Posts

Showing posts with the label film review

Atkan Chatkan - Film Review

Image
  ஒர் ஏழை சிறுவன். அவனது அபார கவனிப்பாரற்ற இசை திறமை. க்ளைமேக்ஸில் என்ன ஆவான்? சொல்லுங்க. 1.அப்பா, அம்மா பெரிய வித்வான். ரைட் 2. அப்பா அம்மா பிரச்சனையில் இருவரும் பிரிவு. அப்பா குடிகாரர். ரைட் 3. பையனின் திறமையை பத்திருபது சீனுக்கு பிறகு அடையாளம் கண்டு கொள்ளும் கல்லூரி அல்லது பள்ளி தாளாளர். ரைட் 4. பையன் நாலு பையன் பொண்ணுடன் சேர்ந்து தகரம், குச்சி, போன்றவற்றை வைத்து இசைக்குழு நடத்துவது. ரோட் சைட் குழந்தைகள் நிச்சயம் அவர்களை வைத்து சம்பாரிக்கும் வில்லன்கள். பள்ளியில் பணக்கார மீசிக் படிக்கும் இளைஞர்கள் அவர்களால் இந்த சிறுவர்களுக்கு பிரச்சனை. க்ளைமேக்ஸில் ஓடி தப்பித்து வந்து பாடி அல்லது வாசித்து ஜெயிப்பது. ரைட்டு ரைட்டு ரைட்டு. எல்லா ரெடி. எடுப்பா ஒரு ஃபீல் குட் மிசிக்கல் படத்தை என்று எடுத்துவிட்டார்கள். ட்ரம்ஸ் சிவமணி தான் இசை. அவரது ட்ரம்ஸ் தான் ஆதாரம். படம் நெடுக ஒரே குழப்பம். பாடல் பாடுகிறவர்களை செலக்ட் செய்வார்களா? அல்லது ட்ரம்ஸ் தான் மூலமா? எது நல்ல இசையை தீர்மானிக்கிறது? ஏனென்றால் சிவமணி என்றால் ட்ரம்ஸ் தான். பாட்டாய் நல்ல ரிதத்தோடு நன்றாகவே இருக்கிறது. ஆனால் எந்த திறமைக்கு அவர...

Gantumoote - காதலெனும் சுமை.

Image
எத்தனை சினிமா பார்த்துவிட்டு அசைப்போட்டுக் கொண்டே இருந்திருக்கிறோம்?. என்று யோசித்தோமானால் கொண்ட்டாட்ட சினிமாக்கள் மிக சிலதைத் தவிர மனதுக்கு நெருக்கமான கதைகளை கொண்ட படங்களையே. எல்லா படங்களும் எல்லாருக்கும் பிடித்துவிடுவதில்லை. ஆனால் காதல் கதைகள் எல்லோருக்கும் பிடிக்கிறது. ஆனால் காதல் கதைகள் பெரும்பாலும் ஆண்களின் பார்வையிலேயே சொல்லப்பட்டு பழக்கமாகி விட்டதினால்  ஈஸ்ட்ரோஜோன் குறைவாய் போன பெண் போல ஆகிவிடும். எமோஷனல் வேல்யூ குறைந்து போய்.  இந்த கண்டுமூட்டே ஒன்றும் இது வரை யாரும் சொல்லாத காதல் கதையில்லை. ஆனால் பெரும்பாலும் சொல்லப்படாத பெண்ணின் பாயிண்ட்டாப் வியூவில் சொல்லப்பட்டிருக்கும் கதை. அத்தனை க்யூட். மீரா தேஷ்பாண்டே எனும் பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் பெண்ணுக்கும் அவளின் க்ளாஸில் படிக்கும் மதுசூதனுக்கும் இடையே வரும் முதல் காதலைப் பற்றியதுதான்.  சில பள்ளி ஜோடிகளைப் பார்கையில் இந்த பொண்ணு எல்லாம் எப்படி இவனோட சுத்துது என்ற கேள்வி தோன்றாமல் இருக்காது. நாம் அந்த வயதில் சுற்றும் போது அப்படித்தான் அந்நாளைய பெருசுகள் நினைத்திருக்கும். ஹம் ஆப் கே ஹே கோன் இந்தி படத்தை ப...

