சைதாப்பேட்டையில் நல்ல உணவகங்களுக்கு கொஞ்சம் பஞ்சமே. அதிலும் மெஸ் போன்ற நல்ல தரமான குறைந்த விலை உணவகங்கள் மிக அரிது. அந்தக் குறையை போக்க வந்திருக்கிறது சமீபத்தில் திறக்கப்பட்ட சம்பத் கெளரி மெஸ். காலையில் அருமையான பூரி, பொங்கல், தோசை, இட்லி என்று வரிசைக்கட்டி அட போட வைக்கும் நேரத்தில், மதியம் அருமையான கல்யாண சாப்பாட்டை நாற்பது ரூபாய்க்கு தருகிறார்கள். ரேஷன்கடை ஒரு ரூபாய் அரிசியை வைத்து போடாமல், நல்ல அரிசியில், அருமையான சாம்பார், ரசம், காரக்குழம்பு, மோர்க்குழம்பு, புளிக்காத கெட்டி மோர், ஊறுகாய், அப்பளம் என்று அசத்துகிறார்கள். படு ஹோம்லியான சாப்பாடு. மாலையில் டிபன் வகையறாக்கள் வேறு அசத்துகிறது. இந்த ஏரியா அலுவலகம் செல்பவர்களுக்கு மாலை நேரத்தில் வீட்டில் சென்று சமைக்க நேரமில்லாதவர்கள், வீட்டிற்கு போகும் போது சாம்பார், ரசம், போன்றவற்றை பார்சல் செய்து வாங்கிப் போகிறார்கள். சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மெஸ் மிகக் குறுகிய காலத்தில் பிரபலமாகிவிட்டது.