Thottal Thodarum

Jul 28, 2014

கொத்து பரோட்டா - 28/07/14

கேட்டால் கிடைக்கும்
எனக்கும் தலப்பாக்கட்டி ரெஸ்ட்டாரண்டுக்கும் ஏழரைப் பொருத்தம் ஏனென்றே தெரியவில்லை. ஆரம்ப காலத்தில் பிரியாணி நன்றாக இருந்தாலும், போகப் போக படு மோசமாய் போனது. அதுவும் 150 ரூபாய்க்கு  ரெண்டு கரண்டி பிரியாணியை கொடுத்துவிட்டு, பீசை தேடி கலைத்துப் போய் எங்கய்யா பீசு என்று கேட்டால் மட்டுமே நான்கைந்து பீஸை கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் வேறு வழியேயில்லாமல் நானும் எங்கள் ஹீரோவும் பெசண்ட் நகர் தலைப்பாக்கட்டியில் சாப்பிட போயிருந்தோம். இரவு நேரமாக இருந்தாலும் செம ஹூமிடிட்டி. வியர்த்துக் கொண்டிருக்க, உள்ளே நுழைந்ததும் ஏசியே இல்லை. ஏசி இல்லையா என்று கேட்டவுடன் மேல உக்காருங்க என்றார். அங்கிருந்தவர். மேலே ஏதோ ஒண்ணுத்துக்கில்லாத வகையில் குளூமை இருக்க, சாப்பிட வழக்கம் போல பிரியாணி ஆர்டர் பண்ணிவிட்டு காத்திருந்தோம். வியர்க்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் தொப்பலாய் நனைய ஆரம்பித்துவிட்டோம். பிரியாணி வேறு சகிக்கவில்லை. பில் வந்தது 180 மேனிக்கு ரெண்டு பேருக்கு பிரியாணி பில்லோடு, சர்வீஸ் டேக்ஸ், மற்றும் வாட் போட்டிருந்தார்கள். இதற்குள் பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த குடும்பம் வியர்த்து கொட்டி, சர்வரிடம் கத்த ஆரம்பித்திருக்க, என் பில் கொண்டு வந்தவரிடம் இது எதுக்கு டேக்ஸ் என்றேன். இருங்க மேனேஜரை வரச் சொல்லுறேன் என்று சொல்லிவிட்டு, போனவர் ஐந்து நிமிடம் வரவேயில்லை. ஏற்கனவே வியர்த்துப் போய் தொப்பலாய் நினைந்து கொண்டிருக்க, இப்ப வரலைன்னா நான் கிளம்பிட்டேயிருப்பேன் என்றதும். ஒர் சிறு வயது பையன் வந்தார். நீங்கதான் மேனேஜரா? என்றதுக்கு தலையாட்டினார். இந்த டாக்ஸ் எதுக்கு? சார் இது கவர்மெண்ட் வாங்க சொல்லியிருக்காங்க சார்.. என்றார் புத்திசாலித்தனமாய். கவர்மெண்ட் ஏசி ரெஸ்ட்டாரண்டா இருந்தா வாங்க சொன்ன சர்வீஸ் மற்றும் வாட் இது. ஏசியேயில்லாத ஹோட்டலுக்கு நான் ஏன் கொடுக்கணும் என்றவுடன், சார்.. ஏசி ஃப்யூஸ் போயிருச்சு.  சரி பியூஸ் சரி பண்ண எவ்வளவு நேரம் ஆகும்? தெரியலை.. அப்ப ஏசி எப்ப ஒர்க் ஆகும்னும் தெரியாது அப்படித்தானே? என்றதும் விழித்தார். சரி.. ரெண்டு பிரியாணியும் படு கேவலம். வாய்ல வைக்க வழக்கலை. இருந்தாலும் சாப்பிட ஆர்டர் பண்ணினதுனால, காசு கொடுக்கிறேன். ஏசி யில்லாத ஹோட்டலுக்கு எல்லாம் நான் அதுக்கான டேக்ஸ் பே பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டு, பிரியாணிக்கு உண்டான காசை மட்டுமே வைத்தேன். அவன் பதிலே சொல்லவில்லை. அடுத்த நாள் முழுவதும் பிரியாணி தன் வேலையை காட்டியது. இதையெல்லாம் மீறி ரெண்டொரு நாள் முன்னால் நானும் எங்கள் படத்தில் நடித்த பாலாஜியும், தமனும் டி.நகர் தலைப்பாகட்டிக்கு போக நேர்ந்தது. வழக்கம் போல பிரியாணி மொக்கையாக மட்டுமல்ல. பிரியாணி பூராவும் பட்டை, லவங்கம் ஏலாக்காயாய் வாய் பூராவும் ஜிவு ஜிவுஎன இருந்தது. இந்த லட்சணத்துல 19வது கிளை வேற திறக்குறாங்களாம். ம்ஹும். சரத்குமார் இவங்க கடை பிரியாணிய சாப்பிட்டதில்ல போல..
@@@@@@@@@@@@@@@@@@@@@