Igloo- அன்பின் கதகதப்பு

Image
Igloo- அன்பின் கதகதப்பு தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக அளவில் மனதுக்கு நெருக்கமாய், சின்னச் சின்ன உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்கள் இப்போதெல்லாம் அவ்வளவாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் சீரியல் கண்டெண்ட் என்று மிக சுலபமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டு அவெஞெர்ஸோ, சிங்கம் 3 பார்க்க போய்விடுகிறோம். தயாரிப்பாளர்களும் இனி இம்மாதிரியான ஆர்டிஸ்ட் படம் தான் ஓடும் என்று முடிவெடுத்து நம்மை கொலையாய் கொல்வார்கள். ஃபீல் குட் படங்கள், குடும்ப உறவுகளைச் சொல்லும் படங்கள். மிக அழுத்தமான கருக்களை கொண்ட கதைகள். சின்ன த்ரில்லர்கள் போன்றவைகள் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாய் வியாதியை, ஆஸ்பிட்டலை அடிப்படையாய்க் கொண்டு எடுக்கப்படும் கதைக்களன்களை தொடுவதற்கு எல்லோருமே பயப்படும் படியான காலமாகிவிட்ட நிலையில், அக்டோபர் போன்ற மிகச் சில ஹிந்தி படங்கள் மெல்லிய நம்பிக்கையை கொடுக்க வரும். ஆனால் அப்படமே இயக்குனரின் பெயரால் நற்பெயர் பெற்றதேயன்றி பெரும் வசூல் எல்லாம் கிடையாது. அப்படியான இன்றைய பரபர சினிமாவில் நிறுத்தி நிதானமாய் ஒர் அழகிய தமிழ் திரைப்படம் சாரி.. தமிழ் இணையப்படம் இக்லூ. ஓ.டீ.டீ எனும் இம்மாதிரியான ப்ளாட...

Peechankai - Silent Review

Image

Eithavan - Silent Review

Image

Kong Skull Island - Silent Review

Image

Yaman - Silent Review - Tamil Film Review

Image

Rangoon - Hindi Film Review - Silent Review

Image

Soggade Chinni Nayana

மனம் படத்திற்கு பிறகான நாகார்ஜுனின் படம். டபுள் ஆக்‌ஷன். ர்மயா கிருஷ்ணன், லாவன்யா திரிபாதி, ப்ரம்மானந்தம் என வழக்கம் போல நட்சத்திர பட்டாளம் கொண்ட படம். கதையென்று பார்த்தால் பங்கார்ராஜு இளம் வயதில் இறந்து போய் நரகத்தில் கூட சுற்றி பேய் பிகர்களுடன் சுற்றிக் கொண்டிருக்கும் அஜாய் குஜால் நாயகன். இங்கே பூமியில் அவனுக்கு பிறந்த நாகார்ஜுனுக்கும் அவருடய மனைவி லாவன்யா திரிபாதிக்கும் ப்ரச்ச்னை. கணவர் தன்னை கவனிப்பதேயில்லை. ஏன் கல்யாணமான ஒரு வருஷத்தில் மூணே மூணு முறை தான் மேட்டரே நடந்திருக்கிறது எனும் நிலை. இருவருக்குமான புரிதல் இல்லாததால் அம்மாவிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு விடுதலை கொடுக்கிறேன் என்று அமெரிக்காவிலிருந்து வருகிறார்கள். வந்த இடத்தில் அம்மா ரம்யா கிருஷ்ணன் தன் கணவனின் படத்தின் முன் உன்னைப் போல ஸ்திரிலோலனாய் ஆகிவிடக்கூடாதே என்று பொத்தி பொத்தி வளர்த்தது தப்பாயிருச்சே. இப்ப என்ன பண்ண? என்று இறைஞ்ச, மேலோகத்தில் அதை கேட்ட எமதர்மன் பங்காரு ராஜுவை அவன் மனைவிக்கு உதவ அனுப்புகிறார். அதாவது ஒரு பெளர்ணமி நாளில் திரும்பி வர வேண்டுமென்றும், மனைவியின் கண்களுக்கு மட்டும் பார்க்க, கேட்க முடியுமென...

