Posts

Showing posts with the label english Film reveiw

The Conjuring

Image
இணையமெங்கும் இப்படத்தைப் பற்றி இரு வேறு கருத்துக்கள் உலவிக் கொண்டிருக்கிறது. சொந்த காசுல சூனியம் வச்சிக்க ரெடின்னா போய் பாருங்க என்றும், இன்னொரு பக்கம் சமீபத்தில் பார்த்த சூப்பர் பேய் படமென்று ஒரு தரப்பும் பேசிக் கொண்டிருக்கிறது. ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் எத்தனையோ ஆங்கில படங்கள் வெளியாகியிருக்கிறது. ஆனால் இவ்வளவு கூச்சல் குழப்பம் அப்படங்களுக்கு இருந்ததில்லை. இந்த வேர்ட் ஆப் மவுத் பப்ளிசிட்டிக்கான காரணம் இதன் ட்ரைலர். ட்ரைலரை பார்த்த போதே படம் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தை கொண்டு வந்துவிட்டார்கள். 

DJANGO UNCHAINED

Image
அடிமைத் தளையிலிருந்து பவுண்டி ஹண்டரால் விடுவிக்கபட்ட ஜாங்கோ அவரின் உதவியுடன் வேறு ஊரில் மிக கொடூரமான மனம் கொண்ட டிகாப்ரியோவிடம் அடிமையாய் இருக்கும் அவனின் மனைவி ப்ரூமில்டாவை எப்படி மீட்கிறான் என்பதுதான் கதை. ஒரு பக்கா மசாலா கதை லைனுக்குள் இருக்கும் டீடெயிலிங். மேக்கிங், நடிப்பு என்று ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து பண்ணியிருக்கும் விதம் என வரும் போதுதான் தலைவன் குவாண்டின் நிற்கிறார்.

Mad Money

Image
ஒரு கருப்பினப் பெண் கட்டுக்கட்டாய் பணத்தை குமுட்டி அடுப்பில் போட்டு எரித்துக் கொண்டிருக்கிறாள். இன்னொரு  தம்பதியினர் அவர்களது கக்கூஸ் கம்மோட்டில் பேப்பர் ஷெட்ட்ரை வைத்து பணத்தை தூள் தூளாக வெட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னொருத்தியோ, அவளின் காதல் கணவனின் உதவியோடு, மொபைல் கேரவன் வீட்டில் பணத்தை Rube goldberg machine ஐடியாவை வைத்து  வெடி வைத்து தகர்த்து எரிக்கிறாள். இவர்களின் வயதான தம்பதியினரில் பெண்ணைத் தவிர மற்றவர்களை போலீஸ் கைது செய்கிறது. ஏன்? எதற்கு? என்பது தான் கதை.

Inglorious Basterds

Image
குவாண்டின் இவரது பாதிப்பில்லாத இளைய தலைமுறை இயக்குனர்கள் இருப்பார்களா என்று சந்தேகமே. இவரின் படங்களை விரும்ப ஆரம்பித்தவர்கள் கிட்டத்தட்ட போதைக்கு அடிமையானவர்களைப் போல. அவரிடமிருந்து விடுபட முடியாமல் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருப்பார்கள். பஃல்ப் பிக்‌ஷனை இன்றைக்கு ரிப்ரெஷ் செய்து கொள்ள பார்ப்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும் புதியதாய் ஒரு விஷயம் புலப்படும்.  

Man Of Steel

Image
சமீப காலமாய் சூப்பர் ஹீரோ படங்களை பார்ப்பதற்கு ஒருவிதமான பயம் ஏற்பட்டு விடுகிறது. ஏனென்றால் கற்பனைக்கு அப்பாற்பட்டவன் தான் சூப்பர் ஹீரோ என்ற விஷயத்தை மீறி அவனும் ஒர் சாதாரணன். அவனுக்கு உணர்விருக்கிறது, காதல் இருக்கிறது என்று பழைய எம்.ஜி.ஆர் படத்தையெல்லாம் தூசு தட்டி படமெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் நோலன் போன்றோர் இன்னும் ஒரு படி மேலே போய் கிட்டத்தட்ட சூப்பர் ஹீரோவை ஏசு ரேஞ்சுக்கெல்லாம் தூக்கிப்பிடிப்பதை பார்க்கும் போது இனி ஒரு சூப்பர் ஹீரோ படம் பார்பேனா என்று சந்தேகமே.