Jul 25, 2014

இசையெனும் ராஜ வெள்ளம் -

இளையராஜா, மொட்டை, ராக தேவன், இசைஞானி என ஆயிரம் பேர்களின் அவரை அழைப்பதற்கான காரணம் அவரின் இசை. ராஜாவின் ஒவ்வொரு இசையையும் கேட்டுக் களித்தவர்கள் அனைவருக்கும் என்றாவது ஒரு முறை தூரத்திலிருந்தாவது அவரை பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் இல்லாமல் இருக்காது. நண்பர் ஒருவருக்கு ராஜா என்றால் பைத்தியம். ஒவ்வொரு முறை என்னைப்பார்க்கும் போதெல்லாம், என்னைக்காவது ஒரு நாள் என்னை ராஜாவை பார்க்க வைக்கிறியா? என்று கேட்டுக் கொண்டேயிருப்பார். ஒரு நாள் காலையில் ஏதோ ஒரு படத் தயாரிப்பாளரை பார்க்க சென்றிருந்த போது நண்பர் போன் செய்ய, உடனே வாய்யா.. நான் ப்ரசாத்துலதான் இருக்கேன் என்றவுடன் அயனாவரத்திலிருந்து பத்து நிமிடத்தில் புயல் வேகத்தில் வந்தார். ராஜா ஏதோ ஒரு ரிக்கார்டிங்கிற்காக காரிலிருந்து வெண்ணுடையில் இறங்க, “வாங்க போய் பேசுவோம்” என்று நண்பரைக் கூப்பிட்டேன். அவரின் கண்கள் எல்லாம் மின்ன, “வேணாம் சார்.. ஏதோ வேலையாப் போவாரு அவரை ஏன் டிஸ்ட்ரப் பண்ணனும்” என்று பதில் மட்டுமே என்னிடம் வந்ததே தவிர பார்வை கேமரா பேனிங் போல அவர் போகும் திசையில் பயணித்துக் கொண்டேயிருந்தது. “அட வாய்யா. இவ்வளவு தூரம் வந்திட்டு ஒரு போட்டோ எடுத்துக்க என்றேன். இல்லை நண்பா இது போது என் ஜென்மத்துக்கு என்று கரகரவென அழ ஆரம்பித்தார்.  

Jul 23, 2014

Oohalu Gusa Gusalade

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டிக்கெட் விற்று சாதனை படைத்திருப்பதாய் வெற்றி விழா கொண்டாடினார்கள் என்று இணையதளங்களில் படித்த போது எனக்கு தெரிந்து இந்தியாவில் இத்தனை டிக்கெட் விற்று சாதனை என்று விழா கொண்டாடிய படம் இதுவாகத்தான் இருக்குமென்று தோன்றியது. படம் சில வாரங்களுக்கு முன்னமே ஆந்திராவில் வெளியாகி வெற்றிபடமாய் அறிவிக்கப்பட்டது என்று சொன்னார்கள். பெரிய நடிகர்கள், வாரிசு நடிகர்களின் படங்களைத் தவிர மற்ற படங்களை ஓட விடமாட்டேன் என்கிறார்கள் என்று தெலுங்கு திரையுலகமே புலம்பிக் கொண்டிருப்பதாய் ஒர் செய்தி வேறு உலா  வந்து கொண்டிருக்கும் வேளையில் இப்படத்தின் வெற்றி புருவம் உயர்த்தி கவனிக்க செய்தது. 

