பொண்டாட்டி - ஒர் அலசல் (நீ எவண்டா பொண்டாட்டிகளை அலச)
அராத்துவின் புதிய நாவல் வரப்போகிறது என்பதை பல விதமான மார்கெட்டிங் டெக்னிக்கை பயன்படுத்தி இந்த புத்தக திருவிழாவுக்கு வெளியிட்டார்கள். ஆன்லைன் ப்ரீ புக்கிங். டிஸ்கவுண்ட் புக்கிங். கிண்டில் என எல்லா இடத்தில் நல்ல விற்பனை என்றும் கேள்விப்பட்டேன். நான் இதை எழுதுவது பொண்டாட்டியின் விற்பனையைப் பற்றி கூற அல்ல. பொண்டாட்டி நாவலைக் குறித்து பேச. பொண்டாட்டி ஒரு செக்ஸ் நாவலா? என்றால் ஆமாம். பொண்டாட்டி ஒரு ஆணாதிக்க நாவலா? என்.. ஆமாம். பொண்டாட்டி எப்போதும் புதிராகவே இருக்கும் பெண்களைப் பற்றி, அவர்களின் பர்வர்ஷன் பற்றி, தடுமாற்றங்களைப் பற்றி, ஆசாபாசங்களைப் பற்றிய மனோதத்துவமான பதிவா? ஆமாம். யாரு யாருக்கு உறவுன்னு நானாறு பக்கத்தையும் மாத்தி, மாத்தி புரட்டியே தாவூ தீர்ந்து போச்சு. வடசென்னை கேரக்டர் மேப்பை விட மோசம். இது மயிரு நாவல். ஃபேக் நாவலில்லை ஃபோர்ன் நாவல். அபீஷியலான மஞ்சள் பத்திரிக்கைத்தர நாவலா? புத்தகம் படித்து சுயமைதுனம் செய்யும் பழக்கம் வழக்கொழிந்து விட்டநிலையில் அதற்காக நானூறு பக்க புத்தகம் தேவையா? இது இலக்கியமா? இல்லை. அராத்துவின் பர்வர்ஷன். அவர் பார்த்த, ஒழுத்த ...