Hang Over -3

Image
உலகெங்கும் பாஸ்ட் அண்ட் புயூரியஸ் 6 வசூலில் கலக்கிக் கொண்டிருக்க, இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளிவந்திருந்தாலும், விமர்சகர்களிடையேயும், பாக்ஸ் ஆபீஸிலும் கொஞ்சம் நெகட்டிவ் கமெண்ட் தான் கிடைத்தது. ஆனால் தமிழ்நாட்டில் ரீலீஸான நாள் முதல் ஹவுஸ்புல்லாத்தான் போகிறது.

The Great Gatsby

Image
 டிகாப்ரியோ, டோபி மெக்குயர், கேரி முல்லிகன், அமிதாப்பச்சன், பஸ் லுஹுர்மேனின் இயக்கம், 3டியில் படமாக்கப்பட்டது என ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். F. Scott Fitzgerald 1925ஆம் ஆண்டில் இதே பெயரில் எழுதிய நாவல்தான் இப்படம். ஏற்கனவே பல முறை ப்ராட்வே நாடகங்களாகவும், 1926ல் மெளன படமாகவும், 1949, 74, 2000 என மூன்று முறை  திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு வந்த கதைதான். நம்மூர் அம்பிகாபதி, அமராவதி, வசந்த மாளிகை, தேவதாஸ் போல திரும்பத் திரும்ப சொன்னாலும் உருக வைக்கும் காதல் கதை.

Zero Dark Thirty

Image
9/11 தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க நடத்திய மிகப் பெரிய தேடுதல் வேட்டை அல்கொய்தா தீவிரவாதத் குழுவின் தலைவன் ஓசாமா பின்லேடனுக்காக நடத்திய தேடுதல் வேட்டைதான்.  அந்தத் தேடல் எப்படி நடந்தது. எப்படியெல்லாம் அதன் விசாரணை நடந்தது என்பதை அடிப்படையாய் கொண்டு, ஓசாமாவை கொன்றதை  க்ளைமாக்ஸாக வைத்து  லைவாக சொல்லியிருக்கும் ப்டம் தான் இந்த ஜீரோ டார்க் தர்ட்டி.

CZ12

Image
ஜாக்கி சான் உலகளவில் பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்ட ஒரு நடிகர். இவரது படத்தை விரும்பாதவர்கள் கூட இவரது நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் நடிப்புக்காக விரும்புவார்கள். படிக்கும் காலத்தில் அலங்காரில் ஜாக்கிசான் படம் வெளியான நாளே பார்த்த இம்பாக்ட்டில் அவரைப் போலவே ஓடுவதாய் நினைத்து பஸ்ஸில் புட்போர்ட் அடித்த காலெமெல்லாம் உண்டு. அப்படி ஒவ்வொருவருக்கும் என்னதான் புதிய ஹீரோக்கள் வந்தாலும் இன்றைக்கும் இவருக்கு ரசிகர்கள் பெருகிக் கொண்டுதானிருக்கிறார்களே தவிர குறையவில்லை. அப்படிப்பட்ட ஜாக்கிசான் இனியும் அடிப்பட உடலில் இடமில்லை என்றும் வயது வேறு ஆகிவிட்டதால் இத்துடன் இனி ஆக்‌ஷன் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்த பிறகு வெளிவரும்  படம் சைனீஸ் சோடியாக் 12.

Life Of Pi

Image
60 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் -கேபிள் சங்கர் Ang Lee. இவரைப் பற்றி தெரியாதவர்கள கூட இவரது படங்களைப் பற்றித் தெரியும். Sense And Sensibility, The Crouching tiger Hidden dragon, Brokeback Mountain, The Hulk, Lust Caution  என்று வரிசையாய் விமர்சகர்களின் பாராட்டும், கமர்ஷியல் வெற்றியும் கலந்த பல படங்களின் சொந்தக்காரர். இந்த படத்தின் ட்ரைலைரைப் பார்த்ததுமே படம் பார்த்தாக வேண்டும் என்று சங்கல்பமே எடுக்கும் அளவிற்கு இம்ப்ரசிவ். இதே தலைப்பில் Yann Martel எழுதிய  நாவலை அடிப்படையாய் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த நாவலுக்காக 2002ல் மேன் ஆப் புக்கர் பரிசு பெற்றார்.

ARGO

Image
கலகக்காரர்களுக்கு பயந்து தப்பி, வேறொரு நாட்டின் தூதரகத்தில் மறைந்து கொண்டிருக்கும் ஆறு பேரை அமெரிக்காவின் சி.ஐ.ஏவின் உதவியுடன் அங்கிருந்து தப்புவிப்பதுதான் கதை. மிகச் சாதாரணமான மசாலா படக்கதை என்று தோன்றும் ஆனால் இது ஒரு உண்மை சம்பவம் என்றவுடன் அட என்று எழுந்து உட்கார வைக்கிறது.