Jul 21, 2014

கொத்து பரோட்டா -21/07/14- தொட்டால் தொடரும், Mofa, வேலையில்லா பட்டதாரி, சதுரங்க வேட்டை,

சென்ற வாரம் வளசரவாக்கத்திலிருந்து நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு பிரிசம் அண்ட் பிக்சலுக்கு போய்க் கொண்டிருந்தேன். அது ஒரு குறுகலான தெரு. எதிரே வெகு வேகமாய் ஒர் வண்டி ஹாரனுடன், பாஸ்ட் அண்ட் பியூரியசில் வருவது  போல வந்து கொண்டிருந்தது. நமக்கெதுக்குடா வம்பு என இடது பக்கம் ஓரம் கட்ட, அதே நேரத்தில் என் பின் பக்கத்திலிருந்து ஒரு வண்டி எதிர் வண்டி போலவே வெகு வெகு வேகமாய் வர, இரண்டு பேரும் நேருக்கு நேர் மோதவிருக்கும் வேளையில் சட்டென எதிர்புறம் வந்தவனும், என் பக்கம் வந்தவனும் அவரவர் இடது புறம் திருப்ப, என் பக்கம் வந்தவனின் ஹேண்டில் பார் என் வண்டியின் ஹாண்டில் பாரைத் தட்டிவிட, ஷணத்தில் மண்டைக்குள் மின்னல். 5நிமிடம் யாருமில்லாமல் வண்டி என் மேல் விழுந்திருக்க, வலது கால் முழுவதும் வண்டிக்குள் மாட்டிக் கொண்டு எடுக்க முடியாமல் “ஆ”வென அலறினேன். தூரத்தில் ரெண்டு பேர் யோசித்து எதோ சம்பவம் நடந்திருக்கு போல என யோசித்து, சரி போனாப் போட்டும் என்று வந்து எழுப்பினார்கள். இடித்தவனும் சரி, எதிர்பக்கம் ஓட்டி வந்தவனும் சரி அங்கு இல்லவேயில்லை. “யாருக்கும் ஈவுமில்லை இரக்கமில்ல பாஸு பாஸு” பாட்டு சரிதான் என தோன்றியது.
@@@@@@@@@@@@@@@@@@@@@

Jul 16, 2014

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2-8- பைரஸி, டிவிடி, C2H

திருட்டு டிவிடியினால் தான் இவ்வளவு பெரிய ப்ரச்சனை என்று சொல்வது ஒரளவுக்கு உண்மையென்றாலும், திருட்டு விசிடியிலோ, டிவிடியிலோ கூட வெளிவராத திரைப்படங்கள் இருக்கத்தான் செய்கிறது. நண்பர் ஒருவர் சிங்கப்பூரில் இருக்கிறார்.  அவர் ஒர் சினிமா ப்ரியர். கையில் கிடைக்கிற படங்கள் எல்லாவற்றையும் பார்க்கக்கூடியவர். அவர் தான் மேல் வரிகளை சொன்னவர். சில வருடங்களுக்கு முன் மோசர்பியர் நிறுவனம் பழைய வீடியோ உரிமங்கள் வாங்கியவர்கள் எல்லாரையும் ஒருங்கிணைத்து அவர்களது பழைய படங்களை எல்லாம் சேர்த்து முப்பது ரூபாய்க்கு மூன்று படம், ரெண்டு படம் என லீகல் ப்ரிண்டுகளை டிவிடிகளாய் வெளியிட்டார்கள். மொழி படத்தை படம் வெளியான சில மாதங்களில் 100 ரூபாய்க்கு கொண்டு வந்தார்கள். பெரியதாய் போகவில்லை என்றும் சில வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் கம்பெனியை க்ளோஸ் செய்துவிட்டு போய்விட்டார்கள். எனக்கு தெரிந்து அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் ஒன்று அவர்கள் சரியான நெட்வொர்க் அமைக்கவில்லை என்பதும் ஒன்று.  பின்பு நிறுவனத்தில் ப்ரச்சனை ஏற்பட்டதால் டிவிடி தயாரிப்பையும் நிறுத்திவிட்டதாகவும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை ஏற்கனவே டிவியிலும், பைரஸியிலும் விற்ற படங்களை மீண்டும் வாங்கி வைத்து பொக்கிஷப்படுத்தும் பழக்கமே நம்மிடம் இல்லாததாலும், புதிய படங்களை அவர்கள் தொடர்ந்து வெளியிடாததாலும், அவர்களது டிவிடி மார்கெட் வீழ்ந்தது என்பது என் கருத்து. 

