Posts

Showing posts with the label malayama film

Sudani From Nigeria - Malayalam film

Image
சூடானி ஃபர்ம் நைஜீரியா ஒவ்வொரு வாரமும் மலையாள படங்களைப் பார்க்கும் போது, எப்படி இவர்களுக்கு மட்டும் இப்படியான கதைக்களன்கள் கிடைக்கிறது என்ற யோசனை வருவதை தவிர்க்கவே முடிவதில்லை. பூமரம் ஒரு வகையான படமென்றால் சென்ற வாரம் பார்த்த சூடானி ஃபர்ம் நைஜீரியா இன்னொரு வகை. அதற்கு இன்னொரு காரணமாய் நான் நினைத்தது. அவர்களுடய விளையாட்டு, கலாச்சாரம். ஒரு பெரிய வரம். மலப்புரத்தில் உள்ள ”Myc Accode” எனும் டீமில் ஏழு மேட்ச் விளையாடி ஹைஜீரியாவிலிருந்து ராபின்சன் எனும் புட்பால் வீரனை அழைத்து வருகிறார்கள். அந்த டீமின் மேனேஜர் மஜீத். முப்பதுகளை கடந்து, இன்னமும் திருமணம் ஆகாமல் இருப்பவன். காரணம் பெரிய விளையாட்டு வீரனாகவும் இல்லாமல், நிரந்தர வருமானம் இல்லாதவனாகவும் இருப்பது ஒர் முக்கிய காரணம். ராபின்சன் என்னதான் தான் நைஜீரியாவிலிருந்து வந்தவன் என்று சொன்னாலும் ஊர்காரர்களைப் பொறுத்தவரை அவனைப்போன்ற ஆட்களை சூடானிலிருந்து வந்தவன் எனக் கூறி சூடானி என்றே அழைக்கிறார்கள். சிறந்த வீரனாய் இருக்கும் ராபின்சனுக்கு திடீரென ஒரு விபத்து ஏற்பட்டு, கால் முறிந்து போகிறது. டீம், மற்றும் மஜீத்தின் நிதி நிலை மிக மோசமாய்...