலா கபடி குழு. தமிழில் விளையாட்டை வைத்து எனக்கு தெரிந்து வந்த படம் சென்னை 28, அதற்கு பிறகு இந்த படம் தான் வந்திருக்கிறது. இந்தியா முழுவதும் விளையாடப்படும், ஸ்பான்ஸர்கள் யாருமில்லாமல் சீந்துவாரற்ற நிலையில் உள்ள விளையாட்டான கபடிதான் அது. சிறு வயதிலிருந்தே கபடி மீது வெறி கொண்டு விளையாடும் கிராமத்து இளைஞர்கள், ஊருக்குள்ளேயே வெண்ணிலா கபடி குழு என்று ஒரு குழுவை ஆரம்பித்து, பக்கத்து ஊரில் விளையாடி தோற்பதுமாய் இருப்பவர்கள், தங்களது ஊர் திருவிழாவை ...