Posts

Showing posts with the label தமிழ் ஹிந்து

கோணங்கள் -26

Image
கோணங்கள் 26: 99 ஆண்டுகள் உரிமை சரியா? முன்பெல்லாம் வாரத்துக்கு இரண்டு படங்கள் வெளியாகும். அது தற்போது கொஞ்சம் கொஞ்சமாய்ப் பெருகி, எட்டு முதல் பத்துப் படங்கள் வர ஆரம்பித்துவிட்டன. இப்படிப் படங்கள் வருவதால் பல பிரச்சினைகள். திரையரங்குகளில் ஏற்கனவே ஓடுகிற படங்கள் ஒரு பக்கமென்றால் இன்னொரு பக்கம் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகும் படங்களின் தமிழ் மொழிமாற்றுப் படங்கள் என ஒரு பட்டியல் தனியே இருக்கிறது. இதில் எத்தனை படங்களைத்தான் மக்கள் பார்ப்பார்கள்?

கோணங்கள் -18

Image
செங்கல்பட்டில் ஒரு ராஜ்கிரண் எட்டு வருடங்களுக்கு முன்னர், தெரிந்த இசையமைப்பாளர் ஒருவர் கூப்பிட்டார். நண்பர் ஒருவர் படம் செய்யவிருப்பதாகவும், அப்படத்துக்கு நான் வசனம் எழுத வேண்டுமென, இயக்குநர் அழைப்பதாகச் சொல்ல, பரபரப்பாகக் கிளம்பினேன். எழுத்தாளர்களை மதிக்கும் இயக்குநர்களை எனக்குப் பிடிக்கும். கதை, திரைக்கதை, வசனம், எல்லாவற்றையும் ஒருவரே பார்ப்பது இம்சையான வேலை.

கோணங்கள் -15

Image
கோணங்கள்-15 : பெரும் பசி கொண்ட அரக்கன் இருபதுக்கும் குறையாத சுற்றுப்பட்டு கிராமங்களுக்கு நடுநாயகமாக இருக்கும் ஒரு பெரிய கிராமத்தில் ஒரு திரையரங்கு இருக்கும். உள்ளூர் நிலக்கிழார் அந்தத் தியேட்டரை நடத்துவார். கல்நார் தகடு அல்லது தென்னை ஓலை வேயப்பட்ட கூரையைக் கொண்ட இதுபோன்ற திரையரங்குகளை ’ கிராமத்து டூரிங் டாக்கீஸ்’ என்று சொல்வது வழக்கமாக இருந்து வந்தது. மாலை மற்றும் இரவுக் காட்சி மட்டும்தான் என்றாலும் அரங்கு நிறைந்துவிடும். வயலில் உழைத்த களைப்பைப் போக்கிக்கொள்ள மக்கள் கூடிவிடுவார்கள்.

கோணங்கள் -12

Image
கோணங்கள் 12 - பவன் குமார் எப்படிச் சாதித்தார்? தமிழில் கிரவுட் ஃபண்டிங் சாத்தியமா என்று கேட்டால் நிச்சயம் சாத்தியம்தான். ஸ்டூடியோ அமைப்பின் கீழ் இயக்கும் ஹாலிவுட்கூட ‘இண்டிபெண்டண்ட் சினிமா’ எனும் சின்னப் பட தயாரிப்பாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உலகளவில் கிரவுட் ஃபண்டிங் முறையில் படங்களைத் தயாரிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சமரசங்களுக்கு இடம்கொடுக்காத இண்டிபெண்டெண்ட் இயக்குநர்களே.

கோணங்கள் -7

Image
கோணங்கள் 7 - விடாது கருப்பு பெரிய நடிகர்கள், இயக்குநர், டெக்னீஷியன்கள் உள்ளடங்கிய புராஜெக்டா என்று பார்த்துத்தான் ஒரு படத்துக்கு ஃபைனான்சியர் பணம் கொடுக்கிறார். அதற்குப் பிறகு அந்த புராஜெக்டை ஆரம்பித்திருக்கும் தயாரிப்பாளரின் சொத்து, அவர் தயாரித்த முந்தைய படங்களின் ட்ராக் ரெக்கார்ட் ஆகியவற்றையும் பார்க்கிறார்கள். கொடுத்த காசைத் திரும்ப வாங்க முடியவில்லையென்றால் படத்தின் விநியோக ஏரியாவையோ, அல்லது சாட்டிலைட் ரைட்ஸையோ ஹோல்டிங் வைத்திருப்பார்கள். இவர்களது நோக்கமே வட்டியும், முதலும்தான்.

கோணங்கள் -6

Image
கோடம்பாக்கத்தின் அப்பாவி ஆவிகள்! ஒரு படத்தில் இருந்தது போல ஏழு காட்சிகள் காப்பியடித்த படத்தில் தொடர்ந்து இல்லையென்றால் அது காப்பிரைட்டில் வராது என்னும் நம்பிக்கை காலம் காலமாகப் பலரையும் கதை திருடும் சோம்போறிகளாக்கியிருக்கிறது. கதைத் தாக்கம், கதை உருவல், கதைத் தழுவல் என்று கதைத் திருட்டுக்குப் பல்வேறு பட்டப் பெயர்கள் சூட்டப்பட்டாலும் சுட்டகதை வெட்டவெளிச்சமாகும்போது பாதிக்கப்பட்டவருக்குக் கடைசிவரை கடுக்காய் கொடுக்கப் போராடுவதற்கு முக்கியக் காரணம் இருக்கிறது. திருடப்பட்ட கதையில் உருவான படம் வெற்றிபெற்றுவிட்டால் மற்ற மொழிகளின் ‘ரீமேக் உரிமை’ பல லட்சங்கள், கோடி என்று விலைபோவதால், அதில் பலனடையப்போவது முழுக்கவும் கதையின் காப்பிரைட்டை வைத்திருப்பவர்தான்.