The Source -2011 - La Source des femmes

Image
90 லட்சம் ஹிட்ஸுகளை  அளித்து, தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டிருக்கும் வாசகர்கள், நண்பர்களுக்கு என் நன்றிகள்- கேபிள் சங்கர் ரொம்ப நாளாக பார்க்க வேண்டுமென்று டவுன்லோட் செய்து பார்க்காமல் இருந்த படம். நேற்றிரவு பார்க்க ஆரம்பித்து, தூக்கமே வரவில்லை. அவ்வளவு அழுத்தமான படம். கதையென்று பார்த்தால் மிக சிம்பிளான கதைதான். வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒர் குக்கிராமத்தில் 15 வருடங்களாய் வறட்சி. நெடும்தூரம் நடந்து சென்று அங்கிருந்து தண்ணீர் கொண்டு வருவது பெண்களின் வேலை. ஆண்கள் வேலைக்கு போகாமல் ஊர் எல்லையில் டீ கடை பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு பஞ்சாயத்து செய்து கொண்டிருப்பவர்கள். ஊருக்கு தண்ணீர் வர வழைப்பதற்காக ஊரில் உள்ள பெண்கள் அனைவரும் செக்ஸ் ஸ்ட்ரைக்கில் ஈடுபடுகிறார்கள். அதாவது தம்தம் கணவர்களுடன் உறவில் ஈடுபடாமல் ஸ்ட்ரைக் செய்கிறார்கள். நடந்தது என்ன என்பது தான் கதை.

கொத்து பரோட்டா -08/12/12

Image
நடு நிசி (பகல்) கதைகள் சென்ற வாரம் நண்பன் பெஸ்கியின் வீட்டு கிரகப்பிரவேசம். அதற்காக நானும் கே.ஆர்.பியும் சென்று கொண்டிருந்தோம். மீனம்பாக்கம் தாண்டியவுடன் சிக்னலைத் தாண்டி ஒர் இடத்தில் ரேபான் போட்ட ஓர் டிராபிக் கான்ஸ்டபிள் திடீரென புகுந்து வழி மறித்தார் அங்கே இருந்த மக்கள் கிராஸ் செய்வதற்காக, நாங்களும் நிறுத்தினோம். கொஞ்சம் அவரின் அருகில். ரேபானுள் வழியாய் என்னைப் பார்த்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கேயிருந்த பெண் காவலரைப் பார்த்து “ உங்க டீடெயில் கொடுத்துட்டு போங்க’ என்றார். “ஏன்?” என்று கேட்டதற்கு சும்மாதான் என்றார். வழக்கம் போல வந்த பெண் போலீஸிடம் “என் போன் நம்பர் தவிர எல்லா டீடெயிலும் கொடுப்பேன்”. என்றதும் வாழக்கம் போல அவரும் ஏன் என்று கேட்க என் பர்சனல் டீடெயிலை கொடுக்க, அல்லது கொடுக்க கட்டாயப்படுத்த உங்களுக்கு ரைட்ஸ் இல்லை என்றேன். அதை புரிந்து கொள்ளாமல் “பாருங்க சார்.. நமக்கு ரைட்ஸ் இல்லையாம்” என்று பொத்தாம் பொதுவாய் அங்கிருந்த ட்ராபிக் சார்ஜெண்டிடம் முறையிட, “சார்.. நான் உங்களுக்கு என் வண்டி பேப்பர், டீடெயில்ஸ், இன்சூரன்ஸ், என் லைசென்ஸ் எல்லாமே கொடுக்க கடமைப்பட்டிர...