Jul 15, 2014

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2- 7-பைரஸியும், சேரனின் C2H

சமீப காலமாய் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களில் ஆரம்பித்து, அடிப்படை வேலை செய்பவர்கள் வரை புலம்புவது சினிமா நிலைம ரொம்ப மோசமாயிருக்கு என்பதுதான். ஏற்கனவே சின்னப் படங்களின் வெற்றி, மற்றும் வியாபாரம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் வேளையில், இயக்குனர் சேரன் அவர்களின் C2H எனும் விளம்பரம் வந்தது. அவ்விளம்பரம் பார்த்து  நேற்று காமராஜ் அரங்கில் கூடிய கூட்டத்தில் முக்கியமானவர்கள் எல்லோருமே சின்னப் படம் தயாரிப்பவர்கள், தயாரித்துவிட்டு வெளியிட முடியாமல் காத்திருப்பவர்கள். அட எவ்வளவு பெரிய இயக்குனர், தயாரிப்பாளர் ஏதோ ஒரு ஐடியாவோடத்தான் ஆரம்பிச்சிருப்பாரு.. என்ற நம்பிக்கையில் கூடியிருந்த கூட்டம்.  கூடியிருந்த கூட்டத்திற்கு பதில் கிடைத்ததா? என்று கட்டுரையின் முடிவில் பார்ப்போம். கமல்ஹாசன் ஆரம்பித்து வைத்து அப்போதைக்கு கைவிடப்பட்ட இந்த தமிழ் சினிமா எனும் யானைக்கு மீண்டும் மணிக்கு கட்ட விழைந்த தைரியத்திற்காக சேரனுக்கு பாராட்டும் ஆதரவும்.

Jul 14, 2014

கொத்து பரோட்டா -14/07/14- தொட்டால் தொடரும், நளனும் நந்தினியும், Dawn of the Planet of the Apes, C2H,

தொட்டால் தொடரும் ட்ரைலர் மற்றும் பாடல் வெளியீடு கடந்த 4ஆம் தேதி சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. திரைப்பட தயாரிப்பாளர் கே.ஆர். வெளியிட தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பெற்றுக் கொண்டார். திரையுலக பிரபலங்கள், பதிவுலக நண்பர்கள் என கல்யாண களை கட்டியது காலை முதலே. இதற்கு முன்னர் படத்தின் டிசைனையும், ப்ரோமோ சாங்க் டீசரை வெளியிட்டிருந்தோம். அதற்கு கிடைத்த நல் ஆதரவு கொடுத்த தைரியத்தோடு ஒன்றுக்கு ரெண்டாய் ட்ரைலர்கலையும், பாஸு பாஸு பாட்டையும் சேர்த்து மூன்று பாடல்கள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மீடியா நண்பர்களுக்கு போட்டுக் காட்டி, பாடல் சிடி வெளியிடப்பட்டது.  ட்ரைலர் மற்றும் பாடல்களுக்கு கிடைத்த பாராட்டு மிகுந்த மகிழ்ச்சியையும், படத்தின் மேல் எனக்கிருக்கும் நம்பிக்கையையும் அதிகப்படுத்தியுள்ளது. SS Media  என்கிற விநியோக நிறுவனம் படத்தை வெளியிட ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.  பர்ஸ்ட் காப்பி எடுக்கப்படாமல் இருக்கும் நிலையில், ரஷ்களையும், டப்பிங்கிலும் பார்த்த படத்தை வைத்து அவர்கள் ஒப்பந்தம் போட்டிருப்பது எனக்கும்,  தயாரிப்பாளருக்கு மிக்க மகிழ்ச்சியை தந்திருக்கிறது.  பாடல் மற்றும் ட்ரைலர்களுக்கு ஆன்லைனின் கிடைத்த விமர்சனங்கள், மற்றும் பாராட்டுக்கள் மேலும் தொட்டால் தொடரும் படத்தை சிறப்பாக கொண்டு வர வேண்டுமென்ற உத்வேகத்தை கொடுக்கிறது. விரைவில்  தொட்டால் தொடரும் வெள்ளித்திரையில்.. அதுவரை உங்களுக்காக.. ட்ரைலரும் பாடல்களும். காத்திருக்கிறேன் உங்கள் கருத்துக்காகவும், ஆதரவிற்காகவும் நன்றி.
@@@@@@@@@@@@@@@@@

