கொத்து பரோட்டா 2.0-27
கொத்து பரோட்டா -2.0-27 ORU MEXICAN APARATHA அரசியல் என்பது மலையாளிகளின் வாழ்க்கையில் ஊடுருவிய விஷயம் என்றே சொல்ல வேண்டும். அவர்களின் குடும்பப் படங்களில் கூட மிக இயல்பாய் ஆண்/ பெண் பேதமில்லாமல் போகிற போக்கில் அரசியல் பேசிவிடுவார்கள். ஒரு மெக்ஸிக்கன் அபரதா முழு கல்லூரி அரசியல் படம்.. 70களில் கம்யூனிஸ்ட் கட்சியான SYFன் அனுதாபியான கோச்சானினைக் கல்லூரி கேம்பஸில் வைத்து கொல்லப்படுவதுடன் ஆரம்பிக்கும் கதை என்பதுகளுக்கு ட்ராவல் ஆகிறது. மீண்டும் அதே கல்லூரி, ஆனால் அங்கே KSQ எனும் மற்றொரு கட்சி தான் பல வருடங்களாய் கல்லூரி பாலிடிக்ஸில் கொடி கட்டி பறக்கிறது. அங்கே எப்படி SFYயின் கொடியை பறக்க விடுகிறார்கள் எனும் சாதாரணக்கதை தான்.ஆனால் அதை படமாகியிருக்கும் விதத்தில் தான் சுவாரஸ்யம். ஏகப்பட்ட கேரக்டர்கள், கல்லூரி ஆஸ்டல். குடி, காதல், காதல் தோல்வி, கல்லூரிகுள் இருக்கும் அரசியல் காரணமாய் நடக்கும் மாணவ துரோகங்கள், கல்லூரி கலை விழா, என படு லைவாக வீஷுவல் படுத்தியிருக்கிறார்கள். ஏகப்பட்ட துணை நடிகர்கள், இது மாஸ்டர் ஷாட், இது மிட், என்றில்லாமல் மிக இயல்பாய் திரைமொழியில் நம்மை அவர்களுள் ஒருவராய் அல...