இணையமெங்கும் இப்படத்தைப் பற்றி இரு வேறு கருத்துக்கள் உலவிக் கொண்டிருக்கிறது. சொந்த காசுல சூனியம் வச்சிக்க ரெடின்னா போய் பாருங்க என்றும், இன்னொரு பக்கம் சமீபத்தில் பார்த்த சூப்பர் பேய் படமென்று ஒரு தரப்பும் பேசிக் கொண்டிருக்கிறது. ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் எத்தனையோ ஆங்கில படங்கள் வெளியாகியிருக்கிறது. ஆனால் இவ்வளவு கூச்சல் குழப்பம் அப்படங்களுக்கு இருந்ததில்லை. இந்த வேர்ட் ஆப் மவுத் பப்ளிசிட்டிக்கான காரணம் இதன் ட்ரைலர். ட்ரைலரை பார்த்த போதே படம் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தை கொண்டு வந்துவிட்டார்கள்.
கதை என்று பார்த்தால் எல்லா பேய் படங்களிலும் வருமே அதே தனி வீடு, ஒரு புது குடும்பம் குடியேறுவது. அந்த குடும்பத்தில் கட்டக் கடைசியாய் ஒரு குட்டி க்யூட் பெண் இருப்பது. வீட்டின் வாசலில் மரம் இருப்பது. வீட்டிற்கு வந்த உடனே நாய்க்கு மட்டும் பேய் இருப்பது தெரிவது. சின்னச் சின்ன நிகழ்வுகளாய் நம்முள் பயத்தை ஏற்படுத்துவது. பின்பு க்ளைமாக்ஸில் உச்சபட்ட நிகழ்வுகளையெல்லாம் நிகழ்த்தி ”இன் த நேம் ஆஃப் ஜீசஸ்” என்று பைபிளிலிருந்து வாசகங்கள் வாசித்து பேயோட்டப்பட்டு, வேறொரு இடத்தில் அந்தப் பேய் மீண்டும் வரும் என்பது போல முடிப்பது தான் கதை என்றாலும், அதை சொன்ன விதத்தில் தான் நம்மை கட்டிப் போடுகிறார்கள்.
ஆரம்பக் காட்சியிலேயே ஒரு சின்ன ஜெர்க்கை கொடுக்க ஆரம்பித்தவர்கள். பேய் ஓட்டும் தம்பதியினர் வந்த மாத்திரத்தில் இன்னும் லேசாய் சூடு பிடிக்க ஆரம்பித்த திரைக்கதை, தம்பதியினரின் மகளையும் பேய் அட்டாக் செய்யும் போது இன்னும் விறுவிறுப்பாகிறது. துணி காய வைக்கும் போது வரும் காட்சியும், இன்னும் ஓரிரு காட்சிகளும் டெரர். கோர முக பேய்களாகவும் இல்லாமல், ஜப்பானிய வெளுத்துப் போன பேய்களாகவும் இல்லாமல், கொஞ்சம் இயல்பான பேய்களாய் காட்டியதிலும், சிஜி அவ்வளவாக உபயோகிக்காமல் குடும்பம், அவர்களிடையே இருக்கும் நெருக்கம், அம்மாவே தன் பெண்ணைக் கொல்ல அலையுமிடம் என்று செண்டிமெண்டெல்லாம் கலந்தடித்து கொடுத்திருப்பதால் அரங்கு நிரம்பி வழியும் காட்சிகளில் ரசிகர்கள் பயத்தில் சில இடங்களில் கத்துவதையும், படத்தில் க்ளாப் அடிக்கும் காட்சிகள் வரும் போதெல்லாம் இவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்யுமிடங்கள், என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தம்பதிகளில் டீன் பெண் பயத்தில் தலை குனிந்து கொண்டே திருட்டுத்தனமாய் பார்த்ததையெல்லாம் வைத்து பார்க்கும் போது இந்த பேய் கொஞ்சம் பழசாய் இருந்தாலும் ஒரு ரவுண்டு வருமென்றுதான் தோன்றுகிறது.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
அண்ணே . .
நீங்க அதை கவனிச்சதும் திருட்டுத்தனம்தான்
கதம்பம் 05-08-13
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்