புத்தக கண்காட்சி -2
வழக்கமாய் முதல் நாளே ஆஜராகி விடுவேன். தொட்டால் தொடரும் படத்தின் டப்பிங் வேலைகள் காரணமாய் முடியவில்லை. பொங்கல் விடுமுறைக்காக எல்லாம் பேக்கப் செய்யப்பட்டதால் மாலையில் முதல் விஜயம். வழக்கம் போல வாசலிலேயே பார்க்கிங் ஏற்பாடு டூவீலர்களுக்கு. கார்களுக்கு ஊரைச் சுற்றி பின் பக்கம். ஆனால் போன முறை போல உள்ளே போகும் வழிகள் எல்லாம் தெளிவாய் வரவேற்பு வளைவுகள் எல்லாம் வைத்து அசத்தியிருந்தார்கள். முன் பக்க விழா மேடை இம்முறை கொஞ்சம் விசாலமாய் இருந்தது. வழக்கம் போல் வண்டியை பார்க் செய்துவிட்டு திரும்பிய போது எழுத்தாளர் இளங்கோ அவரது மனைவியுடன் எதிர்பட்டார். சிறிது நேரம் பொதுவாய் பேசிவிட்டு கிளம்பும்போது அவரது உங்களது விமர்சனமில்லாமல் மொக்கை படத்துக்கெல்லாம் போய் மாட்டிக் கொள்கிறோம் என்றார். அவர்கள் சென்ற பிறகு இன்னொரு நண்பர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு உங்களது சாப்பாட்டுக்கடை படித்துவிட்டு எல்லா கடைகளிலும் என் குடும்பத்துடன் சாப்பிடுவேன் என்றார். மகிழ்ச்சியாய் இருந்தது.