என்னை தெரியுமா- திரைவிமர்சனம்

Image
குறுகிய காலத்தில் 75,000 ஹிட்ஸுகளை கொடுத்து, மேலும் ஆதரிக்கும் வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் நன்றிகள் பல கோடி.. தெலுங்கில் 'நேநு மீக்கு தெலுசா" என்கிற பெயரில் 2008 அக்டோபரில் வெளிவந்த படம். தெலுங்கில் பிரபல நடிகர் மோகன் பாபுவின் மகன் மனோஜ் நடிதது தமிழிலும், தெலுங்கிலும் ஒரு சேர எடுக்கப்பட்ட படம். கதை ஒன்றும் பெரிசாக இல்லை. வழ்க்கம போல கஜினி மெமரி லாஸ் கதைதான். என்ன கஜினியில் 15 நிமிடம் என்றால் இதில் ராத்திரி தூங்கி எழுந்தால் முதல் நாள் நடந்தது தெரியாது. தினமும் அன்றைய நிகழ்ச்சிகளை, அவனை பற்றிய விவரங்களை டேப் ரிக்கார்டரில் போட்டு கேட்டு வாழ்கையை நடத்துபவ்ன், மிகப் பெரிய கோடீஸ்வரன். அவனுடய காதலி ரியா சென். அவனுக்கு ஞாபக சக்தி வரும் வரை தன் கண் எதிரே வைத்து பார்த்து கொள்ள அவனுக்கு ஒரு மேனேஜர் வேலையில் அமர்த்தில் தன் கண்காணிப்பில் கவனித்து வருபவர் சித்தப்பா நாசர். அவர் ஒரு நாள் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலைபழி மனோஜ் மீது விழுகிறது. சினேகா உல்லால்.. ஐ.பி.எஸ் ஆபீசராக வருகிறார். ப்ளாஷ் பேக்கில் மனோஜும், சினேகா உல்லாலும் காதலர்கள். மனோஜுக்கு ஞாபக சக்தி போனது எப்படி? மீண்டும் ஞா...

படிக்காதவன் - திரைவிமர்சனம்.

Image
கொடுமை, கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்கே ஒரு கொடுமை ஜிங்கு.. ஜிங்குன்னு ஆடிச்சாம். அது போலத்தான் வில்லுக்கு போய் நொந்து போய் படிக்காதவனுக்கு போனா அங்கெ அத விட கொடுமை. எங்கேயிருந்துதான் யோசிக்கிறாங்களோ..? எதை நம்பி இந்த நடிகர்கள் எல்லாம் இது எல்லாம் ஒரு கதைன்னு கேட்டு ஓகே பண்ணி.. அதுக்கு பல கோடி ரூபாய் செலவு செய்யுறாங்களோ..? படத்தோட கதை என்னன்னா..? மெத்த படிச்ச குடும்பத்தில படிப்பே வராதா கடைக்குட்டி தனுஷ். படித்த பெண்ணை காதலித்தால் தான் படிக்காததை சரி செய்துவிடலாம்னு நண்பர்கள் சொன்னதை கேட்டு லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்ல தமன்னாவை லவ் பண்ணுறார் தனுஷ். எல்லாம் கூடி வரப்ப தீடீர்னு அவங்க அப்பா.. ஹெலிகாப்டர்ல வந்து கூட்டிட்டு போயிடுறாரு. அதுக்கு அப்புறம் தமன்னாவை தேடி ஆந்திராவுக்கு விவேக்கோட போறாரு. அங்கே போனா ஓயிட் டிரஸ், ரெட் துப்பட்டா போட்ட சுமன் கும்பலுக்கும், அன்யூனிபார்ம்ல இருக்கிற சாயாஜி ஷிண்டே குருப்பும் ரெண்டு கேங்கு லீடரும் ஒருத்தரை ஒருத்தர் ‘வேசையிண்டிரா..” என்று சொல்லிவிட்டு பின்னால் போய்விடுகிறார்கள். இருவர் கும்பலும் குருஷேத்திர போர் போல கத்தி, கபடா, துப்பாக்கி என்று அடித்து கொள்கிறார...