கோணங்கள் -5

கூட்டத்தில் சிக்கிய குழந்தைகள்! நிறைமாதத்தில் இருக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் நிலைதான் இன்று கோலிவுட்டில் பரிதவிப்பவர்களின் நிலையும். “படம் எடுக்கிறதுன்னா என்ன விளையாட்டு வேலையா? அப்படியே படம் எடுத்துட்டாலும், ரிலீஸ் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? பிரசவ வேதனை. அதனாலதான் லேப்லேர்ந்து பிரிண்டை எடுக்கிறதை டெலிவரின்னு வச்சிருக்கான்” என மறைந்த தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவகுமார் சொல்வார். அவர் சொன்னது 200 சதவிகிதம் உண்மை. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் லேப், ப்ரிண்ட், டெலிவரி என்னும் முறை மாறியிருந்தாலும், ரிலீஸ் செய்ய முற்படும்போது கிடைக்கும் வலி முன்பைவிட மோசம். நார்மல் டெலிவரியே கிடையாது எல்லாமே சிசேரியன்தான்.

கோணங்கள்-4

கண்ணீர் கலந்த பிளாக் காமெடி! “இயக்குநரை விடுங்க… கேமராமேன், எடிட்டர், எல்லாரும் புதுசு. ஸ்டில் கேமராவுல போட்டோ எடுத்துட்டு இருந்தவரெல்லாம் ஒளிப்பதிவாளர். சொந்தமா செலவு பண்ணி ரெக்கார்டிங் ஸ்டூடியோ வச்சிருக்கிறவர் எல்லாம் இசையமைப்பாளர். இவங்களால எவ்வளவு பிரச்சினை தெரியுமா? ஒரு கோடிக்குள்ள நச்சுன்னு படமெடுத்துக் கொடுக்கிறேன்னு ஷார்ட் பிலிம் எடுக்கிற நினைப்பிலேயே தயாரிப்பாளர்கிட்ட சொல்றாங்க. அது எப்படிங்க எடுக்க முடியும்?. யார் கிட்டேயும் பர்மிஷன் வாங்காம, ஒரு 5டி கேமராவை வச்சிட்டு கூட இருக்கிறவங்கள வச்சி ஷார்ட் பிலிம் எடுக்குறது, முழுநீளப் படம் எடுக்குறது மாதிரி சாதாரண விஷயமா? லெஃப்ட் ரைட் பார்க்கத் தெரியுமா? ஷாட் வைக்கத் தெரியுமா..? (மூச்சு விட்டுக்கொள்கிறார்)

கோணங்கள்-3- குறும்படம் எடுப்பவர்கள் குரங்குகளா?

“நேத்து வந்தவன் படமெடுக்குறான். ஆனா ஊரை விட்டு, உறவை விட்டு வந்து, சினிமால கால் ஊன்றதுக்குள்ள எத்தனை போராட்டம்? எவ்வளவு அவமானம்? கூடவே பசி, பட்டினி, குடும்பம், குழந்தை குட்டினு எவ்வளவு அவஸ்தை? இதையெல்லாம் தாண்டி சினிமாவுக்கு நாங்க நேர்மையா இருக்கோம்; அது நமக்குச் சோறு போடுங்கிற நம்பிக்கைய மட்டுமே சுமந்துகிட்டு அலைஞ்சிட்டிருக்கிறப்ப, எங்கயோ அமெரிக்காவுலேயும், சாஃப்ட்வேர்லேயும் வேலை செஞ்சு சம்பாதிச்சு, அந்தக் காசுல நேரா நாலஞ்சு குறும்படம் பண்ணிட்டு, டைரக்டர் ஆகிடுறாங்க. ஆகட்டும் வேணாங்கல.அதுக்காகப் பத்து வருஷ வாழ்க்கையை அடமானம் வச்சி, அதுவழியா கிடைச்ச அனுபவத்தை அவமானப்படுத்துற மாதிரி ‘நீயும் ஒரு குறும்படம் எடுத்துட்டு வா; அப்போதான் கதை கேப்பேன்கிறது என்ன நியாயம்?’ மூச்சுவிடாமல் சிங்கிள் டெலிவரியில் கொதித்துவிட்டார் ஒரு இணை இயக்குநர் நண்பர்.

கோணங்கள்: கஜினி சூர்யாக்களும் முகம் மாறிய விமர்சனமும்

85 லட்சம் ஹிட்ஸுகளை தொடர்ந்து வாரி வழங்கி ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்-கேபிள் சங்கர் நான் வலைப் பூ எழுத்துக்காரன். அதுவே எனது எழுத்தின் முகம். அதுவொரு சுதந்திரக் களம். கொத்து பரோட்டா என்கிற தலைப்பில் 2009-ம் ஆண்டிலிருந்து பத்தி எழுத்து பாணியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் எழுதிவருகிறேன். பல வார, மாத இதழ்களில் கதை, கட்டுரை, விமர்சனங்கள் எழுதி வெளி வந்திருந்தாலும் எனது வலைப்பூ வழியே பிரபலமான பத்தி எழுத்துக்கென்று தனி வாசகர் வட்டம் உருவானது.