Posts

Showing posts with the label சலீம்

கொத்து பரோட்டா -01/09/14 -சலீம், அடல்ட் கார்னர், Peruchazhi, Munariyappu,கேட்டால் கிடைக்கும்

கேட்டால் கிடைக்கும் ஃபேம் தியேட்டர் புட் கோர்ட்டில் குடிக்க ஓரமாய் வைத்திருந்த தண்ணீர் கேனை இப்போது கண்ணுக்கு தெரிவது போல வைத்திருந்தார்கள். புட் கோர்ட்டில் கார்டு வாங்கினால் தான் சாப்பிட முடியும் என்று சட்டம் வைத்திருந்தாலும், ஈ அடிக்கும் கூட்டமிருப்பதால் ஒவ்வொரு கடைக் காரரும், ஆளுக்கு ஒர் ஸ்வைப்பிங் கார்டு வைத்து அதைக் கொடுத்து உணவுகளுக்கு காசை கொடுக்க சொல்லி விடுகிறார்கள். கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. இப்போது இவர்களுக்கு ஒர் ஆப்பு வருகிறது அந்த மாலில் ஜூனியர் குப்பண்ணா ஒரு புதிய கிளையை திறக்கிறது. அங்கே இருந்த சிக் கிங் கவுண்டரில் டயட் கோக் வாங்க விலை என்ன என்று கேட்ட போது 35 ரூபாய் என்றார். “அது முப்பது ரூபாதானே?” என்று கேட்ட போது ஆமா.. மால்ங்கிறதுனால 5 ரூபா எக்ஸ்ட்ரா என்றார். அதெப்படி வாங்குவீங்க..? என்று கேட்டதற்கு மாலுக்கு வர்றீங்க இல்லை காஸ்ட்லியாத்தான் இருக்கும் என்றார். அது எப்படிங்க வாங்குவீங்க? என்று கேட்டதற்கு புத்திசாலித்தனமாய் பேசுவதாய் நினைத்து, “சினிமா டிக்கெட் 120 கொடுத்து வாங்குறீங்க.. அங்கேயே 10 ரூபா டிக்கெட்டும் இருக...