சிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கொடுப்பதில்லையா?
கடந்த ரெண்டு நாட்களாய் இணையத்தில் தியேட்டர் கிடைக்காததால் சிறு படங்களை வெளியிட முடியவில்லை என்றும் , சமீபத்தில் வெளியான சிறு முதலீட்டு படம் ஒன்றை , பெரிய விநியோகஸ்தர்கள் , தியேட்டர்காரர்கள் திரையிட மறுப்பதாகவும் , சிலர் வேண்டுமென்றே தடையேற்படுத்த நினைப்பதாகவும் ஆளாளுக்கு படத்தைப் பற்றியோ , இந்த தொழிலைப் பற்றியோ தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்க , படத்தின் இயக்குனர் குழுவினர் , யூடூயூப் விடியோவில் அழுதெல்லாம் படத்திற்கு கும்பல் சேர்க்க முயற்சித்தார்கள். பட் நோ யூஸ்.