Jul 7, 2014

கொத்து பரோட்டா -8/7/2014

தொட்டால் தொடரும்
படத்தின் ஆடியோ, ட்ரைலர் வெளியீடு மிகச் சிறப்பாய் நடைபெற்றது. இரண்டு நாட்களாய் நகம் கடித்து மழுங்கிப் போன விரல் நுனிகளுடனேயே அலைந்து கொண்டிருந்தேன். விழா அழைப்பு, ட்ரைலர், பாடல்கள் விஷுவல்களின் டி.ஐ. செக்கிங், குவாலிட்டி, சிங்க்,என பல டென்ஷன்கள். பாடல்களையும், விஷுவலையும் வெளீயிட்டு கைதட்டல் கிடைக்கும் வரை பதட்டம் இருந்து கொண்டுதானிருந்தது. கமலின் வசனம் போல பயமில்லாமல் நடித்துக் கொண்டிருந்தேன். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் எல்லோருக்கும் முன்னால் வந்திருந்து விழா ஆரம்பிப்பதற்காக காத்திருந்தார்.  அவரை காக்க வைத்து விழா ஆரம்பித்தமைக்கு என் மன்னிப்பை இப்பதிவின் மூலமாகவும் கேட்டுக் கொள்கிறேன். பாடல்களும் ட்ரைலர்களும் வந்திருந்தவர்கள் அத்துனை பேருக்கும் பிடித்திருந்தது சந்தோஷத்தை தந்தது. பாஸு பாஸு பாடலுக்கு கிடைத்த வரவேற்பு தொட்டால் தொடரும் படத்தை மேலும் பல வெற்றிகளை நோக்கி இட்டுச் செல்லும் என்பது பார்வையாளர்களின் கரகோஷ வரவேற்பின் மூலமாய் தெரிந்தது. உங்கள் ஆதரவை எங்களது ட்ரைலர், மற்றும் வெளியிடப்பட்டிருக்கும் பாடல்களுக்கு கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்காக.. சத்யப்ரகாஷ், வந்தனா ஸ்ரீனிவாஸ், குரலில், சக்தி செல்லமின் வரிகளில், பி.சி.சிவனின் இசையில்.. தொட்டால் தொடருமின் “யாருடா மச்சான்”.  இன்னும் இரண்டொரு நாளில் ட்ரைலர் ஆன்லைனில்.. வரும்
@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாக் எழுத வந்து கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடங்கள் ஆகி விட்டது. என்ன தான் கதை, கட்டுரை, பத்தி எழுத்து என எழுதி புத்தகங்கள் எல்லாம் போட்டாலும், சினிமா விமர்சனங்கள் தான் என்னை வெளியுலகிற்கு காட்டியது என்பதை மறுக்க முடியாது. என் விமர்சனங்களுக்கு கிடைத்த வரவேற்பும், அங்கீகாரமும், எதிர்ப்புகளும், எதிர்ப்பார்புகளையும் பூர்த்தி செய்ய முடியுமா? என்ற பயம் லேசாக இருந்து கொண்டிருந்தாலும், படத்தின் பைனல் ப்ராடெக்ட் திருப்தியாய் வந்திருப்பது சந்தோஷமாய் இருக்கிறது. வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருமே என் விமர்சனத்தை, எழுத்தை படித்து நட்பானவர்கள். அவர்களின் படங்களைப் பற்றிய விமர்சனங்களையும் மீறி.. என் மீது அன்பை பொழிந்தவர்கள். குறிப்பாய் இயக்குனர் பத்ரி அவர்களுக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். ஒரு நடிகனாய் அவருக்கு நான் அறிமுகமாயிருந்தாலும், பின் வரும் நாட்களில் அவருடனான என் பயணத்தை கலகலப்பு, தில்லு முல்லு, என கமர்ஷியல் வெற்றிப் பயணமாய் அமைத்துக் கொடுத்தவர் இதோ அவரது புதிய படமான ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் கூட ஒர் சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறேன். வலைப்பூ நண்பர்களான குடந்தை ஆர்.