Skyfall

Image
ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளிவந்து 50வது ஆண்டு  கொண்டாட்டத்தோடு வெளி வந்திருக்கும் புதிய படம் இந்த ஸ்கைஃபால். பாண்ட் படங்கள் என்றாலே மாசிவ் ஓப்பனிங் காட்சியும் சில்வுட்டில் பறக்கும் சில்வண்டுகளின் நடனத்தோடு வரும் பாடல் டைட்டில் காட்சியும் அத்தனை பிரசித்தம். ஆனால் சமீப காலங்களில் பாண்ட் படங்களை விட சுவாரஸ்யமான சேஸிங் சண்டைக் காட்சிகள் எல்லாம் வரத் தொடங்கிவிட்ட பிறகு இவர்கள் மண்டையை உடைத்துக் கொண்டு ஓப்பனிங் சீன் அமைக்க வேண்டியதாகிவிட்ட நிலையில் சும்மா ஜிவ்வென அட்ரிலின் பம்ப் செய்யும்படியான சேஸிங்கோடு படம் ஆரம்பித்தது.

Taken 2

Image
Taken லீயாம் நீசனின் நடிப்பில் வெளியான படம். முதலில் அமெரிக்காவில் டிவிடி வெளியீடாக வந்தது. பின்பு திரையரங்குகளில் வெளியாகி இதெல்லாம் ஒரு படமா? என்று மீடியாவால் கிண்டலடிக்கப்பட்டிருந்தாலும், கலெக்‌ஷனில் சூப்பர் ஹிட். அந்த முதல் பாகத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என்று ஆளாளுக்கு தம் தம் பங்குக்கு சுட்டு உபயோகப்படுத்திக் கொள்ள, தமிழில் ஆண்மைதவறேலில் க்ளைமாக்ஸிலும், தலைவர் கருப்பு எம்.ஜிஆர் விஜயகாந்த் தன் கடைசி படமான விருதகிரியில் முழுவதுமாய் எடுத்து தள்ளி வெற்றி வாகை சூடியதற்கான காரணப் படம் இந்த டேக்கன்.

The Amazing Spiderman

Image
Spiderman சீரிஸ் படங்களை விரும்பியோ விரும்பாமலோ தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த வாரம் தமிழ் படங்கள் ஏதுமில்லாததாலும், சத்யமின் புதிய எஸ்2வை ஒரு லுக் விட்டு வரலாம் என்ற எண்ணத்திலும் ஸ்பைடர்மேன்.

Madagascar -3

Image
கார்ட்டூன் படங்கள் எனக்கு எப்போதும் பிடிக்கும். மிகச் சுமாரான கதைக் களன் உள்ள படங்கள் கூட பின்னணியில் உள்ள அனிமேட்டர்களின் உழைப்பினாலும், ஏதோ ஒரு புதிய விஷயத்தை அவர்கள் தொடர்ந்து அனிமேஷன் மூலம் முயன்று கொண்டேயிருப்பதை பார்க்கும் போதும், குழந்தைகளை டார்கெட் செய்து அவர்கள் சொல்லும் விஷயங்கள் எல்லாவற்றிலும் ஒரு விதமான டெம்ப்ளேட் இருந்தாலும், சுவாரஸ்ய பின்னலாய் நிறைய விஷயங்களை மெனக்கெட்டுக் கொண்டேயிருப்பதால் கார்டூன் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பிக்சாரின் படங்களைத் தவிர, மற்ற படங்களை 2டியில் பார்ப்பதை தான் மிகவும் விரும்பியிருக்கிறேன். எனக்கென்னவே 3டியில் கார்டூன் ஒட்டவில்லை. சரி மடகாஸ்கருக்கு வருவோம். அலெக்ஸ், மார்ட்டி, க்ளோரியா, மெல்மென் ஆகியோர் இன்னமும் அவர்களுடய நியூயார்க் ஜூவுக்குள் போகும் கனவை நோக்கி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இம்முறை எப்படியாவது போய்விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் போவது ஈரோப் முழுவதும் சர்க்கஸ் மிருகங்கள் என்ற பொய்யின் பேரில். காரணம். அலெக்ஸை துரத்தும் நியூயார்க் சிங்கப் போலீஸ் பெண்மணி.  ஒரு பக்கம் துரத்தும் விபரீதணியான அந்த போலீஸ். இன்னொரு...