காதல்னா சும்மா இல்ல.. திரைவிமர்சனம்

Image
சக பதிவர்கள்.. வாசக நண்பர்கள் அனைவருக்கும் பொங்கள் நல்வாழ்த்துக்கள் தெலுங்கில் “கம்யம்’ என்ற பெயரில் வெளிவந்து கமர்சியலாகவும், விமர்சகர்களின் பாராட்டையும் ஒரு சேர அள்ளிய படம். படத்தின் பெயரை வைத்து காதல் கதை என்று நினைக்கிறவர்களுக்கு, காதலை விட மேலான வாழ்கையை நோக்கி செல்லும் படம். தன் காதலியை தேடி அலையும் அபிராம் என்கிற ஒரு கோடீஸ்வர இளைஞன் வழியில் சந்திக்கும் நிகழ்வுகள் மூலம் வாழ்கையை புரிந்து கொள்கிறான். வழக்கமான காதல் கதையாய் இல்லாமல் காதல் மூலமாய் வாழ்கையின் தேடல்களை தர முயற்சித்திருப்பதால் வித்யாசமான படமாய் அமைகிறது. மோட்டார் சைக்கிள் டைரிஸ் என்கிற படத்தின் தாக்கம் படத்தில் இருந்தாலும், இயல்பான திரைக்கதையால் நம்மை ஒன்ற வைத்துவிடுகிறார்கள். அபிராம் ஒரு மிகப் பெரிய கோடீஸ்வரன். ஜானகி என்கிற டாக்டர் பெண்ணை துரத்தி, துரத்தி காதலிக்கிறான். ஜானகி ஒரு சோஷியல் கான்ஷியஸ் இருக்கிற மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே வாழ்கிற பெண். அபிராமோ.. அவனுடய வாழ்கையில் மற்றவர்களுக்கான இடமே இல்லாதவன். இவர்கள் இருவருக்கும் காதல் வர இருக்கும் தருணத்தில் ஒரு விபத்தினால் அவர்கள் பிரிகிறார்கள். அதற்கு பிறகு ஜானகியை க...

எ.வ.த.இ.ம.படம் -Slumdog Millionaire

Image
படம் பார்த்துட்டு ஒரு இரண்டு மணிநேரத்துக்கு என் மனம் முழுவதும் ஜமால் மாலிக், மாலிக், லதிகா என்றே உழன்று கொண்டிருந்தது. What a movie yaar..? படத்தின் கதை ஜமால் மாலிக் என்கிற 18வயது கால்சென்டரில் டீ பாய்யாக வேலை செய்யும், ஒருவன் நமது கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எல்லா கேள்விகளுக்கும் சரியான் பதிலை சொல்லி அசத்துகிறான். நிகழ்ச்சியை நடத்தும் அனில் கபூருக்கு ஒரு சாதாரண குப்பத்தில் அனாதையாய் வளர்ந்த இவனுக்கு எப்ப்டி இந்த பதில்கள் தெரியும், இதற்கு பின்னால் ஒரு சதியிருக்கும் என்று சந்தேகப்பட்டு, கடைசி கேள்வியின் போது நிகழ்ச்சியின் நேரம் முடிய, அன்று இரவு அவனை போலீஸில் பிடித்து கொடுக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் அவனை டார்சர் செய்யும் காட்சியிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. டார்சரின் முடிவில், தனக்கு எவ்வாறு அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தெரிந்தது என்று தன் வாழ்கையை சொல்கிறான். முஸ்லிம்கள் அதிகமாய் வசிக்கும் மும்பை குப்பத்தில் இந்துக்கள் கலவரத்தில் தன் தாயை இழந்து அனாதையான சகோதரர்கள், அவர்களுடன் சேரும் லதிகா என்ற சிறுமி, இவர்கள் மூவரும் ஒரு கொடிய மனமுள்ள குழந்தைகளை வைத்து, அவ...