வி சரவணன், பாலகணேஷ், சிவா, கே.ஆர்.பி, மற்றும் பல நண்பர்கள் வந்திருந்து வாழ்த்தியது நெகிழ்வை தந்தது. விழாவில் வந்து பேசியவர்கள் அனைவருமே ஏதோ ஒர் விதத்தில் என்னிடம் அன்பு கொண்டவர்களாய் அமைந்தது நான் செய்த அதிர்ஷ்டமே.. பெயர் விட்டுப் போனவர்கள் மன்னிச்சூஊஊ
@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ் சினிமாவிற்கு இருக்கும் பிரச்சனைகள் நிறைய. அத்தோடு ஒர் புதிய ப்ரச்சனை சேர்ந்திருக்கிறது. அதாவது படங்களை சென்சார் செய்யும் ப்ரச்சனை. வழக்கமாய் இரண்டு ஆண்டுகளூக்கு ஒர் முறை சென்சார் அதிகாரியில்லாமல் மேலும் பெண்கள், ஆண்கள் என குழு அமைக்கப்படும் தற்போது அக்குழுவில் 2 பெண்கள் மட்டுமே இருப்பதாலும், மேலும் புதிய குழு அமைக்கப்படாததாலும், படங்கள் சென்சார் ஆகாமல் சுமார் 18க்கும் மேற்பட்ட படங்கள் காத்திருக்கின்றது. அதில் சமீபத்தில் ரிலீஸாக வேண்டிய சரபம், மெட்ராசும் அடங்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த ட்வீட்டர், பேஸ்புக்கினால் பல நன்மைகள் இருந்தாலும், சில விஷயங்களில் மோசமாய்த்தான் இருக்கிறது. நேற்றிரவு பத்தரை மணி இருக்கும் பத்திரிக்கையாளர் நண்பர் ஒருவர் போன் செய்து “சார்.. எம்.எஸ்.பாஸ்கர் இறந்துட்டாரா?” நான் அப்படியா என்றேன். பேஸ்புக்குல போட்டிருந்தது என்றவுடன் அதிரடியாய் அவரது நண்பர்களுக்கு போன் செய்து, அவர் திடகாத்திரமாய் இருப்பதாய் அவரே தகவல் சொன்னதாக சொன்னவுடன் தான் நிம்மதியானது. எவனுக்கு என்ன ஆயிருச்சோ? ஒரு வேளை அரிமா நம்பி படத்துல எம்.எஸ்.பாஸ்கர் செத்து போனத, நிஜம்னு நம்பிட்டாங்களோ.. எது எப்படியோ அவருக்கு ஆயுசு நூறாகட்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
ஐநாக்ஸ் விருகம்பாக்கத்தில் ஆன்லைனில் புக் செய்ய கிட்டத்தட்ட டிக்கெட் விலையில்லாமல் 35 வரை டேக்ஸோடு ஆகிறது. நாம் ரிஜிஸ்டர் செய்திருக்கும் மொபைல் நம்பருக்குத்தான் டிக்கெட் பற்றிய விபரங்கள் வருகிறது. இந்த சர்வீஸுக்குத்தான் காசு. தியேட்டரினுள் விடுவதற்கு இனிமேல் கீழே இருக்கு ஒரே ஒரு கிஸ்ஸோகில் போய் டிக்கெட் எடுத்தால் தான் அனுமதிப்பேன் என்கிறார்கள். கேட்டால் மேனேஜ்மெண்ட் சொல்லியிருக்கு