Men In Black -3

Image
முதல் பாகம் பார்த்த போது இருந்த ஆர்வம் இரண்டாவது பாகம் பார்க்க வரவில்லை. அதனால் பார்த்தேனா என்ற சந்தேகம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. வேறு வழியேயில்லாமல் எல்லாம் சில படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த வரிசையில் இதுவும் ஒன்றாய் இருந்துவிட்டு போகட்டும் என்று போய் உட்கார்ந்தேன்.

Man On A Ledge

Image
நியூயார்க் நகரத்தின் முக்கியமான ரூஸ்வெல்ட் ஓட்டலின் உயர்ந்த மாடிகளைப் நிமிர்ந்து பார்த்தபடி ஒர் இளைஞன் அதற்குள் நுழைக்கிறான். பார்ப்பதற்கு படு ஸ்மார்ட்டாகவும், ஹெப்பாகவும் இருப்பவன்.தனக்கென ஒர் அறையை எடுத்துக் கொண்டு மிக சாவதானமாய் அந்த அறையின் கதவுகளை திறந்து எட்டிப்பார்க்கிறான். அறைக்குள் அவன் தொட்ட எல்லாவற்றையும் கைரேகைகளை அழித்துவிட்டு, ஒரு சின்ன பேப்பரில் “நான் ஒரு அப்பாவி. குற்றமற்றவன்” என்று எழுதிவிட்டு, ஜன்னல் கதவை திறந்து கொண்டு முப்பதாவது மாடியின் விளிம்பிலிருந்து கீழே குதிக்க தயாராகிறான். இது தான் படத்தின் முதல் காட்சி. அரைத்தூக்கத்தில் படத்தைப் பார்க்க ஆரம்பித்த நிமிடங்களில் தூக்கம் கலைக்க வைத்த ஓப்பனிங் சீன்.

Transit (2012)

Image
தமிழ் வலையுலகில் முதன் முதலாய் 50 லட்சம் ஹிட்ஸுகளை பெற்ற தளமாக்கிய வாசக அன்பர்களுக்கும், பதிவுகலக நண்பர்களுக்கும் என் நன்றி.. நன்றி.. நன்றி.. சமயங்களில் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாத சில ஆவரேஜ் படங்கள் நம்மை கவர்ந்துவிடும். ஒரு நாள் இரவு தூக்கம் வராமல் ஹெச்.டியில் பார்க்க ஏதாவது படமிருக்கிறதா என்று ஹார்டிஸ்கில் தேடிக் கொண்டிருந்த போது இந்த படம் கிடைத்தது.

Good Night Good Morning

Image
  இரண்டு பேர் தொடர்ந்து போனில் பேசிக் கொண்டிருப்பதை மட்டுமே 73 நிமிடங்கள் காட்டினால் உங்களால் பொருந்தி உட்கார்ந்து பார்க்க முடியுமா? வெட்டியாய் அறிமுகமில்லாத ஆணும், பெண்ணும், பேசிக் கொள்வதில் என்ன பெரிய சுவாரஸ்யமிருந்து விடப் போகிறது?. இம்மாதிரியான பேச்சில் அவ்விரண்டு பேருக்குத்தான் சுவாரஸ்யமான ஸ்வீட் நத்திங்காக இருக்குமேயன்றி, மற்றவர்களுக்கு சுவாரஸ்யமாய் இருக்குமா? ஒரு நாள் இரவு போன் பேச்சில் கடலைப் போட்டு, காதல் சொல்லி, பிரிவு உண்டாகி, அந்த சிறிய பிரிவு மேலும் அவர்கள் உறவை நெருக்கமாக்க முடியுமா? சினிமா எடுப்பதற்கு பெரிய நடிகர்கள், டெக்னீஷியன்கள் தேவை என்று நம்புகிறவரா? இப்படியெல்லாம் தொடர்ந்து பல கேள்விகளை உள்ளடக்கியவரா நீங்கள் உங்களுக்கு இந்தப் படம் பதில் சொல்லும். பிரபல பத்திரிக்கையாளரும், விமர்சகருமான சுதீஷ்காமத்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இண்டியன் ஆங்கிலப் படம். அமெரிக்காவில் இதை இண்டிபெண்டட் மூவி என்று சொல்வார்கள்.

Mission Impossible -4

Image
மிஷன் இம்பாஸிபிள் முதல் இரண்டு பாகங்களுக்கு நான் அடிமை. மூன்றாவது பாகம் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அதற்கேற்றார் போல படத்தின் டிரைலர் வேறு என்னை கவர்ந்திழுக்க இதோ மிஷன் இம்பாசிபிள்.