திண்டுக்கல் சாரதி - திரை விமர்சனம்

Image
தாழ்வுமனப்பான்மையுள்ள ஒருவனை பற்றிய கதை. தான் கருப்பாக இருப்பதால் பல பெண்களால் நிராகரிகப்பட்ட சாரதிக்கு திடீரென சிகப்பான ஒரு தேவதை போன்ற வசந்தா மனைவியாகிறார். தனக்கு வந்த அதிர்ஷ்டத்தை வைத்து கொண்டாடமுடியாமல், தன் தாழ்வு மனப்பான்மையால், அவளை சந்தேகித்து, மனநிலை பாதிக்கப்பட்டு அவதிபட்டு பின்பு மருத்துவத்தினால் சரியாகி சந்தோசமாக வாழ்கிறான் சாரதி. கதை இவ்வளவுதான், ஆனால் அதை சொல்வதற்கு ரொம்ப நேரம் எடுத்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே மளையாளத்தில் சீனிவாசன் நடித்து சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் வந்த ‘வடக்கு நோக்கி எந்திரம்’ படத்தின் தமிழாக்கம் தான். அதை அப்படியே எடுத்திருப்பதனால் இந்த படமும் ஒரு பத்து வருடம் பின்னோக்கியே இருக்கிறது. காட்சியமைப்புகளில், வசனங்களில், நடிப்பில் என்று எல்லா விஷயங்களிலும். பல காட்சிகள் காமெடி என்கிற பெயரில் எரிச்சலூட்டிகிறது. அதிலும் ஆரம்ப காட்சியில் கருணாசை யானை தூக்கி கொண்டு போவது, மிகவும் நீளமான போர் காட்சி, அதே போல் அவர் தன் மனைவியை எப்போது தன் தம்பியுடன் சந்தேகித்தாரோ.. எப்போது நடிகர் அஜித்குமார் தன் மனைவியுடன் தொடர்பு வைத்து கொண்டிருக்கிறார் என்று போலீ...

சிலம்பாட்டம் - திரைவிமர்சனம்

Image
மீண்டும் ஒரு பக்காவான ஃபார்முலா மசாலா படம். காளை படத்தின் பெரிய தோல்விக்கு பிறகு சிம்பு நடித்து வெளிவ்ந்திருக்கும் படம். முழுக்க, முழுக்க ஒரு சூப்பர் ஹீரோ கேரக்டருக்காக சிம்பு நிறையவே உழைத்திருக்கிறார். நன்றாக ஆடுகிறார்.. சண்டை போடுகிறார், அவ்வப்போது நடிக்கவும் முயற்சிக்கிறார், பழைய விரல் வித்தைகளை மீண்டும் எடுத்துவிடுகிறார், தனக்கு மூன்று மொழிகள் தெரியும் என்பதற்காகவே, தமிழ், தெலுங்கு, இந்தி என்று பேசுவதற்காக, ஒரு டுபாகூர் காட்சியமைத்து, அதில் பில்லா காஸ்டியூமில் வலம் வருகிறார். அம்மாஞ்சியாய் தன் தாத்தாவால், சாப்பாட்டில் கூட உப்பு, காரம் சேர்காமல் வளர்க்கபடும் பேரன் சிம்பு, எங்கே அவனுக்கு சுரணை வந்துவிட்டால் அவனுக்கு கோபம் வந்துவிடுமோ என்று தாத்தா பயப்படுகிறார். அவரை சுற்றி, சுற்றி வளைய வரும் சனாகான்.. சும்மா சொல்ல கூடாது நல்ல பெங்களூர் தக்காளி மாதிரி பளபள், தள தளன்னு இருக்காங்க.. ம்ஹூம்.. அவரை ஏன் இப்படி வளர்கிறாருன்னு நமக்கு டென்சன் ஏறிக்கிட்டே இருக்கிறதா.. டைரக்டர் நினைச்சிகிட்டு இன்னும் ரெண்டு சீன் வச்சு நம்ம படுத்துறாரு. இதெல்லாம் நாங்க பாட்ஷாவிலேயே பாத்துட்டம்னு சொன்னாலும் புரிய...

