Posts

Showing posts with the label சர்வம்

சர்வம் - திரைவிமர்சனம்

Image
இயக்குனர் விஷ்ணுவர்தனின் பில்லாவுக்கு பிறகு வெளிவந்திருக்கும் படம். பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்த படம். சர்வம். மனிதனின் வாழ்க்கையில் ஒரு நொடியில் நடக்கும் சம்பவங்கள் அவர்களின் வாழ்கை பாதையையே மாற்றிவிடும். அப்படி மாறும் நேரத்தில் அவர்கள் வாழ்க்கையை எப்படி எடுத்து கொள்கிறார்கள் என்பதே கதை. ஒரு விபத்தில் தன் மனைவியையும், குழந்தையும் பறிகொடுத்த ஈஸ்வர், அந்த விபத்துக்கு காரணமானவரின் பத்து வயது இதய நோய்  பிரச்சனையுள்ள பையன். தன் மகனை இழந்ததால் உன்னையும் உன் மகனையும் பிரிப்பேன் என்று அந்த பத்து வயது சிறுவனை கொல்ல அலையும் ஈஸ்வர்.  ஒரு சக்ஸஸ்புல் ஆர்கிடெக் கார்த்திக், அவன் துறத்தி, துறத்தி காதலிக்கும் டாக்டர் சந்தியா.. இவர்களுக்கு இடையே நடக்கும் ஒரு சம்பவம் எப்படி ஒரு இணைப்பு உருவாகி அந்த பத்து வயது சிறுவனை ஈஸ்வரிடமிருந்து காப்பாற்ற கார்த்திக் போராடுகிறான் என்பதை வெள்ளிதிரையில் பாருங்கள்.   முதல் பாதி முழுவதும் இரண்டு கதைகளாய் பயணிக்கும் திரைக்கதை, இடைவேளைக்கு பிறகு ஒரு கோட்டில் பயணிக்கிறது. முதல் பாதி முழுவதும் கார்த்திக்குக்கும், சந்தியாவுக்கும் இடையே நட...