Posts

Showing posts with the label chillers party

Chillar Party

Image
தமிழில் இம்மாதிரியான படங்கள் வருவதற்கான சாத்தியங்கள் தற்போதைய நிலையில் இல்லவேயில்லை என்று சொல்லலாம். ஆம் நிச்சயம் வருவது சந்தேகம் தான். ஏனென்றால் இப்படத்தை வெளியிட்டுள்ள யூடிவி ஸ்பாட்பாய் நிறுவனம் தமிழில் நுழைந்ததும் பெரிய பட்ஜெட் படமான விக்ரமின் “தெய்வதிருமகள்” படத்தைத்தான் வாங்கியிருக்கிறது. முழுக்க முழுக்க குழந்தைகள் படமான இம்மாதிரி படத்தையோ, ஒரு சின்ன பட்ஜெட் படத்தையோ ஆதரிக்கவில்லை. ஆனால் ஹிந்தியில் பல சிறந்த சிறு முதலீட்டு படங்களை வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் க்யூட்டான ஒரு குழந்தைகள் படத்தை கொடுத்ததற்கு யூடிவியையும், தைரியமாய் தயாரித்த சல்மான்கானையும் பாராட்டத்தான் வேண்டும்.