DASVIDANIYA - FILM REVIEW

Image
தாஸ்விதானியா என்றால் மிக சிறந்த வழியனுப்புதல் ஆங்கிலத்தில் The best ever good bye என்று பொருள். இந்த படத்தின் நாயகன் விநய்பத்க்குக்கு மீண்டும் தன்னை நிருபிப்பதற்கான படம். அமர்கவுல் என்கிற திருமணமாகாத 37 வயது இளைஞனின் கதை. மிக சாதாரணன், இவனைபோல நாம் பலரை சந்தித்திருந்தாலும் மறந்திருபோம்.. அப்படிபட்ட சாதாரணன். தினமும் தான் செய்ய வேண்டிய காரியங்களை Thinks to do என்று பட்டியலிட்டு வாழ்பவன். அவனுக்கு stomach cancer வ்ந்து இன்னும் மூன்று மாதங்களில் அவன் இறந்து போவான் என்றவுடன் எப்படியிருக்கும். ஆடிப்போய் இருக்கும் அவன் என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் செய்யவேண்டிய பழைய வேலைகளை பட்டியலிட, அவனுடய் மனசாட்சி வ்ந்து அவனை திட்டுகிறது. இது நாள் வரை எந்தவிதமான் ஆசைகளையும் பூர்த்தியடையாமல் வாழ்ந்து என்ன கண்டாய்..? இனி இருக்கும் நாட்களிலாவது வாழ்கையை வாழ்ந்து பார்.. ஆசை பட்டதையெல்லாம் அனுபவி என்கிறது. அதன் படி அவன் ஓரு பட்டியலிடுகிறான் Things to do before I die என்று. புதிய கார், கிடார் வாசிக்க கற்பது, அம்மா, வெளிநாட்டு பயணம், நேகா.., ஆத்ம ந்ண்பன் ராஜூ, செக்ஸ்,பாஸூக்கு பாஸாய் இருப்பது என்று பத்...

தோஸ்தானா - திரை விமர்சனம்

Image
ஹிந்தி திரையுலகின் முக்கிய நாயகர்கள் ஓரின சேர்கையாளர்களாய் நடிக்கும் படம் என்றதும் ஓரு ஆர்வம் ஏற்படத்தான் செய்தது. படத்திலும் அவர்கள் வீடூ வாடகைக்கு எடுப்பதற்காக, ஓரின சேர்கையாளர்களாய் நடிக்கிறார்கள். மியாமியில் ஆண் நார்சாய் பணிபுரியும் அபிஷேக், மாடல் போட்டோகிராபரான ஜான் அபிரஹாமும் வீடு தேடும் படலத்தின் போது பேச்சிலர்களுக்கு இடம் கிடையாது என்றதால், தாங்கள் இருவரும் ஓரின தம்பதிகள் என்று பொய் சொல்லி வீட்டை பிடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் அங்கேயே இருக்கும் வீட்டு ஓனரின் அண்ணன் மகளான பிரியங்காவுடன் தங்க வேண்டும் என்றதும், ஓருவரை ஓருவர் மாற்றி பிரியங்காவை இம்ப்ரஸ் செய்ய பார்கிறார்கள். அவர்களின் போட்டி பிரியங்காவை காதலிக்கும் வரை போகிறது. பிரியங்காவின் பத்திரிக்கை ஆபிஸில் எடிட்டராக வரும் டைவர்ஸி பாபி டியோலுக்கும், பிரியங்காவுக்கும் காதல அரும்ப, அதை கெடுப்பதற்காக, மின்சார கனவு போல பாபி டியோலுக்கு, பிரியங்காவை இம்ப்ரஸ் செய்ய தப்பு தப்பான ஜடியாக்களை சொல்லி, அவரை ஓரு மாதிரி கோமாளீயாய் சித்தரிக்கிறார்கள்.. அப்படியும் அவர்களின் காதல் நிச்சயதார்த நிலைக்கு வர, அதை கெடுக்க பாபியின் ஐந்து வயத...