கொத்து பரோட்டா -15/06/15
பாகுபலி ட்ரைலரை பார்த்துவிட்டு, ரசிகர்கள் எல்லாம் ஆவல் பொங்க, எப்படா வருமென்று காத்திருந்தார்கள் என்றால். எனக்கு படம் ஆரம்பித்த காலத்திலிருந்தே என்று கூட சொல்லலாம். அது ஒரு முறை தொட்டால் தொடரும் படத்தின் பாடல் ஒன்றுக்காக மதன் கார்க்கியை சந்தித்தப்போது, பாகுபலிக்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பற்றியும், அவர் தமிழ் வசனங்கள் பற்றி சொன்ன விஷயங்களைக் கேட்டு “லப்டப்” அதிமானது என்றே சொல்ல வேண்டும். தற்போது ட்ரைலர் பார்த்தபின் இன்னும் ஆர்வம் அதிகமாகிக் கொண்டுதானிருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ராஜமெளலியும் ஒருவர். அவருடய எல்லா தெலுங்கு படங்களையும் பார்த்திருக்கிறேன். இப்படத்தை ஆரம்பித்ததிலிருந்தே படத்தில் நடிக்கும் நடிகர்களின் பிறந்தநாளன்று அவர்களுக்காக ஸ்பெஷல் டீசரை ஒன்றை வெளியிட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் ப்ரஷர் ஏற்றி வைத்திருக்கிறார். தமிழ் நாட்டுக்காரனான நமக்கே ஆரவம் ஏற்றிருக்கிற பட்சத்தில் இன்று வரை ரிலீஸ் டேட் அறிவிக்காததால் ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் டென்ஷனாகி, பொமரில்லு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை வைத்து ஸ்பூப் செய்திருக்கும் ரிலீஸ் டேட் எப்போ என்ற கேள்வியெழுப்பிய...