Posts

Showing posts with the label மைலாப்பூர்

சாப்பாட்டுக்கடை - டவுசர் ஓட்டல்

என்னடாது ஓட்டல் பேரே ஒரு மாதிரியாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? சட்டென கண்டு பிடிக்க முடியாத வகையில் தான் இந்தக் கடை அமைந்திருக்கிறது. நாலு பேரிடம் கடையின் பெயரை கேட்டு விசாரிக்கலாம் என்றால் டவுசர் கடை என்று கேட்டு அவர் என்ன் நினைத்துக் கொள்வார்களோ என்ற வெட்கம் வேறு வந்து தொலைக்க, ஒரு வழியாய் தேடிப் பிடித்து கண்டுபிடித்தோம். மைலாப்பூரிலிருந்து ஆர்.கே மடம் சாலையில் ஓம் மெடிக்கல்ஸின் எதிரில் ஒரு குட்டிக் கடை. வாசலில் பெயர் பலகை கூட கிடையாது. இரவு நேரங்களில் வாசலில் பரோட்டா போடும் சாதாரண உணவகம் போலத்தான் இருக்கிறது. ஆனால் ஏரியாவில் டவுசர் என்று சொன்னவுடனே இடத்தை சொல்லுமளவிற்கு பிரபலமாக இருப்பதற்கு காரணம் அவ்வுணவகத்தின் சுவை மற்றும் அதன் ஓனர் வெறும் டவுசர் மட்டுமே அணிந்து கொண்டிருப்பதும் தான்.

சாப்பாட்டுக்கடை

Image
மைலாப்பூர் என்றாலே நல்ல பல மெஸ்ஸுகள் ஞாபகத்துக்கு வரும். கற்பகாம்பாள், ராயர் கடை, என்று வரிசைக்காய்.. அந்த வரிசையில் மயிலையில் பிரபலமானது மாமீஸ் மெஸ். கிழக்கு மாட வீதியின் முடிவிற்கு முன் ஒரு சின்ன தெரு போகும், இல்லாவிட்டால் யாரிடம் கேட்டாலும் மாமீஸ் மெஸ்ஸை கேட்டாலும் சொல்வார்கள். முன்பு சின்ன கடையாய் இருந்ததை இப்போது இடித்து பெரிதாக பாஸ்ட் புட் கடைகள் போல நின்று கொண்டு சாப்பிடும்படியாக மாற்றியிருக்கிறார்கள். மாமீஸ் டிபன் செண்டர் என்று பெயர் மாற்றியிருக்கிறார்கள். முன்பை விட நீட்டாக உள்ளது. மதியம் புளி, சாம்பார், தயிர், என்று சாத வகைகளும், முப்பது ரூபாய்க்கு அளவு சாப்பாடும் தருகிறார்கள். அளவு சாப்பாட்டில் ஒரு பெரிய கிண்ண சாதம், ஒரு பொரியல், கூட்டு, ஊறுகாய், தொகையல், சாம்பார், ரசம், காரக்குழம்பு, மோர்.  சாம்பார், ரசம், காரக்குழம்பெல்லாம் அவ்வளவு ருசி.  வீட்டில் செய்து போல. என்ன மோர் மட்டும் ஆஞ்சநேயர் கோயில் ஸ்ரீராம நவமி நீர் மோர் போல கையில் ஒட்டாமல் ஓடியது. மற்றபடி திருப்தியான சாப்பாடு. மாலையில் டிபன் வகைகள் தோசை, இட்லி, பரோட்டா என்று களை கட்ட ஆரம்பித்துவிடுகிறது. நிச...