Posts

Showing posts with the label Steven Speilberg

கொத்து பரோட்டா-11/03/13

Image
கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு திரும்புகையில் ஹைவேஸில் வரும் போது ஒர் கேள்வி எழுந்தது. கையில் காசு இல்லாவிட்டால் டோலில் அனுமதிப்பார்களா? இல்லை.. க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட் வசதி வைத்திருப்பார்களா? என்ற சந்தேகம் தான் அது. அதை செக் செய்து பார்த்துடலாம் என்று முதல் டோலில் ‘சார்.. க்ரெடிட் கார்ட் அக்ஸெப்ட் பண்ணுவீங்களா?” என்று கேட்டவுடன் நின்று கொண்டிருந்த ஹிந்திக்கார பையனு புரியாமல் “சிங்கிள்?” என்று கேட்டான். “மேரே பாஸ் பைசா நஹிஹே.. க்ரெடிட் கார்ட் அக்ஸெப்ட் கரோகே” என்ற அரைகுறை இந்தியில் கேட்க, அவன் கண் வெளியே வந்துவிட்டது. “நஹி நஹி சாப்.. ஒன்லி பைசா..ஒன்லி பைசா..” என்ற பதற ஆரம்பித்தான் பின்னால் ஒர் பெரிய வால் நின்று கொண்டு ஹாரன் அடித்துக் கொண்டேயிருக்க, காசைக் கொடுத்துவிட்டு கிளம்பினேன். பின் அடுத்த டோல், அதற்கடுத்த டோல் எல்லாவற்றிலும் இதே நிலைதான். எனக்கொரு சந்தேகம். ஹைவேஸில் வந்தாகிவிட்டது. பர்சை மறந்து வைத்துவிட்டோம். அல்லது எங்கோ மிஸ்ஸாகி விடுகிறது. வருகிற வழியில் நம்பர் ஒன்னுக்கு போகும் இடத்தில் தொலைந்து விடலாம். டோலுக்கு காசு இல்லையென்றால் திரும்ப அனுப்புவேன் என்று சொல்வது ...

The Adventures of Tintin : The Secret Of The Unicorn

Image
டின்டின் காமிக்ஸ் படித்தவர்கள் மிகவும் ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெகு நாட்களுக்கு பிறகு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் இயக்கத்திலும், பீட்டர் ஜாக்ஸனின் தயாரிப்பில் வெளிவருகிறது என்பதால் மேலும் எதிர்பார்ப்பு எகிற, ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க, ஒரு வழியாய் வெளியாகிவிட்டது டிண்டின்.காமிக்ஸை படித்தவர்களுக்கு கதை ஒன்று புதியதாய் இருக்காது என்றாலும் புத்தகமாய் பார்த்த காமிக்ஸ் கேரக்டர்களை திரையில் பார்க்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்யும். காமிக்ஸே படிக்காதவர்களுக்கும் ஆர்வமிருப்பது ஒன்றும் ஆச்சர்யமில்லை.

Cowboys And Aliens ங்கொய்யால..

Image
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஐயர்ன் மேன் இயக்குனர், ஜேம்ஸ்பாண்ட் டேனியல் கிரேக், ஹாரிஸன் ஃபோர்ட், என்று பெரிய நட்சத்திரங்கள். ஏதோ 2000 கோடி பட்ஜெட், அது இதுவென பெரிய பரபரப்பு ஏற்படுத்திய விளம்பரங்கள் எல்லாம் சேர்ந்து இம்மாதிரியான டெம்ப்ளேட் படங்களையே பார்க்காத என்னை பார்க்க வைத்த படம்.