என்று சொல்ல் அப்ப என்ன டேஷுக்கு ஆன்லைன் டிக்கெட்? என்று கேட்டதற்கு பதிலில்லை. மேலே சென்று இன்சார்ஜிடம் கேட்டதும், நீங்க் கேக்குறது சரிதான்சார்.. நான் மேனேஜ்மெண்டுக்கு சொல்லுறேன் என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார். முப்பது ரூபாய் வரை ஆன்லைனில் டிக்கெட் வாங்க செலவு செய்கிறவனை எதற்காக மீண்டும் கிசோக்கில் டிக்கெட் எடுக்க சொல்கிறார்கள்?. அதுவும் ஒரே ஒரு டிக்கெட் கிஸோக்கை வைத்துக் கொண்டு இத்தனை அலைப்பறை. இதற்காக முன்பே ஒரு முறை சண்டையிட்டு வாடிக்கையாளர்கள் ப்ரஷர் செய்வதை நிறுத்தினார்கள். இப்போது மீண்டும் ஆரம்பிக்க இருக்கிறார்கள். உள்ளே செல்லும் முன் பேக் எல்லாம் வாங்கி சோதிக்கிறார்கள். பேருக்கு மெட்டல் டிடெக்டர்.. உள்ளே பாமிருக்கா என்று செக் செய்யவா? சாப்பிடுவதற்கு ஏதேனும் எடுத்து செல்கிறோமா என்பதை பார்ப்பதற்காகவே தவிர வேறெதுக்கும் இல்லை. கேமரா இருக்கு சார். வேற வழியில்லை செக் செய்யணும் என்றான். முந்தாநாள் நான் பார்க்க போன அரிமா நம்பி படத்தின் இண்டெர்நெட் டிக்கெட்டிற்கு அரசு முத்திரை பதித்த டிக்கெட் கிழித்து தரவேயில்லை. எனக்கு மட்டுமல்ல உடன் உள்ளே வந்த யாருக்கும் இல்லை.என்ன கணக்கு போவுதோ? இதையெல்லாம் கேமரா பார்க்காதா? ம்ஹும்..
@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
விஜய் அவார்ட்ஸ் பெற்ற நலன் குமரசாமி, சந்தோஷுக்கு என் வாழ்த்துகள்
நேற்று தான் தெரிந்தது எத்தனை மனிதர்களை சம்பாதித்து வைத்திருக்கிறேனென்று. பீயிங் மூவ்ட் மெளமெண்ட்
@@@@@@@@@@@@@@@@@@@
பார்த்ததில் பிடித்தது
சில ட்ரைலர்கள் பார்த்த மாத்திரத்தில் பிடிக்கும். பின் நாளில் நினைவில் நிற்காது. சில படங்களின் ட்ரைலர் பார்த்த நாளிலிருந்து படம் வந்தா பார்த்தே ஆகணும்னு தோணும். அப்படியான ட்ரைலர் இந்த படத்தோட ட்ரைலர். வாழ்த்துக்கள் வினோத்.
@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
“A little girl and boy are fighting about the differences between the sexes, and which gender is better. Finally, the boy drops his pants and says, "Here's something I have that you'll never have!" The little girl is pretty upset by this, since it is clearly true, and runs home crying. A while later, she comes running back with a smile on her face. She lifts her dress, drops her knickers, and yells, "My mommy says that with one of these, I can have as many of those as I want!” 
கேபிள் சங்கர்